PDA

View Full Version : அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? இறுதி அத்தியாயம்Pages : [1] 2

கீதம்
23-05-2010, 06:08 AM
மன்ற நண்பர்களுக்கு வணக்கம். எவ்வளவோ முன்னெச்சரிக்கையாய் இருந்தும், தொடர்கதைத் தொற்றுநோய் என்னையும் பீடித்துவிட்டதால் உங்களை சோதிக்கப் புறப்பட்டு வருகிறது ஒரு புதிய தொடர்கதை. திடுக்கிடும் சம்பவங்கள், திடீர்த் திருப்பங்கள் போன்ற தொடர்கதையின் இலக்கணங்களை மீறி எழுதப்பட்ட, இயல்பு வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிகழ்வுகளே இக்கதை. இது என் முதல் முயற்சி என்பதால் நிறை குறைகளைத் தவறாமல் சுட்டிக்காட்டுமாறு வேண்டுகிறேன்.


அத்தியாயம் (1)

விக்னேஷ், அம்மாவுக்கு காலில் தைலம் விட்டு நீவிக்கொண்டிருந்தான். தினம் தினம் இரவு உறங்கப்போகுமுன் இப்படிச் செய்தால்தான் அம்மாவால் கொஞ்சமாவது தூங்கமுடியும். சில சமயம் வேலை அலுப்பினால் மறந்துவிடுவான். அம்மாவும் நினைவுபடுத்தமாட்டார். இரவெல்லாம் படாதபாடு பட்டுவிடுவார்; சொல்லவும் மாட்டார்.

பிள்ளையைத் தொல்லைப்படுத்தக்கூடாது என்பதில் மிகவும் கவனம் அவருக்கு. ஆனால், மறுநாள் காலையில் தெரியவரும்போது விக்னேஷுக்கு அம்மாவின்மேல் கோபம் வரும். ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாமல் அவரிடம் கெஞ்சுவான், அடுத்தமுறை இப்படிச் செய்யாதீர்கள் என்று! என்ன சொன்னாலும், அடுத்தமுறையும் அதையேதான் செய்வார். பிள்ளை மேல் அப்படியொரு அலாதிப் பற்று!

விக்னேஷ் கைக்குழந்தையாய் இருந்தபோதே அவன் அப்பா தவறிப்போனார். நெஞ்சுவலி வந்து துடித்தவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் உயிர் பிரிந்துவிட்டதாம். அந்த அதிர்ச்சியிலிருந்து அம்மா மீள பல வருடங்கள் பிடித்ததாம்.

நல்லவேளையாக, தாத்தாவிடம் நிலபுலன்கள் நிறைய இருந்ததால், அம்மா அவனை வளர்க்க பொருளாதாரச் சிக்கல் ஏதுமில்லாமல் போயிற்று. அம்மா ஓரளவு படித்திருந்தாலும் வேலைக்குச் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகவில்லை.

தந்தையின் ஆதரவில் இருந்தவருக்கு அவரும் போனபிறகு ஒரே துணை விக்னேஷ் தான். அவன் கண்ணில் தூசு விழுந்தால், அம்மாவின் கண்ணில் நீர் வந்துவிடும். விக்னேஷை வளர்ப்பதிலேயே அவர் தன் வாழ்நாளைச் செலவிட்டார்.

விக்னேஷும் அம்மா சொல் தட்டாத பிள்ளையாய் வளர்ந்து, அவர் விருப்பப்படியே பொறியியற்கல்வி படித்து முடித்தான். இன்று ஒரு பெரிய தனியார் நிறுவனத்தில், நல்ல வேலையில் அமர்ந்து, வாங்கும் சம்பளத்துக்கு அப்படியே அம்மாவிடம் கணக்கு ஒப்படைத்துக் கொண்டும், அம்மாவின் தலை, கை, கால் வலிகளுக்கு அவர் சொல்லும் தைலத்தைத் தடவி, எப்போதும் அவர் முகத்தில் மலர்ச்சியை தக்கவைக்கப் பெரும் பிரயத்தனப்பட்டுக்கொண்டும் வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறான். அம்மாவுக்கும் அவனுக்குமான பிணைப்பின் வயது, கர்ப்பத்திலிருந்த நாட்களையும் சேர்த்து கணக்கிட்டால் இருபத்தேழு வருடம், இரண்டு மாதம் பதினைந்து நாட்கள்.

நாளெல்லாம் பம்பரமாய் வளையவந்த நாகலட்சுமிக்கு சிலகாலமாய் பிரச்சனை!

அடிக்கடி மூட்டு வலிக்கிறது என்று தைலம் தேய்க்கத்துவங்கியுள்ளார். டாக்டரிடம் போகலாம் என்றால் மட்டும் உடன்படுவதேயில்லை. எல்லாம் சரியாகிவிடும் என்று தனக்குத் தானே சமாதானம் சொல்லிக்கொண்டு தன்னையும் ஏமாற்றி விக்னேஷையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்.

ஏதோ யோசனையில் மூழ்கியிருக்கும் மகனைப் பார்த்தார், நாகலட்சுமி. அம்மாவின் வலி மறக்கடிக்க, எப்போதும் ஏதாவது பேசுவதோ, அல்லது அம்மாவை ஏதாவது பேசவைப்பதோ விக்னேஷின் தந்திரம். இன்று அப்படி எதுவும் நிகழாமல் அமைதியாய் இருப்பதே, அவன் உள்ளத்தில் அமைதியில்லை என்பதை உணர்த்தியது.

"என்னப்பா! ஏதோ யோசனையா இருக்கே? ஆபிஸில் எதாவது பிரச்சனையா?"

விஷயத்தை எப்படி ஆரம்பிப்பது என்ற யோசனையில் இருந்தவனுக்கு அம்மாவின் கேள்வி உதவியது.

"ஆபிஸில் ஒண்ணும் பிரச்சனையில்லம்மா! பிரபுவுக்குதான்......"

"என்னப்பா, பிரபுவுக்கு என்னாச்சு? நல்ல பையனாச்சே!"

அம்மா தவிப்புடன் கேட்க, சட்டென்று முடிச்சவிழ்த்தான், விக்னேஷ்.

"அம்மா! அவனுக்கு இன்னைக்குக் கல்யாணம்! அம்மன்கோவிலில் வச்சுத் தாலிகட்டினான். இன்னும் பதினஞ்சு நாளுக்கு அப்புறம் பதிவுத்திருமணம் செய்யலாம்னு இருக்கான்."

"என்னப்பா, விக்னேஷ்? நீ சொல்றதை என்னால நம்பவே முடியலையேப்பா! ரொம்ப நல்ல பையன்னு நினைச்சிருந்தேனே!"

விக்னேஷுக்கு ஆச்சர்யமாயிருந்தது. நல்ல பையன் என்பதற்கு அம்மா வைத்திருக்கும் அளவுகோல்தான் என்ன? காதல் திருமணம் செய்பவர்களெல்லாம் அயோக்கியர்களா, என்ன? அம்மாவிடம் எப்படிச் சொல்வது என்று தவித்தது போக, இப்போது ஏன் சொன்னோம் என்றாகிவிட்டது. அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிந்திருந்தால், நாளை பிரபுவின் பெற்றோர் ஏதாவது பிரச்சனை செய்தால், அம்மாவின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கலாம் என்ற எண்ணத்தில்தான் அவரிடம் சொல்ல முனைந்தான்.

"அம்மா! பிரபு நல்ல பையன் தான், சந்தேகமே இல்லை. அவன் கல்யாணம் பண்ணியிருக்கிற பெண்ணும் ரொம்ப நல்ல பெண்தான். அதிலும் சந்தேகமே இல்லை. நீங்க அந்தப் பெண்ணை ஒரு தடவை பாத்தீங்கனா உங்களுக்கே பிடிச்சிடும்."

"அப்படின்னா...உனக்கு அந்தப் பெண்ணை ரொம்ப நாளாத் தெரியுமா? அப்போ...அந்தப் பையன் கல்யாணத்துக்கு நீயும் உடந்தையா? வேணாம்ப்பா! அவனைப் பெத்தவங்க சாபத்தை ஏத்துக்காதேப்பா! என் ஒரே பிள்ளை நீ! "

அம்மா எங்கெங்கோ தன் எண்ணங்களை ஓடவிட்டு எதெதையோ முடிச்சுப் போட்டு பிதற்றத் துவங்கிவிட்டார். விக்னேஷுக்கு சிரிப்பும் அதே சமயம் அம்மாவின் வேண்டாத கவலையை எண்ணி கோபமும் வந்தது.

"அம்மா! நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இல்லைம்மா! அந்தப் பெண் பேரு சுந்தரி! நானும் இன்னைக்குதான் பார்த்தேன். அது பிரபுவோட வீட்டில் வேலை செய்த பெண்ணாம்! பிரபுவும் இதுவரை என்கிட்ட எதுவுமே சொன்னதில்லை. திடீர்னு போன் பண்ணி, அவசரமா அம்மன் கோவிலுக்கு வாடான்னான். என்னவோ. ஏதோன்னு போனேன். போனபிறகுதான் விஷயமே தெரிஞ்சது. இன்னும் சில நண்பர்கள் வந்திருந்தாங்க! எல்லாருமா சேர்ந்துதான் அவனுக்கு உதவினோம். அதனால பிரபுவோட அப்பா அம்மா சாபமிட்டாலும், அதை நாங்க ஆறுபேர் பங்கிட்டுக்குவோம்! சரியா? கவலைப்படாதீங்கம்மா!"

விக்னேஷ் சிரித்தான். அம்மா சமாதானமடையவில்லை.

"என்னவோப்பா, நீங்க எல்லாம் வளர்ந்து ஆளாகிட்டீங்க! பெத்தவங்க தேவையில்லைன்னு முடிவு செய்திடறீங்க. பெத்து, வளர்த்து ஆளாக்கினவங்களுக்கு தலைக்குனிவை உண்டாக்குற எந்தப் பிள்ளையும் நல்லா வாழமுடியாது!"

“அம்மா, ப்ளீஸ்! உங்க வாயால் அப்படிச் சொல்லாதீங்க!”

“நான் சொல்லலைன்னா என்ன? இந்நேரம் அவங்க அப்பா அம்மா வயிறெரிஞ்சு சாபமிட்டிருப்பாங்களே! அங்கே அவங்க விடற ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் இவங்க பதில் சொல்லித்தானே ஆகணும்!"

"அம்மா………ஆ…..…..!"

உரத்த குரல் ஒன்று அதட்டலாய் வெளிப்பட்டது விக்னேஷிடமிருந்து. இதை எதிர்பார்க்காத நாகலட்சுமி சற்று அதிர்ந்துதான் போனார்.

"அம்மா! நீங்க வாழ்த்தலைன்னாலும் பரவாயில்லை! தயவு செய்து இப்படியெல்லாம்பேசாதீங்க!"

சொல்லிவிட்டு விடுவிடுவென்று தன் அறைக்குச் சென்றவன், கதவை அறைந்து மூடினான். நாகலட்சுமி அம்மாவுக்கு உதறல் எடுக்கத் துவங்கியது. மகனிடம், என்றுமில்லாத ஆவேசம் பார்த்து முதன்முதலாய் பயம் வந்தது. தன் மகனும் இக்காலத்து இளைஞன் தானே! காதலிப்பது தவறில்லையென்று நினைக்கிறான். அதனால் பெற்றவர் படும் மனவேதனையைப் பெரிதாய் நினைப்பதில்லை. கடவுளே! நாளை என் மகனும் இப்படி எவளையாவது கட்டிக்கொண்டுவந்தால்....?

அவள் என்னை மதிப்பாளா? என் மகனை பழையபடி என்னிடம் பாசம் வைக்க விடுவாளா? எல்லாம் போன பிறகு என் நிலை? சொந்த வீட்டில் அகதிபோல் வாழவேண்டிவருமே! என்ன செய்வது?

பிரபுவைச் சொல்லிக் குற்றமில்லை. அந்தப் பெண்ணுக்கு அறிவு எங்கே போனது? இப்படி ஓடிப்போய்க் கல்யாணம் செய்வதால் அவள் பெற்றோருக்கு ஏற்படும் அவமானத்தைப் பற்றியோ, அவளுக்குப் பின் பிறந்தவர்களைப் பற்றியோ கொஞ்சமாவது அக்கறை இருந்தால் இப்படிச் செய்வாளா?

எல்லாம் பணம் செய்யும் வேலையாய்தான் இருக்கும். ஏகப்பட்ட சொத்துக்கு அதிபதி. அவனைக் கைக்குள் போட்டுக்கொண்டால் காலமெல்லாம் சுகமாக வாழலாம் என்று கணக்குபோட்டுதான் காரியத்தை முடித்திருக்கிறாள்.

பிரபுவுக்கு என்ன கேடுகாலம்? ஆணுக்கான அத்தனை அம்சங்களும் பொருந்தியவன்! கிராமத்தில் பாதி நிலம் அவன் அப்பாவுக்குதான் சொந்தம்! பெரிய பண்ணை வீடு! நல்ல படிப்பு! கை நிறையச் சம்பளம்!

சுருக்கமாகச் சொன்னால் ஒரு ராஜகுமாரன் தான்! அப்படிப்பட்டவன் போயும் போயும் ஒரு வேலைக்காரியைக் கல்யாணம் செய்திருக்கிறான் என்றால்.......எந்த அளவுக்கு அவள் அவனை வசியப் படுத்தி இருப்பாள்! அவ்வளவு பேரழகியா அவள்? அவளைப் பார்த்தாகவேண்டுமே! எப்படிப் பார்ப்பது?

நாகலட்சுமி அம்மாளின் புத்தி வேலை செய்யத் தொடங்கியது.

(தொடரும்)

**********************************************************

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

மு.வ உரை:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

கலையரசி
23-05-2010, 06:39 AM
ஆகா! தொடர்கதையா!

தொடர்கதையைப் படிக்க வேண்டும் என்பதற்காகத் திடீர் திருப்பங்களை வலியப் புகுத்துவது கதாசிரியர்களின் வழக்கம். அது இல்லை என்பதால் நல்ல ஒரு நாவலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கெனவே இயல்பான நடையில் யதார்த்தமான கதை எழுதும் கலை உனக்குக் கை வரப்பெற்றிருப்பதால், இந்தத் தொடர் வாசகரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

நிற்க. இனி கதைக்கு வருகிறேன். காதல் கல்யாணம் என்றாலே பெற்றோருக்குக் கசப்பு தான். அதுவும் பணக்காரப்பையன் தன் அந்தஸ்துக்குக் குறைந்து திருமணம் செய்து கொண்டால் பிரச்சினைக்குக் கேட்கவே வேண்டாம். விக்னேஷ் அம்மாவிடம் மிகவும் பிரியமாக இருக்கிறான். அம்மாவுக்கும் அவன் மேல் possessiveness அதிகமாக இருக்கிறது. எனவே அவன் திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படலாம். அல்லது அவன் அம்மாவை விரோதித்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளலாம். எப்படியோ கதை நன்றாகத் துவங்கியிருக்கிறது.
தொடர்ந்து எழுது கீதம். வாழ்த்துடன் பாராட்டுக்கள்.

செல்வா
23-05-2010, 08:08 AM
வாங்க வாங்க நீங்களும் ஜோதில கலந்துக்கோங்க... :)

நல்ல துவக்கம் தொடர்ந்து எழுதுங்க வாசிச்சி விமர்சிக்கலாம்...........

மதி
23-05-2010, 08:26 AM
சந்தடி சாக்கில.. என் காலையும் வாரி விட்டுட்டீங்க..ஹிஹி..

யதார்த்தமா ஆரம்பித்திருக்கிறது கதை. நாகலட்சுமி அம்மாளின் மூளை என்ன தான் யோசித்தது..? தெரிந்து கொள்ளும் ஆவலில்..

சிவா.ஜி
23-05-2010, 08:27 AM
உங்க முதல் தொடர்கதைக்கு முதல்ல வாழ்த்தைப் பிடிங்க.....!!!

கலையரசி அவர்கள் சொன்னதைப்போல...இயல்பான உங்கள் எழுத்தின் வீச்சு...இந்தத் தொர்கதையிலும் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. பிரபுவின் காதல் திருமணத்தைப் பற்றிய அம்மா மகனுக்கிடையேயான உரையாடல்கள் வெகு யதார்த்தம்.

அப்பா இல்லாமல், ஒரே மகனைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் எல்லா அம்மாக்களுக்குமே இருக்கும் இந்த உணர்வை அழகாய் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறீர்கள்.

நல்லதொரு குடும்ப நாவலாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடருங்கள் கீதம். வாழ்த்துக்கள்.

கீதம்
23-05-2010, 09:17 PM
ஆகா! தொடர்கதையா!

தொடர்கதையைப் படிக்க வேண்டும் என்பதற்காகத் திடீர் திருப்பங்களை வலியப் புகுத்துவது கதாசிரியர்களின் வழக்கம். அது இல்லை என்பதால் நல்ல ஒரு நாவலாக இது இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கெனவே இயல்பான நடையில் யதார்த்தமான கதை எழுதும் கலை உனக்குக் கை வரப்பெற்றிருப்பதால், இந்தத் தொடர் வாசகரிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

நிற்க. இனி கதைக்கு வருகிறேன். காதல் கல்யாணம் என்றாலே பெற்றோருக்குக் கசப்பு தான். அதுவும் பணக்காரப்பையன் தன் அந்தஸ்துக்குக் குறைந்து திருமணம் செய்து கொண்டால் பிரச்சினைக்குக் கேட்கவே வேண்டாம். விக்னேஷ் அம்மாவிடம் மிகவும் பிரியமாக இருக்கிறான். அம்மாவுக்கும் அவன் மேல் possessiveness அதிகமாக இருக்கிறது. எனவே அவன் திருமணத்துக்குப் பிறகு இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படலாம். அல்லது அவன் அம்மாவை விரோதித்துக் கொண்டு காதல் திருமணம் செய்து கொள்ளலாம். எப்படியோ கதை நன்றாகத் துவங்கியிருக்கிறது.
தொடர்ந்து எழுது கீதம். வாழ்த்துடன் பாராட்டுக்கள்.

முதல் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அக்கா. முதல் முயற்சி என்பதால் சற்றே தடுமாறுகிறேன். உங்கள் ஊக்கம் என்னைத் தொடர்ந்து எழுதவைக்கும்.

கீதம்
23-05-2010, 09:19 PM
வாங்க வாங்க நீங்களும் ஜோதில கலந்துக்கோங்க... :)

நல்ல துவக்கம் தொடர்ந்து எழுதுங்க வாசிச்சி விமர்சிக்கலாம்...........

ரொம்ப நன்றி செல்வா. ஜோதியில் ஐக்கியமாகிறேனா இல்லையாங்கறதை வாசகர்களாகிய நீங்கள் தான் சொல்லவேண்டும்.

கீதம்
23-05-2010, 09:24 PM
சந்தடி சாக்கில.. என் காலையும் வாரி விட்டுட்டீங்க..ஹிஹி..

யதார்த்தமா ஆரம்பித்திருக்கிறது கதை. நாகலட்சுமி அம்மாளின் மூளை என்ன தான் யோசித்தது..? தெரிந்து கொள்ளும் ஆவலில்..

நீங்கள் எல்லாம் என்னுடைய சீனியர்கள்.(மன்றத்தின் உறுப்பினர் அடிப்படையிலும், தொடர்கதை எழுதுவதிலும்)

அதனால் காலை வாரிவிடும் வேலையெல்லாம் நிச்சயமாக இல்லை.
எனவே என் கதையின் குறைகளைத் தயங்காமல் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

எனவே தொடர்ந்து வந்து கருத்துகளைப் பதியுங்கள்.

கீதம்
23-05-2010, 09:28 PM
உங்க முதல் தொடர்கதைக்கு முதல்ல வாழ்த்தைப் பிடிங்க.....!!!

கலையரசி அவர்கள் சொன்னதைப்போல...இயல்பான உங்கள் எழுத்தின் வீச்சு...இந்தத் தொர்கதையிலும் பிரகாசிக்கத் தொடங்கிவிட்டது. பிரபுவின் காதல் திருமணத்தைப் பற்றிய அம்மா மகனுக்கிடையேயான உரையாடல்கள் வெகு யதார்த்தம்.

அப்பா இல்லாமல், ஒரே மகனைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் எல்லா அம்மாக்களுக்குமே இருக்கும் இந்த உணர்வை அழகாய் வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கிறீர்கள்.

நல்லதொரு குடும்ப நாவலாய் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தொடருங்கள் கீதம். வாழ்த்துக்கள்.

உங்கள் ஊக்கப்பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சிவா.ஜி அவர்களே.

கூடவே வந்து நிறைகுறைகளைச் சுட்டிக்காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

கீதம்
23-05-2010, 09:33 PM
அத்தியாயம்-2

விக்னேஷின் மனம் அலைபாய்ந்துகொண்டிருந்தது. அம்மாவை இதுவரை எடுத்தெறிந்து பேசியதில்லை. எப்படி இந்த அளவு கோபம் வந்தது என்றும் தெரியவில்லை. அதுவும் அம்மாவிடம்! போதாதென்று அவர் முகத்தில் அறைவதுபோல் கதவையும் அறைந்து மூடியது மேலும் குற்ற உணர்வை அதிகமாக்கியது. ஆனாலும் அம்மா சொன்னது சரியில்லை என்றே மனம் வாதிட்டது.

‘பிரபு யார்? என் உயிர் நண்பன்! எனக்காக எதுவும் செய்யக்கூடியவன். அவனுக்காக நான் இதைக்கூட செய்யக்கூடாதா?’

கல்லூரியில் ஒன்றாய்ப் படித்தபோதிலிருந்து ஆரம்பமானது அவர்கள் நட்பு. கல்லூரி முடித்து, இருவரும் இருவேறு போட்டி நிறுவனங்களில் வேலை செய்யவேண்டிய சூழ்நிலை வந்த பின்னாலும் அவர்கள் நட்பு தொடர்வதில் எந்தப் பாதகமும் ஏற்படவில்லை. மாதம் ஒருமுறையோ, இருமுறையோ சந்திக்கும் பழக்கத்தைத் தவறாமல் காப்பாற்றி வந்தனர்.

விக்னேஷுக்கு பிரபுவின்மேல் ஒரு சிறிய வருத்தம் இருந்தது. அவன் மட்டும் தன் காதல் விவகாரத்தை முன்பே தெரியப்படுத்தியிருந்தால் திட்டமிட்டு பல முன்னேற்பாடுகள் செய்திருக்கலாம். இப்படி அவசர கதியில் தாலிகட்டியிருந்திருக்கத் தேவையில்லை.

எப்படியோ, இன்னும் பதினைந்து நாள் போனால் போதும், அதன் பிறகு சட்டத்தின் பாதுகாப்பு கிடைத்துவிடும். அதற்குள் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் வந்துவிடக்கூடாதே என்று பயந்துகொண்டிருக்கும் வேளையில் அம்மா இப்படி சொல்லலாமா? வயதிலும், அனுபவத்திலும் பெரியவரான அவர் வாக்கு பலித்துவிட்டால்......?

இந்தக் கவலைதான் விக்னேஷை வேகம் கொள்ளவைத்துவிட்டது. உண்மையில் அம்மாவைக் காயப்படுத்தும் எண்ணம் துளியும் கிடையாது. ஆனால் அம்மா என்ன நினைத்திருப்பார்? தன் மகன் தன்னைவிட்டு விலகுவதாக எண்ணுவாரோ? அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டால் ஒழிய என் மனம் ஆறாது. அம்மாவின் மனமும் குளிராது. காலையில் எழுந்ததும் அம்மாவிடம்..........'

சிந்தித்துக்கொண்டே உறங்கிப்போனான்.

காலையில் எழுந்ததும் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று முடிவெடுத்திருந்தாலும், நேரடியாய் அவர் முகம் பார்க்கத் தயக்கமாயிருந்தது. காயப்படுத்திவிட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாய்ப் போய்விடுமா என்று உள்மனம் கெக்கலி செய்தது. அம்மாவை எதிர்கொள்ளும் துணிவற்றவனாய் தலை குனிந்து உணவுமேசையின் முன் அமர்ந்திருந்தான்.

அவனுக்குப் பிடித்த ரவா புட்டு அவன் முன் பரிமாறப்பட்டது. அதைப் பார்த்து அவன் நெஞ்சம் விம்மியது. அம்மாவை நோகடித்த பிள்ளைக்கு தன் கையால் அவனுக்கு விருப்பமான உணவைச் செய்து பரிமாறும் தாயுள்ளம் கண்டு கண்கள் கலங்கின.

எழுந்ததில் இருந்து அம்மாவின் முகம் பார்க்காமல் கிளம்பிக்கொண்டிருக்கும் மகனைப் பார்த்தார், நாகலட்சுமி. இவனிடம் இந்த விஷயத்தில் வீம்பு வேலைக்காகாது என்று முடிவெடுத்தவர் போல், அமைதியாய் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் மகனின் அருகில் நின்று தலை கோதினார்.

அவ்வளவுதான்! அத்தனை நேரமும் இருந்த இறுக்கம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது.

"அம்மா!"

அப்படியே ஆதுரத்துடன் அவர்மேல் தலைசாய்த்துக்கொண்டான்.

"அம்மா! என்னை மன்னிச்சிடுங்க. நான் உங்களிடம் அப்படி கடுமையாய் நடந்திருக்கக்கூடாது. அதுக்காக உங்ககிட்ட மனப்பூர்வமா மன்னிப்புக் கேட்டுக்கறேன். ஆனாலும், நீங்க அப்படி சொல்லியிருக்கக் கூடாது! அவனும் உங்க பிள்ளை மாதிரிதானே? நீங்க ஒரு தடவை அந்தப் பெண்னைப் பார்த்தால்...உங்க எண்ணத்தை மாத்திக்குவீங்க!"

"சரியப்பா! தப்புதான், ஒத்துக்கறேன்! இனி சொல்லலை. போதுமா?

மகனின் முகத்தில் தோன்றிய மலர்ச்சியைக் கண்டு மனம் தடுமாறியது. தன் விருப்பப்படி பெண் தேர்ந்தெடுத்து மணமுடிக்கும் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு விடுவானோ?

"அம்மா!"

சிந்தனை கலைந்தது.

"என்னப்பா?"

"ஒருநாள், அவங்க ரெண்டுபேரையும் வீட்டுக்குக் கூட்டிட்டு வரவா?"

நாகலட்சுமிக்குள் மகிழ்ச்சி பெருகியது. இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்? ‘அந்த உலக அழகியைப் பார்க்க எனக்கும் ஆசைதான்! அழைத்துவா’ என்று சொல்ல வாய் துடித்தது.

"அவங்க வந்தால், ஒருவேளையாவது விருந்து செய்யணுமே! என்னால் முடியுமான்னு தெரியலையே!"

கொஞ்சம் பிகு தான். இருந்தாலும் பரவாயில்லை.

"பக்கத்து விட்டு மனோகரி அக்காவைக் கூப்பிட்டுக்கலாம், அம்மா! அவங்க நிச்சயம் செய்வாங்க! அவங்களும் காதல் கல்யாணம் செய்துகிட்டவங்கதானே! ஒரு காதலர் தம்பதிக்கு விருந்து வைக்க உதவமாட்டாங்களா, என்ன?"

"சரிப்பா! கேட்டுப்பாக்கறேன். என்னைக்கு வரச் சொல்றது?"

"வர ஞாயிற்றுக்கிழமை? அதுதான் மனோகரி அக்காவுக்கும் வசதியாயிருக்கும்! முதலில் அவங்களைக் கேட்டுக்கோங்க! அவங்க சரின்னு சொன்னபிறகு பிரபு கிட்ட சொல்லிக்கலாம்!"

"சரிப்பா!"

நாகலட்சுமியின் மனம் ஞாயிற்றுக்கிழமையின் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கத் துவங்கியது.

அன்றைய விருந்து மிகுந்த தடபுடலாய் இருந்தது. கத்தரிக்காய், முருங்கைக்காய் சாம்பார்,தக்காளி சூப், பட்டாணி, உருளைக்கிழங்கு வறுவல், கேரட் பொரியல், கோஸ் கூட்டு, வெல்ல மாங்காய்ப் பச்சடி, அப்பளம் இவற்றுடன் மசால் வடை, ஜவ்வரிசி பாயசம் என்று வகைக்கு ஒன்றாகச் செய்து அசத்திவிட்டாள் மனோகரி அக்கா! அக்காவின் வீட்டுக்காரர் கொடுத்துவைத்தவர் என்று விக்னேஷ் நினைத்துக்கொண்டான்.

பிரபுவும், சுந்தரியும் காலையிலேயே வந்துவிட்டனர். வந்ததுமே நாகலட்சுமியின் கால்களில் விழுந்து வணங்கினர். நாகலட்சுமி, சுந்தரியைப் பார்த்தப் பார்வையில் அத்தனை சிநேகம் இல்லை.

"தீர்க்காயுசா இருப்பா! மகராசியாய் தீர்க்க சுமங்கலியாய் இரும்மா!"

வாய் மட்டும் வாழ்த்தியது. மனம் எதையோ கணக்குப் போட்டது. அவரது கற்பனைக்கு எதிரான தோற்றம் கொண்டிருந்தாள், சுந்தரி. பரவாயில்லை என்று சொல்லுமளவுதான் இருந்தது அவள் அழகு. வெடுவெடுவென்று ஒட்டிய உடல்வாகு. கறுத்த தேகம். கவர்ந்திழுக்கும் பேச்சோ, நளினமோ இல்லை. கைகொடுத்தது களையான முகம் மட்டுமே! இந்தப் பெண்ணிடம் அப்படி என்ன சிறப்பம்சம் இருக்கிறதென்று பிரபு இவளைத் திருமணம் செய்துகொண்டான்?

மனோகரி, சுந்தரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது,

"மாகஸின் படிக்கிற பழக்கமுண்டா?" என்ற கேள்விக்கு,

"என்னாக்கா, என்ன சொல்றீங்க? எனக்கு இங்கிலீஷ் தெரியாதே!" என்று பட்டென்று சொன்ன பதிலிலிருந்து படிப்பறிவில்லை என்பது தெரிந்தது.

புடவையைக் கணுக்கால் தெரியுமளவு உயர்த்திக் கட்டியிருந்ததில் இருந்து நாகரிகம் தெரியவில்லை என்பது புரிந்தது.

விருந்துக்கு வந்த இடத்தில் நாசுக்காய் நடந்துகொள்ளத் தெரியாமல், சாப்பாடு முடிந்ததும், புடவையை இழுத்துச் செருக்கிகொண்டு பாத்திரங்களை அலம்ப முற்பட்டதில் அவளது பத்தாம்பசலித்தனம் தெரிந்தது.

நாகலட்சுமிக்கு, பிரபு, சுந்தரியை எப்படிக் காதலித்தான் என்று இன்னமும் வியப்பாகவே இருந்தது. அதைவிடவும், பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்ததோடு, நண்பனின் தாயிடம் ஆசி வாங்குபவனது துணிவும், சாமர்த்தியமும் வியக்கவைத்தது.

நாளை....விக்னேஷும் இதுபோல் எவளையாவது கட்டிக்கொண்டு எந்த நண்பனின் தாயிடமாவது ஆசி வாங்குவானோ? சேச்சே! இவன் அம்மா பிள்ளை! நிச்சயம் அப்படிச் செய்ய மாட்டான். இருந்தாலும் தான் கொஞ்சம் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று உள்மனம் அறிவுறுத்தியது.

"அம்மா!"

உலுக்கினான் விக்னேஷ்.

"ம்! என்னப்பா?"

"அவங்க கிளம்புறாங்க!"

"இதோ, வரேன்!"

நாகலட்சுமி உள்ளே சென்று வெற்றிலை, பூ, பழம், மஞ்சள் இத்யாதிகளுடன் ஒரு புடவையும், ரவிக்கைத் துணியும் வைத்து மனோகரியிடம் கொடுத்து, சுந்தரியிடம் கொடுக்கச்சொன்னார்.

"அம்மா! அதை உங்க கையாலேயே கொடுங்க!"

பிரபு வற்புறுத்த, நாகலட்சுமி, வேறுவழியின்றி மனோகரியிடமிருந்து வாங்கி சுந்தரியிடம் தந்தார். அம்மா எப்போது, எப்படி இந்த ஏற்பாடெல்லாம் செய்தார் என்று வியந்தான்.விக்னேஷ், அம்மாவை எண்ணிப் பெருமிதப்பட்டான், அவர் மனதில் புதிதாய்க் குடிகொண்ட போராட்டத்தை அறியாமல்!

(தொடரும்)

**********************************************************

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.

மு.வ உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.

அன்புரசிகன்
24-05-2010, 04:10 AM
அதீதபாசத்தில் தாய். பாசத்திற்கு கட்டுப்பட்ட சாதாரண மகன். இவர்களின் பிணைப்பை அழகாக நகர்த்துகிறீர்கள். வேல் படத்தில் வந்த லட்சுமியை நினைவு படுத்துகிறார் விக்னேஷின் தாயார்.
தொடருங்கள் கீதம்....

Akila.R.D
24-05-2010, 05:37 AM
ஒரு நல்ல குடும்ப கதையின் ஆரம்பம்...

உங்களோடு பயணம் செய்ய காத்திரிக்கிறோம்..

தொடருங்கள்...

மதி
24-05-2010, 05:52 AM
இரண்டாம் பாகமும் அருமை... அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நகர்கிறது கதை... மேலும் தொடருங்கள்...கீதம்.

சிவா.ஜி
24-05-2010, 06:26 AM
அம்மா, பிள்ளையின் பாசப்போராட்டங்களை எதார்த்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

புதுமணத்தம்பதிகளுக்கு விருந்துவைப்பது, அந்த விருந்து முடிந்ததும்...பெண்ணின் ஒவ்வொரு அம்சங்களையும்...கவனித்து அவளைப்பற்றி கணிப்பது என நாகலட்சுமி அம்மாள் தன் அனுபவ*த்தை உபயோகிக்கும் பாங்கு அருமையாய் இருக்கிறது.

அழகான நீரோடையாய் நகரத்தொடங்கியிருக்கும் கதை..நல்லமுறையில் பயணப்படுகிறது. தொடருங்கள் கீதம்....தொடர்கிறோம் நாங்களும்...

செல்வா
24-05-2010, 07:01 AM
நல்லா போகுதுங்க...

எண்ணவோட்டங்களை சொல்ற இடங்கள் நல்லா வந்திருக்கு....
இருந்தாலும் உள்மன உணர்வுகளை செதுக்குமிடங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம் தப்பில்லே..

சுடர்விழி
24-05-2010, 08:44 AM
ரொம்ப நல்லா இருக்கு.....ரொம்ப இயல்பாக அம்மா மகன் பாசத்தை சொல்லி இருக்கீங்க. ஒரு பெண்ணோட ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிச்சு,அவள் குணத்தை எடை போட முயற்சிப்பதுமாக நாகலட்சுமி அம்மாள் கதாபாத்திரத்தை அழகாக சொல்லியிருக்கீங்க...

தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்...
வாழ்த்துக்கள்.

கலையரசி
24-05-2010, 02:21 PM
இரண்டாம் பாகமும் நன்றாயிருக்கு கீதா! புதுப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவளைப் பற்றி எடைபோடும் விதமும், தாய் மகனுக்கிடையே உள்ள பாசமும் சொல்லப்பட்டிருக்கும் விதம் நன்று.

பா.ராஜேஷ்
24-05-2010, 05:21 PM
பாராட்டுக்கள் கீதம். இரண்டு பாகமும் மிக நன்று. இயல்பாக எழுதப்பட்டது இந்த கதைக்கு பிளஸ் பாயிண்ட்... தொடருங்கள்..

கீதம்
24-05-2010, 09:26 PM
அதீதபாசத்தில் தாய். பாசத்திற்கு கட்டுப்பட்ட சாதாரண மகன். இவர்களின் பிணைப்பை அழகாக நகர்த்துகிறீர்கள். வேல் படத்தில் வந்த லட்சுமியை நினைவு படுத்துகிறார் விக்னேஷின் தாயார்.
தொடருங்கள் கீதம்....

ஆகா! வேல் படத்தை நான் பார்க்கவில்லையே! பார்த்திருந்தால் பாத்திர அமைப்பை மற்றியிருந்திருக்கலாம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி அன்புரசிகன்.

கீதம்
24-05-2010, 09:29 PM
ஒரு நல்ல குடும்ப கதையின் ஆரம்பம்...

உங்களோடு பயணம் செய்ய காத்திரிக்கிறோம்..

தொடருங்கள்...

நன்றி அகிலா.

இது முழுக்க முழுக்க அன்பின் ஆளுமைக்கு உட்பட்ட கதை. தொடர்ந்து வாருங்கள். நன்றி.

கீதம்
24-05-2010, 09:31 PM
இரண்டாம் பாகமும் அருமை... அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நகர்கிறது கதை... மேலும் தொடருங்கள்...கீதம்.

உங்கள் விறுவிறுப்பான கதைக்கு முன் இது ஆமைதான். இருப்பினும் பொறுமையாய்ப் படித்து பின்னூட்டமிடும் உங்கள் ஆதரவுக்கு நன்றி.

கீதம்
24-05-2010, 09:33 PM
அம்மா, பிள்ளையின் பாசப்போராட்டங்களை எதார்த்தமாய் சொல்லியிருக்கிறீர்கள்.

புதுமணத்தம்பதிகளுக்கு விருந்துவைப்பது, அந்த விருந்து முடிந்ததும்...பெண்ணின் ஒவ்வொரு அம்சங்களையும்...கவனித்து அவளைப்பற்றி கணிப்பது என நாகலட்சுமி அம்மாள் தன் அனுபவ*த்தை உபயோகிக்கும் பாங்கு அருமையாய் இருக்கிறது.

அழகான நீரோடையாய் நகரத்தொடங்கியிருக்கும் கதை..நல்லமுறையில் பயணப்படுகிறது. தொடருங்கள் கீதம்....தொடர்கிறோம் நாங்களும்...

முதல் தொடர் என்பதால் சற்று அதைரியத்துடன் தான் தொடங்கினேன். உங்கள் ஊக்கப்பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி, சிவா.ஜி அவர்களே.

கீதம்
24-05-2010, 09:38 PM
நல்லா போகுதுங்க...

எண்ணவோட்டங்களை சொல்ற இடங்கள் நல்லா வந்திருக்கு....
இருந்தாலும் உள்மன உணர்வுகளை செதுக்குமிடங்களில் இன்னும் கொஞ்சம் மெனக்கெடலாம் தப்பில்லே..

உங்கள் ஆலோசனைக்கு ரொம்ப நன்றி செல்வா.நிச்சயம் கவனம் வைக்கிறேன்.

கீதம்
24-05-2010, 09:39 PM
ரொம்ப நல்லா இருக்கு.....ரொம்ப இயல்பாக அம்மா மகன் பாசத்தை சொல்லி இருக்கீங்க. ஒரு பெண்ணோட ஒவ்வொரு நடவடிக்கையையும் கவனிச்சு,அவள் குணத்தை எடை போட முயற்சிப்பதுமாக நாகலட்சுமி அம்மாள் கதாபாத்திரத்தை அழகாக சொல்லியிருக்கீங்க...

தொடர்ந்து படிக்க ஆவலாக உள்ளேன்...
வாழ்த்துக்கள்.

உங்கள் பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி, சுடர்விழி. தொடர்ந்து படித்து கருத்து கூறுங்கள்.

கீதம்
24-05-2010, 09:41 PM
இரண்டாம் பாகமும் நன்றாயிருக்கு கீதா! புதுப்பெண்ணின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவளைப் பற்றி எடைபோடும் விதமும், தாய் மகனுக்கிடையே உள்ள பாசமும் சொல்லப்பட்டிருக்கும் விதம் நன்று.

பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு மிகவும் நன்றி அக்கா.

கீதம்
24-05-2010, 09:43 PM
பாராட்டுக்கள் கீதம். இரண்டு பாகமும் மிக நன்று. இயல்பாக எழுதப்பட்டது இந்த கதைக்கு பிளஸ் பாயிண்ட்... தொடருங்கள்..

மிக்க நன்றி ராஜேஷ் அவர்களே. தொடர்ந்து படித்து கருத்து சொல்லுங்கள். (குறையிருந்தாலும் கூட)

கீதம்
24-05-2010, 09:45 PM
அத்தியாயம்- 3

"ஏங்க, உங்க நண்பரோட அம்மா ரொம்ப நல்லவங்களா இருக்காங்க, இல்லே………….?"

பிரபுவின் கைகளுக்குள் தஞ்சமடைந்திருந்த சுந்தரி, அவன் முகத்தை ஏறிட்டாள்.

"ஆமாம், ஆமாம்! எல்லா அம்மாவும் நல்லவங்கதான், தன் மகனுக்குப் பிரச்சனை வராதவரை!"

"என்னாங்க, இப்படிச் சொல்லுறீங்க?"

"பின்னே? எங்கம்மாவும்தான் எதிர்வீட்டு அக்கா, தானாக் கல்யாணம் பண்ணிகிட்டப்ப, கோயிலுக்குப் போய் வாழ்த்திட்டு வந்தாங்க. தன் பிள்ளைன்னு வரும்போதுதானே சுயநலமா யோசிக்கிறாங்க!"

"ஓ…………….!"

புரிந்துகொண்டவள் போல் அவள் அமைதியாய் இருந்தாள். பிரபுவின் விரல்கள் அவள் கூந்தலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தன. திடீரென்று எதையோ நினைத்துக்கொண்டவள் போல்,

"ஆனா…………….., அந்தம்மா பாக்குறதுக்கு நல்லவங்களாதாங்க தெரியிறாங்க, பாருங்க, உடம்பு முடியாததோட,நமக்காக விருந்தெல்லாம் ஏற்பாடு பண்ணியிருந்தாங்க, எனக்குப் புதுச்சீலை, ரவிக்கையெல்லாம் தந்திருக்காங்க. நிச்சயமா அவுங்க நல்லவங்களாதான் இருக்கணும்!"

பிரபுவுக்கு சிரிப்பு வந்தது.

"சரிதான், உனக்கு யாராவது புதுச்சீலை, ரவிக்கை குடுத்தா அவங்கதான் நல்லவங்க, குடுக்காதவங்க கெட்டவங்கன்னு சொல்லுவே போலயிருக்கே!"

"நீங்க என்ன சொல்லுறீங்க, அந்தம்மா கெட்டவுங்கனா?"

"அடிப்பாவி! நான் எப்ப அப்படிச் சொன்னேன்? வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடாதேன்னுதானே சொல்றேன். இது கிராமம் இல்லை. நகரம். இங்கே பலவிதமான மனிதர்கள் இருப்பாங்க, நீ பார்க்கிற எல்லாரையும் பத்தரைமாத்துத்தங்கமுன்னு நினைச்சிடாதே! எல்லாரிடமும் ஒரு எல்லை வச்சுப் பழகணும், சரியா?"

"என்னங்க, என்னென்னவோ சொல்லுறீங்க?"

சுந்தரியின் முகத்தில் கலவரம் குடிகொண்டது.

"புது இடம்! அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னு சொல்றேன்! அதுக்காக பயப்படாதே! கொஞ்சநாள் பழக்கத்தில் யார் யார் எப்படிப்பட்டவங்கன்னு உனக்குத் தெரியவரும். அதுக்கேத்தமாதிரி நீ பழகத் தொடங்கிடுவே!"

சுந்தரி பயந்தவாறே தலையாட்டினாள்.
பிரபுவுக்கு, விக்னேஷின் வீட்டில் தனக்கும் , விக்னேஷின் தாயாருக்கும் நடந்த உரையாடல் நினைவுக்கு வந்தது. அதை சுந்தரியிடம் சொல்வது உசிதமல்ல என்று நினைத்தவன், தன் மனதுக்குள்ளேயே அசைபோட்டான்.

விருந்து முடிந்ததும், விக்னேஷை, நாகலட்சுமி, வெற்றிலை வாங்க வெளியில் அனுப்பிய காரணம் அப்போது புரியவில்லை. சுந்தரியும், மனோகரியும் பாத்திரம் கழுவிக்கொண்டே ஏதோ சுவையாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருந்தனர்.

வரவேற்பறையில் அமர்ந்திருந்த பிரபு பொழுதுபோக, பக்கத்திலிருந்த பத்திரிகையில் பார்வையைப் பதித்திருந்தான். நாகலட்சுமி, அவனருகில் வந்தமர்ந்ததும், ஒரு புன்னகையை உதிர்த்து, தொடர்ந்து பத்திரிகையில் மூழ்கினான். அல்லது மூழ்கியிருப்பதுபோல் பாவ்லா காட்டினான்.

நாகலட்சுமி என்ன கேட்பார், என்று தெரிந்திருந்ததால் அவருடன் பேசும் சந்தர்ப்பத்தைத் தவிர்த்து வந்தவனுக்கு, அந்தச் சந்தர்ப்பத்தை அவரே உருவாக்கியிருப்பது புரிந்தது.

"என்னப்பா, பிரபு! உங்க அப்பா அம்மா எல்லாரும் நல்லாயிருக்காங்களா?"

"ம்......"

அவன் தொடர்வதற்குள் அவரே தொடர்ந்தார்.

"எப்படி நல்லாயிருக்க முடியும்? ஒரே பிள்ளை, இப்படி தலையில் கல்லைத் தூக்கிப் போடுவான்னு கனவு கூட கண்டிருக்க மாட்டாங்களே! போன ஜென்மத்திலே என்ன பாவம் செய்தாங்களோ, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கிறாங்க!"

பிரபுவுக்கு அதிர்ச்சியாய் இருந்தது. அந்தம்மா இதைப்பற்றிதான் பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தாலும், இப்படி அவன் மனம் நோகுமளவுக்கு அதிரடியாய்ப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை. அவன் அமைதியாய் இருந்தான்.

"சரி! இந்தப்பெண்ணுக்கு பெத்தவங்க, கூடப்பொறந்தவங்கன்னு யாரும் இல்லையா, அடிச்சு உதைச்சு வீட்டில் அடக்கிவைக்க?"

"அம்மா....."

பிரபு மானசீகமாய் சுந்தரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். அவள் காதில் இந்தம்மா பேசுவது எதுவும் விழுந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டான்.

"அம்மா! நாங்க கல்யாணம் செய்துகிட்டது என் அப்பா அம்மாவுக்குப் பிடிக்காதுதான். சுந்தரியின் அப்பா அம்மாவும் எதிர்ப்புதான். நாளடைவில் அவங்க சமாதானமாகிடுவாங்க என்கிற நம்பிக்கையில்தான் இவளைக் கூட்டிவந்தேன். கல்யாணமும் செய்துகிட்டேன். இப்போ, அவள் என் மனைவி! அவளைப் பத்தி நீங்க இப்படிப் பேசறது எனக்குப் பிடிக்கலைம்மா!"

பிரபு மிகவும் அமைதியாய் நிதானமாய் சொன்னான். சீவிச் சிங்காரித்து, மூக்கறுத்த கதையாக, போதும் போதும் என்கிற அளவுக்கு வயிறு நிறைய உபசரித்துவிட்டு, இப்படி மனம் நோகப் பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

பிடிக்கவில்லையெனில், எதற்கு வீட்டுக்கு அழைக்கவேண்டும்? அப்படியே அழைத்திருந்தாலும், நீ செய்தது சரியில்லை, உன் பெற்றோரிடம் போய் முதலில் ஆசி வாங்கு, அவர்களை மனம் நோகச்செய்யாதே என்று உபதேசித்து அனுப்பவேண்டும். இப்படியா பேசி அவமானப்படுத்துவது?

நாகலட்சுமிக்கு பிரபுவின் பேச்சு முகத்தில் அறைந்ததுபோல் இருந்தாலும், இந்தக் கருவாச்சிக்கே இப்படிப் பரிந்துபேசுகிறானே, இன்னும் அழகியாய்க் கிடைத்திருந்தால் அவ்வளவுதான் என்று நினைத்துக்கொண்டார். ஆனால் அவர் உண்டாக்கிய அந்தத் தனிமை சந்தர்ப்பத்தின் நோக்கமே வேறு. இப்போது பிரபுவை வெறுப்பேற்றுவதன் மூலம் அந்த நோக்கம் ஈடேறாமல் போகக்கூடும் என்பதால் அடக்கிவாசிக்கத் துவங்கினார்.

"சரிப்பா! அதை விடு! உன் பாடு, உன்னை பெத்தவங்க பாடு! நான் உங்கிட்ட கேட்க நினைச்சதே வேற. அதுக்கு மட்டும் எனக்கு பதில் சொல்லு போதும்!"

"என்னம்மா?"

"விக்னேஷ் யாரையாவது காதலிக்கிறானா? “

திடும்மென்று அவர் கேட்ட கேள்வியால் பதில் சொல்லத் தடுமாறினான், பிரபு.


**********************************************

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
மு.வ உரை:
தன்னை வெட்டுவோரையும் விழாமல் தாங்குகின்ற நிலம் போல், தம்மை இகழ்வாரையும் பொறுப்பதே தலையான பண்பாகும்.

govindh
25-05-2010, 01:02 AM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
மூன்று அத்தியாயங்களையும் தொடர்ந்து படித்து
விட்டேன்.

யதார்த்தமாகக் கதை சொல்கிறீர்கள்....
நிகழ்வுகளைக் கொண்டு செல்கிறீர்கள்.

அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

மதி
25-05-2010, 01:56 AM
ஹஹா கடைசியாய் கேட்க வந்ததை கேட்டு விட்டார். ஒத்த புள்ள விட்டுட்டு போய்டகூடாதேனு அக்கறையா இருக்கும்.

நல்லா நகர்த்திட்டு போறீங்க... தொடருங்க

அன்புரசிகன்
25-05-2010, 12:27 PM
இயல்பான பாத்திரஅமைப்பு மேலும் மெருகூட்டுகிறது. தொடருங்கள்...


ஆகா! வேல் படத்தை நான் பார்க்கவில்லையே! பார்த்திருந்தால் பாத்திர அமைப்பை மற்றியிருந்திருக்கலாம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி அன்புரசிகன்.
நீங்கள் மாற்ற தேவையில்லை. பொதுவாக எனது மனதில் தோன்றியதை கூறினேன். மற்றப்படி வேல் படக்கதை வேறு.. இது வேறு..

3வது பாகத்துடன் பார்க்கும் போது லட்சுமி வடிவுக்கரசியாக மாறிவிட்டார்...:D

சிவா.ஜி
25-05-2010, 12:41 PM
ஆனாலும் இந்த நாகலட்சுமியம்மாள் இப்படி பேசியிருக்கக்கூடாது. நண்பனின் அம்மா என்பதால் பிரபுவும் பொறுத்துக்கொண்டிருக்கிறான். விருந்தும் வைத்துவிட்டு...இப்படி மனநோகப் பேசுவது எந்தவிதத்தில் நியாயம்.

அவள் கருவாச்சியாகவே இருந்தாலும் கட்டியவனுக்கு அவள் அழகிதான் என்பது ஏன் இந்த அம்மாவுக்குப் புரியவில்லை.

காட்சியமைப்புகள் மிக அருமை. பிரபுவுடன் தனியாய்ப் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ளுவதை அழகாய் காண்பித்திருக்கிறீர்கள்.

அழகாய் செல்கிறது தொடருங்கள் கீதம்.

கீதம்
25-05-2010, 09:27 PM
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
மூன்று அத்தியாயங்களையும் தொடர்ந்து படித்து
விட்டேன்.

யதார்த்தமாகக் கதை சொல்கிறீர்கள்....
நிகழ்வுகளைக் கொண்டு செல்கிறீர்கள்.

அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

உங்கள் ஆதரவுக்கு நன்றி கோவிந்த். தொடர்ந்து வந்து கருத்துச் சொல்லுங்கள்.

கீதம்
25-05-2010, 09:29 PM
இயல்பான பாத்திரஅமைப்பு மேலும் மெருகூட்டுகிறது. தொடருங்கள்...


நீங்கள் மாற்ற தேவையில்லை. பொதுவாக எனது மனதில் தோன்றியதை கூறினேன். மற்றப்படி வேல் படக்கதை வேறு.. இது வேறு..

3வது பாகத்துடன் பார்க்கும் போது லட்சுமி வடிவுக்கரசியாக மாறிவிட்டார்...:D

நீங்கள் பார்த்துக்கொண்டே இருங்கள், நாளடைவில் நாகலட்சுமி காந்திமதி போல் மாறினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

பின்னூட்டத்துக்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
25-05-2010, 09:34 PM
காட்சியமைப்புகள் மிக அருமை. பிரபுவுடன் தனியாய்ப் பேச சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொள்ளுவதை அழகாய் காண்பித்திருக்கிறீர்கள்.

அழகாய் செல்கிறது தொடருங்கள் கீதம்.

விரிவான விமர்சனம் கண்டு மகிழ்கிறேன். அனைத்து பதிவுகளுக்கும் பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் உங்கள் பண்பு என்னை வியக்கவைக்கிறது. மனமார்ந்த நன்றி, சிவா.ஜி அவர்களே.

கீதம்
25-05-2010, 09:37 PM
அத்தியாயம் - 4

"விக்னேஷ் யாரையாவது காதலிக்கிறானா? அப்படி ஏதாவது இருந்தா, முன்னாடியே சொல்லிடுப்பா! திடீர்னு அவனும் உன்னைப்போல் செய்துட்டான்னு வச்சுக்கோ, என்னால் உயிரோடவே இருக்க முடியாது, அதனால்தான் கேக்கறேன்!"

பிரபு அதிர்ந்துபோனான். தன் மகனைப் பற்றி அவன் நண்பனிடம் உளவு பார்க்கும் தாயை என்னவென்று சொல்வது? ஒருவகையில் அவரைப் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்தது.

