PDA

View Full Version : ஹோஸ்டிங் பெயரால் ஏமாற்றும் கம்பெனிகள்



தங்கவேல்
26-05-2010, 05:52 AM
2009 மே மாதம் ஒன்றாம் தேதி மனாஸ் ஹோஸ்டிங் என்ற பெங்களூரைச் சேர்ந்த கம்பெனியிலிருந்து குறைந்த விலைக்கு அதிக Web Space தருகிறார்கள் என்ற ஆசையினால் ரூபாய் 1100 கட்டி Plesk 11 GB Web Space வாங்கினேன். அதனுடன் MSSqlDatabase இலவசம் என்றார்கள். ஏனென்றால் அன்றைக்கு MS Sql Dbக்கு தனியாக 1500 ரூபாய் கட்ட வேண்டி இருந்தது. குதி போட்டுக் கொண்டு வாங்கிய பிறகுதான் பிரச்சினை ஆரம்பித்தது.

டேட்டா பேஸ் ஆக்டிவேட் செய்ய இரண்டு நாட்களுக்கு ஒரு முறை போன் செய்ய வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட ஒருமாதம் சென்ற பிறகுதான் டேட்டாபேஸ் பாஸ்வேர்ட், கண்ட்ரோல் பேனல் கொடுத்தார்கள். டேட்டாபேசை அப்லோட் செய்ய முனைந்தால் நம்பவே மாட்டீர்கள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஆனது. என்னிடமிருந்து பணம் பெற்ற பின் அவர்களின் நடவடிக்கையே மாறிவிட்டது. சரியான ரகளை செய்தார்கள். அவசியத் தேவைகளுக்கான அனுமதிகளை தர மறுத்தார்கள். ISAPI SOFTWARE INSTALL செய்ய அனுமதி கேட்டதற்கு வாய்ப்பில்லை என்று சொல்லி விட்டார்கள். கிட்டதட்ட ஐந்து மாதம் சென்று விட்டது.

கம்ப்ளெயிண்ட் டிக்கெட் பதிவு செய்யுங்கள் என்பார்கள். பதிவு செய்தால் பதிலே வராது. பெங்களூரில் இருக்கும் கம்பெனிக்கு போன் பண்ணியே வாழ்க்கை வெறுத்துப் போச்சு. சரி ஹெச்டிஎமெல் வெப் சைட்டையாவது அப்லோட் செய்யலாமென்று எண்ணி டொமைன் பெயரை வேறு பெயரில் மாற்றித்தரும்படி கேட்டதற்கு ஒரு மாதம் பதிலே இல்லை. நானும் பலமுறை டிக்கெட் அனுப்பி வைத்தேன். பலனில்லை. போனில் அழைத்து கத்து கத்து என்று கத்தினேன். கண்டுக்கவே மாட்டேனுட்டானுங்க. எங்களை என்னடா செய்யமுடியும்னு அவர்களின் நடவடிக்கைகள் கேட்காமல் என்னைக் கேள்வி கேட்டது. வேறு ஒருவராக இருந்தால் போனா போவுது என்று விட்டு விடுவார்கள். ஆனால் நான் அவ்வாறு அவர்களை விடுவதாக இல்லை.

மனதுக்குள் திட்டத்தினை வகுத்துக் கொண்டு, இவர்களை ஒரு கை பார்ப்பது என்று முடிவு கட்டிக் கொண்டேன். வேறு மாற்று வழி இல்லாத சூழ் நிலையில் கன்ஸ்யூமர் கோர்ட்டின் கதவினைத் தட்டினேன். இணையம் மூலமாக ஆன்லைனில் கம்ப்ளெயிண்ட் புக் செய்தேன். அவர்களும் கம்பெனிக்கு மெயில் ஒன்றினை அனுப்பி வைத்தார்கள்.

விட்டேனா பார் என்று கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு மெயில் ஒன்றினையும் அனுப்பி வைத்தேன். இந்த மாதிரி உங்கள் மாநிலத்தில் இருக்கும் கம்பெனி என்னை சீட்டிங் செய்கிறார்கள் என்று விபரமாக எழுதி ஆதாரங்களையும் இணைத்து அனுப்பி வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். சீஃப் மினிஸ்டரிடமிருந்து பதிலும் வந்தது. பிரச்சினையை கன்சர்ன் டிபார்ட்மெண்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறோம் என்ற மெயிலைப் பார்த்ததும் படு ஜாலியாகி விட்டது. மனாஸ் ஹோஸ்டிங்குக்கு காப்பி ஒன்றையும் அனுப்பி வைத்தேன்.

