PDA

View Full Version : வலையுலக நேரம்...



simariba
31-05-2010, 12:17 AM
சுட்டிகள் பின்னே என்

வலையுலக பயணம்

கட்டணம் பணமாயில்லை

நேரமாக மட்டுமே

நேரத்தை வேலை செய்து

பணமாக்கலாம்...

பணத்தை ஏது செய்தும்

நேரமாக்க முடியாது...

பிள்ளைக்கு பள்ளி விடுமுறை...

வசதியாக என் நேரம்

வலையுலகில் அதிகரித்தபடி....

என் வீட்டு சுட்டிகள்

தொலைக்காட்சியின் முன்

நானோ கணினிக்கு

என்னை அர்பணித்த படி...

இல்லை இனி இது இப்படியில்லை..

மாற்றுவேன் என

முடிவு செய்தேன்

போன விடுமுறையை

போலவே.....

சிவா.ஜி
03-06-2010, 03:40 PM
இணையத்தில்...நுழைந்துவிட்டால் நேரம் போவதே தெரியாது.....நேரம் வீணாகிறதே என பல சமயம் நினைப்போம்....ஆனால் தொடர்ந்து அதே தவறை சந்தோஷமாய் செய்வோம்....

எதார்த்தம் சொல்லும் கவிதை. வாழ்த்துக்கள் அபி.

பா.ராஜேஷ்
03-06-2010, 04:55 PM
உண்மைதான்... இணையத்தில் நேரம் போவதே தெரிய மாட்டேன்கிறது...

நல்ல கவிதைக்கு வாழ்த்துக்கள் அபிராமி அவர்களே

govindh
03-06-2010, 09:54 PM
அழகு கவி வடிவில்....அனுபவம்....
வாழ்த்துக்கள் அபிராமி அவர்களே....

அக்னி
04-06-2010, 06:34 AM
இணைய வலை வீசும் மனிதர்கள்...
மீன்களைத் தேடிச் சிலர்.
முத்துக்களைத் தேடிச் சிலர்.
கற்களை மட்டுமே தேடிச் சிலர்.

நேரவெள்ளம் மட்டும்
வலையிடுக்குகளில் வடிந்துபோகின்றது.

பிடிக்கப்படுபவை,
நேரவிரயத்தை ஈடுசெய்பவையாக
அமையட்டும்...

எளிய நடையில் யதார்த்தம் சொன்ன அபிராமிக்குப் பாராட்டு...

simariba
07-06-2010, 04:10 AM
நன்றி சிவா .ஜி !

நன்றி பா. ராஜேஷ்!
நன்றி கோவிந்த் !

/பிடிக்கப்படுபவை,
நேரவிரயத்தை ஈடுசெய்பவையாக
அமையட்டும்.../
நன்றி அக்னி!!