PDA

View Full Version : தொல்லை தமிழன் கதை கேட்கிறீர்களா?



nellai tamilan
29-05-2010, 04:24 PM
நண்பர்களே...
நலமாக இருக்கிறீர்களா?

என்னடா... வந்த சில மணி நேரத்திலேயே நண்பனே என்று உரிமையோடு அழைக்கிறானே என்று பார்க்கிறீர்களா?

எல்லாம் ஒரு நம்பிக்கைதாங்க.. என்னையும் உங்களில் ஒருத்தனாக.... நண்பனாக ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கைதான்.

என்னை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை ஆதலால்தான் இந்த அறிமுகம்

இந்த தளம் எனது நண்பன் மூலம் அறிமுகம் ஆனது. அறிமுகப்படுத்திய நண்பருக்கு நன்றிகள்

நான் தென்தமிழகத்தை சார்ந்தவன். தமிழ் மீது அலாதி பற்று இருக்கிறது ஆனால் அதனை செயல்படுத்தத்தான் நேரம் கிடைக்கவில்லை.
(நேரம் கிடைக்கவில்லை என்பதெல்லாம் சும்மா உடான்ஸ். எல்லாம் சோம்பேறித்தனம்தான்) தற்பொழுது மனதில் உழன்று கொண்டு இருக்கும் பாதிப்புகளை படைப்புகளாக படைக்க ஆசையாக இருக்கிறது. முதன்முறையாக சில படைப்புகளை பதியலாம் என்று இருக்கிறேன். அதற்கு உங்களுடைய உற்சாகமூட்டல் எனக்கு தேவை. தருவீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக விஞ்ஞானிகள் புதிய கண்டுபிடிப்புகளை முயல்கள் மீது சோதனை நடத்துவார்கள்.
அதே போல் எனது படைப்பிற்கு நீங்கள் தான் முயல் குட்டிகள் (என்ன செய்வது உங்களுக்கு நேரம் சரியில்லை)
என்னை உங்களில் ஒருவனாக ஏற்றமைக்கு நன்றிகள்

நான் ஒரு தொல்லை தமிழன்தான் என்ன செய்வது.
"தொல்லை தமிழன்... தொல்லை தமிழன்..." என்று நீங்கள் அழைக்க தயங்குவதால்....
இன்று முதல் நான் உங்களுக்கு நெல்லை தமிழன்

என்றும் நட்பை நேசிக்கும்
நெல்லை தமிழன்

சிவா.ஜி
29-05-2010, 04:51 PM
வாங்க வெள்ளைத்தமிழன்....என்னன்னு பாக்கறீங்களா...உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க அப்ப வெள்ளைத்தமிழன்தானே....

எத்தனையோ சோதனையைத் தாங்கியாச்சு....இந்தத் தொல்லை.....சாரி...நெல்லைத்தமிழனின் சோதனையையும் பாத்துடலாம்.

வாங்க. வரவேற்புகளுடன் வாழ்த்துக்களும்.....

(பீ.....கேர்புஃபுல்....என்னை....என்னைத்தான் சொன்னேன்......)

குணமதி
29-05-2010, 05:26 PM
வருக, வருக!

அமரன்
29-05-2010, 05:27 PM
அல்வா அறிமுகம்..

மன்றத்தின் கலகலப்புக்கு இன்னொரு கரண்டி.

அட்டகாசம் பண்ணுங்க

nambi
29-05-2010, 05:35 PM
அசத்தலான அறிமுகத்துடன் அறிமகமாகும் தோழர் நெல்லைத் தமிழரை வருக வருக என வரவேற்கிறேன்.

பாலகன்
29-05-2010, 06:28 PM
வாங்க வாங்க தொநோபிள்ளை தமிழா.. நலமா?
வந்தவுடன் எங்களை நண்பர்களாக ஏற்றுக்கொன்டமைக்கு நன்றிகள்
ஓவர் சவுண்டு பார்ட்டியா இருப்பீங்க போல இருக்கே? :)
இருக்கட்டும் இருக்கட்டும்....

உங்கள் வரவு நல்வரவாகுக...........

