PDA

View Full Version : சபாஷ் சாந்தி....!!!



சிவா.ஜி
30-05-2010, 08:35 AM
http://i194.photobucket.com/albums/z250/sivag/Shanthi.jpg

'காற்றுள்ளபோதேதூற்றிக்கொள்' என்கிற பயனுள்ளமொழியை பாழாக புரிந்துகொண்டு, பதவி இருக்கும்போதே வாரிக்குவிப்பவர்களுக்கு மத்தியில்... சொந்தக் காசில்கன்றுக்குட்டிகளைவாங்கிக்கொடுத்து 50 தலித்குடும்பங்களைக்வாழ வைத்திருக்கிறார் ஒருபஞ்சாயத்துத்தலைவி. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட விளாப்பாக்கம் ஊராட்சிமன்றத்தலைவியான சாந்திதான் இந்த 'அடடே' பெண்மணி!

சுமார் ஆயிரம் குடும்பங்களைக் கொண்ட இந்தக்கிராமத்தில் விவசாயமே பிரதானதொழில். ஆனால், சமீபகாலமாக ரியல்எஸ்டேட்பிசினஸ் நுழைய... விவசாயம் தள்ளாடுகிறது.

பிழைப்புக்கே கதியற்று கஷ்டஜீவனமே நடந்துகொண்டிருக்கும் நிலையில்தான், இந்தமுடிவை எடுத்தாராம் சாந்தி.

பயன்பெற்றவர்களில் ஒருவரான வெண்ணிலா,

''விவசாயவேலை இல்லாததால எங்கமக்கள் மெட்ராஸ், பெங்களூரூன்னு கூலிவேலைத்தேடிபோயிட்டாங்க. அப்படிப்போகக்கூட எங்களுக்கு வழியில்ல... குழந்தைங்களை வெச்சுகிட்டு வாழவும்வழியில்ல... நல்லவேளை எங்க பிரசிடென்ட் எங்களுக்கு கன்னுகுட்டி கொடுத்திருக்காங்க. ரெண்டுவருஷத்தில் அது நல்லாவளர்ந்து பால்கறக்க ஆரம்பிச்சிடும். எங்க குடும்பத்துக்கு கஞ்சி ஊத்த அதுவேபோதும்...'' என்றார் நெகிழ்ச்சியுடன்.

''தமிழரசிக்கு வாய்பேசமுடியாது. கணவனை விதிகிட்ட பறிகொடுத்துட்டு, நாலு பொண்ணுங்களை வைச்சுக்கிட்டு தனியாதவிக்கிறா... பிரசிடென்ட்கொடுத்த கன்னுக்குட்டிக்கு லட்சுமின்னுபேர்வெச்சிருக்கிற தமிழரசி, குடும்பத்துக்குவந்து சேர்ந்த 'லட்சுமி'யாகவேஅதைப்பார்க்கிறா...'' என்கிறார்கள் அக்கம்பக்க குடும்பத்தினர்.


தலைவிசாந்தியைச்சந்தித்துப்பேசினோம்.

''எங்களுக்கு சொந்தமா ரெண்டரைஏக்கர் நிலமும், போதுமான பசுமாடுகளும் இருக்குதுங்க. அதுபோக, வீட்டிலேயே சின்னமளிகைக் கடையும் இருக்கு. இதில் கிடைக்கிறவருமானமே எங்ககுடும்பத்துக்குப் போதும். போன தடவை எங்கவீட்டுக்காரரைத் தலைவராதேர்ந்தெடுத்தாங்க. குடிக்கக்கூட தண்ணியில்லாத இந்த ஊரின் பஞ்சத்தைப் போக்க ரெண்டுமூணு கிணறுவெட்டி தண்ணி கொடுத்தாரு. காலங்காலமா போக்குவரத்துவசதியில்லாத ஊருக்கு ஒருநாளைக்கு மூணுதடவை பஸ்ஸைவந்து போகவெச்சதுன்னு அவர் நல்லதுபண்ணினார். இந்தமுறை ஊரேசேர்ந்து என்னை தலைவியாக்கிடுச்சு. 'ஒரு முருங்கைமரமும் பசுவும்போதும்... ஏழைவாழ்வு நிறைஞ்சு போகும்'னு பாட்டாகவேபாடி இருக்காங்களே..! அதான் ஏழைங்கபொழப்புக்கு வழி பண்ணிக்கொடுக்க பசுமாடுவழங்குற ஐடியாவை யோசிச்சேன்.

ஒருபசுமாடு வாங்கனும்னா கிட்டத்தட்ட 10 ஆயிரம்ரூபாய்வரை செலவாகும். அவ்வளவுபணத்துக்கு எங்கிட்ட வழியில்லை. அதனாலதான் மூவாயிரம்ரூபாய் மதிப்புள்ளகன்னுக்குட்டிகளை வாங்கிக் கொடுத்தேன்.

ரெண்டுவருஷத்தில் அதுங்க ஒருநாளைக்கு நாலுலிட்டர் பால்கறந்தாலே, அந்தக்குடும்பத்து ஜீவனத்துக்கு உதவியா இருக்கும்ல...'' என்றவர், ''இதைக்கேட்கவா என்னைத்தேடி இவ்வளவுதூரம்வந்தீங்க?'' என்றார்ஆச்சர்யமாக.


