PDA

View Full Version : செய்திகள் வாசிப்பது... .......



simariba
26-05-2010, 03:09 AM
நான் ஆச்சர்யபட்ட ஒரு சம்பவம் இது. பெரும்பாலும் பொண்ணு, பையன் யாராவது வெளிநாட்டுல இருந்தா இந்த அப்பா, அம்மாக்கள் விடும் ரவுசு தாங்காது. ஒரு முறை எப்பாடு பட்டாவது போய்ட்டு வந்து சொந்தங்கள் கிட்ட புகைப்படம் காட்டி வெறுப்பேத்துற பெத்தவங்க மத்தியில என்னை பெத்தவங்க ஒரு தனி ரகம். எங்க பொண்ணு வீட்டுக்கு போக சிங்கப்பூர் வேண்டியிருக்குமோன்னு 8 வருஷம் பாஸ்ப்போர்டே வாங்கலைனா பாத்துகோங்க. 9 தாவது வருஷத்துல எப்படியாவது வரவைக்கனும் னு வம்பு பண்ணி எல்லாம் தயார் பண்ணினோம். ஒரு வழியாக வந்து இறங்கினாங்க எஸ் க்யூ விமானத்துல. சரின்னு ஒவ்வொரு இடமா சுத்தி காட்டினோம். ராபிள்ஸ் மெர்லயனை பார்த்து ஃபூ இவளோதானான்னு சொல்லிட்டாங்க. சரி அதாவது பரவாயில்ல, 14 மாடி உயரம்ன்னு சொன்னே இது தம்மாத்தூண்டு நிக்குது, இதையா மின்னல் வந்து தாக்குச்சு பக்கத்துல இருக்குற கட்டடமெல்லாம் இதை விட உயரமா நிக்குது? அப்படின்னாங்க. அய்யோ அப்பா அது இதில்ல அது செந்தோசா வுல இருக்குன்னு சொன்னேன். அங்க கூட்டிட்டு போகாம இங்க ஏன் கூட்டிட்டு வந்தே ன்னு அடுத்த கேள்வி.
லிஃப்ட் ல வரமாட்டேன் எங்கயாவது இடையில நின்னுடுச்சுன்னா என்னாகுறதுன்னு ஒரே வம்பு. ஆனா ஃபளையர் ல மட்டும் தைரியமா ஏறி சுத்தினாங்க ரெண்டுபேரும். எங்க அப்பா ஒரு என்சைக்ளோபிடியா, அவங்களுக்கு தெரியாத விஷயமே இல்லன்னு சொல்லலாம். அந்த காலத்து எம் எஸ்ஸி கணிதம். டெக்னிக்கலா எல்லாம் தெரிஞ்சு வைச்சிக்கிட்டு கலக்குற ஆல் ரவுன்டர். அவங்க ரசிச்ச இடங்கள்னு சொன்னா டிஸ்கவரி சென்டர், சயின்ஸ் சென்டெர் தான். அங்க செய்தி வாசிக்குற செட்டிங்க் இருக்கும் நம்ம படிக்குறது விடியோ மிஃஸ் ஆகி அங்க உள்ள தொலைக்காட்சில ஒளிபரப்பகும். நிறைய பேர் உக்கார்ந்து படிக்க தயங்கியபடி நிற்க, எங்க அம்மா (அந்த காலத்து எஸ் எஸ் எல் சி, ஆனா ஒரு புத்தகம் விடாம நிறைய படித்து நியாபகம் வைச்சிகிட்டு அப்பப்ப எங்களை அசத்துவாங்க GRE பரிட்சை வார்த்தைகளுக்கு கூட அர்த்தங்கள் அவங்கள கேட்டுக்கலாம், இவங்க ஒரு லிவிங்க் டிக்ஷ்னரி) தயக்கமே இல்லாம நடந்து போய் செய்திகள் வாசிப்பது நீனா மெராட்டா (அம்மா அவங்க பெயர் தான் சொன்னாங்க நான் ஒரு கெத்தா இருக்கட்டுமேன்னு மாத்திட்டேன்) ன்னு ஆரம்பிச்சு 5 நிமிஷத்துக்கு படிச்சு கலக்கிட்டாங்க. சில திறமைகள் எல்லாம் நம்ம அப்பா, அம்மா என்பதாலயே நம் கண்ணுக்கு தெரிவதில்லை. திரும்பி போகும் போது என்சைக்லோபிடியாவும், டிக்ஷ்னரியும் ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க கேட்டா அசந்துடுவிங்க, அடுத்த முறை நாங்க வரனும்னா தரையோடு வீடு வாங்குங்க இந்த உயரத்துல தங்கறது எங்களுக்கு பிடிக்கலைனு!!! (எங்க வீடு ஆறாவது மாடில இருக்கு:)).