இளவயதில் கணவனை இழந்தவர், அதனால் மனநிலை பாதிக்கப்பட்டு பித்துப்பிடித்தவர்போல் பலவருடங்கள் சுயம் அறியாமல் இருந்தவர். அவரது நிலையைப் புரிந்துகொள்ளாத உறவுகள் அவர் வேண்டுமென்றே உதாசீனப்படுத்துவதாக எண்ணி, அவருடனான உறவைத் துண்டித்துக்கொண்டனர். பிறகு புத்தி தெளிந்து வாழ்ந்தாலும், உறவுகளை அண்டவிரும்பாது, தன் மகன் ஒருவனே போதுமென்று வாழ்பவர்.

இந்த விஷயங்களை எல்லாம் அவரே அவனிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார். அதனால் அவர் கேட்பதில் உள்ள நியாயம் புரிந்தது.

விக்னேஷ் மூலம் இன்னொரு அதிர்ச்சி வந்தால் மீண்டும் மனநிலை பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்பதை பிரபு உணர்ந்தான். இப்போதைக்கு அவரிடம் நம்பிக்கையை வளர்ப்பது ஒன்றே அவர் கவலைக்கு மருந்து என்று அறிந்தவன்,

அவருடைய கரங்களை அழுந்தப் பற்றி,

"அம்மா! என் நிலை வேற, விக்னேஷுடைய நிலை வேற! எனக்கு சின்ன வயசிலிருந்து பணம் மட்டும்தான் தேவைக்கு அதிகமாக் கிடைச்சது. பாசம் ....? அது நான் எதிர்பார்த்த அளவுக்கு என் அப்பா அம்மாகிட்டேயிருந்து கிடைக்கவே இல்லை.

என் அப்பாவுக்கு அம்மா மட்டும்தான் ஊரறிஞ்ச மனைவி. ஊரறியாத மனைவிகள் எவ்வளவுன்னு அவருக்கே கணக்குத் தெரியாது. என் அம்மாவுக்கோ, என் அப்பாவை உளவு பார்க்கிறதே வேலை. எப்பவும் வீட்டில் சண்டை, சச்சரவுதான். என் வீட்டு வேலைக்காரங்களுக்கே எல்லா விஷயமும் தெரியும்.

அப்படியொரு கேவலமான வாழ்க்கை அது! ஆனால், பணம் சேர்க்கிறதிலயும், பதவிசா வாழுறதிலயும் ரெண்டுபேருக்கும் அவ்வளவு ஒற்றுமை! அதனால்தான் நான் சின்ன வயசிலிருந்தே என் பாட்டி வீட்டில் வளர்ந்தேன்.

பாசம்னா என்னன்னு என் பாட்டிதான் காட்டினாங்க. அவங்க தவறியதுக்கு அப்புறம் நான் என் வீட்டுக்குப் போனேன். அங்கே நிம்மதி இல்லை. வயது வந்த பிள்ளையின் முன் எதையெல்லாம் பேசக்கூடாதோ, அதையெல்லாம் பேசுவாங்க. எப்படி அவங்க மேல் மதிப்பு வரும்? அவங்களை விட்டு விலகணும்னு நினைச்சேன்.

எனக்கு சென்னையில் வேலை கிடைச்சது ரொம்ப நல்லதாப் போயிடுச்சி. அவங்களை விட்டு விலகினாலும், இடையிடையே ஊருக்குப் போனதே இந்த சுந்தரிக்காகத்தான். என் வாழ்க்கையில் ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்கிறதில் உறுதியா இருந்தேன். என் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவளா சுந்தரி இருந்தாள்.

அப்பா அம்மா எதிர்க்கக் காரணம் கெளரவம்! அது ஒண்ணுதான்! மத்தபடி நான் ஒரு பணக்காரப் பெண்ணைக் கல்யாணம் பண்ணிகிட்டு என் வாழ்க்கை சீரழிஞ்சாலும் அதுக்கு அவங்க கவலைப்படமாட்டாங்க.

இப்ப சொல்லுங்க, நான் செய்தது எந்த விதத்தில் சரியில்லை?

ஆனா, நீங்க விக்னேஷை வளர்த்தவிதம் வேற. உங்க அன்பைக் கொட்டி வளர்த்திருக்கீங்க, அவனுக்கு நிச்சயம் என் நிலை வராது.

அப்படியே அவன் ஒரு பெண்ணைப் பார்த்துப் பிடிச்சிருந்தாலும், நேரா உங்ககிட்ட வந்து, 'அம்மா! எனக்கு அந்தப் பெண்னைப் பிடிச்சிருக்கு, நான் காதலிக்கவா?'ன்னு உங்களைத்தான் கேட்பான். அதனால் கவலையை விடுங்க!"

தன் பெற்றோரின் அந்தரங்க வாழ்க்கையின் அசிங்கம் தன் ஊரோடு போகட்டும், நண்பர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியவேண்டாம் என்று இத்தனை நாள் அந்தச் சோகத்தையெல்லாம் தனக்குள் பொத்திப் பொத்தி வைத்திருந்தவனுக்கு, இன்று நண்பனின் தாயாரிடம் சொன்னதன் மூலம் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன.

ஒன்று, தன் மனதின் பாரமெல்லாம் இறங்கியது போல் ஒரு நிம்மதி. இரண்டாவது, நாகலட்சுமிக்கு அவர் மகனிடம் தளரவிருந்த நம்பிக்கையை இறுக்கி, அவரை ஆசுவாசப்படுத்தியது.

“என்னாங்க, எவ்வளவு நேரமாக் கூப்புடுறேன், என்னா யோசனை?"

"ம்!"

திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தான், பிரபு. எதிரில் இரண்டு தம்ளர்களில் காப்பியை ஏந்தியபடி, சுந்தரி நின்றிருந்தாள்.

பிரபு ஆச்சர்யத்துடன், "நீ எப்ப எழுந்து போனே?" என்றான்.

"அது சரி! நீங்க எந்த லோகத்திலே இருக்கீங்க? நான் போய் பத்து நிமிஷம் ஆவுது. அதுகூடத் தெரியாம என்னா சிந்தனையோ, ஐயாவுக்கு?"

"ம்? நம்ம விக்னேஷோட அம்மாவைப் பத்திதான் யோசிச்சிட்டிருந்தேன்."

"என்னானு?"

"விக்னேஷ் காதல் கல்யாணம் செய்துகிட்டால், அந்தம்மா ஒத்துக்குவாங்களான்னு யோசிச்சிட்டிருந்தேன்!"

"நிச்சயமா ஒத்துக்குவாங்க! என்கிட்ட எத்தனை அனுசரணையாப் பேசினாங்க, எப்படி நடந்துகிட்டாங்க, நான் சாமான் கழுவுறேன்னு போனப்போ, நீ இதெல்லாம் செய்யவேண்டாம்மான்னு அப்படித் தடுத்தாங்களே! நிச்சயமா அவுங்களுக்கு மருமகளா வரப்போறவ, குடுத்துவச்சவதான். அவுங்க ஒருக்காலும் தம் பையனோட ஆசைக்கு குறுக்க நிக்கமாட்டாங்க."

"நீ எப்படி இவ்வளவு உறுதியா சொல்றே, என்னமோ அவங்களோட வருஷக்கணக்கா பழகினமாதிரி?"

"ஒருத்தர் குணமறிய வருஷக்கணக்காதான் பழகணுமா, ஒரு மணிநேரம் போதுமே! நீங்க சொல்லுற மாதிரி ஒரு சராசரித் தாயா அவுங்களை என்னால் கற்பனையே செஞ்சுபாக்க முடியலை. அவுங்க அதுக்கும் மேலதான்!"

"அம்மா, தாயே! வேணுமின்னா ஒரு கோயில் கட்டி அவங்களைக் கும்பிடு! நான் இனிமே அவங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலை."

பிரபு கையெடுத்துக் கும்பிட்டான்.

"என்னாங்க, நீங்க? என்னப்போய் கும்பிட்டுகிட்டு....."

சுந்தரியின் செல்லச்சிணுங்கலை ரசித்தவாறே மனதுக்குள் அவளைப் பற்றிக் கவலைப்பட்டான், பிரபு.

'இவ்வளவு அப்பாவியாய் இருக்கிறாளே! இவள் என்னமாய் இந்தச் சிங்காரச் சென்னையில் வாழக் கற்றுக்கொள்ளப்போகிறாள்?'

பிரபுவின் கவலை அறியாத சுந்தரி, அவன் சொன்னதைப்போல் மானசீகமாக ஒரு கோயில் கட்டி அதில் நாகலட்சுமியின் திருவுருவம் வைத்து பூஜிக்கத் தொடங்கிவிட்டாள். அவள் அறிந்திருக்கவில்லை....பின்னாளில் அந்தக்கோயில் அதில் குடிகொண்ட தெய்வத்தாலேயே தரைமட்டமாக்கப்படப்போகிறது என்பதை!

*********************************************************************

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள்.

சுடர்விழி
26-05-2010, 10:24 AM
கதை நல்லா போயிட்டு இருக்கு.....காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வரும் எழுத்துக்கள்......தொடருங்கள்.....காத்திருக்கிறேன்

அன்புரசிகன்
26-05-2010, 11:27 AM
அநியாயத்திற்கு நல்லவளாய் இருக்கிறாள் இந்த சுந்தரி. இந்த கதையில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளீர்கள். தொடருங்கள். நன்றாகவே நகர்கிறது கதை.

சிவா.ஜி
26-05-2010, 12:35 PM
அந்தஸ்த்தில் தன்னைவிட மிகக்குறைந்த ஒரு ஏழைப்பெண்ணை ஏன் பிரபு திருமணம் செய்தானென்ற..மூன்று அத்தியாயங்களாய்த் தொடர்ந்தக் கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் அவனது வாயிலாகவே பதில் கிடைத்திருக்கிறது. ஒத்துக்கொள்ளக்கூடிய வெகு நியாயமானக் காரணம்தான்.

நல்ல புரிந்துணர்வு உள்ளவராக நாகலட்சுமியம்மாள் இருந்தாள் பிரபுவின் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்வார். ஆனால்...அத்தியாய முடிவு அப்படிச் சொல்லவில்லை.

இதுவரையில்லாத ஒரு லேசான சஸ்பென்ஸுடன் முடிந்த இந்த அத்தியாயம்...அடுத்ததை ஆவலுடன் எதிர்பார்க்கவைக்கிறது.

தொடருங்கள் கீதம்.

கலையரசி
26-05-2010, 02:09 PM
மூன்றையும் நான்கையும் இன்று தான் படித்தேன்.

இந்தக்காலத்தில் படித்தப் பெண்ணாக, நாகரிகம் தெரிந்த பெண்ணாக, வேலைக்குப் போகும் பெண்ணாக, இளைஞர்கள் மணம் முடிக்க ஆசைப்படும் போது, மேகஸீன் கூடப் படிக்கத் தெரியாத பெண்ணைப் பிரபு எப்படி மணம் முடித்தான் என எனக்குள் சந்தேகம் இருந்தது. அவன் ஏன் வேலைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான் என்ற காரணம் இப்போது விளங்கிவிட்டது. அவனது பெற்றோரைப் பழி வாங்க வேண்டும் என்று கூட இதைச் செய்திருக்கலாம்.
மகனின் நண்பனிடம் இவ்வளவு கேவலமாக விக்னேஷ் அம்மா நடந்து கொள்வார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரது பயத்திலும் நியாயம் இல்லாமல் இல்லை.
அடுத்த பாகத்தை எதிர்பார்க்கும் ஆவலைத் தூண்டும் விதமாய்க் கதை அமைந்துள்ளது. பாராட்டு கீதம்!

govindh
26-05-2010, 07:12 PM
....பின்னாளில் அந்தக்கோயில் அதில் குடிகொண்ட தெய்வத்தாலேயே தரைமட்டமாக்கப்படப்போகிறது என்பதை!

ஏன்....ஏன்..? ?
அறிந்து கொள்ள ...அடுத்த அத்தியாயத்திற்காக
ஆவலுடன் காத்திருக்கிறோம்..!

பா.ராஜேஷ்
26-05-2010, 08:59 PM
நன்றாக எழுதி உள்ளீர்கள். நாகலட்சுமி அம்மாள் நல்லவரா கெட்டவரா !!! என்று யூகிக்க முடியாதுவாறு எழுதி உள்ளீர்கள். தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும் என்பர். அதுபோல் நல்லவராய் இருந்த அம்மா என்ன ஆவார்!?? தொடருங்கள்.. காத்திருக்கிறேன்

கீதம்
26-05-2010, 10:27 PM
கதை நல்லா போயிட்டு இருக்கு.....காட்சிகளை கண்ணுக்குள் கொண்டு வரும் எழுத்துக்கள்......தொடருங்கள்.....காத்திருக்கிறேன்

நன்றி சுடர்விழி. தொடர்ந்து வந்து கருத்து பதித்தால் மிகவும் மகிழ்வேன்.

கீதம்
26-05-2010, 10:29 PM
அநியாயத்திற்கு நல்லவளாய் இருக்கிறாள் இந்த சுந்தரி. இந்த கதையில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டுள்ளீர்கள். தொடருங்கள். நன்றாகவே நகர்கிறது கதை.

அதுதானே பிரபுவின் கவலையும்? அடுத்துவரும் அத்தியாயங்கள் இந்தக்கேள்விக்கு விடை கூறும். பின்னூட்டத்திற்கு நன்றி.

கீதம்
26-05-2010, 10:34 PM
அந்தஸ்த்தில் தன்னைவிட மிகக்குறைந்த ஒரு ஏழைப்பெண்ணை ஏன் பிரபு திருமணம் செய்தானென்ற..மூன்று அத்தியாயங்களாய்த் தொடர்ந்தக் கேள்விக்கு இந்த அத்தியாயத்தில் அவனது வாயிலாகவே பதில் கிடைத்திருக்கிறது. ஒத்துக்கொள்ளக்கூடிய வெகு நியாயமானக் காரணம்தான்.

தொடருங்கள் கீதம்.இந்தக்காலத்தில் படித்தப் பெண்ணாக, நாகரிகம் தெரிந்த பெண்ணாக, வேலைக்குப் போகும் பெண்ணாக, இளைஞர்கள் மணம் முடிக்க ஆசைப்படும் போது, மேகஸீன் கூடப் படிக்கத் தெரியாத பெண்ணைப் பிரபு எப்படி மணம் முடித்தான் என எனக்குள் சந்தேகம் இருந்தது. அவன் ஏன் வேலைக்காரியைத் திருமணம் செய்து கொண்டான் என்ற காரணம் இப்போது விளங்கிவிட்டது. அவனது பெற்றோரைப் பழி வாங்க வேண்டும் என்று கூட இதைச் செய்திருக்கலாம்.
பாராட்டு கீதம்!

உங்களுக்கு எழுந்த சந்தேகம் சுந்தரிக்கும் எழுந்துவிட்டதே! அடுத்த அத்தியாயத்தைப் படித்துப்பாருங்கள், புரியும்.

தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதற்கு சிவா.ஜி அவர்களுக்கும், கலையரசி அக்காவுக்கும் என் நன்றிகள்.

கீதம்
26-05-2010, 10:35 PM
....பின்னாளில் அந்தக்கோயில் அதில் குடிகொண்ட தெய்வத்தாலேயே தரைமட்டமாக்கப்படப்போகிறது என்பதை!

ஏன்....ஏன்..? ?
அறிந்து கொள்ள ...அடுத்த அத்தியாயத்திற்காக
ஆவலுடன் காத்திருக்கிறோம்..!

உங்கள் கேள்விக்கான விடைகள் வந்துகொண்டே இருக்கின்றன. உங்கள் ஆதரவுக்கு நன்றி கோவிந்த் அவர்களே.

கீதம்
26-05-2010, 10:39 PM
நன்றாக எழுதி உள்ளீர்கள். நாகலட்சுமி அம்மாள் நல்லவரா கெட்டவரா !!! என்று யூகிக்க முடியாதுவாறு எழுதி உள்ளீர்கள். தலைவலி தனக்கு வந்தால்தான் தெரியும் என்பர். அதுபோல் நல்லவராய் இருந்த அம்மா என்ன ஆவார்!?? தொடருங்கள்.. காத்திருக்கிறேன்

உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி ராஜேஷ் அவர்களே.

அம்மா இப்போதும் நல்லவர்தான், மகன் விஷயத்தில்! அதுதான் அவரைக் கெட்டவராகவும் காட்டுகிறது. குழப்புகிறேனா? தெளிவடைய தொடர்ந்து படியுங்கள்.:icon_b:

கீதம்
26-05-2010, 10:41 PM
அத்தியாயம்- 5

மோகக்கூட்டுக்குள் கட்டுண்டு கிடந்த சுந்தரிக்கும், பிரபுவுக்கும் நாட்கள் ஓடியதே தெரியவில்லை. பிரபுவின் அன்புச்சிறைக்குள் ஆனந்தமாய் அடைபட்டிருந்தாள் சுந்தரி. பிரபுவோ, சுந்தரி பின்னிய பாசவலையில் தாறுமாறாய் சிக்கியிருந்தான். இருவரும் அவற்றைவிட்டு வெளியில் வர விரும்பவே இல்லை.

ஆனாலும், பிரபுவுக்கு, சூல் கொண்டிருந்த சுந்தரியைக் காணும்போதெல்லாம் அவள் எதற்கோ ஏங்குவதுபோல் ஒரு எண்ணம் உண்டாகும். அவ்வப்போது சோர்ந்து நிற்கும் முகமே சாட்சி சொல்லியது, அவளது மனக்குறையை!

"அம்மு! உனக்கு என்னடா குறை? ஏதாவது இருந்தா சொல்லேன்!"

சுந்தரியிடம் கேட்க, அவள் சிரித்தாள்.

"குறையா? அப்படி எதுவுமே இல்லைங்கறதுதான் குறை!"

"ம்ஹும்! ஏதோ இருக்கு! நீ சும்மா சொல்லாதே! உனக்கு உங்க அப்பா, அம்மாவைப் பாக்கணும்னு தோணுதா?"

"அப்படித் தோணினா நானே உங்ககிட்ட சொல்றேன். ஆனா ஆச்சர்யம் பாருங்க, இன்னைக்கு வரைக்கும் அவங்க ஞாபகமே வரலை. உங்களால் நம்பமுடியுதா?"

"சரி,நம்பறேன். ஆனா உன் கண்ணில் தேங்கியிருக்கிற கண்ணீர் பொய் சொல்லுமா? சொல்லு! வேறென்ன வேணும்? என்கிட்ட சொல்றதுக்கென்ன? தாராளமா சொல்லு!"

"எதுவுமில்லீங்க! என் சின்ன வயசில இருந்து சாப்பாட்டுக்கே கஷ்டம்! நல்ல துணிமணி உடுத்தி நானறியேன். மண்குடிசையில வாசம்! எங்க ஜனத்துக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பும் கிடையாது.

இவ்வளவு கீழான நிலையில் இருக்கிற குடும்பத்திலிருந்து, படிக்காத, நாகரிகமில்லாத ஒரு பொண்ணை ,சாதி, அந்தஸ்து எதுவுமே பாக்காம, ஊரிலே செல்வாக்கான தாய் தகப்பனை எதிர்த்துக் கல்யாணம் பண்ணிக்க ஒரு பெரிய மனசு வேணுங்க. அது உங்க கிட்ட அளவுக்கு அதிகமாவே இருக்கு!

எங்க அப்பா அம்மா பாத்து வச்சவரக் கல்யாணம் கட்டியிருந்தா, இந்நேரம் நானும் ஒரு கூலித் தொழிலாளியா பகலெல்லாம் செங்கல் சுமந்திட்டு, ராவெல்லாம் அந்த குடிகாரன் கையால் அடி வாங்கிட்டு தலையெழுத்தேன்னு காலந்தள்ளியிருந்திருப்பேன்.

இப்படி ஒரு கெளரவமான வாழ்க்கை கொடுத்த நீங்கதான் என் தெய்வம்! நான் சாகுறவரைக்கும் உங்க நிழலிலேயே வாழணும். அதுதாங்க என் ஆசை! வேறெந்த ஆசையும் இப்ப எனக்கில்லை!"

மூச்சுவிடாமல் பேசும் சுந்தரியையே வைத்தகண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான், பிரபு!

"அடி, எப்புடிடி இப்படியெல்லாம் பேசக் கத்துகிட்டே?"

"என் மனசில் இருக்கறதைச் சொன்னேன்! " முடிக்கும்போது அவள் கட்டுப்பாட்டை மீறி கண்ணீர்த்துளிகள் சிந்தின.

"அடப்பைத்தியம்! எதுக்கு இப்ப அழறே? நான் எந்தக் காலமும் உன்னை விட்டுப் பிரியவே மாட்டேன். நீதான் என் உலகமே! கண்ணைத் துடைச்சுக்கோ!"

"இருந்தாலும்...எனக்கொரு சந்தேகங்க!"

"கேட்டுடு, கேட்டுடு! சந்தேகத்தை மனசுக்குள்ளேயே பூட்டி வச்சிருந்தா அது பல குட்டிகளைப் போட்டு இதயத்தை வெடிக்கவச்சிடும். .கேளு....கேளு!"

பிரபு அவசரப்படுத்தினான்.

"நான் கேக்கிற கேள்விக்கு நீங்க உண்மையை மட்டும்தான் பதிலாச் சொல்லணும், சரியா?"

"உண்மை!"

"ப்ச்! விளையாடாதீங்க! சொல்லுங்க!"

"ம்! பீடிகையெல்லாம் பலமா இருக்கு! சரி, சொல்றேன். உன்கிட்ட எனக்கு எந்த ஒளிவு மறைவும் கிடையாது, சுந்தரிம்மா! கேளு!"

"என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"இதென்னடி கேள்வி? நான் உன்னை காதலிச்சேன், கட்டிகிட்டேன்!"

"ஏன் என்னைக் காதலிச்சீங்க?"

"அம்மு! உனக்கு என்னமோ ஆயிடுச்சு! ஏன் இப்படியெல்லாம் கேக்கறே?"

"காரணம் இருக்கு! ஏன் என்னைக் காதலிக்கணும்னு உங்களுக்குத் தோணிச்சு?"

"ஏன்னா....என்ன சொல்றது? நீ உலகமகாப்பேரழகியா இருந்தே! ஊரே உன் பின்னால் சுத்துச்சு! அதனால் நானும் உன்னைச் சுத்தி சுத்தி வந்து காதலிச்சேன்!"

"மறுபடியும் விளையாடறீங்க. உண்மையில் ஒரு ஏழைப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கணும்னுதானே மனசுக்குள்ள நினைச்சிருந்தீங்க, அதைச் சொல்லுங்க!"

"அதான் தெரியுதில்லே? அப்புறம் என்ன கேள்வி?"

மருதாணி இட்டுச் சிவந்திருந்த அவள் விரல்களைத் தன் விரல்களுடன் பின்னிக்கொண்டான். அவள் மனதில் என்ன மாதிரியான சந்தேகம் எழுந்திருக்கக்கூடும் என்பது ஒரளவு புரிந்தது. அவள் வாயாலேயே அதை சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

அவளோ, ஆரம்பித்துவிட்டாளே தவிர, அதை மேற்கொண்டு தொடர்வதா, கைவிடுவதா என்ற குழப்பத்தில் இருந்தாள்.

"சுந்தரி! உனக்குத் தெரியாததில்லை! முன்னாடியே உனக்கு இதைப் பத்திச் சொல்லியிருக்கேன். இப்ப உனக்கு என்ன சந்தேகம்? அதைச் சொல்லு!"

"வந்து....அது..என்னன்னா...." அவள் மென்று முழுங்கினாள்.

"சொல்லும்மா! நான் எதுவும் நினைக்கமாட்டேன்!"

"வந்து......இந்தப்பொண்ணு நமக்கு வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு என்மேல் ஆசைப்பட்டு கட்டிகிட்டீங்களா, இல்லே.....நமக்குத் தேவை ஒரு ஏழைப்பொண்ணு! அது யாராயிருந்தா என்னான்னு நினைச்சு என்னைத் தேர்ந்தெடுத்தீங்களா? அதுதான் என் மனசில் ரொம்பநாளா உறுத்திகிட்டிருக்கிற சந்தேகம். பதில் எதுவா இருந்தாலும் பரவாயில்ல. நான் தாங்கிக்குவேன். ஆனா தயவுசெஞ்சு உண்மையை மட்டும் சொல்லுங்க!"


பிரபு, சுந்தரியின் கைகளை இழுத்து, அவளைத் தன்னோடு அணைத்துக்கொண்டான். இரு கைகளாலும் அவள் முகத்தை ஏந்தி உச்சியில் முத்தமிட்டான். படபடக்கும் அவள் விழிகளைப் பார்த்தபடியே,

"சொல்றேன்!" என்றான்.

******************************************************************


தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

மு.வ உரை:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும்.

govindh
26-05-2010, 11:29 PM
சுந்தரிக்கு வந்தது...நியாயமான சந்தேகம் தான்....
பிரபு தெளிவான பதிலைச் சொல்லப் போகிறான்...

சிறப்பு வாழ்த்து :
குறள் வரியை கதைத் தலைப்பாக வைத்து...,

ஒவ்வொரு அத்தியாய முடிவிலும்...
அதற்குப் பொருத்தமுடைய குறளையும் பதிவு செய்து....
அதற்கு விளக்கமும் தந்து அசத்துவதற்காக...!

சுடர்விழி
27-05-2010, 01:45 AM
சுந்தரி,பிரபுவோட அன்யோன்யத்தை நல்லா சொல்லி இருக்கீங்க....பிரபுவின் பதிலைக் கேட்க நானும் ஆர்வமாய் இருக்கிறேன்..

கீதம்
27-05-2010, 02:16 AM
சுந்தரிக்கு வந்தது...நியாயமான சந்தேகம் தான்....
பிரபு தெளிவான பதிலைச் சொல்லப் போகிறான்...

சிறப்பு வாழ்த்து :
குறள் வரியை கதைத் தலைப்பாக வைத்து...,

ஒவ்வொரு அத்தியாய முடிவிலும்...
அதற்குப் பொருத்தமுடைய குறளையும் பதிவு செய்து....
அதற்கு விளக்கமும் தந்து அசத்துவதற்காக...!

உங்களுடைய சிறப்பு வாழ்த்துக்கு என் சிறப்பு நன்றிகள் கோவிந்த் அவர்களே.

சாதாரணமாய் எழுதுவதிலும் ஒரு புதுமையைப் புகுத்தினால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அதனால் ஒவ்வொரு அத்தியாயத்தின் இறுதியிலும் அந்த அத்தியாயத்தில் வந்த ஏதாவது ஒரு நிகழ்வு தொடர்பான குறளைத் தேர்ந்தெடுத்து அதற்கு விளக்கமும் எழுதினேன். இதுபோல் வேறு யாரும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை.

இருப்பினும் என் முயற்சியைக் கவனித்துப் பாராட்டிய உங்களுக்கு மீண்டும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

கீதம்
27-05-2010, 02:18 AM
சுந்தரி,பிரபுவோட அன்யோன்யத்தை நல்லா சொல்லி இருக்கீங்க....பிரபுவின் பதிலைக் கேட்க நானும் ஆர்வமாய் இருக்கிறேன்..

பின்னூட்டத்துக்கு நன்றி சுடர்விழி. நாளைவரை காத்திருக்கமுடியும்தானே? என்னைப் பின் தொடர்வதற்கு நன்றி.

Akila.R.D
27-05-2010, 04:18 AM
சுடச்சுட ஒவ்வொரு அத்தியாயத்தையும் தருகிறீர்கள்...

பிரபு, சுந்தரி உரையாடல்கள் எதார்த்தமா இருக்கு...

தொடருங்கள்....

சிவா.ஜி
27-05-2010, 05:30 AM
சுந்தரிக்கு ஏற்பட்டது நியாயமான சந்தேகம்தான். ஏதோ ஒரு ஏழைப்பெண்ணைக் கல்யாணம் செய்ய்வேண்டுமே எனச் செய்திருந்தால்...அவளுக்கு அது மிக சங்கடம்தானே. இருந்தாலும்...பிரபுவின் பதில் அவளை சந்தோஷிக்கும் என நினைக்கிறேன்.

அழகான தாம்பத்யத்தை கண்முன்னேக் காட்டிவிட்டீர்கள். வாசிக்க இதமாக இருக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் மாறும்...தொடர்புடையக் குறள்களை நானும் கவனித்தேன். மிக அருமையாய் இருக்கிறது. இந்திரா சௌந்திரராஜன் கதைகளில் இதைப்போல ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சித்தர் பாடல்களை முகப்பில் தருவார். அந்த அத்தியாயத்தின் சாராம்சம் அந்தப் பாடலின் விளக்கவுரையில் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் குறளை யாரும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.

தொடருங்கள் கீதம்...தொடர்கிறோம் நாங்களும்.

அன்புரசிகன்
27-05-2010, 11:03 AM
பிறகென்ன.. சுந்தரி சிந்திக்க தொடங்கிவிட்டாள்... என்ன பதில் வைச்சிருக்கார் புருசன்.. அடுத்தபாகத்தில் அறிந்துகொள்ளும் ஆவல்.. தாம்பத்ய உறவின் அந்நியோன்யம் உங்கள் எழுத்தில் புலப்படுகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்.

பா.ராஜேஷ்
27-05-2010, 01:27 PM
என்ன பதில் சொல்ல போகிறார் பிரபு என்றறிய ஆர்வமாக உள்ளது.
திருக்குறளை பற்றி நானும் சொல்ல நினைத்திருந்தேன் ஆனால் கோவிந்த் முந்தி கொண்டார். பாராட்டுக்கள் கீதம். தொடருங்கள்.

கீதம்
27-05-2010, 10:05 PM
சுடச்சுட ஒவ்வொரு அத்தியாயத்தையும் தருகிறீர்கள்...

பிரபு, சுந்தரி உரையாடல்கள் எதார்த்தமா இருக்கு...

தொடருங்கள்....

உங்கள் ஆதரவுக்கு நன்றி, அகிலா. என்னால் முடிந்தவரை தினம் ஒரு அத்தியாயம் தர முயற்சிக்கிறேன்.

கீதம்
27-05-2010, 10:07 PM
சுந்தரிக்கு ஏற்பட்டது நியாயமான சந்தேகம்தான். ஏதோ ஒரு ஏழைப்பெண்ணைக் கல்யாணம் செய்ய்வேண்டுமே எனச் செய்திருந்தால்...அவளுக்கு அது மிக சங்கடம்தானே. இருந்தாலும்...பிரபுவின் பதில் அவளை சந்தோஷிக்கும் என நினைக்கிறேன்.

அழகான தாம்பத்யத்தை கண்முன்னேக் காட்டிவிட்டீர்கள். வாசிக்க இதமாக இருக்கிறது.

ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் மாறும்...தொடர்புடையக் குறள்களை நானும் கவனித்தேன். மிக அருமையாய் இருக்கிறது. இந்திரா சௌந்திரராஜன் கதைகளில் இதைப்போல ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் ஒரு சித்தர் பாடல்களை முகப்பில் தருவார். அந்த அத்தியாயத்தின் சாராம்சம் அந்தப் பாடலின் விளக்கவுரையில் சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் குறளை யாரும் பயன்படுத்திப் பார்த்ததில்லை.

தொடருங்கள் கீதம்...தொடர்கிறோம் நாங்களும்.

உங்கள் விமர்சனத்துக்கும், குறள் பற்றிய அவதானிப்புக்கும் மிக்க நன்றி, சிவா.ஜி அவர்களே.

கீதம்
27-05-2010, 10:08 PM
பிறகென்ன.. சுந்தரி சிந்திக்க தொடங்கிவிட்டாள்... என்ன பதில் வைச்சிருக்கார் புருசன்.. அடுத்தபாகத்தில் அறிந்துகொள்ளும் ஆவல்.. தாம்பத்ய உறவின் அந்நியோன்யம் உங்கள் எழுத்தில் புலப்படுகிறது. தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்.

தொடரும் ஆதரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி, அன்புரசிகன்.

கீதம்
27-05-2010, 10:11 PM
[QUOTE=பா.ராஜேஷ்;473013]திருக்குறளை பற்றி நானும் சொல்ல நினைத்திருந்தேன் ஆனால் கோவிந்த் முந்தி கொண்டார். QUOTE]

அதனாலென்ன? உங்களுக்கும் என் சிறப்பு நன்றிகள். ஒரு நல்ல விஷயம் கதை வாயிலாக மக்களைச் சென்றடைவது நல்லதுதானே!

கீதம்
27-05-2010, 10:13 PM
அத்தியாயம் - 6

“உன் சந்தேகம் இதுவாதான் இருக்கும்னு நினைச்சேன். சுந்தரி! இப்ப சொல்றேன், கேட்டுக்கோ! இனி வாழ்நாள் பூராவும் உனக்கிந்த சந்தேகமே வரவே கூடாது!

எனக்கு அப்படியொரு எண்ணம் வரதுக்குக் காரணமே எங்கம்மாதான்! அவங்க பகட்டு வாழ்க்கையில் காட்டின ஆர்வத்தை, குடும்ப வாழ்க்கையில் காட்டவில்லை. அப்படிக் காட்டியிருந்தா, என் அப்பா இப்படி மாறியிருந்திருப்பாரான்னு நினைச்சேன்.

அதனால் பணமும், பணத்தின் மேல் இருக்கிற ஈடுபாடும்தான் குடும்பவாழ்க்கையைச் சிதைக்கிதுன்னு முடிவெடுத்து என் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யக்கூடாதுன்னு நினைச்சேன். எல்லா நற்குணங்களும் இருக்கிற ஒரு ஏழைப் பெண்ணைத்தான் கல்யாணம் பண்ணனும்னு முடிவு செஞ்சுகிட்டேன்.

என் படிப்பு முடிஞ்ச நேரம் என் பாட்டி தவறிட்டாங்க. போக்கிடம் இல்லாமல் நான் மறுபடியும் கிராமத்துக்கே வரநேர்ந்திச்சு. அப்பதான் உன்னைப் பாத்தேன். வீட்டை அழகாய், நேர்த்தியாய் நீ வச்சிருந்த பாங்கு, உன் பக்குவமான சமையல், அம்மா எப்பக்கூப்பிட்டாலும் அலுத்துக்காம நீ அவங்களுக்கு செஞ்ச பணிவிடை... இதையெல்லாம் பார்த்து மலைச்சிருக்கேன்.

ஒரு சின்னப்பெண் இப்படி பம்பரம் மாதிரி ஓயாம வேலை செய்யறாளேன்னு ஆச்சர்யப்பட்டிருக்கேன். மத்த வேலைக்காரங்க எல்லாம் கடமைக்குச் செய்யும்போது நீ மட்டும் ஒரு ஈடுபாட்டோடு வேலை செய்தது எனக்குப் பிடிச்சிருந்தது. பணிவு, கனிவான பேச்சு, மரியாதை, மத்தவங்களுக்கு உதவுற குணம் எல்லாம் உன்கிட்ட இருந்தது."

"அடேயப்பா! ஒண்ணும் தெரியாதவராட்டம் எப்பவும் புத்தகமும் கையுமா இருந்திட்டு, இவ்வளவு விஷயங்களைக் கவனிச்சிருக்கீங்களே!"

சுந்தரி அதிசயித்தாள்.

"உன்னைபோல் ஒருத்திதான் எனக்கு மனைவியா வரணும்னு உள்மனம் சொல்லிச்சு. அது ஏன் நீயாகவே இருக்கக்கூடாதுன்னுதான் உன்கிட்ட என் விருப்பத்தைச் சொன்னேன். ஆனா...நீ மறுத்துட்டே!"

"பின்னே? முதலாளியோட மகன் திடீர்னு ஒரு வேலைக்காரப்பொண்ணுகிட்டே வந்து என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறீயான்னு கேட்டால் என்ன தோணும்?"

"பைத்தியம்னு நினைச்சியா?"

"ம்ஹும்! காமுகன்னு நினைச்சேன். பொண்ணுங்களை ஏமாத்தறதுக்காக கல்யாணம்கிற வலை வீசறவர்னு நினைச்சேன்."

"அடிப்பாவி! இத்தனைநாள் சொல்லவே இல்ல...."

"தப்புதான்! மன்னிச்சிடுங்க!"

"எது? சொல்லாததா?"

"இல்ல..அப்படி நினைச்சது.."

"சரி, விடு! இப்பவாவது சொன்னியே!"

"அப்புறமும் நீங்க என்னைப் பாக்குறப்ப எல்லாம் அதே கேள்வியைக் கேட்டுகிட்டே இருந்தீங்க!"

"ஆமாம், ஏன்னா...எனக்கு அந்நேரம் நீ ஒரு தேவதையாத் தெரிஞ்சே! உன்னை விட எனக்கு மனசே இல்ல."

"திடீர்னு சென்னைக்கு வேலை கிடைச்சு கெளம்பிப்போய்ட்டீங்க!"

"அப்பாடா! ஒழிஞ்சான்னு நினச்சிருப்பே!"

"அதுதான் இல்ல...ஏதையோ இழந்தது மாதிரிதான் இருந்திச்சு. ஆனாலும் இது சரியா வராதுன்னும் தோணிச்சு!"

"ஆனா..நான் விடலையே! நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஊருக்கு வந்தேனே! உன்னை மறுபடி மறுபடி கேட்டுட்டே இருந்தேனே! உனக்குப் படிக்கத் தெரியாதுன்னு தெரியாம காதல் கடிதமெல்லாம் எழுதிக் கொடுத்தேனே!"

பிரபு சிரித்தான்.

"நீங்க எனக்காகவே ஊருக்கு வர்றீங்கன்னு அப்புறம்தான் புரிஞ்சது. நீங்க உண்மையாவே என்னை நேசிக்கறீங்கன்னு புரிஞ்சது."

"என்ன புரிஞ்சு என்ன பிரயோஜனம்? இப்ப சந்தேகம் வந்திடுச்சே?"

"அதைத்தான் தீர்த்துட்டீங்கல்லே...."

"ஹும்! ஒரு பெரிய போராட்டத்துக்குப் பின்னாலதான் உன் கையைப் பிடிச்சேன்!"

"இப்பவரைக்கும் விடல்லை!"

கோர்த்திருந்த விரல்களைக் காட்டிச் சிரித்தாள்.

"இனிமேலும் விடப்போறாதா உத்தேசமில்லை!"

அவன் அவள் கரங்களை இறுகப் பற்ற, "ஆ!" என்று பொய்யாய் அலறினாள்.

************************************************************

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

மு.வ உரை:
என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.

govindh
27-05-2010, 10:30 PM
பிரபு, சுந்தரி உரையாடல்கள்....நல்லா இருக்கு...
உண்மையாகவே கண்முன் நிகழ்வதைப் போல்
ரசனையுடன் அமைத்திருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்.

குறள் - விளக்கம் அருமையானப் பொருத்தம்.

மதி
28-05-2010, 03:55 AM
அப்பாடி.. இப்போ தான் 4, 5, 6 அத்தியாயங்கள் படிச்சு முடிச்சேன். அழகா கொண்டு போறீங்க கதையை.. இருவரின் உரையாடலும் நல்லா இருக்கு.

ஒரு சின்ன உறுத்தல்.. சுந்தரியோட உரையாடல்களில் திடீரென்று அதிகம் வழக்கில் பயன்படுத்தாத வார்த்தைகளான நானறியேன், காமுகன் எல்லாம் வருது. சுந்தரியோட பாத்திரப்படைப்புக்கும் அவளின் இந்த வார்த்தைகள் பிரயோகங்களும் முரணா இருக்குமோன்னு தோணுது. வசனங்கள் தானே. அவளின் வசனம் இன்னும் சற்று பேச்சுவழக்கில் இருந்தால் நல்லா இருக்கும் என்பது என் எண்ணம். சுந்தரியை ஒரு வெகுளிப்பெண்ணாக, எழுதப்படிக்கத் தெரியாத ஏழைப்பெண்ணாக கற்பனை செய்து வைத்திருக்கையில் இவ்வார்த்தைகள் இடறுகிறது. தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்..

கீதம்
28-05-2010, 04:14 AM
அப்பாடி.. இப்போ தான் 4, 5, 6 அத்தியாயங்கள் படிச்சு முடிச்சேன். அழகா கொண்டு போறீங்க கதையை.. இருவரின் உரையாடலும் நல்லா இருக்கு.

ஒரு சின்ன உறுத்தல்.. சுந்தரியோட உரையாடல்களில் திடீரென்று அதிகம் வழக்கில் பயன்படுத்தாத வார்த்தைகளான நானறியேன், காமுகன் எல்லாம் வருது. சுந்தரியோட பாத்திரப்படைப்புக்கும் அவளின் இந்த வார்த்தைகள் பிரயோகங்களும் முரணா இருக்குமோன்னு தோணுது. வசனங்கள் தானே. அவளின் வசனம் இன்னும் சற்று பேச்சுவழக்கில் இருந்தால் நல்லா இருக்கும் என்பது என் எண்ணம். சுந்தரியை ஒரு வெகுளிப்பெண்ணாக, எழுதப்படிக்கத் தெரியாத ஏழைப்பெண்ணாக கற்பனை செய்து வைத்திருக்கையில் இவ்வார்த்தைகள் இடறுகிறது. தப்பாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்..

நீங்க சொல்றது சரிதான், மதி. அந்த இடத்தில் எப்படி வார்த்தைகளைப் போடறதுன்னு வந்த குழப்பத்தில் எழுதியது. இனிமேல் கவனமாக இருப்பேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

கீதம்
28-05-2010, 04:16 AM
பிரபு, சுந்தரி உரையாடல்கள்....நல்லா இருக்கு...
உண்மையாகவே கண்முன் நிகழ்வதைப் போல்
ரசனையுடன் அமைத்திருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்.

குறள் - விளக்கம் அருமையானப் பொருத்தம்.

ரசித்துப் பாராட்டியதற்கு நன்றி கோவிந்த் அவர்களே.

சிவா.ஜி
28-05-2010, 09:20 AM
ரொம்ப அழகா சுந்தரியோட சந்தேகத்தைத் தீர்த்துட்டான் பிரபு. திருமணம் ஆவதற்குமுன் நடந்தவைகளை நல்லா சொல்லியிருக்கீங்க.

நீங்க சொன்னமாதிரி..அதிகமா பரபரப்பில்லாம...சலசலப்பில்லாத அமைதியான ஓடையைப்போல போகும் கதைக்கு...உரையாடல்களும், நடையும் பெரிய பலம்.

தொடருங்க கீதம்.

பா.ராஜேஷ்
28-05-2010, 06:17 PM
சுந்தரியின் சந்தேகம் (நம்மோடதும் தான்) தீர்ந்தது... அடுத்து என்ன!!?

கீதம்
28-05-2010, 10:32 PM
ரொம்ப அழகா சுந்தரியோட சந்தேகத்தைத் தீர்த்துட்டான் பிரபு. திருமணம் ஆவதற்குமுன் நடந்தவைகளை நல்லா சொல்லியிருக்கீங்க.

நீங்க சொன்னமாதிரி..அதிகமா பரபரப்பில்லாம...சலசலப்பில்லாத அமைதியான ஓடையைப்போல போகும் கதைக்கு...உரையாடல்களும், நடையும் பெரிய பலம்.

தொடருங்க கீதம்.

என் முதல் முயற்சியைப் பாராட்டி ஊக்குவிக்கும் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக நன்றி சிவா.ஜி அவர்களே.

கீதம்
28-05-2010, 10:35 PM
சுந்தரியின் சந்தேகம் (நம்மோடதும் தான்) தீர்ந்தது... அடுத்து என்ன!!?

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி, ராஜேஷ் அவர்களே.அடுத்த அத்தியாயத்தைப் பதிவிட்டுள்ளேன். படித்துக் கருத்துச் சொல்லுங்கள்.

கீதம்
28-05-2010, 10:37 PM
அத்தியாயம் - 7

"அம்மா.......அப்பா.......ஆ......வலி தாங்க முடியலையே.....அம்மா....!"

நாகலட்சுமி மூட்டுவலியால் துடித்துக்கொண்டிருந்தார். இந்த ஆறுமாதத்தில் எவ்வளவோ சிகிச்சை எடுத்தாகிவிட்டது. எலும்புத் தேய்மானத்தின் முன் எதுவும் எடுபடாமல் போயிற்று. உடல் எடையும் அளவுக்கு அதிகமாக இருந்ததால் அடுத்தவர் உதவியின்றி எழுவதும் சாத்தியமின்றிப் போனது.

அறுவை சிகிச்சை செய்யலாம் என்றாலோ, சர்க்கரையின் அளவு கட்டுக்குள் அடங்காமல் கவலை தந்தது. நாகலட்சுமிக்கு வாயைக் கட்டும் கலை கைவரவில்லை. இனிப்புணவின்மேல் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.

விக்னேஷ் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், இரண்டு நாள் கடைப்பிடித்தால் அதிகம்! நாளெல்லாம் கூடவே இருந்தா கண்காணிக்க முடியும்? அவர் உடல்நிலையில் அவர்தானே அக்கறை கொள்ளவேண்டும்? விக்னேஷ் வெறுத்துப்போய் சொல்வதை விட்டுவிட்டான்.

விக்னேஷ், அம்மாவின் உதவிக்கென்று ஒரு பெண்ணை அமர்த்தியிருந்தான். அவள் காலை எழு மணிக்கு வந்து வீட்டு வேலைகளைச் செய்துவிட்டு மதிய சமையலுக்கான முன்னேற்பாடுகள் செய்து தந்துவிட்டு சென்றுவிடுவாள். மீண்டும் மாலை வந்து மற்ற வேலைகளைப் பார்த்துவிட்டு இரவு உணவுக்கான முன்னேற்பாடுகள் செய்துவிட்டுப் போவாள். அவளிடமே சமையல் பொறுப்பையும் ஒப்படைத்துவிடலாம் என்று விக்னேஷ் சொன்ன யோசனைக்கு அம்மா பலமாக மறுப்பு தெரிவித்தார்.

"அது ஒண்ணுதான் நான் செய்யிறேன். அதையும் செய்யலேன்னா..அப்புறம் நான் இருந்து என்ன பயன்? நான் பெத்த பிள்ளைக்கு என் கையால சமைச்சுபோடறதை நான் பாக்கியமா நினைக்கிறேன். அதைப் பறிச்சிடாதேப்பா!" என்று கூறிவிட்டார்.

பக்கத்துவீட்டு மனோகரி அக்கா கூட ஒருநாள் பேச்சுவாக்கில்,

"என்னம்மா, எப்ப உங்க பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப்போறீங்க? மருமகள் வந்துட்டால் இந்தப் பிரச்சனை இருக்காதில்லே?"

என்று கேட்டுவிட்டாள். அம்மாவுக்கு வந்ததே கோபம்.

"ஏண்டியம்மா, நான் நல்லாயிருக்கிறது பிடிக்கலையா, உனக்கு? மருமக வந்து என்னை மூலையில் உக்காத்திவச்சுப் பாக்க ஆசைப்படறே?"

அக்கா, போகும்போது விக்னேஷிடம் ரகசியக்குரலில்,

"விக்கி, உங்கம்மாவுக்கு உனக்குக் கல்யாணம் பண்ணிப் பாக்கிற ஆசையே இல்லை. நீயா யாரையாவது பார்த்துப் பண்ணிகிட்டாதான் உண்டு!" என்று சொல்லிவிட்டுப்போனாள்.

விக்னேஷுக்கு ஆச்சர்யமாக இருந்தது. தன் மகன் காலாகாலத்தில் திருமணம் செய்துகொண்டு சீரும் சிறப்புமாய் வாழவேண்டுமென்பதுதானே எல்லா அம்மாவின் ஆசையாக இருக்கக்கூடும். அம்மாவுக்கு அந்த எண்ணம் இதுவரை தோன்றாமல் போனது ஆச்சர்யம்தானே? வேறு யாராவது இதைப் பற்றிப் பேசினாலும் அவர்கள் மேல் கோபப்படுகிறாரே!

விந்தைதான் இது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டே, அம்மாவின் காலில் தைலத்தை தேய்த்து நீவி விட்டுக்கொண்டிருந்தான்.

"அப்பா, விக்னேஷ்! எனக்கொரு உதவி செய்யறியா?"

"சொல்லுங்கம்மா!"

"கருணைக் கொலை கருணைக்கொலைன்னு சொல்றாங்களே....என்மேல் கொஞ்சம் கருணை காட்டி அதைச் செய்யேன்ப்பா!"

"அம்மா! என்ன சொல்றீங்க?"

அதிர்ந்தான் விக்னேஷ்.

"ஏம்மா இப்படியெல்லாம் பேசுறீங்க? உலகத்தில் எவ்வளவோ கொடுமையான நோயெல்லாம் இருக்கு! இருந்தும் மக்கள் அதைத் தாங்கி வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க! ஒரு சாதாரண மூட்டுவலிக்குப் போய்......"

அவன் முடிக்கவில்லை. நாகலட்சுமி அம்மாள் ஆத்திரத்துடன் குறுக்கிட்டார்.

"சாதாரண மூட்டுவலியா? உனக்கு அப்படிதான் டா இருக்கும். சும்மாவா சொன்னாங்க, தாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறன்னு! சாதாரண மூட்டு வலியாமில்லே....உயிர் போற வலிடா....உயிர் போற வலி! அந்த வேதனை அதை அனுபவிக்கிறவங்களுக்குதான் தெரியும்...வெளியில இருந்து பாக்கிறவங்களுக்கு என்ன தெரியும்?

அப்பா....சாமி.....ஐயா.....இனிமே நீ எனக்கு எந்த உதவியும் செய்யவேணாம்ப்பா! ஆளவிடு!"

நாகலட்சுமி தலைக்குமேல் கரங்களை உயர்த்தி ஒரு பெரிய கும்பிடாகப் போட்டார்.

"அம்மா.....என்னம்மா......நான் என்ன சொல்லவந்தேன்னா....."

"போதும்ப்பா, போதும்! எப்போ உன் மனசில நான் சாதாரண வலியைப் பெரிசு பண்ணி ஆர்ப்பாட்டம் பண்றதா ஒரு நினைப்பு வந்திடுச்சோ, இனிமேல் நான் என்ன சொன்னாலும் அதெல்லாம் நடிப்பாத்தான் தோணும். நீ முதலில் இங்கேயிருந்து கிளம்பு! என் வேலையை நானே பாத்துக்கறேன்!"

அம்மா கட்டிலிலிருந்து தடுமாறி எழ முற்பட, விக்னேஷ் வலிந்து அவரைத் தடுத்து அமர்த்தினான்.

"அம்மா! தயவுசெய்து கோபிக்காமல் நான் சொல்றதை கொஞ்சம் காதுகொடுத்துதான் கேளுங்களேன். அம்மா...ப்ளீஸ்!"

அம்மாவின் கண்களிலிருந்து தாரை தாரையாய்க் கண்ணீர் வழிந்தது. அதைப் பார்த்து விக்னேஷின் கண்களும் நீரைச் சொரிந்தன.

அம்மாவின் அருகில் அமர்ந்து அவரை மெல்ல அணைத்துக்கொண்டான். அவர் சற்றே ஆசுவாசமடைந்ததுபோல் தோன்றியது.

"அம்மா! எனக்கு உங்களை விட்டால் இந்த உலகத்தில் வேற யார் இருக்கிறா, சொல்லுங்க? மூட்டுவலியைக் காரணமா வச்சி, என்னைக் கொலை பண்ணிடுன்னு மகன்கிட்ட ஒரு தாய் சொன்னால்,அவன் மனம் என்ன பாடுபடும்னு உங்களுக்குத் தெரியாதா? எனக்கு உங்க மனநிலையை மாத்த என்ன செய்யிறதுன்னு தெரியலைம்மா!

சின்ன வயசில் தாத்தா சொல்வார், நமக்கு ஒரு கஷ்டம் வந்தால், நம்மைவிடவும் கஷ்டப்படுறவங்களைப் பார்த்து, நம்ம கஷ்டம் அதைவிடவும் சின்னதுதானேன்னு நினைச்சு மனசைத் தேத்திக்கணும்னு! அதைத்தாம்மா நான் சொல்லவந்தேன். அதுக்குள்ள நீங்க என்னென்னமோ பேசிட்டீங்க!"

ஆனாலும் நாகலட்சுமிக்கு சமாதானம் உண்டாகவில்லை.

"இருந்தாலும் என் வலியை சாதாரணம்னு நீ சொல்லியிருக்கக்கூடாது! ஒருவேளை....உனக்கு அது சாதாரணமாகவும் இருக்கலாம்....."

"என்னம்மா, நீங்க! திரும்பவும்...."

"என்னப்பா செய்யறது? அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து வாழுற நிலையிலிருக்கும் எல்லாருக்குமே, தான் மத்தவங்களுக்கு பாரம்கிற நினைப்பு வரத்தான் செய்யும். அதைத் தடுக்க முடியாது! நீயே இப்படிப் பேசினால், நாளைக்கு வரப்போற மருமகள் எப்படிப் பேசுவாள்? அதை நினைச்சேன், கோபம் வந்துட்டுது!"

"ஆமாம்! நாளைக்கே வரப்போறாளாக்கும்? அவள் எப்ப வருவாளோ? அதுக்குள்ளே நீங்க எழுந்து நடமாட ஆரம்பிச்சிடுவீங்க”

“சொல்ல முடியாதுப்பா! இதோ, இந்தப்பூனையும் பால் குடிக்குமான்னு இருந்துகிட்டு ஒரு வேலைக்காரக்குட்டியை இழுத்துகிட்டு வந்திருக்கானே, பிரபு...அவனைமாதிரி நீயும் எவளையாவது இழுத்துகிட்டு வரமாட்டேன்னு என்ன நிச்சயம்?"

விக்னேஷ் அதிர்ந்துபோய் அம்மாவை ஏறிட்டான். அம்மாவா இப்படி......?

*****************************************************************


இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது.

மு.வ உரை:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

govindh
28-05-2010, 11:46 PM
"நாகலட்சுமிக்கு வாயைக் கட்டும் கலை கைவரவில்லை."

பேச்சும் அப்படித் தான் இருக்கு.
சரியாகத் தான் சொல்லியிருக்கீங்க...!