கோயிலுக்கு உபயமாக ஒற்றைடியூப்லைட்டை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன்வெளிச்சமே வெளியில்வராத அளவுக்கு தன்பெயரை எழுதிவைக்கிற இந்தக்காலத்தில்... சாந்தியின் ஆச்சர்யமே ஒரு ஆச்சர்யம்தானே!

- டி.தணிகைவேல்


நன்றி: ஆனந்தவிகடன்

பாலகன்
30-05-2010, 08:44 AM
கணவனை போலவே மனைவிக்கும் மற்றவர்கள் வாழ்வின் மேல் அதிக அக்கறை உள்ளது. இதுபோன்றவர்களே தலைவர் பதவிக்கு வரவேன்டும்...

ஆனந்தவிகடன் செய்தியை எங்களுக்காக பகிர்ந்த சிவா.ஜி அண்ணனுக்கு நன்றிகள்

சிவா.ஜி
30-05-2010, 08:55 AM
இதுவும் இலவசம்தான்...ஆனால்....ஒரு குடும்பத்தையேக் காப்பாற்ற உதவும் இலவசம். அதுவும்....மக்கள் பணத்தை வாரிவிடாமல்...சொந்தப் பணத்தில் கொடுத்திருக்கும் சாந்தி அவர்களை நிச்சயம் பாராட்ட வேண்டும்.

பெரிய தலைவர்கள் எனச் சொல்லிக்கொள்ளும்...அரசியல்வியாதிகள்...இவரைப் பார்த்தாவது திருந்த வேண்டும்...

பா.ராஜேஷ்
30-05-2010, 03:43 PM
கண்டிப்பாக அவரை பாராட்ட வேண்டும். தலைவர்கள் அவரும் எவரை போல் இருந்தால் இந்திய எப்பொழுதோ முன்னேறி இருக்கும், பகிர்விற்கு நன்றி அண்ணா.

கீதம்
30-05-2010, 09:47 PM
சாந்தி அவர்களின் தன்னலமற்ற சேவையைப் பெரிதும் பாராட்டுகிறேன். இதுக்காகவா என்னைத் தேடி வந்தீங்க? என்ற கேள்வியில் இருக்கும் தன்னடக்கத்தைக் காண்கையில் இவரை ஊராட்சித்தலைவியாய்ப் பெற்ற மக்களின் பாக்கியம் எண்ணி மகிழ்கிறேன். இவரைப்போன்ற பலர் இன்னும் உருவாகவேண்டுமென்று வாழ்த்துகிறேன்.

பகிர்வுக்கு நன்றி சிவா.ஜி அண்ணா.

(என்னை உங்க சின்ன சகோதரின்னு நீங்களே சொல்லிட்டீங்க, அப்படின்னா உங்களை அண்ணா என்று அழைப்பதுதானே சரி?)

govindh
30-05-2010, 10:03 PM
மக்கள் நல்லா வாழணும்...என நினைத்து....
அதைச் செயல்படுத்தும்....நல்ல மனம் கொண்ட
தலைவி சாந்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

பகிர்வுக்கு நன்றி அண்ணா.

சிவா.ஜி
31-05-2010, 06:01 AM
உண்மைதாங்க கீதம். கட்டுரையின் கடைசி வரியே இவரைப்பற்றி சொல்லிவிடுகிறது. மக்கள் பணத்தை வாரியிறைத்து...இலவசங்கள் கொடுத்துவிட்டு....எல்லா செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சியிலும்...தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ளும்....கேவலமானத் தலைவனைவிட இந்த சாந்தி அவர்கள்....மிக மிக உயர்ந்தவர்.

நீங்க என்னை தாராளமா அண்ணான்னு கூப்பிடலாம் சகோதரி.

சிவா.ஜி
31-05-2010, 06:04 AM
ஆமா ராஜேஷ்...எல்லோரும் இல்லைன்னாலும்...குறைந்தது ஊருக்கு ஒருவராவது இருந்தாலே போதும்...சாதாரண மக்களுக்கு நல்லது நடக்கும்.

எங்க ஊரிலும் பஞ்சாயத்துத் தலைவி இருக்கிறார்....எழுதப்படிக்கத் தெரியாது....ஆனால்...பணத்தை மிகச் சரியாய் எண்ணிப்பார்த்து வாங்கத்தெரியும்.

சிவா.ஜி
31-05-2010, 06:08 AM
மக்கள் நல்லா வாழனும்ன்னு மட்டும் நினைக்காம...அதை செயல்படுத்தியதில்தான் திருமதி சாந்தி அவர்கள் உயர்ந்து நிற்கிறார்.

மோசமான அரசியல்வாதிகளைத் திட்டுவதற்கு முன் வரும் நாம், இப்படிப்பட்ட நல்ல அரசியல்வாதிகளை...நிச்சயம் பாரட்டவும் வேண்டும்.

நன்றி கோவிந்த்.