PDA

View Full Version : மெட்ராஸ் ஐ வர ஆரம்பிச்சாச்சு !! உதவி !



ஸ்ரீதர்
24-05-2010, 04:56 PM
சென்னையில் இப்போது மெட்ராஸ் ஐ (Madras Eye) என்னும் கண் நோய் வர ஆரம்பித்து இருப்பதாக பத்திரிகைகளில் படித்தேன்.

அது வராமல் பாதுகாக்க வழிமுறைகள் இருந்தால் நண்பர்கள் பகிருங்களேன்

பாலகன்
24-05-2010, 05:03 PM
கண்களையும் கைகளையும் சுத்தமான தண்ணீரில் கழுவிவந்தாலே ஓரளவு சமாளிக்கலாம்

அறிஞர்
24-05-2010, 06:41 PM
மெட்ராஸ் ஐ பெயர் காரணம்
சென்னையில் 1918ம் ஆண்டு ஒரு புதுவிதமான கண் எரிச்சல், வலியுடன் கண் நோய் பரவியது. எழும்பூரில் உள்ள கண் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது, ‘அடினோ’ என்ற வைரஸ் கிருமிதான் காரணம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கண்களை பாதிக்கும் வைரஸ் கிருமியை சென்னையில் முதலில் கண்டுபிடித்ததால், அதற்கு ‘மெட்ராஸ் ஐ’ என்று பெயரிடப்பட்டது.

சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதிப்பு

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இவர்களை கண் நோய் தாக்கினால் சரியாவதற்கு பல நாட்களாகும். இதன் மூலம் அவர்களுக்கு வேறு நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இந்நோயால் பின் விளைவுகள் இல்லை.
கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துபவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி அதை பயன்படுத்த வேண்டும். லென்ஸ்களை எப்போது சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கண் சிவப்படைதல், நீர் வழிதல் போன்ற பிரச்னை ஏற்பட்டால் லென்சை உடனடியாக எடுத்துவிட வேண்டும்.

சென்னையில் மெட்ராஸ் ஐ சீசன் தொடங்கி விட்டது. பொதுமக்கள் கண்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைக்கிறது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரிக்கிறது. பொதுமக்கள் தவித்து வந்த நிலையில்தான், வங்கக் கடலில் காற்றழுத்தம் உருவானது. லைலா புயலாக மாறி, தமிழகம் முழுவதும் 2 நாட்கள் நல்ல மழை பெய்தது. புயல் ஆந்திர மாநிலத்தில் கரை கடந்த பிறகு மீண்டும் வெயில் சுட்டெரிக்கிறது. வெயில், புயல், மழை மீண்டும் வெயில் என தட்பவெப்ப நிலை மாற்றத்தால் பலரும் இப்போது கண் நோய் (மெட்ராஸ் ஐ) பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், மெட்ராஸ் ஐ.க்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து கண் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

கருவிழியை சுற்றியுள்ள வெள்ளை படலத்தின் மீது கண்ணுக்கு தெரியாமல் வைரஸ் கிருமி ஒட்டிக் கொள்ளும். இதனால், கண்கள் அதிகம் சிவப்பாக இருக்கும். கண்ணில் அதிகமாக அழுக்கு வரும். கண் எரிச்சல் உண்டாகும், வலிக்கும். தண்ணீர் சொட்டும், கண்கள் கூசும். இதைத்தான் மெட்ராஸ் ஐ என்கிறார்கள். இது எளிதில் தொற்றும் நோய். இப்போது நிலவி வரும் தட்ப வெப்ப மாற்றத்தால் கண் நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மற்ற நாட்களில் கண் நோயால் பாதிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு ஒருவர் அல்லது இரண்டு பேர்தான் வருவார்கள். இப்போது 20 பேர் சிகிச்சைக்கு வருகின்றனர். கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தானாகவே மருந்துகள் வாங்கி போட்டு கொள்ள வேண்டாம். கண் மருத்துவரின் ஆலோசனைபடி செயல்பட வேண்டும்.

