PDA

View Full Version : வாழும் காதல்



சுடர்விழி
27-05-2010, 03:06 AM
எப்படி முடிந்தது ?
என்று முறிந்தது ?

நமக்குள் பிளவும்
தொடர்புக்கு முற்றுப் புள்ளியும்
உண்டானது நிஜமா ?

மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?

கண்களால் பரிமாறிக் கொண்டதும்
விரல்களால் உணர்ந்ததும்
உதடுகளால் எதிரொலித்ததும்
அழிந்தா போய்விடும் ?

அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா ?

நீயும் நானும்
தூரங்களால் விலகியிருக்கலாம்...
துயரங்களால் திசைமாறியிருக்கலாம்..
சந்தர்ப்பத்தால் பிரிந்திருக்கலாம்..

ஆனால்...

காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...

ஆம்..

காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்ப்பதில்லை....

சிவா.ஜி
31-05-2010, 06:38 AM
"அமர்ந்த நடந்த இடங்களும்
அனுப்பி வைத்த பரிசுகளும்
இன்றும் மணக்கும் புகைப்படமும்
கல்வெட்டுக்கள் அல்லவா ?

நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா ?"

அருமையான வரிகள். காதல் பிரிவின் வலிதாங்கிய வரிகள்.

உண்மைதான் சுடர்விழி . காதலர்கள் தோற்கலாம்...காதல் என்றுமே தோற்பதில்லை.

நல்லக் கவிதைக்கு பாராட்டுக்கள்.

Nijamudeen
01-06-2010, 07:17 PM
மனசுக்குள் நினைவுகளும்
நினைவுகளின் அலைகளும்
என்றாவது அடங்குமா?

காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...

எனக்கென உன்னோடு நான்
மனசுக்குள் வாழ்வதை
தவிர்க்க நினைக்கவுமில்லை...

என் உயிரில் துளிர்த்த வரிகள்
என் இதயம் குளிர்ந்த மொழிகள்
அலைகளை போல
நினைவும் நிற்பதில்லை

நன்றி

ஃபாத்திமா நேசன்
குவைத்

govindh
01-06-2010, 10:14 PM
ஆம்..

காதலர்கள் தோற்கலாம்....
காதல் தோற்பதில்லை....

வாழும் காதல்....அருமை.
வாழ்த்துக்கள்.

கீதம்
01-06-2010, 10:24 PM
காதலின் உயிர்மூச்சு கவிஞர்கள் கையில்தான் உள்ளது. காதலை வாழவைக்கும் கவிதைக்கு என் மனமார்ந்த பாராட்டுகள், சுடர்விழி.



உண்மைதான் அபி. காதலர்கள் தோற்கலாம்...காதல் என்றுமே தோற்பதில்லை.

நல்லக் கவிதைக்கு பாராட்டுக்கள்.

சிவா.ஜி அண்ணா, இவர் சுடர்விழி. அபி அல்ல.

சுடர்விழி
02-06-2010, 03:42 AM
[B][COLOR=green]

உண்மைதான் அபி. காதலர்கள் தோற்கலாம்...காதல் என்றுமே தோற்பதில்லை.

நல்லக் கவிதைக்கு பாராட்டுக்கள்.


நன்றி சிவா அவர்களே !!அபியின் கவிதை என்று நினைத்து விட்டீர்களா?????

சுடர்விழி
02-06-2010, 03:43 AM
வாழ்த்துக்கு நன்றி கோவிந்த்!

சுடர்விழி
02-06-2010, 03:45 AM
பாராட்டுக்கு நன்றி கீதம் அவர்களே !

சிவா.ஜி
02-06-2010, 05:40 AM
அடடா..தவறுதலாய் அபி என்று எழுதிவிட்டேன். வாழ்த்துக்கள் சுடர்விழி.

செல்வா
02-06-2010, 06:08 AM
காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...


அருமை... அருமை...
தொடர்ந்து எழுதுங்கள் .. வாழ்த்துக்கள்.

சுடர்விழி
03-06-2010, 08:36 AM
வாழ்த்துக்கும் ஊக்கத்துக்கும் நன்றி செல்வா !

அக்னி
03-06-2010, 09:28 AM
நினைவில் ஆக்கிரமிப்பு...
மனதில் பிரதிபலிப்பு...

காதல்
வரும் வழி தெரியாமலே
வருவது சுகம்தான்...
ஆனால்,
முறிந்து போனால்,
போகும் வழி தெரியாமல்
தங்கிவிடுவது பெரும் சோகம்தான்...

வழமையான காதற்பிரிவை, வழமையான வார்த்தைகள் விடுத்துச் சொல்லிய விதம் பாராட்டுக்குரியது.


காதல் என்றசொல் காதில் விழுந்தால்
உன் முகம் கண்முன் வந்து போவதை
தவிர்க்க முடியவில்லை...
இந்த வரிகளை மிகவும் ரசித்தேன்...

காதல் என்ற சொல் காதில் விழுந்தால்,
கண்ணீர் காவி வருகின்றதோ உன் விம்பத்தை...

சுடர்விழி
03-06-2010, 09:35 AM
நன்றி அக்னி அவர்களே !!

gans5001
09-06-2010, 09:44 AM
நேற்று மனனம் செய்தது மறந்தாலும்
நீ காற்றுவாக்கில் பேசியது கூட
இன்னும் மனதில் அழியாமல்
கனன்று கொண்டிருப்பதை அறிவாயா ?


பல முறை மீண்டும் படிக்க வைத்தன இந்த வரிகள்.

அவளைக் கண்ட பின்புதானே எனது அகராதியில் வார்த்தைகள் அதிகமாயின!

சுடர்விழி
10-06-2010, 02:12 AM
நன்றி நண்பரே !

ஆன்டனி ஜானி
17-12-2010, 10:20 AM
பருவத்தில் காதல் வரும்
அது வரும் போது சுகம்
அந்த நேரத்தில் கூட
எல்லாரும் காதலியாகத்தான்
தெரிவார்கள் கண்னுக்கு
அது நிலைக்காமல்
முறிந்து போகுமே
பாருங்கள் அப்பத்தான்
தெரியும் உலகமே அழிந்தது போல