பிறர் சொல்லி முடிப்பதற்குள்....அதை தவறாகப்
புரிந்து கொண்டு....வீண் வாதம் செய்பவர்கள்...
வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?.

அடுத்து விக்னேஷ் என்ன செய்யப் போகிறான்...?
தொடருங்கள்....
தொடர்ந்து வருகிறோம்.

சுடர்விழி
29-05-2010, 01:36 AM
யார் என்ன சொன்னாலும் குதர்க்கமாக பேசும் நாகலட்சுமி,பாசமே உருவாய் பிள்ளை....இவர்களுக்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகிறது..ஆவலுடன் இருக்கிறேன்...

மதி
29-05-2010, 02:20 AM
ஏகப்பட்ட மனப்போராட்டத்தில் நாகலட்சுமி அம்மாள் இருக்கிறார்கள் என்று புரிகிறது.. வார்த்தைகள் தெறித்து விழுகின்றன.. தொடருங்கள்... கீதம்..

அன்புரசிகன்
29-05-2010, 03:10 AM
நாகலட்சுமி வீட்டிலிருந்து பார்ப்பது போல் நகர்கிறது. தொடருங்கள். கதை படிக்கும் ஆவலில்... வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
29-05-2010, 06:35 AM
அப்பா இல்லாமல், ஒற்றைப் பிள்ளையுடன் வாழும் அம்மாக்களின் மனநிலையை அருமையாய் கையாளுகிறீர்கள். மருமகள் வந்துவிட்டால், மகன் தன்மீது காட்டும் பாசம் குறைந்துவிடும் என்ற எண்ணமும்...அவரது இந்த மாதிரியான பேச்சுக்களுக்குக் காரணமாய் இருக்கலாம்.

தொடருங்கள் கீதம்.


(ஒரு வேண்டுகோள்...தலைப்பில் அத்தியாயம் என்று எழுதி எண் எழுதினால்...முகப்பில்...எண் தெரிவதில்லை. புதிய அத்தியாய போட்டுவிட்டீர்களா எனத் தெரியவில்லை. அதனால்...தலைப்புக்கு அருகில் வெறும் எண்ணை மட்டும் குறிப்பிட்டால்..சட்டெனத் தெரியும்)

பா.ராஜேஷ்
29-05-2010, 09:33 PM
பிரச்சனை ஆரம்பிச்சாச்சா... பாவம் விக்னேஷ். எப்படி சமாளிக்க போகிறானோ.. அம்மா ரொம்பத்தான் (வி)வேகமா போறாங்க... பாக்கலாம் என்ன ஆகும்னு..

கீதம்
30-05-2010, 03:49 AM
தொடர் வாசகர்களாய் வந்து தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்கம் கொடுத்துவரும் கோவிந்த், சுடர்விழி, மதி, அன்புரசிகன், சிவா.ஜி அவர்கள் மற்றும் ராஜேஷ் அவர்களுக்கு என் நன்றிகள் பல.

சிவா.ஜி அவர்களே, உங்கள் வேண்டுகோளை ஏற்கிறேன். நீங்கள் சொன்னபிறகுதான் கவனித்தேன். சுட்டியமைக்கு நன்றி.

கீதம்
30-05-2010, 03:54 AM
அத்தியாயம் - 8

'அம்மாவா இப்படிப் பேசுகிறார்? அன்று பிரபுவையும், சுந்தரியையும் அப்படி உபசரித்து அனுப்பினாரே! அதெல்லாம் வேடமா? என்னைப் பற்றி தன் மனதுக்குள் என்னதான் நினைத்திருக்கிறார்? நான் அவரை விட்டுப்போய்விடுவேன் என்றா? அந்தப் பயமே நாளுக்கு நாள் பல்கிப்பெருகி இன்று பூதாகாரமாய் உருவெடுத்து நிற்கிறதா?

என்னுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளும் அம்மா இந்தக் தவறான எண்ணத்தை மட்டும் என்னிடமிருந்து எப்படி மறைத்தார்?'

நாகலட்சுமி கேள்விக்கணையைத் தொடுத்துவிட்டு அவன் பதிலுக்காய்க் காத்திருப்பது தெரிந்தது. விரக்தியடைந்த விக்னேஷ் இறுகிய குரலில்,

"கவலைப்படாதீங்க அம்மா! உங்க விருப்பத்துக்கு மாறாய் எந்தப் பெண்ணையும் நான் திருமணம் செய்துக்கமாட்டேன்!" என்றான்.

நாகலட்சுமிக்கு மகன் மேலிருந்த நம்பிக்கை தொய்ந்துவிட்டதால் அவன் வாய்மொழியாய்ச் சொல்வதை மனம் ஏற்கவில்லை.

விக்னேஷ் நிறைந்த கடவுள் நம்பிக்கை உடையவன். தாயிடம் அன்பைவிடவும் பக்தி கொண்டவன். அவனைத் தன் விருப்பத்துக்கு வளைக்க, இதுவே தகுந்த சந்தர்ப்பம் என்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

"விக்னேஷ்! நீ இப்ப சொல்லுவே! அப்புறம் எல்லாத்தையும் மறந்துட்டு.... எவளையாவது....."

"அடட...ட..டா.....! என்னம்மா இது? திரும்பத் திரும்ப அதையே பேசுறீங்க? என்மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா?"

"அதில்லைப்பா...வந்து...."

"சரிம்மா! எப்படிதான் உங்க சந்தேகத்தை நான் போக்குறது? சொல்லுங்க!"

"என் கையிலடிச்சு சத்தியம் செய்! நம்பறேன்!"

"அம்மா!"

விக்னேஷின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. பொங்கிய துக்கத்தை மறைத்து எதுவும் பேசாமல் நீட்டிய அவர் கரத்தின் மீது தன் கரத்தை வைத்து அழுந்தப் பற்றினான். உடைந்த குரலில் சொன்னான்.

"அம்மா! உங்க விருப்பப்படிதான் என் கல்யாணம் நடக்கும். என்னை நம்புங்க!"

அதன் பின் நாகலட்சுமி எதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளூர மகிழ்வும் உள்ளத்தெளிவும் உண்டானது.

கலங்கிய மனதுடன் அம்மாவின் கைகளில் தண்ணீர் தம்ளரையும், மாத்திரையையும் கொடுத்தவன், அமைதியாய் அந்த அறையை விட்டு வெளியேறி தன்னறைக்குள் தஞ்சமடைந்தான். நடந்த எதையும் மனம் நம்ப மறுத்தது.

பொங்கிவந்த வேதனையின் உச்சகட்டமாய், சத்தம் வெளியில் வராவண்ணம் தலையணையில் முகம் புதைத்துக் குமுறிக் குமுறி அழுதான்.

‘சே! என்மேல் அவநம்பிக்கையா? அம்மா என்ற இந்த ஒரு உறவுக்காக, அந்த ஜீவனின் மகிழ்வுக்காக என் சுகத்தை, கனவுகளை, ஆசைகளை எல்லாம் துறந்து ஒரு துறவி போல் வாழும் என்னைச் சந்தேகிக்க எப்படியம்மா உங்களுக்கு மனம் வந்தது?

இக்கால இளைஞர்களின் ஆசையில் ஒரு கால்பங்காவது எனக்கிருக்காதா? எல்லாவற்றையும் மூடி மறைத்து, உங்கள் விருப்பமொன்றே என் விருப்பம் என்பதுபோல் ஏற்றுக்கொண்டு, அதில் நான் சுகமாய் வாழ்வதாய் பாசாங்கும் செய்துகொண்டு நாளெல்லாம் உங்களை மகிழ்வித்துக்கொண்டிருக்கிறேனே, என்னை நம்பவில்லையா? என் இத்தனை வருட வாழ்வு தராத நம்பிக்கையையா, இந்த ஒரு நொடி சத்தியம் தந்துவிடப்போகிறது?

என் தியாகத்துக்கும், தன்னலமற்ற அன்புக்கும் இதுதான் பிரதிபலனா? உங்கள் முகத்தில் தவழும் மலர்ச்சி ஒன்றே என் வாழ்வின் குறிக்கோள் என்று நினைத்திருந்தேனே, அது நிறைவேறாத கனவாகிப் போய்விட்டதா?

நான் பட்ட பாடெல்லாம் வீண்தானா? இப்படி ஒருநாள் நடக்கும் என்று தெரிந்திருந்தால் நானும் ஒரு சராசரி ஆடவனாய் வாழ்ந்திருப்பேனே! என் வாலிபக்கனவுகளை ஏன் பொசுக்கிக்கொண்டிருக்கவேண்டும்?

பள்ளி வயதில் பட்ட அவமானங்கள் வரிசையாய் வந்து நினைவிலாடின.

"டேய், விக்கி! உனக்கு மட்டும் எங்கேர்ந்துடா இப்படி பூப்போட்ட சட்டையெல்லாம் கிடைக்குது? எங்க அப்பாகிட்ட வாங்கித் தரச் சொன்னா நீயென்ன பொம்பளப்புள்ளயாடான்னு கேக்கறாரு!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, கிளாஸ் முழுக்க டூர் போறோம்! நீ மட்டும் வரமாட்டேங்கறே! கேட்டா அம்மா வேணாங்கறாங்க அப்படின்னு சொல்றே! ஒவ்வொரு வருஷமும் இதேதான்டா சொல்றே! நாங்க எல்லாரும் வளர்ந்துட்டோம், நீ மட்டும்தான் இன்னமும் அம்மா பொடவையைப் புடிச்சுகிட்டு விரல் சூப்பிகிட்டுத் திரியுறே!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றில் அடியெடுத்து வைத்த சமயம்,

"டேய், நேத்து நான் விக்கி வீட்டுப் பக்கமா போனேன்டா! அப்ப விக்கி டிரவுசர் போட்டுகிட்டு நின்னுட்டிருந்தான்டா!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"ஏன் டா, உனக்கு கைலி கட்டத் தெரியாதா?"

"டேய்! அவங்க அம்மாதான் டிரவுசர் போட்டுக்க சொன்னங்களாம்!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"சொன்னாங்களா, அவங்களே போட்டுவிட்டாங்களா?"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

"டேய்! பாத்துடா! என்னைக்காச்சும் உனக்கு ஹக்கீஸ் போட்டு விட்டுடப் போறாங்க!"

“ஹ்ஹா…….. ஹ்ஹா…………… ஹ்ஹா……………… ஹ்ஹா..........”

அத்தனைப் பேரும் கொல்லென்று சிரிக்க, உண்மையில் இவனைக் கொல்வது போல்தானிருக்கும் அந்த வெடிச்சிரிப்புகள். ஒருவருக்கும் இவன் நிலை புரியவில்லை.

'அம்மா கோண்டு' 'பயந்தாங்கொள்ளி' 'அம்மாகிட்ட இன்னும் பால் குடிக்கிற பாப்பா' என்று என்னென்னவோ பெயர்வைத்தழைத்து நோகடித்தனரே தவிர ஆறுதலாய் எவரும் இல்லை.

எவ்வளவு அவமானங்களைத் தாண்டிவிட்டேன்! எல்லாம் யாருக்காக? அம்மாவுக்காக! இந்தக் கேலியும் கிண்டலும் அவர் காதுகளை எட்டிவிடக்கூடாது என்பதில் எத்தனை கவனமாக இருந்தேன்? ஒருநாளாவது என் துக்கத்தை, வேதனையை அவரிடம் வாய்விட்டு முறையிட்டிருப்பேனா? ஏன்? அவர் நிம்மதி குலையக்கூடாது என்ற எண்ணத்தால் தானே?

என் போன்ற பிள்ளையின் அன்பை அங்கீகரிக்கும் அழகு இதுதானா? நண்பர்கள் கேலி பேசும்போது வராத துன்பமும், துயரமும் இப்போது வந்து வாட்ட, ஆற்றாமை அலைக்கழித்தது..

யாரிடமாவது தன் மன உளைச்சலைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று தோன்றியது. பிரபு ஒருவன் தான் தன் குடும்பச்சூழல் அறிந்தவன். அவனிடம்தான் சொல்லமுடியும். ஆனால்....

அவன் இப்போதுதான் பல பிரச்சனைகளைக் கடந்துவந்து தனது காதல் வாழ்க்கையை கனவுகளுடன் துவக்கியிருக்கிறான். அவனிடம் சொல்வதன்மூலம் தன் பாரம் குறையலாம்; ஆனால் அவனுக்கு பாரம் மிகுந்துவிடும். தன் திடீர்த் திருமணம்தான் இந்தப் பிரச்சனைக்கு மூல காரணம் என்று அறிந்தால் மிகவும் கவலைப்படுவான். அதனால் இப்போதைக்கு அவனுக்கு எதுவும் தெரியாமலிருப்பதே நல்லது.

பிரபுவைத் தவிர வேறு நண்பர்களும் இல்லை. இந்தப் பரந்த உலகத்து மனிதர்களை எல்லாம் அம்மாவுக்காக ஒதுக்கி வாழ்ந்ததற்கு தக்க தண்டனை இது என்று புரிந்தது. சே! நண்பர்கள் அற்ற வாழ்க்கை என்ன வாழ்க்கை?

அம்மாவுக்குப் பயந்து பயந்து நண்பர் வட்டத்தை நாளடைவில் குறைத்து அது இறுதியில் பிரபு ஒருவனுடன் நின்றுவிட்டது. இவனுடைய தொடர்பையும் அம்மாவின் நடவடிக்கை, கூடிய விரைவில் துண்டித்துவிடலாம்.

ஆறுதல் தேடி அங்குமிங்கும் அலைபாய்ந்த மனது, இறுதியில் வித்யாவின் மடியில் தஞ்சம் புகுந்தது. அவள் அதை ஒரு குழந்தை போல ஏந்திக்கொண்டாள். அதன் கண்ணீர் துடைத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். அதன் முகம் பார்த்துப் புன்னகைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள். அவளது பூங்கரங்கள் பட்டுப் பரவசமடைந்த மனம், அவள் கைகளிலிருந்து விடுபட்டு,துள்ளிக்குதித்துக் கொண்டு அவனிடம் ஓடிவந்தது.

அம்மாவுக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால், விக்னேஷின் ஆழ்மனதில் அதுவரை அடைபட்டுக்கிடந்த வித்யா, ஒரு தேவதை போல் எழும்பி மிதந்து மேலே வரத் துவங்கினாள்.


**********************************************************

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு.

மு.வ உரை:
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்து வருதல் போன்ற தன்மையுடையது, அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து பின் செல்லுதல் போன்ற தன்மையுடையன.

மதி
30-05-2010, 04:03 AM
எதிர்பார்த்திருந்த பெண் கதாபாத்திரம் வந்தாச்சு. இனி வித்யா பத்தின விஷயங்களை சீக்கிரம் சொல்லுங்க. கதையை அமைதியா ஆர்ப்பாட்டமில்லாம தெளிந்த நீரோடை போல கொண்டு போறீங்க. வாழ்த்துகள்.

அன்புரசிகன்
30-05-2010, 04:16 AM
ஒரு சத்தியத்தால் அவனது நம்பிக்கையை தகர்த்துவிட்டாள் தாய்... வெடித்த மனதை ஒட்டவைக்க ஒருத்தி வந்துவிட்டாள். அவள் ஆறுதலளிப்பாளா இல்லையா என்பது உங்களது தொடரச்சியில் புரியும் என நினைக்கிறேன். தொடருங்கள்.

வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
30-05-2010, 05:34 AM
சின்ன வயதிலிருந்து அம்மாவுக்காக எதையெல்லாம் இழந்திருக்கிறான்...அவை எதையுமே அம்ம தெரிந்துகொள்ளாமல்...மறைத்தும் வந்திருக்கிறான். ஆனால் அவன் பட்ட துயரத்துக்கெல்லாம் எந்தப் பலனும் இல்லாமல் போனதைப்போல....இந்த சத்தியம் அமைந்துவிட்டது.

விக்னேஷின் உள்ளக்குமுறலை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அலைபாயும் மனது...ஒரு அன்புள்ளத்தைத் தேடிப்போயிருக்கிறது.....இனி வித்யாவின் வரவு..வீட்டில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமென்று பார்ப்போம்.

தொடருங்கள் கீதம்.

(வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி)

Akila.R.D
30-05-2010, 06:26 AM
எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாத்திரம் கதையில் வந்தாயிற்று....இனி கதை மேலும் சூடாக இருக்கும்...

வாழ்த்துக்கள் கீதம்...

பா.ராஜேஷ்
30-05-2010, 03:25 PM
அம்மாவிற்குதான் சத்தியம் செய்து கொடுத்தாச்சே. அப்புறம் வித்யாவை பற்றி எப்படி யோசிக்க முடியும். மிகவும் தர்ம சங்கடம்தான். விக்னேஷ் என்ன செய்ய போகிறார்!!??

govindh
30-05-2010, 04:29 PM
விக்னேஷ் செய்த சத்தியத்தை....பாதுகாப்பாக....வரமாக்கும்....
வித்தையுடன் வரும் தேவதை -வித்யா.

இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

கீதம்
30-05-2010, 10:00 PM
எதிர்பார்த்திருந்த பெண் கதாபாத்திரம் வந்தாச்சு. இனி வித்யா பத்தின விஷயங்களை சீக்கிரம் சொல்லுங்க. கதையை அமைதியா ஆர்ப்பாட்டமில்லாம தெளிந்த நீரோடை போல கொண்டு போறீங்க. வாழ்த்துகள்.

எதிர்பார்த்துக்கொண்டிருந்தீர்களா? உங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்வாளா வித்யா? :) வாழ்த்துக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள் மதி.

கீதம்
30-05-2010, 10:04 PM
ஒரு சத்தியத்தால் அவனது நம்பிக்கையை தகர்த்துவிட்டாள் தாய்... வெடித்த மனதை ஒட்டவைக்க ஒருத்தி வந்துவிட்டாள். அவள் ஆறுதலளிப்பாளா இல்லையா என்பது உங்களது தொடரச்சியில் புரியும் என நினைக்கிறேன். தொடருங்கள்.

வாழ்த்துக்கள் கீதம்.

வாழ்த்துக்கு நன்றி அன்புரசிகன்.

வித்யா என்ன செய்யப்போகிறாள்? அடுத்த அத்தியாயத்திலிருந்து வரவிருக்கிறாள். தொடர்ந்து வந்து கண்காணியுங்கள்.

கீதம்
30-05-2010, 10:10 PM
சின்ன வயதிலிருந்து அம்மாவுக்காக எதையெல்லாம் இழந்திருக்கிறான்...அவை எதையுமே அம்ம தெரிந்துகொள்ளாமல்...மறைத்தும் வந்திருக்கிறான். ஆனால் அவன் பட்ட துயரத்துக்கெல்லாம் எந்தப் பலனும் இல்லாமல் போனதைப்போல....இந்த சத்தியம் அமைந்துவிட்டது.

விக்னேஷின் உள்ளக்குமுறலை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். அலைபாயும் மனது...ஒரு அன்புள்ளத்தைத் தேடிப்போயிருக்கிறது.....இனி வித்யாவின் வரவு..வீட்டில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமென்று பார்ப்போம்.

தொடருங்கள் கீதம்.

(வேண்டுகோளை ஏற்றமைக்கு நன்றி)

நாம் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கும் ஒருவர் நம்மேல் அதே அளவு நம்பிக்கை வைக்காவிடினும் பரவாயில்லை. நம்மை நம்பிக்கைத்துரோகி என்று நினைத்துவிட்டால்....நம் மனம் என்ன பாடுபடும்?

விக்னேஷின் பாலை வாழ்வில் சோலையாய் வந்தவள் வித்யா! அவளை அடுத்த அத்தியாயத்தில் அழைத்துவருகிறேன். தொடர்வதற்கு நன்றி சிவா.ஜி அண்ணா.
(அண்ணாவுக்கான காரணத்தை சபாஷ் சாந்தியில் பார்க்கவும்.)

கீதம்
30-05-2010, 10:12 PM
எதிர்பார்த்துக்கொண்டிருந்த பாத்திரம் கதையில் வந்தாயிற்று....இனி கதை மேலும் சூடாக இருக்கும்...

வாழ்த்துக்கள் கீதம்...

ஆகா! என்னிடம் சூடாக எதிர்பார்க்கத் துவங்கிவிட்டீர்களா? :)இயன்றவரை முயல்கிறேன். உங்கள் ஊக்கப்பின்னூட்டத்துக்கு நன்றி அகிலா.

கீதம்
30-05-2010, 10:14 PM
அம்மாவிற்குதான் சத்தியம் செய்து கொடுத்தாச்சே. அப்புறம் வித்யாவை பற்றி எப்படி யோசிக்க முடியும். மிகவும் தர்ம சங்கடம்தான். விக்னேஷ் என்ன செய்ய போகிறார்!!??

இதே தர்மசங்கடத்தில்தான் விக்னேஷ் இருக்கிறான். என்ன செய்யப்போகிறானென்று அறிய அவனைத் தொடருங்கள். நன்றி ராஜேஷ் அவர்களே.

கீதம்
30-05-2010, 10:16 PM
விக்னேஷ் செய்த சத்தியத்தை....பாதுகாப்பாக....வரமாக்கும்....
வித்தையுடன் வரும் தேவதை -வித்யா.

இருவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

வித்யாவின் குணநலனை முன்கூட்டியே கணித்துவிட்டீர்களா? கதையின் போக்கை நன்றாகவே கவனித்து வருகிறீர்கள்.

பின்னூட்டத்துக்கு நன்றி கோவிந்த்.

கீதம்
30-05-2010, 10:18 PM
அத்தியாயம் 9

வித்யா!

வித்யாவை காலம் தன் கண்களில் காட்டிய பொழுதை நினைத்துப் பார்க்கையிலேயே அவன் இதயம் சிறகடித்துப் படபடத்தது.

பிரபுவின் திருமணத்துக்காக கோவிலுக்குச் சென்றானே, அப்போதுதான் அவளைக் கண்டான். பிரபுவின் மற்ற நண்பர்களுடன் வந்திருந்தாள். பிரபுவின் தயவால் அறிமுகப்படலம் இனிதே முடிந்தது.

சந்தன நிறத்தில் அரக்கு பார்டர் அமைந்த, மிக மெல்லிய சரிகையோடிய பட்டுப்புடவை உடுத்தியிருந்தாள்.ஒற்றைப் பின்னலிட்டு அதன் நீளத்துக்கு மல்லிகைச் சரத்தைத் தொங்கவிட்டிருந்தாள். அவளுடைய சந்தன நிறத்துக்கு முன் அப்புடவை எடுபடவே இல்லை. கண்களில் அளவோடு மை தீட்டியிருந்தாள். நெற்றியில் ஒரு சிறிய கறுப்பு ஸ்டிக்கர் பொட்டு ஒய்யாரமாய் வீற்றிருந்தது.

உதட்டுச்சாயம் போன்ற இதர ஒப்பனைகள் ஏதுமற்று இயல்பான அழகுடன் இருந்தாள். எனினும் அங்கிருந்த பார்வைகள் யாவும் அவள்மீதே படிந்திருந்தன. அர்ச்சகர் கூட, அவள்தான் மணப்பெண் என்று நினைத்து மாலையை அவள் கையில் கொடுக்கப்போய், பின் தவறுக்காக வருந்தினார்.

கோவில் சந்திப்புக்குப் பிறகு பதிவுத் திருமணத்தின்போது மறு சந்திப்பு நிகழ்ந்தது.விக்னேஷைப் பார்த்ததும் அவளே வந்து பேசினாள். விக்னேஷுக்கு இருந்த இயல்பான கூச்சத்தால் அவன் அவளுடன் பேசுவதைத் தவிர்க்க முயன்றபோதும், அவள் வலிய வந்து பேசியது அவனுள் கிளர்ச்சியை உண்டாக்கவே செய்தது.

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள், சுந்தரிக்கு குழந்தை உண்டான செய்தி அறிந்து பிரபுவைப் பார்க்க, இனிப்பு வாங்கிக்கொண்டு அவன் அலுவலகத்துக்கு சென்றபோது நிகழ்ந்தது, அவர்களுக்கிடையேயான மூன்றாவது சந்திப்பு!

அலுவலகம் முடியும் நேரம் போனால் பிரபுவையும்பார்த்துவிட்டு, முடிந்தால் அவனுடன் அவன் வீட்டுக்குச் சென்று சுந்தரியைப் பார்த்து வாழ்த்திவரலாம் என்பது விக்னேஷின் திட்டம். அதன்படி பிரபுவின் அலுவலகம் சென்றபோது, இவன் உள்ளே நுழையவும், வித்யா வெளியில் வரவும் சரியாக இருந்தது.

இருவரும் "ஹாய்!" சொல்லிக்கொண்டனர்.

"என்ன திடீர்னு இந்தப்பக்கம்?" வித்யா ஆச்சர்யத்துடன் கேட்டாள்.

விக்னேஷ் விபரம் சொன்னதும் விடைபெற்றுச் சென்றுவிட்டாள்.

விக்னேஷ் நேரே பிரபுவின் இருப்பிடம் சென்றபோது அவன் மும்முரமாய் வேலையில் மூழ்கியிருந்தான்.

"என்னடா, வீட்டுக்குப் போற உத்தேசமில்லையா?"

பின்புறமாய்ச் சென்று முதுகில் தட்டினான்.

"ஏய்...விக்கி! என்னடா திடீர்னு?"

அவனும் ஆச்சர்யம் காட்டினான். ஸ்வீட் பாக்ஸை அவனிடம் கொடுத்துவிட்டு, சுந்தரியைப் பற்றி விசாரித்தான்.

"சுந்தரி எப்படி இருக்காங்க?"

"ம்! ரொம்ப நல்லா இருக்கிறாடா. அக்கம் பக்கம் எல்லார் கூடவும் நல்ல பழக்கம் வச்சுகிட்டா. நானே இந்த அளவுக்கு எதிர்பார்க்கலை. வீட்டுக்காரம்மாவும் தங்கம் தான். அதனால் இப்போதைக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை! இந்த உலகத்திலேயே இந்த நேரம் சந்தோஷமான மனிதன் யார்னா நான்தான்னு சொல்வேன்!"

"கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்குடா!"

"எல்லாத்துக்கும் நீங்கதான் டா காரணம். நண்பர்கள் உதவி இல்லைனா இத்தனையும் சாத்தியமான்னு எனக்குத் தெரியலை! ரொம்ப தேங்க்ஸ்டா!"

"டேய்...நமக்குள்ள என்னடா...."

"ஆ….மா……ம்! நீ… நிஜமாவே என்னைப் பார்க்கதான் வந்தியா…....இல்லே……..வேற யாரையாவது…...."

"ஏய்...என்ன புதுசா கதை விடறே…...உன்னைத் தவிர வேற யாரைப் பார்க்க வருவேன்?"

"இல்லே...வித்யா கொஞ்சநாளா உன்னைப் பத்தி விசாரிச்சுகிட்டே இருந்தாள். அவள்தான் ஒருவேள…….உன்ன வரச்சொன்னாளோன்னு……...."

"ச்சீ! ஏதாவது உளறாதேடா! நீ பாட்டுக்கு எதையாவது சொல்லப்போய்..எங்கம்மா காதுக்குப் போனால்....அவ்வளவுதான்!

"சும்மா சொன்னேன். அதுக்கே இப்படி வேர்க்குது?"

"கலாட்டா பண்ணாமல் வீட்டுக்கு கிளம்புற வழியைப் பாருப்பா!"

"சாரிடா, நண்பா! இன்னைக்குன்னு பாத்து கொஞ்சம் அர்ஜண்ட் வேலை வந்திடுச்சு! நான் முடிச்சுட்டு வர லேட்டாகும்னு சுந்தரிக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். நீ வேணும்னா வீட்டுக்குப் போய் அவளைப் பாத்துட்டுப் போயேன்!"

"பரவாயில்லைடா! இன்னொரு நாள் வரேன்! என் வாழ்த்துகளை அவங்ககிட்ட சொல்லிடு!"

விடைபெற்று வெளியில் வந்தான். வாசலில் வித்யாவைப் பார்த்து திடுக்கிட்டான்.

"என்னங்க, இங்கே நின்னுட்டிருக்கீங்க? அப்பவே புறப்பட்டீங்க, இன்னும் போகலையா?"

"உங்களுக்காகதான் காத்திட்டிருக்கிஏன்!"

"எனக்கா? எதுக்கு?" விக்னேஷுக்கு ஜிவ்வென்றிருந்தது.

"என் ஸ்கூட்டிக்கு மூடு சரியில்லை....கிளம்ப மாட்டேன்னு ஒரே அடம்! சரி, நீ இங்கேயே இரு, நான் போறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ஆட்டோ பிடிக்கலாமா, பஸ் படிக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கும்போது பைக் பிடிக்கலாம்னு தோணவே நின்னுட்டேன்."

அவள் அபிநயத்துடன் சொல்லி முடிக்க, விக்னேஷ் சிரித்துவிட்டான்.

"என்னது, பைக் பிடிக்கப்போறீங்களா?"

"ஏன் பிடிக்கக்கூடாதா? என்னை எங்க வீட்டில் இறக்கிவிட்டுடு, ப்ளீஸ்னு கெஞ்சிக் கேட்டால் உங்க பைக் என்னை இறக்கிவிடாதா?"

"பெண் என்றால் பேயே இரங்குமாம். இவ்வளவு அழகான பெண் கேட்டால் என் பைக் இறங்காதா…….சாரி……..இறக்கிவிடாதா?"

"அப்பாடா! ரொம்ப தேங்க்ஸ்!"

"உட்காருங்க, உங்க வீடு எங்க இருக்கு?"

அவள் லாவகமாய் ஏறி அமர்ந்தாள். முதன் முதலாய் ஒரு பெண்ணை ஏற்றிப் புண்ணியம் தேடிக்கொண்ட பைக்கை பெருமையுடன் பார்த்தான். அம்மாகூட இதுவரை இதில் அமர்ந்ததில்லை. ஒருமுறை முயன்றார். முடியவில்லை.

"என்னடா, இது? ஏறி உட்காரவே ரெண்டு ஆள் தேவைப்படுது! எனக்கு எப்பவும் போல ஆட்டோதான் லாயக்கு!" என்று அலுத்துக்கொண்டது நினைவுக்கு வந்தது.

இத்தனை நெருக்கத்தில் ஒரு பெண்ணின் மணமும் ஸ்பரிசமும் அவனைக் கிறங்கடித்தது. ஆனாலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு ஓட்டிச் சென்று அவளது வீடிருக்கும் தெருவின் முனையில் நிறுத்தினான்.

"என்ன, நிறுத்திட்டிங்க?"

"இன்னும் நாலுவீடுதானே? நடந்து போயிடுங்க!"

"அதுசரி! நான் என்ன திருட்டுத்தனமாவா உங்களோட பைக்கில வரேன்? ஏறும்போது எங்க ஆபிஸ் வாட்ச்மேனை சாட்சியாவச்சு ஏறினேன். இறங்கும்போது எங்க அப்பாவை சாட்சியா வச்சு இறங்கப்போறேன். ஓட்டுங்க!" என்று கட்டளையிட்டாள்.

இந்தப் பெண்ணுக்கு எத்தனைத் துணிச்சல்! ஒரு புதியவனுடன், அவன் பைக்கில் அமர்ந்துபோய் வீட்டு வாசலில் இறங்கினால் வீட்டார் என்ன சொல்வார்கள் என்ற பயம் துளியும் இல்லாமல் பேசுகிறாளே! அதிசயித்தான்.

வீட்டு வாசலில் ஒரு பெரியவர் நின்றிருந்தார்.

"என்னமா, உன் ஸ்கூட்டிக்கு என்னாச்சு?"

"என்னவோ கோளாறுப்பா! நாளைக்குதான் ஆபிஸ் வாட்ச்மேன்கிட்ட சொல்லி மெக்கானிக் ஷாப் அனுப்பணும்!"

"வாங்க, தம்பி, ஏன் வெளியிலயே நிக்கறீங்க?"

அவர் இவனை வரவேற்றார்.

"வாங்க, விக்னேஷ்!" வித்யாவும் அழைக்க, ஒருவித கலக்கத்துடனேயே உள்ளே போனான்.

"அப்பா! இவர் விக்னேஷ்! பிரபுவோட நண்பர். அவரைப் பார்க்க எப்பவாச்சும் எங்க ஆபிஸுக்கு வருவார். இன்னைக்கு வந்தப்போ எங்கிட்ட மாட்டிகிட்டார்!"

அவள் சிரித்தாள். விக்னேஷ் இன்னமும் பயம் தெளியாமல் அமர்ந்திருந்தான்.

எப்போது அவள் அப்பா, "டேய், உனக்கு எவ்வளவு கொழுப்பிருந்தா என் பொண்ணை பைக்கில ஏத்திகிட்டு சுத்தினதுமில்லாம, என் கண்முன்னாடியே அவளைக் கொண்டுவந்து இறக்கிவிடுவே! ஒரு பொண்ணு அழகா இருந்தாப்போதுமே! பின்னாலேயே அலைவீங்களே! இன்னொரு தடவ அவ கூப்பிட்டான்னு வந்தியோ.....தெரியும் சேதி!"
என்று மிரட்டப்போகிறாரோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

இவனை வரவேற்பறையில் உட்காரச் சொல்லிவிட்டு வித்யா உள்ளே போய்விட்டாள்.

அவர் இவனிடம், "வீடு வரைக்கும் கொண்டுவந்து விட்டதுக்கு ரொம்ப நன்றிங்க தம்பி!" என்றதுடன், " தம்பி, காபி குடிப்பீங்களா, டீ குடிப்பீங்களா?" என்று உபச்சாரம் செய்தார்.

அவன் பதில் சொல்லுமுன், வித்யா காபிக் கோப்பைகளுடன் அங்கு வந்தாள்.

"இந்தாங்க, எடுத்துக்கங்க, நீங்க காபிப் பிரியர்னு பிரபு சொல்லியிருக்கார்!"

அவள் தந்த காபியின் ருசி அவன் நாவுக்குப் பழக்கமான ருசியைக் கொண்டிருந்தது இன்னும் வியப்பைத் தந்தது.

பிரபு சொன்னது உண்மைதானோ? இவள் தன் விஷயத்தில் ஆர்வம் காட்டக் காரணம்? பிரமிப்பு மாறாதவனாய் காபியைக் குடித்து முடித்தான்.

விடைபெற்றவனிடம், வித்யாவின் அப்பா,

"தம்பி, அடிக்கடி வாங்க! பிரபுவுக்கு நண்பர்னா எங்களுக்கும் நண்பர்தான்! போயிட்டு வாங்க!" என்று வழியனுப்பினார்.

*********************************************************

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.மு.வ உரை:
இவளுடைய மை தீட்டிய கண்களில் உள்ளது இருவகைப்பட்ட நோக்கமாகும், அவற்றுள் ஒரு நோக்கம் நோய் செய்யும் நோக்கம், மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும்.

govindh
30-05-2010, 10:41 PM
வித்யா...விக்னேஷ்-க்கு காதல் நோயையும் ஏற்படுத்தி....
அதற்கு மருந்தாகவும் வரப் போகிறாள்...

அவள் வரவு....அவனுக்கு வரம் தான்....

வாழ்த்துக்கள்.....தொடருங்கள்.

மதி
31-05-2010, 01:20 AM
கஷ்டம் தான். சும்மா இருக்கறவன உசுப்பேத்தி. நாகலட்சுமி அம்மாளுக்கும் வித்யாவிற்கும் இனி முட்டிக்க போகுது. வித்யா விக்னேஷ் இடையிலான சந்திப்பை அழகான குறும்பு வசனங்களுடன் சொல்லி இருக்கின்றீர். மேலும் தொடருங்கள் அக்கா.

(சிவா.ஜி எனக்கும் அண்ணன் தான்.)

அன்புரசிகன்
31-05-2010, 01:50 AM
போறபோக்கில வித்தியா மேலயே லவ் வந்திடும் போல இருக்கு.. (நான் விக்கியச்சொன்னேன். :D) அவ்வளவு கச்சிதமான வர்ணனை..
ம்...... ஒரு படம் பார்க்கிறதாகவே ஃபீலிங்கு.... தொடருங்கள்.
வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
31-05-2010, 09:11 AM
ரொம்ப நல்லா வந்திருக்குங்க இந்த அத்தியாயம். வித்யாவின் காதலை வலியத் திணிச்சமாதிரியே தோணல. ஆனால்...விக்னேஷ் மேல் அவளுக்கு என்ன சாஃப்ட் கார்னர்ன்னு அடுத்த அத்தியாயங்கள்ல சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்.

பைக்ல சவாரி கேக்கற உரையாடல்களை ரொம்ப வித்தியாசமா அமைச்சதோட மட்டுமில்லாம்...வித்யாவோடக் கேரக்டரையும்...படிக்கிற*வங்க தெரிஞ்சிக்கிற மாதிரி எழுதியிருக்கிறது...நீங்க ஒரு தேர்ந்த எழுத்தாளர்ன்னு சொல்லுது.

மதி சொன்ன மாதிரி...சும்மா இருந்தவனையும் உசுப்பேத்தின நாகலட்சுமியம்மாவுக்கு அவன் என்ன அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போறானோ....

தொடருங்க தங்கையே.

பா.ராஜேஷ்
31-05-2010, 05:03 PM
ஆஹா.. மிக அருமையாக வந்துள்ளது இந்த அத்தியாயம். ஏற்றம் இறக்கத்துடன் கவனித்து மிக அழகாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...

கீதம்
31-05-2010, 10:54 PM
வித்யா...விக்னேஷ்-க்கு காதல் நோயையும் ஏற்படுத்தி....
அதற்கு மருந்தாகவும் வரப் போகிறாள்...

அவள் வரவு....அவனுக்கு வரம் தான்....

வாழ்த்துக்கள்.....தொடருங்கள்.

பதிந்தவுடன் பின்னூட்டமிடும் உங்கள் ஊக்கமும் ஆதரவும் கண்டு நெகிழ்கிறேன். மிகவும் நன்றி, கோவிந்த்.

கீதம்
31-05-2010, 10:57 PM
கஷ்டம் தான். சும்மா இருக்கறவன உசுப்பேத்தி. நாகலட்சுமி அம்மாளுக்கும் வித்யாவிற்கும் இனி முட்டிக்க போகுது. வித்யா விக்னேஷ் இடையிலான சந்திப்பை அழகான குறும்பு வசனங்களுடன் சொல்லி இருக்கின்றீர். மேலும் தொடருங்கள் அக்கா.

(சிவா.ஜி எனக்கும் அண்ணன் தான்.)

உங்கள் விமர்சனத்துக்கு நன்றி மதி. நாகலட்சுமி அம்மாவும் வித்யாவும் எங்கே எப்படி முட்டிக்கிறார்கள் என்று பார்ப்போம், தொடர்ந்து வாங்க.

கீதம்
31-05-2010, 10:58 PM
போறபோக்கில வித்தியா மேலயே லவ் வந்திடும் போல இருக்கு.. (நான் விக்கியச்சொன்னேன். :D) அவ்வளவு கச்சிதமான வர்ணனை..
ம்...... ஒரு படம் பார்க்கிறதாகவே ஃபீலிங்கு.... தொடருங்கள்.
வாழ்த்துக்கள் கீதம்.

காதல் வசனங்கள் எனக்கும் கைவருகின்றன என்பதை உங்கள் விமர்சனம் சொல்லுகிறது. மிக்க நன்றி அன்புரசிகன்.

கீதம்
31-05-2010, 11:00 PM
ரொம்ப நல்லா வந்திருக்குங்க இந்த அத்தியாயம். வித்யாவின் காதலை வலியத் திணிச்சமாதிரியே தோணல. ஆனால்...விக்னேஷ் மேல் அவளுக்கு என்ன சாஃப்ட் கார்னர்ன்னு அடுத்த அத்தியாயங்கள்ல சொல்லுவீங்கன்னு நினைக்கிறேன்.

பைக்ல சவாரி கேக்கற உரையாடல்களை ரொம்ப வித்தியாசமா அமைச்சதோட மட்டுமில்லாம்...வித்யாவோடக் கேரக்டரையும்...படிக்கிற*வங்க தெரிஞ்சிக்கிற மாதிரி எழுதியிருக்கிறது...நீங்க ஒரு தேர்ந்த எழுத்தாளர்ன்னு சொல்லுது.

மதி சொன்ன மாதிரி...சும்மா இருந்தவனையும் உசுப்பேத்தின நாகலட்சுமியம்மாவுக்கு அவன் என்ன அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கப்போறானோ....

தொடருங்க தங்கையே.

உங்கள் சந்தேகத்துக்கான விடை வந்துகொண்டே இருக்கிறது. தொடர்ந்து பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் உங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன், அண்ணா.

கீதம்
31-05-2010, 11:02 PM
ஆஹா.. மிக அருமையாக வந்துள்ளது இந்த அத்தியாயம். ஏற்றம் இறக்கத்துடன் கவனித்து மிக அழகாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள் ...

உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி ராஜேஷ்.

கீதம்
31-05-2010, 11:05 PM
அத்தியாயம் 10

வித்யாவை சந்திக்கும் வாய்ப்புகள் அதன்பின் தானாகவே அமைந்தன. அந்தச் சந்திப்புகள் இருவரிடையே ஒரு இணக்கத்தை உண்டாக்கியிருந்தன. வித்யாவின் சிரித்த முகமும், கலகலப்பான பேச்சும், எல்லோரிடமும் சகஜமாய்ப் பழகும் தன்மையும் விக்னேஷை வசீகரித்திருந்தன. அதற்கு நேரெதிராக இவனது கூச்ச சுபாவமும், பெண்களைக் கண்டால் ஒதுங்கிச் செல்லும் பாங்கும் வித்யாவை ஈர்த்தன.

வித்யா, விக்னேஷின் கரங்களைப் பற்றிக்கொண்டு நட்பின் எல்லையைத் தாண்டி காதல் தேசத்துக்குள் நுழைய பெருமுயற்சி மேற்கொண்டிருந்தாள். விக்னேஷுக்கும் அதில் பெருமளவு விருப்பமிருந்தாலும், அம்மாவை எண்ணி பயந்து, வித்யாவிடமிருந்து தன் கைகளை விடுவிக்கப் போராடிக்கொன்டிருந்தான்.

"விக்கி, உங்கம்மாகிட்ட என்னை அழைச்சிட்டுப்போங்க, அவங்க என்னை ஏத்துக்கிட்டா, உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லைதானே?"

"அதில்லை..வித்யா...எங்கம்மாவுக்கு பொஸஸிவ்னஸ் அதிகம். அவங்க உன்னை எதாவது தவறாப் பேசிட்டா என்ன பண்றதுன்னுதான் பயப்படறேன்! அதுவுமில்லாம என்மேல் அவங்க வச்சிருக்கிற நம்பிக்கையும் பாழாயிடும்!

"விக்கி! உங்க அம்மா மேல் நீங்க வச்சிருக்கிற அன்பும் மதிப்பும்தான் என்னை உங்க பக்கம் திரும்பவச்சுது! எங்க அப்பாகிட்ட உங்களைப் பத்தி சொன்னேன்.

தன்னைப் பெத்தவளோட உணர்வுகளை மதிச்சு, அவகிட்ட அன்பா இருக்கிறவன், தன் பெண்டாட்டிகிட்டயும் அதே அளவு அன்போடயும் புரிதலோடயும் இருப்பான்னு எங்க அப்பா சொன்னார். அவருக்கு உங்களை ரொம்பப் பிடிச்சுபோச்சு! உங்க அம்மாவைப் பார்த்து பேசவும் தயாரா இருக்கார். நீங்கதான் பிடிகொடுக்க மாட்டேங்கறீங்க!"

"என்னை மன்னிச்சிடு, வித்யா! என் அம்மாகிட்ட உன்னைப் பத்திப் பேசற துணிச்சல் எனக்கில்லை. இந்த விஷயத்தில் நான் ஒரு கோழைதான். எனக்கு என் அம்மாவின் சந்தோஷம்தான் முக்கியம்! அதற்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், எதை வேணும்னாலும் இழப்பேன்!"

"விக்னேஷ்! முயற்சியே செய்யாமல், முடியாதுன்னு முடிவெடுத்தால் எப்படி?"

"ப்ளீஸ், வித்யா! என்னை வற்புறுத்தாதே! நீ உங்க வீட்டில் சொல்லி வேற நல்ல பையனாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ!"

"இல்லை, விக்னேஷ்! உங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொன்னால் ஒத்துக்கறேன், இல்லே...உங்க அம்மாவுக்கு என்னைப் பிடிக்கலைன்னாலும் ஒத்துக்கறேன். எதுவுமில்லாமல் இப்படி சொல்றது சரியாப்படலை! நல்லா யோசிச்சுப் பாருங்க!”

"சாரி, வித்யா!"

"சரி! இனிமேல் நான் இந்தப் பேச்சையே எடுக்கமாட்டேன்!"

வித்யா அதன்பின் விக்னேஷைப் பார்த்தாலும் பேச்சு பொதுவாகத்தான் இருக்கும். இவனும் தன் இயல்பான உணர்வுகளுக்கு ஒரு இரும்பு முகமூடியை வலியப் பொறுத்திக்கொண்டு அவளிடம் பேசுவான்.

எல்லாம் எதற்காக? அம்மாவின் நம்பிக்கையைக் கெடுத்துவிடக்கூடாது என்ற பயம்தானே? ஆனால்....ஆனால்.....இன்று அம்மா அவன் மேல் நம்பிக்கையில்லாமல் கையிலடித்து சத்தியம் செய் என்கிறார்.

சே! முதல் முறையாய் அம்மாவின் மேல் வெறுப்பு வந்தது. தாய்மை பிரதிபலன் பாராதது என்று சொல்வார்களே! ஆனால் அம்மா என் எதிர்காலத்தையே அல்லவா என்னிடமிருந்து பறித்துக்கொண்டார்? என்றாவது ஒருநாள் அம்மாவிடம் என் காதலைச் சொல்லி அனுமதி பெறலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் இடி விழுந்துவிட்டதே!

தன் அன்பை புரிந்துகொள்ளாத அவருக்காக தான் ஏன் தன் சுகத்தை விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என்று தோன்றியது.
இனியும் அவர் பேச்சை மதிக்கவேண்டிய அவசியம் என்ன? இத்தனைநாள் மதித்து நடந்ததற்கு கிடைத்த பலன் என்ன? நம்பிக்கையின்மை!

நீயும் ஒருநாள் உன் நண்பனைப்போல்தான் செய்வாய் என்கிற அவச்சொல்! நானும் அவனும் ஒன்றா உங்களுக்கு? நான் உங்கள்மீது என் உயிரையே வைத்திருக்கிறேனே!

நினைக்க நினைக்க நெஞ்சம் பொருமியது. தாயின் இறக்கைக்குள் அடைபட்ட கோழிக்குஞ்சாய் வாழ்ந்தது போதும்; பரந்து விரிந்த வானில் ஒரு பருந்தைப் போல் எவருக்கும் அஞ்சாமல் சிறகுகளை அகலவிரித்துப் பறக்கவேண்டும்! வட்டமிட்டுப் பறந்து வானில் வலம் வரவேண்டும்.

என் வாழ்க்கையை நான் வாழவேண்டும். என்மேல் காதல் கொண்டுள்ள வித்யா என்னும் அழகு தேவதையை, அன்பின் திருவுருவத்தை என் வாழ்க்கைத் துணையாய் ஏற்கவேண்டும். ஆனால்...ஆனால்......

அம்மாவிடம் செய்த சத்தியம் நினைவுக்கு வந்தது. என்மேலிருந்த நம்பிக்கை குலையுமளவுக்கு நான் நடந்திருந்தாலன்றி, அவர் மனதில் போராட்டம் உருவாக வாய்ப்பு இல்லை. அப்படியென்றால்....தவறு என்னுடையதுதானோ? அவரது உள்ளத்தில் இத்தனைநாள் என்ன இருக்கிறது என்று அறியமுடியாத பிள்ளையாய் இருந்திருக்கிறேனா?

அம்மாவே உலகம் என்று நான் வாழ்ந்ததுபோல்தானே அவரும் மகனே உலகம் என்று வாழ்ந்து வருகிறார். எனக்காவது அலுவலகம், வேலை என்று வெளியில் நாலுபேரைப் பார்த்துப் பேசமுடிகிறது. அவரோ, எந்நேரமும் வீட்டுக்குள் முடங்கி, தன் மகனுக்குப் பிடித்த உணவுவகைகளைச் செய்வதிலும், கை கால் வலிகளுக்கு மருத்துவம் செய்வதிலுமே காலத்தைக் கழித்துவிடுகிறார்.

பத்திரிகைகளும், புத்தகங்களும் படிக்கும் வழக்கம் இருக்கிறதாலேயே ஒரளவு பொழுது கழிந்துவிடுகிறது. அதற்காகவே வாடகை புத்தகநிலையத்தில் ஆயுட்கால உறுப்பினராகிவிட்டார்.அதுவும் இல்லையென்றால் ....?

அம்மா வேறெதிலும் ஆர்வம் காட்டிப் பார்த்ததில்லை.ஒரு கோயிலுக்கும் செல்வதில்லை. அக்கம்பக்கம் யார் வீட்டு, விசேஷங்களுக்கும் போவதில்லை. எவரையும் வீட்டுக்கும் அழைப்பதில்லை. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கைதான். அவரின் நிலையை நினைத்து பரிதாபம் எழுந்தது.

அவர் என்னை நம்பினாலும், நம்பாவிட்டாலும் என் தாய்! அவர் தம் பாதையிலிருந்து விலகலாம். நான் விலகுவது எப்படி சரியாகும்? நான் நானாக இருப்பதே அவர் நம்பிக்கையை மீண்டும் பெற ஒரே வழி!

கடவுளே....எனக்கு மனோதிடத்தைக் கொடு! பொறுமையைக் கொடு!

என் அம்மாவின் மனம் மாறும்வரை என்னை பொறுமை காக்கவிடு!

மனம் லேசானதுபோல் தோன்ற நிம்மதியாய் உறங்கினான்.

******************************************************************

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

மு.வ உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து,
மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.

அன்புரசிகன்
01-06-2010, 01:05 AM
ம்............... இது தான் பலர் செய்யும் தவறு. இப்படியான விக்னேஷ்கள் உள்ளதால் தான் பல இடங்களில் வாயுஅடுப்பு வெடிக்கிறது. மாமியார் மருமகள் பிரச்சனை உருவாகிறது...

அன்னாட வாழ்க்கையில் கேள்விப்படும் சம்பவங்களை திரட்டி தருவது போல் அவ்வளவு நேர்த்தியாக தருகிறீர்கள். தொடருங்கள் கீதம்.

மதி
01-06-2010, 02:59 AM
மனப்போராட்டத்தில் விக்கி.. சிக்கல் தான். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்பிகிறான். எப்படித் தெளிகிறான்? பார்ப்போம்.

தினம் ஒரு அத்தியாயம் எழுதும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும் கீதம். தொடர்ந்து எழுதுங்கள்.

சிவா.ஜி
01-06-2010, 05:24 AM
அநியாயத்துக்கு அம்மா கோண்டுவா இருக்கானே விக்கி. அம்மாமேல பாசமும், அக்கறையும் தேவைதான்....ஆனால்...அது தன்னுடைய வாழ்க்கையையேக் கேள்விக்குறியாக்கிவிடுமளவுக்கு இருப்பதுதான்...பிரச்சனை.

கூடிய விரைவில் மனதிடம் பெற்று உறுதியான முடிவெடுக்க வேண்டும். அல்லது வித்யாவின் காதலும், விக்கிமேல் கொண்டிருக்கும் நல்லெண்ணமும்....பயனற்றதாய் போய்விடும்.

மன உணர்வுகளை உள்ளது உள்ளபடி எழுதும் கலையில் நீங்க டாக்டரேட் வாங்கிட்டீங்க கீதம்....அருமையா கொண்டுபோறீங்க.

தொடருங்க...

பா.ராஜேஷ்
01-06-2010, 06:53 AM
விக்னேஷ் இவ்வளவு சிந்திப்பது போல், அவரது அம்மாவும் சிந்தித்தால் நன்றாக இருக்குமே!!! விக்னேஷின் மனப் போராட்டத்தை மிக அருமையாக வெளிப் படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

கீதம்
01-06-2010, 10:03 PM
ம்............... இது தான் பலர் செய்யும் தவறு. இப்படியான விக்னேஷ்கள் உள்ளதால் தான் பல இடங்களில் வாயுஅடுப்பு வெடிக்கிறது. மாமியார் மருமகள் பிரச்சனை உருவாகிறது...

அன்னாட வாழ்க்கையில் கேள்விப்படும் சம்பவங்களை திரட்டி தருவது போல் அவ்வளவு நேர்த்தியாக தருகிறீர்கள். தொடருங்கள் கீதம்.

நன்றி, அன்புரசிகன். நான் தான் முதலிலேயே சொன்னேனே, நடைமுறை வாழ்வின் பிரதிபலிப்பே இக்கதை என்று. தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி.

கீதம்
01-06-2010, 10:06 PM
மனப்போராட்டத்தில் விக்கி.. சிக்கல் தான். தெளிவான முடிவு எடுக்க முடியாமல் குழம்பிகிறான். எப்படித் தெளிகிறான்? பார்ப்போம்.

தினம் ஒரு அத்தியாயம் எழுதும் உங்களைப் பாராட்டியே ஆக வேண்டும் கீதம். தொடர்ந்து எழுதுங்கள்.

மிகவும் நன்றி, மதி. தினம் ஒரு அத்தியாயம் சவால்தான். கதையின் போக்கும் முடிவும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் எழுதுவது சாத்தியமாகிறது.

கீதம்
01-06-2010, 10:10 PM
அநியாயத்துக்கு அம்மா கோண்டுவா இருக்கானே விக்கி. அம்மாமேல பாசமும், அக்கறையும் தேவைதான்....ஆனால்...அது தன்னுடைய வாழ்க்கையையேக் கேள்விக்குறியாக்கிவிடுமளவுக்கு இருப்பதுதான்...பிரச்சனை.

