PDA

View Full Version : செயற்கை செல் கண்டுபிடிப்பு



அறிஞர்
24-05-2010, 01:59 PM
மரபணு ஆய்வில் மகத்தான புரட்சி
செயற்கை செல் கண்டுபிடிப்பு
விஞ்ஞானிகள் குழுவில் 3 இந்தியர்கள்

வாஷிங்டன், மே 22:

கடவுளை நெருங்கி விட்டானா மனிதன்? ஆம், கடவுள் மட்டுமே சில அபூர்வ செயல்களை செய்ய முடியும் என்ற நம்பிக்கைக்கு நடுவே, அதேபோன்ற செயல்களை அறிவியல் பூர்வமாக சாதித்து வருவதில் விஞ்ஞானிகளின் பங்கு அதிகம்.

அந்த வகையில், பல ஆண்டாக மேற்கொண்ட ஆய்வில் ஒரு மகத்தான சாதனையை அமெரிக்காவை சேர்ந்த மரபணு வல்லுனர் கிரேக் வென்டர் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். மனித பிறப்பில் இருந்து வாழ்க்கையில் கடைசி வரை செயல்படுவதில் ஜீன் மற்றும் க்ரோமோசோம்களுக்கு உண்டு. பல லட்சம் செல்களை கொண்ட இவை தான் வாழ்க்கையில் பெரும் பங்காற்றுகிறது.

இந்த வகையில், முதன் முதலில் செயற்கை செல் (சிந்தடிக் செல்) கண்டுபிடித்துள்ளனர் இந்த விஞ்ஞானிகள். இந்த செயற்கை செல்களால், மரபணுவை மாற்ற முடியும்; தேவைக்கேற்றபடி செயல்படுத்த முடியும். இயற்கையான செல்கள் போல, மனித உடலில் பங்காற்ற முடியும்.

இதன் பலன்கள் அளவிட முடியாது; சுருங்கச்சொன்னால், மனிதனை, அவன் வாழ்க்கையை முழு ஆரோக்கியமாக மாற்றி விட முடியும். அதாவது, செயற்கை வாழ்க்கையை உருவாக்க முடியும். இத்தனை ஆண்டுகளில் முதல் புரட்சி சாதனை இது தான். மனிதன் & இயற்கை இடையே உள்ள இடைவெளியை நாங்கள் தகர்க்க இன்னும் பல மைல் செல்ல வேண்டும்’ என்கிறார் வென்டர்.

சாதனையில் இந்தியர் பங்கும் உண்டு. 24 பேர் கொண்ட வென்டர் குழுவில், சஞ்சய் வாஜி, ராதா கிருஷ்ணகுமார், பிரசாந்த் பார்மர் ஆகிய மூன்று இந்திய வம்சாவளி இந்தியர் உள்ளனர் என்பது பெருமைக்குரிய விஷயம்.

நன்றி தினகரன்

கலையரசி
24-05-2010, 02:05 PM
செயற்கை செல் கண்டுபிடித்த விஷயம் அறிந்து மகிழ்ந்தேன். மருத்துவத் துறையில் இது ஒரு மகத்தான கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகமில்லை. அதில் இந்தியரின் பங்கும் இருக்கிறது என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விஷயம்.
பகிர்வுக்கு நன்றி.

nambi
24-05-2010, 02:55 PM
நுண்ணோக்கி மூலமே பார்க்ககூடிய மனிதனின் அடிப்படை அலகான செல்களையும் செயற்கையாக கண்டுபிடித்துவிட்டனரா! அரிய செயல! அரிய கண்டுபிடிப்பு! அபூர்வத் தகவல்! பகிர்வுக்கு நன்றி!

சிவா.ஜி
24-05-2010, 03:49 PM
என்றாவது நிகழும் என எதிர்பார்க்கப்பட்ட முக்கிய கண்டுபிடிப்பு. சாதித்தவர்களுக்கு...வாழ்த்துக்கள்.

பங்காற்றிய இந்தியர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள். நோயற்ற ஒரு சமுதாயம் இதனால் உருவாக்கப்படுமென்றால்...அதைவிட மகிழ்ச்சி வேறென்ன...

பகிர்வுக்கு நன்றி அறிஞரே.

aren
24-05-2010, 04:20 PM
ஒரு நல்ல விஷயம் நடந்திருக்கிறது. இன்னும் ஆராய்ச்சி பூர்த்தியாகி இதன் மூலம் மக்களுக்கு நன்மை ஏற்படவேண்டும், அதுவும் கூடியவிரைவில்.

விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Narathar
24-05-2010, 05:57 PM
ரொபின் என்ற என் நண்பர் ஒருவரும் இதில் ஈடுபட்டிருப்பார் என்று நினைத்திருந்தேன்.....................

இயற்கையோடு மோதி மோதி...
அதுவும் நம்மோடு மோத பூதாகரமாக திரும்பியிருக்கும் இந்த கால கட்டத்தில் இயற்கைக்கு சவால் விடும் இன்னுமொரு கண்டுபிடிப்பு............

தங்கவேல்
04-06-2010, 05:16 AM
இயற்கையின் ரகசியத்தைக் கண்டுபிடிக்கிறேன் பேர்வழி என்று ஆரம்பித்தால் நிச்சயம் ஏமாற்றம் தான் மிஞ்சும் என்பது முன்னோர்கள் வாக்கு. பார்க்கலாம் இது எந்த அளவுக்கு வெற்றி பெரும் என்பதை.

Mano.G.
04-06-2010, 09:33 AM
ரொபின் என்ற என் நண்பர் ஒருவரும் இதில் ஈடுபட்டிருப்பார் என்று நினைத்திருந்தேன்.....................

இயற்கையோடு மோதி மோதி...
அதுவும் நம்மோடு மோத பூதாகரமாக திரும்பியிருக்கும் இந்த கால கட்டத்தில் இயற்கைக்கு சவால் விடும் இன்னுமொரு கண்டுபிடிப்பு............

அந்த டாக்டர் ராபின்ஸன் யார் என்று எனக்கும் தெரியும், அந்த அறிஞரின் கண்டுபிடிப்புக்கள் கூடிய சீக்கிரம் நமக்கும் அறிவிப்பார்

மனோ.ஜி