அவ்வளவுதான். முடிந்தது பிரச்சினை. அலறினார்கள் அலறி. போனில் பெரிய ரகளை செய்து விட்டேன். மீடியா, பிம், சியெம், பிரசிடெண்ட்,பத்திரிக்கைகள், சைஃபர் கிரைம் என்று அனைவருக்கும் கம்ப்ளைண்டு செய்யப் போகிறேன் என்றவுடன் ஏகப்பட்ட மன்னிப்புகளை கேட்டுக் கொண்டார்கள். அடுத்த இரண்டு மணி நேரத்தில் பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டது. கர்நாடக சீஃப் மினிஸ்டருக்கு நன்றி தெரிவித்து மெயில் ஒன்றினை அனுப்பினேன்.

ஆனால் இவர்களால் ஏற்பட்ட போன் செலவு, மன உளைச்சலுக்கு என்ன செய்வது? அதுதான் தெரியவில்லை.

இந்திய அரசியல் சட்டத்திலும் இதே பிரச்சினை இருக்கிறது. இன்றைக்கும் எண்ணற்ற விசாரணைக் கைதிகள் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.

ஒருவேளை விசாரணை முடிந்து கைதி விடுதலை செய்யப்பட்டால் இத்தனை நாட்கள் சிறையில் இருந்ததுக்கு சட்டத்தின் பதில்தான் என்ன?

எந்த வித முகாந்திரமும் இன்றி சிறைத்தண்டனையை அனுபவித்தருக்கு சட்டம் என்ன தந்து விடும்?

தொலைந்து போன வாழ்க்கையை திருப்பித் தருமா சட்டம்?

கடந்து போன நாட்களை திரும்பவும் அந்த விசாரணைக் கைதிக்கு தருமா சட்டம்?

சட்டத்தின் இது போன்ற கொடுமைகளை நீக்கினால்தான் அரசியலமைப்புச் சட்டம் - ஜன நாயகத்தன்மை கொண்டதாக இருக்கும்.

அதுவரை சட்டமும் ஒரு கொடுங்கோலன் தான்.

அக்னி
26-05-2010, 07:04 AM
இப்படியான கொடாக்கண்டர்களிடம் விடாக்கண்டர்களாக இருந்தே ஆகவேண்டும்.
உங்கள் தொடர் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டுகின்றேன்...

இணையமூடான மோசடிகள் பரவலாகவே நிகழ்கின்றன. சரியானதைக் கண்டுபிடித்திடப் பெரும் போராட்டமே செய்யவேண்டியிருக்கின்றது.

இறுதிப் பகுதியில் நீங்கள் கேட்ட கேள்விகள் நியாயமானவைதான்.
நம் இழப்புகள்,
காலம், வயது, மகிழ்ச்சி,........ இறுதியாகப் பணம்
என்றாகையில் இட்டு நிரவுவது பெரும் சவாலாகவே அமைந்துவிடும்...

சூரியன்
26-05-2010, 09:31 AM
அந்த கம்பெனியா ?
இப்போது plesk control panel-ஆ இல்லை நார்மல் பேனலை மாற்றி தந்துவிட்டார்களா?

தங்கவேல்
27-05-2010, 01:28 PM
சூரியன், இன்னும் அதே ப்ளஸ்க் பேனல்தான். இதில் கொடுமை என்ன தெரியுமா? ரினீவல் செய்யச் சொல்லி எஸ் எம் எஸ்ஸா அனுப்புகிறார்கள். பட்ட காயமே இன்னும் ஆறவில்லை. எப்படி அலையுறாங்க பாருங்க. அழைப்பொன்றும் வரவில்லையே ?

selvamurali
28-05-2010, 06:20 AM
தங்கவேல் சார். நிச்சயமாக உங்கள் பாராட்டித்தான் ஆகவேண்டும். அடியேனும் ஹோஸ்ட் மான்ஸ்டரை அன்லிமிட் என்று சொன்னார்கள். அதை நம்பி களமறிங்க கடைசியில் ஒரு இடத்தில் 50000 பைல்கள்தான் ஸ்டோரேஜ் என்று சொல்லிவிட்டார்கள். கடைசியில் www.tamilvanigam.com ஒரளவு நன்றாக வந்துகொண்டிருந்த சமயத்திங் உங்கள் சர்வரில் 50,000 பைல்களுக்கு மேல் இருக்கக்கூடாது. அதான்ல உங்கள் கணக்கை சஸ்பெண்ட் செய்கிறோம் என்று சொல்லி கணக்கை முடக்கிவிட்டார்கள். பின் ஒரு மாதமாக போராடி வேறு சர்வருக்கு மாற்றினேன். அப்படி மாற்றியதிலும் ப்ரச்னை. கடைசியாக நானே ஒரு வழங்கி நிறுனத்தை ஆரம்பித்துவிட்டேன். இப்போது சர்வரும் என் கன்ட்ரோல்தான். வாடிக்கையாளர்களை சஸ்பெண்ட் செய்வதும் என் கன்ட்ரோல்தான். அதனால் ப்ரச்னையில்லைாமல் சேவை வழங்கிவருகிறேன்.
உங்கள் ப்ரச்னையையும் மனதில் வைத்துக்கொள்கிறேன்.
என் வாடிக்கையாளர்களுக்கு அப்படி வரக்கூடாதில்லையா :)
நன்றி

சிவா.ஜி
28-05-2010, 06:39 AM
பிரச்சனையைக் கண்டு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்துப் போராடி அந்த மோசடி நிறுவனத்துக்கு நீங்கள் வைத்த 'ஆப்பு' உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியது தங்கவேல். வாழ்த்துக்கள்.