கூடிய விரைவில் மனதிடம் பெற்று உறுதியான முடிவெடுக்க வேண்டும். அல்லது வித்யாவின் காதலும், விக்கிமேல் கொண்டிருக்கும் நல்லெண்ணமும்....பயனற்றதாய் போய்விடும்.

மன உணர்வுகளை உள்ளது உள்ளபடி எழுதும் கலையில் நீங்க டாக்டரேட் வாங்கிட்டீங்க கீதம்....அருமையா கொண்டுபோறீங்க.

தொடருங்க...

நம் அன்றாட வாழ்வில் உறவுகளுக்குள் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு ஒருவர்மேல் மற்றவர் வைத்திருக்கும் அதீத அன்பே காரணம் என்று உணர்ந்தேன். (ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதுபோல் ) அதைக் கதையாக்கினேன். அதனால் சம்பவங்களைவிடவும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து கதையை நகர்த்துகிறேன்.

உங்கள் வாயால் பாராட்டுப் பெறுவதை பெருமையாக நினைக்கிறேன். தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு நன்றி, அண்ணா.

கீதம்
01-06-2010, 10:12 PM
விக்னேஷ் இவ்வளவு சிந்திப்பது போல், அவரது அம்மாவும் சிந்தித்தால் நன்றாக இருக்குமே!!! விக்னேஷின் மனப் போராட்டத்தை மிக அருமையாக வெளிப் படுத்தி உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

எல்லோரும் யோசிக்க ஆரம்பித்துவிட்டால்தான் பிரச்சனையே இல்லையே! பாராட்டுக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி ராஜேஷ்.

கீதம்
01-06-2010, 10:15 PM
அத்தியாயம் 11

பிரபு வீட்டுக்குப் போகும் வழியில் பூக்காரம்மாவிடம் மூன்று முழம் கனகாம்பரமும், பக்கத்துக் கடையில் கொஞ்சம் புளிப்பு மிட்டாயும் வாங்கிக்கொண்டான். சுந்தரிக்கு இப்போதெல்லாம் மல்லிகைப்பூவின் வாசமே வயிற்றைப் புரட்டி எடுக்கிறதாம்.

பூ மட்டுமில்லை, பழ வாசம், கவுச்சி எதுவுமே பிடிக்காமல் போய்விட்டது. மசக்கை படுத்தும் பாட்டை இவனால் பார்க்கச் சகிக்கவில்லை. சரியாக சாப்பிடுவதுமில்லை. எதைச் சாப்பிட்டாலும் வாந்தி.....வாந்தி.....வாந்திதான்!

டாக்டரிடம் காட்டினால் இது சகஜம்தான் என்று கூறி வாந்தி நிறுத்த மாத்திரை தந்தார். அதையும் வாந்தியெடுத்துவிடுகிறாள். சுந்தரியைப் பார்க்கப் பார்க்க பாவமாய் இருந்தது. அவளை வேலை எதுவும் செய்யாமல் சும்மா இரு என்றாலும் கேட்பதே இல்லை. . கஷ்டப்பட்டு எதையாவது சமைத்துவிடுகிறாள்.
வேலைக்காரப் பெண் வருவதற்குள்ளாகவே எல்லா வேலைகளையும் முடித்துவிடுகிறாள்.

ஹும்! இன்னும் எத்தனைக் காலமோ இந்த அவஸ்தை? பொதுவாக நான்கு அல்லது ஐந்து மாதத்துடன் வாந்தி நின்றுவிடுமாம். இவளுக்கோ ஏழாவது மாதம் வரை தொடர்ந்து பாடாய்ப் படுத்துகிறது.

இப்படியொரு வேதனையை அவள் அனுபவிக்கவேண்டுமென்று முன்பே தெரிந்திருந்தால் குழந்தைப்பேற்றைக் கொஞ்சகாலம் ஒத்திப் போட்டிருந்திருக்கலாம். குழந்தை பிறந்தால் இன்பம் இரட்டிப்பாகுமே என்று நினைத்தால் அது வருவதற்கு முன் இப்படி படுத்துகிறதே அவளை?

அப்பப்பா! போதும்! இந்த ஒரு குழந்தையுடன் போதுமென்று முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இன்னொரு முறை சுந்தரி இப்படித் தவிப்பதைப் பார்க்க என்னால் முடியாது.

பிரபு முடிவெடுத்தவனாய் வண்டியை வேகம் கூட்டி வீடு வந்திறங்கினான்.

வாசலில் நின்றவண்ணம்,வீட்டுக்காரம்மா எதிர்வீட்டுப் பெண்மணியுடன் பேசிக்கொண்டிருந்தார். இவனைக் கண்டதும் புன்னகைத்து ஒதுங்கி வழி விட்டார்.

பிரபுவின் போர்ஷன் மாடியில் இருந்தது. வீட்டுக்காரர்கள் வயதானவர்கள் என்பதால் கீழ்ப்பகுதியில் இருந்துகொண்டு இரண்டு அறைகள் கொண்டிருந்த மாடிப்பகுதியை வாடகைக்கு விட்டிருந்தனர். அவர்களுக்கு இரண்டுமகன்கள். இருவரும் அமரிக்கக் குடியுரிமை பெற்று அங்கேயே குடும்பத்துடன் தங்கிவிட்டனர். மூன்று வருடத்துக்கு ஒருமுறை வந்து போவார்கள்.

பிள்ளைகள் தங்கள் கூடவே இல்லாத ஏக்கம் அவ்வப்போது அவர்கள் பேச்சில் வெளிப்படும். அதனாலோ என்னவோ, பிரபுவையும், சுந்தரியையும் தங்கள் பிள்ளைகள் போலவே பார்த்து எல்லா வசதிகளும் செய்துகொடுத்தனர்.

காலை பத்து மணிக்கு தெருக்குழாயில் நல்ல தண்ணீர் வரும். பிரபு தனியாளாய் இருந்தபோது எந்தப் பிரச்சனையும் இல்லாமல் இருந்தது. அவனுக்குத் தேவை ஒரு குடம் தண்ணீர். வீட்டுக்காரம்மாதான் பிடித்து வைத்திருப்பார். இவன் வந்ததும் மேலே எடுத்து வருவான்.

சுந்தரி வந்தபிறகு, கீழ் வீட்டில் வேலை செய்யும் சாந்தியையே தங்களுக்கும் பேசிக்கொண்டான். அவளே இரண்டு குடத்தில் தண்ணீர் பிடித்து மேலே கொண்டுவந்து வைத்துவிடுவாள்.

சாந்தியின் குழந்தைக்கு முடியவில்லை என்று ஒருவாரமாய் அவள் வேலைக்கு வரவில்லை. அதனால் குடத்தை, வேலைவிட்டு வந்து மாடிக்கு எடுத்துவருவதாக பிரபு சொல்லியிருந்தாலும், சுந்தரியால் அதுவரை பொறுமை காக்க முடியாது. தானே கொண்டுவந்துவிடுவாள்.

கர்ப்பமான பிறகு குடத்தைத் தூக்காதே என்று எத்தனை முறை கூறினாலும் கேட்பதில்லை. படியேறும்போது மயக்கம் வந்துவிட்டாலோ, தடுமாறிவிட்டாலோ என்னாவது? அவள் கேட்பதே இல்லை.

இன்றும் வராந்தாவில் குடங்களைக் காணவில்லை. பிரபு பார்வையை அங்குமிங்கும் தவழவிடுவதைப் பார்த்த வீட்டுக்காரம்மா குறிப்பறிந்து வாய்திறந்தார்.

"தம்பீ! கொடத்த தானே தேடுறீங்க? சொல்ல சொல்ல கேக்காம சுந்தரிப்பொண்ணு அப்பவே எடுத்துட்டுப் போயிடுச்சுங்களே! எங்க வீட்டய்யா கூட, தான் கொண்டுவந்து தரேன்னு சொன்னாரு! வேணாமின்னு சொல்லிடுச்சு!"

"அப்படியா?"

"நீங்க கொஞ்சம் சொல்லி வைங்க! மாசமா இருக்கு! ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடப்போவுது!"

"சரிம்மா, சொல்றேன்!"

மாடியேறியதும் தன் கையிலிருந்த பூப்பொட்டலத்தை கட்டிலில் வீசினான்.

"என்னங்க, எப்ப வந்தீங்க?"

"உனக்கு எத்தன தடவ சொல்றது? அறிவில்லே?"

"என்னாச்சுன்னு இப்படிக் கத்துறீங்க?"

"எதுக்கு தண்ணிக்குடத்தை எடுத்துட்டு மாடி ஏறுறே?"

"அதுக்குதானா? நான்கூட என்னமோன்னு நெனச்சு பயந்திட்டேன்! நீங்க இப்படிக் கத்துறதப் பாத்தா நாம ரெண்டுபேரும் சண்டை போடறதா அக்கம்பக்கத்தில நெனச்சிப்பங்க!"

"பேச்ச மாத்தாதே! நான் கோபமாத்தான் இருக்கேன்!"

"ஏங்க, பொழங்குறதுக்கு தண்ணி வேணாமா? அதுக்குதான் எடுத்திட்டு வந்தேன். நான் செய்யாத வேலையா? இதெல்லாம் என்னா கொடம்? நம்ம ஊர்ல இருக்குமே...எப்பா...எவ்ளோ பெரிசு...அதையெல்லாம் நான் தான் தூக்குவேன். என்னவோ பச்சப்புள்ளயாட்டம் இத்தனூண்டு இருக்கு, இதுக்குப் போய் ஆர்ப்பாட்டம் பண்றீங்களே!"

அவள் அலட்சியமாய்ச் சொல்ல பிரபுவுக்கு மேலும் கோபம் வந்தது.

"இங்கே பார்! அந்தக்கதையெல்லாம் அப்போ! இப்போ நீ என் மனைவி! குழந்தையை சுமந்துகிட்டு இருக்கிற! சும்மா வாயாடம நான் சொல்றதை செய்!"

"அடேங்கப்பா! என்னா கோவம் வருது உங்களுக்கு?"

"பின்னே, சொல்லச் சொல்லக் கேக்காம செஞ்சா கோவம் வராதா?"

"சரி..சரி...இனிமேல் தூக்கலை. அப்படி தண்ணி தேவைப்பட்டா.... , கீழ வந்து கிண்ணத்தில் எடுத்துட்டுப் போறேன்!"

"அதுகூட வேணாம்! நீ படியேறி இறங்கவே வேணாம்! வேலையெல்லாம் ஒத்திப்போடு! நான் வந்ததுக்கு அப்புறம் செஞ்சுக்கலாம்."

"இது ரொம்ப நல்லாயிருக்கே?"

சுந்தரி மேவாயில் கைவைத்து, தலைசாய்த்துச் சிரித்தாள்.

"நான் சீரியஸா சொல்றேன், விளையாடாதே!"

"சரி. இனிமே நீங்க சொன்னபடியே செய்யிறேன்"

"..............."

"அதான் ..சரின்னு சொல்லிட்டேனே! கொஞ்சம் சிரிக்கிறது...."

"ஈ……...."

"வேணாம், வேணாம், உம்மணாமூஞ்சியே நல்லாயிருந்ததுது."

அவன் சிரித்தான். அவள் தோளில் சாய்ந்து தன் பெருத்த வயிறு குலுங்க அவளும் சிரித்தாள்.

ஏழாம் மாத இறுதியில் சுந்தரிக்கு வளைகாப்பு நடந்துமுடிந்தது. அக்கம்பக்கத்தை அழைத்து, மிக விமரிசையாக வளைகாப்பு நிகழ்த்தி முடித்தார் வீட்டுக்காரம்மா. பிரபு சுந்தரி கதை அவர்களுக்குத் தெரிந்திருந்ததால், அவர்களே முன்னின்று எல்லா ஏற்பாடுகளும் செய்து அச்சுபகாரியத்தை நிகழ்த்தினர். சுந்தரிக்கும் இதில் மிகவும் சந்தோஷம்.

விக்னேஷ், அம்மாவை அழைத்தபோது, பிடிவாதமாய் வர மறுத்துவிட்டார். அம்மா போய்ப் பார்த்து ஏதாவது ஆலோசனைகள் சொல்வார்; ஆறுதல் சொல்வார் என்று எதிர்பார்த்தான். அம்மா பிடிவாதமாக இடத்தைவிட்டு நகரமாட்டேன் என்று விட்டார். அவனுக்கு அம்மாவின்மேல் வருத்தம்தான். ஆனாலும், அவர் உடல்நிலையைக் காரணம் காட்டி, அம்மாவால் படியேற இயலாது என்று சொல்லி சுந்தரியின் கேள்விகளிலிருந்து தப்பித்துக்கொண்டான்.

அங்கு போயிருந்தபோதுதான் பிரபு ரகசியமாய் ஒரு விஷயம் சொன்னான். ஊர்க்காரப்பையன் ஒருவனை சமீபத்தில் சந்திக்க நேர்ந்ததாம். பிரபுவின் பெற்றோர் இன்னும் இவன்மீதும், சுந்தரி மீதும் கோபமாக இருக்கிறார்களாம். சுந்தரியின் பெற்றோரை தரக்குறைவாகப் பேசியதால், சுந்தரியின் தம்பி அவர்களை எதிர்க்க, அவனை ஆள்வைத்து அடித்து, அதனால் ஊருக்குள் ஜாதிப்பிரச்சனையாகிவிட்டதாம்.

பிரபுவின் பெற்றோரின் தொல்லையும், துன்புறுத்தலும் தாங்காமல் சுந்தரியின் பெற்றோரும், தம்பியும் ஊரைவிட்டே போய்விட்டதாகவும், எங்கு போனார்கள் என்று எந்த விவரமும் தெரியவில்லை என்றும் சொல்லக்கேட்க, விக்னேஷுக்கு மிகவும் வேதனையாய் இருந்தது.

இந்த விவரம் சுந்தரிக்குத் தெரியாது என்றும், குழந்தை பிறந்தபிறகு அவளிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்திருப்பதாகவும் சொன்னான்.

***************************************************************


மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.

மு.வ உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர்.

govindh
01-06-2010, 10:21 PM
பாசம்-பலனை எதிர்பார்க்காது.
பாசத்தால் பரிதவிக்கிறான் விக்னேஷ்.
அடுத்த அத்தியாயத்தில் மனக்குழப்பம் தெளிவடையும் என எதிர்பார்க்கிறேன்.

(பத்தாம் அத்தியாயம் இப்போது தான் படித்தேன்)

govindh
01-06-2010, 10:35 PM
பிரபு - சுந்தரி ஊடலையும் நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

கதை அமைப்பு - நிகழ்வுகள் : பரவசம்.
வாழ்த்துக்கள் .....தொடருங்கள்.

கீதம்
01-06-2010, 10:47 PM
விட்டிருந்த இரண்டு அத்தியாயங்களையும் படித்து உடனுக்குடன் பின்னூட்டமிட்டு ஊக்குவிக்கும் உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி, கோவிந்த்.

சிவா.ஜி
02-06-2010, 06:14 AM
'மங்கலம் என்ப மனை மாட்சி' சுந்தரியின் நல்ல பண்புதான்...அவளது இல்லறத்தை நல்லமுறையில் நடத்துகிறது. வீணான..டாம்பீக அழகுக்கும், ஆஸ்திக்கும் ஆசைப்பட்டு குணமில்லாதப் பெண்ணைத் திருமணம் செய்து கஷ்டப்படுவதைவிட...நல்ல குணமுள்ளப் பெண்ணைக் கைப்பிடித்தால் இல்லறம் இனிக்கும் என்று...பிரபு, சுந்தரியின் வாழ்க்கையைக் காட்டிச் சொல்லும் கருத்து அருமை.

சுந்தரியின் குடும்பத்தின் நிலையை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது. பாவம்...இந்த மேல்மட்ட பழிவாங்கல் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நீடிக்குமோ...

தொய்வில்லாமல்...தொடர்கிறது...தொடருங்கள் தங்கையே...

மதி
02-06-2010, 06:33 AM
மிகவும் நன்றி, மதி. தினம் ஒரு அத்தியாயம் சவால்தான். கதையின் போக்கும் முடிவும் முன்பே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால் எழுதுவது சாத்தியமாகிறது.
சைட் கேப்பில குத்திக்கிட்டீங்க... குத்தமுள்ள மனசு குறுகுறுக்குதுல.. :eek::eek::eek:
ச்சும்மா.. தமாஷுக்கு..:icon_b:

மதி
02-06-2010, 07:27 AM
அழகா போகுது கதை.. காணாமல் போன சுந்தரியின் பெற்றோர் கிடைப்பார்களா?? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரபு சுந்தரியை கவனித்து கொண்டது ரசிக்கும் விதத்தில் இருந்தது.

அன்புரசிகன்
02-06-2010, 11:19 AM
கணவன் மனைவியின் ஊடலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். விக்னேஷ் அம்மா மாறுவாரா?? முடியாது போலவே உள்ளதே... தொடருங்கள்...

பா.ராஜேஷ்
02-06-2010, 02:11 PM
இந்த அத்தியாமும் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். விக்னேஷ் அம்மா பெயருக்காவது வந்து பார்த்திருக்கலாம்... வராததனால் அவர் எப்படி எப்போது மாறுவார் என ஆவல் அதிகமாகிறது.. சுந்தரியின் பெற்றோர் பற்றி ஒரு அத்தியாயம் வரும் போலிருக்கிறதே... தொடருங்கள்...

கீதம்
02-06-2010, 10:08 PM
'மங்கலம் என்ப மனை மாட்சி' சுந்தரியின் நல்ல பண்புதான்...அவளது இல்லறத்தை நல்லமுறையில் நடத்துகிறது. வீணான..டாம்பீக அழகுக்கும், ஆஸ்திக்கும் ஆசைப்பட்டு குணமில்லாதப் பெண்ணைத் திருமணம் செய்து கஷ்டப்படுவதைவிட...நல்ல குணமுள்ளப் பெண்ணைக் கைப்பிடித்தால் இல்லறம் இனிக்கும் என்று...பிரபு, சுந்தரியின் வாழ்க்கையைக் காட்டிச் சொல்லும் கருத்து அருமை.

சுந்தரியின் குடும்பத்தின் நிலையை நினைத்தால் தான் வேதனையாக இருக்கிறது. பாவம்...இந்த மேல்மட்ட பழிவாங்கல் இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் நீடிக்குமோ...

தொய்வில்லாமல்...தொடர்கிறது...தொடருங்கள் தங்கையே...

ஆம். மேல்மட்டப்பழிவாங்கல் சில கிராமங்களில் இன்றும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நல்ல அவதானிப்புடன் கதையை விமர்சனம் செய்யும் பாங்கு என்னைக் கவர்கிறது. மிகவும் நன்றி, அண்ணா.

கீதம்
02-06-2010, 10:16 PM
சைட் கேப்பில குத்திக்கிட்டீங்க... குத்தமுள்ள மனசு குறுகுறுக்குதுல.. :eek::eek::eek:
ச்சும்மா.. தமாஷுக்கு..:icon_b:

அடடா, நான் தான் சொன்னேனே! நான் ஒன்றிரண்டு வீடுகளுக்குள் புகுந்து புறப்பட்டு என் கதையைத் தேற்றிவிடுகிறேன். நீங்களோ உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறீர்கள். போதாக்குறைக்கு சதிகாரர்களின் இருப்பிடமெல்லாம் ஊடுருவி அவர்கள் செய்யும் சதியைத் தெரிந்துகொள்ளப்போராடிக்கொண்டிருக்கிறீர்கள். உங்களோடு நான் போட்டி போட முடியுமா?
(உங்கள் இயக்குநர் ஷங்கர் என்றால் என் இயக்குநர் வி.சேகர்):lachen001:

இப்போது புரிகிறதா? அதனால் குத்தமுள்ள நெஞ்சு அது இதுன்னு சும்மாப் புலம்பாமல் போய் உங்கள் உளவுவேலையைத் தொடருங்கள்.:icon_b:

கீதம்
02-06-2010, 10:18 PM
அழகா போகுது கதை.. காணாமல் போன சுந்தரியின் பெற்றோர் கிடைப்பார்களா?? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரபு சுந்தரியை கவனித்து கொண்டது ரசிக்கும் விதத்தில் இருந்தது.

இருக்கிற நேரத்தில் என் கதையையும் படித்துக் கருத்துச் சொல்வது எனக்கு மிகுந்த மகிழ்வைத் தருகிறது. நன்றி மதி.

கீதம்
02-06-2010, 10:20 PM
கணவன் மனைவியின் ஊடலை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள். விக்னேஷ் அம்மா மாறுவாரா?? முடியாது போலவே உள்ளதே... தொடருங்கள்...

இப்பதானே கதையே ஆரம்பிக்குது. அதுக்குள்ள எப்படி அம்மா மாறுவார்? எல்லாம் க்ளைமாக்ஸில்தான் நடக்கும்.:)

தொடர்வதற்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
02-06-2010, 10:24 PM
இந்த அத்தியாமும் மிக நன்றாக எழுதி உள்ளீர்கள். விக்னேஷ் அம்மா பெயருக்காவது வந்து பார்த்திருக்கலாம்... வராததனால் அவர் எப்படி எப்போது மாறுவார் என ஆவல் அதிகமாகிறது.. சுந்தரியின் பெற்றோர் பற்றி ஒரு அத்தியாயம் வரும் போலிருக்கிறதே... தொடருங்கள்...

தொடர்ந்துவரும் உங்கள் ஊக்கமிகு பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி ராஜேஷ்.

கீதம்
02-06-2010, 10:27 PM
அத்தியாயம் 12

இப்போதெல்லாம் ஞாயிற்றுக்கிழமையானால் நூலகம் செல்வதே விக்னேஷுக்கு வாடிக்கையாகிவிட்டது. வீட்டில் முன்பு போல் அம்மாவுடன் நேரத்தைக் கழிக்க முடிவதில்லை.

அம்மாவின் போக்கில் ஏற்பட்ட மாற்றம் மெல்ல மெல்ல விக்னேஷை அவரிடமிருந்து விலகவைத்தது. ஆயினும் தன் கடமைகளைத் தவறாமல் செய்துவந்தான். அம்மாவை மருத்துவரிடம் அழைத்துப்போவது, மருந்து மாத்திரைகளை வேளாவேளைக்கு சரியாகக் கொடுப்பது, அவருக்கு கால் பிடித்துவிடுவது போன்றவற்றை இயந்திரமாய்ச் செய்தான்.

இந்த ஞாயிற்றுக்கிழமை தற்செயலாய் வித்யாவை நூலகத்தில் சந்திக்க நேர்ந்தது. அவளைப் பார்த்ததும் தன் துன்பமெல்லாம் விலகியது போல உணர்ந்தான். என்றுமில்லாத உற்சாகம் அவனுக்குள் தொற்றியது. வித்யாவிடம் எல்லாவற்றையும் சொல்லி ஆறுதல் தேட மனம் விழைந்தது.

"விக்கி, எப்படியிருக்கீங்க?"

"நீ எப்படியிருக்கே?"

"நான் நல்லாயிருக்கேன்! வீட்டுக்கு ஒருநாள் வாங்களேன், அப்பா உங்களை விசாரிச்சார்!"

"வித்யா, உன் கூட கொஞ்சம் பேசணும்! வெளியில வரியா?"

"ம்! வாங்க!"

என்னதான் காதலிக்கவில்லை என்று சொன்னாலும், இவனுக்கு அவள்மேல் காதல் இருப்பதை அவள் அறிந்திருந்தாள். அதனால் ஒரு குதூகலத்துடன் முன்னே சென்றாள். 'அம்மாவிடம் பேசியிருப்பானோ? அவர் அழைத்துவரச் சொல்லியிருப்பாரோ?'

விக்னேஷ், அவளிடம் பேசவேண்டியவற்றை மனதுக்குள் ஒருமுறை ஒத்திகை பார்த்துக்கொண்டான்.

அந்த நூலகவளாகத்தில் அடர்ந்திருந்த மரங்களின் நிழலில் தன் கைக்குட்டை விரித்து வித்யா அமர, அவளெதிரில் தானும் அமர்ந்துகொண்டான்.

"சொல்லுங்க, விக்னேஷ்! என்ன விஷயம்?"

ஆவல் தாளாதவளாய் வித்யா கேட்க, ஒத்திகை செய்யப்பட்ட அத்தனையும் மறந்துபோக, தேர்வுத்தாளைக் கையில் வாங்கிய கடைசிபெஞ்ச் மாணவனைப் போல் திருதிருவென விழித்தான்.

"என்னப்பா, என்னாச்சு?"

"வ...வந்து...வித்யா...அதை எப்படி சொல்றதுன்னு தெரியலை..."

"எதை....? நம்ம காதலையா?"

குறும்பு பொங்க குறுகுறுப்புடன் அவனைப் பார்த்தபடியே கேட்க, அவன் சட்டெனத் தலை கவிழ்ந்துகொண்டான்.
இப்பொழுதாவது சொல்லிவிட மாட்டானா என்று அவள் மனம் ஏங்கியது.

விக்னேஷ் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான். கீழே கிடந்த ஒரு காய்ந்த மரக்குச்சியை எடுத்து, அருகில் சாரையாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் குறுக்கே ஒரு கோடு இழுக்க, திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகளென திக்குத் தெரியாமல் அலைந்தன அந்தச் சிற்றெறும்புகள்.

"ப்ச்! அதையேன்ப்பா கலைக்கிறீங்க? அது பாட்டுக்குதானே போய்கிட்டிருக்கு?"

அவற்றுக்காகப் பரிதாபப்பட்டாள், வித்யா.

"இப்படிதான் என் கனவுகளை.... ஆசைகளை....... நம்பிக்கையை..... எங்கம்மா கலைச்சிட்டாங்க, வித்யா,!"

போட்டு உடைத்துவிட்டான். எப்படிச் சொல்லப்போகிறோமென்று ஏராள ஒத்திகை பார்த்தவன், எப்படியாவது சொன்னால் போதுமென்று முடிவெடுத்து சொல்லவேண்டியதை அவள் முகம் பாராமல் சொல்லி முடித்துவிட்டான்.

சட்டென்று அவனைக் கேட்டாள்.

"சரி, இதில் என்ன பிரச்சனை, உங்களுக்கு? நீங்களும் உங்க அம்மா என்ன சொல்றாங்களோ அதைச் செய்யத்தானே விரும்புவீங்க?"

"அது...அது...."

"என்ன தயக்கம்?"

"என் கல்யாணம் என் விருப்பப்படி நடக்கணும்னு விரும்புறேன், வித்யா!"

"அதை நீங்க உங்க அம்மாகிட்டயே சொல்லியிருக்கலாமே!"

“வித்யா, ஒண்ணு தெரியுமா? எங்க அம்மா என்கிட்ட சத்தியம் வாங்குனதுக்கு அப்புறம்தான் எனக்குன்னு ஒரு வாழ்க்கை, என் காதல், என் கல்யாணம்னு தோண ஆரம்பிச்சிடுச்சி”

“என்ன உளறுரீங்க?"

"ஆமாம், வித்யா! என் மனசில் நீதான் இருக்கிறே! அன்னைக்கு அம்மா இப்படிப் பண்ணிட்டாங்களேன்னு மனசுடைஞ்சு போனப்ப எனக்கு நீதான் ஆறுதல் தந்தே, வித்யா! உன்னோட தவிப்பு இப்ப எனக்குப் புரியுது, வித்யா! ஐ லவ் யூ, வித்யா!"

"விக்னேஷ், எனக்கு இப்பதான் ரொம்பக் கவலையா இருக்கு! உங்க அம்மாவை ஏமாத்தாதீங்க, விக்னேஷ்!”

"ப்ச்! அன்னைக்கு அம்மாகிட்ட ஏன் தான் சத்தியம் செஞ்சேனோன்னு இருக்கு! மறுத்திருக்கலாம், ஆனா...அது எனக்குப் பழக்கமில்லாதது. அதுக்கப்புறம் உன்னை நினைக்காமலாவது இருந்திருக்கலாம். ஆனா.....அதுவும் முடியலை. என்ன பண்றதுன்னே தெரியலை, வித்யா! ஒரே குழப்பமா இருக்கு!"

"இப்ப புலம்புறதில என்ன லாபம், விக்னேஷ்?"

அவள் எறும்புகளையே பார்த்துக்கொண்டிருந்தாள். சற்றுநேரம் அங்குமிங்கும் அலைந்த எறும்புகள் வேறு ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்கத் துவங்கியிருந்தன. ஒன்றன்பின் ஒன்றாக அந்த வரிசையில் இணைந்து மீண்டும் தம் இலக்கு நோக்கி பயணப்பட்டுக்கொண்டிருந்தன.

வித்யா சிரித்தாள்.

"ஏன் சிரிக்கறே, வித்யா? என்னைப் பார்த்தா ஒரு பைத்தியக்காரன் மாதிரி இருக்கா?"

"விக்னேஷ்! அந்த எறும்புகளைப் பாருங்க, கலைச்சுவிட்டாலும் வேற பாதை அமைச்சு, தான் போகவேண்டிய இடத்துக்கு கரெக்டா போய்ச்சேருதுங்க. அதுகளால் முடியுற ஒரு செயலை ஏன் உங்களால் செய்ய முடியாது? யோசிச்சுப் பாருங்க!"

"வித்யா! நீ சொல்றது சரி...ஆனா...எங்கம்மா....."

"அவங்க இப்ப இருக்கிற நிலைமையில எல்லாமே தப்பாதான் தோணும். அதுக்கு நீங்க அவங்க உடம்புக்கு மருத்துவம் பண்றதோடு அவங்க மனசுக்கும் மருத்துவம் பண்ணணும்."

"அது எப்படி?"

"அவங்க தன்னைச் சுத்திப் போட்டிருக்கிற வட்டத்தில் இருந்து அவங்களை வெளியில கொண்டுவாங்க. இந்த உலகத்தில் நீங்களும், உங்க அம்மாவும் மட்டுமே வாழலைன்னு புரியவைங்க. காலம் காலமா அடைபட்டுக்கிடக்கிறவங்களை வெளியில் கொண்டு வரது அத்தனைச் சுலபமில்லே. இருந்தாலும் முயற்சி செய்யுங்க! கொஞ்சமாவது பலன் கிட்டாதா?"

"அம்மா வெளியில் வந்து பழகுறதுக்கும், நம்ம காதலுக்கும் என்ன சம்பந்தம்?"

" ஹும்! உங்க அம்மா மட்டும் இல்லே...நீங்களும் கூட உங்க வட்டத்தை விட்டு வெளியில் வரணும், விக்னேஷ். என்ன ஒரு வித்தியாசம்னா....உங்க அம்மாவுடைய வட்டத்தை விட உங்க வட்டம் கொஞ்சம் பெரிசு!"

"நீ சொல்றது சரிதான் வித்யா! நானும் இப்பதான் அதையெல்லாம் யோசிக்க ஆரம்பிச்சிருக்கேன்!"

"அதை நீங்க என்கிட்ட உங்க காதலைச் சொன்ன நிமிஷமே புரிஞ்சுகிட்டேன், ரொம்ப தேங்ஸ்பா!"

"வித்யா, நீ எப்பவும் இப்படியே யோசனை சொல்லிகிட்டு வாழ்க்கை பூராவும் என் கூடவே வரணும்னு விரும்பறேன்பா!"

"அப்படின்னா...இத்தனைநாள் அம்மா யோசனை...இனிமே என் யோசனையா? எப்பதான் நீங்களா யோசிக்கப்போறீங்க?"

அவள் குறும்பாய்க் கேட்க, விக்னேஷ் பதில் சொல்லமுடியாமல் அசடு வழிந்தபடியே சிரித்தான்.

"ஐயே...போதுமே! சகிக்கல...வாங்க, போவோம்!"

"எங்க?"

"இந்த நல்லநாளைக் கொண்டாட எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தாங்க!" என்று கூறிவிட்டு குழந்தையென முன்னே ஓடினாள்.

***********************************************************

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

மு.வ உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும் அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை.

govindh
02-06-2010, 11:04 PM
எறும்புகளை வைத்தே..., பிரச்னைகளுக்கு தீர்வு
சொல்கிறாள் வித்யா.

"இந்த நல்லநாளைக் கொண்டாட எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தாங்க!" என்று கூறிவிட்டு குழந்தையென முன்னே ஓடினாள்.

காதல் கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது.
அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தொடருங்கள்.....தொடர்ந்து அசத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

மதி
03-06-2010, 12:38 AM
இருதலைக் கொள்ளி எறும்பாய் விக்கி... அவனுக்கு எறும்பின் மூலமே பாடம் நடத்துகிறாள் வித்யா. அவர்கள் காதல் பாடம் ஆரம்பமாகட்டும். தொடர்ல விறுவிறுப்பு ஆரம்பிச்சாச்சு. அசத்துங்கள் கீதம்.

சிவா.ஜி
03-06-2010, 07:02 AM
"ஆவல் தாளாதவளாய் வித்யா கேட்க, ஒத்திகை செய்யப்பட்ட அத்தனையும் மறந்துபோக, தேர்வுத்தாளைக் கையில் வாங்கிய கடைசிபெஞ்ச் மாணவனைப் போல் திருதிருவென விழித்தான்."

"கீழே கிடந்த ஒரு காய்ந்த மரக்குச்சியை எடுத்து, அருகில் சாரையாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் குறுக்கே ஒரு கோடு இழுக்க, திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகளென திக்குத் தெரியாமல் அலைந்தன அந்தச் சிற்றெறும்புகள்."

இந்த அத்தியாயத்துல....அசத்திட்டீங்க. மேல மேற்கோள் காட்டியிருக்கிற உவமானங்கள்ல...ரொம்ப எளிமையா...விக்கியோட நிலைமையையும், அலையும் எறும்புகளையும் காட்டியிருப்பது ரொம்ப நல்லாருக்கு...!!


"விக்னேஷ்! அந்த எறும்புகளைப் பாருங்க, கலைச்சுவிட்டாலும் வேற பாதை அமைச்சு, தான் போகவேண்டிய இடத்துக்கு கரெக்டா போய்ச்சேருதுங்க. அதுகளால் முடியுற ஒரு செயலை ஏன் உங்களால் செய்ய முடியாது? யோசிச்சுப் பாருங்க!"

சின்ன எறும்புங்க செய்யறதை உங்களால செய்ய முடியாதான்னு கேட்டு...வித்யாவோடக் கேரக்டரை இன்னும் அழுத்தமா பதிவு செஞ்சிருக்கீங்க.


"அப்படின்னா...இத்தனைநாள் அம்மா யோசனை...இனிமே என் யோசனையா? எப்பதான் நீங்களா யோசிக்கப்போறீங்க?"

செமக் கேள்விக் கேட்டிருக்கா...அம்மா முந்தானையைப் பிடிச்சிக்கிட்டிருக்கிற இளைஞர்களுக்கு....நெத்தியடியானக் கேள்வி. என்றைக்கு அவர்களாய் சிந்திக்கப்போகிறார்கள்?

மொத்தத்துல...ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த அத்தியாயம். வாழ்த்துக்கள் தங்கையே. தொடருங்க....

மதி
03-06-2010, 07:11 AM
செமக் கேள்விக் கேட்டிருக்கா...அம்மா முந்தானையைப் பிடிச்சிக்கிட்டிருக்கிற இளைஞர்களுக்கு....நெத்தியடியானக் கேள்வி. என்றைக்கு அவர்களாய் சிந்திக்கப்போகிறார்கள்?


இது சத்தியமா நான் இல்லீங்கண்ணா... !!! :icon_ush::icon_ush:

சிவா.ஜி
03-06-2010, 08:50 AM
நான் குதிருக்குள்ள இல்லங்கற மாதிரியில்ல இருக்கு.....!!!

சுடர்விழி
03-06-2010, 09:01 AM
அத்தியாயம் 10,11,12 இன்று தான் படித்தேன்..(இங்கு பள்ளி விடுமுறை.பிள்ளைகளோடு நேரம் சரியாக இருக்கிறது)..ரொம்ப நல்லா இருக்கு உங்க கதையோட்டம்...

“அம்மாவுக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால், விக்னேஷின் ஆழ்மனதில் அதுவரை அடைபட்டுக்கிடந்த வித்யா, ஒரு தேவதை போல் எழும்பி மிதந்து மேலே வரத் துவங்கினாள். ”

எதிர்பார்த்த மாதிரியே காதலும் வந்தாச்சு...

”அப்பப்பா! போதும்! இந்த ஒரு குழந்தையுடன் போதுமென்று முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இன்னொரு முறை சுந்தரி இப்படித் தவிப்பதைப் பார்க்க என்னால் முடியாது.”

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..மனைவி மேல் இருக்கும் பாசத்தை இதற்கு மேல் எப்படி காட்டுவது??ரொம்ப அருமை...

மதி
03-06-2010, 09:21 AM
நான் குதிருக்குள்ள இல்லங்கற மாதிரியில்ல இருக்கு.....!!!
குதிர்ன்னா... உண்மையா சொல்லணும்னா.. என்னை மாதிரி ஒரு புள்ளைய பெத்துட்டு ரொம்ப கஷ்டப்படறாங்க. யாரையாச்சும் கை காட்டுடானு சொல்லிட்டாங்க.. ஆனாலும்.. ம்ஹூம்..

இதுக்கு மேல இங்க அரட்டை அடிக்க விரும்பல..அப்புறம் சொந்தக்காரர் சாட்டையோடு வந்துடுவாங்க..

அன்புரசிகன்
03-06-2010, 12:22 PM
எறும்பின் ஓட்டத்தில் நல்லதொரு நீதியை கூறியிருக்கிறீர்கள். நிச்சயம் உறைத்திருக்கும் விக்னேஷூக்கு... தொடருங்கள் கீதம்.

வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
03-06-2010, 03:26 PM
இந்த அத்தியாயம் மிக அருமை... உவமைகள் மிக அற்புதம்.. விக்னேஷும் அம்மாவும் வித்யாவின் வட்டத்திற்குள் எப்படி வரப் போகிறார்களோ!!?

கீதம்
03-06-2010, 10:04 PM
எறும்புகளை வைத்தே..., பிரச்னைகளுக்கு தீர்வு
சொல்கிறாள் வித்யா.

"இந்த நல்லநாளைக் கொண்டாட எனக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தாங்க!" என்று கூறிவிட்டு குழந்தையென முன்னே ஓடினாள்.

காதல் கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது.
அடுத்த அத்தியாயத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.

தொடருங்கள்.....தொடர்ந்து அசத்துங்கள்.
வாழ்த்துக்கள்.

கொண்டாட்டம் மட்டுமா? திண்டாட்டமும் அல்லவா கூடவே வரும்? தொடர்ந்து வரும் உங்கள் பின்னூட்டத்துக்கு என் மனமார்ந்த நன்றி, கோவிந்த்.

கீதம்
03-06-2010, 10:14 PM
இருதலைக் கொள்ளி எறும்பாய் விக்கி... அவனுக்கு எறும்பின் மூலமே பாடம் நடத்துகிறாள் வித்யா. அவர்கள் காதல் பாடம் ஆரம்பமாகட்டும். தொடர்ல விறுவிறுப்பு ஆரம்பிச்சாச்சு. அசத்துங்கள் கீதம்.
உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி மதி.


இது சத்தியமா நான் இல்லீங்கண்ணா... !!! :icon_ush::icon_ush:

என்ன சொன்னாலும் ஏன் உங்களையே சொல்றதா நினைச்சுக்கறீங்க? போன தடவை கூட, குத்தமுள்ள நெஞ்சு, அது, இதுன்னு சொன்னீங்க?:confused:


குதிர்ன்னா... உண்மையா சொல்லணும்னா.. என்னை மாதிரி ஒரு புள்ளைய பெத்துட்டு ரொம்ப கஷ்டப்படறாங்க. யாரையாச்சும் கை காட்டுடானு சொல்லிட்டாங்க.. ஆனாலும்.. ம்ஹூம்..

இதுக்கு மேல இங்க அரட்டை அடிக்க விரும்பல..அப்புறம் சொந்தக்காரர் சாட்டையோடு வந்துடுவாங்க..

எப்படியோ சும்மா இருக்கிற உங்களை என் கதை உசுப்பிவிட்டு ஏதாவது நல்லது நடந்தா சரிதான். :icon_b:
தாராளமா அரட்டை அடிங்க, நான் கோவிச்சுக்கமாட்டேன்.:)

கீதம்
03-06-2010, 10:18 PM
"ஆவல் தாளாதவளாய் வித்யா கேட்க, ஒத்திகை செய்யப்பட்ட அத்தனையும் மறந்துபோக, தேர்வுத்தாளைக் கையில் வாங்கிய கடைசிபெஞ்ச் மாணவனைப் போல் திருதிருவென விழித்தான்."

"கீழே கிடந்த ஒரு காய்ந்த மரக்குச்சியை எடுத்து, அருகில் சாரையாய் சென்றுகொண்டிருந்த எறும்புகளின் குறுக்கே ஒரு கோடு இழுக்க, திருவிழாவில் காணாமல் போன பிள்ளைகளென திக்குத் தெரியாமல் அலைந்தன அந்தச் சிற்றெறும்புகள்."

இந்த அத்தியாயத்துல....அசத்திட்டீங்க. மேல மேற்கோள் காட்டியிருக்கிற உவமானங்கள்ல...ரொம்ப எளிமையா...விக்கியோட நிலைமையையும், அலையும் எறும்புகளையும் காட்டியிருப்பது ரொம்ப நல்லாருக்கு...!!


"விக்னேஷ்! அந்த எறும்புகளைப் பாருங்க, கலைச்சுவிட்டாலும் வேற பாதை அமைச்சு, தான் போகவேண்டிய இடத்துக்கு கரெக்டா போய்ச்சேருதுங்க. அதுகளால் முடியுற ஒரு செயலை ஏன் உங்களால் செய்ய முடியாது? யோசிச்சுப் பாருங்க!"

சின்ன எறும்புங்க செய்யறதை உங்களால செய்ய முடியாதான்னு கேட்டு...வித்யாவோடக் கேரக்டரை இன்னும் அழுத்தமா பதிவு செஞ்சிருக்கீங்க.


"அப்படின்னா...இத்தனைநாள் அம்மா யோசனை...இனிமே என் யோசனையா? எப்பதான் நீங்களா யோசிக்கப்போறீங்க?"

செமக் கேள்விக் கேட்டிருக்கா...அம்மா முந்தானையைப் பிடிச்சிக்கிட்டிருக்கிற இளைஞர்களுக்கு....நெத்தியடியானக் கேள்வி. என்றைக்கு அவர்களாய் சிந்திக்கப்போகிறார்கள்?

மொத்தத்துல...ரொம்ப அருமையா வந்திருக்கு இந்த அத்தியாயம். வாழ்த்துக்கள் தங்கையே. தொடருங்க....

இந்த அத்தியாயம் ரொம்ப நல்லா வந்திருப்பது குறித்து மகிழ்ச்சி. அதிலும் உங்கள் வண்ணமயமான விமர்சனம் கண்டு அளவிலாத மகிழ்ச்சி. மிகவும் நன்றி அண்ணா.

கீதம்
03-06-2010, 10:20 PM
அத்தியாயம் 10,11,12 இன்று தான் படித்தேன்..(இங்கு பள்ளி விடுமுறை.பிள்ளைகளோடு நேரம் சரியாக இருக்கிறது)..ரொம்ப நல்லா இருக்கு உங்க கதையோட்டம்...

“அம்மாவுக்குப் பிடிக்காது என்ற ஒரே காரணத்தால், விக்னேஷின் ஆழ்மனதில் அதுவரை அடைபட்டுக்கிடந்த வித்யா, ஒரு தேவதை போல் எழும்பி மிதந்து மேலே வரத் துவங்கினாள். ”

எதிர்பார்த்த மாதிரியே காதலும் வந்தாச்சு...

”அப்பப்பா! போதும்! இந்த ஒரு குழந்தையுடன் போதுமென்று முடிவெடுத்துவிட வேண்டியதுதான். இன்னொரு முறை சுந்தரி இப்படித் தவிப்பதைப் பார்க்க என்னால் முடியாது.”

இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன..மனைவி மேல் இருக்கும் பாசத்தை இதற்கு மேல் எப்படி காட்டுவது??ரொம்ப அருமை...

ரொம்ப நன்றி, சுடர்விழி. பொறுமையாகவே படியுங்கள். எங்கே போய்விடப்போகிறது கதை? குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதுதான் முக்கியம்.

உங்கள் மனந்தொட்டதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. முடியும்போது படித்துக் கருத்துப் பதிவிடுங்கள்.

கீதம்
03-06-2010, 10:23 PM
எறும்பின் ஓட்டத்தில் நல்லதொரு நீதியை கூறியிருக்கிறீர்கள். நிச்சயம் உறைத்திருக்கும் விக்னேஷூக்கு... தொடருங்கள் கீதம்.

வாழ்த்துக்கள்.


இந்த அத்தியாயம் மிக அருமை... உவமைகள் மிக அற்புதம்.. விக்னேஷும் அம்மாவும் வித்யாவின் வட்டத்திற்குள் எப்படி வரப் போகிறார்களோ!!?

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கு மிகவும் நன்றி அன்புரசிகன் மற்றும் ராஜேஷ். இனி வரும் அத்தியாயங்கள் உங்கள் சந்தேகங்களைப் போக்கும்.

கீதம்
03-06-2010, 10:25 PM
அத்தியாயம் 13

விக்னேஷுக்கு எங்கிருந்து எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. அம்மாவின் கண்மூடித்தனமான அன்பின் ஆளுமையிலிருந்து விடுபட்டு, அவரைத் தன் அன்புப்பிடிக்குள் கொண்டுவரவேண்டும் என்று விரும்பினான்.

இடையில் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகளை ஒரு கெட்ட கனவென நினைத்து மறக்க முயன்றான். அம்மாவைப் பார்த்தபோது ஒரு அறியாக்குழந்தைபோல் தோன்றியது. என்னைவிட்டு விலகிவிடாதே என்று அவரது பார்வை கெஞ்சியது.

இல்லையம்மா...உங்களை விட்டு ஒருபோதும் விலகமாட்டேன். என் அன்பு தெய்வமே! விக்னேஷின் மனம் இளகியது.

அம்மா சோபாவில் சாய்ந்தவண்ணம் ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தார். அம்மாவின் அருகில் சென்று அமர்ந்தான்.

"என்னப்பா?"

அம்மா அவன் தலையை இதமாய்க் கோதினார். அவர் கைகளை எடுத்துத் தன் கரங்களில் பொத்திக் கொண்டான்.

"அம்மா! நான் கொஞ்ச நேரம் உங்க மடியில் தலைவச்சுப் படுத்துக்கவா?"

அம்மா நெகிழ்ந்துவிட்டார். பத்திரிகையை கீழே வைத்துவிட்டு அவனை அணைத்துக்கொண்டார்.

"என்னப்பா, உடம்புக்கு முடியலையா? இல்ல....மனசு சரியில்லையா?"

"ரெண்டுமில்லம்மா, நான் இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"

"அதுதானேப்பா எனக்கு வேணும்!"

மடியில் படுத்திருந்த மகனின் முன்னெற்றியில் பரவியிருந்த முடிகற்றையை ஒதுக்கி அவன் முகத்தை வருடினார். விக்னேஷ் ஒரு குழந்தையாகவே மாறியிருந்தான்.

நாகலட்சுமிக்கு மகிழ்வும் வியப்பும் ஒருசேர உண்டானது. என் பிள்ளை என்னிடமே வந்துவிட்டான். கடவுளே...உனக்கு நன்றி.

"அம்மா! நாளைக்கு நான் லீவு போட்டிருக்கேன், டாக்ஸிக்கும் சொல்லிட்டேன், நாம நாளைக்கு திருவேற்காடு வரைக்கும் போயிட்டு வரலாமா?"

"என்னப்பா, திடீர்னு?"

"வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கறீங்க, உங்களை எங்கேயாவது வெளியில் அழைச்சிட்டுப் போவணும்னு தோணிச்சு. அன்னைக்கு வேலைக்காரப்பொண்ணு திருவேற்காடு போய்ட்டுவந்து பிரசாதம் தந்தப்போ...எனக்குதான் அந்தக் கோயிலுக்குப் போற பாக்கியம் கிடைக்கலேன்னு லேசான வருத்தத்தோடு சொல்லிட்டிருந்தீங்க. எங்கம்மாவுக்கு எப்படி அந்தப் பாக்கியம் இல்லாமப் போகும்னுதான் இந்த ஏற்பாடு."

நாகலட்சுமிக்கு மகனை நினைத்து பெருமையாக இருந்தது. ஆனாலும் ஏதோ ஒன்று அவர் சந்தோஷத்தைக் குறைத்தது.. மகன் தன்னைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கமாட்டான் என்றிருந்ததுபோக, அவன் பயணத் திட்டம் போட்டுவிட்டு வா என்று அழைக்கிறான். என்ன காரணமோ?

ஒருவேளை..............ஒருவேளை………..கோயிலில் திருமண ஏற்பாடுகள் செய்துவைத்திருக்கிறானோ? அம்மாவை அழைத்துச் சென்று அவள் கண்முன் தாலி கட்டவேண்டுமென்று எண்ணிதான் இந்தப் பயணமா? ஐய்யோ! நான் பயந்தது நடந்துவிட்டதே!

ம்ஹும்! என்ன ஆனாலும் சரி, நாளை நானும் போகக்கூடாது, இவனையும் போகவிடக்கூடாது.

அம்மாவின் மனக்குழப்பம் புரியாமல்,

"அம்மா! நீங்க போய்ப் படுத்துக்கங்க, காலையில் எட்டுமணிக்கெல்லாம் டாக்ஸி வந்திடும், அதுக்குள்ள தயாரா இருக்கணும்! நாளைக்கான மாத்திரையெல்லாம் நான் கையில் எடுத்துக்கறேன்!"

நாகலட்சுமிக்கு எல்லாமே நம்பமுடியாதவையாய் தோன்றின. எப்படி இவனுக்கு இத்தனைத் துணிச்சல் வந்தது? என்னிடம் கொடுத்த சத்தியத்தை மீறிடுவானோ? சற்றுமுன் தானே கடவுளுக்கு நன்றி சொன்னேன். இப்போழுது மீண்டும் கவலையுறும் சம்பவம் நிகழ்ந்துவிட்டதே!

"அது பெரிய கோவிலாச்சேப்பா! என்னால் அவ்வளவு நடக்கமுடியாதே....."

"அம்மா! நீங்க பிரகாரம் சுத்தவேண்டாம். நேரா கருவறை போய் சாமி கும்பிடறோம், அங்கயிருந்து கிளம்பிடறோம். உங்க வசதியைப் பொறுத்து அப்புறம் வேற எங்கயாவது போகணும்னா போலாம். சரியா?"

"விக்னேஷ்! உனக்கே தெரியுமேப்பா! என் உடம்பு இருக்கிற நிலைக்கு இதெல்லாம் ஒத்துவராதுன்னு! இன்னொரு நாள் போலாமேப்பா!"

"இல்லைம்மா! ஒவ்வொரு தடவையும் ஏதாவது சொல்றீங்க, அதனால்தான் உங்ககிட்ட கேக்காமலேயே நாளைக்கு லீவுபோட்டு ஏற்பாடெல்லாம் செய்திட்டேன். நீங்க கட்டாயம் வரீங்க, சால்ஜாப்பெல்லாம் வேண்டாம்!"

முடிவாய்ச் சொல்லிவிட்டான்.

அப்படியென்றால் ஏதோ இருக்கிறது. வரமுடியாதென்றாலும் இவன் விடப்போவதாய்த் தெரியவில்லை.சரி. போய்தான் பார்ப்போம். எந்தச் சிறுக்கி இவனை மயக்கியிருக்கிறாள் என்பதை!

என்ன ஆனாலும் சரி, என்னிடம் கொடுத்த வாக்கை வைத்தே அவனை மிரட்டிவிடலாம். தெய்வ சன்னிதானத்தில் பொய் சொல்லமுடியுமா? பார்த்துவிடுகிறேன், நானா? அவளா? என்று.

நாகலட்சுமி மனதுக்குள் கருவிக்கொண்டார்.

காலை வேளை பரபரப்பாக விடிந்தது. மனோகரி அக்காவே ஆச்சர்யப்பட்டுவிட்டாள்.

"குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி டாக்டர் வீட்டைத் தவிர உங்கம்மா கண்ணுக்கு வேற எதுவுமே தெரியாது. அப்படியே தெரிஞ்சாலும் நகரவே மாட்டாங்க, அவங்களையே நெம்பு நெம்புன்னு நெம்பிக் கிளப்பிட்டியே!"

இவளுக்கும் விஷயம் தெரிந்திருக்குமோ? விக்னேஷ் என்ன சாதாரண உடையில் வருகிறான்? பட்டுவேட்டி, சட்டை எல்லாம் நண்பர்களிடம் தயாராக இருக்குமோ?

"ஏம்மா, என்னவோ போல இருக்கீங்க?"

"ஒண்ணுமில்லையேப்பா!"

"நீங்க நாளெல்லாம் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சுகிடக்கிறதப் பாத்தா எனக்கு என்னவோ போல இருக்குமா, அதனால்தான்………………”

ம். ம். புரிகிறது. இப்போது இப்படி சொல்வான், கோவிலுக்குப் போனதும் அவளைக் காட்டி, 'நாளெல்லாம் பேச்சுத்துணையில்லாம கஷ்டப்படுறீங்கன்னுதான் இவளைக் கட்டிக்கிறேன்'னு சொல்வான்.

கடைசியில் இவனும் பிரபுவைப் போல் தான் நடந்துகொள்கிறான்.சே! என்ன பிள்ளை இவன்? இப்படிப் பொய் சொல்லி அழைத்துச் சென்றால் மட்டும் என் ஆசி கிடைத்துவிடுமா?

நாகலட்சுமியின் உள்ளத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாதவனாய், விக்னேஷ் ஓட்டுநரிடமும், அம்மாவிடமும் எதையெதையோ பேசிக்கொண்டுவந்தான். நாகலட்சுமிக்கு எதுவும் மனதில் பதியவில்லை.

