PDA

View Full Version : வளர்ப்பு....!!!!சிவா.ஜி
24-05-2010, 04:40 PM
அந்தக்குழந்தை சாதாரணமாகத்தான்
சொன்னது அந்த வார்த்தையை
என்னைப்பார்த்து.....
முட்டைக்கண்ணு மாமா....
அதில் பெற்றவர்களின் வளர்ப்பு
அசிங்கமாய்த் தெரிந்தது...!!!

அக்னி
24-05-2010, 05:16 PM
யாருங்க சிவா.ஜி யை குழந்தையை வச்சுக் காமெடி பண்றது...

முனிவரிடத்திலும், கொலைகாரனிடத்திலுமாக வளர்ந்த ஜோடிக் கிளிகளின் கதை நினைவெழும்புகின்றது.

மழலை மீது தூவும் வித்துக்கள்
வாடாத் துளிர்களாகும்...
எனவே,
நல்வித்துக்கள் விதைத்து,
நற்குணங்களை வளர்த்து,
நற்பிள்ளைகளை உருவாக்குவோம்...

பாலகன்
24-05-2010, 05:38 PM
சிறுபிள்ளைகளின் இயல்பே நாம் பேசுவதை திரும்பி மற்றவர்களிடமும் பேசுவது...
ஒருவேளை அவர்கள் வீட்டிலும் ஒரு முட்டைகண் மாமா இருக்காரோ என்னவோ? :)

அமரன்
24-05-2010, 09:43 PM
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே.. அது நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே..

நூலைப்போல சேலை.. தாயைப் போலப் பிள்ளை..

பிள்ளையின் செயல்களில் முதலில் தாக்குணுவது அன்னைதான்.

சிவாவின் இந்தக் கதையைப் படிச்ச போது எனக்கு நினைவில் வந்த ஒன்று..

சின்ன வயதில் நான் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிப்பேனாம். அப்போது சற்றே விகாரமான முகத்துடைய ஒருவர் தன் முகத்தை மேலும் கொடூரமாக்கி என்னை வெருட்டிச் சாப்பிட வைப்பாராம். கொஞ்சு தமிழில் நான் உம்மாண்டி மாமா என்பதை அள்ளி ரசிப்பாராம். கொஞ்சம் வளர்ந்தும் நானிதைச் சொன்ன போது அம்மா என்னை அடிப்பாவாம். நீண்ட நாட்களின் பின் என் 23 ஆவது வயதில் என்னைக் கண்டு இதை அவர் சொன்ன போது அவருடைய குரலில் தெறித்த மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்னை என்னமோ செய்தது. அதைவிட என்னை நெகிழ்த்தியது உங்கம்மா உன்னை நல்லா வளத்திருக்கா என்று என்னைப் பாத்து அவர் சொன்ன போது..

கீதம்
24-05-2010, 10:02 PM
நறுக்கென்ற கவிதையில் நறுக்குத் தெறிக்கின்றன வளர்ப்பும், வார்த்தைகளும்.

குழந்தையின் வார்த்தைகளை வைத்து குடும்பத்தை எடைபோட நேரிடும் அவலம் அப்பட்டமாய்ப் புரிகிறது.

பாராட்டுகள், சிவா.ஜி அவர்களே.

இந்தியாவில் இருந்தபோது எங்கள் வீட்டில் வேலை செய்த பெண்மணியை நான், 'வாங்க, போங்க' என்று பேசியதாலும் என் குழந்தைகள் அவரை 'அத்தை' என்று அழைத்ததாலும் என்னைக் கேலி பேசினர் பலர். ஆனால் அந்த மரியாதையும் அன்பும் தான் தொடர்ந்து பத்து வருடங்களாய் எந்தச் சிக்கலும் இல்லாமல் எங்கள் வீட்டில் அவரை வேலை செய்யவைத்திருந்தது.

govindh
25-05-2010, 12:10 AM
நல் மனதில்
நஞ்சு வித்துக்கள்...

பெற்றவர்களின் பேச்சும்...
வளர்ப்பும்...அணுகுமுறையும்
பிள்ளைகளை மேம்படுத்தும்.

nambi
25-05-2010, 02:49 AM
ஒரு குழந்தை சொல்லியது அம்மா குப்பை அள்ளும் அண்ணா வந்திருக்கார்.....
நகரசுத்தி தொழிலாளியின் முகம் புன்முறுவல் பூத்தது.

