PDA

View Full Version : பிரெஞ்சுக் குட்டிக் கதைசொ.ஞானசம்பந்தன்
28-05-2010, 02:19 AM
வான் பயணம் பரவாத முன் காலத்தில் ஆங்கிலேயர் ஒருவர் கானடாவிலிருந்து லண்டனுக்கு கப்பல் பயணம் மேற்கொண்டார்.

பகலுணவு வேளையின்போது மேசைக்குப் போய்த் தமக்கு ஒதுக்கப்பட்டிருந்த 27 ஆம் எண் நாற்காலியில் அமர்ந்தார். எதிர் இருக்கைக்காரர் இவரை நோக்கி போனப்பேத்தி என்றார். இவர் வில்லியம் நார்ட்டன் என்ற தம் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டார். மேற்கொண்டு உரையாடல் தொடரவில்லை, ஒருவர் கூறியது மற்றவர்க்குப் புரியாமையால்.

இரவுணவு சமயத்திலும் அவர் போனப்பேத்தி என்றபோது, "மதியந்தான் அறிமுகம் ஆகிவிட்டதே, மீண்டுமா?" என்றெண்ணிய ஆங்கிலேயர் வில்லியம் நார்ட்டன் எனச் சிறிது எரிச்சலுடன் பதிலளித்தார்.

மறுநாள் காலையிலும் இந்த நிகழ்ச்சி தொடர்ந்தமையால் உண்டு முடித்த கையோடு கப்பல் தலைவரைப் போய்ப் பார்த்த ஆங்கிலேயர் வேறு கதிரையை ஒதுக்கிக் கொடுக்கக் கோரினார்.

"ஏன்? என்ன சிக்கல்?"

"எனக்கு எதிரே அமர்கிற பைத்தியக்காரர் ஒவ்வொரு தடவையும் தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு வெறுப்பேற்றுகிறார்."

"அப்படியிருக்காதே! என்ன பெயர் சொல்கிறார்?"

"போனப்பேத்தி"

தலைவருக்கு விடயம் விளங்கிற்று. புன்னகையுடன் கூறினார்:

"அது அறிமுகமல்ல. அவர் பிரெஞ்சுக்காரர் என்று தெரிகிறது. சாப்பிடும் முன்பு போனப்பேத்தி சொல்வது அவர்கள் வழக்கம். நல்ல பசி என்று பொருள். உங்களுக்கு நல்ல பசி உண்டாகட்டும். நிறைய சாப்பிடுங்கள் என அவர் வாழ்த்துகிறார்."

"அப்படியா? மன்னிக்கவேண்டும். நான் தவறாய்ப் புரிந்துகொண்டேன்"

பகலுணவு மணியடித்ததும், "இப்போது நான் முந்திக் கொள்ளவேண்டும்" என்று முடிவு செய்த ஆங்கிலேயர் விரைந்து போய் உட்கார்ந்து காத்திருந்து பிரெஞ்சுக்காரர் வந்ததும் போனப்பேத்தி என மலர்ந்த முகத்துடன் வாழ்த்தினார்.

அவரும் புன்னகைத்து சொன்னார்:

"வில்லியம் நார்ட்டன்."

மதி
28-05-2010, 02:45 AM
ஹஹா நல்ல கதை. பகிர்ந்தமைக்கு நன்றி ஞானசம்பந்தன் அவர்களே.

அக்னி
28-05-2010, 06:02 AM
மயிலிறகால் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல,
மென்மையான ஓர் சிரிப்புக் கதை.

சொ.ஞா. அவர்களே...
உங்கள் தழிட்சொற்பிரயோகங்கள் வியப்பைத் தந்து கவருகின்றன.

பாராட்டு...

தாமரை
28-05-2010, 09:23 AM
போன் அபதைத்... இதுதான் போனபோத்தியா?

ம்ம் நல்லா இருக்கு..

சிவா.ஜி
28-05-2010, 09:30 AM
அர்த்தம் விளங்காமல்.....ஒரு அவஸ்தை...விளங்கியப்பின் மற்றொரு அவஸ்தை....ஹா...ஹா...நல்லாருக்குங்க சொ.ஞா.

மொழிமாற்றலுக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.

அக்னி
28-05-2010, 09:54 AM
Eet smakelijk - ‘டச்’சில் ஈற் ஸ்மாக்லக்
Buono patito - ‘இத்தாலி’யில் bபோன பாத்தீத்தோ

பிரெஞ்சிலும் இத்தாலி போலத்தான் போலிருக்கே...

பாரதி
28-05-2010, 12:26 PM
இரசிக்க வைக்கும் அழகிய கதை!
மிக்க நன்றி ஔஐயா.

பா.ராஜேஷ்
28-05-2010, 04:22 PM
ஹா ஹா நல்ல கதைதான்... பகிர்விற்கு நன்றி அய்யா.

govindh
28-05-2010, 11:10 PM
பிரெஞ்சுக் குட்டிக் கதை -
குலுங்கிச் சிரிக்க வைக்கும் கதை....
பகிர்வுக்கு நன்றி ஐயா...!

