PDA

View Full Version : முகமூடிப் பட்டங்கள்...................



Nanban
30-10-2003, 08:38 AM
முகமூடிப் பட்டங்கள்...............


ஆடி, ஓடி விளையாடி
விழுந்து, அடிபட்ட காயங்களில்
வீட்டின் நினைவுகள்
பச்சை குத்தபட்டிருக்கிறது.

கூடி நின்று கும்மாளமிட்ட
கூடத்தில்
இன்று வியாபாரக் கூடத்தின்
அலுவலகம்.

வீடு, மனை விற்று
விலைக்கு வாங்கிய கல்வியை
விருப்பம் போல விற்றுப் பிழைக்க
வழியில்லை.

அலைந்து, திரிந்து, ஓய்ந்து
படித்த பிள்ளை முகமூடியை
அலமாரியினுள் மூடி வைத்துவிட்டு
நானும் தொழிலில் இறங்கினேன்.

வீடு, மனை விற்றுப் பிழைக்கும்
இன்றைய தொழிலுக்கு
கல்வி தேவையில்லை.

பொய்கள் பலபேசி
கூட்டிக் குறைத்து
வியாபாரம் பேசி
முடிக்கும் பொழுது
ஒரு அப்பாவி தகப்பனிடம்
சொல்லமுடிவதில்லை
'வீடுமனை விற்று
முகமூடி வாங்கி மாட்டாதே
உன் மகனின் மூஞ்சியில்'.


தரகுக் கூலியில்
நூறுரூபாயை அதிகம் திணித்த
அப்பாவி அப்பன் சொன்னான் -
வச்சுக்க, படித்த பிள்ளை ஆயிற்றே!

நான் விட்டாலும்
முகமூடிகள் என்னை விடுவதில்லை....

இக்பால்
30-10-2003, 09:46 AM
நண்பர் நண்பன் ஒரு உண்மைக் கதை சொல்லி இருக்கிறீர்கள்.
நாம் எல்லோரும் முகமூடி போட்டுக் கொண்டவர்களா? அப்பா
வாங்கித் தந்த முகமூடியா? அருமைதான்.-அன்புடன் நண்பர்.

chezhian
30-10-2003, 12:05 PM
எத்தனை உண்மையான ஒரு விஷயம். அருமையான தத்துவம்.
நண்பனே உம்மை வணங்குகிறேன்.பாராட்டுக்கள்.

karavai paranee
30-10-2003, 12:45 PM
நறுக்கென சொல்லி எம் உண்மைநிலை உணரவைத்தீர் நன்றி நண்பா !

எனது காலில் நிற்கவேண்டும் என்பதற்காய் எத்தனை உள்ளங்களை நோகடித்திருப்போம்.
சின்ன வயதில் பெற்றோர் வளரும் வயதில் ஆசியர் வளர்ந்து வந்தால் ஊரவர் உறவுகள்
ஏன் இன்றும்கூட இன்னொருவனை நொந்துதானே நாம் வாழ்கின்றோம்.

Nanban
30-10-2003, 04:20 PM
இக்பால், செழியன், கரவை பரணீ அவர்களுக்கு நன்றி. இது நிறைய வீடுகளில் நடக்கிறது தான். அன்று பக்கத்து நகரத்து கல்வி. இன்று கடல் கடந்த, மேலை நாட்டுக் கல்வி.

சோகம் என்னெவென்றால், கற்ற கல்விக்குச் சம்பந்தமேயில்லாத தொழில் தான் முக்கால்வாசி பேருக்கு. சில சமயம், கலவி அறிவே தேவையில்லாத தொழிலில் முழங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த வருத்தம் தான் இந்தக் கவிதை.........

puppy
30-10-2003, 04:57 PM
முகமூடிகள் எங்கும் மூகமுடிகள்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
என சொல்லிவிட்டதால் என்னவோ
முகமூடிகள் இன்று அவசியமாகிவிட்டது....

முத்து
30-10-2003, 10:19 PM
அருமையான கவிதை .. நன்றி நண்பன் அவர்களுக்கு ...

வேலை செய்யும்துறை நாம் படித்த துறையாகத்தான் இருக்கவேண்டும் என்பது சரியா எனத் தெரியவில்லை ... கல்வி என்பது அறிவை வளர்க்க ... உலகைப் புரிந்துகொள்ள , மனிதர்களைப் புரிந்துகொள்ள என்பது பலரின் கருத்து ..