ஏமாத்தறதுக்காகவே எத்தனைபேர் அலையிறாங்க....முடியல....!!!

பாரதி
28-05-2010, 02:20 PM
உங்களின் அசரா முயற்சிக்கு வாழ்த்தும், முயற்சியில் வெற்றி பெற்றமைக்கு பாராட்டும் நண்பரே.

பா.ராஜேஷ்
28-05-2010, 03:57 PM
எப்படியெல்லாம் ஏமாத்தறாங்க எமகாதகனுங்க .... அப்படித்தாங்க இருக்கணும்... அந்த மாநில சி.எம்மையும் கண்டிப்பா பாராட்டியே தீரனுமுங்க... எப்படியோ பிரச்சனை தீர்ந்த வரை சந்தோசம்.. மற்றவர்களுக்கும் போராடும் எண்ணம் இந்த திரி மூலம் வரும். பகிர்விற்கு நன்றி...

தங்கவேல்
31-05-2010, 10:46 AM
மனாஸ் ஹோஸ்டிங்கில் சர்வீஸ் வாங்கினால் ஆப்பு அல்ல கடப்பாறையே அடிப்பார்கள் என்று சொன்னார் எனது நண்பர் இந்தப் பதிவைப் படித்து விட்டு.

பாலகன்
31-05-2010, 12:53 PM
ஓ இப்படியெல்லாம் வேற நடக்குதா? தங்கவேலு அண்ணே நீங்க அதிரடி நடவடிக்கையில் இறங்கி அவங்களுககு ஆப்பு கொடுத்தவிதம் பாராட்டுக்குரியது.

தங்கவேல்
04-06-2010, 05:08 AM
நன்றி பிரபு...

Avis2009
12-06-2010, 01:11 PM
பிரச்சனையைக் கண்டு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்துப் போராடி அந்த மோசடி நிறுவனத்துக்கு நீங்கள் வைத்த 'ஆப்பு' உண்மையிலேயே பாராட்டுகின்றேன்...

aren
13-06-2010, 05:18 AM
உங்கள் விடாமுயற்சிக்கு என் வாழ்த்துக்கள், ஆனால் இதற்கான நேர விரயத்தை கணக்கில் எடுத்துக்கொண்டால் எல்லாம் நஷ்டமே.

பணம் கொஞ்சம் அதிகமானாலும் தெரிந்த நிறுவனத்தை அணுகுவதே சிறந்தது என்று இதன்மூலம் தெரிகிறது.

தங்கவேல்
17-06-2010, 02:57 PM
வேறு என்னதான் செய்ய இயலும் ஆரென் ?

நாஞ்சில் த.க.ஜெய்
11-11-2010, 05:37 AM
பிரச்சனையைக் கண்டு ஒதுங்கிவிடாமல், தொடர்ந்துப் போராடி அந்த மோசடி நிறுவனத்துக்கு எதிராக நீங்கள் பெற்ற வெற்றி பாராட்ட தகுந்தது .
இது போன்று தவறுகள் நிகழும் போதுஎந்த வழிமுறையை பின்தொடர்ந்து வெற்றி பெற்றீர்களோ அந்த வழிமுறை அதன் விதிமுறைகளை அவசியம் கூறவேண்டும் அது பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் .ஒருவரின் அனுபவம் மற்றவர்களுக்கு பாடம்.

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

நேசம்
11-11-2010, 11:45 AM
எலாரும் உங்களை மாதிரி இருந்தால் இது போன்ற தவறுகள் குறைய வாய்ப்பு இருக்கிறது.கடைசியில் நிங்கள் கேட்கும் கேள்விக்கு உங்கள் கேள்வியிலே பதில் இருக்கிறது தங்க வேள் அண்ணா

kathir_tamil
12-11-2010, 04:39 AM
உண்மையில் உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு முன்னுதாரணம்..பாராட்டுக்கள் நண்பரே...

ஆன்டனி ஜானி
12-11-2010, 04:46 AM
ஊழியர்களை கண்டு ஒவ்வொரு கன்பெனி முதலாழிகள் தான் ஜாக்கிரதையாக இருக்கனும் ஊழியர்கள் இல்லையென்றால் அவர்கள் இல்லை ****** ஊரோடு ஒத்து வாழ் **** இத நான் சொல்லலப்ப பாரதியார் சொன்னார்

சூரியன்
12-11-2010, 02:44 PM
தற்போது நான் பயன்படுத்தும் தளம் 200GB இடம் வருடத்திற்கு RS:500 மட்டும்.
சேவை நன்றாக இருக்கின்றது