PDA

View Full Version : தேம்ஸ் நதிக்கரையில் ஒரு விசேட காதல் கதை (இறுதி பாகம்)மதுரை மைந்தன்
22-05-2010, 12:15 PM
" அம்மா எங்க பாங்கில் என்னை லண்டனுக்கு போஸ்ட் பண்ணியிருகாங்க. ரெண்டு வருஷம் அங்கே வேலை செய்ய வேண்டியிருக்கும்." தாயார் பார்வதியிடம் சங்கர் கூறினான்.

" என்னது ரெண்டு வருஷமா? தனியா அங்கே எப்படி இருப்பே? காலா காலத்தில உனக்கு கல்யாணம் ஆகியிருந்தா எனக்கு கவலையில்லை. ஹூம், அங்கேயிருந்து யாராவது வெள்ளைக்காரச்சியை கூட்டிண்டு வந்து அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேனு சொல்லாதே"

சங்கர் சிரித்துக் கொண்டே " உங்க அனுமதி இல்லாம நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். என்னை நம்புங்க" என்றான்.

" வணக்கம். என் பெயர் சீனிவாசன். உங்க மகன் சங்கர் வேலை பார்க்கற பாங்கில் இருக்கும் என்னோட நண்பர் மூலமாக சங்கரைப்பத்தி தெரிஞ்சுகிட்டேன். என்னோட மகள் கல்யாணி லண்டன்ல வேலை பாக்கறா. அவளோட திருமண விஷயமா உங்க கிட்ட பேச வந்திருக்கேன்" பார்வதி அம்மாளிடம் கை கூப்பிய வண்ணம் கூறினார் சீனிவாசன்.

" இது தான் அவளோட போட்டோ. உங்களுக்கு பிடிச்சிருந்தா லண்டன்ல அவளை நேரில் பாத்து பேசுங்க. இந்த சம்பந்த*த்தில் எனக்கு மிகவும் விருப்பம்" என்று கூறி கல்யாணியின் போட்டோவை சங்கரிடமும் பார்வதி அம்மாளிடமும் காண்பித்தார்.

சிகப்பா குடும்ப பாங்காகவும் அழகாகவும் போட்டோவில் இருந்த கல்யாணியைப் பார்த்தவுடன் மனதைப் பறி கொடுத்துவிட்டான் சங்கர். பார்வதி அம்மாளுக்கும் பிடித்து விட்டது கல்யாணியை.

" லண்டன் போனதும் கல்யாணியை சந்தித்து பேசி சொல்லு. மற்ற ஏற்பாடுகளை நாங்க செய்யறோம். " சங்கரிடம் பார்வதி அம்மாள் கூறினார்.

" லண்டன் போனதும் உங்க தொலை பேசி எண்ணை தெரியப்படுதுங்க. நான் கல்யாணியை உங்க கிட்ட பேச சொல்றேன்". என்றார் சீனிவாசன்.

சங்கருக்கு எல்லாம் கனவுலகில் நடப்பது போலிருந்தது. லண்டன் பயணம் அங்கு அவனுக்காக காத்திருக்கும் கல்யாணி இவற்றை நினைத்து அவனுக்கு தமிழ் படங்களில் வரும் காட்சிகளைப்ப் போல கல்யாணியுடன் லண்டன் தேம்ஸ் நதிக்கரையில் டூயட் பாடுவதாக கனவு காணலானான்.

லண்டன் வந்து ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து செட்டில் ஆனான். முதல் வாரம் வேலை மும்முரத்தில் கழிந்தது. வார இறுதியில் அவனுக்கு ஒரு போன் கால் வந்தது.

" ஹலோ நான் கல்யாணி பேசறேன்" என்ற குரலைக் கேட்டவுடன் பரவசமானான் சங்கர்.

" எப்படி இருக்கீங்க கல்யாணி?"

" நீங்க எங்கே தங்கீருக்கீங்க?" என்று கல்யாணி கேட்டதற்கு தான் மேற்கு லண்டன் பகுதியில் விம்பிள்டனில் வசிப்பதாக கூறினான் சங்கர்.