இலக்கியம் படித்தவர்கள் அனைவரும் தொழில்முறையில் கவிஞர்களாகவோ அல்லது எழுத்தாளர்களாகவோ ஆகவேண்டும்... அதேபோல் பி.காம் படித்தவர்கள் அனைவரும் வணிகத்தைத் தொடங்க வேண்டும் ... வரலாறு படித்தவர்கள் ... , புவியியல் படித்தவர்கள் ............. இப்படியே நினைத்துப் பார்த்தால் தலைசுற்றுகிறது ...

யார் வேண்டுமானாலும் வியாபாரம் செய்யலாம் .. ஆர்வம் இருந்தால் ..யார் வேண்டுமானாலும் கவிஞராகலாம் .. ஆர்வம் இருந்தால் ...ஆனாலும் ஆர்வம் மட்டும் இருந்து மருத்துவம் படிக்காமல் யாரும் அறுவைச் சிகிச்சை செய்ய முடியாது ......:D

இளசு
30-10-2003, 10:28 PM
நண்பனின் மற்றுமொரு வீரியப்படைப்பு...
நத்தை, நக்சலைட் போல கதையே கவிதையாய்..
ராம்பால் ஒரு முறை சொன்னார்: கவிதைக்கு அடுத்த நிலை கதை என்று...
எனக்கென்னவோ கவிதை படைப்பது கதை எழுதுவதை விட இன்னும் உயர்வான படைப்பு நிலை என்றே படுகிறது.லாவண்யா ஒரு முறை கேள்விப்பட்ட "கதையை"..... "எளிமையாக தர எண்ணி" கவிதையாய் தந்தது (கோஒபித்துக்கொள்ள மாட்டாள்) நினைவுக்கு வருகிறது.
சொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.
இப்பண்புகள் நண்பனின் கவிதைகளில் அதிகம்.
பாராட்டுகள்.

கவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..
இரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.

puppy
30-10-2003, 10:33 PM
மருத்துவம் மட்டும் இல்லை...எந்த வேலைக்கும் படிச்சா தான் முத்து......

நிலா
30-10-2003, 10:35 PM
அருமை நண்பரே!




கவிதைக்கு அடுத்த நிலை கவிதை


இங்க இரண்டுமே கவிதையா இல்ல ஒன்னு கதையா?தலை விளக்கவும்!

இளசு
30-10-2003, 10:38 PM
நேற்று கண்விழிச்சு, கண்டநேரத்தில் இன்னைக்கு தூங்கி,
எழுந்தவுடன் பதித்து குழப்பிட்டேன் போல..
திருத்தியாச்சு நிலா..
விளக்கெண்ணெய் உங்கள் கண்ணிலா?

நிலா
30-10-2003, 10:47 PM
விளக்கெண்ணெய் உங்கள் கண்ணிலா?



நீங்க செய்யிறதப்பார்த்துதான் தல இப்படி!

முத்து
30-10-2003, 11:21 PM
மருத்துவம் மட்டும் இல்லை...எந்த வேலைக்கும் படிச்சா தான் முத்து......

உண்மைதான் பப்பி அவர்களே ... படிக்காமல் எந்த வேலையையும் செய்ய முடியாது ... ஆனால் நான் முதலில் படிப்பது என்று சொன்னது அதே துறையில் பட்டம் வாங்குவதைச் சொன்னேன் ....

puppy
30-10-2003, 11:22 PM
பட்டம் வாங்கும் அனைத்து மருத்துவர்களிடமும் கத்தியை கொடுக்க சொல்றீங்களா நீங்க....போச்சு போங்க......

முத்து
30-10-2003, 11:27 PM
எல்லாம் விதிப்படி நடக்கும் ... :D ( வேற என்ன சொல்றது .. )

puppy
30-10-2003, 11:36 PM
என்ன டாக்டர் மாதிரி பேசுறீங்க..நீங்க...

இளசு
30-10-2003, 11:42 PM
என்ன டாக்டர் மாதிரி பேசுறீங்க..நீங்க...

அவரு அண்ணன் டாக்டராம்..அவரே டாக்டரேட்டாம்... அதான்.. :D

puppy
30-10-2003, 11:47 PM
அபப்டியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை

இளசு
30-10-2003, 11:48 PM
அப்படியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை

அப்படியா, அப்ப நீங்களும் என்னைப்போலத்தான்..அட! :D

முத்து
30-10-2003, 11:49 PM
அண்ணன் டாக்டர் ... கூட இருக்கறவங்க டாக்டர்(ஏட்டு) .. பூவோட சேர்ந்த நாருக்கு வாசம் கொஞ்சம் அடிக்காமலா போகும் ... ? :icon_wink1:

puppy
30-10-2003, 11:50 PM
அது சரி ...இந்த பூவோட சேரும் நாரும் வாசம் அடிக்கிற கதை எல்லாம்
மருத்துவ துறையில் இல்லேன்னு இப்போ தானே சொன்னீங்க...அப்புறம் என்ன
இப்போ பூ நார் வாசமுன்னு ....