தொநோபிள்ளை தமிழா என்றால் தொ(ல்)லை நோக்கு தமிழா!! :D

பா.ராஜேஷ்
29-05-2010, 09:26 PM
எவ்வளவோ தாங்கிட்டோம், இத தாங்க மாட்டமா.. சீக்கிரம் ஆரம்பிங்க..

கீதம்
30-05-2010, 03:35 AM
வாங்க, வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

அன்புரசிகன்
30-05-2010, 04:09 AM
வருக வருக நண்பனே...

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

கலையரசி
30-05-2010, 04:56 AM
தொல்லைத் தமிழா!
நொள்ளைப் படைப்புகளைத் தராமல்
நல்ல படைப்புகளைத் தருக!
நல்வரவாகட்டும் உங்கள் வரவு!

பா.சங்கீதா
30-05-2010, 07:32 AM
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வாங்கோ வாங்கோ.........

ஜனகன்
30-05-2010, 09:27 AM
தொ(நெ)ல்லை தமிழா! வாங்க, வாங்க
வந்து அசத்துங்க.......

govindh
30-05-2010, 04:07 PM
வணக்கம் நெல்லை தமிழன்.

தமிழ் விஞ்ஞானியை ....
வரவேற்கும் அன்பு முயல்.

வாழ்த்துக்கள்.

பாரதி
31-05-2010, 02:19 PM
வணக்கம் நண்பரே... வாருங்கள்.

nellai tamilan
31-05-2010, 05:58 PM
வாங்க வெள்ளைத்தமிழன்....என்னன்னு பாக்கறீங்களா...உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க அப்ப வெள்ளைத்தமிழன்தானே....
எத்தனையோ சோதனையைத் தாங்கியாச்சு....இந்தத் தொல்லை.....சாரி...நெல்லைத்தமிழனின் சோதனையையும் பாத்துடலாம்.
வாங்க. வரவேற்புகளுடன் வாழ்த்துக்களும்.....
(பீ.....கேர்புஃபுல்....என்னை....என்னைத்தான் சொன்னேன்......)

நன்றி சிவா..
மன்றத்தில் முதன்முதலாக வரவேற்றமைக்கு நன்றிகள்.
ஆகா..... இது அவருல்ல...சிவா.....வா....ஜி....சிவாஜியா...
பெயரை வைத்தே குழப்பும் நீங்கள் கேர்ப்ஃபுல்லாத்தான் இருக்கனும். (சும்மா தமாசு)


வருக, வருக!
வரவேற்றமைக்கு நன்றி குணமிக்க மதி அவர்களே!


அல்வா அறிமுகம்..
மன்றத்தின் கலகலப்புக்கு இன்னொரு கரண்டி.
அட்டகாசம் பண்ணுங்க
கரண்டி கேரண்டியாக இருப்பது உங்களின் இது போன்ற வரவேற்கும் அன்புதான்.
அமரன் முன்னால் அட்டகாசம் பண்ணமுடியாதுங்க.... தலைகள் இருக்கும் போது வால் ஆடப்படாது.....?


அசத்தலான அறிமுகத்துடன் அறிமகமாகும் தோழர் நெல்லைத் தமிழரை வருக வருக என வரவேற்கிறேன்.
உங்களை நம்ம்ம்ம்பி.... வந்து இருக்கிறேன் நம்பி.
நன்றி நண்பா!


வாங்க வாங்க தொநோபிள்ளை தமிழா.. நலமா?
வந்தவுடன் எங்களை நண்பர்களாக ஏற்றுக்கொன்டமைக்கு நன்றிகள்
ஓவர் சவுண்டு பார்ட்டியா இருப்பீங்க போல இருக்கே? :)
இருக்கட்டும் இருக்கட்டும்....
உங்கள் வரவு நல்வரவாகுக...........
தொநோபிள்ளை தமிழா என்றால் தொ(ல்)லை நோக்கு தமிழா!! :D
மகா.....முன்னால் சவுண்டா...?
பிரபு...முன்னால் ரகளையா..? விட்டு விடுவார்கள் நம்ம மன்ற நண்பர்கள்?
நன்றி நண்பா..!