இன்னொரு குழந்தை சொல்லியது குப்பைக்காரன் வந்திருக்கான்.....
நகர சுத்தி தொழிலாளியின் முகம் வாடியது.

இது இரண்டையும் கண்ட எனக்கு தோழர் சிவா சொன்னதின் அரத்தம் முழுதாய் புரிகிறது. பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
25-05-2010, 08:21 AM
ஆஹா...அருமையா சொல்லியிருக்கீங்க அக்னி. நல்வித்துக்கள் விதைத்து நற்பயிரை வளர்ப்போம்.

ரொம்ப நன்றி அக்னி.

(குழந்தையை வெச்சு என்னைக் காமெடிப் பண்ணனும்னா...குழந்தை எப்புடி அழைக்கும்ன்னு உங்களுக்குத் தெரியாதா...)

சிவா.ஜி
25-05-2010, 08:23 AM
ஆமாம் மகாபிரபு....குழந்தைகளின் இயல்பு அதுதான். அதனால்தான் வளர்ப்பவர்கள் எச்சரிக்கையாய் வார்த்தைகளைக் கையாளவேண்டும்.

நன்றி மாகாபிரபு.

சிவா.ஜி
25-05-2010, 08:25 AM
சின்ன வயதில் நான் சாப்பிடாமல் பிடிவாதம் பிடிப்பேனாம். அப்போது சற்றே விகாரமான முகத்துடைய ஒருவர் தன் முகத்தை மேலும் கொடூரமாக்கி என்னை வெருட்டிச் சாப்பிட வைப்பாராம். கொஞ்சு தமிழில் நான் உம்மாண்டி மாமா என்பதை அள்ளி ரசிப்பாராம். கொஞ்சம் வளர்ந்தும் நானிதைச் சொன்ன போது அம்மா என்னை அடிப்பாவாம். நீண்ட நாட்களின் பின் என் 23 ஆவது வயதில் என்னைக் கண்டு இதை அவர் சொன்ன போது அவருடைய குரலில் தெறித்த மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என்னை என்னமோ செய்தது. அதைவிட என்னை நெகிழ்த்தியது உங்கம்மா உன்னை நல்லா வளத்திருக்கா என்று என்னைப் பாத்து அவர் சொன்ன போது..

இதுதான் அமரன்....இந்த நெகிழ்ச்சி வரவேண்டுமானால்...அது அன்னைத் தந்தை வளர்ப்பில் இருக்கிறது.

பசுமரத்தாணி...பழுதில்லாமல் இருக்கவேண்டும்.

நன்றி பாஸ்.

சிவா.ஜி
25-05-2010, 08:35 AM
உங்கப்பிள்ளைகளை நினைக்கும்போது உங்கள் வளர்ப்பையெண்ணி பெருமையா இருக்குங்க கீதம்.

எங்கள் தெருச் சாக்கடையை சுத்தம் செய்ய வரும் ஒரு பெரியவர்..தாகத்துக்குத் தண்ணீர்க் கேட்டு எங்கள் வீட்டுக்கு வந்தால்...என் மகள் 'அம்மா...சாக்கடை சுத்தம் செய்யுற தாத்தா வந்திருக்காங்க' எனச் சொல்லுவாள். அந்தத் தாத்தா ஒவ்வொருமுறை வரும்போதும் வேகவைத்த மரவள்ளிக் கிழங்கை அவளுக்கென பொதிந்துக் கொண்டுவருவார்.

என் மாமனார்...இருக்கும்வரை வீட்டுக்குப் பிச்சைக்காரர்கள் வந்தாலும்...சின்னப்பையனாக இருந்தால்...போய்ட்டுவாப்பா தம்பி என்றும், பெரியவர்களை மரியாதையோடு...இன்னும் ஆகலைங்க...போய்ட்டுவாங்க என்பார். என் பிள்ளைகளும்....அப்படியே இருக்கிறார்கள். ஆனால் என் உறவுக்காரர்களுக்கு இரண்டு மகன்கள்...என்னையே...'நீ எப்ப வந்தே' எனக் கேட்பார்கள். ஏனென்றால் அந்தப் பையன்களின் அம்மா தன் மாமியாரை...'இந்தக் கெழத்துக்கு வடிச்சுப்போட்டே எனக்கு தாவு தீர்ந்துடுது' என பிள்ளைகள் முன்பே சொல்வார்.

