PDA

View Full Version : அதிகாலை மின்னல்



kulirthazhal
28-05-2010, 11:49 AM
அசந்து உறங்கும்
அதிகாலை விடியல்,,..
அதட்டி எழுப்ப
ஆற்றலோடு ஆசைதான்...
உலகம்
விழித்துக்கொண்டால்...???

அவளை
கண்டபின் செல்ல
இருள் காத்துக்கொண்டிருந்தது..,
தற்கொலை ஆசையோடு....
அவள் விழி ஒளியை
எதிர்த்து பார்த்து கரைந்துபோகும்...
என் மூச்சி காற்றோடு
உயிர் தொலைவதுபோல்...

தாவணி ஒளிபிழம்பு
தலைக்குளியல்
துண்டு சுற்றிவந்தாள்....
காரிருளில் மின்னல்
மெதுவாக தவழ்வதுபோல்....

அவள் கைகளிடும்
கோலத்தைபற்றி
கற்பனை ஏதுமில்லை.,

தரிசன போதையில்
குழந்தையின் உற்சாகத்தோடு
துல்லிய மனம்
பேச ஏதுமின்றி
முன்னே ஓடியது...
அடுத்த விடியலை
துரத்திக்கொண்டு...,

நானும் ஓடினேன்
தொடர்ந்து......

இன்னும் எட்டு தெருக்களுக்கு
பேப்பர் போட.......,,,,,

-குளிர்தழல்

அக்னி
08-06-2010, 06:50 AM
புள்ளி வைத்துக் கோலம்
போட்டாள் நிலத்தில்...

அவளைப் பார்த்துப் பார்த்து
இவன் புள்ளி வைக்கின்றான்
மனதில்...

(மணக்)கோலம் ஆகுமா...

பாராட்டு...

பாரதி
13-06-2010, 09:04 AM
மார்கழி மாத மின்னல்
மனச்சோர்வை போக்குகிறதோ..!
சிறிய குறும்படத்தைப்போல கவிதை.
நன்று நண்பரே.

சிவா.ஜி
13-06-2010, 09:16 AM
அ வுக்கு ஆ வரவேண்டுமென் சொன்னதைப்போலவே இருக்கிறது அந்த "ஆற்ற*லோடு ஆசைதான்..."

மற்றபடி கவிதையில் காதலும்....சொல்பவரின் இயலாமையும் தெரிகிறது.

வாழ்த்துக்கள் குளிர்தழல்.

govindh
13-06-2010, 11:22 AM
"காரிருளில் மின்னல்
மெதுவாக தவழ்வதுபோல்...."

நல்ல கற்பனை...
பாராட்டுக்கள்.

ஆதவா
16-06-2010, 12:52 PM
அழகு அழகு..

அதிலும்,
எழுப்பாமல் செல்லும் நிராசை
பிரதிபலிக்கும் தாவணி,
இருளின் தற்கொலை,
கோல கற்பனையற்ற தரிசன போதை

ஆகியவை அற்புதம். தொடர்ந்து முடித்ததும் நன்றாகவே இருந்தது.
வாழ்த்துகள்.

nambi
16-06-2010, 01:11 PM
//தரிசன போதையில்
குழந்தையின் உற்சாகத்தோடு
துல்லிய மனம்
பேச ஏதுமின்றி
முன்னே ஓடியது...//

நன்றாக இருந்தது கவிதை அருமை...பகிர்வுக்கு நன்றி!

(துல்லிய மனம் அல்லது துள்ளிய மனம்..? ......துள்ளுகின்ற மனமா? தெளிவான மனமா?)