"அம்மா…. அம்மா!"

திடுக்கிட்டு விழித்தார்.

"என்னப்பா?"

"என்ன யோசனையில இருக்கீங்க, கோவிலுக்கு வந்திட்டோம்!"

இறங்கி பூக்கடையில் மாலை வாங்கிகொண்டு நடந்தனர்.
நாகலட்சுமியின் இதயம் வேகமாக அடித்துக்கொண்டது. இங்கேதான்....இங்கேதான்...எங்கேயோ…...அவள்....நண்பர்கள்…... மாலை....தாலி........

"அம்மா.....என்னம்மா ஆச்சு...?"

முன்னே சென்றுகொண்டிருந்த அம்மா, கால்கள் பின்ன மயங்கிச் சரிவதன் காரணம் புரியாமல் தவித்தபடியே ஓடிச்சென்று அவரைத் தாங்கிக்கொண்டான்.

அவரை ஒரு ஓரமாய் அழைத்துவந்து உட்காரவைத்துவிட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தான்.

ஆசுவாசமடைந்ததும்,

"என்னம்மா ஆச்சு?"

"ஒண்ணும் இல்லப்பா...இவ்வளவு தூரம் பயணம் பண்ணியது ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன்..... திரும்பிப் போயிடலாமா?"

"வந்தது வந்தாச்சு! இருந்து தரிசனம் பண்ணிட்டே போகலாம்மா. ஒண்ணும் அவசரமில்லே...நீங்க இங்கேயே உட்கார்ந்து நல்லா ஓய்வெடுத்துக்கீங்க, எப்ப முடியுதோ அப்ப சொல்லுங்க,போகலாம்!"

நாகலட்சுமி பரிதாபமாய் மகனைப் பார்த்தார். இவன் என்ன இன்று இப்படி ஒரு விடாக்கண்டனாய் இருக்கிறான்?

இல்லாத கவலைகளுடன் நேரம் கழிந்ததே தவிர நாகலட்சுமி எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. அன்றையதினம் நல்லவிதமாகவே கழிந்தது. அபிஷேகம் பார்த்து, கண்குளிர அம்மன் தரிசனம் முடித்து, பிரசாதங்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்ப பொழுதாகிவிட்டது.

விக்னேஷ் அதிசயித்த ஒரு விஷயம், காலை மயக்கத்துக்குப் பிறகு அம்மா எந்தப் பிரச்சனையும் செய்யவில்லை. அவ்வப்போது இவன் தான் கால் வலிக்குதாம்மா? மயக்கம் வரமாதிரி இருக்காம்மா? என்று தொணதொணத்துக்கொண்டே இருந்தான்.

அம்மா படுக்கப்போகுமுன் விக்னேஷ் அவருக்கு கால் பிடித்துவிட்டான். நாகலட்சுமி அமைதி தவழும் விக்னேஷின் முகத்தைப் பார்த்தார்.

இவனைப் பற்றி காலையில் என்னென்ன நினைத்துவிட்டேன்? எப்படியெல்லாம் தப்புக்கணக்குப் போட்டு பயந்துவிட்டேன்? நல்லவேளை....வாய்திறந்து இவனிடம் எதுவும் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் என் மானமே போயிருக்குமே! அம்மா இவ்வளவு கீழ்த்தரமானவளா என்று நினைத்திருப்பான்.

நாகலட்சுமி தன் அவசரக்குடுக்கைத் தனத்தை எண்ணி தன்னையே நொந்துகொண்டார். பலத்த எண்ண ஓட்டங்களின் இறுதியில் நிம்மதியாக உறங்கிப்போனார்.

**************************************************************************************************
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேரா.

மதி
04-06-2010, 02:00 AM
மனப் போராட்டத்துடன் ஒரு மணப் போராட்டம்... நாகலட்சுமி அம்மாள் பாவம். எவ்வளவு தான் மனஉளைச்சல் அவருக்கு. அம்மா மகன் உறவை அழகாக கொண்டு போறீங்க... வித்யாவும் நாகலட்சுமியும் சந்திக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

மதி
04-06-2010, 02:04 AM
உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி மதி.
என்ன சொன்னாலும் ஏன் உங்களையே சொல்றதா நினைச்சுக்கறீங்க? போன தடவை கூட, குத்தமுள்ள நெஞ்சு, அது, இதுன்னு சொன்னீங்க?:confused:
எப்படியோ சும்மா இருக்கிற உங்களை என் கதை உசுப்பிவிட்டு ஏதாவது நல்லது நடந்தா சரிதான். :icon_b:
தாராளமா அரட்டை அடிங்க, நான் கோவிச்சுக்கமாட்டேன்.:)
அது வேற ஒன்னுமில்லீங்க.. அடிக்கடி செல்ஃபா கோல் போட்டு அரட்டை அடிக்கறது என் வழக்கம். பழைய அரட்டைத் திரிகளில் தேடினால் இருக்கும். அந்த பழக்க தோஷம் தான்.. ஹிஹி

எத்தனை பேர் உசுப்பி விட்டிருப்பாங்க. அசர மாட்டோம்ல. :D:D:D

அன்புரசிகன்
04-06-2010, 03:40 AM
சந்தேகத்தின் உச்சியிலிருந்த நாகலட்சுமியை கொஞ்சமாவது தேற்றியிருக்கும் விக்கியின் நடவெடிக்கைகள். ...

நல்லதென்றாலும் மாற்றம் வரவிரும்பாத நாகலட்சுமி. எத்தனை நாடகம் நடத்துறாங்க...

தொடருங்கள். இப்ப தான் ஆவல் கூடுது.............
வாழ்த்துக்கள் கீதம்

சிவா.ஜி
04-06-2010, 06:07 AM
சந்தேகம்ன்னு வந்துட்டா...எப்படியெல்லாம் நினைக்கத்தோணுது. அதுவும்...கோவிலுக்குக் கூட போகக்கூடாதுன்னு நினைக்க வெக்குதே...
இருந்தாலும் நாகலட்சுமியம்மாவுக்கு இவ்ளோ பொஸஸிவ்னெஸ் ஆகாதுப்பா.

இவ்வளவு நல்ல மகனை அடைஞ்சதுக்கு அவர் கொடுத்துவெச்சிருக்கனும்.
ஆனா...தன் தலையில தானே மண்ணை வாரிப்போட்டுக்குற மாதிரி...இவர் செய்யுறக் காரியம் இருக்கு.

பாப்போம்...வினேஷ்..வித்யா விஷயத்தை அம்மா எப்படி எதிர்கொள்ளப்போறாங்கன்னு.

உணர்வுகளை அருமையா சொல்லும் இந்தத் தொடர்....உங்க எழுத்தின் வளர்ச்சியைக் காட்டுகிறது. தொடருங்க கீதம்...

பா.ராஜேஷ்
04-06-2010, 09:28 PM
விக்னேஷின் முதல் ஸ்டெப் வெற்றிகரமாய் அமைந்ததில் மகிழ்ச்சி... அம்மா சீக்கிரம் மாறுவாரா???

govindh
04-06-2010, 09:57 PM
சந்தேகப்பேய் நாகலட்சுமியை பிடித்து ஆட்டுவிக்கிறது....
பாவம் விக்னேஷ்....பாசத்திற்கு பரிசு இது தானா...? பரிதாபம் தான்.

(விக்னேஷ்-வித்யா காதல் திருமணத்திற்கு, நாகலட்சுமி சம்மதம் தெரிவித்து விடுவார்கள் அல்லவா...?)

தொடருங்கள்....ஆவலுடன் காத்திருக்கிறோம்.

கீதம்
05-06-2010, 12:06 AM
தொடர்ந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப்படுத்தும் மதி, அன்புரசிகன், சிவா.ஜி அண்ணா, ராஜேஷ் மற்றும் கோவிந்த் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி.

கீதம்
05-06-2010, 12:10 AM
அத்தியாயம் 14

நாகலட்சுமியிடம் ஒரு மெல்லிய இழையிலான மாற்றம் தெரிந்தது. விக்னேஷ் சொல்வதை மறுப்பேதும் சொல்லாமல் ஏற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அவ்வப்போது வெளியிடங்களுக்கு அம்மாவும் பிள்ளையும் சென்றுவந்தனர். அம்மாவுக்கு அதிகம் அலைச்சல் கொடுக்காத, அவரை அயரவைக்காத இடங்களாகத் தேர்ந்தெடுத்தான் விக்னேஷ். ஆபிஸில் லோன் போட்டு கார் வாங்கினான். நினைக்கும்பொழுதில், நினைக்கும் இடத்துக்கு அம்மாவை அழைத்துச்செல்ல அது ஏதுவாக இருந்தது.

ஆனாலும், நாகலட்சுமி, மகனின் திருமணப்பேச்சை மட்டும் எடுக்காமல் மிகுந்த கவனமுடன் செயல்பட்டார். அதுவே விக்னேஷுக்கு வசதியாகவும் இருந்தது. அவர் பாட்டுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யத்துவங்கிவிட்டால் வித்யாவின் நிலை.....? அதனால் அவன் திருமண விஷயத்தில் அம்மா கட்டிக்காக்கும் பொறுமைக்கு மனதளவில் நன்றி சொன்னான்.

வித்யாவை முன்பு போல் இப்போதெல்லாம் அடிக்கடி சந்திக்க முடிவதில்லை. அம்மாவுடன் வெளியில் செல்லும் காரணம் இவனுக்கு. அக்காவும் அவள் குழந்தைகளும் புனேயிலிருந்து வந்து வீட்டில் தங்கியிருப்பதால் அவர்களுடன் நேரத்தைச் செலவிடும் நிர்ப்பந்தம் வித்யாவுக்கு.

வெகுநாட்களுக்குப் பிறகு கடற்கரை சந்திப்புக்கு ஏற்பாடு செய்தனர்.

கடற்கரைக் காற்று இதமாக வீசினாலும், விக்னேஷ், வித்யா இருவரின் மனநிலையும் அதை ரசிக்கும்படி இல்லை. விக்னேஷின் பிரச்சனைக்கு வித்யாவால் ஓரளவு நிம்மதி கிடைத்திருந்த நேரத்தில், வித்யாவுக்கு அவள் அக்கா உருவில் புதுப்பிரச்சனை துவங்கியிருந்தது.

"விக்கி, வீட்ல ஒரே பிரச்சனை! எப்ப பாத்தாலும் அழுகை, புலம்பல்தான்! அத்தானுக்கு வேற பெண்ணோட தொடர்பு இருக்காம். ரொம்ப வருஷமா இருக்கு போல. அது இவளுக்கு இப்பதான் தெரியவந்திருக்கு. நேரடியாய்க் கேட்டுட்டாளாம். அவர், ஆமாம், அதுக்கென்ன இப்போங்கறாராம். உன்னோட வாழ்ந்தவரைக்கும் போதும்னு குழந்தைகள அழைச்சுட்டு கிளம்பி வந்துட்டா. அப்பாவுக்கும் எனக்கும் என்ன பண்றதுன்னு புரியலை. அப்பா அடுத்தவாரம் புனே போறார். பேசினாதான் அவர் என்ன சொல்றாருன்னு தெரியும்."

"உங்க அத்தான் மேல் தப்பிருக்காதுன்னு நினைக்கிறியா?"

"அப்படியும் இருக்கலாமில்லே....எங்க அக்காவுக்கு வாய் அதிகம், எல்லாத்தையும் எடுத்தோம், கவுத்தோம்னு பேசற டைப். அவ சொல்றது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியலையே!"

"நீ சொல்றதுதான் சரி. எதையும் ஆராயாம ஒரு முடிவுக்கு வரது சரியில்லைதான்! உங்கப்பா நல்ல செய்தியோடு வருவார்னு நம்புவோம்!"

"சரி, இப்ப எங்க அத்தை...அதான் உங்கம்மா எப்படி இருக்காங்க?"

"ம். நல்ல முன்னேற்றம் தெரியுதுப்பா. சாப்பாட்டில மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துகிட்டா போதும், இன்னும் சீக்கிரமா தேறிடுவாங்க."

"எப்படியோ...எல்லாப் பிரச்சனையும் சீக்கிரமா தீர்ந்து நம்ம கல்யாணம் நடந்தாப் போதும்னு இருக்கு எனக்கு!"

"அவ்வளவு அவசரமா உனக்கு?"

"ஏன், உங்களுக்கு அவசரமில்லையா? பிரபுவப் பாருங்க, எவ்வளவு சந்தோஷமா இருக்கார்னு, எனக்கு அவங்க ரெண்டுபேரையும் பார்த்தாலே கல்யாண ஆசை வந்திடுது."

"இங்கே பாரு, வித்யா, காதலிக்கிறதில் இருக்கிற சுகம் கல்யாணத்துக்கு அப்புறம் கிடைக்காது."

"ஆகா! ரொம்ப அழகுதான்! சீச்சீ, இந்தப்பழம் புளிக்கும்கிற மாதிரி இருக்கு.”

"எங்க, புளிக்குதான்னு பாக்கறேன்"

என்று கூறிக்கொண்டே வித்யாவின் கரத்தை எடுத்து முத்தமிட முனைய, அவள் வெடுக்கென்று இழுத்துக்கொண்டு,

"ஏதேது? ரொம்பத் தேறிட்டீங்க, போலயிருக்கு!" என்று அழகு காட்டினாள்.

"ஏய்! நீதானே சொன்னே?"

"ஆமாம், சொன்னேன், சொரைக்காய்க்கு உப்பில்லேன்னு... நேரமாச்சு, எழுந்திரிங்க,போகலாம்!"

இதற்குமேல் இங்கிருந்தால் ஆபத்து என்பதுபோல் வித்யா கிளம்பத்தயாராக, விக்கி பரிதாபமாய் அவளைப் பார்த்துக் கேட்டான்.

"என்னைப் பாத்தா உனக்கு பாவமாயில்லையாப்பா?"

"இல்லவே இல்லை. அம்மாகிட்ட சத்தியம் பண்ணிட்டு வந்து என்கிட்ட என்ன கொஞ்சல் வேண்டிக்கிடக்கு? கிளம்புங்க, நீங்க வரலைன்னா நான் போறேன்!"

"நீ போனதுக்கப்புறம் எனக்கென்ன வேலை? இரு, நானும் வரேன்!"

இருவரும் கடற்கரை மணலைத் தட்டிவிட்டு எழுந்து செல்லும் அழகை பின்புறத்திலிருந்து அலைகள் ஒன்றையொன்று முட்டி மோதியவண்ணம் கரைக்கு வந்து ரசித்துச் சென்றன.

கையில் செருப்பைப் பிடித்துக்கொண்டு மணலில் கால் புதைய ரசித்து நடந்தவளைத் தானும் ரசித்தபடியே உடன் நடந்த விக்னேஷை அவன் செல்போன் அழைத்தது.

"ஹலோ. விக்னேஷ்தான்! சொல்லுங்க!"

"எ....என்....என்ன.......என்ன....."

அதிர்ச்சியில் உறைந்து நின்றவனின் கையிலிருந்து போன் நழுவி விழ......வித்யா பதட்டமடைந்தாள்.

"என்ன விக்கி? யாரு? என்னாச்சு?"

“……………………”

"என்னப்பா? என்னாச்சு?"

"ஐயோ........பிரபூ......."

வித்யா அவனை உலுப்ப, அதிர்ச்சியிலிருந்து விடுபட்டவன், சட்டென்று மடிந்து அமர்ந்து அழத்துவங்க, எதுவும் புரியாமல் வித்யா தவிப்படைந்தாள்.

கீழே விழுந்த கைபேசியை எடுக்க......தொடர்பு துண்டிக்கப்படவில்லை என்பது புரிந்தது.படபடப்புடன் பேசினாள்.

"ஹலோ.....நான் விக்னேஷோட ஃபிரெண்ட் பேசறேன்! அவர்...அவர் பேசற நிலையில் இல்லை. என்ன விஷயம், சொல்லுங்க!"

"அய்யய்யோ...எப்போ......எந்த ஹாஸ்பிடல்?"

விவரம் சொன்னதும், "நாங்க உடனே வரோம்!" வைத்துவிட்டாள்.

விக்னேஷின் அருகில் சென்று அவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள். அவன் கண்ணீர் அவள் மார்பை நனைக்க, அவள் விழிவழிநீரோ. அவன் உச்சந்தலையை நனைத்தது.

அவ்வழியே சென்ற குடும்பம் ஒன்று இது ஒரு காதல் நாடகமென்று நினைத்து தூ என்று தூற்றிச் சென்றது. வித்யா எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன செய்வது என்பதில் இருந்தது அவள் கவனம்.

அவள் மனக்கண்ணில் சுந்தரி வந்துபோனாள். நிறைமாத கர்ப்பிணி! எப்படித்தாங்குவாள் இந்த இடியை? பெற்றவரை...உடன்பிறந்தவனை...ஊரை...உறவுகளை....எல்லாம் விட்டுவிட்டு நீயே தஞ்சம் என்று வந்தவளை நிராதரவாய் தவிக்கவிட்டுச் சென்றவன்மேல் கோபம் வந்தது. அப்படி என்ன அவசரம் அவனுக்கு? இத்தனைச் சீக்கிரம் இவ்வுலகை விட்டுப் பிரியவேண்டிய நிர்ப்பந்தம் என்ன? காலன் அவனுக்கு கார் வடிவத்திலா வரவேன்டும்?

போனவன் போய்விட்டான். இனி சுந்தரியின் எதிர்காலம்? என்ன பாவம் செய்தாளென்று இவ்வளவு பெரிய தண்டனை?
கேள்விகள் வித்யாவைக் குடைந்தன.

ஒருவாறாக விக்னேஷைத் தேற்றி மருத்துவமனை வந்தாயிற்று.

அங்கே மேலெல்லாம் ரத்தக்கறையுடன் ராஜாராம் நின்றிருந்தான். பிரபுவின் அலுவலக நண்பன். உறவினரைப் பார்க்க அவ்வழியே சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்ததாகக் கூறினான். பிரபுவின் பேரில்தான் தவறென்றான். எதற்கு அப்படியொரு அசுரவேகத்தில் பைக்கை ஓட்டிவந்தான் என்பது புரியவில்லை என்றான். தூக்கி எறியப்பட்டவனை குற்றுயிரும், குலையுயிருமாய் தான் தான் மருத்துவமனைக்கு கொண்டுவந்ததாகவும், வரும்போதே உயிர் பிரிந்துவிட்டதாகவும் கூறி அழுதான்.

விக்னேஷ் இன்னமும் அதிர்ச்சி மாறாமல் அமர்ந்திருந்தான். ஒரே நண்பன். எல்லா நற்குணங்களுக்கும் சொந்தக்காரன். நெஞ்சத்துணிவு மிக்கவன். எத்தனைக் கனவுகளோடு திருமண வாழ்க்கையில் அடியெடுத்துவைத்தான்....எல்லாமே கனவுகளாகவே போய்விட்டதே...... சுந்தரி......ஐயோ..... சுந்தரியை எப்படித் தேற்றுவது? அவள் எப்படித் தாங்குவாள்? அந்த அப்பாவிப் பெண்ணுக்கு இது தெரியுமா?

இன்னும் அவளிடம் சொல்லவில்லை என்றான் ராஜாராம். அவளிடம் இந்தத் துக்கத்தை எப்படிச் சொல்வது? தாங்குமா அவளது சின்னஞ்சிறு இதயம்? அதிர்ச்சியில் ஏதாவது ஆபத்து நேர்ந்துவிட்டால்......

சுந்தரியின் பெற்றோர் ஊரைவிட்டுப் போன செய்தியையே அவளிடம் சொல்லவேண்டாமென்றாயே பிரபு! இப்போது நீ திரும்பி வரவே முடியாத இடத்துக்குப் போய்விட்டாய் என்ற செய்தியை நான் எப்படி அவளிடம் சொல்வேன்? அவளைக் கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக்கொண்டாயே..... இனி அவள் காலமெல்லாம் கண்ணீர் விடுவதை நாங்கள் காணநேருமே! கை, கால் இழந்து முடமாகவேனும் அவள் கண்முன் வளையவந்திருக்கக் கூடாதா? இப்படியா கண்மூடித் திறப்பதற்குள் கண்மறைந்து போகவேண்டும்?

பிரபு...என் உயிர் நண்பா....என்னைத் தவிக்கவிட்டுப் போய்விட்டாயே.....'விக்னேஷின் உள்மனம் ஓயாமல் அரற்றிக்கொண்டே இருந்தது.

**********************************************************************

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன் இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமைஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

சுடர்விழி
05-06-2010, 12:26 AM
பிரபுவுக்கு இப்படியா ஆக வேண்டும்???சுந்தரி இனி என்ன செய்வாள்????இந்த அத்தியாயம் படித்து மனம் கனத்தது..(ஆனாலும் இவ்ளோ சீக்கரம் பிரபு கதைய நீங்க முடிச்சிருக்க கூடாது...)

govindh
05-06-2010, 12:39 AM
ஐயோ.....ஏன்....?
பிரபு...?!
நாகலட்சுமியின் சாபம் பலித்து விட்டதா...?
சுந்தரி எப்படித் தாங்கிக் கொள்வாள்....?

அது பிரபு இல்லை...அல்லது எல்லாம் ஒரு கனவு தான்...என்று தயவுசெய்து எப்படியாவது கதையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
காதல் பறவைகள் மகிழ்வாக வாழட்டும்....

மதி
05-06-2010, 02:52 AM
என் உங்களுக்கு கொலை வெறி. இப்படியா பிரபுவை கொல்றது? அப்படி எதற்காக பேய் வேகத்தில் வண்டி ஓட்டி சென்றான் பிரபு.? சுந்தரி நிலை தான் பாவம்.

சிவா.ஜி
05-06-2010, 06:09 AM
எதிர்பாராத அதிர்ச்சி. சுந்தரியை எப்படித் தேற்றப்போகிறீர்கள்...அல்லது அவளுக்கு ஏதோ பிரச்சனையால்தான் பிரபு அவ்வளவு வேகத்தில் வண்டியை ஓட்டினானா...

அழகாய் பூத்துக்குலுங்கிய நந்தவனமாய் இருந்தவர்களின் வாழ்க்கையில் இப்படி புயல்வீசுகிறதே...

பதைபதைக்க வைத்த அத்தியாயம்...

கீதம்
06-06-2010, 12:49 AM
பிரபுவுக்கு இப்படியா ஆக வேண்டும்???சுந்தரி இனி என்ன செய்வாள்????இந்த அத்தியாயம் படித்து மனம் கனத்தது..(ஆனாலும் இவ்ளோ சீக்கரம் பிரபு கதைய நீங்க முடிச்சிருக்க கூடாது...)


ஐயோ.....ஏன்....?
பிரபு...?!
நாகலட்சுமியின் சாபம் பலித்து விட்டதா...?
சுந்தரி எப்படித் தாங்கிக் கொள்வாள்....?

அது பிரபு இல்லை...அல்லது எல்லாம் ஒரு கனவு தான்...என்று தயவுசெய்து எப்படியாவது கதையில் மாற்றத்தைக் கொண்டு வாருங்கள்.
காதல் பறவைகள் மகிழ்வாக வாழட்டும்....


என் உங்களுக்கு கொலை வெறி. இப்படியா பிரபுவை கொல்றது? அப்படி எதற்காக பேய் வேகத்தில் வண்டி ஓட்டி சென்றான் பிரபு.? சுந்தரி நிலை தான் பாவம்.


எதிர்பாராத அதிர்ச்சி. சுந்தரியை எப்படித் தேற்றப்போகிறீர்கள்...அல்லது அவளுக்கு ஏதோ பிரச்சனையால்தான் பிரபு அவ்வளவு வேகத்தில் வண்டியை ஓட்டினானா...

அழகாய் பூத்துக்குலுங்கிய நந்தவனமாய் இருந்தவர்களின் வாழ்க்கையில் இப்படி புயல்வீசுகிறதே...

பதைபதைக்க வைத்த அத்தியாயம்...

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. உங்களையெல்லாம் வருந்தவைக்கவேண்டுமென்ற எண்ணமில்லை. கதையை முன்பே தீர்மானித்துவிட்டிருந்தேன்.

சொல்லப்போனால் சுந்தரிதான் இக்கதையின் மையப்பாத்திரம். அவளைப் போன்ற ஒரு அப்பாவிப்பெண் இப்படியொரு இக்கட்டான சூழலில் தன் வாழ்க்கையை எப்படித் திறம்பட சமாளிக்கிறாள் என்பதைக் காட்டவே எண்ணினேன்.

சுந்தரி என்றே கதைக்குத் தலைப்பிடவும் நினைத்தேன். ஆனால் அப்படி இருந்தால், ஒரு எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே உண்டாகிவிடும் என்பதால் அதைத் தவிர்த்தேன்.தொடர்ந்து வருவதற்கு என் மனமார்ந்த நன்றி.

கீதம்
06-06-2010, 12:52 AM
அத்தியாயம் 15

வித்யாவோ எதையும் நம்பமுடியாதவளாய் நின்றிருந்தாள். அவனைப் பார்த்து முழுதாய் ஒருமணி நேரம் ஆகியிருக்குமா? எத்தனை சந்தோஷத்துடன் வீடு சென்றான். அப்படி என்னதான் அவசரவேலையோ அவனுக்கு? பிரபு சுந்தரி தம்பதியைப் பார்த்தாலே கல்யாண ஆசை வருகிறதென்று சொன்னேனே! சொல்லி வாய் மூடவில்லையே! அதற்குள் போய்ச் சேர்ந்துவிட்டானே!

ராஜாராம் அதிர்ச்சியிலிருந்தாலும் அடுத்து செய்ய வேண்டியதைப் பற்றி யோசித்தான். சுந்தரியிடம் யார் போய் சொல்வது? எப்படிச் சொல்வது? எல்லோருடைய மனமும் சுந்தரியை எண்ணி இரங்கிற்று. சுந்தரியை அழைத்துவர யாராவது போகவேண்டும் என்றான்.

விக்னேஷின் உடைந்த மனநிலை இந்த சமயத்தில் உதவாது என்றான். பெண் என்பதாலும், இப்போதைக்கு வித்யா சற்று திடமனநிலையில் இருப்பதால் சூழ்நிலையை பக்குவமாய்க் கையாளுவது சாத்தியம் என்றும் சொல்லி வித்யாவை அனுப்ப யோசனை சொன்னான். சுந்தரி வந்து உறுதி செய்து கையெழுத்திட்ட பின் தான் பிரேதப் பரிசோதனை செய்து உடலை ஒப்படைப்பார்கள் என்றான்.

இப்படி ஒரு கோரநிலையில் பிரபுவைப் பார்த்தால் சுந்தரிக்கு இதயமே நின்றுவிடும் என்று விக்னேஷும் வித்யாவும் பயந்தனர்.

பலவழிகளையும் யோசித்து ஒன்றுமே புலப்படாத நிலையில் வித்யா, சுந்தரியை அழைத்துவர சம்மதித்தாள். அதற்கிடையில் அப்பாவுக்கு போன் செய்து விவரம் சொல்லி வீட்டுக்கு இன்றிரவு வர இயலாத நிலையைத் தெரிவித்தாள். அவர் தானும் வருகிறேன் என்றபோது, அவருக்குச் சிரமம் வேண்டாமென்று மறுத்துவிட்டாள்.

விக்னேஷ் அம்மாவிடம் என்ன சொல்வதென்று தெரியாமல் தவித்தான். அதிர்ச்சியில் அவருக்கு ஏதாவது பிரச்சனை வந்துவிட்டால் என்னசெய்வதென்ற பயத்துடனே வீட்டுக்குச்சென்று அம்மாவிடம் விஷயத்தைச் சொன்னான். பிரபுவின் அகால மரணச் செய்தியைக் கேட்டதுமே அவரது கை கால்கள் வெடவெடவென்று நடுங்கின. விக்னேஷின் கைகளை இறுகப்பிடித்துக்கொண்டார். நீ என்னைவிட்டுப்போய்விடாதே என்று ஏதேதோ சொல்லிப் புலம்பி அழ ஆரம்பித்துவிட்டார். விக்னேஷுக்கு அம்மாவை எண்ணி பயம் வந்துவிட்டது.

பக்கத்து விட்டு மனோகரி அக்காவும், அவள் கணவரும் உதவிக்கு வந்தனர். இருவரும் அன்றிரவு அம்மாவுடனேயே தங்கியிருந்து அவரைப் பார்த்துக்கொள்வதாக உறுதி அளித்தனர். அம்மாவைப் பற்றிக் கவலைப்படாமல் மற்ற காரியங்களைப் பார்க்குமாறு அவனுக்கு ஆறுதல் கூறினர். மனம் நிறைந்த நன்றிகளுடன் விக்னேஷ் அங்கிருந்து வெளியேறினான்.

வித்யா ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்துகொண்டு பிரபுவின் வீட்டுக்கு விரைந்தாள். சுந்தரியிடம் எப்படிச் சொல்வது என்று புரியவில்லை. வீட்டுக்கார கோமதியம்மா மிகவும் தங்கமானவர் என்று அறிந்திருந்தாள். அவர் உதவியுடன் சொல்லலாம். ஆனாலும்......ஆனாலும்.......

திடுக் திடுக்கென்று அடித்துக்கொள்ளும் நெஞ்சைப் பற்றியவாறே வாசலில் நிறுத்தச் சொல்லி இறங்கினாள்.
எதிர்பார்த்திருந்தவர் போல் தவிப்புடன் வாசலுக்கு ஓடிவந்த கோமதியம்மா இவளைப் பார்த்ததும், சற்றே ஏமாற்றத்துடன் பின்வாங்கியவராய்,

"யாரும்மா?" என்றார்.

"நான் பிரபுவோட ஆபிஸில் வேலை பாக்கறேன். அவரோட ஃபிரெண்ட். சுந்தரி இருக்காங்களா?"

"வாம்மா, பிரபு தம்பி அனுப்புச்சா, உன்னய? சீக்கிரம் வாம்மா...அந்தப் பொண்ணு கெடந்து துடியாத் துடிக்குது. போன புள்ளய காணோமேன்னு தவிச்சிட்டிருக்கேன். அப்பவே வலி வந்திட்டுது. அவசரத்துக்கு ஒரு ஆட்டோவக் கூப்புடுங்க தம்பின்னா....ஆங், ஆட்டோவெல்லாம் குலுக்கிப்போடும், எம்பொண்டாட்டிக்கு கார் புடிச்சுச்சிட்டு வரேன்னு போச்சு! தம்பிதானே அனுப்பிச்சுது?"

அவர் மறுபடியும் கேட்க, வித்யாவுக்கு நிலைமையின் தீவிரம் உறைத்தது. பிரபுவின் அசுரவேகத்துக்கான காரணம் புரிந்தது. இந்த நிலையில் அவரிடம் என்னவென்று சொல்வது? சமயோசிதமாய் முடிவெடுத்த வித்யா,

"ஆமாம்மா, அவர்தான் அனுப்பினார்! சீக்கிரமா அவங்களை கூட்டிட்டு வாங்க!"

என்று அவசரப்படுத்தினாள்.

அந்தம்மா ஏற்கனவே தயாராய் வைத்திருந்த மாற்றுத்துணி, ஃபிளாஸ்க் இத்யாதி அடங்கிய பைகளை எடுத்து வித்யாவிடம் தந்துவிட்டு சுந்தரியை அழைக்கப் படியேறினார். வித்யா கார் டிரைவரிடம் "பக்கத்திலிருக்கும் லக்ஷ்மி மெடர்னிடி ஹாஸ்பிடலுக்குப் போகணும்" என்று சொல்லிவிட்டு, கீழே வந்த சுந்தரியை கைத்தாங்கலாய் அழைத்து காருக்குள் அமரவைத்தாள்.

சுந்தரி வேதனையில் முனகிக்கொண்டு இருந்தாள். அந்த வேதனையிலும், இவளைப் பார்த்து, "வாங்க அக்கா!" என்றதும் மளுக்கென்று கண்ணீர் எட்டிப்பார்த்தது வித்யாவின் கண்களில்.

சுந்தரி பல்லைக் கடித்துக்கொண்டு முகத்தைச் சுழித்தாள். அவள் பெரும் அவஸ்தையில் இருக்கிறாள் என்பது புரிந்தது. இடையிடையே, "அவரு வரலையா? அவரு எங்க?" என்று கேட்க, வித்யா பதிலுரைக்க இயலாமல் தவித்தாள். நிலைமை புரியாதவராய் கோமதியம்மாவும்,

"உம் புருஷன்தானே? ஆட்டோவில வந்தா குலுங்கும், எம்பொண்டாட்டி கஷ்டப்படுவான்னு சொன்னவர்தானே! இப்போ முன்கூட்டியே ஆஸ்பத்திரியில படுக்கை எல்லாம் மெத்துனு இருக்கா...எம்பொண்டாட்டிக்கு உறுத்தாம இருக்கான்னு அங்கயே படுத்துப் பாத்து செக் பண்ணிட்டிருக்காரோ, என்னமோ...."

என்று கிண்டல் செய்து சிரிக்க, வித்யாவின் கண்கள் சட்டென கண்ணீரை உகுத்தன. அதை அந்தம்மா கவனித்துவிட்டார்.

"உனக்குக் கல்யாணமாயிடுச்சாம்மா?"

"இல்லைங்க!" தலை கவிழ்ந்தபடியே பதில் சொன்னாள் வித்யா.

"அதான்...பயப்படுறே போல இருக்கு. எல்லாம் கல்யாணமானா சரியாப்போயிடும். இந்த வேதனையெல்லாம் குழந்தை நல்லபடியாப் பொறந்து, அதைக் கையில தூக்கின மறுநிமிஷமே மறந்திடும்! அம்மா, சுந்தரி....கொஞ்சம் பொறுத்துக்கோ! தோ...ஆஸ்பத்திரி வந்திடுச்சி!"

பரிசோதனைக்குப்பின் உடனேயே லேபர் வார்டுக்கு அனுப்பப்பட்டாள், சுந்தரி. கோமதியம்மா, சுந்தரியின் கூடவே இருந்து தான் பெற்ற பெண்ணைப்போல் கவனித்துக்கொண்டார். அவரிருக்கும் தைரியத்தில் வித்யா சற்று நிம்மதி அடைந்தாள்.பிரபு எங்கே என்ற அவரது கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் அவள் தவிப்பதைப் புரிந்துகொண்டவர்போல் அந்தம்மா மெற்கொண்டு எதுவும் கேட்காமல் இருந்துவிட்டார்.

வித்யா ராஜாராமுக்கு போன் செய்து விஷயத்தைச் சொல்ல சிக்கல் புரிந்து அனைவரும் கையைப் பிசைந்துகொண்டு நின்றனர்.

சுந்தரியின் நிலை மிகவும் மோசமாயிருந்தது. சுகப்பிரசவம் நிகழ வழியில்லாமல் போயிற்று. அறுவை சிகிச்சை செய்ய அவள் கணவனின் கையொப்பம் தேவை என்று சொல்ல, வித்யா இருதலைக்கொள்ளி எறும்புபோல் தவித்தாள். மனைவியின் கையொப்பத்துக்காக கணவனின் சடலம் அங்கே காத்திருக்க, கணவனின் கையொப்பத்துக்காக மனைவி இங்கே மறுபிறவிக்குக் காத்திருக்க....எதை எப்படிக் கையாள்வது என்பதில் வித்யா மட்டுமல்ல...அனைவருமே குழம்பிப்போயினர்.

******************************************************************************

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.

மு.வ உரை:
அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல் வன்மை ஆகிய இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

சுடர்விழி
06-06-2010, 01:06 AM
மனசு கனத்துப் போச்சு இந்த அத்தியாயம் படிச்சு.....அருமையான நடை...ஒவ்வொருவருடைய உணர்வுகளையும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க..

அன்புரசிகன்
06-06-2010, 01:14 AM
அடக்கடவுளே... பனையால் விழுந்தவனை மாடு முட்டிய கதையாகவல்லவா இருக்கிறது... மிகவும் பாரதூரமான அத்தியாயம் இது... கடந்த இரு அத்தியாயங்களையும் ஒன்றாக படித்தேன்... கதை அழகாக நகர்கிறது. தொடருங்கள்...

மதி
06-06-2010, 05:58 AM
இப்படி ஒரு நிலைமையா..? உண்மையிலேயே கஷ்டமான சூழ்நிலை தான்...
வித்யா என்ன செய்ய போகிறாள்?

சிவா.ஜி
06-06-2010, 06:11 AM
உண்மையிலேயேப் பதற வைத்த அத்தியாயம். ரொம்ப ரொம்ப அருமையாக் கையாண்டிருக்கீங்க...பிரபுவின் மரணத்தைப் பற்றி எப்படி சொல்வதென்ற தயக்கம், சுந்தரியின் இக்கட்டான நிலை...அங்கு மனைவியின் கையெழுத்துத்தேவை, இங்கு கணவனின் கையெழுத்துத் தேவை.....படிக்கப் படிக்கப் பதட்டம் என்னையும் தொற்றிக்கொண்டது.

சாதாரண குடும்பக்கதை என்று சொல்லிவிட்டு.....பரபரப்புக்குப் பஞ்சமில்லாத...அருமையானக் கதையைப் படைக்கும் தங்கைக்கு வாழ்த்துக்கள்.

govindh
06-06-2010, 08:26 AM
"மனைவியின் கையொப்பத்துக்காக கணவனின் சடலம் அங்கே காத்திருக்க, கணவனின் கையொப்பத்துக்காக மனைவி இங்கே மறுபிறவிக்குக் காத்திருக்க....எதை எப்படிக் கையாள்வது என்பதில் வித்யா மட்டுமல்ல...அனைவருமே குழம்பிப்போயினர்."

மனம் பதைபதைக்கிறது...
அடுத்து என்ன நடக்கப் போகிறது....?
தொடருங்கள்.....

பா.ராஜேஷ்
06-06-2010, 10:41 AM
இரு அத்தியாயங்களையும் ஒன்றாக படித்தேன்... இதயம் கனத்தது உண்மை... சோகத்தை மிகவவும் அருமையாக வார்த்தைகளால் வடித்து விட்டீர்கள்... அடுத்து என்ன ஆகுமோ??

Akila.R.D
06-06-2010, 11:56 AM
பரீட்சை காரணமாக அவ்வப்போது வந்து படித்தாலும் பின்னூட்டம் இட இயலவில்லை...

கதையில் இப்படி திடீர் திருப்பங்கள் வரும் என எதிர்பார்க்கவில்லை...

நல்ல நடை...

தொடருங்கள்...

கீதம்
06-06-2010, 09:32 PM
பின்னூட்டமிட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. இதோ, அடுத்த அத்தியாயத்தைப் பதித்துவிடுகிறேன். தொடர்ந்துவந்து கருத்துப் பதிவிடுங்கள்.

கீதம்
06-06-2010, 09:33 PM
அத்தியாயம் 16

இப்போது பிரபுவின் மரணம் பற்றித் தெரியவந்தால் மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது பிரச்சனை செய்யலாம் அல்லது அவர்கள் மூலம் சுந்தரிக்கு உடனடியாய் தெரியவரலாம் என்பதால் விஷயத்தை வெளியில் சொல்லவேண்டாம் என்று நினைத்தாள், வித்யா.

இறந்தவனைப் பற்றிக் கவலைப்படுவதை விடவும், உயிருடன் இருப்பவளைக் காப்பாற்றுவதே முதற்காரியம் என்று உணர்ந்தவளாய், விக்னேஷை, சுந்தரி இருந்த மருத்துவமனைக்கு வரவழைத்தாள். சுந்தரியின் அறுவை சிகிச்சைக்கான அனுமதிப் பத்திரத்தில் அவனையே கையெழுத்து போடச்சொன்னாள். விக்னேஷ் நிலைகுலைந்து போயிருந்ததால் வித்யா எதைச் சொன்னாலும் செய்யும் நிலையில் இருந்தான்.

ஒருவழியாய் அறுவை சிகிச்சை முடிந்து தாயும் சேயும் நலம் என்ற செய்தி கேட்ட பின் தான் வித்யாவின் இதயத்துடிப்பு இயல்புநிலைக்கு வந்தது.

அழகான பெண் குழந்தை! தந்தையின் மரணத்தில் தான் ஜனித்த விவரம் அறியாமல் அமைதியாய் உறங்கும் சிசுவைப் பார்த்து கண்ணீர் வடித்தாள், வித்யா.

சுந்தரி மயக்க நிலையிலிருந்தாள். உதவிக்கு வந்த வீட்டுக்காரம்மாவிடம் கரங்குவித்து நன்றி சொன்ன வித்யாவும், விக்னேஷும் அவரிடம் பிரபுவின் துயரச் செய்தியை சொல்ல, அவர் பெருங்குரலெடுத்து அழத்துவங்க, அவசரமாய் அவரை அடக்கினர். அவர் அழுதால் காரியம் கெட்டுவிடும் என்று அஞ்சினர். அவரும் நிலைமையைப் புரிந்துகொண்டு பக்குவமாய் நடந்துகொண்டார்.

**********************************************************

பிரபுவின் அலுவலக நண்பர்கள் அத்தனைப் பேரும் வந்திருந்து உதவினர். பிரபுவின் நிலைதான் கேள்விக்குறியாகிப் போனது. சுந்தரி இருக்கும் நிலையில் அவளிடம் சொல்வதே சரியில்லை என்பதால் பிரபுவின் பெற்றோருக்குச் சொல்வது என்ற முடிவுக்கு வந்தனர். என்னதான் பிள்ளை மேல் கோபமிருந்தாலும், இந்த நிலையில் மனம் இரங்கித்தானே ஆகவேண்டும். துக்ககரமான செயல்தான் என்றபோதும் நிச்சயம் மறுக்கமாட்டார்கள் என்று நம்பினர்.

பிரபுவின் பெற்றோருக்கு போன் செய்து நிலைமையைச் சொன்னார்கள். அவர்களோ, வாயில் வந்ததை எல்லாம் பேசி சுந்தரியை சபித்தார்களே தவிர, மகனுக்காகத் துளியும் துக்கப்பட்டவர்களாகத் தெரியவில்லை. தங்கள் மகனை சுந்தரிதான் கொலை செய்ததுபோல் பேசினார்கள், ஏசினார்கள். அவளை மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் ஜாதகத்தையும் பாதகம் என்றனர். அவர்களது பேச்சு பொறுக்கமுடியாத விக்னேஷ், சடாரென்று கேட்டுவிட்டான்,

"உங்க பிள்ளையோட உடம்பு இங்க இருக்கு! வந்து வாங்கிக்கிற எண்ணம் இருக்கா, இல்லையா உங்களுக்கு?"

"எங்க புள்ளய உயிரோட பறிச்சிட்டு இப்ப பொணமாக் குடுக்குறாளா? எப்ப அவன் அந்த வேலைக்காரக் கழுததான் ஒசத்தின்னு எங்களை அவமானப்படுத்திட்டுப் போயிட்டானோ, அப்பவே நாங்க அவன தலமுழுகியாச்சி. இப்ப அங்க இருக்கிறது எங்க புள்ள இல்ல...அந்த தளுக்கு சுந்தரியோட புருஷன்....அவளே அவனுக்கு கொள்ளி போடட்டும், எங்க வயித்தெரிச்சல் அவள சும்மா வுடாது...அவ....நாசமா...."

போனை வைத்துவிட்டான். இனி இவர்களிடம் பேசிப் பயனில்லை. அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. சுந்தரி மருத்துவமையிலிருந்து வரும்வரை உடலை பதப்படுத்தி வைத்திருக்கலாம் என்ற யோசனையை வித்யா, விக்னேஷ் இருவருமே நிராகரித்தனர். கணவன் இறந்துவிட்டான் என்பதே பெரும் அதிர்ச்சிதான். அதனிலும் அதிர்ச்சி கொடுக்கும்விதமாய் முகம் நசுங்கி, கோரமாய் இறந்திருப்பவனைப் பார்த்து பிள்ளை பெற்றவளுக்கு ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிடடால்....

பலத்த யோசனைக்குப் பிறகு நண்பனின் ஈமகாரியங்களைத் தாங்களே செய்வது என்ற முடிவுக்கு வந்து அதற்கான முறையான ஏற்பாடுகள் செய்து காரியத்தை முடித்தனர். இறந்துபோனவனின் முகத்தைக்கூட தன் கண்ணில் காட்டாமல் அவனுக்கு இறுதிச்சடங்கு நிகழ்த்திவிட்டதற்காக சுந்தரி எந்தத் தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்வதென்று மனதைத் திடப்படுத்திகொண்டனர்.

**********************************************************


கண்விழித்தபோதெல்லாம், 'அவரு எங்க? அவரு எங்க? " என்று தேடித்தவித்த சுந்தரியை சமாளிப்பதுதான் பெரும்பாடாய் இருந்தது. அவசர வேலை விஷயமாய் டெல்லி போயிருக்கிறானென்றும், இன்னும் ஒரு வாரத்தில் வந்துவிடுவானென்றும் ஆளாளுக்கு மாறி மாறி ஒரே பொய்யைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

முதலில் நம்பமாட்டேன் என்று அடம்பிடித்தவள், பின் என்ன நினைத்தாளோ, அப்படியே அடங்கிப்போனாள். அவ்வப்போது குழந்தையை எடுத்து உச்சி முகர்ந்து கண்ணீர் விடுவாள். பின் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்துவிடுவாள். வித்யா, தன் அக்காவின் உதவியுடன் சமையல் செய்து மருத்துவமனைக்கு எடுத்துவந்தாள்.

வீட்டுக்காரம்மா குழந்தைத் துணியைத் துவைத்துக் காயவைத்துவிட்டு வந்து சுந்தரியின் அருகில் அமர்ந்தார். குழந்தையை எடுத்து அவளருகில் கிடத்தி பாலூட்டச் செய்தார்.பின் ஒரு தம்ளரில் ஜூஸ் எடுத்துக் கொடுத்துக் குடிக்கச் சொன்னார்.

"நான் மாட்டேன்! எங்க வீட்டுக்காரரு எங்க போனார்னு தெரிஞ்சாதான் நான் குடிப்பேன். யாருமே என்கிட்ட எதுவும் சொல்லமாட்டேங்கறீங்க, எனக்கு கவலையா இருக்கு!"

“சுந்தரி…………! உம்புருஷன் உனக்கு கார் அழைக்கப்போனாருல்ல.... அப்போ...அவங்க மானேஜர்கிட்ட இருந்து அவசரமா போன் வந்துச்சாம்! முக்கியமான வேலையாம். டெல்லி போவணுமின்னு. இவரு எவ்வளவோ சொல்லியிருக்காரு. அதெல்லாம் இல்ல... நீ வந்துதான் ஆவணும்னு சொல்லிட்டாராம். சரின்னுதான் இந்த வித்யாப்பொண்ணுகிட்ட சொல்லி உன்னைப் பாத்துக்கச் சொல்லிட்டு அங்கிருந்தபடியே கெளம்பிட்டாராம்!"

இந்தக்கதையை சிறுபிள்ளையும் நம்பாது என்று அறியாதவர்போல் சுந்தரிக்கு கதை சொல்லிக்கொண்டிருந்தார் அந்தம்மாள். அறைக்குள் நுழைந்த வித்யாவுக்கு அவரின் நிலையைப் பார்த்தாலும் பரிதாபமாயிருந்தது.

தன் வீட்டை விட்டுவிட்டு, வயதான கணவரை விட்டுவிட்டு துளியும் உறவில்லாத இவர்களுக்காக அவர் ஏன் கஷ்டப்படவேண்டும்? கண்விழித்துப் பார்த்துக்கொள்ளவேண்டும்? குழந்தைத்துணி துவைக்கவேண்டும்? உலகத்தில் இதுபோல் தன்னலம் கருதாதவர்கள் இருப்பதால்தான் உலகம் இன்றும் உயிர்ப்புடன் இயங்குகிறது என்று நினைத்துக்கொண்டாள்.

"அவரு எங்கிட்ட சொல்லாம போகமாட்டாரு. எல்லாரும் சேர்ந்து என்னவோ என்கிட்டயிருந்து மறைக்கிறீங்க, சொல்லுங்கம்மா......எனக்கு ரொம்ப பயமா இருக்கு!"

அந்தம்மா வாயைத் திறக்குமுன் வித்யா சொன்னாள்,
"சுந்தரி, நீ இப்படிக் கவலைப்படுவேன்னுதான் பிரபு உங்கிட்ட சொல்லலை.”

"அக்கா...."

“நீ இப்படி சாப்பிடாம, கொள்ளாம உடம்பைக் கெடுத்துகிட்டா குழந்தைக்குதான் கஷ்டம்! முதல்ல ஜூஸைக்குடி"

இந்த ஒரு வாரத்தில் சுந்தரியை வா...போ....' என்று ஒருமையில் அழைக்கும் அளவுக்கு நெருங்கிப் பழகியிருந்தாள் வித்யா. தன்னை விடவும் அவள் பல வயது இளையவள் என்பதை விடவும், அவளை தன் உடன்பிறந்தவளாகவே நினைத்ததே காரணம்.சுந்தரியும் வாய்க்கு வாய் வித்யாவை, 'அக்கா, அக்கா' என்றழைத்து தன் பாசத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனாலும் சுந்தரியிடமிருந்து அனைவரும் எதையோ மறைப்பதை அவளால் உணரமுடிந்தது.

'எந்தப் புருஷனாவது தன் பெண்டாட்டி தலைப்பிரசவத்துக்கு துடிச்சிட்டிருக்கும்போது அவகிட்ட சொல்லாம கொள்ளாம தூரப்பயணம் போவானா? என் புருஷன் போயிருக்கிறதா அத்தனைப்பேரும் சொல்றாங்களே! இது எப்படி சாத்தியம்? எனக்கு வலி எடுத்தபெறகு கார் புடிக்கப்போனவருக்கு என்னவோ ஆயிருக்குது, என்னாதது? ஏதாவது அடிபட்டு ஆஸ்பத்திரியில இருக்காரா? அப்படின்னா...என்னோட போன்லயாவது பேசியிருப்பாரே? இல்லையே! எப்போ கேட்டாலும் அவரிருக்கிற இடத்தில சிக்னல் கிடைக்கலைன்னு சொல்லி மழுப்புறாங்க!

ஒருவேள........அவரு உயிரோடவே இல்லையா? கடவுளே! நான் தான் இலவு காத்த கிளி மாதிரி காத்துகிட்டிருக்கேனா? அவரு வரப்போறதே இல்லையா?

சீச்சீ! ஏன் அப்படி நினைக்கணும்? அப்படியெல்லாம் இருக்காது. இப்படியா எல்லாரும் ஒத்தாப்போல பொய் சொல்லி என்னை ஏமாத்துவாங்க? ரொம்ப அடிபட்டு பேசமுடியாத நெலமையில அவர் இருக்கணும். அதான் என்கிட்ட சொன்னா நான் கவலைப்படுவேன்னு எல்லாரும் மறைக்கிறாங்க. ஆனா .....ஆனா......

சுந்தரி கவனித்த இன்னுமொரு விஷயம்....குழந்தை பிறந்தபிறகு ஒரு குடும்பத்தில் நிகழும் இயல்பான கொண்டாட்டம் எதுவுமே இல்லையென்பது. குழந்தையைக் கொஞ்சும்போது கூட அதன் அப்பாவைப் பற்றிய பேச்சை அனைவருமே கவனமாகத் தவிர்க்கிறார்கள். எப்போதும் ஏதோ ஒரு சோகம் அனைவர் முகத்திலும் இழையோடிக்கொண்டிருக்கிறது. அப்படியென்றால்......

‘எதை நம்புறது, எதை நம்பாமலிருக்கிறது? அவரு இல்லாத வாழ்க்கை என்ன வாழ்க்கை? அவரு மட்டும் உயிரோட இல்லைன்னா...... நானும் அவரோட போய்ச் சேர்ந்திடுவேன்.’

"ஞ்ஞா………..ஆ………..... ஞ்ஞா……………….ஆ…………......."

குழந்தையின் அழுகை சுந்தரியின் கவனத்தைக் கலைத்தது. தவிப்புடன் குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டாள். 'என் கண்ணம்மா! ஒன்ன விட்டுட்டுப் போவேனாடி, என் தங்கமே! என்னென்னமோ யோசிச்சேன், பாரு! நான் ஒரு பைத்தியக்காரிடி!"

குழந்தையின் உச்சியில் முத்தமிட்டாள். வழிந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.இனி பிரபுவைப் பற்றி எவரிடமும் எதையும் கேட்கப்போவதில்லை என்று முடிவெடுத்தவளாய் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினாள்.

எப்படியோ ஒரு வாரம் ஓடிவிட்டது. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துப்போகலாம் என்று கூறியதும், விக்னேஷும், வித்யாவும் இனி எப்படி இந்தப் பிரச்சனையைச் சமாளிப்பது என்று கவலைப்படத் தொடங்கினர்.

*******************************************************************************************
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.

மு.வ உரை:
தன்னை அடுத்தப் பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.

govindh
06-06-2010, 10:32 PM
மனம் கனக்கும் பகுதிகள்....கடந்து கொண்டிருக்கிறது....
நேர்த்தியாக கதை அமைக்கும் விதம் அருமை...
பாராட்டுக்கள்.
தொடருங்கள்....

மதி
07-06-2010, 03:44 AM
இக்கட்டான சூழ்நிலை... உங்கள் விவரிப்பு மனம் பதைபதைக்க செய்கிறது... தொடருங்கள்... சுந்தரியின் போராட்டங்களை..!

சிவா.ஜி
07-06-2010, 05:53 AM
கடைசியாக கணவனின் முகம்கூட பார்க்க முடியாமல் போனதை சுந்தரி எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்...அவளை மற்றவர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..

கனமான நிகழ்வுகள்...உங்கள் விவரிப்பில் கண்முன்னேத் தெரிகிறது. இக்கட்டான சூழலை...வெகு அழகாய்க் கையாளுகிறீர்கள்.

தொடருங்கள்...தொடர்கிறோம்....