" ஓ அப்படியா, நான் நார்த் லண்டனில் மில் ஹில்ஸ் பகுதியில் வசிக்கிறேன். " என்ற கல்யாணிடம் மிகவும் ஆர்வமாக " நாம் எப்போது சந்திக்கலாம்" என்று கேட்ட சங்கரிடம் " நம் திருமண விஷயமாக அப்பா கூறினார். எனக்கு தற்சமயம் திருமணத்தில் விருப்பம் இல்லை. உங்களை பிடிக்கவில்லை என்று தவறாக எண்ணிவிடாதீர்கள். நாம் சந்திப்பதில் அர்த்தமில்லை. நான் இந்த விஷயத்தில் யோசிக்க வேண்டியிருக்கு" என்று சங்கரை அதிர்ச்சிகுளாக்கினாள் கல்யாணி. கல்யாணியிடம் அவளது விலாசத்தை அறிய முயன்ற சங்கருக்கு கல்யாணி விலாசத்தை தர மறுத்து விட்டாள்.

கல்யாணியிடம் பேசிய பிறகு சங்கர் மனம் தளர்ந்து போனான். அலுவலகத்தில் வேலையில் அவனால் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. போட்டோவில் கண்ட கல்யாணியின் முகம் அவன் கண் முன் நின்றது. வேடிக்கை என்னவென்றால் கல்யாணியின் குரலைக் கேட்டு அவள் மீது அவனுடைய காதல் தீவிரமானது. கல்யாணியின் அலுவலக தொலை பேசி எண்ணைத் தேடி கண்டு பிடித்து போன் செய்த அவனிடம் கல்யாணி "தயவு செய்து அலுவலகத்திற்கு போன் செய்யாதீர்கள்." என்று போனை வைத்து விட்டடது அவனுக்கு ஏமாற்றமாக இருந்தது.

கண்ணை மூடி திறந்தால் சங்கருக்கு கல்யாணியின் முகம் தோன்றி அவனை வாட்டியது. பித்து பிடிததவன் போல இருந்தவனுக்கு சீனிவாசனிடமிருந்து ஒரு போன் வந்தது.

" கல்யாணி உங்க கிட்ட போன் செஞ்சு கல்யாணத்தில் தற்சமயம் விருப்பம் இல்லை என்றது எனக்கு ஏமாற்றமாக இருக்கு. நீங்க அவளை நேரில் சந்திதுப் பேசினால் அவள் நிச்சயம் மனம் மாறுவாள். அவளுடைய விலாசத்தை தருகிறேன்" என்றது சங்கருக்கு ஆறுதலளித்தது.

வார இறுதியில் ஒரு நாள் சங்கர் சூட் அணிந்து கையில் ஒரு பெரிய மலர் செண்டை எடுத்துக் கொண்டு கல்யாணியை சந்திக்க சென்றான்.

கல்யாணியின் விலாசத்தைக் கண்டு பிடித்து வீட்டு வாசலில் இருந்த காலிங் மணியை அழுத்தினான். சற்று நேரம் கழித்து கதவைத் திறந்து ஒரு தேவதையைப் போல நின்ற கல்யாணிட*ம் " ஹலோ நான் சங்கர். நாமிருவரும் தொலைபேசியில் உரையாடியிருக்கிறோம்" என்றான் சங்கர். அவன் கூறியதைக் கேட்டு " ஓ நீங்களா" என்று கல்யாணி சொல்லிக்கொண்டிருக்கும் போது சங்கருக்கு ஒரு பெரிய அதிர்ச்சிதரும் நிகழ்வு நடந்தது.

வீட்டின் உள்ளிருந்து வந்த ஒரு வெள்ளையன் கல்யாணியை பின் புறமாக அணைத்து முத்தமிட்டான். தடுமாறிப் போன கல்யாணி அவனை விலக்கி விட்டு " ஜான், இவர் சங்கர் எங்க அப்பா எனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை" என்றாள். " ஓ அப்படியா நீங்கள் பேசிக்கொண்டிருங்கள். உங்களுக்கு இடையூறாக இருக்க நான் விரும்பவில்லை" என்று சொல்லி உள்ளே சென்றான் ஜான்.

அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த சங்கரிடம் " சாரி, ஜான் என்னோட பாய் பிரண்ட். நாங்கள் இருவரும் ஒன்றாக வாழ்கிறோம். திருமணம் செய்துகொள்ளும் எண்னம் எங்களுக்கு இல்லை. ஜானைப் பற்றி அப்பாவிடம் கூறவில்லை. அவருக்கு தெரிஞ்சால் மனசு உடைந்து போய் விடுவார். இதனால் தான் நான் உங்களிடம் எனக்கு தற் சமயம் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றேன்". என்றாள் கல்யாணி.

அதிர்ச்சியிலிருந்து விடுபட்ட சங்கர் " என்னையும் அறியாமல் உங்களிடம் என் மனதைப் பறி கொடுத்து விட்டேன். உண்மையான காதலன் காதலியின் மகிழ்ச்சியையே விரும்புவான். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய எனது வாழ்த்துக்கள். இந்த பூச்செண்டை எனது பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள் " என்று கூறி விட்டு திரும்பி பார்க்காமல் காரில் விரைந்தான்.

கல்யாணியை சந்தித்து வந்த பிறகு சங்கர் ஆழ்ந்து சிந்தித்தான். கல்யாணி மீது தனக்கிருந்த ஒரு தலை காதலை எண்ணி சிரித்தான். தான் லண்டனுக்கு வேலை நிமித்தமாக வந்ததை உணர்ந்து வேலையில் அதிக கவனம் செலுத்தினான். வாரக் கடைசியில் லண்டனின் பல பகுதிகளுக்கு சென்று வந்ததில் அங்கு புது மனிதர்களை சந்த்தித்ததில் மனம் அமைதி பெற்றான். அப்படி ஒரு நாள் லண்டன் பிக்காடலி சர்க்கஸ் இடத்திற்கு சென்றான். அங்கு நடை பாதையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்தவனுக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது.

தொடரும்...

பா.ராஜேஷ்
22-05-2010, 12:26 PM
மர்ரே நதிக்கரை போய் இப்போது தேம்ஸ் நதிக்கரையா... !!! பரவாயில்லை ... உங்களால் நாங்களும் நன்றாக ஊர் சுற்றுகிறோம்... நன்றி.. சங்கருக்கு காத்திருந்த அதிசயத்தை அறிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

மதி
22-05-2010, 12:43 PM
அடுத்து ஒரு காதல் கதையா?? தொடருங்கள் மைந்தரே..!

மதுரை மைந்தன்
22-05-2010, 01:07 PM
மர்ரே நதிக்கரை போய் இப்போது தேம்ஸ் நதிக்கரையா... !!! பரவாயில்லை ... உங்களால் நாங்களும் நன்றாக ஊர் சுற்றுகிறோம்... நன்றி.. சங்கருக்கு காத்திருந்த அதிசயத்தை அறிந்து கொள்ளும் ஆவல் அதிகமாகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.நான் செல்லும் இடங்களை வைத்து காதல் கதைகள் புனைகிறேன். ஆனால் கதைக்களங்கள் வேறுபட்டிருக்கும் . நன்றி

மதுரை மைந்தன்
22-05-2010, 01:09 PM
அடுத்து ஒரு காதல் கதையா?? தொடருங்கள் மைந்தரே..!இந்த கதை முந்தைய கதையிலிரிந்து மாறுபட்டிருக்கும். பின்னஊட்டதிற்கு நன்றி

Akila.R.D
22-05-2010, 02:05 PM
தொடர்ந்து காதல் கதைகளா?..

படிக்க ஆர்வமாக உள்ளோம்..

தொடருங்கள்...

சிவா.ஜி
22-05-2010, 03:14 PM
தேம்ஸ் நதிக் காதல் என்ன சொல்கிறது எனப் பார்க்க ஆவலுண்டாகிறது....சங்கர் அப்படியென்ன ஆச்சர்யத்தைக் கண்டான்....

தொடருங்கள் நண்பரே....

மதுரை மைந்தன்
23-05-2010, 08:34 AM
பாகம் 2

பிகாடலி சர்க்கஸ் இடத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டு நடை பாதையில் வந்து கொண்டிருந்த சங்கருக்கு ஒரு பெரும் ஆச்சரியம் காத்திருந்தது. அவன் முன்னால் ஒரு வெள்ளைக்கார பெண் புடவை அண்ந்து தலயை பின்னல் போட்டுக் கொண்டு நெற்றியில் பொட்டுடன் " அன்பரே நலமாக இருக்கிறீர்களா?" என்று கைகளைக் கூப்பி நின்றிருந்தாள்.

