PDA

View Full Version : நான் ரசித்த நகைச்சுவைத் துணுக்குகள்-2



கலையரசி
30-05-2010, 11:26 AM
நான் ஆங்கிலத்தில் படித்து ரசித்த நகைச்சுவை துணுக்குகளைத் தமிழில் இங்குப் பகிர்ந்துள்ளேன். நீங்களும் ரசிப்பீர்கள் என நம்புகின்றேன்:-


ஜோக்-1

கலைக்கூடமொன்றில் தம் ஓவியங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார் ஓவியர் ஒருவர்.

அந்தக் கலைக்கூடத்தின் உரிமையாளரிடம்,
"இன்று யாராவது என் ஓவியங்களை வாங்குவதில் ஆர்வம் செலுத்தினார்களா?" என்று கேட்டார் ஓவியர்.

"உங்களிடம் தெரிவிப்பதற்கு நல்ல செய்தி ஒன்றும், கெட்ட செய்தி ஒன்றும் உள்ளது."

அப்படியா? முதலில் நல்ல சேதியைச் சொல்லுங்கள்"

"உங்களது ஓவியங்களைப் பார்வையிட்ட ஒருவர், நீங்கள் இறந்த பிறகு இந்த ஓவியங்களுக்கு மதிப்பு கூடுமா எனக் கேட்டார். ஆம். கூடும் என்று நான் சொன்னவுடன், உங்களது 15 ஓவியங்களையும் அவரே
வாங்கிவிட்டார்."

"சரி. அந்த கெட்ட சேதி?"

"அந்த ஆள் வேறு யாருமில்லை. உங்கள் குடும்ப டாக்டர் தாம்."

(Readers Digest)




ஜோக்-2

குருவைச் சந்தித்து ஞானோதயம் பெறுவது எப்படி என்ற தம் சந்தேகத்தைக் கேட்டார் அறிஞர் ஒருவர்.

"மழை பெய்யும் போது இரு கைகளையும் உயரத் தூக்கியவாறு நில்லுங்கள்; ஞானோதயம் கிடைக்கும்," என்றார் குரு.

"குருஜி! நீங்கள் சொன்னவாறே நேற்று மழையில் நின்றேன். தண்ணீர் என் கழுத்து வழியாக கீழே இறங்கி ஓடிய போது, நான் ஒரு முட்டாளைப் போல உணர்ந்தேன்" என்றார் அந்த நபர்.

"முதல் நாள் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஞானோதயம் அது தான்," என்றார் குரு.


(Readers Digest)



ஜோக்-3

நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது, ஒரு நாள் என் நண்பனுடன் சேர்ந்து கொண்டு எங்களைத் தாண்டிச் செல்லும் மாணவிகளின் முக அழகிற்கேற்ப ஒன்றிலிருந்து பத்து வரை மதிப்பெண்
கொடுக்க முடிவு செய்தேன்.

நாங்கள் காத்துக் கொண்டிருந்த போது, இரண்டு மாணவிகள் எங்களைக் கடந்து சென்றனர். நான் நண்பனிடம் எதுவும் சொல்வதற்கு முன், முதலாமவள் சட்டெனத் தன் தோழிப் பக்கம் திரும்பி,

"ஏழு" என்றாள்.


(Readers Digest)




ஜோக்-4


"டாக்டர்! தினமும் எனக்கு விநோதமான கனவுகள் வருகின்றன. நீங்கதான் எனக்கு உதவணும்"

"என்ன மாதிரியான கனவுகள் ?"

"தினமும் கழுதைகளுடன் நான் கால்பந்து விளையாடுவதாக கனவு"

"தினமுமா?"

"ஆமாம். ஆனா ஒவ்வொரு நாளும் வெவ்வேறு கழுதை குழுவோட விளையாடுறேன். சில சமயம் நான் ஜெயிக்கிறேன். சில சமயங்களில் கழுதைங்க ஜெயிக்குதுங்க."

டாக்டர் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைளை அவரிடம் கொடுத்து,

"நான்கு மணி நேரத்துக்கொருமுறை மூன்று மாத்திரை வீதம் சாப்பிடுங்க. இம்மாதிரியான கனவுகளிலிருந்து முற்றிலுமாக உங்களுக்கு விடுதலை கிடைக்கும்"

"சரி டாக்டர்! நாளையிலேர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக்கறேன்"

"ஏன் நாளையிலேர்ந்து? இன்னிக்கு என்னாச்சு?"

"அது வந்து டாக்டர், இன்னிக்கு ராத்திரி 'பைனல்ஸ்' இருக்கு"

(The Hindu- Young world)

சிவா.ஜி
30-05-2010, 11:45 AM
ஆஹா....ரசிக்க வைக்கும் நகைச்சுவைகள்....அதிலும் அந்த ஓவியரின் ஜோக்கும், இன்னைக்கு ஃபைனல்ஸ்...ஜோக்கும் அதிரடி.

மொழிபெயர்ப்புக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க கலையர்சி அவர்களே.