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:18 AM
ஹஹா நல்ல கதை. பகிர்ந்தமைக்கு நன்றி ஞானசம்பந்தன் அவர்களே.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:20 AM
பிரெஞ்சுக் குட்டிக் கதை -
குலுங்கிச் சிரிக்க வைக்கும் கதை....
பகிர்வுக்கு நன்றி ஐயா...!

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:28 AM
மயிலிறகால் கிச்சுக்கிச்சு மூட்டுவதுபோல,
மென்மையான ஓர் சிரிப்புக் கதை.

சொ.ஞா. அவர்களே...
உங்கள் தழிட்சொற்பிரயோகங்கள் வியப்பைத் தந்து கவருகின்றன.

பாராட்டு...

உங்கள் மேன்மையான பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:30 AM
ஹா ஹா நல்ல கதைதான்... பகிர்விற்கு நன்றி அய்யா.

பாராட்டியதற்கு மிக்க நன்றி.

அன்புரசிகன்
29-05-2010, 05:30 AM
மொழியால் பல பிரச்சனைகள் வருவது வழமை... அவை நினைத்துப்பார்க்க நகைச்சுவையாக இருக்கும். தமிழில் பச்சரிசி பொங்கலை யாழில் ஒருவாறு அழைப்பார்கள். அதே சொல் சிங்களத்தில் கெட்ட வார்ததை... பல்கலையில் ஒருநாள் உணவகத்தில் சென்று என்னை மறத்து கேட்டுவிட்டேன். ஆனால் அவர் கோபப்படவில்லை. அவர் சொன்னார். இப்படி பலர் தெரியாது கேட்டனர் என்று...............

பகிர்வுக்கு நன்றிகள்.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:31 AM
இரசிக்க வைக்கும் அழகிய கதை!
மிக்க நன்றி ஔஐயா.

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:34 AM
மொழியால் பல பிரச்சனைகள் வருவது வழமை... அவை நினைத்துப்பார்க்க நகைச்சுவையாக இருக்கும். தமிழில் பச்சரிசி பொங்கலை யாழில் ஒருவாறு அழைப்பார்கள். அதே சொல் சிங்களத்தில் கெட்ட வார்ததை... பல்கலையில் ஒருநாள் உணவகத்தில் சென்று என்னை மறத்து கேட்டுவிட்டேன். ஆனால் அவர் கோபப்படவில்லை. அவர் சொன்னார். இப்படி பலர் தெரியாது கேட்டனர் என்று...............

பகிர்வுக்கு நன்றிகள்.

பாராட்டுக்கும் சொந்த அனுபவம் பகிர்ந்துகொண்டமைக்கும் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:36 AM
போன் அபதைத்... இதுதான் போனபோத்தியா?

ம்ம் நல்லா இருக்கு..

சுவைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:41 AM
அர்த்தம் விளங்காமல்.....ஒரு அவஸ்தை...விளங்கியப்பின் மற்றொரு அவஸ்தை....ஹா...ஹா...நல்லாருக்குங்க சொ.ஞா.

மொழிமாற்றலுக்கும், பகிர்வுக்கும் நன்றிங்க.

விமர்சனத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
29-05-2010, 05:46 AM
Eet smakelijk - ‘டச்’சில் ஈற் ஸ்மாக்லக்
Buono patito - ‘இத்தாலி’யில் bபோன பாத்தீத்தோ

பிரெஞ்சிலும் இத்தாலி போலத்தான் போலிருக்கே...

புதிய சொற்கள் அறியத் தந்தமைக்கு நன்றி. பிரென்சும் இத்தாலிய மொழியும் ஒரே குடும்பந்தானே?

விகடன்
07-07-2010, 12:42 PM
சுவையான சிறுகதை. இது இப்போதும் பல இடங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

அமரன்
07-07-2010, 06:14 PM
உங்கள் திரிகளுக்கு வருபவர்களிடம் தாராளமாகச் சொல்லலாம் bon appetit.

shibly591
07-07-2010, 06:20 PM
இப்போதும் மொழிப்பிரச்சினையால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இல்லை...

சிரிப்புக்கு நன்றிகள்

சொ.ஞானசம்பந்தன்
14-07-2010, 10:32 AM
சுவையான சிறுகதை. இது இப்போதும் பல இடங்களில் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

சுவைத்ததற்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
14-07-2010, 10:34 AM
இப்போதும் மொழிப்பிரச்சினையால் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இல்லை...

சிரிப்புக்கு நன்றிகள்

நன்றிக்குப் பதில் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
14-07-2010, 10:35 AM
உங்கள் திரிகளுக்கு வருபவர்களிடம் தாராளமாகச் சொல்லலாம் bon appetit.

பின்னூட்டத்துக்கு அகம் நிறை நன்றி.