அவளைப்பார்த்து தடுமாறிப் போன சங்கர் சிறிது மவுனத்திற்கு பின் "ஹலோ என்னை எப்படி உங்களுக்கு தெரியும். உங்களுக்கு தமிழ் எப்படி தெரியும்?" என்று கேட்டான்.

அதற்கு அந்த பெண் சிரித்துக் கொண்டே " என்னை உங்களுக்கு தெரியாது. ஆனால் நான் உங்களை அறிவேன். நாம் இருவரும் போன ஜென்மத்தில் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்கிறோம். உங்களைத்தேடி நான் இந்தியாவிற்கு பல முறை சென்று வந்திருக்கிறேன். உங்களுடைய மனைவியாக இந்த ஜென்மத்திலும் வாழ நான் என்னை தயார் செய்துள்ளேன். இன்று என்னுடைய அதிர்ஷ்டம் உங்களை இங்கு சந்திதுள்ளேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்றாள்.

இந்த பெண் ஒரு மென்டல் கேசாக இருக்குமோ என்று நினைத்தான் சங்கர். அவனுக்கு தமிழ் படம் ஒன்றில் வடிவேலுவிடம் ஒரு பைத்தியக்காரர் அட்ரெஸ் கேட்டு நல்ல டீசெண்ட்டாக பாண்ட் சட்டை அணிந்து டையும் கட்டியிருந்ததும் அவர் பைத்தியம் என்று தெரிந்தவுடன் பாண்ட் சட்டையின் பின் பக்கம் கிழிந்து காணப்பட்டதைப் பார்த்து அனைவரும் சிரித்ததும் நினைவுக்கு வந்தது. மெதுவாக பேச்சுக் கொடுத்துக் கொண்டே அவன் அந்த பெண்ணின் பின் புறத்தைப் பார்ததும் வாயடைத்து போய்விட்டான். அந்த பெண் தனது பின்னலில் தாழம்பூ ஜடை போட்டிருந்தாள்.

என்ன செய்வதென்று தெரியாமல் முழித்த சங்கருக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. அவன் அந்த பெண்ணிடம் " நீங்கள் கூறியதைக்கேட்டு வியக்கிறேன். ஆனால் சாரி எனக்கு ஏற்கனவே திருமணம் நடந்து விட்டது. நீங்கள் வேறு யாரவது நல்ல இந்திய இளைஞரை திருமணம் செய்து கொள்ளுங்கள்." என்று கூறிவிட்டு அந்த பெண்ணிடமிருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிளம்பலானான்.

சங்கரின் போதாத காலம் அப்போது அங்கு கல்யாணி வந்தாள். சங்கரைப் பார்த்ததும் " ஹாய் சங்கர், இது யார் உன்னோட
கேர்ல் பிரண்டா?" என்று கேட்டுவிட்டு அந்த பெண்ணிடம் " ஹாய், யூ ஆர் ரியலி லக்கி டு கெட் சங்கர் ஆஸ் பாய் பிரண்ட். டோன்ட் லீவ் ஹிம், கெட் மாரீட் டு ஹிம்" என்று அறிவுரையும் கூறி விட்டு சென்றாள். சங்கர் வாயடைத்து நின்றான்.

" சங்கர் என்னிடம் ஏன் எனக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்று பொய் சொன்னீர்கள். என்னை பாருங்கள். நான் உங்களுக்காக படைக்கப் பட்டவள். என் ஒவ்வொரு இதயத் துடிப்பும் உங்களுக்காக இயங்குகிறது. நான் இங்கிலாந்தில் பிறந்திருக்கலாம். ஆனால் இந்தியாவில் உங்களுடைய துணையாக வாழ ஆசைப்படுகிறேன்" என்றாள்.

அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த சங்கர் அவளுக்கு எப்படி தன்னை தெரியும் நாம் எப்படி இவளிடம் மாட்டிக் கொண்டோம் என வியந்தான்.


தொடரும்...