பா.ராஜேஷ்
07-06-2010, 09:42 PM
சுந்தரிக்கு ஓரளவு மன தைர்யம் வந்ததாக தோன்றுகிறது... ஆனாலும் அந்த செய்தியை கேட்டு எப்படி தாக்கு பிடிக்க போகிறாளோ!? பாவம்தான்..

கீதம்
07-06-2010, 10:17 PM
மனம் கனக்கும் பகுதிகள்....கடந்து கொண்டிருக்கிறது....
நேர்த்தியாக கதை அமைக்கும் விதம் அருமை...
பாராட்டுக்கள்.
தொடருங்கள்....


இக்கட்டான சூழ்நிலை... உங்கள் விவரிப்பு மனம் பதைபதைக்க செய்கிறது... தொடருங்கள்... சுந்தரியின் போராட்டங்களை..!


கடைசியாக கணவனின் முகம்கூட பார்க்க முடியாமல் போனதை சுந்தரி எப்படித் தாங்கிக்கொள்ளப்போகிறாள்...அவளை மற்றவர்கள் எப்படி சமாளிக்கப்போகிறார்கள்..

கனமான நிகழ்வுகள்...உங்கள் விவரிப்பில் கண்முன்னேத் தெரிகிறது. இக்கட்டான சூழலை...வெகு அழகாய்க் கையாளுகிறீர்கள்.

தொடருங்கள்...தொடர்கிறோம்....


சுந்தரிக்கு ஓரளவு மன தைர்யம் வந்ததாக தோன்றுகிறது... ஆனாலும் அந்த செய்தியை கேட்டு எப்படி தாக்கு பிடிக்க போகிறாளோ!? பாவம்தான்..

பின்னூட்டங்களுக்கு மிகவும் நன்றி நண்பர்களே.

என்னதான் கதை மாந்தர்களாய் இருந்தபோதும், கற்பனையில் அந்த நிகழ்வைக் கொண்டுவருகையில் எனக்கும் மனம் கனத்துப் போகிறது. எனவே இந்த இக்கட்டான சூழலை விரைவாய்க் கடத்த முனைகிறேன். தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி.

கீதம்
07-06-2010, 10:20 PM
அத்தியாயம் 17

சுந்தரி இனி என்ன செய்வாள்? அவளைப் பெற்றவர்களின் கால்களில் விழுந்தாவது அவளை அவர்களிடமே சேர்ப்பித்துவிடலாம் என்றால் அவர்கள் இருக்குமிடமும் தெரியவில்லை.

நண்பர்கள் அனைவரும் பண உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் சுந்தரியின் தற்போதைய அத்தியாவசியத் தேவை ஆறுதலும், ஆதரவும். அதைத்தரக்கூடியவர்களாய் விக்னேஷும், வித்யாவும், கோமதியம்மாவும் இருந்தனர்.

சுந்தரியின் எதிர்காலம் குறித்து, மூவரும் கலந்து ஆலோசித்தனர்.

"விக்கி, சுந்தரியை எங்க வீட்டில் தங்கவைக்கிறது ஒரு பிரச்சனையே இல்ல. ஆனா வீட்டில் எங்க அக்கா இருக்கா. நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேன். அவ எடுத்தெறிஞ்சு பேசற டைப். இப்ப அவளோட எதிர்காலமும் கேள்விக்குறியா இருக்கிறதால அவ போக்கே மாறிட்டுவருது. குழந்தைகளைக் காரணமில்லாம போட்டு அடிக்கிறா. என்மேலயும் அப்பா மேலயும் எரிஞ்செரிஞ்சு விழறா.

அவளுக்கு ஒரு தீர்வு ஏற்படறவரைக்கும் சுந்தரியை எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போறது சாத்தியமில்ல. வெந்த புண்ணில வேல் பாய்ச்சுறமாதிரி எங்க அக்கா ஏதாவது சொல்லி இவளைக் காயப்படுத்திடுவாளோன்னு பயமா இருக்கு. நான் சொல்றதப் புரிஞ்சுப்பீங்கன்னு நினைக்கிறேன். ஐயாம் வெரி ஸாரிப்பா!"

"நீ ஏன் வித்யா வருத்தப்படறே? நீ சொல்றதில் இருக்கிற நியாயம் எனக்குப் புரியுது. என் நிலைமையும் அப்படிதான்! எங்க அம்மா கொஞ்சம் அனுசரிச்சுப் போறவங்களா இருந்தா பரவாயில்ல. அவங்களும் பட்டுனு ஏதாவது பேசிடுவாங்க. இந்தப் பொண்ணு மனசுடைஞ்சு போயிடும். அதான் எனக்குப் பயமா இருக்கு. நல்லது செய்யறதா நினைச்சிட்டு அவளுக்கு கெடுதல் செய்திடக்கூடாதில்ல...."

"குழந்தை இல்லைன்னாலும் இப்போதைக்கு ஏதாவது ஒரு ஹாஸ்டலில் தங்கவச்சிட்டு அடிக்கடி வந்து பாத்துக்கலாம். இப்போ கைக்குழந்தையோட நிக்கிறா. என்ன செய்யறதுன்னே புரியலை."

இடையில் கோமதியம்மா குறுக்கிட்டார்.

"சரிதான், ரெண்டுபேரும் என்ன பேச்சு பேசிகிட்டிருக்கீங்க? அந்தப்பொண்ணுக்கு ஏன் வேற போக்கிடம் தேடிகிட்டிருக்கீங்க? நான் இல்லையா? அத கண்ணா வச்சிப் பாத்துக்க மாட்டனா?

ஏதோ அந்தப் பொண்ண அதப் பெத்தவங்ககிட்ட அனுப்பப்போறீங்கன்னுதான இவ்வளவுநாள் நினைச்சுகிட்டிருந்தேன். அவங்க ஊரவிட்டுப் போனகத எனக்குத் தெரியாதே!

அம்மா. வித்யா! நீ கவலைய வுடு. சுந்தரிப்பொண்ண நான் என் மகள் மாதிரி பாத்துக்கறேன். அது புள்ளய வளக்குறது எம் பொறுப்பு. நீங்க ரெண்டுபேரும் அப்பப்போ வந்து அதப் பாத்துபேசிட்டுப் போங்க. அது தங்கறதுக்காகவா எடம் பாக்கறீங்க? நல்ல புள்ளங்க, போங்க!

அதுபாட்டுக்கு எப்பவும்போல எங்க வீட்டிலேயே இருக்கட்டும். அதுக்குப் பாதுகாப்பா நாங்க இருக்குறோம். எந்தக் கவலயும் இல்லாம ஆகவேண்டியதப் பாருங்க!"

எவ்வளவு பெரிய விஷயம்! எத்தனை இயல்பாகச் சொல்லிவிட்டார். அவருடைய உயர்ந்த மனதுடன் தன் தாயை ஒப்பிட்டு விக்னேஷ் நாணித்தலைகுனிந்தான். வித்யாவுக்கும் தன் இயலாமையை எண்ணி வெறுப்பாய் இருந்தது.

சொந்தமில்லாத நிலையிலும், தன் வீட்டில் தங்கவைத்து ஆதரவளிப்பதுடன், சுந்தரியை தன் மகளைப்போல் பார்த்துக்கொள்வேன் என்று அவர் வாக்குறுதி அளித்ததைக்கண்டு இருவர் நெஞ்சமும் இளகியது. விக்னேஷ் கண்கள் கலங்க, அந்தம்மாவின் கால்களில் விழுந்து வணங்கினான்.

"என்னங்க, தம்பி, இதப்போய் பெரிசு பண்ணிட்டு?"

அவர் கூச்சத்துடன் விலகிநின்றார்.

மருத்துவமனையிலிருந்து சுந்தரியை அழைத்துக்கொண்டு அவள் இருந்த வீட்டுக்கே வந்துசேர்ந்தனர். கோமதியம்மா முன்பே வந்திருந்து ஆரத்தி கரைத்து தயாராக வைத்திருந்தார். பிரபுவின் மரணம் பற்றித் தெரிந்திருந்ததால் தெருவே கூடி நின்று அவர்களை வேடிக்கைப் பார்த்தது.

சுந்தரியை அவசரமாக கைத்தாங்கலாய் மாடிக்கு அழைத்துவந்துவிட்டாள், வித்யா. கோமதியம்மா குழந்தையை ஏந்தி பின்னால் வந்தார். விக்னேஷ் அவருக்குப் பின்னால் சாமான்களையும், பைகளையும் எடுத்துக்கொண்டு மாடியேறினான். கோமதியம்மாவின் கணவரும் உதவிசெய்தார். மாடிக்கு வந்து குழந்தையைப் பார்த்தவர், அதன் தலை தொட்டு ஆசி செய்தார்.

வித்யா படுக்கையைத் தயார் செய்து சுந்தரியை அதில் படுக்கச் சொன்னாள். மரத்தொட்டில் ஒன்றை, விக்னேஷ் வாங்கித் தயாராகவைத்திருந்தான். தூங்கிகொண்டிருந்த குழந்தையை அதில் கிடத்தினார், கோமதியம்மா.

இப்போது விஷயத்தை சுந்தரியிடம் சொல்லியே ஆகவேண்டும். இனியும் காலம் கடத்துவது அழகில்லை. யார் பூனைக்கு மணி கட்டுவது என்பதுபோல் ஒவ்வொருவரும் அடுத்தவர் முகத்தைப் பார்த்தவண்ணம் அமர்ந்திருந்தனர்.

வயதில் பெரியவரும், அனுபவமுதிர்ச்சி உடையவருமான கோமதியம்மாதான் முன்வந்தார்.

படுத்திருந்த சுந்தரியின் அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்தார். சுந்தரி மறுபுறம் திரும்பி, சத்தமின்றி அழுதுகொண்டிருந்தாள். அவள் முகத்தைத் தன்புறம் திருப்பி தன் முந்தானையால் அவள் கண்ணீரைத் துடைத்தார். இதமாய் அவள் தலையை வருடினார்.

"அம்மா, சுந்தரி! இப்படி ஓயாம அழுதுகிட்டிருந்தா என்ன அர்த்தம்? குழந்தையப் பாரு! அதப் பாத்தாலே போதுமே! எல்லாக் கவலயும் பறந்திடுமே!"

"அம்மா....அவரு....என்ன விட்டுட்டு எங்கம்மா போனாரு?"

"அம்மாடி, மனசத் தேத்திக்கோம்மா.....பிரபுதம்பி இப்ப
நம்மகூட இல்லம்மா...ஆனா……. அதுதாம்மா ஒனக்குப் பொண்ணா வந்து பொறந்திருக்கு!"

கோமதியம்மா வாயில் துணியை வைத்து பொங்கிவந்த அழுகையைக் கட்டுப்படுத்த முயன்றார்.

"கோமதி, அந்தப் பொண்ண தேத்தச்சொன்னா நீ அழுதுகிட்டு இருக்கே!"

அவரது கணவர் அவரைக் கடிந்தார்.

இப்போது அனைவரது பார்வையும், அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள், என்ன சொல்லப்போகிறாள் என்பதிலேயே இருந்தது. சுந்தரியோ எழுந்து மெளனமாய் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.அவள் கண்களிலிருந்து சொட்டுசொட்டாக நீர் படுக்கையை நனைத்தது. இரண்டு நிமிடம் அப்படியே இருந்தாள். பின் கண்களைத் துடைத்துக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.

கோமதியம்மாவைப் பார்த்து,

"அம்மா! என்ன நடந்துன்னு எனக்கு மறைக்காம சொல்லுங்க, எதுவா இருந்தாலும் நான் தாங்கிக்கிறேன். இப்படி மூடி மறைச்சுப் பேசாதீங்க!"

சுந்தரியின் குரலில் தெரிந்த உறுதியைக் கண்டு அனைவருமே வியந்தனர். விக்னேஷுக்கு தன் அம்மாவின் நினைவு வந்தது. தன் அப்பா இறந்த அதிர்ச்சியில் அம்மாவுக்கு சித்தப்பிரமை உண்டானது பற்றிக் கேள்விப்பட்டிருந்தான். ஐயோ...இவளுக்கும் அப்படி ஏதாவது.....

"சொல்லுங்கம்மா…………….! அக்கா....நீங்க சொல்லுங்க, அண்ணே…....நீங்களாவது சொல்லுங்க..."

சுந்தரியின் மனோதிடத்தை வித்யா எதிர்பார்க்கவில்லை என்றாலும், இது அவளுக்கு மகிழ்வைத் தந்தது. இப்போது அவள் எதையும் தாங்கும் நிலையில் இருக்கிறாள். இப்போது சொல்வதுதான் சரி.

வித்யா எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொல்லிமுடித்தாள். பிரபுவின் இறுதிக் காரியத்தைத் தாங்களே செய்ததற்கு அவளிடம் மன்னிப்புக் கோரினாள்.

சுந்தரி வெறுமையாய் சிரித்தாள்.

"நான் இருந்திருந்தா என்னக்கா செஞ்சிருப்பேன்? அப்பவும் எனக்கு நீங்க எல்லாரும்தான் உதவியிருக்கணும். இந்த அளவுக்கு என்மேல் பாசத்தோடயும், அக்கறையோடவும் கவனிச்சுகிட்ட உங்களுக்கு எப்படி பதிலுதவி செய்யப்போறேன்னு தெரியலைக்கா…………..

அம்மா……....நீங்க பெத்தப் பொண்ணா இருந்தாகூட இப்படி செஞ்சிருப்பீங்களான்னு தெரியல...எங்கேயிருந்தோ வந்த எனக்காக நீங்க செஞ்சதைப் பாக்கும்போது காலமெல்லாம் நான் உங்களுக்கு சேவை செஞ்சாலும் போதாதுன்னு தோணுது. எனக்காக....நீங்க இத்தனபேர் இருக்குற நம்பிக்கையில தான் என் வீட்டுக்காரு என்ன விட்டுட்டுப் போயிட்டாரு போலயிருக்கு....."

சுந்தரி அடக்கமாட்டாமல் அழுதாள். இதுவரை அடக்கிவைத்திருந்த துயரம் அத்தனையும் வடியுமளவுக்கு ஓவென்று அழுதாள். அவளைத் தேற்றப்போன வித்யாவை தடுத்துவிட்டார், கோமதியம்மா. அவள் வாய்விட்டு அழுவது ஒன்றே அவள் மனப்பாரம் குறைய வழி என்று அனைவரும் கலங்கிய மனதுடனும் கண்ணீர் சிந்தும் விழிகளுடனும், அவள் ஓயும்வரை காத்திருந்தனர்.

நடந்ததோ, நடப்பதோ, நடக்கப்போவதோ எதுவும் தெரியாமல், குழந்தை, தூக்கத்தில் புன்னகைசெய்துகொண்டிருந்தது.

***********************************************************

குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

மு.வ உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

govindh
07-06-2010, 11:10 PM
நடந்ததை....மனக் கனத்துடன் கடந்து விட்டோம்...
இனி நடக்கப் போவதை அறிய காத்திருக்கிறோம்...

மதி
08-06-2010, 12:11 AM
தரியத்துடன் இனி எதையும் தாங்குவாள் சுந்தரி என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடருங்கள் சகோதரி..

Akila.R.D
08-06-2010, 04:17 AM
அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள்?...

ஆவலுடன் இருக்கிறோம்....

தலைப்பில் 17 என்று மாற்றம் செய்யவும்...

சிவா.ஜி
08-06-2010, 06:12 AM
சுந்தரி கிராமத்துப் பொண்ணு என்பதை தன் மன உறுதியைக் காட்டி நிரூபித்துவிட்டாள். அவர்களுக்குள்ளான உரையாடல்களில் கொஞ்சங்கூட அந்நியத்தனமில்லாமல்...மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

கோமதியம்மாவைப் போல நல்லவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

மிக அருமையாய் போகிறது. தொடருங்கள் தங்கையே.


(வித்யாவை ஒரு இடத்தில் திவ்யா என எழுதியிருக்கிறீர்கள்)

கீதம்
08-06-2010, 06:38 AM
நடந்ததை....மனக் கனத்துடன் கடந்து விட்டோம்...
இனி நடக்கப் போவதை அறிய காத்திருக்கிறோம்...

தொடர்வதற்கு மிகவும் நன்றி கோவிந்த்.

கீதம்
08-06-2010, 06:39 AM
தரியத்துடன் இனி எதையும் தாங்குவாள் சுந்தரி என்ற நம்பிக்கை இருக்கிறது.
தொடருங்கள் சகோதரி..

பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கு மிகவும் நன்றி மதி.

கீதம்
08-06-2010, 06:41 AM
அடுத்து சுந்தரி என்ன செய்யப்போகிறாள்?...

ஆவலுடன் இருக்கிறோம்....

தலைப்பில் 17 என்று மாற்றம் செய்யவும்...

பின்னூட்டத்துக்கு மிகவும் நன்றி அகிலா. தலைப்பில் மாற்றிவிட்டேன். பரிட்சை முடிந்துவிட்டதா?:icon_b:

கீதம்
08-06-2010, 06:44 AM
சுந்தரி கிராமத்துப் பொண்ணு என்பதை தன் மன உறுதியைக் காட்டி நிரூபித்துவிட்டாள். அவர்களுக்குள்ளான உரையாடல்களில் கொஞ்சங்கூட அந்நியத்தனமில்லாமல்...மிகவும் யதார்த்தமாக இருக்கிறது.

கோமதியம்மாவைப் போல நல்லவர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள்.

மிக அருமையாய் போகிறது. தொடருங்கள் தங்கையே.


(வித்யாவை ஒரு இடத்தில் திவ்யா என எழுதியிருக்கிறீர்கள்)

தொடர்ந்து தரும் ஊக்கத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி அண்ணா. வித்யா திவ்யாவானது தட்டச்சும்போது ஏற்பட்ட கவனக்குறைவு. மாற்றிவிட்டேன். சுட்டியமைக்கு நன்றி.

அன்புரசிகன்
08-06-2010, 09:42 AM
கனமாகிறது மனது. ஆனாலும் அந்த அழுகையால் சுந்தரி தேறிவிடுவாள் என்ற நம்பிக்கையை இந்த அத்தியாயம் கூறியுள்ளது. தொடருங்கள் கீதம். வாழ்த்துக்கள்.

கீதம்
08-06-2010, 10:49 PM
கனமாகிறது மனது. ஆனாலும் அந்த அழுகையால் சுந்தரி தேறிவிடுவாள் என்ற நம்பிக்கையை இந்த அத்தியாயம் கூறியுள்ளது. தொடருங்கள் கீதம். வாழ்த்துக்கள்.

மிகவும் நன்றி, அன்புரசிகன். அடுத்த அத்தியாயம் தொடர்ந்து வருகிறது. நீங்களும் தொடருங்கள்.

கீதம்
08-06-2010, 10:51 PM
அத்தியாயம் 18

படிக்காத, கிராமத்துப்பெண்; வெளியுலகம் அறியாப்பேதை. கணவனே உலகம் என்று அவன் காலடியையே சுற்றி சுற்றி வந்தவள். சுந்தரியை நினைக்க நினைக்க வித்யாவின் வேதனை அதிகமானது.

கோமதியம்மா தன்னால் இயன்ற அளவு சுந்தரிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்.

"சுந்தரி, நீ இனிமே தைரியமா இருக்கணும், போனவன நெனச்சுக் கவலப்படுறதில லாபமில்ல. குழந்தைய பாரு! இனிமே அதுக்காக நீ வாழ்ந்தாகணும். எவ்வளவோ பிரச்சனைகளத் தாண்டி இந்த வாழ்க்கை உனக்குக் கிடச்சிருக்கு! அத நீ வீணாக்கிடக்கூடாது. பிரபுவோட ஆசப்படி இந்தக் குழந்தைய வளத்து ஆளாக்கவேண்டியது உன் பொறுப்பு!"

அவள் தற்கொலைக்கு முயன்றுவிடுவாளோ என்று அவர் பயப்படுவது அவர் பேச்சில் நன்றாகத் தெரிந்தது. சுந்தரி என்ன நினைக்கிறாள் என்று தெரியாததாலேயே வித்யாவுக்கும் அந்தப் பயம் தொற்றியது.

விக்னேஷ் தன் கையாலாகாதத்தனத்தை எண்ணி, மருகிக்கொண்டிருந்தான். நண்பனின் மனைவிக்கும், அவள் பச்சிளம் சிசுவுக்கும் உதவமுடியாத நிலையை எண்ணி தன்னைத் தானே நொந்துகொண்டான்.

சுந்தரியோ மிகவும் உறுதியாய் இருப்பதுபோல் தெரிந்தது. காரணம் தெரியாமல் இந்த ஒருவாரகாலம் எதையெதையோ நினைத்துக் கவலைப் பட்டதைவிடவும், இன்ன காரணம் என்று தெளிவாய்த்தெரிந்தது மனதுக்கு நிம்மதி கொடுத்தது.

கணவன் வருவானா, மாட்டானா, ஏதேனும் சிக்கலில் மாட்டியிருக்கிறானா? என்ன மாதிரியான சிக்கல்? சிறைக்குச் சென்றுவிட்டானா? சித்திரவதைப்படுகிறானா? அவன் பெற்றோர் வந்து வலுக்கட்டாயமாய் அவனைக் கடத்திக்கொண்டு சென்றுவிட்டார்களா? அவன் எங்கே என்ன துன்பப்படுகிறானோ? என்றெல்லாம் உளைந்துகிடந்த மனதுக்கு, இனி அவன் வரப்போவதில்லை என்ற உறுதியான செய்தியும், அவனுடைய இறுதி யாத்திரை இனிதே நடந்தது என்ற செய்தியும் மருந்தாய் அமைந்தன.

அடிபட்டு அனாதையாகத் தெருவில் கிடக்காமல், நண்பனின் உதவியோடு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறான். அவன் மனைவி பிரசவத்துக்கு துடித்துக்கொண்டிருக்கும் வேளையில் அவளிடம் சொல்வது சரியல்ல என்று உணர்ந்து தவிர்த்திருக்கிறார்கள், நண்பர்கள். அவன் பெற்றோரிடம் சொல்லியும் அவர்கள் வராததால் தாங்களே முன்னின்று இறுதிச்சடங்கு செய்திருக்கின்றனர். இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? மாறாய் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா? சுந்தரி மனத்தெளிவு பெற்றிருந்தாள்.

சுந்தரியைப் பார்க்க பிரபுவின் அலுவலகத்திலிருந்து ஒவ்வொருவராய் வந்து சென்றனர். அக்கம்பக்கத்திலிருந்தும் வந்து துக்கம் விசாரித்துச் சென்றனர். இப்படி ஒவ்வொருவராய் வந்து அவளது நினைவுகளைக் கிளறிச் செல்வது சரியில்லைஎன்று கோமதியம்மா நினைத்தார். ஆனால் அவருக்கு அதைச் சொல்ல எவ்வித உரிமையும் இல்லாத பட்சத்தில் அமைதியாய் இருந்துவிட்டார்.

வித்யா மேலும் ஒருவாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு இரவும் பகலும் சுந்தரி கூடவே இருந்தாள். இரவில் கண் விழித்துக் குழந்தையைப் பார்த்துக்கொண்டாள். அக்காவின் குழந்தைகளைப் பார்த்துக்கொண்ட அனுபவம் கைகொடுத்தது. விக்னேஷ் விடுப்பில் இருந்தாலும், பகலில் வந்து தேவையானவற்றைச் செய்துவிட்டு இரவு வீடு திரும்பிவிடுவான்.

சுந்தரி தெளிவாய் இருப்பது அவளுடைய நடவடிக்கைகளில் புலப்பட்டது.

அவள் உடலும் சற்று தேறிவந்தது. எழுந்து நடமாடத் தொடங்கியிருந்தாள். குழந்தையை அடிக்கடி மடியில் வைத்துக்கொண்டு உற்சாகத்துடன் கொஞ்சினாள்.

"என் செல்லக்குட்டி....என் அம்முக்குட்டி......என் ராஜாத்தி......என் பவுனு....சக்கரக்குட்டி....அம்மா பாரு....அம்மா பாரு..... இனிமே அப்பா அம்மா எல்லாம் நான் தான்....அப்பா வேணுமின்னு அடம்புடிக்கக் கூடாது....சரியா.....சமத்து.....நான் சொல்லுறதெல்லாம் புரியிதா....சிரிக்கிறே....சிரி....சிரி....."

வித்யா சுந்தரியையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

"என்னக்கா..?"

"சுந்தரி! இவ்வளவு சீக்கிரம் நீ உன் மனசை தேத்திக்குவேன்னு நான் எதிர்பார்க்கலை. எனக்கு இப்பதான் நிம்மதியா இருக்கு, சுந்தரி...."

"அக்கா! திடீர்னு சொல்லியிருந்தீங்கன்னா என்னாயிருக்கும்னு எனக்கே தெரியலை. இதை நான் முன்னாடியே கொஞ்சம் யூகிச்சிருந்ததாலயோ என்னமோ என்னால இந்த அதிர்ச்சியை ஏத்துக்க முடியுது. ஏதோ விபரீதம் நடந்திருக்குன்னு என் உள்மனசு சொல்லிச்சு. ஆனா....என்னன்னு புரியல. இப்ப தெளிவாயிடுச்சி.இனிமே கலங்கமாட்டேன். அவரோட ஆச என்ன தெரியுமாக்கா? நான் எப்பவும் சிரிச்சுகிட்டு சந்தோஷமா இருக்கணும்கிறதுதான். அத நான் நிறைவேத்த வேணாமா, சொல்லுங்க அக்கா.."

இந்த சின்னப்பெண்ணுக்குள் இத்தனை மனத்துணிவா? வியந்துபோய் அமர்ந்திருந்தாள், வித்யா.

"அக்கா, அவரு ஆசப்படியே பொம்பளப்புள்ள பிறந்திருக்கு. அவரிருந்து எப்படி வளப்பாரோ, அப்படி வளத்து, அதப் பாத்து சந்தோஷப்படுறதுதானக்கா புத்திசாலித்தனம்?"

வித்யா புன்னகைத்தாள். இனி இந்தப் பெண்ணுக்கு தன் பாதுகாப்பு தேவையில்லை என்று உணர்ந்தாள். இவள் எந்தத் தவறான முடிவுக்கும் போகமாட்டாள் என்பது உறுதியாய்த் தெரிந்தது. அன்றே கோமதியம்மாவிடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டுக்குப் புறப்பட்டாள்.

அவள் புறப்படத்தயாரானபோது விக்னேஷ் வந்தான்.

"என்ன, வித்யா, வீட்டுக்கு புறப்பட்டுட்டேன்னு வீட்டுக்காரம்மா சொன்னாங்க!"

"ஆமாம்பா, சுந்தரி கொஞ்சம் நார்மல் நிலைக்கு வந்தாச்சு. நானும் வீட்டுக்குப் போய் நாலஞ்சு நாளாகுது. அப்பா புனே போய்ட்டு வந்துட்டாராம். போன்ல எதையும் கிளியரா சொல்லமாட்டேங்கறாரு. என்ன பிரச்சனைன்னு தெரியல.வீட்டுக்குப் போனாதான் தெரியும்."

"சரிப்பா, நீ கிளம்பு! நானும் வரவா?"

"வேணாம், விக்கி, இன்னொருநாள் வாங்க!"

வித்யா போய்விட்டாள். கோமதியம்மாவும் அவர் கணவரும் கோவிலுக்குப் போவதாகவும் தாங்கள் திரும்பி வரும்வரை விக்னேஷை வீட்டில் இருந்து பார்த்துக்கொள்ளும்படியும் சொல்லிச் சென்றனர்.

சுந்தரி உள்ளே வேலையாக இருந்தாள்.விக்னேஷ் தொட்டிலுக்கு அருகில் வந்து நின்று குழந்தையையே பார்த்துக்கொண்டிருந்தான். அவன் கண்களுக்கு அது ஒரு பொம்மைபோல் தெரிந்தது. அகலக் கண்களை விழித்து, கைகால்களை உதைத்துக்கொண்டு படுத்திருந்தது. இந்தக் குழந்தையைக் கொஞ்சும் பாக்கியம் கிடைக்கப்பெறாத பிரபுவை எண்ணி நெஞ்சம் விம்மியது.கண்கள் கலங்கின.

"என்ன அண்ணே...பாப்பா என்ன சொல்றா....?"

சுந்தரியின் குரல் கேட்டு விக்னேஷ் அவசரமாய் கண்களைத் துடைத்துக்கொண்டான்.

"என்ன அண்ணே, இது? நானே மனசத் தேத்திகிட்டேன், நீங்க இன்னும் அழுதுகிட்டு? நீங்க எல்லாரும் இருக்கிற நம்பிக்கையிலதான் நான் வாழ்ந்துகிட்டிருக்கேன். இல்லைன்னா...எப்பவோ போய்சேர்ந்திருப்பேன்."

"சுந்தரி....என்னம்மா நீ....?"

"பின்ன என்னண்ணே? தைரியம் சொல்லவேண்டிய நீங்களே மனச விடலாமா? அப்புறம் நான் எப்படி தைரியமா இருக்க முடியும்?"

"இல்லம்மா....இனிமே கலங்கமாட்டேன்! தைரியமா இருப்பேன்!"

"அண்ணே…....உங்க கிட்ட……. ஒரு விஷயம் பேசணும்!"

சுந்தரி தயங்கித் தயங்கிச் சொல்ல, விக்னேஷ் என்ன சொல்லப்போகிறாளோ,பக்கத்தில் வித்யாவும் இல்லையே என்று நினைத்துக்கொண்டான்.

"அண்ணே....அக்கா இருக்கும்போதே பேசணும்னு நெனச்சேன். ஆனா அக்கா திடீர்னு வீட்டுக்கு கெளம்பிட்டாங்க....அண்ணே...அது வந்து....வந்து.....என்னய……..ஊருக்கு திருப்பி அனுப்பிடாதீங்க அண்ணே...."

சுந்தரி திடும்மென்று இப்படிச் சொல்வாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

"அது...அது....." அவன் தடுமாறுவதைக் கண்டு அவள் மிரண்டாள்.

"அண்ணே....உங்கள கெஞ்சி கேக்கறேன் அண்ணே.....நான் இங்கியே ஏதாவது வீட்டுவேல பாத்தாவது என் குழந்தய வளத்துக்கறேண்ணே....அங்க போனா.... எனக்கு அவப்பேரைத் தவிர வேற என்ன கெடைக்கும்? இந்தக் குழந்தய நிம்மதியா வளக்கமுடியுமாண்ணே என்னால? எத்தன நாள் வெட்டியா உக்காந்து சாப்புடமுடியும்? அங்க இருந்தாலும், ஏதாவது வேல செஞ்சாதானே வயித்தைக் கழுவமுடியும்? அத இங்கியே செய்யிறேனே! என் வேதனையாவது மிச்சமாவும். எங்க வீட்டுக்காரு ஆசப்படி சிரிக்கிறேனோ, இல்லயோ....அழுகாமயாவது இருப்பேன்ல...."

கரம் குவித்து கண்ணீருடன் அவன்முன் நின்றவளைப் பார்த்து என்ன சொல்வதெனத் தெரியாமல் தவித்தன், விக்னேஷ்.

ஐயோ! ஊரில் இவளை வரவேற்க யாருமில்லை என்பது தெரியாமல் இருக்கிறாளே! உண்மையைச் சொல்லிவிடவேண்டியதுதான். ஊருக்குப் போக அவளுக்கு விருப்பமில்லை. அதனால் உண்மையைச் சொல்வதால் ஒன்றும் கெட்டுவிடப்போவதிலை. அதே சமயம், இவளுடைய உதவி இருந்தால்தான் இவள் பெற்றோரைக் கண்டுபிடிக்கவும் முடியும். அவர்கள் எங்கு போயிருப்பார்கள் என்று ஓரளவு ஊகிக்க முடியும். விக்னேஷ் துணிந்து அவளிடம் சொன்னான்.

"சுந்தரி, நீ விரும்பினாலும் உங்க ஊருக்குப் போகமுடியாதும்மா!"

"ஏன், அண்ணே?"

விக்னேஷ் விவரம் சொல்ல, சுந்தரி தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டாள். பிரபு வந்து அவர்களிடம் பெண் கேட்டபோது, அவமானப்படுத்தி அனுப்பியதில்தான் அவர்கள் மேல் இவளுக்குக் கோபம். மற்றபடி அவளை எந்தக்குறையுமில்லாமல்தானே வளர்த்தார்கள்! கஞ்சி ஊற்றியபோதும், வயிறு நிறைந்ததே! ஆடம்பரமாய் துணிமணி வாங்கித்தராவிட்டாலும், அரைகுறையாய் அலையவிடவில்லையே!

அம்மாவும் அப்பாவும் அவள்மேல் எத்தனை அன்பு வைத்திருந்தார்கள்? தம்பி அவளிடம் எவ்வளவு பாசம் காட்டினான்?

இனி அவர்களை எல்லாம் எப்போது பார்ப்பேன்? அடியும் உதையும், அவமானமும் பெற்று, பிறந்து வளர்ந்த ஊரைவிட்டுப் போகும்போது எப்படி வயிறெரிந்து போனார்களோ, அந்தப்பாவம்தான் தன்னை இப்படி நிர்க்கதியாக்கிவிட்டதோ?

ஹும்! இனிமேல் அவர்களை எண்ணிப் புலம்பி என்ன பயன்? கண்ணுக்குள் வைத்துப் பார்த்த கணவனே போய்விட்டான்! இனி மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு ஆவதென்ன?

"சுந்தரி! என்னை மன்னிச்சிடும்மா...பிரபுதான் சொல்லவேண்டாம்னு...."

"பரவாயில்லைண்ணே...என்ன கண்கலங்காம வச்சுக்கணும்னு எத்தனப்பேரு பாடுபட்டிருக்கீங்க...இந்த உலகத்துல எத்தனப்பேருக்கு இந்த அதிஷ்டம் கிடைக்கும்?"

சுந்தரி சிரித்தாள்.

இத்தனைத் தெளிவாய் இருப்பவளிடம் மேற்கொண்டு என்ன பேசுவதென்று தெரியாமல் விழித்தான். கோமதியம்மா வந்ததும், விவரத்தைச் சொன்னான். சுந்தரி அறியாமல், ஒரு சிறுதொகையை சுந்தரி மற்றும் குழந்தையின் செலவுக்காக அவர் மறுக்க, மறுக்க, அவர் கைகளில் திணித்து விடைபெற்றான்.

************************************************************************************
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு.

மு.வ உரை:
உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும் யானைத் தன் பெருமையை நிலைநிறுத்தும், அதுபோல் ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளர மாட்டார்.

govindh
08-06-2010, 11:40 PM
சுந்தரி மனதளவில் தேறி விட்டாள்....
அத்தியாயத்திற்குப் பொருத்தமான குறளும்...
அதன் விளக்கமும் நன்று...
பாராட்டுக்கள்...

மதி
09-06-2010, 01:58 AM
சீக்கிரமே தெளிந்துவிட்டாள் சுந்தரி.. இந்த பெண்ணுக்குள்ளும் இவ்ளோ மன உறுதியா என வியக்க வைக்கிறது... இனி வாழ்க்கைப் போராட்டங்களா?
தொடருங்கள்...

சிவா.ஜி
09-06-2010, 05:49 AM
உறுதியும், தெளிவும் இருந்தால்...எந்த சங்கடமான சூழ்நிலையையும் கடந்து வர முடியும் என்பதற்கு உதாரணப் பெண்ணாய் சுந்தரி இருக்கிறாள்.

எந்தக் குழப்பமும் இல்லாமல்...தெளிவான திரைக்கதை அமைத்த...தரமானத் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு.

தொடருங்கள் தங்கையே.....!!!

அன்புரசிகன்
09-06-2010, 08:50 AM
வழமைக்கு திரும்பிவிட்ட சுந்தரி. கையாலாகாத தன்மையை நினைத்து வருந்தும் விக்னேஷ் என அழகாக கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தொருங்கள் கீதம்.

கலையரசி
09-06-2010, 01:44 PM
ஜெட் வேகத்தில் போகிறாயே கீதம். ஓட்டத்தில் நான் மிகவும் பின் தங்கி விட்டேன்.
கதையைத் தொடர முடியுமா எனச் சந்தேகமே வந்து விட்டது. இன்று ஒரே மூச்சில் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து 18 வரை படித்து முடித்து விட்டேன்.
கதை விறுவிறுப்பாய் நகருகிறது. பிரபுவின் முடிவு எதிர்பாராதது. மனதைப் பாரமாக்கிய முடிவு. ஆனால் சுந்தரி தைரியமாய் அதனை எதிர்கொள்ளுவது வியக்க வைக்கிறது.
வித்யாவின் பாத்திரப்படைப்பும் அருமை. மொத்தத்தில் கதை சூப்பர் கீதம்!
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.

கீதம்
10-06-2010, 01:14 AM
சுந்தரி மனதளவில் தேறி விட்டாள்....
அத்தியாயத்திற்குப் பொருத்தமான குறளும்...
அதன் விளக்கமும் நன்று...
பாராட்டுக்கள்...

குறள் பொருத்தத்தை பாராட்டியமைக்கும் தொடர்ந்து வருவதற்கும் நன்றி, கோவிந்த்.

கீதம்
10-06-2010, 01:17 AM
சீக்கிரமே தெளிந்துவிட்டாள் சுந்தரி.. இந்த பெண்ணுக்குள்ளும் இவ்ளோ மன உறுதியா என வியக்க வைக்கிறது... இனி வாழ்க்கைப் போராட்டங்களா?
தொடருங்கள்...

இந்தக்கதைக்கு இன்ஸ்பிரேஷனே நான் நட்பாய் பழகிய ஒரு பெண்தான். அவரைப் பற்றி பிறகு கூறுகிறேன்.

தொடர்வதற்கு நன்றி.

கீதம்
10-06-2010, 01:19 AM
உறுதியும், தெளிவும் இருந்தால்...எந்த சங்கடமான சூழ்நிலையையும் கடந்து வர முடியும் என்பதற்கு உதாரணப் பெண்ணாய் சுந்தரி இருக்கிறாள்.

எந்தக் குழப்பமும் இல்லாமல்...தெளிவான திரைக்கதை அமைத்த...தரமானத் திரைப்படத்தைப் பார்க்கும் உணர்வு.

தொடருங்கள் தங்கையே.....!!!

பின்னூட்டத்துக்கு நன்றி அண்ணா. வெறும் சம்பவங்களைக் காட்டி எங்கே மெகா சீரியலாக்கிவிடப்போகிறேனோ என்ற பயமும் கூடவே வருகிறது.

கீதம்
10-06-2010, 01:22 AM
வழமைக்கு திரும்பிவிட்ட சுந்தரி. கையாலாகாத தன்மையை நினைத்து வருந்தும் விக்னேஷ் என அழகாக கதாபாத்திரங்களை வடிவமைத்துள்ளீர்கள். பாராட்டுக்கள். தொருங்கள் கீதம்.

நிகழ்வுகளை இயல்பாய்ச் சொல்லவேண்டும் என்பதில் கவனம் எடுத்துக்கொள்கிறேன். எங்கேனும் லாஜிக் மீறுவதுபோல் தெரிந்தால் சுட்டிக்காட்டுங்கள். தவிர்த்துவிடுகிறேன்.

பின்னூட்டத்துக்கு நன்றி, அன்புரசிகன்.

கீதம்
10-06-2010, 01:25 AM
ஜெட் வேகத்தில் போகிறாயே கீதம். ஓட்டத்தில் நான் மிகவும் பின் தங்கி விட்டேன்.
கதையைத் தொடர முடியுமா எனச் சந்தேகமே வந்து விட்டது. இன்று ஒரே மூச்சில் மூன்றாம் அத்தியாயத்திலிருந்து 18 வரை படித்து முடித்து விட்டேன்.
கதை விறுவிறுப்பாய் நகருகிறது. பிரபுவின் முடிவு எதிர்பாராதது. மனதைப் பாரமாக்கிய முடிவு. ஆனால் சுந்தரி தைரியமாய் அதனை எதிர்கொள்ளுவது வியக்க வைக்கிறது.
வித்யாவின் பாத்திரப்படைப்பும் அருமை. மொத்தத்தில் கதை சூப்பர் கீதம்!
வாழ்த்துக்களுடன் பாராட்டுக்கள்.

மிக மிக நன்றி அக்கா. உங்களுக்கு இருக்கும் நேரத்தில் முழுமூச்சாய் என் கதையைப் படித்ததுடன் இல்லாமல் பாராட்டிப் பின்னூட்டமுமிட்டு என்னை மகிழ்வித்துவிட்டீர்கள்.

நேரமிருக்கும்போது தொடர்ந்து கருத்துப் பதியுங்கள்.

கீதம்
10-06-2010, 01:29 AM
அத்தியாயம் 19

விக்னேஷும், வித்யாவும் அவ்வப்போது வந்து சுந்தரியையும், குழந்தையையும் பார்த்துச் சென்றனர். விக்னேஷுக்கு வேலை இருந்தால் வித்யாவும், வித்யாவால் வரமுடியாதபோது விக்னேஷும் வந்து பார்த்துக்கொண்டனர்.

கிட்டத்தட்ட ஒருமாதத்துக்குப் பின் விக்னேஷ் வித்யா இருவரின் சந்திப்பு அங்கு நிகழ்ந்தது. போனில் அவ்வப்போது பேசிக்கொண்டிருந்தாலும், சமீபகாலமாய் நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமையாமலேயே இருந்தது.

"அப்பாடி! உங்க ரெண்டுபேரையும் சேந்து பாக்குறதே இப்பல்லாம் அபூர்வமாயிடுச்சே!"

"என்ன பண்றது, சுந்தரி! எங்க அக்கா பிரச்சனையே பெரிய பிரச்சனையா இருக்கு! விக்கிக்கு அவங்க அம்மாவைப் பாத்துக்கணும். நேரம் ஒத்துவரவே மாட்டேங்கிது!"

"ஆமாம், குட்டிப்பாப்பாவுக்கு ஏதாவது பேர் வைக்கலாமில்ல....கூப்பிட ஈஸியா இருக்கும்!"

விக்னேஷ், கையில் குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தான்.

"நீங்களே வைங்களேன், அக்கா!"

"அதெப்படி? கஷ்டப்பட்டு பெத்தது நீ! பேர் வைக்கிறது நாங்களா? பெத்தவளுக்குதான் பேர் வைக்கிற உரிமையும்! நீயே சொல்லு!"

சட்டென்று சுந்தரியின் கண்கள் குளமாகின. தலைகவிழ்ந்து கண்களைத் துடைத்துக்கொண்டாள். வித்யா பதறிப்போனாள்.

"சுந்தரி, எதுக்குப்பா அழறே? நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?"

"நீங்க எதுவும் தப்பா சொல்லலக்கா....அவரும் இப்படிதான் சொல்வாரு. எந்தக் குழந்தை பிறந்தாலும் நான் தான் பேர் வைக்கணும்னு. கஷ்டப்பட்டு பெத்துக்கிறது நீ...பேர் வைக்க நானான்னு கேப்பாரு....அவருக்கு பொம்பளப்புள்ளதான் இஷ்டம். அதையும் சொன்னாரு!"

"அழாதே, சுந்தரி. அவர் ஆசைப்படி பொண்ணுதானே பிறந்திருக்கு, சந்தோஷமா பேர் வை!"

"பொண்ணு பிறந்திருக்கு. ஆனா....அருமைபெருமையான அப்பாரைப் பாக்கக் குடுத்துவக்கலையே!"

"சுந்தரி, இப்படியெல்லாம் பேசக்கூடாது. அது குழந்தைதானே, என்ன செய்யும், பாவம்!"

விக்னேஷ் சூழ்நிலையின் இறுக்கத்தை மாற்ற முயன்றவனாய் குழந்தையைக் கொஞ்சத் தொடங்கினான்.

"பாப்பா...குட்டிப்பாப்பா.......செல்லப்பாப்பா....தங்கப்பாப்பா.....என்ன சிரிக்கிறீங்க.... மாமாவ தெரியுதா...........பாப்பா......"

வித்யாவும், சுந்தரியும் தங்களை மறந்து, விக்னேஷ் கொஞ்சும் அழகையே பார்த்து ரசித்துக்கொண்டிருந்தனர். எதையோ உணர்ந்தவன்போல், விக்னேஷ் தலையுயர்த்திப் பார்க்க, இரு பெண்களும் தன்னையே கவனித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து வெட்கினான்.

"ரெண்டுபேருக்கும் வேற வேலை இல்லையா? என்னையே பாத்துகிட்டு நிக்கிறீங்க?"

"ஹும்! குழந்தையைக் கொஞ்சுறதில மாஸ்டர் ஆயிட்டீங்க! அதான் எப்படின்னு யோசிக்கிறோம்!" வித்யா வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள்.

"எல்லாம் பாப்பாகிட்ட எடுத்துகிட்ட ப்ராக்டீஸ்தான். இல்லடா....செல்லம்.....?"

"சரிதான், எனக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்க, பின்னாடி உதவும்!"

வித்யா அர்த்தத்துடன் புன்னகைக்க,

"ஓகோ, கதை அப்படிப் போகுதா?"
என்று சுந்தரி கலாய்க்க,

விக்னேஷ் நிலைகொள்ளாமல், குழந்தையிடம்,

"வாடா....செல்லம், நாம வேற இடத்துக்குப் போகலாம். இவங்க கூட சேரவேணாம்!" என்று சொல்லிக்கொண்டு குழந்தையுடன் பால்கனிக்குச் சென்றான்.

"ஐயோ, கோவிச்சுக்காதீங்க, அண்ணே.....சாப்புடவாங்க!"

சுந்தரி அழைத்தாள்.

"நீ முதலில் சாப்பிட்டு வந்து பாப்பாவை வாங்கிக்கோம்மா! எனக்கென்ன அவசரம்? நீ வரவரைக்கும் பாப்பாவை நான் பாத்துக்கறேன், வித்யா, நீயும் சுந்தரியோட சேர்ந்து சாப்பிடு!"

வித்யா, விக்னேஷைப் பார்த்த பார்வையில் பெருமிதம் பொங்கி வழிந்தது. குழந்தையை இறக்காமல் கையில் வைத்துக் கொஞ்சுவதைப் பார்த்து ஆச்சரியம் வந்தது. குழந்தை பிறந்த முதல் வாரம் அதைத் தொடக்கூட பயந்தான். தனக்குத் தூக்கத்தெரியாது என்று சொல்லி எட்ட இருந்தே பார்த்துக்கொண்டிருந்தான்.

இன்றென்னவென்றால் இடது உள்ளங்கையால் அழகாய் அதன் கழுத்தையும், தலையையும் ஒருசேரத்தாங்கி, வலது கையால் அதன் பின்புறத்தை எந்தி லாவகமாய் வைத்திருப்பதோடு அழகழகாய் சொல்லிக் கொஞ்சுகிறான்.

பசி பொறுக்காதவன், இன்று குழந்தைக்காக பசி தாங்குகிறான். பிள்ளை பெற்றவளை முதலில் சாப்பிடச் சொல்லுகிறான். இவனைக் கணவனாய் அடைவது எத்தனை பாக்கியம் என்று உணர்ந்த வித்யாவின் மனதுக்குள் மகிழ்ச்சி கரைபுரண்டது.

சுந்தரி சாப்பிட்டு வந்து குழந்தையை வாங்கிக்கொண்டாள். வித்யா விக்னேஷுக்கு பரிமாறிக்கொண்டிருந்தாள். இந்தக் காட்சியைப் பார்த்த சுந்தரிக்கு தானும் பிரபுவும் இதுபோல் பேசிக்கொண்டே உணவருந்திய நிகழ்வுகள் நினைவுக்கு வர, வித்யாவும், விக்னேஷும் அறியாவண்ணம் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.

"உங்க அக்கா பிள்ளைங்க எப்படி இருக்காங்க, வித்யா?" விக்னேஷ் அக்கறையுடன் விசாரித்தது, வித்யாவுக்கு அவன் மேலிருந்த மதிப்பை இன்னும் உயர்த்தியது.

"சரியான வாலுங்க. பெரியவனுக்கு பத்து வயசு. சின்னவனுக்கு எட்டு வயசு. எப்பவும் அடிதடிதான்.ரெண்டுக்கும் சமாதானம் பண்றதுதான் எனக்கும் அப்பாவுக்கும் வேலையே."

"அக்கா ஒண்ணும் சொல்லமாட்டாங்களா?"

"ம்ஹும்! அக்காவுக்கு நல்லா சாப்பிடணும், நல்லா தூங்கணும், டிவி பாக்கணும். வேற எதைப்பத்தியும் கவலை இல்லை. பசங்க எப்படிப்போனாலும் கண்டுக்கவே மாட்டா. அவளைத் தொந்தரவு செய்தா மட்டும் கண்ணுமண்ணு தெரியாம அடிப்பா...... நானும் அப்பாவும் அவங்களை அக்காகிட்ட இருந்து காப்பாத்தியே களைச்சிட்டோம்!"

"அவங்க அப்பாவைப் பத்தி ஏதாவது கேப்பாங்களா?"

கேட்டபிறகு நாக்கைக் கடித்துக்கொண்டான். சுந்தரி இருப்பதை மறந்து கேட்டுவிட்டான். தற்காலிகமாய்ப் பிரிந்த பிள்ளைகளே அப்பாவைக் கேட்பார்கள் என்றால் நிரந்தரமாய்ப் பிரிந்த பிள்ளையின் நிலை?

வித்யா அவன் நிலையைப் புரிந்துகொண்டாலும், கவனியாதவள் போல் பதில் சொன்னாள்.

"அதுங்க ரெண்டும் ஏதோ லீவுக்கு வந்தமாதிரிதான் இருக்குதுங்க. இங்கேயே ஸ்கூல் சேர்க்கும்போதுதான் தெரியவரும். அதுக்கான ஏற்பாடெல்லாம் முடிஞ்சிடுச்சி. இன்னும் ஒரு வாரத்தில் ஸ்கூலுக்கு அனுப்பணும்."

"பிரிஞ்சி வரதா முடிவே பண்ணியாச்சா? நீ உங்க அத்தான்கிட்ட பேசிப்பாக்க வேண்டியதுதானே?"

"என்னத்தைப் பேசறது? உங்க பொண்ணு கூட இத்தனை வருஷம் வாழ்ந்ததே பெரிசுன்னு அப்பாகிட்ட சொன்னாராம். நமக்குதான் நல்லாத் தெரியுதே! கல்யாணத்துக்கு முன்னாடி அக்கா இப்படி இல்லை. அப்ப அம்மாவும் இருந்தாங்க. பொறுப்பாதான் இருந்தமாதிரி இருந்துச்சு. இப்ப என்னடான்னா.....தலகீழா மாறி நிக்கிறா. அவ எதுக்கும் கவலைப்படறமாதிரியே தெரியலை.

குழந்தைகளோட எதிர்காலத்தை நினைச்சாதான் பயமா இருக்கு. நான் ஏதாவது சொன்னா...'நீ சம்பாதிக்கிற திமிர்ல பேசுறேடி' அப்படிங்கறா. அப்பா ஏதாவது சொன்னா...'நான் இந்த வீட்டுல இருக்கிறது புடிக்கலைன்னா எங்கையாவது போய் சாவறேன்'னு சொல்லி பயங்காட்டறா. பெரிய தலைவலியா இருக்கு அவளோட! என்ன பண்றதுன்னே தெரியலை.”

"உங்க அப்பா என்ன சொல்றார்?"

"கொஞ்சநாள் இங்க இருக்கட்டும்னு சொல்லிட்டார். அத்தான் வேற டிவோர்ஸ் பண்றதைப் பத்திப் பேச ஆரம்பிச்சுட்டார்."

"சரி, நாம கவலைப்பட்டு என்ன ஆகப்போவுது? உங்க அக்காதான் மனசு வைக்கணும்!"

"ஹும்ம்! அவளை நினைச்சு நினைச்சு அப்பாவுக்கு நெஞ்சுவலி வந்ததுதான் மிச்சம்."

வித்யாவின் அக்காவை எண்ணி விக்னேஷ் கவலைப்பட்டான். அன்புக்கணவனை காலனிடம் பறிகொடுத்துவிட்டு, சுந்தரி இங்கே படாதபாடு படும்வேளையில், வித்யாவின் அக்காவும் அவள் கணவனும் தங்களுக்குக் கிடைத்த அற்புத இல்லறத்தையும், அதன் அடையாளமாய்ப் பெற்ற பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துவதை எண்ணிக் கவலையுற்றான்.


*****************************************************************
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

மு.வ உரை:
அறம் என்று சிறப்பித்து சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.

மதி
10-06-2010, 01:45 AM
பிறந்த குழந்தையை விக்கி கையாளுவதை அழகாக வர்ணித்துள்ளீர். பிறந்தவுட குழந்தைகளைத் தூக்குவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்..

இந்த மாதிரி ஒருவனை கணவனாக அடைய வித்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவள் கனவு நிறைவேறுமா??

சிவா.ஜி
10-06-2010, 05:39 AM
அந்த வீட்டு சூழலை ரொம்ப* அழகா சொல்லியிருக்கீங்க. விக்கியோட நடவடிக்கைகளை அருமையாக் காமிச்சு...அவன் மேல நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தியிருக்கீங்க.

கவனமா...உரையாடல்களை அமைச்சிருக்கிற விதம் பாராட்டுக்குரியது.

மெகா சீரியல்ன்னெல்லாம் நினைக்காதீங்க...நல்லக் குடும்ப நாவலா வந்துக்கிட்டிருக்கு. தொடருங்க கீதம்.

செல்வா
10-06-2010, 08:41 AM
ம்... பணிப்பளுவால் தொடர்ந்து வாசிக்க இயலாத நிலை...

வாசித்து விட்டு விமர்சிக்கிறேன்...

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

பாரதி
10-06-2010, 01:00 PM
இன்றுதான் படிக்கத்துவங்கினேன். அனைத்து பாகங்களையும் ஒரு சேர படித்து முடித்தேன்.

மிகவும் தெளிவாக, சரளமாக கதை செல்கிறது. பொருத்தமான குறள் கோர்ப்பும் சிறப்பைத் தருகிறது.