பூமகள்
26-05-2010, 03:53 AM
ஹா ஹா.. ரொம்பவும் ரசிக்க வைத்த பதிவு... ரொம்ப கலகலப்பான, அறிவான பெற்றோரை ஒருவழியாய் வரவழைச்சி சுத்திக் காட்டிட்டீங்க.. நிஜமாவே அவர்களோடு சேர்ந்து பயணப்பட்ட உணர்வு.. கொஞ்சம் விரிவாக எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்..

இப்ப இருக்கும் சூழலில் வீடு வாங்கறது குதிரைக் கொம்பா போயிட்டு இருக்கே..சட்ட திட்டம் நெருக்கிட்டதாகக் கேள்வி..

செல்லப் பெற்றோருக்கு செல்லப் பெயர்கள்.. அருமை.. ஆனாலும் நீங்க ரொம்ப கொடுத்த வைத்தவர் தான்.. அறிவுச் சுரங்கங்கள்..

இன்னும் நிறைய சொல்வீங்கன்னு எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகளும் பாராட்டுகளும் சிமரிபா.

மதி
26-05-2010, 03:59 AM
ஹாஹா... நல்ல அனுபவம் அபிராமி...!!
உண்மை தான் அப்பா அம்மாவோட பல திறமைகள் நம்மளுக்கு தெரியறதில்ல... எங்கப்பாவோட மிகப்பெரிய திறமையே.. யாராயிருந்தாலும் பேச ஆரம்பிச்சிடுவார். கூச்சமே பட மாட்டார். எப்படி இவ்வளவு சகஜமா பேசறார்னு ஆச்சர்யமா இருக்கும். அம்மாவோட திறமையே அப்பாவ கண்ட்ரோல் பண்றது தான்.. :)

simariba
26-05-2010, 04:03 AM
அம்மாவிடமிருந்து புத்தகம் படிக்கும் பழக்கமும், அப்பவிடமிருந்து யாவற்றையும் அலசி ஆராய்ந்து தெளியும் பழக்கமும் எனக்கு வந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை. நீங்கள் சொல்வது சரி தான்.
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி பூமகள்.

simariba
26-05-2010, 04:04 AM
நன்றி மதி!

அக்னி
26-05-2010, 06:40 AM
பெற்றோரின் திறனும் புகழும் பார்த்துப் பிள்ளைகள் மகிழ்வதற்குக் கொடுத்து வைத்திருக்கவேண்டும்.

மிகவும் அனுபவித்துப் பதிவு செய்துள்ளீர்கள்.

சரி... சரி... பேச்சைக் குறைச்சுட்டு,
நிலத்தோட வீடு வாங்கற அலுவலப் பாருங்க அபிராமி...

ரங்கராஜன்
26-05-2010, 06:44 AM
ஹா ஹா நல்ல அப்பா, மிக நல்ல அம்மா......... அதை விட மிக மிக நல்ல பெண்ணு........ வாழ்த்துக்கள்

simariba
26-05-2010, 07:09 AM
நன்றி அக்னி! இதுவரை இந்த கோணத்தில் நான் சிந்திக்கவேயில்லை. மூன்றறை வீடு சொந்தமாக இருக்கும்போதே இப்படி நினைக்கிறார்களே என நினைத்தேன். ஒரு மூன்று கோடி ரூபாய் தயார் செய்ய வேண்டும் தரையோடு வீடு வாங்க. பார்ப்போம்.