எவ்வளவோ தாங்கிட்டோம், இத தாங்க மாட்டமா.. சீக்கிரம் ஆரம்பிங்க..
ராஜேஷ்.... கொஞ்சம் மன்றத்தை உலாவி... நெழிவு சுழிவுகளை தெரிந்து உங்களை போன்ற நண்பர்களின் குட்டுகளை வாங்கி பின்பு ரவுசு கட்டி

ஆரம்பிப்போமே...அதுவரை..."ஞெ....." என்று பார்த்து கொண்டு இருக்கிறேன்.
நன்றி நண்பா..


வாங்க, வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

வருக வருக நண்பனே...
உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.

உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
வாங்கோ வாங்கோ.........

தொ(நெ)ல்லை தமிழா! வாங்க, வாங்க
வந்து அசத்துங்க.......

வணக்கம் நண்பரே... வாருங்கள்.
வரவேற்ற அன்பு நெஞ்சங்களுக்கு எனது நன்றிகள் பல


தொல்லைத் தமிழா!
நொள்ளைப் படைப்புகளைத் தராமல்
நல்ல படைப்புகளைத் தருக!
நல்வரவாகட்டும் உங்கள் வரவு!
படைப்புகள் நொள்ளையா... இல்லையா? என்று உங்களைப்போன்ற நண்பர்கள்தான் சான்றிதழ் தரவேண்டும்
நொள்ளையாக இருந்தால் தலையில் குட்டி சொல்லிக்கொடுங்கள்,
கொஞ்சம் சுமாராக இருந்தாலும் முதுகில் தட்டி கொடுங்கள். வளர்கிறேன். உங்களின் ஆதரவோடும்... நட்போடும்


வணக்கம் நெல்லை தமிழன்.
தமிழ் விஞ்ஞானியை ....
வரவேற்கும் அன்பு முயல்.
வாழ்த்துக்கள்.
என்னை வைத்து காமடி கீமடி ஏதும் பண்ணலியே...:sprachlos020::sprachlos020:

ஐய்யோ...ஐய்யோ.... உங்களை நினைத்தால்.... பாவமாக இருக்கிறது. கடைசியில் என்னிடம் வந்து மாட்டிக்கொண்டீர்கள்
எனது அன்பு முயல் குட்டிக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

அமரன்
02-06-2010, 09:26 PM
தலைகள் இருக்கும் போது வால் ஆடப்படாது.....?

தலை ஆடினால் வியாதி.. தலை ஆட்டினால்....

வால் ஆடுறதுதாங்க சேஃப்டி.

nellai tamilan
02-06-2010, 10:29 PM
தலை ஆடினால் வியாதி.. தலை ஆட்டினால்....

வால் ஆடுறதுதாங்க சேஃப்டி.

நண்பரே... தலை ஆடினாலும் வால் ஆடினாலும் கொஞ்சம் சிரமம்தான்.

வால் ஆடுகிறதே என்று தலை ஆட்டினால்.... தலை ஆடுகிறது என்பீர்களா?
தலை ஆடுகிறதே என்று தலை ஆட்டினால் தலை ஆடுகிறது என்பீர்களா?
(அப்பாடா... ஒரு வழியா குழப்பியாச்சு இன்று நல்ல தூக்கம் வரும்)

Akila.R.D
06-06-2010, 12:22 PM
வாருங்கள் நெல்லை தமிழன்...

உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி....

சுடர்விழி
07-06-2010, 01:14 AM
வாருங்கள் நெல்லை தமிழரே !! உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

nellai tamilan
07-06-2010, 05:09 PM
வரவேற்ற சுடர்விழி & அகிலா தோழமைக்கு நன்றிகள்

பாலகன்
07-06-2010, 05:16 PM
நண்பரே... தலை ஆடினாலும் வால் ஆடினாலும் கொஞ்சம் சிரமம்தான்.