பிள்ளைகளின் இந்த மரியாதைக் கொடுக்கும் குணம் அவர்களுக்கு வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் உயர்த்திவைக்க உபயோகப்படும்.

மிக்க நன்றிங்க* கீதம்.

சிவா.ஜி
25-05-2010, 08:52 AM
உண்மைதான் கோவிந்த் பெற்றோரின் பேச்சும், வளர்ப்பும் பிள்ளைகளை மேம்படுத்தும்.

மிக்க நன்றி.

சிவா.ஜி
25-05-2010, 08:55 AM
ரொம்ப அருமையான நிகழ்வைச் சொல்லி...வளர்ப்பு என்றால் எப்படியிருக்கவேண்டுமெனக் காட்டியிருக்கிறீர்கள் நம்பி.

மிக்க நன்றி.

அக்னி
25-05-2010, 09:13 AM
(குழந்தையை வெச்சு என்னைக் காமெடிப் பண்ணனும்னா...குழந்தை எப்புடி அழைக்கும்ன்னு உங்களுக்குத் தெரியாதா...)
தெரியலையே,
டக டக டக டக சிவா.ஜி த பாஸ்... :cool:

சிவா.ஜி
25-05-2010, 09:42 AM
ம்....தெரியலையேன்னு சொல்லிட்டு....விரலால எதையோத் தட்டி...எல்லாம் தெரியும்ன்னு சொல்லிப்புட்டீகளேப்பு....!!!

அன்புரசிகன்
25-05-2010, 10:51 AM
நியாயமான ஏக்கம். பெரியவர்கள் சிறுவர் முன் பேச முன் யோசிக்க வேண்டும். காரணம் அது பின் அவர்கள் கண்ணையே குத்தும்.
வாழ்த்துக்கள் அண்ணா..


தெரியலையே,
டக டக டக டக சிவா.ஜி த பாஸ்... :cool:
ஐயே............. அக்னிக்கு சரியா பெயர் வைக்க தெரியல...
சேப்பாக்கம் அங்கிள் வந்திருக்கார் என்று சொல்லும். :lachen001:

அக்னி
25-05-2010, 11:28 AM
சேப்பாக்கம் அங்கிள் வந்திருக்கார் என்று சொல்லும். :lachen001:
:sprachlos020: :sprachlos020: :sprachlos020: :D
ஏன் ரசிகா சிவா.ஜி யோட தலையப்போட்டு உருட்டுறீங்க...

சிவா.ஜி
25-05-2010, 12:00 PM
ஐயே............. அக்னிக்கு சரியா பெயர் வைக்க தெரியல...
சேப்பாக்கம் அங்கிள் வந்திருக்கார் என்று சொல்லும். :lachen001:

ஏன் ரன்வே அங்கிள் வந்திருக்காங்கன்னு சொல்லாதா....
குழந்தைங்களுக்கு நல்லப் பழக்கம் சொல்லித்தாங்கன்னு கவிதை எழுதுனா...இந்த அக்னியும், அன்பும்...நல்லாவே சொல்லித் தராங்கப்பா.....:sauer028:

அன்புரசிகன்
25-05-2010, 12:36 PM
ஏன் ரன்வே அங்கிள் வந்திருக்காங்கன்னு சொல்லாதா....
குழந்தைங்களுக்கு நல்லப் பழக்கம் சொல்லித்தாங்கன்னு கவிதை எழுதுனா...இந்த அக்னியும், அன்பும்...நல்லாவே சொல்லித் தராங்கப்பா.....:sauer028:
ரன்வே அங்கிள்.. சரியான பொருந்தவில்லை. (அன்னீஸியா இருக்கு) சேப்பாங்கம் அங்கிள் தான் ஈஸியா இருக்கு... பூமகளின் மகளுக்கு சேப்பாங்கம் அங்கிள் என்று சொல்லிகொடுக்க சொல்றேன். :lachen001:

muthuvel
25-05-2010, 12:53 PM
அந்தக்குழந்தை சாதாரணமாகத்தான்
சொன்னது அந்த வார்த்தையை
என்னைப்பார்த்து.....
முட்டைக்கண்ணு மாமா....
அதில் பெற்றவர்களின் வளர்ப்பு
அசிங்கமாய்த் தெரிந்தது...!!!

