PDA

View Full Version : அமைதி..



simariba
29-05-2010, 03:06 AM
தெள்ளிய நீர் போல
ஒர் அதிர்வுமின்றி
அமைதியாய்
நின்றிருக்கிறது
மனப்பரப்பு

நெடுங்காலம்
கழித்து ஒரு
பேரமைதி

சிந்தனைகளின்றி
நிச்சலனமாய்
மனதின் மேற்பரப்பு

எண்ணங்களெல்லாம்
யோசனையில் ஆழ்ந்திருக்க
எப்போதும் ஓடிக்கோடிருக்கும்
அந்த மனக்குதிரை
சத்தமே இல்லாமல்...

சோர்ந்து விட்டதா?
ஓடிப்பயனில்லை

என தெரிந்து கொண்டு விட்டதா?

மெல்லிய இசையில்
மயங்கி விட்டதா?

மழைவிட்ட வானம் போல்
தெளிவாய்....

கழுவி விட்ட தரை போல்
புதிதாய்...

வயிறு நிறைந்த குழந்தை போல்
திருப்தியாய்...

நீர் விட்ட செடி போல்
வளமாய்...

தொடர்ந்து தோற்கும் என்
மனக்குதிரை நிறுத்தப்
போராட்டங்கள்
ஓய்ந்து போன நேரம்...

மாற்ற தேவையில்லா
சிறிய விஷயங்களும்
மாற்ற முடியாத
பெரிய விஷயங்களும்

தெரிந்து தெளிந்த

அலைகளில்லா கடல் போல...

அத்திப்பூ போல...

ஆர்பாட்டம் இல்லா
பேரணி போல...

அமைதியில் என் மனம்...

சிவா.ஜி
29-05-2010, 06:55 AM
தெரிந்து தெளிந்தால்...அமைதியடையும் மனம். அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

உவமைகளும், உவமானங்களும் சரியாய்க் கையாண்டிருக்கிறீர்கள்.(நீர் விட்டச் செடியைப்போல வளமையான...என்பதைத் தவிர்த்து...அது பொருந்தவில்லை)

வாழ்த்துக்கள் அபி.

simariba
29-05-2010, 11:20 AM
நன்றி சிவா!!

அமரன்
20-06-2010, 12:21 PM
சிவா சொன்னது போல உவமான உவமேயங்கள் அணிவகுக்க கவிதை அழகாகிறது..

ஆனால் எனக்கு அலைகள் இல்லாக் கடல் பிடிப்பதில்லை..

அலைகளின் இசை.. அலை தொட்டு வந்த காற்றின் கூதல்.. கால் தடவும் அலைக்கரம்.. எல்லாமே புதிய உலகில் எம்மை கடத்துவன..

simariba
03-04-2011, 01:27 PM
நன்றி அமரன்!