PDA

View Full Version : நானோர் அநாதை

சொ.ஞானசம்பந்தன்
24-05-2010, 10:49 PM
நானோர் அநாதை

பெற்றோர் இறந்து பல்லாண் டாயின.
பொற்றொடி பிரிந்து பெற்றாள் விலக்கும்.
திருமணம் புரிந்துந் தனிமர மானேன்.
அண்ணனை அண்டினேன் அடித்துத் துரத்தினான்.
தம்பியை நாடினேன் துரத்தி யடித்தான்.
தோழனை நம்பினேன் துண்டித்தான் தொடர்பை.
தெரிந்தவர் சிலரைத் தேடிச் சென்று
கூனிக் குறுகிக் குரலைத் தாழ்த்தி
உதவி கோரினேன் உதடு பிதுக்கினர்.
ஆயிர மாயிரம் மக்களி னிடையே
ஆதர வின்றி அல்லல் உழந்தேன்.
பட்ட காலிலே படுமென் பதுபோல்
அடிவயிற் றில்வலி அதிகமா யிற்று.
மருத்துவர் கதியென மனையை அணுகினேன்.
பரிசோ தித்தார் பரிதாப முற்றார்.
பரிவுடன் பார்த்துப் பகர்ந்தார்: "பாவம்,
வாழ்வை யிழந்தாய் வரம்பிலாக் குடியால்!"

govindh
25-05-2010, 12:00 AM
குடிப் பழக்கத்தால்....
குடித்தனம் இழந்தான்...

நல்ல ஒரு சூடு...!
வார்த்தைகளால்...
குடிக்கு.. சவுக்கடி..!

nambi
25-05-2010, 03:56 AM
குடி குடியைக்கெடுக்கும்....என்பதை உணர்த்தும் கவிதை பகிர்வுக்கு நன்றி!

குடி பார்ட்டிக்கு கலந்துகொள்ளாவிட்டால் அபராதம் 1000 ரூபாய் விதிக்கும் நிறுவனங்களை என்ன செய்வது?

தொழிலாளர் கேட்பது 500 ரூபாய் ஊதிய உயர்வு?

அதை கொடுக்க மனமில்லாமல் லட்சலட்சமாய் கடற்கரை ரிசார்ட்டில் போதை பார்ட்டி வைத்து, போட்டி வைத்து, பெண்களுடன் டிஸ்கோ வைத்து, ஊதியக்கோரிக்கையை மறக்க வைக்கலாம் என்ற கனவு காணும் பன்னாட்டு நிறுவனங்களை என்ன சொல்ல...?

இது தான்.......வளர்ச்சி? குடி வளர்ச்சி?

உரிமைகளை கோரமுடியாத இவர்கள் கூட அநாதைகள் தான்!

சுடர்விழி
25-05-2010, 04:35 AM
குடியால் என்னென்ன இழந்தான்னு அருமையா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்...

சொ.ஞானசம்பந்தன்
25-05-2010, 11:49 AM
குடிப் பழக்கத்தால்....
குடித்தனம் இழந்தான்...

நல்ல ஒரு சூடு...!
வார்த்தைகளால்...
குடிக்கு.. சவுக்கடி..!

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
25-05-2010, 11:50 AM
குடியால் என்னென்ன இழந்தான்னு அருமையா சொல்லி இருக்கீங்க...பாராட்டுக்கள்...

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
25-05-2010, 11:52 AM
குடி குடியைக்கெடுக்கும்....என்பதை உணர்த்தும் கவிதை பகிர்வுக்கு நன்றி!

குடி பார்ட்டிக்கு கலந்துகொள்ளாவிட்டால் அபராதம் 1000 ரூபாய் விதிக்கும் நிறுவனங்களை என்ன செய்வது?

தொழிலாளர் கேட்பது 500 ரூபாய் ஊதிய உயர்வு?

அதை கொடுக்க மனமில்லாமல் லட்சலட்சமாய் கடற்கரை ரிசார்ட்டில் போதை பார்ட்டி வைத்து, போட்டி வைத்து, பெண்களுடன் டிஸ்கோ வைத்து, ஊதியக்கோரிக்கையை மறக்க வைக்கலாம் என்ற கனவு காணும் பன்னாட்டு நிறுவனங்களை என்ன சொல்ல...?

இது தான்.......வளர்ச்சி? குடி வளர்ச்சி?

உரிமைகளை கோரமுடியாத இவர்கள் கூட அநாதைகள் தான்!
விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றி.