நன்றி daks!

பா.சங்கீதா
26-05-2010, 07:16 AM
எப்போ தரையோடு வீடு வாங்க போறீங்க ??????

கீதம்
26-05-2010, 10:27 AM
அருமையான பெற்றோரை அழைத்து நம் வீட்டில் வைத்து உபசரிப்பதைக்காட்டிலும், வேறென்ன பெருமை நமக்கு? அந்த பாக்கியம் பெற்ற உங்களை மனதார வாழ்த்துகிறேன், அபி.

பா.ராஜேஷ்
27-05-2010, 04:03 PM
தரையோட வீடு வாங்கி அவங்கள திரும்பி கூப்பிட்டு அந்த சம்பவத்தையும் பதியுங்களேன்... :D ... ச்சும்மா தமாசுக்குத்தான்.. நல்லதோர் சம்பவம்... பகிர்விற்கு நன்றி.

சிவா.ஜி
27-05-2010, 04:23 PM
ரொம்ப சுவாரசியமா சொல்லியிருக்கீங்க அபி. கொடுத்துவெச்சவங்க நீங்க. அன்போடு..அறிவான பெற்றோர்கள். 9 வருடம் விடாமல் போராடி அவர்களை வரவழைச்சு நீங்க இருக்கிற ஊரை சுத்திக் காமிச்சிட்டீங்க.

உங்க அம்மா செய்தி வாசிச்சது...நிஜமாவே ஆச்சர்யமா இருக்கு. ரொம்ப தைரியசாலிதான்.

சீக்கிரமே மூன்று கோடி தயார் செஞ்சு...தரையில் வீடு வாங்கி தாயாரைக் கூட்டிக்கிட்டு வந்து காமிங்க. வாழ்த்துக்கள்.

பாரதி
27-05-2010, 04:39 PM
கொடுத்த வைத்த பெற்றோர்கள்... அவர்களை பெற்றோர்களாக பெற்ற பாக்கியம் உங்களுக்கு! நம்முடன் இருப்பவர்களின் திறமைகள் நம் கண்களுக்கோ புலன்களுக்கோ அவ்வளவு எளிதாக புலப்படுவது இல்லை என்பது உண்மைதான் போலும்.
பெற்றோர்கள் வீசிய குண்டை லாகவமாக நீங்கள் பிடிக்க வாழ்த்துகிறேன்.

simariba
29-05-2010, 11:22 AM
நன்றி நண்பர்களே!!

அன்புரசிகன்
29-05-2010, 11:31 AM
உண்மை தான். அருகில் இருப்பவர்களின் திறமை தெரிவதில்லை. அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள் அபிராபி...

கலையரசி
29-05-2010, 01:48 PM
படித்த பண்புள்ளோரைப் பெற்றோராக அடைய நீங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும். உங்கள் அம்மா தயக்கம் சிறிதுமின்றி செய்தி வாசித்ததறிந்து வியந்தேன். அவர்களை எல்லாம் எஸ்.எஸ்.எல்.சி உடன் நிறுத்தாமல் படிக்க வைத்திருந்தால் எவ்வளவோ சாதித்திருப்பார். அவர்களை அழைத்து நீங்கள் சுற்றிக் காட்டியது அறிந்து மகிழ்ச்சி. நல்ல பதிவு அபி!

simariba
31-05-2010, 11:07 AM
நன்றி கலையரசி!!

விகடன்
21-06-2010, 10:49 AM
பெற்றோரை வெளிநாடு சுற்றிக்காட்டிய சந்தோசத்தை பெற்றிருப்பீர்கள். எழுத்துக்களின் முரண்பாடு இருந்தாலும் சுவையான அனுபவப் பதிவு.

தரையோடு வீடு வாங்கச் சொல்லியிருக்காங்க என்றால், இனிமேல் பல வருடங்களுக்கு வராமலிருக்க வகுக்கப்பட்ட திட்டம் போலல்லவா இருக்கிறது!

simariba
03-04-2011, 01:25 PM
நன்றி விகடன்! அது தான் எனக்கும் சந்தேகம்.