கதையை எப்படிக்கொண்டு செல்வது என முடிவு செய்திருந்தாலும் கூட சளைக்காமல் தொடரைத் தொடர்வது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

தொடர்ந்து எழுதுங்கள்; மனதார வாழ்த்துகிறேன்.

govindh
10-06-2010, 01:54 PM
அழகாகச் சொல்கிறீர்கள்...
அருமையாகத் தொடர்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்...

பா.ராஜேஷ்
10-06-2010, 08:17 PM
வேலை விஷயமாக வேரூர் சென்றிருந்ததால் கடந்த மூன்று அத்தியாயங்களை படிக்க இயலவில்லை... இன்றுதான் படித்தேன்.. சுந்தரியின் மன தைர்யத்தை நிச்சயமாய் பாராட்ட வேண்டும்... நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

கீதம்
10-06-2010, 09:44 PM
பிறந்த குழந்தையை விக்கி கையாளுவதை அழகாக வர்ணித்துள்ளீர். பிறந்தவுட குழந்தைகளைத் தூக்குவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும்..

இந்த மாதிரி ஒருவனை கணவனாக அடைய வித்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவள் கனவு நிறைவேறுமா??

பின்னூட்டத்துக்கு நன்றி, மதி. பிறந்த குழந்தைகளைத் தூக்க கொஞ்சமல்ல, நிறைய தைரியம் வேண்டும். தலை நிற்காத குழந்தைகளை துக்குவதை ஆண்கள் பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். சிலர்தான் துணிந்து முன்வருவார்கள். குழந்தை பெற்ற பெண்களுக்கே பெரியவர்கள்தான் சொல்லிக்கொடுப்பார்கள்.கதையில் அந்தவரிகளைக் கவனித்துப் பின்னூட்டமிட்டதற்கு மகிழ்கிறேன். வித்யாவின் கனவுகள் நிறைவேறுமா? அறிந்துகொள்ள தொடருங்கள். :)

கீதம்
10-06-2010, 09:48 PM
அந்த வீட்டு சூழலை ரொம்ப* அழகா சொல்லியிருக்கீங்க. விக்கியோட நடவடிக்கைகளை அருமையாக் காமிச்சு...அவன் மேல நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்தியிருக்கீங்க.

கவனமா...உரையாடல்களை அமைச்சிருக்கிற விதம் பாராட்டுக்குரியது.

மெகா சீரியல்ன்னெல்லாம் நினைக்காதீங்க...நல்லக் குடும்ப நாவலா வந்துக்கிட்டிருக்கு. தொடருங்க கீதம்.

உங்களது ஊக்கமிகு வார்த்தைகள் என்னை உற்சாகத்துடன் எழுதவைக்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் விமர்சனம் செய்து ஊக்குவிக்கும் உங்களைப் போன்ற வாசகர்கள் இல்லாவிடில் நான் சோர்ந்திருப்பேன் என்பது உண்மை. தொடர்ந்து வருவதற்கு நன்றி, அண்ணா.

கீதம்
10-06-2010, 09:50 PM
ம்... பணிப்பளுவால் தொடர்ந்து வாசிக்க இயலாத நிலை...

வாசித்து விட்டு விமர்சிக்கிறேன்...

எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

பணிப்பளுவிலும் பின்னூட்டமிட்டு ஊக்கமளிக்கும் உங்கள் அன்புக்கு நன்றி, செல்வா. நேரம் கிடைக்கும்போது படியுங்கள். படித்தபின் கருத்துப் பதியுங்கள்.

கீதம்
10-06-2010, 09:52 PM
இன்றுதான் படிக்கத்துவங்கினேன். அனைத்து பாகங்களையும் ஒரு சேர படித்து முடித்தேன்.

மிகவும் தெளிவாக, சரளமாக கதை செல்கிறது. பொருத்தமான குறள் கோர்ப்பும் சிறப்பைத் தருகிறது.

கதையை எப்படிக்கொண்டு செல்வது என முடிவு செய்திருந்தாலும் கூட சளைக்காமல் தொடரைத் தொடர்வது வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

தொடர்ந்து எழுதுங்கள்; மனதார வாழ்த்துகிறேன்.

உங்கள் பின்னூட்டம் கண்டு இனிய அதிர்ச்சி பாரதி அவர்களே. இத்தனை அத்தியாயங்களையும் ஒருசேரப் படித்தும், பாராட்டியும் எனக்கு ஊக்கமளித்த உங்களுக்கு என் அன்பான நன்றி.

கீதம்
10-06-2010, 09:54 PM
அழகாகச் சொல்கிறீர்கள்...
அருமையாகத் தொடர்கிறீர்கள்....
வாழ்த்துக்கள்...

பின்னூட்டத்துக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி, கோவிந்த்.

கீதம்
10-06-2010, 09:55 PM
வேலை விஷயமாக வேரூர் சென்றிருந்ததால் கடந்த மூன்று அத்தியாயங்களை படிக்க இயலவில்லை... இன்றுதான் படித்தேன்.. சுந்தரியின் மன தைர்யத்தை நிச்சயமாய் பாராட்ட வேண்டும்... நன்றாக எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள்

ஊரிலிருந்து வந்ததுமே இக்கதையைப் படித்துப் பின்னூட்டமிட்டதற்கு மிகவும் நன்றி, ராஜேஷ்.

கீதம்
10-06-2010, 09:57 PM
அத்தியாயம் 20

மூன்று மாதத்தில் முகம் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்துவிட்டாள், சுபா. சுந்தரியின் வற்புறுத்தலின் பேரில் வித்யா தான் இந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தாள். சுந்தரியிலிருந்தும் பிரபுவின் முழுப்பெயரான பிரபாகரிலிருந்தும் இரு எழுத்துகளைத் தொகுத்து சுபா என்று பெயரிட்டாள். சுந்தரிக்கு அளவில்லாத மகிழ்ச்சி.

சுபா இப்போது விக்னேஷையும், வித்யாவையும் நன்றாக அடையாளம் கண்டுகொண்டு சிரிக்கிறாள். தூக்கச் சொல்லி உடலை நெம்பிக் கொடுக்கிறாள். தூக்கவில்லை என்றால் பொய்யாய் அழுது ஏமாற்றுகிறாள்.

சுபாவின் அத்தனைச் செயல்களும் விக்னேஷ், வித்யாவுக்கு அத்துப்படி. சுந்தரியும் தன் இறந்தகால துயரங்களையும் எதிர்காலக் கவலைகளையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு நிகழ்கால இன்பத்தில் திளைத்திருந்தாள்.

அப்போதுதான் கோமதியம்மா ஒரு அதிர்ச்சி தரும் தகவலைத் தெரிவித்தார். அவருடைய இரண்டாவது மருமகளுக்கு கர்ப்பப்பையில் கட்டி வளர்ந்திருப்பதாகவும் அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்கவிருப்பதாகவும், உதவிக்கு எவருமில்லாததால் கோமதியம்மாவையும், அவர் கணவரையும் உடனே அமெரிக்கா கிளம்பிவரச் சொல்லி அதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாகவும் அவர் மகன் தெரிவித்திருப்பதாகக் கூறினார்.

இன்னும் பத்துப் பதினைந்து நாட்களில் புறப்படவேண்டியிருக்கும் என்று மிகுந்த வருத்தத்துடன் கூறினார். ஆறுமாதகால விசாவில் செல்வதாகவும், அதுவரை சுந்தரி, இந்த வீட்டில் குழந்தையுடன் தனியாய் இருப்பது உசிதமில்லை என்றும் கவலை தெரிவித்தார்.

ஒரு இளம் விதவைப் பெண் கைக்குழந்தையுடன் தனியே வாழ்வதென்பது கயிற்றின்மேல் நடப்பதற்குச் சமம் என்று அனைவருமே அறிந்திருந்தபோதும், அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தனர். அப்போது, விக்னேஷ் இதுபற்றி அம்மாவிடம் பேசி ஒரு முடிவெடுப்பதாய்க் கூறினான். அவன் குரலில் தெரிந்த உறுதி கண்டு வித்யா நம்பிக்கையும், மகிழ்வும் ஒருசேரப் பெற்றாள்.

*****************************************************

விக்னேஷ் அம்மாவிடம் சுந்தரியைப் பற்றிப் பேசுவதற்கு நேரத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான்.

"விக்னேஷ்! அந்த மாத்திரை பாட்டிலை கொஞ்சம் எடுத்துக் கொடுப்பா!"

"இந்தாங்கம்மா!"

"ஏன்ப்பா, என்னவோ போலயிருக்கே?"

"சுந்தரியை நினைச்சுகிட்டேன், அம்மா!"

"ஏன்? அவளுக்கென்ன?

"இன்னும் பத்துப்பதினஞ்சு நாளில வீட்டுக்காரம்மாவும், ஐயாவும், அமெரிக்கா போறாங்களாம், அங்க அவங்க மருமகளுக்கு உடம்பு முடியலையாம். உதவிக்குப் போறாங்க! திரும்பி வர ஆறுமாசமாகுமாம். அதுவரைக்கும், சுந்தரியை எப்படி தனியா விடறதுன்னு யோசிக்கிறாங்க. எனக்கும் அதே யோசனைதான்!"

"அதுக்கு நாம் என்னப்பா செய்ய முடியும்?"

"அம்மா....வந்து...."

"சொல்லுப்பா!"

"வந்து...உங்களுக்கும் உதவிக்கு ஆள் தேவைப்படுது. வேலைக்காரப்பொண்ணும் சரியா வரதில்லைன்னு சொல்லிட்டிருந்தீங்க! சுந்தரி நம்ம வீட்டில் இருந்தா உங்களுக்கும் உதவியா இருக்கும், அந்தப்பெண்ணுக்கும் பாதுகாப்பா இருக்கும், நீங்க என்ன சொல்றீங்க?"

நாகலட்சுமி திடுக்கிட்டு நிமிர்ந்தார்.

"என்னப்பா சொல்ற? ஊர் உலகத்தைப் பத்தி நினைச்சுப் பாத்தியா? உனக்கு நாளைக்கு கல்யாணம் ஆகவேண்டாமா? எதையுமே யோசிக்காம...."

விக்னேஷ் வெறுத்துப்போனான். எந்த உறவுமில்லாத கோமதியம்மா செய்த உதவிகளை நினைத்துப்பார்த்தான். சுந்தரியை சும்மா அழைக்காமல் ஒரு வேலைக்காரியின் போர்வை போர்த்தியாவது தன் வீட்டுக்குள் அழைத்துவரலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால் அதற்கும் தடை போடும் அம்மாவை எண்ணி எரிச்சல் வந்தது.

இந்த விஷயத்தில் அம்மா என்ன சொன்னாலும் சரி, சுந்தரியை நிர்க்கதியாய் விடப்போவதில்லை என்று முடிவெடுத்தான்.

"ஊர் உலகத்தைப் பத்தி எனக்குக் கவலையில்லை, நீங்க என்ன சொல்றீங்க?"

அவனது கேள்வியில் லேசான கோபம் எட்டிப்பார்ப்பதை நாகலட்சுமி உணர்ந்தார்.

இப்போதெல்லாம் விக்னேஷ் முடிவுகளை எடுத்தபின்புதான் அம்மாவிடம் அறிவிக்கிறான். கார் வாங்கியதும் அப்படிதான். வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வந்து பார்க்கச் சொன்னான். அவளிடம் கார் வாங்கப்போவதைப் பற்றி மூச்சுவிடவும் இல்லை.

அதேபோல் சுந்தரியையும், குழந்தையையும் அழைத்துக்கொண்டுவந்து நின்றிருந்தால் தன் மதிப்பு என்னாயிருக்கும்? சுந்தரிமுன் அவமானப்படவேண்டியிருக்குமே! அவ்வாறு செய்யாமல் அவளிடம் முன் அனுமதி கேட்கிறான். நல்லதனமாய் ஒத்துக்கொள்வதுதான் ஒரே வழி.

அதுவுமில்லாமல் இந்தக் காலத்தில் சம்பளமற்ற வேலைக்காரி, அதுவும் வீட்டோடு கிடைக்கிறாள் என்றாள் மறுக்காமல் ஏற்றுக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்?

சரிப்பட்டு வரவில்லையென்றால் பிறகு ஏதாவது காரணம் சொல்லி அனுப்பிவிடலாம்.

சுந்தரியை மறுப்பதன்மூலம் தன்னை ஒரு ஈவு இரக்கமற்ற ராட்சஸியாய் மகன் நினைத்துவிடுவானோ என்ற பயமும் எழுந்தது.

"என்னம்மா, யோசிக்கிறீங்க?"

"சரிப்பா, உன்னிஷ்டம் போல அவளைக் கூட்டிட்டு வா!"

"அம்மா, இதில் என்னிஷ்டம்னு எதுவுமே இல்லைம்மா... ஆதரவில்லாம நிக்கிற ஒரு பெண்ணுக்கு அடைக்கலம் கொடுக்க நினைக்கிறேன், அவ்வளவுதான்! உலகத்தில எத்தனையோ பெண்கள் இருக்காங்க, இப்படியே ஒவ்வொருத்தியா அழைச்சிட்டு வருவியான்னு கேக்காதீங்க,

இவள் என் நண்பனோட மனைவி. இதை நான் என்னோட நட்புக்கு செய்யற மரியாதையா நினைக்கிறேன். கொஞ்சநாள் போகட்டும், பிரபு இறந்த துக்கம் மறையட்டும், அவளுக்கு ஒரு மறுவாழ்வு அமைச்சிக்கொடுத்திட்டேன்னா என் பாரம் இறங்கிடும். அதுவரைக்கும் நீங்க எனக்கு உதவி செய்யணும், அம்மா!"

விக்னேஷ் இவ்வளவு தீர்க்கமாக இதுவரை பேசியதில்லை. அவனிடம் தெரியும் மாற்றம் கண்டு கலங்கினார், நாகலட்சுமி. மகன் பேசுவதைப் பார்த்தால்...இவனே அவளுக்கு மறுவாழ்வு கொடுத்துவிடுவான் போலிருக்கிறதே! கூடாது....அப்படி எதுவும் நடக்கக் கூடாது.

பிரபு இறந்தபிறகு இவன் அடிக்கடி போய் சுந்தரியையும், குழந்தையையும் பார்த்துவருவது தெரியும் என்றாலும், இந்த நாட்களில் இருவருக்கும் என்ன மாதிரியான பிணைப்பு உண்டாகியிருக்கிறது என்று தெரியவில்லையே!

சுந்தரியை வீட்டுக்கு வரவழைப்பதன் மூலம் இருவரின் நடவடிக்கைகளையும் கண்காணிக்க ஏதுவாக இருக்கும். ஏதேனும் வரம்பு மீறுவதுபோல் தெரிந்தால் முளையிலேயே கிள்ளிவிடலாம். விக்னேஷை அல்ல, சுந்தரியை!

நாகலட்சுமியின் மூளை தாறுமாறாய் சிந்திக்கத் தொடங்கியது. அதன் பயனாய் அவர் சொன்னதாவது,

"விக்னேஷ்! சுந்தரி இங்க வந்து தங்கறதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. நீ அவளை தாராளமா அழைச்சிட்டு வாப்பா!"

விக்னேஷ் அம்மாவுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னான். அம்மா இவ்வளவு சீக்கிரம் உடன்படுவார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.

பிரபு காதல் திருமணம் செய்ததிலிருந்து அவன் மீது வெறுப்பில் இருந்தார் என்பது விக்னேஷுக்குத் தெரியும். அதனால் சுந்தரி இங்கு வருவதை அவர் முற்றிலும் விரும்ப மாட்டார் என்று எண்ணியிருந்தான். அதனால் அம்மாவை எதிர்த்து வாக்குவாதம் செய்யவும் தயாராக இருந்தான். எதற்கும் இடங்கொடாமல் அம்மா சம்மதித்ததில் அவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

*********************************************************************

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.

மு.வ உரை:
அகத்தில் உடன்பாடு இல்லாதவருடன் குடிவாழும் வாழ்க்கை, ஒரு குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.

govindh
10-06-2010, 10:40 PM
சுபா-பெயர் விளக்கம்....நல்ல கற்பனை.

அத்தியாயம் 20- குறள் விளக்கம் படித்த பின் ....
கதையின் அடுத்த நிகழ்வுகளை எண்ணி....
மனதிற்குள்...பதட்டமும்...பரபரப்பும்....
உருவாகி விட்டது....
தொடருங்கள்....

சுடர்விழி
10-06-2010, 11:43 PM
கதையில் நிறைய திருப்பங்கள்....இனி விக்னேஷ் வீட்டில் சுந்தரியின் வாழ்க்கை எப்படி???படிக்க ரொம்ப ஆவலா இருக்கேன்....

தொய்வில்லாத நடை,இயல்பான உரையாடல் காட்சியை கண் முன் நிறுத்துது...வாழ்த்துக்கள்...தொடருங்கள்

மதி
11-06-2010, 01:08 AM
இனி அடுத்து என்ன? அடுத்து என்னனு? ஆவலோடு காக்க வைக்கிறீர்கள்..விக்னேஷ் வீட்டில் சுந்தரி... பார்க்கலாம். தொடருங்கள்... தினமும் காலையின் எழுந்ததும் சுப்ரபாதம் கேட்பது போல் இரண்டு வாரமாக இக்கதையை படிப்பது வாடிக்கையாகிவிட்டது. :)

பாரதி
11-06-2010, 01:22 AM
சரியான வேகத்தில் செல்கிறது கதை!
நாகலட்சுகியின் உள்ளக்கிடக்கை உள்ளங்கை நெல்லிக்கனி.
தொடருங்கள்...

அன்புரசிகன்
11-06-2010, 04:12 AM
நாகம்மாவுக்கு மறுபடியும் சோதனையா??? ஏனிந்த கொலவெறி?? :D
ஒன்றாக விட்டால் சுந்தரியை படாத பாடு படுத்திவிடுவாரே... ம். பார்க்கலாம்.
தொடருங்கள். வாழ்த்துக்கள் கீதம்.

சிவா.ஜி
11-06-2010, 05:45 AM
விக்னேஷின் விருப்பத்துக்கு மறுப்பு சொல்லாமல் அம்மா ஒத்துக்கொள்ளுமுன்...அவர் மனதில் ஓடிய சிந்தனைகளை அருமையாய்க் கொடுத்திருக்கிறீர்கள்.

அன்புக்கு ஏற்பட்ட அதே சந்தேகம்தான் எனக்கும்...சுந்தரியை நாகலட்சுமியம்மாள் என்ன செய்யப்போகிறாரோ....என்று.

சுபா பொருத்தமான பெயர். கதையோட்டம் தெளிவாய் இருக்கிறது. தொடருங்கள் கீதம்.

பா.ராஜேஷ்
11-06-2010, 06:47 PM
சுபாவின் மூலம் நாகலட்சுமி அம்மாளின் மனம் கொஞ்சமாய் மாறுமோ!?? பொறுத்து இருந்து பார்க்கலாம்...

கீதம்
12-06-2010, 12:38 AM
பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இதோ, அடுத்த அத்தியாயம்!

கீதம்
12-06-2010, 12:41 AM
அத்தியாயம் 21

நாகலட்சுமி சம்மதித்துவிட்டார் என்பது வித்யாவுக்கு பெரும் ஆச்சரியத்தைத்தந்தபோதும், சுந்தரிக்கு இதில் வியப்பேதும் இல்லை. அவளைப் பொறுத்தவரை நாகலட்சுமியம்மாள் ஒரு தெய்வத்துக்கு ஒப்பானவர். அவர் தன்னை வீட்டுக்கு அழைத்திருப்பது விந்தைக்குரிய செயல் அல்லவென்றே எண்ணினாள்.

வித்யாவும், விக்னேஷும் அதைச் சொல்லிச் சொல்லி மாய்வதன் ரகசியம் அவளுக்குப் புரியவே இல்லை. பிரபு சுந்தரிமேல் நாகலட்சுமிக்கு அவ்வளவாக நல்லெண்ணம் கிடையாது என்பதை அவளறியாமல் வைத்திருந்தனர், வித்யாவும், விக்னேஷும். அதனால் முன்கூட்டியே அதைப் பற்றி சொல்லி அவள் உற்சாகத்தைக் கெடுக்க விரும்பவில்லை.

ஆனாலும், விக்னேஷுக்கு உள்ளூர அம்மாவைப் பற்றிய பயம் இருந்துகொண்டேதான் இருந்தது. அம்மா சந்தடிசாக்கில் சுந்தரியை ஏதாவது சொல்லிக் காயப்படுத்திவிடக்கூடாது என்று நினைத்தான். சுந்தரியிடம் அம்மாவின் தற்போதைய மனநிலையை லேசாக கோடிட்டுக் காட்டுவது என்ற முடிவுக்கு வந்தான்.

"சுந்தரி, எங்க அம்மா முன்னாடி மாதிரி இப்ப இல்ல..அவங்களுக்கு உடம்பு முடியாமப் போனதுக்கு அப்புறம் எல்லார்கிட்டயும் கொஞ்சம் கடுகடுன்னு பேச ஆரம்பிச்சுட்டாங்க. அதனால் உங்கிட்ட அப்படி ஏதாவது பேசினா மனசில வச்சுக்காதம்மா....உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்!"

"என்னங்க, அண்ணே....இப்படியெல்லாம் பேசுறீங்க, அவங்க உங்களுக்கு மட்டும் அம்மா இல்ல, எனக்கும்தான், கவலைய விடுங்க, அவங்கள நான் நல்லா பாத்துக்கறேன்!"

"ரொம்ப நன்றிம்மா...."

"என்னண்ணே....இதுக்கெல்லாம் போய்....."

வித்யாதான் மிகவும் கவலைப்பட்டாள். சுந்தரியையும், சுபாவையும் இனிமேல் இதுபோல் அடிக்கடி பார்க்கமுடியாது என்பதும், அம்மா, பிள்ளை இருவருக்கிடையில் முதன்முதலாய் ஒரு வேற்றாளாய், பரிதாபத்துக்குரிய சுந்தரி நுழைவதால் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்ற கவலையும் அவளை மிகவும் படுத்தி எடுத்தன.

தன் கையிலிருந்த சிறு அட்டைப்பெட்டியைப் பிரித்து அதிலிருந்து ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியை எடுத்து குழந்தையின் கழுத்தில் அணிவித்தாள்.

"எதுக்குக்கா, இதெல்லாம்? உங்க அன்பு ஒண்ணு போதுமே, என் பொண்ணுக்கு!"

"சுபாக்குட்டிய இனிமேல் எப்ப பார்க்கப்போறேன்னு தெரியலையே!"

விக்னேஷ் சட்டென்று ஒரு யோசனை சொன்னான்.

“வித்யா...நீயும் சுந்தரியோட எங்க வீட்டுக்கு வாயேன். பிரபுவோட ஆபிஸில் வேலை செய்யறதை வச்சு சுந்தரிக்குப் பழக்கம்னு உன்னை அறிமுகப்படுத்துறேன்."

"விக்கி, சீரியஸாதான் சொல்றீங்களா? ஏதாவது பிரச்சனையாயிடப்போகுது..."

"இதைவிட்டா உன்னை அம்மாகிட்ட அறிமுகப்படுத்த வேற சந்தர்ப்பம் கிடைக்காதுப்பா. அதுவுமில்லாம, சுந்தரியை சாக்கா வச்சி நீ அடிக்கடி வீட்டுக்கு வரலாம். அம்மாவுக்கும் உனக்கும் ஒரு அண்டர்ஸ்டாண்டிங் வரும்!"

"திட்டமெல்லாம் நல்லாதான் இருக்கு! ஆனா பயமா இருக்கே! முதலுக்கே மோசமா சுந்தரிக்கு பிரச்சனை வந்திடப்போகுது!"

"வாங்களேன் அக்கா! அம்மா ரொம்ப நல்லவங்க, நீங்க அவங்களைப் பாத்தீங்கன்னா உங்களுக்கு ரொம்பப் புடிச்சிடும்."

சுந்தரி தன் பங்குக்கு அழைக்க, வித்யாவும் விக்னேஷும் சிரித்தனர். அவர்கள் சிரிப்பின் காரணம் புரியாமல் சுந்தரி விழித்தாள்.

'எனக்கு அவங்களைப் பிடிக்கிறது முக்கியமில்ல, அவங்களுக்கு என்னைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம்' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டாள், வித்யா.

"சுந்தரி, முதல்ல உனக்கு ஒரு விஷயம் சொல்லணும்., தயவுசெஞ்சு எங்க அம்மாகிட்ட நாங்க ரெண்டுபேரும் காதலிக்கிற விஷயத்தை சொல்லிடாதம்மா!"

"ஏண்ணே...அவங்க ரொம்ப நல்லவங்கதான, சொன்னா கோவிச்சுப்பாங்களா, என்ன?"

"கோவிச்சுப்பாங்களா, வீட்டையே ரெண்டாக்கிடுவாங்க! அது மட்டுமில்ல....இந்த ஜென்மத்துக்கு எனக்கு கல்யாணம் நடக்கவே நடக்காது!"

"ஏண்ணே அப்புடி....?"

அப்பாவியாய் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருக்கும் சுந்தரியைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது. இவளிடம் நடந்ததைச் சொல்லலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருக்கையில் வித்யா சொல்லிவிட்டாள்.

"ம்? அவர் அவங்க அம்மா சொல்ற பொண்ணைத் தான் கட்டுவேன்னு சத்தியம் பண்ணி குடுத்திருக்கிறாராம். அதைச் சொல்லாம, சும்மா பூசி மெழுகறார்."

"அப்புடியாண்ணே? அதான் எங்க வீட்டுக்காரருன்னும் அப்பவே சொன்னாரா?"

"பிரபுவா? என்ன சொன்னான்?"

"உங்க அம்மா ரொம்ப நல்லவங்கன்னு அவரிட்ட சொன்னேன். தன் புள்ளைக்கு பிரச்சனை வராதவரைக்கும் எல்லா அம்மாவும் நல்லவங்கதான்னு ஒரு மாதிரி குதர்க்கமா சொன்னாரு! அப்ப புரியல, இப்ப புரியுது. சத்தியமே வாங்கிட்டாங்களா?"

சுந்தரிக்கு நாகலட்சுமியின் சமயோசிதம் கண்டு முதன்முதலாய் அவர்மேல் மிதமான பயம் வந்தது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சுந்தரி புறப்படத் தயாரானாள். தானும், பிரபுவும் வாழ்ந்த அந்தவீட்டை விட்டுப் பிரிய மனமில்லாமல் கலங்கினாள். தன்னை ஒரு மகளினும் மேலாக பார்த்துக்கொண்ட கோமதியம்மாவிடம், அவர் கணவரிடமும் தனக்கும், குழந்தைக்கும் ஆசி பெற்றுக்கொண்டாள்.

எங்கிருந்தாலும், நீயும், குழந்தையும் நல்லபடியா சந்தோஷமா இருக்கணும் என்று வாழ்த்தினர். வித்யாவும் வந்திருந்து இடமாற்றத்துக்கான ஏற்பாடுகள் செய்ய உதவினாள். சாமான்களை ஒரு லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு காரில் மூவரும் குழந்தையுடன் புறப்பட்டனர்.

தான் சுந்தரியை அழைத்துவரவிருப்பதை மனோகரி அக்காவுக்கு விக்னேஷ் தெரிவித்திருந்ததால் அவள் வாசலிலேயே காத்திருந்தாள். சுந்தரி, குழந்தையுடன் இறங்கியதும், அவளையும், வித்யாவையும் வரவேற்றாள்.

போனவருஷம் தம்பதி சமேதரராய் இவளுக்கு ஆரத்தி எடுத்தது நினைவுக்கு வர, மனோகரி அழுதுவிட்டாள். சுந்தரிதான் அவளைத் தேற்றினாள். விக்னேஷ் கண்களால் அம்மாவைத் தேடினான்.நாகலட்சுமி வெளியில் வரவே இல்லை.

பின் மனோகரியே அவளை உள்ளே அழைத்துச் சென்றாள். குழந்தைக்கான பொருட்கள் இருந்த பைகளை எடுத்துக்கொண்டு பின்னால் இறங்கிய வித்யா மேற்கொண்டு தொடர்வதா வேண்டாமா என்று தெரியாத நிலையில் வாசலிலேயே தங்கிவிட்டாள்.

காரை போர்டிகோவில் நிறுத்திவிட்டு வந்த விக்னேஷ், வித்யா வாசலிலேயே நிற்பதைப் பார்த்து, "வா, வித்யா! உள்ள வா!" என்று அழைத்தான்.

வித்யா பெரும் தயக்கத்துடனும், தவிப்புடனும், விக்னேஷைப் பின் தொடர்ந்து உள்ளே சென்றாள்.

"காலையில இருந்து அம்மாவுக்கு ஒரே தலைவலி, அதான் மாத்திரை போட்டுகிட்டு படுத்திருக்காங்க!"

மனோகரி சொல்லியவாறே குழந்தையை கையில் வாங்கிக்கொண்டு சுந்தரியுடன் நாகலட்சுமியின் அறைக்குச் சென்றாள்.

விக்னேஷும் வித்யாவும் அவர்கள் பின்னால் சென்றனர்.

நாகலட்சுமி கண்களை மூடிப் படுத்திருந்தார். மனோகரிதான் எழுப்பினாள்,

"விக்கியம்மா! உங்க வீட்டுக்கு குட்டி விருந்தாளி வந்திருக்காங்க, எழுந்திருச்சிப் பாருங்க!"

நாகலட்சுமி எழுந்துபார்க்க, தன்னைச் சுற்றி அனைவரும் கூடியிருப்பதைப் பார்த்து என்னவோ போலாயிற்று. குழந்தையைப் பார்ப்பதைவிடவும், சுந்தரியிடம் துக்கம் விசாரிப்பதைவிடவும், சுந்தரியுடன் நிற்கும் பெண்ணை யாரென்று தெரிந்துகொள்ளும் ஆவலே மிகுந்திருந்தது.

இருப்பினும் ஆவலை அடக்கியவராய், "வாம்மா, சுந்தரி, எப்படியிருக்கே? பிரபு இப்படி அல்பாயுசிலே போவான்னு யாருமே எதிர்பார்க்கலை. அநியாயமா பெத்தவங்க சாபத்துக்கு ஆளாகிட்டானே!" என்றார்.

விக்னேஷுக்கு அம்மாவின்மேல் கோபம் வந்தது. இப்படியா எடுத்த எடுப்பில் பேசுவார்? ஆறுதல் சொல்லாவிட்டாலும், அவள் மனம் நோகப் பேசாமலாவது இருக்கலாம் இல்லையா?

மனோகரியின் வற்புறுத்தலின் பேரில் குழந்தையை வாங்கியவர் ஒன்றிரண்டு நிமிடங்கள் வைத்திருந்துவிட்டு சுந்தரியிடமே தந்தார். சுந்தரி தன்னையும், குழந்தையயும் ஆசிர்வதிக்குமாறு வேண்ட,

"என்னன்னு ஆசிர்வதிக்கிறது? என் ஆசிர்வாதம்தான் பலிக்கமாட்டேங்குதே!" என்றார்.

மனோகரி, வித்யா, விக்னேஷ் அனைவரும், நாகலட்சுமியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ந்தனர்.

சுந்தரி இதை ஓரளவு எதிர்பார்த்திருந்தாள். எப்போது, அவர் தன் பிள்ளையிடம் சத்தியம் வாங்கினார் என்று அறிந்தாளோ, அப்போதே அவருக்கு காதல் கல்யாணத்தின் மீதிருந்த வெறுப்பை அறிந்திருந்தாள். எனினும் வந்த நிமிடமே இப்படிப் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.

இதுவரை விக்னேஷின் மூலம் கேள்விப்பட்டிருந்த நாகலட்சுமியம்மாவை நேரில் பார்த்தபோது, வித்யா கற்பனை செய்துவைத்திருந்த தோற்றத்துக்கும், குணாதிசயத்துக்கும் மிகப் பொருத்தமானவராகவே இருந்தார். அவர் சுந்தரியிடம் பேசியதைக் கேட்டபோது, இவரிடம் இன்னும் மிகுந்த எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்துவிட்டிருந்தாள், வித்யா.

நாகலட்சுமியின் பார்வை அடிக்கடி வித்யாவின் பக்கம் செல்வதை உணர்ந்த, விக்னேஷ், அம்மாவிடம்,

"அம்மா! இது வித்யா! பிரபுவோட ஆபிஸில வேலை பாக்கறாங்க, சுந்தரிக்கு ரொம்பப் பழக்கம்!"

"வணக்கம்மா!"

இரு கைகளையும் கூப்பி வணங்கினாள், வித்யா.

"வாம்மா!" அத்துடன் அவளுடனான பேச்சை அம்மா நிறுத்திக்கொண்டது விக்னேஷுக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

அனைவருக்கும் மனோகரியே சமையல் செய்தாள். குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை ஒருவேலையும் செய்யவிடவில்லை.

வித்யா வலுக்கட்டாயமாய் அடுக்களை சென்று மனோகரிக்கு உதவினாள். ஆனால், மனோகரி,கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லத் திணறிவிட்டாள். அவள் திணறுவதைப் பார்த்து மனோகரி ஓரளவு ஊகித்துவிட்டாள். வித்யா அவளைக் கையெடுத்துக் கும்பிட்டு, இந்த விஷயம், நாகலட்சுமிக்கு தெரியவேண்டாமென்று கேட்டுக்கொண்டாள்.

விக்னேஷின் திருமணம் தொடர்பாக, அவனுக்கும், அவன் அம்மாவுக்கும் இடையில் நடந்த விவரங்கள், மனோகரிக்குத் தெரியவந்ததும், விக்னேஷின்மேல் ஆத்திரப்பட்டாள். இவ்வளவு நல்லபையன், இப்படி அம்மாமேல் வைத்திருக்கும் பாசத்தால் தன் வாழ்க்கையையே பணயம் வைக்கிறானே என்று அவன்மேல் பரிதாபப்பட்டாள்.

வித்யா, விக்னேஷ் காதலுக்கு தன்னாலான உதவிகள் செய்வதாக வாக்களித்தாள். வித்யா பெரும் நிம்மதியுடன் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு வீட்டுக்குச் சென்றாள்.

*******************************************************************

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.

மு.வ உரை:
கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும் இகழப்படுவான்.

மதி
12-06-2010, 01:13 AM
இனி அதிரடி ஆரம்பமா? சுந்தரியை சாக்காய் வைத்து அறிமுகப்படலம் முடிந்தாயிற்று.. நாகலட்சுமி அம்மாள் எப்போ தான் மாறுவாங்களோ??

தொடருங்கள்..

அன்புரசிகன்
12-06-2010, 04:09 AM
இப்ப தான் படத்துக்கு இடைவேளை விட்டது போல இருக்கு... இனி சரவெடி என்று பேரரசின் படங்களில் போடுவார்களே.. அது போல் :D தொடருங்கள்...

பாரதி
12-06-2010, 05:43 AM
வி.சேகர் போல என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள்!
கதையும் அவர் படங்களில் வருவதைப் போன்று முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது.
எழுதுங்கள்.

சிவா.ஜி
12-06-2010, 06:44 AM
விக்னேஷ் வித்யா காதலுக்கு உதவி செய்ய ஆள் வந்தாச்சு...வித்யா அதிரடியாய் வீட்டுக்குள்ளும் வந்தாச்சு....இனி நடக்கப்போவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தொடருங்க சகோதரி....

govindh
12-06-2010, 09:51 AM
நல்ல திரைப்படம் பார்ப்பதைப் போல் ஓர் உணர்வு....
வாழ்த்துக்கள்.
தொடருங்கள்.

பா.ராஜேஷ்
12-06-2010, 08:57 PM
நாகலட்சுமி அம்மாள், சுந்தரி, வித்யா, என முக்கோணமாய் தொடர போகிறதா கதை...!!! பலமா இருக்கும் போலிருக்கிறதே...!!! தொடருங்கள்...

கீதம்
12-06-2010, 11:44 PM
உங்கள் அன்பான ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்களே. அடுத்த அத்தியாயம் வந்துகொண்டே இருக்கிறது.

கீதம்
12-06-2010, 11:46 PM
அத்தியாயம் 22

மறுநாள் காலை நாகலட்சுமி அடுக்களைக்குள் நுழைந்ததும்,தானும் அவர் பின்னே நுழைந்த சுந்தரி அவரிடம் சொன்னாள்,

"அம்மா! என்ன செய்யணும்னு சொல்லுங்க, நான் செஞ்சிடறேன்!"

"ஏம்மா, வந்தவுடனேயே உன்னை வேலை வாங்குறேன்னு என்பிள்ளை என்மேல கோபப்படுறதுக்காகவா கேக்கறே? அவன் என்மேல் வச்சிருக்கிற கொஞ்சநஞ்ச பாசத்தையும் கெடுத்திடாதேம்மா!"

"இல்லம்மா....உங்களுக்கு.....உதவி பண்ணலாம்னுதான்........"

"உதவி வேணும்னு உங்கிட்ட கேட்டேனா? நான் பாட்டுக்கு எப்பவும்போல என் வேலையைப் பாக்கறேன், நீ எதுக்கு குறுக்க வர்றே?"

சுந்தரி என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தாள்.அவளைக் காப்பாற்றும் விதமாக, ஹாலிலிருந்து விக்னேஷ் குரல் கொடுத்தான்.

"சுந்தரி, எங்கம்மா இருக்கே?"

"இதோ, வரேண்ணே!"

"பாப்பா முழிச்சிட்டா, அதான் தூக்கிட்டு வந்திட்டேன்!"

"இங்க குடுங்க, அண்ணே!"

"இந்தாம்மா....நைட் நல்லா தூங்கினியா? பாப்பா தூங்கினாளா?"

"நல்லா தூங்கினோம், அண்ணே, காவல் தெய்வம் மாதிரி நீங்களும், அம்மாவும் இருக்கும்போது எனக்கு என்னண்ணே பயம்?"

"பயத்துக்காக கேக்கலைம்மா, புது இடம் பாரு, அதனால் கேட்டேன். சரி, நீ முதல்ல இவளைக் கவனி! எப்ப அழலாம்னு பாக்கிறா!"

"சரிண்ணே!"

இருவரின் உரையாடலையும் கூர்ந்து கவனித்துக்கொன்டிருந்த நாகலட்சுமிக்கு விக்னேஷின் மேல் கோபம் வந்தது.

'என்னவோ ரெண்டுபேரும் ஒட்டிப் பிறந்த ரெட்டையர் மாதிரியில்ல இழையுறாங்க? அவள் என்னடான்னா வாய்க்கு வாய் அண்ணே...அண்ணேனு உருகுறா...இவன் என்னடான்னா சுந்தரிம்மா, வாம்மா, போம்மான்னு பாசத்தப் புழியுறான்… எனக்கே பாசமலர் படம் காட்டுறாங்களே ரெண்டுபேரும்?' நாகலட்சுமி உள்ளுக்குள் பொறுமிக்கொண்டிருந்தார்.

காலையில் எழுந்ததில் இருந்து மகன் தன்னிடம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்பது நினைவுக்கு வர, சுயபச்சாதாபம் பீறிட்டது.தானாய் வலியச் சென்று அவனிடம் பேசக்கூடாது என்ற வீம்பும் கூடவே எழ, மெளனமாய் தன் வேலையைத் தொடர்ந்தார்.

அம்மாவின் மனதுக்குள் மூண்ட பிரளயம் பற்றித் தெரியாமல், விக்னேஷ் புதுப்பாடல் ஒன்றை உற்சாகமாய் சீட்டியடித்துக்கொண்டிருந்தான்.

சற்று நேரத்தில் இட்லியும், சட்னியும் உணவுமேசைக்கு வந்தன. தயாராகி வந்து உணவுமேசைமுன் அமர்ந்தவன், ஏதோ நினைவுக்கு வந்ததுபோல் அம்மாவைப் பார்த்து, "அம்மா, நேத்து உங்களுக்கு தலைவலி இருந்துதே, இப்ப எப்படி இருக்கு?" என்றான்.

நாகலட்சுமிக்கு உள்ளூர மகிழ்ச்சி உண்டானாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல்,

"போவுது போ, இப்பயாவது அம்மான்னு ஒருத்தி இந்த வீட்டில் இருக்கிறது ஞாபகத்துக்கு வந்திச்சே!" என்றார்.

விக்னேஷுக்கு அம்மாவின் சுடுசொற்கள் எரிச்சலைத் தந்தன. பதிலுக்கு தான் பேசினால் எல்லாக் கோபமும் சுந்தரியின்பால் திரும்பக்கூடும் என்பதால் அடக்கி வாசிக்க முடிவுசெய்தான்.

சுந்தரி வந்த அதிருப்தியைதான் அம்மா இப்படி வெளியிடுகிறார் என்று உணர்ந்தான். அதனால் இப்போது பொறுமையைக் கையாள்வதே புத்திசாலித்தனம் என்று முடிவெடுத்தவனாய், அம்மாவிடம்,

"அம்மா! நீங்க எப்பவும் என் மனசில இருக்கீங்க, உங்களை நான் எப்படி மறக்க முடியும்?" என்றான்.
கூடவே அவரைக் குளிர்விக்க எண்ணி, "அம்மா, இட்லியும், சட்னியும் சூப்பர்!" என்றான்.

சொன்னபிறகுதான், ஒருவேலை இதை சுந்தரி செய்திருப்பாளோ என்ற பயம் வந்து தொண்டையைப் பிடித்தது. அம்மா முகத்தில் தோன்றிய புன்னகையால் தப்பித்தோமடா, சாமி என்று மனதுக்குள் சந்தோஷப்பட்டான்.

சுந்தரி வந்தநாள் முதலாய் நாகலட்சுமி அவளிடம் சரியாய் முகம் கொடுத்துப் பேசவில்லை. அவளை எந்த வேலையும் செய்யவிடவில்லை. சுந்தரியை வீட்டுக்கு அழைத்துவரச் சொல்லிவிட்டாலும், அவள் வரவை முழுமனதுடன் அவரால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை.அதனால் சுந்தரியை உதாசீனப்படுத்துவதன்மூலம் அவள் மனதை நோகடிப்பதில் வெற்றி கண்டார்.

எந்நேரமும் வேலை செய்தே பழக்கப்பட்டவளுக்கு, இன்னொருவர் வீட்டில் எந்தவேலையும் செய்யாமல் உட்கார்ந்து சாப்பிடுவது பெரும் இழிவைத் தரும் என்று உணர்ந்தபடியால் அக்குற்ற உணர்வின்மூலமே அவளைப் பழிவாங்க முடிவெடுத்தவர் போல் நடந்துகொண்டார். அதையும் நேரடியாய்ச் செய்யாமல் அவளுக்கு ஏதோ உபகாரம் செய்வதுபோலவே செய்தார். இதன் மூலம் ஒரே நேரத்தில் சுந்தரியின் வேதனையையும், விக்னேஷின் நன்மதிப்பையும் பெற்றுவிடலாம் என்று நினைத்தார்.

ஆனால் விக்னேஷ் அம்மாவின் ஆதி முதல் அந்தம் வரை அறிந்தவனாகையால் அம்மாவின் இந்த செயலை சுந்தரி முன்னிலையிலேயே கண்டித்தான்.

"அம்மா! சுந்தரிகிட்ட சொன்னா செய்யமாட்டாளா? நீங்க எதுக்கு இப்படி கஷ்டப்படுறீங்க?"

"அவ நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளிப்பா! அவகிட்ட நான் எப்படி வேலை வாங்கிறது?"

"அம்மா, நீங்க அப்படியெல்லாம் நினைக்காதீங்க, நீங்க முடியாம வேலை செய்யறதைப் பாத்து அவ தவிக்கிறது எனக்கு நல்லாப் புரியுது. அவளையும் உங்களோட கூடமாட வேலை செய்யவிடுங்க!"

அதற்குப் பிறகு நாகலட்சுமி ஒன்றும் மறுக்கவில்லை. சுந்தரி சற்று துணிவுடன் நாகலட்சுமியிடம் அடுத்து என்னென்ன செய்யவேண்டுமென்று கேட்டுக் கேட்டு செய்தாள். இதில் நாகலட்சுமிக்கு ஒரு வசதியும் இருந்தது. சுந்தரியிடம் தானாய் வீட்டுவேலைகளை ஒப்படைப்பதைவிடவும், மகனின் விருப்பத்தின் பேரில் ஒப்படைத்தால், தனக்கு பழிச்சொல் உண்டாகாது என்று நினைத்தார்.

சுந்தரிக்கு நாகலட்சுமியின் மனவோட்டம் எதுவும் புரியாமல் இல்லை. அதனாலேயே விக்னேஷுக்கும் அவருக்குமான உறவின் நடுவில் தான் வந்துவிடக்கூடாது என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தாலும், சுபாவின் குறுக்கீட்டைத் தடுக்க முடியவில்லை. சுபா எவ்வளவு தூக்கத்திலிருந்தாலும், விக்னேஷின் குரல் கேட்டதும் விழித்துக்கொண்டு அவனைத் தேடுவதையும், அவனைப் பார்த்தநொடியே ஆவலாய் கைகளை விரித்துக்கொண்டு அவனிடம் பாய்வதையும் எத்தனை முயன்றும் சுந்தரியால் தடுக்க முடியவில்லை.

ஒருவாரம் ஓடியிருக்கும். சனி, ஞாயிறு முழுவதும் குழந்தையுடன் கொஞ்சிக்கழித்துவிட்டு திங்களன்று அலுவலகம் செல்ல விக்னேஷ் தயாரானபோது சுபா விழித்துக்கொண்டாள். விக்னேஷ் அம்மாவிடமும், சுந்தரியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பும் தருவாயில் அவனைப் பார்த்துவிட்டு கைகால்களை உதைத்துக்கொண்டு அவனிடம் தாவ முற்பட்டாள்.

"ஏய், சும்மா இரு, மாமாவுக்கு நேரமாச்சு....இப்ப உன்னய தூக்கமாட்டாங்க!" சுந்தரி குழந்தையை செல்லமாய் அதட்டினாள்.

சுபா அழத்துவங்க, அவளைத் தவிர்த்துவிட்டுப் போக மனமில்லாமல்,"குடும்மா! அவளைக் கொஞ்சநேரம் வச்சிட்டுப்போறேன், இல்லைன்னா எனக்கும் அங்க வேலை ஓடாது!" என்று கூறிக்கொண்டே இருகைகளாலும் அவளை வாங்கி தன் முகத்துக்கு எதிரே பிடித்துக் கொஞ்சினான்.

சுபா, அழுகையை நிறுத்திவிட்டு துள்ளலுடன் அவன் வயிற்றில் தன் கால்களை உதைத்து மேலெழும்பிச் சிரித்தாள்.

"வாலுக்குட்டி...இரு...இரு...உன்னய சாயங்காலம் வந்து கவனிச்சுக்கறேன்!" முத்தமிட்டு அவளை சுந்தரியிடம் ஒப்படைக்க முயன்றான்.

சுபாவோ, வீலென்று கத்திக்கொண்டு விக்னேஷின் சட்டையை இறுகப் பற்றிக்கொண்டு விட மறுக்க, அவள் கையிலிருந்து சட்டையை விடுவிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது, இருவருக்கும்.

"ஐயோ...உங்க சட்டையெல்லாம் கசங்கிடுச்சேண்ணே...."

சுந்தரி பதறினாள்.

"பரவாயில்ல....விடு...முதல்ல குழந்தையப் பாரு! எப்படி அழறா பாரு! அவளை அழவிடக்கூடாதுன்னு நினைச்சேன். நல்லா அழவிட்டுட்டுப் போறேன்!" விக்னேஷ் வருத்தத்துடன் விடைபெற்றுச் சென்றான்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாகலட்சுமிக்கு சொல்லொணாக் கோபம் வந்தது. கட்டிய பெண்டாட்டி போல் இவள் வாசல்வரை போய் வழியனுப்புகிறாள், அவன் பெற்ற பிள்ளைபோல் குழந்தையை அழவிட மனசில்லாமல் போகிறான். என்ன கூத்து இது?

அக்கம்பக்கத்தில் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம் துளியாவது இருக்கிறதா இருவருக்கும்? கணவனை இழந்து மூன்றுமாதம்தான் ஆகிறது. அந்தக் கவலை கொஞ்சமாவது தெரிகிறதா இவள் பேச்சிலும், நடவடிக்கையிலும்? இப்படிதான் பிரபுவையும் மயக்கியிருந்திருப்பாளோ, இந்தக் கைகாரி?

ஏதேது? இருவரும் அண்ணன் தங்கை போல்தான் பழகுகிறார்கள் என்று நினைத்து சற்றே நிம்மதி அடைந்தால் அதையே சாதகமாய்க்கொண்டு இருவரும் வேறு உறவைத் துவக்கிவிடுவார்கள் போலிருக்கிறதே! ம்ஹும்! இதை இப்படியே விட்டுவிடக்கூடாது.

சுந்தரியை ஆரம்பத்திலேயே கண்டித்து வைக்கவேண்டும். இல்லையென்றால்.....நிலைமை விபரீதமாகிவிடும். விக்னேஷ் இல்லாதபோது இவளிடம் பேசுவதுதான் சரி.

விக்னேஷை அனுப்பிவிட்டு உள்ளே வந்தவளின் எதிரில் அனல் பறக்கும் விழிகளுடன் நின்றிருந்த நாகலட்சுமியைப் பார்த்ததும் சுந்தரியின் அடிவயிறு கலங்கியது.

*****************************************************************************

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர்.

மு.வ உரை:
துன்பம் எல்லாம் துன்பம் செய்தவரையேச் சார்வன, ஆகையால் துன்பம் இல்லாமல் வாழ்தலை விரும்புகின்றவர் பிறர்க்கு துன்பம் செய்யார்.

அன்புரசிகன்
13-06-2010, 12:17 AM
இதுவரை ஆவலுடன் எதிர்பார்த்த பாகம் தான் 16... ஆவல் கூடுகிறது. சீக்கிரம் தொடருங்கள் கீதம்.

வாழ்த்துக்கள்.

மதி
13-06-2010, 02:35 AM
நாகலட்சுமி ஒரு தாய்க்கும் மேல் சிறந்த சீரியல் வில்லியாக வாய்ப்புள்ளது. எதெதுக்கு தான் சந்தேகப்படறதுனு இல்லையா? சுந்தரி என்ன பாடுபடப்போறாளோ???

பாரதி
13-06-2010, 03:34 AM
தொலைக்காட்சித்தொடரில் வரும் கதாபாத்திரம் போல இருக்கிறதே...?

சிவா.ஜி
13-06-2010, 05:42 AM
காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்ற கதையாக அல்லவா இருக்கிறது நாகலட்சுமி அம்மாளின் கதை. பாவம் சுந்தரி இனி என்ன பாடுபடப் போகிறாளோ.

விக்னேஷின் நிலையும் பரிதாபம்தான். இரக்ககுணம் மற்றும் நட்புக்குச் செய்யும் மரியாதையை....அம்மா....கொச்சைப்படுத்துகிறாரே....

தொடருங்கள் தங்கையே....

govindh
13-06-2010, 11:14 AM
நாகலட்சுமியின் நயவஞ்சகச் செயல்கள்....
சுந்தரி பாடு திண்டாட்டம் தான்....
விக்னேஷ் எப்படி சமாளிக்கப் போகிறான்...?
மனோகரி வந்து உண்மையைச் சொல்லி...
விக்னேஷ்-வித்யா காதலுக்கு உதவப் போகிறாளா....?

தொடருங்கள்...

பா.ராஜேஷ்
13-06-2010, 02:02 PM
ஏகப் பட்ட எதிர்ப் பார்ப்புகளுடன் அடுத்த பாகம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம்... தொடருங்கள்..

Akila.R.D
14-06-2010, 04:15 AM
கதை ரொம்ப நல்லா போகுது கீதம்...

இரண்டு வாரமாக பாடாய் படுத்திய பரீட்சை நேற்றுதான் முடிந்தது...

கீதம்
14-06-2010, 04:19 AM
பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே. மெகாசீரியலின் பாதிப்பு வரக்கூடாது என்று எவ்வளவோ கவனமாய் இருந்தும் சாயல் வந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். தொடர்ந்து படித்துக் கருத்துச் சொல்லுங்கள் நண்பர்களே.

கீதம்
14-06-2010, 04:20 AM
அத்தியாயம் 23

நாகலட்சுமியின் கோபத்துக்கான காரணம் இன்னதெனப் புரியாமல் பயந்தவாறே ஏறிட்டாள், சுந்தரி.

"என்னம்மா....எல்லாம் ரொம்ப எல்லைமீறிப்போகுது?" நாகலட்சுமியின் குரலே மாறியிருந்தது.

"எ...என்....என்னம்மா சொல்றீங்க?"

சுந்தரி புரியாமல் விழித்தாள். சுபா நிலைமை புரியாமல் விக்னேஷ் விட்டுவிட்டுப் போனதற்காக வீறிட்டுக்கொண்டிருந்தாள். அழும் குழந்தையை அமைதிப்படுத்துவதா? ஆங்காரமாய் நிற்கும் அம்மாவை ஆசுவாசப்படுத்துவதா? தவித்தபடி சுந்தரி நின்றிருந்தாள்.

"இங்க பார்! நாங்க இங்க கெளரவமா வாழ்ந்துகிட்டிருக்கோம். தயவுசெஞ்சு அதைக் கெடுத்திடாதே!"

நாகலட்சுமி சொல்லவும் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் சுந்தரி விழித்தாள். அவரை மேற்கொண்டு பேசவிடாமல் சுபாவின் அழுகை அதிகமாக, அவர் விருட்டென்று தன் அறைக்குச் சென்றுவிட்டார்.

சுந்தரி பதைபதைப்புடன் அதையும், இதையும் காட்டி குழந்தையின் அமளியை அடக்கினாள். அவள் நிலைக்கு வந்ததும், பாலைக் கொடுத்து தொட்டிலில்
இட்டு தூங்கச் செய்தாள்.