வால் ஆடுகிறதே என்று தலை ஆட்டினால்.... தலை ஆடுகிறது என்பீர்களா?
தலை ஆடுகிறதே என்று தலை ஆட்டினால் தலை ஆடுகிறது என்பீர்களா?
(அப்பாடா... ஒரு வழியா குழப்பியாச்சு இன்று நல்ல தூக்கம் வரும்)

ஓய் நெல்லைகாரரே!! என்ன இந்த குழப்பு குழப்புறீங்க!!:mini023: நீங்க தலையா வாலா? :D (அப்பாடா இன்னைக்கு தேதிக்கு ஒருத்தரை பிரான்டியாச்சி :) )

விகடன்
20-06-2010, 02:02 PM
வந்தனங்கள் தொல்லைத் தமிழா,
தொல்லைத்தமிழன் என்று அழைக்க சிரமமாகத்தான் இருக்கிறது. அதனால் இன்றுமுதல் உங்களை தொல்லை என்றே அழைக்கின்றோம்.
அறிமுகத்திரியிலே பட்டம் கேட்டு வாங்கின பெருமை உங்களைத்தான் சாரும் தொல்லை.

சரீங்க தொல்லை. மன்றத்தில் பல சந்துகள் இருக்கின்றன. அங்கெல்லாம் சந்தர்ப்பம் அமையும்போதெல்லாம் சந்திப்போம்.

nellai tamilan
23-06-2010, 08:07 PM
ஓ.... இதுதான் சந்துல சிந்து பாடுவதோ?
திராவிடன் சந்துல சிந்து பாடுவதில் கெட்டிக்காரரோ?

நன்றி நண்பரே....

விகடன்
27-06-2010, 10:24 AM
நான் சிந்துபாட சந்து எங்கையா இருந்திச்சு?

nellai tamilan
27-06-2010, 03:51 PM
நான் சிந்துபாட சந்து எங்கையா இருந்திச்சு?

திராவிடனுக்கு இல்லாத சந்தா?
உங்களுக்கு கிடைக்காதா சிந்தா?

விகடன்
28-06-2010, 04:04 AM
தொல்லைத்தமிழன் என்று சொல்வது ஓவரோ என்றுகூட பதிவிடும்போது ஒருகணம் சிந்தித்திருந்தேன். ஆனால் இப்போது உறுதிசெய்துவிட்டேன். :D

nellai tamilan
28-06-2010, 05:55 PM
தொல்லைத்தமிழன் என்று சொல்வது ஓவரோ என்றுகூட பதிவிடும்போது ஒருகணம் சிந்தித்திருந்தேன். ஆனால் இப்போது உறுதிசெய்துவிட்டேன். :D

ஆஹா.... இது அவரில்ல...:smilie_abcfra::smilie_abcfra:

தமிழன் என்றாலே தொல்லைதானோ?:lachen001:

அப்படியெனில் திராவிடன்?:aetsch013::aetsch013:

baseer
03-07-2010, 10:31 AM
வாருங்கள் நெல்லை தமிழனே!

நெல்லை என்று சொல்லிவிட்டீர்கள் வரவேற்காமல் விட்டுவிடுமா என்ன இந்த மன்றம்... என்ன நண்பர்களே!

எனது வரவேற்புகளும் வாழ்த்துக்களும். எல்லையில்லா தொல்லைகள் என்றாலும் நண்பருக்காக தாங்கிக் கொள்வோம்.. ஆரம்பிங்க!!!

Narathar
05-07-2010, 03:40 AM
எத்தனை பேரையோ தாங்கிட்டம்
உங்களை தாங்க மாட்டோமா?

அவ்வளவு ஏன்????
மன்றம் எவ்வளவு காலமாக என்னை தாங்குகிறது
இது ஒன்றே போதாதா? உங்களுக்கு:D

கவலையில்லாமல் எழுதுங்கள்:)

பால்ராஜ்
09-07-2010, 02:05 PM
நெல்லையில் ஆழ்ந்த வேர்கள் இருந்தாலும்
தொலைவில் சென்று வாழ்பவர்கள் பலர்...

எனவே நெல்லையில் இருந்து எவ்வளவு தொல்லைகள் வந்தாலும் தாங்கிக் கொள்வோம்

வரவேற்பதில் மகிழ்ச்சி:aetsch013:

எந்திரன்
12-07-2010, 04:48 AM
வாங்க நண்பரே..... வரவேற்புக்கள். நானும் புதியவன் தான் என்ற போதிலும் இது எனக்கான மன்றம் என்ற உரிமையுடன் உங்களை நானும் வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.