அன்புரசிகன்
30-05-2010, 12:05 PM
அருமையான நகைச்சுவைகள். அதிலும் அந்த இறுதிப்போட்டி நகைச்சுவை அபாரம்...

சரண்யா
30-05-2010, 12:13 PM
ஆமா...ஆமா...
பகிர்வுக்கு நன்றி கலையரசி அவர்களே...

பா.ராஜேஷ்
30-05-2010, 03:41 PM
நல்ல துணுக்குகள். நாங்களும் ரசித்தோம்... இறுதி துணுக்கு மிக நன்று.. :)

govindh
30-05-2010, 03:56 PM
எல்லாம் நல்லா இருக்கு...
பகிர்வுக்கு நன்றி....

கீதம்
30-05-2010, 09:36 PM
எல்லாமே நல்லாயிருக்கு. வாய்விட்டுச் சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி அக்கா.:lachen001::lachen001::lachen001:

பாரதி
31-05-2010, 02:03 PM
நல்ல நகைச்சுவைகள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

கலையரசி
31-05-2010, 02:20 PM
ஆஹா....ரசிக்க வைக்கும் நகைச்சுவைகள்....அதிலும் அந்த ஓவியரின் ஜோக்கும், இன்னைக்கு ஃபைனல்ஸ்...ஜோக்கும் அதிரடி.

மொழிபெயர்ப்புக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க கலையர்சி அவர்களே.

மிகவும் நன்றி சிவா.ஜி. அவர்களே!

கலையரசி
31-05-2010, 02:21 PM
அருமையான நகைச்சுவைகள். அதிலும் அந்த இறுதிப்போட்டி நகைச்சுவை அபாரம்...

மிக்க நன்றி அன்பு ரசிகன் அவர்களே!

கலையரசி
31-05-2010, 02:21 PM
ஆமா...ஆமா...
பகிர்வுக்கு நன்றி கலையரசி அவர்களே...

மிகவும் நன்றி சரண்யா!

கலையரசி
31-05-2010, 02:22 PM
நல்ல துணுக்குகள். நாங்களும் ரசித்தோம்... இறுதி துணுக்கு மிக நன்று.. :)
நீங்களும் என்னுடன் சேர்ந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி ராஜேஷ்!

கலையரசி
31-05-2010, 02:23 PM
எல்லாம் நல்லா இருக்கு...
பகிர்வுக்கு நன்றி....

நன்றி கோவிந்த்!

கலையரசி
31-05-2010, 02:23 PM
எல்லாமே நல்லாயிருக்கு. வாய்விட்டுச் சிரித்தேன். பகிர்வுக்கு நன்றி அக்கா.:lachen001::lachen001::lachen001:

மிக்க நன்றி கீதம்!

கலையரசி
31-05-2010, 02:24 PM
நல்ல நகைச்சுவைகள். பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

மிக்க நன்றி பாரதி அவர்களே!

tamizhan_chennai
05-06-2010, 09:12 AM
நன்கு ரசித்து படித்தேன்..
அழகான துனுக்குகள்...
நன்றி கலையரசி அவர்களே...

கலையரசி
05-06-2010, 10:36 AM
துணுக்கு - 1


அழகான இளம்பெண் ஒருத்திக்குத் தினந்தினம் போன் செய்து கொண்டிருந்த வாலிபன் ஒருவன் ஒரு நாள் அவளிடம்,

"அன்பே!, உனக்காக எதை வேண்டுமானாலும், நான் விடத் தயாராயிருக்கிறேன்" என்றான்.

"அப்படியா? உன் நம்பிக்கையை விட்டு விடு" என்றாள் அவள்.



துணுக்கு - 2


எழுபது வயது கோடீசுவரர், இருபது வயது அழகிய இளம்பெண்ணை மணந்தார்.

"எப்படி இவ்வளவு அழகான இளம் மனைவி உனக்குக் கிடைத்தாள்?" என்று வியந்தார் அவரது நண்பர்.

"அது ரொம்பச் சுலபம். எனக்கு 95 வயதாகிறது என்று அவளிடம் சொன்னேன்" என்றார் கோடீசுவரர்.



துணுக்கு-3


ஜிம்மியும் ஜானியும் சொர்க்க வாசல் கதவருகே நின்று கொண்டிருந்தார்கள்.

ஜிம்மி:- "நீ எப்படி இங்கு வந்தாய்?"

ஜானி:- "அளவுக்கதிகமான குளிர் தாக்கி இறந்து விட்டேன். நீ?"

ஜிம்மி:- "என் மனைவி எனக்குத் துரோகம் செய்தாள் என்பது எனக்கு நிச்சயமாய்த் தெரியும். அவளின் கள்ளக்காதலனைப் பிடிக்க நான் ஒரு நாள் வழக்கத்துக்கு முன்னதாய் வீட்டுக்கு வந்தேன். என் மனைவியைக் கண்டபடி திட்டிவிட்டு அவனை வீடு முழுக்கத் தேடினேன். ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியாததால், ஏற்பட்ட ஆத்திரத்தில் எனக்கு மாரடைப்பு வந்துவிட்டது".