பின் நாகலட்சுமியின் அறைவாசலில் நின்று, திறந்திருந்த கதவை லேசாக தட்டினாள்.

"உள்ளவா! உங்கிட்ட நான் பேசணூம்!" நாகலட்சுமி இறுக்கமான குரலில் வரவேற்றார்.

சுந்தரிக்கு அந்தம்மாவின் கோபத்துக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஓரளவு புரிந்தது. "சொல்லுங்கம்மா!" பணிவுடன் அவர்முன் நின்றாள்.

"நீ செய்யறது உனக்கே நல்லாயிருக்கா? தெருவில என்ன கொஞ்சலும், குலாவலும்? அவன் கல்யாணம் ஆகவேண்டிய பையன். அது உனக்கு ஞாபகமிருக்கா? என்னதான் நண்பனோட மனைவின்னு சொன்னாலும் பாக்கிறவங்க நம்ப வேண்டாமா? எல்லாத்துக்கும் ஒரு அளவு இருக்கு. புரியுதா?"

விஷம் தோய்த்த வார்த்தைகள் புறப்பட்டு வந்தன, அவர் வாயிலிருந்து.

சுந்தரிக்கு அவர் சொல்வதன் முழுப்பொருளும் புரிந்தது. அவள் எதிர்பார்த்ததுதான்.ஒரு தாய்க்கு இருக்கவேண்டிய நியாயமான கவலைதான் அது என்று நினைத்துக்கொண்டாள். எவ்வளவுதான் தான் எச்சரிக்கையாய் இருந்தாலும், சுபாக்குட்டி அதைக் கெடுத்துவிடுகிறாளே!

நாகலட்சுமி என்ன நினைக்கிறார் என்பது புரியாவிடினும், அவரது பயம் புரிந்தது. பயத்துக்கான காரணமும் புரிந்தது. அவரது அர்த்தமற்ற பயத்தைப் போக்குவதே தன் முதல் வேலை என்று அறிந்தாள்.

"அம்மா! நீங்க வயசிலயும், அனுபவத்திலயும் பெரியவங்க, உங்களுக்கு நான் சொல்லிதான் தெரியணும்னு இல்ல, விக்னேஷ் அண்ணனை மாதிரி ஒரு புள்ளயப் பெத்ததுக்கு நீங்க ரொம்ப பெருமப்படணும். அவரை நான் என் அண்ணனாதான் நினைக்கிறேன். அவரும் என்னை தங்கச்சியாதான் நினைக்கிறாரு. இதைத் தவிர எங்க ரெண்டுபேர் மனசிலும் வேற எந்த உணர்வும் இல்ல. என்னை நம்புங்கம்மா!"

நாகலட்சுமிக்கு சுந்தரியின்பால் நம்பிக்கை எழவில்லை. ஆளை அசத்தும் ஆணழகனான பிரபுவின் மனதையே கவர்ந்தவள், அவனுக்கும் ஒருபடி கீழே இருக்கும் தன் மகனின் மனதில் இடம்பிடிக்க எத்தனை நாளாகப்போகிறது. கூடவே குழந்தை வேறு. இத்தனைக் காலமாய் தாயின் பாசத்தைத் தவிர வேறு உறவை அறியாதவனுக்கு பிரபு நண்பனாய் வாய்த்தான்.

பிரபுவுக்கும் அவனுக்கும் இடையில் இருந்த நட்பு, பல சமயங்களில் நாகலட்சுமியை விக்னேஷிடமிருந்து விலக்கிவைத்திருக்கிறது. இப்போது, குழந்தையின் கள்ளமற்ற அன்பில் திளைத்துக்கிடக்கிறான். இதை இப்படியே வளரச்செய்தால் குழந்தையைக் காரணம் காட்டி சுந்தரியை நிரந்தரமாய் இங்கேயே தங்கவைத்துவிடுவான். அம்மாவிடம் செய்த சத்தியத்தை மீறமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே, திருமணம் செய்துகொள்ளாமல் இவளுடன் தகாத உறவில் ஈடுபட்டுவிட்டால்.....

"இங்கே பார்! நீ என்ன சொன்னாலும் சரி! என் மகன் விஷயத்தில் நான் கடுமையாய்தான் நடந்துக்குவேன். நீ இப்படி அவனுக்கு முன்னால நடமாடுறது எனக்குப் பிடிக்கல. சொல்லப்போனா....நீ இந்த வீட்டுக்கு வந்ததே பிடிக்கலை. அவன் இப்பவெல்லாம் என் பேச்சையே கேக்கறதில்ல. ஒப்புக்கு என்கிட்ட அனுமதி கேட்டான். நானும் என் மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்காக உன்னை வரச்சொன்னேன். உனக்கு இன்னொரு கல்யாணம் பண்ணணும்னு சொல்லிட்டிருக்கான். அவனுக்கு வேலை வைக்காம நீயா தேடிகிட்டாலும் எனக்கு சந்தோஷம்தான். தயவுசெஞ்சி அவனை விட்டுடு. உனக்கு புண்ணியமாப் போகட்டும்."

நாகலட்சுமிக்கென சுந்தரி தன் உள்ளத்தில் உருவாக்கி வைத்திருந்த கோயிலை அவரது கடும் வார்த்தைகளே கடப்பாரை கொண்டு இடித்துத் தரைமட்டமாக்கின.ச்சே! இவரும் ஒரு தாயா? தன்னை நம்பவேண்டாம், தன் மகனை நம்பலாம் அல்லவா? விக்னேஷ் அண்ணன் இவர்மேல் எத்தனை மரியாதையும், மதிப்பும், பாசமும் வைத்திருக்கிறார்! அவருக்குத் தெரிந்தால் என்னாகும்? தன் தாயின் போக்கு அவருக்குத் தெரிந்திருக்கலாம், அதனால்தான் இங்கு வருவதற்கு முன் என்னிடம் அப்படி யொரு எச்சரிக்கை செய்தாரோ?

சுந்தரி தன் நிலையை எண்ணி வேதனையும், விரக்தியும் அடைந்தாள். தனக்கு வேறொரு கல்யாணம் செய்யப்போவதாய் அண்ணன் சொன்னாராமே! உண்மைதானா? அது எப்படி என் சம்மதமில்லாமல் முடியும்? என் கணவர்தானே என்னை விட்டுப் பிரிந்தார்? நான் அவரை விட்டு எப்போது பிரிந்தேன்? என்னை இன்றும் உயிருடன் வைத்திருப்பவை அவரது நினைவுகளும், இந்தக் குழந்தையும்தானே! என் கனவெல்லாம் இந்தக் குழந்தையை நல்லமுறையில் வளர்த்து நாலுபேர் போற்ற ஆளாக்குவதுதானே தவிர இன்னுமொரு கல்யாணம் செய்துகொண்டு சுகப்படுவதிலா இருக்கிறது?

அப்படியே என் பாதுகாப்புக்காகவும், குழந்தையின் எதிர்காலத்துக்காகவும் செய்வதாக இருந்தாலும் அது எனக்கு எப்படி இன்பத்தைத் தரும்? என் குற்ற உணர்வே என்னைக் கொன்றுவிடாதா? இப்படியொரு எண்ணம் அண்ணனுக்கு இருப்பது எனக்குத் தெரியாதே! அவரிடம் இதுபற்றிக் கட்டாயமாக பேசவேண்டும். மனதுக்குள் முடிவெடுத்தவளுக்கு அப்போதுதான் நிகழ்காலம் நினைவுக்கு வந்தது.

தன் பிரச்சனை கிடக்கட்டும் முதலில் அண்ணனுக்குப் பிரச்சனை வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும். இப்படி பித்துப்பிடித்தவர் மாதிரி இந்தம்மா பேசுவதைக் கேட்டால் எனக்கே நெஞ்சம் படபடக்கிறதே! விக்னேஷ் அண்ணன் கேட்கநேர்ந்தால் எத்தனை துயரப்படுவார்? அவர் காதுகளில் இதுபோன்ற நாராசமான வார்த்தைகள், அதுவும் அவர் தெய்வமாய் மதிக்கும் தாயின் வாயிலிருந்து வந்து விழவே கூடாது.

தகிக்கும் நெருப்பை அணைக்கும் குளிர்நீர் போல் தன்னால் இவரது கொதிப்பை அடக்கமுடிந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும்? ஏன் முடியாது? அன்பு வார்த்தைகளைப் போல ஒரு குளிர்நீர் உண்டா, எதிராளியின் கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த?

சுந்தரி தன்னைப் பற்றிய உணர்வுகளைத் துறந்தாள். தன் எதிரில் நிற்கும் நாகலட்சுமியின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுக்க விழைந்தாள். மிகவும் தண்மையாய் அவரிடம் பேசத்தொடங்கினாள்.

"அம்மா! நான் உங்களை அம்மான்னு கூப்புடறது அப்படியே சத்தியமான வார்த்தை. அதை நீங்க முழுசா நம்பலாம். நீங்க எந்தக்கடவுள்மேல சத்தியம் செய்யச்சொன்னாலும் செய்யறேன். உங்களுக்கும், அண்ணனுக்கும் நடுவில குழப்பம் பண்ண வந்தவளா என்ன நினைக்காதீங்கம்மா! எனக்கு அடைக்கலம் குடுத்த உங்க மனசு நோகுறமாதிரி நான் என்னைக்கும் நடந்துக்கமாட்டேன், இது சத்தியம்!"

நாகலட்சுமிக்கு சத்தியத்தின்மேலிருக்கும் நம்பிக்கையை அறிந்த சுந்தரி, தானும் அவர் வழியிலேயே சென்று அவரை தன் வழிக்குக் கொண்டுவர விரும்பினாள். அதில் ஓரளவு பலனும் கண்டாள்.

குழம்பிக்கிடந்த நாகலட்சுமிக்கு சுந்தரியின் பேச்சு ஆறுதலைத் தந்தது. கொஞ்சநஞ்சமிருந்த சந்தேகத்தையும் சுந்தரி செய்த சத்தியம் தகர்த்தது. நாகலட்சுமி அமைதியாய் இருப்பதன்மூலம், தன் பேச்சுக்கு செவிமடுக்கிறார் என்பது புரிய, சுந்தரி மேலும் தொடர்ந்தாள்.

"அம்மா! நீங்க என்னை உங்க மகளா நினைக்கவேண்டாம். வேலைக்காரியாவே நினைச்சுக்கங்க! நான் இங்க இருக்கிறவரைக்கும் உங்களுக்கு உழைச்சு, என் நன்றிக்கடன தீர்த்துக்கறேன். அண்ணன் மேல அநாவசியமா சந்தேகப்படாதீங்கம்மா, அவரு மாதிரியானவங்க இல்லைனா....என் மாதிரி அநாதைகளோட கதி என்னவாகும்னு நினைச்சுப்பாருங்கம்மா.....அண்ணன் ஏழேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேத்துகிட்டாரு..."

சுந்தரி நெகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தாள். எப்படியாவது நாகலட்சுமியின் மனநிலையை மாற்றிவிடவேண்டும் என்பதைக் குறியாய்க் கொண்டு பேசினாலும், உண்மையிலேயே விக்னேஷ்மீது அவள் வைத்திருந்த நன்மதிப்பை வெளிப்படுத்த இதைவிட சந்தர்ப்பம் வாய்க்காது என்பதுபோல் பேசினாள்.

நாகலட்சுமியின் மனதில் இருந்த இறுக்கம் சற்றே தளரத் தொடங்கியது. சுந்தரியின் தெளிவான பேச்சு அவரை அசரவைத்தது. தான் மிரட்டினால் பயந்துகொண்டு பணிந்துநடப்பாள் என்று எதிர்பார்த்ததுபோக, துணிவுடன் அவருக்கே அவள் எடுத்துச் சொல்கிறாள். இதற்குமேலும் அவளை நம்பாததுபோல் நடிப்பது சிரமம் என்று உணர்ந்தார்.

‘இத்தனைத் துயரத்திலும், அவள் தெளிந்த மனநிலையில் இருப்பதோடு, அடுத்தவரைத் தெளிவிப்பதிலும் கெட்டிக்காரியாய் விளங்குகிறாள். இவளை முழுமையாய் நம்பலாம்.’

நாகலட்சுமி இளகிய குரலில் பேசத்தொடங்கினார்.

"சுந்தரி! நான் கொடுமைக்காரி இல்லைம்மா. எனக்கு இந்த உலகத்தில என் மகனை விட்டால் வேற யாருமில்ல. அவனுக்கொரு கல்யாணம் செய்துபார்க்கக் கூட பயப்படுறேன்னா....எந்த அளவுக்கு அவன்மேல பாசம் வச்சிருப்பேன்னு நினைச்சுப்பாரு. நான் சாகுறவரைக்கும் என் மகனோட நிழலிலேயே வாழணும்னு ஆசைப்படறேன். அது தப்பா? சொல்லும்மா!"

சுந்தரிக்கு அவரின் நிலை பரிதாபத்தையே தந்தது. முழுமையான சுயநலம் அவர்பேச்சில் பிரதிபலித்தது. மகனுக்குத் திருமணம் செய்து மருமகளுடனும், பேரப்பிள்ளைகளுடனும் வாழும் இன்பத்தைத் தொலைத்துவிட்டு மகன் தனிமரமாய் வாழ்வதில் என்ன இன்பத்தைக் காண்பார்? இவர் மனதை கொஞ்சம் கொஞ்சமாய்தான் மாற்றவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

"அம்மா! நீங்க சொல்றதில் எந்தத் தப்பும் இல்ல...அதனால்தான் சொல்றேன், உங்க ஆசைக்கு குறுக்கவந்தவளா என்னை நினைக்காதீங்க. குழந்தைக்கு புரியல. அதனால் கொஞ்சம் அதிகமா உரிமை எடுத்துக்கறா. விவரம் தெரிஞ்சதும் விலகிடுவா. நானும் குழந்தையும் தற்காலிகமாத் தங்கவந்தவங்கதான். நிரந்தரமாத் தங்க வேற ஒருத்தி வருவா.உங்களுக்கும் அண்ணனுக்கும் பிடிச்சமாதிரி ஒரு தங்கமான பொண்ணு இந்த வீட்டுக்கு மருமகளா வருவா...அதுவரைக்கும் நீங்க எதைப்பத்தியும் கவலப்படாம நிம்மதியா இருங்க!"

நாகலட்சுமிக்கு இதமாய் இதயத்தை யாரோ வருடுவதுபோல் இருந்தது. இப்படியான ஆறுதல் மொழிகளை முன்பெல்லாம் விக்னேஷ்தான் சொல்லிக்கொண்டிருந்தான். சமீபகாலமாய் அவனும் தன்னைவிட்டு விலகிப்போவதாய்த் தோன்ற ஆரம்பித்துவிட்டது. அதன்பின் இப்போது சுந்தரியின் அன்பான பேச்சு ஆறுதலைத் தந்தது.

"சுந்தரி! என்னத் தவறா நினைச்சுக்காதேம்மா! நான் பேசினது எதுவும் விக்னேஷுக்கு தெரியவேணாம்மா!"

அவர் கெஞ்சுவதுபோல் கேட்க, சுந்தரி ஆதரவாய் அவர் கைகளைப் பற்றினாள்.

"அம்மா! நீங்க அநாவசியமா கவலப்பட்டுதான் உங்க உடம்பக் கெடுத்துக்கறீங்க!"

நாகலட்சுமியின் முகத்தில் முதன்முறையாக புன்னகை அரும்பிற்று. பிரபுவுக்கு சுந்தரிமேல் ஈர்ப்பு ஏற்பட்டதன் காரணம் நாகலட்சுமிக்கு இப்போது புரிந்தது. நல்ல பெண்தான், சந்தேகமே இல்லை.

*************************************************************************

அன்புஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு.

மு.வ உரை:
அன்பு பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத் தரும்: அஃது எல்லாரிடத்தும் நட்பு என்றுசொல்லப்படும் அளவற்ற சிறப்பைத் தரும்.

பாரதி
14-06-2010, 04:31 AM
இருவருக்கும் இடையேயான உரையாடல் நன்று. தொடருங்கள்.

மதி
14-06-2010, 04:59 AM
சுமூக பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதா? இனி வித்யாவை உள்ளே கொண்டு வரும் பொறுப்பு.. இப்போ சுந்தரியிடம்.

சிவா.ஜி
14-06-2010, 06:03 AM
சுந்தரியின் பக்குவமான பேச்சு நாகலட்சுமியின் மனதையும் கரைத்துவிட்டதே...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க இந்த பாகத்தை. அருமையான உரையாடல்.

மெகா சீரியல் சாயல் வருதேன்னு கவலைப்படாதீங்க....இப்ப எதை எழுதினாலும்...கொஞ்சமாவது அந்த சீரியல்கள்ல இருக்கிற மாதிரி தெரியறதைத் தவிர்க்க முடியாது. எதையும் விட்டு வெக்காம எல்லாத்தையும்தான் சீரியலா எடுத்துடறாங்களே.

கதை ரொம்ப நல்லா போய்ட்டிருக்கு. தொடருங்க தங்கையே.

அன்புரசிகன்
14-06-2010, 08:17 AM
மாமியார் மருமகள், கொடுமையான தாய் மாமியார் போன்ற கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்நாடகங்களின் சாயல் வருவதை தடுக்க இயலாது. ஆனால் கடைக்குப்போய் பால் வாங்குவதை ஒருநாள் பாகமாக கொடுப்பது தான் தாங்க முடியாது. உங்களது கதை அவ்வாறில்லை. ஆகையால் கவலை விடுத்து தொடருங்கள்.

சுந்தரி நாகம்மாவின் தொடர்பாடல் அழகாக காட்டியுள்ளீர்கள். ஒருவாறு நாகம்மாவின் மனதில் இடம்பிடித்துக்கொண்டாள். தொடருங்கள்.

வாழ்த்துக்கள் கீதம்.

govindh
14-06-2010, 09:06 AM
"அன்பு வார்த்தைகளைப் போல ஒரு குளிர்நீர் உண்டா,
எதிராளியின் கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த?"

தொடர் அருமையாக அமைந்துள்ளது...
பாராட்டுக்கள்...
தொடருங்கள்...

பா.ராஜேஷ்
14-06-2010, 09:38 PM
அருமை... நாகலட்சுமி அம்மாள் குளிர்ந்த விட்ட பின்னர் பிறகென்ன... அன்பால் அவரது மனதை மேலும் மாற்றி வித்யாவை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டியதுதான்... பார்க்கலாம்..

கீதம்
15-06-2010, 12:27 AM
இருவருக்கும் இடையேயான உரையாடல் நன்று. தொடருங்கள்.

உங்களுடைய தொடர் ஆதரவுக்கு மிகவும் நன்றி பாரதி அவர்களே.

கீதம்
15-06-2010, 12:30 AM
சுமூக பேச்சுவார்த்தை ஆரம்பமாகிவிட்டதா? இனி வித்யாவை உள்ளே கொண்டு வரும் பொறுப்பு.. இப்போ சுந்தரியிடம்.

வித்யாவின் பிரச்சனை புரியாமல் பேசுகிறீர்களே? அடுத்த அத்தியாயம் படியுங்கள். தொடர்ந்து தரும் ஆதரவுக்கு நன்றி, மதி.

கீதம்
15-06-2010, 12:31 AM
சுந்தரியின் பக்குவமான பேச்சு நாகலட்சுமியின் மனதையும் கரைத்துவிட்டதே...

ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க இந்த பாகத்தை. அருமையான உரையாடல்.

மெகா சீரியல் சாயல் வருதேன்னு கவலைப்படாதீங்க....இப்ப எதை எழுதினாலும்...கொஞ்சமாவது அந்த சீரியல்கள்ல இருக்கிற மாதிரி தெரியறதைத் தவிர்க்க முடியாது. எதையும் விட்டு வெக்காம எல்லாத்தையும்தான் சீரியலா எடுத்துடறாங்களே.

கதை ரொம்ப நல்லா போய்ட்டிருக்கு. தொடருங்க தங்கையே.

ஊக்கமளிக்கும் வார்த்தைகளுக்கு மிகவும் நன்றி அண்ணா.

கீதம்
15-06-2010, 12:34 AM
மாமியார் மருமகள், கொடுமையான தாய் மாமியார் போன்ற கதாபாத்திரங்கள் வந்தால் தொடர்நாடகங்களின் சாயல் வருவதை தடுக்க இயலாது. ஆனால் கடைக்குப்போய் பால் வாங்குவதை ஒருநாள் பாகமாக கொடுப்பது தான் தாங்க முடியாது. உங்களது கதை அவ்வாறில்லை. ஆகையால் கவலை விடுத்து தொடருங்கள்.

சுந்தரி நாகம்மாவின் தொடர்பாடல் அழகாக காட்டியுள்ளீர்கள். ஒருவாறு நாகம்மாவின் மனதில் இடம்பிடித்துக்கொண்டாள். தொடருங்கள்.

வாழ்த்துக்கள் கீதம்.

வாழ்த்துக்கும், பின்னூட்ட ஊக்கத்துக்கும் மிக்க நன்றி, அன்புரசிகன்.

கீதம்
15-06-2010, 12:35 AM
"அன்பு வார்த்தைகளைப் போல ஒரு குளிர்நீர் உண்டா,
எதிராளியின் கொந்தளிக்கும் கோபத்தை கட்டுப்படுத்த?"

தொடர் அருமையாக அமைந்துள்ளது...
பாராட்டுக்கள்...
தொடருங்கள்...

ஊக்கம் தரும் தொடர் பின்னூட்டத்துக்கு நன்றி, கோவிந்த்.

கீதம்
15-06-2010, 12:36 AM
அருமை... நாகலட்சுமி அம்மாள் குளிர்ந்த விட்ட பின்னர் பிறகென்ன... அன்பால் அவரது மனதை மேலும் மாற்றி வித்யாவை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டியதுதான்... பார்க்கலாம்..

பார்க்கலாம், உங்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று.:icon_b:

தொடர்ந்து வருவதற்கு நன்றி, ராஜேஷ்.

கீதம்
15-06-2010, 12:38 AM
அத்தியாயம் 24

"அம்மா, பசிக்குதும்மா!"

"அம்மா......"

அஜயும் அஷ்வத்தும் கெஞ்சிக்கொண்டு இருந்தனர்.

"அம்மா....மணி எட்டாவுதும்மா....அம்மா...ப்ளீஸ்!"

"சனியன்களா....ஒரு புக் படிக்க விடறீங்களா, ஒரு சீரியல் பாக்க விடறீங்களா...உங்களையெல்லாம் உங்கப்பாகிட்டயே விட்டுட்டு வந்திருக்கணும், அந்தாளு என்னடான்னா நீ போறதா இருந்தா இந்த சனியன்களையும் கூடவே கூட்டிட்டுப் போயிடுன்னு என் தலையில் கட்டிட்டாரு.....இப்ப அங்க நிம்மதியா எவளோடயாவது கூத்தடிச்சிட்டிருப்பாரு....நான் தான் உங்களோட மாரடிச்சிகிட்டிருக்கேன்!"

நண்பரைப் பார்த்துவிட்டு அப்போதுதான் வீட்டுக்குள் நுழைந்த பலராமன் வேணியின் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார்.

"வேணி! வாயை அடக்கு! குழந்தைங்க முன்னாடி என்ன பேசறதுன்னு கூடவா தெரியாது?"

பலராமன் கோபாவேசமாய்க் கத்தினார். வேணி எதற்கும் அசைந்துகொடுக்கவில்லை. அவள் முனகியவாறே மீண்டும் தன் கவனத்தை புத்தகத்தில் பதித்தாள்.

"தாத்தா....பசிக்கிது, தாத்தா....ஸ்கூல் விட்டு வந்ததில இருந்து எதுவுமே சாப்பிடலை. கிச்சன்லயும் எதுவும் இல்ல. ஏதாவது சாப்பிடக்குடுங்க தாத்தா...."

பலராமன் அடுக்களைக்குச் சென்று பார்க்க, காலையில் வித்யா செய்துவிட்டுப்போனதுடன் அதது அப்படியே கிடந்தது. வித்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்பது புரிந்தது. பாவம், அந்தப் பெண்! இந்த வயதில் எத்தனைப் பொறுப்பாய் நடந்துகொள்கிறாள்! அலுவலகத்திலும் வேலை செய்துகொண்டு, வீட்டிலும் வேலை செய்துகொண்டு.... போதாக்குறைக்கு இப்போது அக்காவுக்கும் அவள் பிள்ளைகளுக்கும் சேர்த்து சமைக்கவேண்டியிருக்கிறது. சமையல் மட்டுமா? சாமான் தேய்ப்பது, துணிமணி துவைப்பது என்று எல்லா வேலைகளையும் செய்கிறாள்.

நீ கொஞ்சம் உதவக்கூடாதா என்று வேணியைக்கேட்டால், வேலைக்கு ஆள் வைத்துக்கொள் என்கிறாள். வேலைக்கு ஆள் வைக்கத் தெரியாமலா இருக்கிறோம்? கூடுமானவரை செலவுகளைக் குறைக்கவேண்டும் என்றுதான் வித்யாவே எல்லா வேலைகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்கிறாள். நான் கூடமாட வேலை செய்யவந்தால் நெஞ்சுவலியைக் காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள்.

இவளோ, விருந்துக்கு வந்ததுபோல் வேளாவேளைக்கு சாப்பிட்டுக்கொண்டும், தூங்கிக்கொண்டும் காலத்தைக் கழிக்கிறாள். குறைந்தபட்சம் குழந்தைகளின் தேவையையாவது நிறைவேற்றலாம் அல்லவா? அதற்கும் லாயக்கில்லை. இப்படிப் பட்ட பெண்ணுடன் எந்தப் புருஷன்தான் குடித்தனம் நடத்த முடியும்? ஏன் இப்படி மாறினாள்? எத்தனை அனுசரணையாய் அன்பாய் இருந்தவள், இன்று தான் பெற்ற குழந்தைகளின் பசியைத் தீர்க்கவும் வழியில்லாமல் எரிந்தெரிந்து விழுகிறாளே!

வித்யாவை ஏன் இன்னும் காணவில்லை? இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!

"அஜய்! சித்தி இன்னும் வரலையா?"

" சித்தி ட்ராஃபிக் ஜாம்ல மாட்டிகிட்டாங்களாம். வர லேட்டாவும்னு போன் பண்ணினாங்க, தாத்தா!"

"சரி, என்கூட வாங்க, வெளியில் போய் சாப்பிடலாம்!"

இதற்குமேல் வித்யா வந்து சமைப்பதென்றால் அதுவரை குழந்தைகள் பசி தாங்க மாட்டார்கள். அதுவுமில்லாமல் வித்யாவுக்கும் சிரமம் கொடுக்கக்கூடாது என்று நினைத்தவர், வரும்போது இரு பெண்களுக்கும் ஏதாவது பார்சல் வாங்கிவந்துவிடலாம் என்று பேரன்களை அழைத்துக்கொண்டு உணவகம் செல்ல முடிவு செய்தார்.

செருப்பைப் போட்டுக்கொண்டிருந்தவரிடம், "அப்பா! எனக்கும் அப்படியே ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வாங்க! நீங்க பாட்டுக்கு உங்கவேலை முடிஞ்சதுன்னு அப்படியே வந்திடாதீங்க!" என்றாள், வேணி.

பலராமன் விரக்தி மேலிட சிரித்துக்கொண்டே சொன்னார்,

"நான் உன்னை மாதிரி இல்லைம்மா...பெத்தபிள்ளைகள் எப்படிப் போனாலும் கவலைப்படாம இருக்க! என் குழந்தைகளை நான் என்னைக்கும் பட்டினி போடமாட்டேன்மா! கதவைச் சாத்திக்கோ! வாங்கடா பசங்களா!"

எத்தனைக்கெத்தனை வித்யாவால் நிம்மதியும் சந்தோஷமும் அடைந்திருந்தாரோ, அத்தனைக்கத்தனை வேணியால் துன்பமும், துயரமும் அடைந்தார். வருடத்துக்கு ஒருமுறை வரும்போதும் எந்த வேலையும் செய்யாமல் இப்படிதான் இருந்தாள் என்றாலும் அப்போது அது பெரிய விஷயமாய்த் தெரியவில்லை. இப்போது எதிர்காலமே பிரச்சனையில் இருக்கும்போது இவள் இப்படி பொறுப்பில்லாமல் இருப்பது எவ்வளவு வேதனையைக் கொடுக்கிறது!

கையில் பிடித்திருக்கும் பேரன்களைப் பார்த்தார். இரண்டுங்கெட்டான் வயதில் இவர்களுக்கு என்ன தெரியும்? இவர்களிடம் வேணி இப்படி வரம்பு மீறி வார்த்தைகளை விடலாமா? வளர்ந்தபின் தங்கள் தாயை மதிப்பார்களா?

சரி, புருஷன் சரியில்லை என்றே வைத்துக்கொள்வோம், இவள் என்ன செய்யவேண்டும்? பிள்ளைகளை நல்லமுறையில் வளர்க்க முற்படவேண்டாமா? உன் துணை இல்லாமல் என்னால் என் பிள்ளைகளை வளர்க்கமுடியும் என்று அவன்முன் வாழ்ந்துகாட்டவேண்டாமா? கொஞ்சமாவது அக்கறையோ, பொறுப்போ இல்லாத பெண்ணை என்னவென்று சொல்வது? நான் இருக்கும்வரை பிரச்சனையில்லை. நான் போய்விட்டால்.....?

வித்யாவால் எத்தனை நாளுக்கு வேணியின் பாரத்தைத் தாங்க இயலும்? அவளுக்கென்று ஒரு வாழ்க்கை அமையவேண்டாமா? வித்யாவை நினைத்ததும் விக்னேஷ் நினைவுக்கு வந்தான்.

என்ன பையன் அவன்? அம்மாவின் மனமும் நோகக்கூடாது, காதலியையும் கைப்பிடிக்கவேண்டும் என்று நினைக்கிறான். எப்படி முடியும்? இரு குதிரையில் சவாரி செய்ய முடியுமா? அவனை நம்பிக்கொண்டு வித்யாவும் காத்திருக்கிறாள். ஒருவேளை அவன் அவனுடைய தாயின் சொற்படி அவர் தேர்ந்தெடுக்கும் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள நேரிட்டால்....வித்யாவின் நிலை? அவள் காத்திருப்பு எல்லாமே வீணாகிவிடுமே!

ஐயோ....நான் பெற்ற இரு பெண்களின் மணவாழ்வும் இப்படியா நசித்துப்போகவேண்டும்? நான் என்ன செய்வேன்? ஐய்யோ......

நெஞ்சில் யாரோ ஏறி மிதிப்பதுபோல் வலித்தது. பிள்ளைகளைப் பிடித்திருந்த கைகளை உருவி நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய, பிள்ளைகள் பதறினர்.

"தாத்தா....... தாத்தா...... ஐயோ யாராச்சும் வாங்களேன்.... எங்க தாத்தா கீழ வுழுந்திட்டாரு...."

கூடிய கூட்டத்தில் இருந்த தெரிந்தவர்கள் மூலமாக வித்யாவுக்கும், வேணிக்கும் தகவல் சொல்லப்பட, வித்யா உடனேயே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல போனிலேயே ஏற்பாடு செய்தாள். விக்னேஷுக்கும் தகவல் சொல்லிவிட்டு நேராய் மருத்துவமனை வந்துசேர்ந்தாள்.


"இது ரெண்டாவது அட்டாக்! நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன், அவரைத் தனியா எங்கேயும் வெளியில் அனுப்பாதீங்க, ரொம்ப கவனமா இருங்க.மாத்திரையெல்லாம் தவறாம சாப்பிடணும், முக்கியமா எதை நினைச்சும் கவலைப்படாம இருக்கணும்!"

டாக்டர் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டார். ஆனால்...கேட்பது யார்? கவலைப்படாதீர்கள் என்றால் கேட்டால்தானே? வித்யாவுக்கு இந்த சூழலிலும் அப்பாவின்மேல் கோபம் வந்தது. எதற்காக இந்தவேளையில் வெளியில் போகவேண்டும்? காலையிலிருந்து வீடு தங்கவே இல்லையாம். யாரோ நண்பரைப் பார்க்கப் போயிருந்தாராம். மாலைதான் வந்தாராம். வந்ததும் பேரன்களை அழைத்துக்கொண்டு வெளியில் கிளம்பிச் சென்றாராம்.

அப்பாவை அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து மாற்றினாலும், தொடர்கண்காணிப்புக்காக அங்கேயே அனுமதித்திருந்தனர்.
சிறுவர்கள் இருவரும் பயந்துபோய் நின்றிருந்தனர். வேணி ஒரு பெஞ்சில் அமர்ந்து எங்கோ வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

வித்யா குழந்தைகளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள். விக்னேஷ் வந்தது அவளுக்கு பெரும் உதவியாய் இருந்தது. அவனிடம் குழந்தைகளை அழைத்துப்போய் சாப்பிட ஏதாவது வாங்கித் தரசொன்னபோது இளையவன் அவசரமாய் மறுத்தான்.

"வேணாம், சித்தி, இப்ப எங்களுக்குப் பசியில்ல சித்தி."

"சித்தி, எங்களாலதான தாத்தாவுக்கு இப்படி ஆச்சி?" அஜய் அழத்துவங்க அஷ்வத்தும் சேர்ந்துகொண்டான்.

"உங்களால எதுவும் இல்ல. தாத்தாவுக்கு வயசாயிடுச்சி. வயசானா இப்படிதான் அடிக்கடி உடம்புக்கு முடியாமப் போகும். அதை நினைச்சு நீங்க சாப்பிடாம இருக்கிறதில அர்த்தமில்ல. மணி பத்தாகுது! இந்நேரத்துக்கு என்ன கிடைக்கும்னு தெரியல. கிடைக்கிறதை சாப்பிட்டு வாங்க! விக்கி, எனக்கு ரெண்டு வாழைப்பழம் மட்டும் வாங்கிட்டு வாங்க, வேற எதுவும் வேணாம்!"

சரியென்று அவர்கள் கிளம்பியவேளை, வேணியையும், விக்னேஷுடன் அனுப்பிவைத்தாள்.

வித்யா, அப்பாவின் கவலைக்கு தானும் ஒரு காரணமோ என்று பயந்தாள். வேணியின் பிரச்சனைக்கு தன்னால் ஏதாவது தீர்வு காணமுடியுமா என்று யோசித்தாள். அவள் கணவனுடன் பேசி, விவாகரத்து செய்யும் எண்ணத்தை மாற்றினாலும், தொடர்ந்து வேணியுடன் நிம்மதியான வாழ்க்கை அமையுமா என்பது சந்தேகமே! குழந்தைகள் முன் பெற்றவர்கள் தினமும் சண்டையிட்டுக்கொண்டிருந்தால் அவர்களின் மனநிலை முற்றிலுமாய் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளது. ஏற்கனவே அஜய், அஷ்வத் இருவரும் தங்கள் தாய் தகப்பன்போல் சண்டையிட்டு மிமிக்ரி செய்து காட்டி, அப்பாவை வேதனைப்படுத்தினார்கள்.

தன்னால் பிரச்சனை என்றால் தன்னை மாற்றிக்கொள்ளலாம். தன்னை சுற்றியுள்ளவர்களால் தனக்குப் பிரச்சனை என்னும்போது என்ன செய்ய முடியும்? அக்காவின் பிரச்சனை தீரவேண்டுமானால் அக்கா மாறவேண்டும், விக்கியின் பிரச்சனை தீரவேண்டுமானால் அவன் அம்மா மாறவேண்டும். அப்பாவின் பிரச்சனை தீர அவர்தான் மனம் வைக்கவேண்டும். தன் உடல்நிலையில் கவனம் வைக்கவேண்டும். இவர்கள் அனைவரின் பிரச்சனையால் தான் பாதிக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? வித்யாவுக்கு துக்கம் பொங்கிவந்தது. தூரத்தே அனைவரும் வருவதைப் பார்த்து தன்னைக் கட்டுப்படுத்தினாள்.

"சித்தி, இந்தாங்க!" வாழைப்பழங்களையும், பிஸ்கட் பொட்டலத்தையும் அவளிடம் கொடுத்தனர்.

"விக்கி, எல்லாரையும் வீட்டில விட்டுட்டு நீங்களும் வீட்டுக்குப் போங்க! நான் அப்பாவைப் பாத்துக்கறேன். நீங்க மட்டும் காலையில் வந்து பாத்திட்டுப் போங்க, அநேகமா நாளைக்கு வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு நினைக்கிறேன்!"

"சரி, வித்யா! தைரியமா இரு! ஏதாவது தேவைன்னா எனக்கு போன் பண்ணு!"

வித்யா அவர்களை அனுப்பிவைக்க மருத்துவமனையின் வாசல் வரை வந்தபோது, வேணி ரகசியமாய் அவள் காதோரம் சொன்னாள், "ஏய், உன் ஆளு சூப்பர்டீ!"

வித்யாவுக்கு அவளை ஓங்கி அறையலாம் போலிருந்தது. அப்பா மரணத்தின் வாயிலுக்கு சென்று பிழைத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு மகளின் எண்ணம் எங்கு வேரூன்றியிருக்கிறது? ச்சீ! இவளை இவள் கணவன் பிரிய நினைப்பது சரிதான் என்று தோன்றியது.

******************************************************************

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

மு.வ உரை:
ஒருவன் மற்றவர் நாணத்தக்க பழிக்குக் காரணமாக இருந்தும் தான் நாணாமலிருப்பானானால், அறம் நாணி அவனைக் கைவிடும் தன்மையுடையதாகும்.

பாரதி
15-06-2010, 01:30 AM
எதிர்பாராத கிளக்கதை ஒன்று இருக்கிறதே..!
வழக்கம் போல உரையாடல்கள் எதார்த்தமாக அமைந்திருக்கின்றன.
தொடருங்கள். நன்றி.

மதி
15-06-2010, 04:47 AM
சொன்னமாதிரியே வித்யாவின் வாழ்க்கை சிக்கல் தான் போல.. நல்லவங்களுக்கு என்னிக்கும் கஷ்டம் தான்...

மேலும் தொடருங்கள்..!

சிவா.ஜி
15-06-2010, 05:31 AM
கதையில் ஒவ்வொரு சூழலையும் மிக அழகாய் கையாளுகிறீர்கள். வித்யாவின் அப்பாவுக்கு இரண்டாவது அட்டாக் வருவதற்கான அவரது மன உளைச்சலையும், வேணியின் விட்டேற்றித்தனத்தையும் அருமையாய் பதிவு செய்திருக்கிறீர்கள்.

வித்யாவைச் சுற்றிப் பிரச்சனைகள் கும்மியடித்துக்கொண்டிருக்கின்றன....இவை எல்லாவற்றிலுமிருந்தும் எப்படி மீளப்போகிறாள்....

அருமையாய் நகரும் கதை....தொடருங்கள் தங்கையே...

govindh
15-06-2010, 08:46 AM
வித்யா தன் சிக்கல் சூழலிலிருந்து மீண்டு வரட்டும்...
கதையோட்டம்...அருமை...
தொடருங்கள்....

Akila.R.D
16-06-2010, 07:36 AM
கீதம்...கீதம்...கீதம்...
எங்கே போனீர்கள்?...

இன்றைய அத்தியாயத்தை காணவில்லையே...

govindh
16-06-2010, 09:16 AM
அடுத்த அத்தியாயத்திற்காக
ஆவலுடன் காத்திருக்கிறோம்....

கீதம்
16-06-2010, 10:36 AM
அத்தியாயம் 25

சுந்தரி தனக்கென்று அந்த வீட்டில் மட்டுமல்ல, நாகலட்சுமியின் மனதிலும் ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டாள். இப்போதெல்லாம் விக்னேஷை விடவும் நாகலட்சுமிக்கு சுந்தரியின் தயவே அதிகம் தேவைப்பட்டது.

அந்தரங்கமாய் தன் உடல் வேதனைகளை அவளிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தது. சுந்தரியும் அவருக்குத் தன்னாலான உதவிகள் செய்தாள்.

நாகலட்சுமிக்கு ஷவரில் குளிக்கப்பிடிக்காது. குவளையில் முகர்ந்து ஊற்றிக்குளிப்பதே விருப்பம். குளிக்கும்போது அவருக்கு வசதியாக ஒரு மர ஸ்டூல் ஒன்றில் வெந்நீர் அண்டாவை வைத்து அவர் நீரை முகர்ந்து ஊற்றிக்குளிக்க உதவினாள். மேற்கத்திய கழிவறையானாலும் ஒவ்வொருமுறையும் உட்கார்ந்து எழ அவர் பட்ட சிரமத்தை அறிந்து, பிடித்துக்கொண்டு எழ உதவியாக தலைக்குமேல் உறுதியான கயிற்றுப்பிடிமானம் ஒன்றை ஏற்பாடு செய்தாள். இத்தனை நாள் தங்களுக்கு இந்த உபாயம் தோன்றவில்லையே என்று நாகலட்சுமியும் விக்னேஷும் அதிசயித்தனர்.

சுந்தரி தன்னை ஒரு வேலைக்காரியாய் நினைத்திருந்தாலும், நாகலட்சுமி அவளைத் தன் மகளாய் தோழியாய் எண்ணத் தொடங்கியிருந்தாள். விக்னேஷுக்கு அம்மாவின் இந்த புதிய அவதாரம் இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.

சுபா, எந்நேரமும் விக்னேஷைப் பற்றியிருந்தாள். இதனால் நாகலட்சுமிக்கு கோபம் உண்டாகவில்லை என்பதும் விக்னேஷை ஆச்சர்யப்படுத்திய இன்னுமொரு விஷயம்.

இதற்கெல்லாம் காரணம் சுந்தரிதான் என்பது தெரியவந்தபோது, சுந்தரிக்கு மனமார நன்றி சொன்னான். இத்தனைக்காலம் தானும் மருந்து மாத்திரைகளும் செய்ய முடியாததை சுந்தரி இந்த ஒரு மாதத்தில் செய்துவிட்டாளே என்று வியந்தான்.

சுந்தரிக்கு நாகலட்சுமியின் இந்த மாற்றம் வரவேற்கத்தக்கதாயிருந்தாலும், அவள் இன்னமும் சற்று எச்சரிக்கையுடனேயே காய்களை நகர்த்தினாள். நாகலட்சுமியைக் கேட்காமல் குழம்புக்கு கறிவேப்பிலையும் கிள்ளிப்போடுவதில்லை என்ற முடிவில் உறுதியாய் இருந்தாள்.

நாகலட்சுமியே ஒரு கட்டத்தில் சலித்துக்கொண்டார்.

"என்ன பொண்ணு நீ? இதுக்கெல்லாமா என்கிட்ட அனுமதி கேப்பாங்க? இவ்வளவு நாள் பழகியிருக்கேல்ல....? நீயே முடிவெடுத்து செய்யி!"

சுந்தரிக்கு எதுவும் செய்யத் தெரியாமல் இல்லை. அந்த வீட்டில் சுந்தரியின் வருகையால் நாகலட்சுமியின் முக்கியத்துவம் குறைந்துவிட்டதாய் அவர் எண்ணிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருந்தாள்.

நாகலட்சுமிக்கு தன்னால் வேலைகளை செய்யமுடியவில்லை என்ற சுயபச்சாதாபம் இருந்துகொண்டிருந்ததால், எல்லா வேலைகளையும் சுந்தரி செய்யும்போது அவருக்கு அந்த எண்ணம் தீவிரமாய் வந்துவிடக்கூடாது என்று பயந்தாள். அதனால் சுந்தரி வேலை செய்யும்போது, சுபாவைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை அவர் விருப்பமில்லாமலேயே அவரிடம் தந்தாள்.

சுபாவின் விஷயத்தில் முதலில் அவர் அவ்வளவாய் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், நாளடைவில் சுபாவின், துறுதுறுப்பும், பொக்கைவாய்ச்சிரிப்பும் அவரைக் கவர்ந்துவிட்டன.

சுபா அப்போதுதான் குப்புற விழப் பழகியிருந்தாள். அதனால் எதிர்பாராத நேரத்தில் குப்புற விழுந்து மூக்கு அடிபட்டு துடிப்பாள். சிலசமயம் தொடர்ந்தாற்போல் கொஞ்ச நேரம் குப்புறப்படுத்திருந்துவிட்டு வயிற்றுப்பகுதில் வலியெடுத்து அழுவாள். அவள் விழித்திருக்கும்போது, யாராவது ஒருவர் அவள் கூடவே இருந்து கண்காணிக்க வேண்டியிருந்தது. அதனால் சுந்தரி, எப்போதும் நாகலட்சுமியின் அருகில் தலையணைகளை பரப்பி அவளை படுக்கவைத்துவிடுவாள்.

படித்துக்கொண்டோ, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டோ இருக்கும் நாகலட்சுமியின் கவனத்தைக் கவர சுபா என்னென்னவோ பிரயத்தனங்கள் செய்வாள்.

'ஆங்....ஊங்....' என்று ஏதோ பேசுவாள். ‘ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…………’ என்று எச்சிலைத் தெளிப்பாள். 'கெக்க்கெக்க்க்' என்று தானே சிரிப்பாள். கையில் கிடைத்ததை வாயில் வைத்து வாயிலெடுப்பாள்.

நாகலட்சுமியின் கவனத்தை எப்படியும் தன்பக்கம் திருப்பிவிடுவாள். அவரும் இவளுடன் கொஞ்சிப் பேசத்தொடங்க, கண்ணுக்குத் தெரியாத அன்புச்சங்கிலி இவர்களையும் பிணைத்தது.

"சுந்தரி, விக்னேஷுக்கு விவா கலந்து கொடுத்திட்டியாம்மா?"

"குடுத்திட்டேம்மா....உங்களுக்குக் கொஞ்சம் பால் கொண்டுவரவா?"

"எனக்கெதுக்கு அதெல்லாம்? நீ குடிச்சியா?"

"நான் குடிக்கிறது இருக்கட்டும்! நீங்க குடிங்க, அன்னைக்கு டிவியில டாக்டர் சொன்னாரில்ல...எலும்பு வலுவா இருக்கணும்னா தெனமும் பால் சேத்துக்கணும்னு! உங்களுக்குதான் அடிக்கடி மூட்டுவலி வருதே! பால் குடிச்சா சரியாயிடுமில்ல...."

நாகலட்சுமி சிரித்தார்.

"நல்ல பொண்ணு! இது பால் குடிச்சு சரி பண்ற நோயில்ல. மூட்டு தேஞ்சுபோயிடுச்சி. ஆபரேஷன் பண்ணி செயற்கை மூட்டுப் பொருத்தணும். லட்சரூபா ஆகும். எல்லாம் அனுபவிக்கணும்னு என் தலையில் எழுதியிருக்கு."

"அப்படியா? ஆபரேஷன் பண்ணிதான் சரியாவுமா?"

"ஆமாம்! ஆபரேஷனுக்கப்புறம் குனிய நிமிர முடியும்கிறாங்க, கீழ கூட உக்கார முடியுமாம்."

"அப்ப பண்ணிக்க வேண்டியதுதான?"

"பண்ணிக்கலாம், பாழாப்போன சர்க்கரை வியாதி இல்லைனா...."

நாகலட்சுமி சலித்துக்கொண்டார்.

பின் பொறுமையாய் சுந்தரிக்குப் புரியும்விதத்தில் எடுத்துச்சொன்னார்.

"கவலப்படாதீங்கம்மா! சீக்கிரம் குணமாகி நல்லா நடமாட ஆரம்பிச்சிடுவீங்க."

சுந்தரி அவரைத் தேற்றினாள்.

"ஹும்! அந்த நம்பிக்கையிலதான் இருக்கேன்.”

தைலத்தை எடுத்து அவர் கால்களில் தடவி நீவ ஆரம்பித்தாள். நாகலட்சுமி மறுக்கவில்லை. அப்போதைக்கு அவருக்கு அவளது உதவி தேவைப்பட்டது.

நாகலட்சுமியின் கால்களை தன் மெல்லிய கரங்களால் அழுந்தப் பிடித்துவிட்டுக்கொண்டிருந்தாள், சுந்தரி. விக்னேஷ் பிடிப்பதற்கும் இவள் பிடிப்பதற்கும் நிறைய வேறுபாடு இருந்தது. விக்னேஷ் எவ்வளவு மெதுவாகப் பிடித்தாலும் அதில் லேசான முரட்டுத்தனம் வெளிப்படும். இவளிடம் அது இல்லாததால் இதமாக இருந்தது.

நாகலட்சுமிக்கு சுந்தரியைப் பார்க்க பாவமாய் இருந்தது. இந்தப் பெண் தன் அன்பால் என்னை வசியம் செய்துவிட்டாளே? இவளுடைய களங்கமற்ற அன்புக்கு ஈடாய் நான் எதைத்தான் தருவது? விக்னேஷ் சொன்னதுபோல் இவளுக்கும் குழந்தைக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துத்தருவதே என்னால் முடிந்த கைம்மாறு!

‘சுந்தரி, நீ எனக்கு மகளாய் பிறந்திருக்கவேண்டியவள்! உன்னைத் தவறாய் நினைத்த என்னை மன்னிச்சிடு, அம்மா!’

நாகலட்சுமியின் மனம் சுந்தரியின் காலடியில் கிடந்து மன்றாடியது.

ஆனால் சுந்தரியின் மனமோ பிரபுவின் நினைவுகளில் தஞ்சமைந்திருந்தது. இப்படிதான் அவனும் அவளுக்கு இதமாகக் கால்பிடித்துவிடுவான்.

மாதம் ஏற ஏற, வயிற்றின் பாரம் தாங்காமல் கால்வலி வந்து மிகவும் சிரமப்பட்டாலும், அவள் அதை வெளியில் சொல்லமாட்டாள். பிரபு தூங்கியதும் அவனைறியாமல் தைலம் எடுத்துத் தானே தடவிக்கொள்வாள். வாசம் உணர்ந்து விழித்துவிடுவான். பின் என்ன? அவள் தடுக்கத் தடுக்க, அவள் தூங்கும்வரை அவளுக்குக் கால்பிடித்துவிடுவான்.

எத்தனை அன்பு வைத்திருந்தான்? இவ்வளவு சீக்கிரம் போவோம் என்று தெரிந்துதான் இருந்த கொஞ்ச நாளிலேயே திகட்டத் திகட்ட அன்பைப் பொழிந்தானோ? அந்த அன்புக்கு ஈடே கிடையாது.
இனி ஒருவர் என் வாழ்வில் அதே அன்பைத் தரவே முடியாது.

பிரபுவின் நினைவுமின்னல் தாக்கியதும், சுந்தரி நிலைகுலைந்துபோனாள்.சட்டென்று விழிகள் கண்ணீரை உகுத்தன. நாகலட்சுமியின் கால்களில் சூடான கண்ணீரின் ஸ்பரிசம் பட்டு திடுக்கிட்டார்.

"என்னம்மா, சுந்தரி?"

"ஒண்ணுமில்லைம்மா...அவர் நெனப்பு வந்திடுச்சு!"

"சுந்தரி, உன் வேதனையை என்னால் முழுசாப் புரிஞ்சுக்க முடியுதும்மா. ஏன்னா...நானும் ஒரு காலத்தில் உன் நிலையில் இருந்தவதான். என்னைப் பத்திதான் உனக்கு சொல்லியிருக்கேனே! ஆனா.... நீ தைரியமான பொண்ணு! நீயே இப்படி கலங்கலாமா? உனக்கு எல்லா வகையிலும் உதவ நானும், விக்னேஷும் தயாரா இருக்கோம்!"

"உங்க ஆதரவு இருக்கிறவரைக்கும் நான் கவலைப்படமாட்டேன்மா!"

கண்களைத் துடைத்துக்கொண்டு எழுந்துசென்றாள்.


அடுத்தநாளே சுந்தரியின் கவனம் நாகலட்சுமியின் உணவு விஷயத்தில் நிலைகொண்டது. விக்னேஷுக்குப் பிடித்தது, நாகலட்சுமிக்கு ஏற்றது என சமையலில் இருவிதம் செய்தாள். நாகலட்சுமிக்கென்று செய்யும் சமையலில் எண்ணெய் அதிகம் சேர்க்காமல், தேங்காயையே கண்ணில் காட்டாமல், உப்பின் அளவைக் குறைத்து என்று ஏகப்பட்ட மாற்றங்கள் செய்தாள்.

இனிப்பு செய்தாலும் இரண்டாகச் செய்தாள். செயற்கை சர்க்கரை இட்டு நாகலட்சுமிக்கென்று தனியே செய்தாள். இதனால் சுந்தரிக்கு வேலை இரட்டிப்பானாலும், அலுப்பில்லாமல் செய்தாள்.

சுந்தரி பட்ட பாட்டுக்கு கைமேல் பலன் கிடைத்தது. மாதாந்திர ரத்தப் பரிசோதனையின் முடிவைப் பார்த்து டாக்டரே ஆச்சரியப்பட்டார். "என்ன மாயாஜாலம் செஞ்சீங்க?" என்றார்.

நாகலட்சுமி சுந்தரியைக் கைகாட்ட, டாக்டர் அவளைப் பெரிதும் பாராட்டினார். தொடர்ந்து சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருந்தால் இரண்டாம் மாத இறுதியில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுப் பொருத்திவிடலாம் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாகலட்சுமி சுந்தரியின் கைகளைப் பிடித்துக் கொண்டு ஆனந்தக்கண்ணீர் விட்டார்.

******************************************************************************

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.

மு.வ உரை:
எண்ணியவர் (எண்ணியபடியே செயல் ஆற்றுவதில்) உறுதியுடையவராக இருக்கப்பெற்றால் அவர் எண்ணியவற்றை எண்ணியவாறே அடைவர்.

கீதம்
16-06-2010, 10:44 AM
வந்துவிட்டேன். கணினிப் பிரச்சனையால் மன்றம் வர இயலவில்லை. இப்போது வந்து பார்த்தால் மன்றம் புதுப்பொலிவுடன் களை கட்டி காட்சி தருகிறது.

பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே! அடுத்த அத்தியாயம் தந்துவிட்டேன்.