PDA

View Full Version : விதி வைத்த முற்றுப்புள்ளி



jawid_raiz
25-05-2010, 06:37 AM
http://farm1.static.flickr.com/81/271266950_f1c15825c8_m.jpg

மகளே!

மூச்சுக் காற்று மட்டும்
உரிமை கோரும்
ஏகாந்தமான இரவொன்றில்
உன் நினைவுகளை
கொஞ்சம் அசை போடுகிறேன்...

தாயின் கருவறைக்கு
அர்த்தம் கொடுத்தவளே!
தந்தை என் மனதில்
பூவாய் பூத்தவளே!

உறக்கம் இன்றிய இரவுகளில்
உன் அழுகை எனக்கு தாலாட்டு
அலுவலக களைப்பில் வரும் எனக்கு
உன் அழுகை தானே வாடைக்காற்று

தென்றல் என்னை தீண்டியதாய்...
சாரல் என்னை சீண்டியதாய்...
எனக்குள் ஒரு கிளுகிளுப்பு
உன் பிஞ்சு விரல்களை தாங்கையில்

நிலவை கையில் ஏந்தியதாய்...
பூக்களே என்னை தாங்குவதாய்
எனக்குள் ஒரு பூரிப்பு...
என் மடியில் உன் தலை சாயுகையில்

பாவாய் நீயும்
பாவை ஏந்தி
விளையாடும் ஒரு கணத்தில்
பூவாய் மாறி
உன் தாய் நெஞ்சும்
அமிர்தம் சுமப்பது அறிவாயோ?

ஆயிரம் நாட்கள் காத்திருந்து
ஆறுதலாக பிறந்தவளே!
ஆறு வருடம் கூட உன் ஆயுள்
இறைவன் விதியில் நிலைக்கலையே?

தாங்கிய காம்புகள் தனித்திருக்கிறது
கனவிலாவது நீ வருவாய்
ஆயுள் முழுக்க உன் நினைவிருக்க
மாறி மாறி முத்தமிடுவாய்

-ஜாவிட் ரயிஸ்

அக்னி
25-05-2010, 06:58 AM
விதி தன்னிருப்பை
உறுதிசெய்து கொள்கின்றது.

உறுதிசெய்யக் கொல்லத்தான்
வேண்டுமா...

மனம் கனக்கும் கவிதை...

நிதமும் பூக்கும் நினைவுப் பூக்களில்,
வாடாச்சரமாய் வாசம் செய்கின்றாய்...
வாடியே வாசம் செய்கின்றோம்...

ஜாவிட்...
‘ஆபீஸ்’ என்ற வார்த்தை மட்டும் இக்கவியின் தமிழுக்கு நெருடலாய்...

அழுத்தமான கவிதை,
ரசிக்கவும் வைக்கின்றது. துடிக்கவும் வைக்கின்றது.

jawid_raiz
25-05-2010, 02:14 PM
நன்றி அக்னி.... தமிழுக்கு நெருடலாக இருந்த வார்த்தை மாற்றப்பட்டுவிட்டது

அக்னி
25-05-2010, 02:34 PM
இப்போது அழகாய்ப் பொருந்தி வருகின்றது ஜாவிட்...

நன்றி...

சிவா.ஜி
25-05-2010, 04:46 PM
மனதை நெகிழவைத்தக் கவிதை. தேவதை ஒன்று துள்ளிவிளையாடிய வீடு....விதி வைத்த முற்றுப்புள்ளியால்....களையிழந்த நிலை....கண்ணீர்வரவைக்கும் கொடுநிலை.

அக்னி சொன்னதைப்போல...பாங்காய் அமைந்த வரிகள் ரசிக்க வைக்கின்றன.....கவிதை சொல்லும் கரு கலங்க வைக்கிறது.

jawid_raiz
26-05-2010, 01:40 AM
மனதை நெகிழவைத்தக் கவிதை. தேவதை ஒன்று துள்ளிவிளையாடிய வீடு....விதி வைத்த முற்றுப்புள்ளியால்....களையிழந்த நிலை....கண்ணீர்வரவைக்கும் கொடுநிலை.

அக்னி சொன்னதைப்போல...பாங்காய் அமைந்த வரிகள் ரசிக்க வைக்கின்றன.....கவிதை சொல்லும் கரு கலங்க வைக்கிறது.

நன்றி சிவாஜி

சுடர்விழி
26-05-2010, 10:54 AM
நெகிழ வைத்த கவிதை ...கடைசி வரியில் கண்கள் கலங்கின எனக்கு....

jawid_raiz
26-05-2010, 11:46 AM
சுடர் விழியே கலங்கவைத்து விட்டதா? ஹ்ம்ம்ம்.... நன்றி சுடர்விழி

பாரதி
13-06-2010, 09:16 AM
இழப்பின் துயரம்
ஏக்கமாய் இக்கவிதை.

சொல்ல வந்தது மனதில் நிற்கிறது.
நண்பரே... எழுதுங்கள்.

அமரன்
13-06-2010, 12:09 PM
எவ்வளவு முயன்றும், உறுதியாய் நின்றும்
சமயங்களில்
படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

அத்தகைய தருணம் இப்போதும்..

எழுதுங்கள்.

govindh
13-06-2010, 12:11 PM
மனம் கனக்க வைத்த கவி வரிகள்...
விழி நனைக்க வைத்த விதியின் முற்றுப்புள்ளி.

jawid_raiz
14-06-2010, 05:01 AM
இழப்பின் துயரம்
ஏக்கமாய் இக்கவிதை.

சொல்ல வந்தது மனதில் நிற்கிறது.
நண்பரே... எழுதுங்கள்.

நன்றி பாரதி !

jawid_raiz
14-06-2010, 05:02 AM
எவ்வளவு முயன்றும், உறுதியாய் நின்றும்
சமயங்களில்
படைப்பையும் படைப்பாளியையும் பிரித்துப் பார்க்க முடிவதில்லை.

அத்தகைய தருணம் இப்போதும்..

எழுதுங்கள்.

நன்றி அமரன்!

jawid_raiz
14-06-2010, 05:03 AM
மனம் கனக்க வைத்த கவி வரிகள்...
விழி நனைக்க வைத்த விதியின் முற்றுப்புள்ளி.

நன்றி govindh!