முத்து
30-10-2003, 11:51 PM
அப்படியா நான் பொதுவா டாக்டர்களை ரொம்ப சுலபமாக நம்புறதில்லை

அப்படியா, அப்ப நீங்களும் என்னைப்போலத்தான்..அட! :D

:D :D :D

madhuraikumaran
30-10-2003, 11:53 PM
என்னென்னமோ ஜாடைமாடையாய்ப் பேசிக்கறீங்க... ஒன்னும் புரியலை... இதுவும் 'முகமூடி'களின் வேலையா?..

நண்பரின் நல்ல கவிதையை மக்கள் பார்க்க மறந்திடப் போறாங்க !

முத்து
30-10-2003, 11:54 PM
அது சரி ...இந்த பூவோட சேரும் நாரும் வாசம் அடிக்கிற கதை எல்லாம்
மருத்துவ துறையில் இல்லேன்னு இப்போ தானே சொன்னீங்க...அப்புறம் என்ன
இப்போ பூ நார் வாசமுன்னு ....

வாசமில்லாமலா போகும் ... ? பூவுன்னு நெனச்சு நாரப் பாத்து ஏமாறாம இருக்குறது அவங்கவங்க சாமர்த்தியம் ... :D

சேரன்கயல்
31-10-2003, 03:29 AM
நண்பா நண்பன்...
...கல்வி நமது எத்தனையோ முகமூடிகளில் ஒன்று...
முகமூடிகள் தூக்கியெறிய நினைத்தாலும் நம் முகமே அந்த பொய் முகத்தோடு அடையாளப்பட்டு விட்ட உண்மை பல நேரங்களில் நெஞ்சை பிசைவதுண்டு...
அருமையான உணர்வு வெளிப்பாட்டுக் கவிதை...பாரட்டுக்கள்...
அனுபவித்து நொந்த பலருக்கு உங்கள் கவிதையின் வீரியம் அதிகமாய் தெரிந்திருக்கும்...

Nanban
31-10-2003, 05:21 AM
சொற்சிக்கனம், அழகுடன், கூராக சரேலென அர்த்தமும் அடிவயிற்றில் பாய்ச்சும் பண்பு கவிதைக்கே உரியது.

கவிதையின் கரு பற்றி நண்பனின் விளக்கமும், முத்துவின் அலசலும்..
இரண்டும் சரியே..உண்மை நடுவில் உறங்கிக்கொண்டிருக்கிறது.



கவிதையின் பண்புகளை மிகவும் நயமாகக் கூறிவிட்டார், இளசு.

முத்துவின் கூற்றும் உண்மைதான்.

முதலில், விரும்பிய பாடமே, நம்மால் எடுத்துக் கொள்ளும் சுதந்திரம் இல்லாத பொழுது, எங்கிருந்து படித்த படிப்பிற்கு சம்பந்தமுள்ள வேலையைப் பார்ப்பது? எனக்குத் தெரிந்து, நிறைய எஞ்ஜினியர்கள் கூட சம்பந்தமில்லாத தொழில் செய்கிறார்கள். ஒரு PhD பட்டம் வாங்கியவர், கூலிக்கு மண் சுமந்த கதையும் கூட வார இதழ்களில் வெளியாகி இருக்கிறது. இந்த மாதிரி சம்பவங்களைத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஏன், மேலை நாடுகளில் எத்தனையோ நபர்கள், எத்தனையோ வேலைகளில் இருக்கிறார்களே சம்பந்தமில்லாமல் என்று கூட கேட்கலாம். அங்கெல்லாம், எந்த தொழிலானாலும், சமூகத்தில் அவர்கள் மதிப்பிழப்பதில்லை. அந்த பக்குவம் நமக்கு இல்லை. மேலும், எந்த தொழிலானாலும் அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், மனிதனின் அடிப்படைத் தேவைகளை நாகரீமாக நிறைவேற்றிக் கொள்ள உதவும். இங்கே அப்படியா?

மேலும், நானும் டாக்டர்களை அத்தனை சுலபமா நம்புறதில்லை. குறைந்த பட்சம், மூன்று டாக்டர்களிடமாவது கருத்து கேட்பது உண்டு - அறுவை சகிச்சை போன்ற அபாயகரமான சிகிச்சைகளில். (டாக்டர்கள் மனம் புண்பட வேண்டாம் - சில டாக்டர்களே இந்த முறையைப் பரிந்துரைக்கிறார்கள்)