சொட்டு மருந்துகளை கண்ணில் போடும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். இந்நோய் வந்தால் கண்ணில் எதிர்ப்பு சக்தி குறையும். முறையான சிகிச்சை பெற்றால் ஒரு வாரத்தில் சரியாகிவிடும். கண் நோய் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாறு, கோழி ரத்தம் போன்றவற்றை விடக்கூடாது. சில ஊர்களில் தாய்ப்பால் விடுகின்றனர். தாய்ப்பாலில் எதிர்ப்பு சக்திகள் இருக்கின்றன. அதனால் கண்நோய்க்கு தாய்ப்பால் விடலாம். மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்க மூக்கு கண்ணாடிகளை பயன்படுத்தலாம்.

நன்றி தினகரன்

அன்புரசிகன்
25-05-2010, 03:07 AM
நம்மூரில் கண்வருத்தம் என்ற ஒரு பிரச்சனை இருந்திருக்கிறது.
பார்த்தால் கண் சிவந்திருக்கும். கண் திறக்கவே வலிக்கும்.
நித்திரை கொண்டெழுந்தால் கண் திறக்க முடியாதவாறு மூடப்பட்டிருக்கும்.
அயர் எனப்படுவதால் கண் இமை நனைத்து ஒட்டப்பட்டது போல் இருக்கும். பின்னர் கொதிநீரை தூய்மையான துணியில் ஒற்றி துடைப்பார்கள்.
நம்மூரில் அநேகமாக பனம்பழம் பழுக்கும் காலத்தில் கொசு எனும் பூச்சி (நுளம்பு அல்ல... அநேகமாக பழங்களில் மொய்க்குமோ அது) அதிகமாக இருக்கும். அவற்றால் தான் இது பரவுகிறது என்பார்கள்.

இதிலிருந்து காக்க... தினமும் குளிக்க வேண்டுமாம். வீட்டில் யாருக்காவது வந்தால் தலையில் நீரூற்றி தோய வேண்டும். :D காரணம் இது உடம்பு சூட்டினால் அதிகமாக பரவுமாம்.

குளிர்களி கோழி இறைச்சி நண்டு போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஆடு இறால் பரவாயில்லை. :D

தயிர் வாழைப்பழம் மோர் செவ்விளநீர் போன்றவற்றை நன்றாக மொங்கலாம். :D குளிர்ச்சிக்காக...


ஆனால் இது தான் மட்ராஸ் என்னும் வியாதியா என்று தெரியல...
அக்னி: டேய்.. என்ன பண்ணப்போறாய்???
ஓவியன்: அது தான் ஒன்றுமா புரியல... குளிக்கவேணும் என்று பெரிய பாறாங்கல்லா அன்பு போட்டுட்டானே...
அக்னி: ஆண்டவன் ஒன்றை எடுத்து மற்றதை கொடுப்பானாம். அது தான் ஆடு இறால் வாழைப்பழம் என்று பெரிய பட்டியலே இருக்கே...
ஓவியன்: ஐ.......... ஜாலி........................

விக்ரம்
26-05-2010, 02:57 PM
நான் ஊரில் இருந்த வெயிற் காலங்களில், மெட்ராஸ் ஐ வரும் போன்ற உணர்வோ (அ) லேசாக கண் சிவந்து எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனே பாருக்கு சென்று ஒரு பீரை அருந்துவேன்.

சிவா.ஜி
26-05-2010, 03:43 PM
நான் ஊரில் இருந்த வெயிற் காலங்களில், மெட்ராஸ் ஐ வரும் போன்ற உணர்வோ (அ) லேசாக கண் சிவந்து எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனே பாருக்கு சென்று ஒரு பீரை அருந்துவேன்.

:icon_ush::icon_ush::icon_ush::icon_ush::icon_ush:.......:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
26-05-2010, 11:11 PM
நான் ஊரில் இருந்த வெயிற் காலங்களில், மெட்ராஸ் ஐ வரும் போன்ற உணர்வோ (அ) லேசாக கண் சிவந்து எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனே பாருக்கு சென்று ஒரு பீரை அருந்துவேன்.
பார்த்தீங்களா??? நான் சொன்ன சாமான் தான்.. சூட்டினால் தான் வருகிறது. அதற்குப்பதில் செவ்விளநீரும் தயிரும் ஆட்டிறைச்சியும் சாப்பிட்டிருந்தா சரியாகிப்போயிடும். (ஆனா 1 போத்தல் பியரிலும் அதிக விலை கொடுப்பீர்கள். அது வேற...)