சிவா.ஜி
25-05-2010, 12:27 PM
குடி அவனை முழுவதுமாய்க் குடித்தது. எல்லாமிருந்தும் ஏதுமில்லாத அனாதையாய்....குடிகூடக் கைகழுவிவிட்ட..வெறுங்கூடாய் போகிறான்.

குடியின் கொடுமையுணர்த்தும் கவிதை. நல்லக் கருத்து.

வாழ்த்துக்கள் சொ.ஞா

கலையரசி
25-05-2010, 01:13 PM
முதலில் படிக்கும் போது அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. ஆனால் முடிவைப் படிக்கும் போது அவன் மேல் கோபம் வருகிறது. குடியினால் அவன் மட்டுமின்றி அவனது குடும்பமும் அல்லவா மொத்தமாகப் பாதிக்கப்படுகிறது?

சொ.ஞானசம்பந்தன்
27-05-2010, 06:00 AM
குடி அவனை முழுவதுமாய்க் குடித்தது. எல்லாமிருந்தும் ஏதுமில்லாத அனாதையாய்....குடிகூடக் கைகழுவிவிட்ட..வெறுங்கூடாய் போகிறான்.

குடியின் கொடுமையுணர்த்தும் கவிதை. நல்லக் கருத்து.

வாழ்த்துக்கள் சொ.ஞா

வாழ்த்துக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
27-05-2010, 06:04 AM
முதலில் படிக்கும் போது அவன் மேல் அனுதாபம் பிறக்கிறது. ஆனால் முடிவைப் படிக்கும் போது அவன் மேல் கோபம் வருகிறது. குடியினால் அவன் மட்டுமின்றி அவனது குடும்பமும் அல்லவா மொத்தமாகப் பாதிக்கப்படுகிறது?

குடி குடிதனைக் கெடுக்கும்தானே? பின்னூட்டத்திற்கு நன்றி.

பாரதி
13-06-2010, 09:11 AM
குடியிடம் புகுந்தோர் குடியிடம் இருந்து அநாதையாவர்.
அழகான சொல்லாடலில் ஒரு பாடம்.
நன்றி ஐயா.

அமரன்
13-06-2010, 12:12 PM
கொடிய குடியின் கெடுதியைச் சொல்லும் சொல்லாடும் கவிதை.

பாராட்டுகள் அய்யா.

ஷீ-நிசி
13-06-2010, 02:31 PM
குடிக்கும் மனிதனின் நிலையை மிக அழகாக தாங்கியுள்ளது உங்கள் கவிதை!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
13-06-2010, 03:50 PM
வரம்பிலாக் குடியால் மட்டுமல்ல . வரம்பிற்குட்பட்ட குடியும் தவிர்க்கப்பட வேண்டியதே. நல்லதொரு கவிதை தோழரே.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 04:41 AM
குடியிடம் புகுந்தோர் குடியிடம் இருந்து அநாதையாவர்.
அழகான சொல்லாடலில் ஒரு பாடம்.
நன்றி ஐயா.
பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 04:42 AM
கொடிய குடியின் கெடுதியைச் சொல்லும் சொல்லாடும் கவிதை.

பாராட்டுகள் அய்யா.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 04:43 AM
குடிக்கும் மனிதனின் நிலையை மிக அழகாக தாங்கியுள்ளது உங்கள் கவிதை!

தொடரட்டும் உங்கள் கவிதைகள்!

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 04:44 AM
வரம்பிலாக் குடியால் மட்டுமல்ல . வரம்பிற்குட்பட்ட குடியும் தவிர்க்கப்பட வேண்டியதே. நல்லதொரு கவிதை தோழரே.

பாராட்டுக்கு மிக்க நன்றி.

குணமதி
02-07-2010, 03:46 AM
அழகு தமிழ்ப் பாவில் அருமையான கருத்து.

சொ.ஞானசம்பந்தன்
29-09-2010, 04:52 AM
அழகு தமிழ்ப் பாவில் அருமையான கருத்து.

பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி.

M.Jagadeesan
29-09-2010, 05:58 AM
மண்ணைச் சொந்தமாக்கும் மனிதனை
மண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறது.

மதுவை மனிதன் குடிக்கிறான்.முடிவில்
மது மனிதனைக் குடித்துவிடுகிறது.

சொ.ஞானசம்பந்தன்
30-09-2010, 05:34 AM
மண்ணைச் சொந்தமாக்கும் மனிதனை
மண் தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறது.

மதுவை மனிதன் குடிக்கிறான்.முடிவில்
மது மனிதனைக் குடித்துவிடுகிறது.

பின்னூட்டத்துக்கு நெஞ்சார்ந்த நன்றி.