கலகிடிங்க

சிவா.ஜி
25-05-2010, 12:53 PM
சரி சரி....சேப்பாக்கமே இருக்கட்டும். வேற யாராவது வந்து இன்னொரு புதுப்பேர் கொடுக்கறதுக்குள்ள...இந்தப்பேரையே முடிவு பண்ணி தீர்மானம் போட்டுடலாம்.

அப்படியே இதை நகலெடுத்து மன்ற நோட்டீஸ்போர்ட்ல ஒட்டிடுங்கப்பா.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பாஆஆஆஆஆஆஆஆ......முடி...........................................ல....!!

சிவா.ஜி
25-05-2010, 01:00 PM
ரொம்ப நன்றி முத்துவேல்.

கலையரசி
25-05-2010, 01:09 PM
பெரியவர்களுக்கு மரியாதை தரக் குழந்தைகளிடம் கற்றுக் கொடுக்க வேண்டியது பெற்றோரின் கடமை. குழந்தை அறியாத வயதில் வயதில் மூத்தோரை இழிவாகப் பேசும் சமயத்தில் சிரித்து அவனை உற்சாகப்படுத்துவர் சிலர்.
அமரன் சொன்னது போல் குழந்தைகள் பெரியவர்களாகி சமுதாயத்தில் நற்பெயர் எடுப்பதும் கெட்ட பெயர் எடுப்பதும் அம்மாவின் வளர்ப்பில் தான் இருக்கிறது.
ஆறே வரிகளில் குழந்தை வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

சிவா.ஜி
25-05-2010, 02:39 PM
மிக்க நன்றிங்க கலையரசி அவர்களே.

அந்த நேரத்துக்கு...ஆஹா தன் குழந்தை எவ்வளவு அழகாய் பேசுகிறான் என மெச்சுபவர்கள்...அதன் பின்விளைவு தெரியாமல் சந்தோஷப்படுகிறார்கள்.

அக்னி
25-05-2010, 02:48 PM
சரி சரி....சேப்பாக்கமே இருக்கட்டும். வேற யாராவது வந்து இன்னொரு புதுப்பேர் கொடுக்கறதுக்குள்ள...இந்தப்பேரையே முடிவு பண்ணி தீர்மானம் போட்டுடலாம்.

அப்படியே இதை நகலெடுத்து மன்ற நோட்டீஸ்போர்ட்ல ஒட்டிடுங்கப்பா.

நான் ஒத்துக்க மாட்டேன்... அன்பு இது நல்லாவா இருக்கு...
இப்போ பாருங்க சிவா.ஜி எப்பிடி விரக்தியாப் பேசறார்ன்னு...

நீங்களே பேர முடிவு பண்ணினா அப்புறம் நாமெல்லாம் எதுக்கு ரசிகா...

முதல்ல சிவா.ஜிக்குப் பெயர்ப்பரிந்துரைத் திரி ஆரம்பித்து,
அதனை வாக்களிப்புக்கு வைத்து, அதிலிருந்து தேர்வு செய்வதுதான் மன்ற ஜனநாயகத்துக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும்...

என்ன சிவா.ஜி நாஞ் சொல்லுறது சரிதானே...

:rolleyes:

சிவா.ஜி
25-05-2010, 03:36 PM
அண்ணாச்சி....நீங்க ரொம்போ நல்லவங்க.......

யாருப்பா அங்க....அண்ணாத்தைக்கு....ஒரு ஆட்டுக்கால் சூப்பு ஆர்டர் பண்ணுங்க.....இன்னும் நிறைய வேலையிருக்கு....தெம்பு வேணாமா....???

பாலகன்
25-05-2010, 03:47 PM
என்னாது பெயர் வைச்சதுக்கே ஆட்டுகால் சூப்பா? :) பலே

சிவா.ஜி
25-05-2010, 04:33 PM
அப்பயாச்சும் அடங்குமா அக்னி அப்படீங்கற எண்ணம்தாங்க.....