ஜானி:- "அடடா! நீ அந்தப் பெரிய பிரீஸருக்குள் தேடியிருந்தால், நாமிருவருமே இன்று உயிரோடு இருந்திருப்போம்".



துணுக்கு - 4


கணவனும் மனைவியும் பல் டாக்டரிடம் சென்றார்கள்.

"டாக்டர், அவசரமாக நான் போக வேண்டியிருப்பதால் மயக்க மருந்தெல்லாம் கொடுத்துப் பல்லைப் பிடுங்க வேண்டிய அவசியமில்லை. எவ்வளவு சீக்கிரம் பிடுங்குகிறீர்களோ, அவ்வளவுக்கு எனக்கு நல்லது,"
என்றாள் அந்தப் பெண்.

அவள் சொன்னதைக் கேட்டு மிகவும் வியந்த டாக்டர்,

"நீங்க உண்மையிலேயே மிகவும் தைரியசாலி தான். எந்தப் பல்?" என்றார்.

"அன்பே, உங்கப் பல்லைக் காட்டுங்க," என்றாள் அவள், தன் கணவர் பக்கம் திரும்பி.


துணுக்கு - 5


தன் கணவனின் குடிப்பழக்கத்தால் வெறுப்புற்றிருந்த பெண்ணொருத்தி, அவனுக்கு ஒரு பாடம் புகட்ட முடிவு செய்தாள். பேய் பிசாசு போல வேடம் பூண்டு, அவன் வீட்டுக்கு வந்த சமயம் சோபாவின்
பின்புறமிருந்து எதிர்பாராவண்ணம் திடீரென்று வந்து குதித்துப் பயமுறுத்தினாள்.

"நீ என்னைப் பயமுறுத்த முடியாது. நான் உன் அக்காவைத் திருமணம் செய்துள்ளேன்," என்றான் அவன் மிகவும் அமைதியாக. .



(அனைத்துமே ரீடர்ஸ் டைஜஸ்ட்டிலிருந்து)

nambi
05-06-2010, 10:45 AM
நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
05-06-2010, 12:41 PM
அருமையான நகைச்சுவைகள். அந்த பல் பிடுங்கும் மனைவி.....பாவம் அவள் கணவன்.....

ரசித்துச் சிரிக்க வைத்தத் துணுக்குகள்.

பகிர்வுக்கு நன்றிங்க கலையரசி.

பாரதி
05-06-2010, 02:05 PM
நல்லா இருக்குங்க. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

tamizhan_chennai
06-06-2010, 02:11 AM
5 நகைச்சுவைகளும் மிகவும் ரசிக்கும் படியாய் இருந்தது கலையரசி அவர்களே...
மிக்க நன்றி..

கலையரசி
10-06-2010, 01:01 PM
நகைச்சுவை துணுக்குகள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி!

ரசித்ததற்கு மிகவும் நன்றி நம்பி!

கலையரசி
10-06-2010, 01:01 PM
அருமையான நகைச்சுவைகள். அந்த பல் பிடுங்கும் மனைவி.....பாவம் அவள் கணவன்.....

ரசித்துச் சிரிக்க வைத்தத் துணுக்குகள்.

பகிர்வுக்கு நன்றிங்க கலையரசி.

மிக்க நன்றி சிவா.ஜி.

கலையரசி
10-06-2010, 01:02 PM
நல்லா இருக்குங்க. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

மிக்க நன்றிங்க பாரதி.

கலையரசி
10-06-2010, 01:02 PM
5 நகைச்சுவைகளும் மிகவும் ரசிக்கும் படியாய் இருந்தது கலையரசி அவர்களே...
மிக்க நன்றி..

ரசித்தமைக்கு மிக்க நன்றி தமிழன்!

சொ.ஞானசம்பந்தன்
11-06-2010, 05:23 AM
சிறந்த துணுக்குகள். பகிர்வுக்கு நன்றி.
சொ. ஞானசம்பந்தன்

பா.ராஜேஷ்
11-06-2010, 06:50 PM
நான்காவது துணுக்கும், ஐந்தாவது துணுக்கும் மிக அருமை... பகிர்விற்கு நன்றி ..

govindh
11-06-2010, 11:41 PM
பிடுங்கும் மனைவி....
நடுங்கும் கணவன்....பாவம் தான்....
துணுக்குகள் நல்லா இருக்கு....

பகிர்விற்கு நன்றி.

கீதம்
12-06-2010, 01:09 AM
ஆங்கிலத்திலிருக்கும் சுவை குறையாமல் அழகாய் மொழிபெயர்த்திருக்கிறீர்கள். அத்தனையும் ரசிக்கவைக்கின்றன. பகிர்வுக்கு நன்றி, அக்கா.

மதி
12-06-2010, 01:21 AM
எல்லாமே அருமை.. அதுவும் பல்பிடுங்கப்போகும் இடத்தில்.. பாவம் அந்த கணவன். பகிந்தமைக்கு நன்றி கலையரசி