மதி
23-05-2010, 08:38 AM
விட்ட குறை தொட்ட குறையா?? வித்தியாசமாய் செல்கிறது கதை. அடுத்தது என்னனு தெரிஞ்சுக்க ஆவல்.. தொடருங்க மைந்தரே

சிவா.ஜி
23-05-2010, 08:44 AM
முன் ஜென்ம வாசமா....வித்தியாசமானக் காதல்தான்...சங்கர் என்ன செய்யப்போகிறான்....

அன்புரசிகன்
23-05-2010, 11:39 AM
ஒரே மூச்சில் இரண்டு பாகத்தினையும் படித்துவிட்டேன். பாரிய சஸ்பென்ஸ் மண்டையை பிழக்கிறது. எவ்வாறு இவனை அவள் கண்டுபிடித்தான். அறியும் ஆவலில் மன்ற நண்பர்களுடன் நானும்... தொடருங்கள் மதுரையண்ணா..

செல்வா
24-05-2010, 07:07 AM
ரொம்ப சின்ன பாகமாப் போச்சே...

தொடர்ந்து எழுதுங்கள்...


அது என்ன முன் ஜென்மக் காதல்.... ஒரு வேளை ஆவிகளின் காதலோ...

பா.ராஜேஷ்
24-05-2010, 05:40 PM
ஒரு வேலை ஏமாற்று கும்பலோ!! அடுத்த பாகம் வந்தால்தான் தெரியும்... சீக்கிரம் தொடருங்கள் மதுரையாரே..

அக்னி
24-05-2010, 06:00 PM
இதெல்லாம் கல்யாணி சங்கருக்கு வைக்கும் பரீட்சைகளாயிருக்குமோ...

அப்படியிருந்தாலும்,
வெள்ளைக்காரி எப்படித் தமிழ் பேசியிருப்பாள்...

ஆனால் கல்யாணி அந்த நேரத்தில் ஏன் அங்கே வந்தாள்...

மதுரை மைந்தரே, மண்டை காயமுதல் அடுத்த பாகத்தைப் போட்டிடுங்கோ...

*****
அடுத்தடுத்து நதிக்களங்களிற் காதற்கதைகள்...
அதிலும் முற்றிலும் வித்தியாசமாக...

பாராட்டு! பாராட்டு! பாராட்டு!

மதுரை மைந்தன்
25-05-2010, 11:17 AM
பாகம் 3

அந்த வெள்ளைக்காரப் பெண் தன்னை மற்றவைகள் க்ரிஸ்டி என்று அழைப்பதாகவும் ஆனால் தான் அந்த பெயரை காவேரி என்று மாற்றி விட்டதாகவுன் கூறினாள். சிறிது மவுனத்திற்கு பிறகு அவள் " நான் கூறுவதில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்று தோன்றுகிறது. வாருங்கள் என் வீட்டிற்கு உங்களை அழைத்து செல்கிறேன். அங்கு என் பெற்றோர்களுடன் உரையாடினால் என் மீது நம்பிக்கை வரும்" என்றாள்.

அரை மனத்துடன் சம்மதிது சங்கர் அவளுடன் அவளுடைய காரில் சென்றான். காரை மிக நேர்த்தியாக செலுத்திய அவள் " நாங்கள் ஹாம்ப்டன் என்ற இடத்தில் வசிக்கிறோம். நாம் செல்லும் வழியில் டூடிங் என்ற இடத்திலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று விட்டு நாம் பயணத்தை தொடரலாம்" என்றாள். சங்கர் அதற்கு தலையசைத்தான். டூடிங் அம்மன் கோயிலில் அம்மனுக்கு முன்னால் "சரஜினாப சோதரி சங்கரி பாஹிமாம்" என்ற கர்னாடக இசையை நன்றாக பாடியதைக் கேட்டு மெய்மறந்தான் சங்கர். எப்படி ஒரு அயல் நாட்டு மங்கை இந்த பாட்டையெல்லாம் திறம்பட பாட முடிகிறது என்று வியந்தான் சங்கர்.

ஹாம்ப்டனில் அவளுடைய வீட்டில் அவளுடைய வயதான தந்தையும் தாயும் அவனை கை கூப்பி வரவேற்றனர். அவன் அருகில் இருக்கையில் அம்ர்ந்த அவளுடைய தந்தை " நான் சைமன். இந்தியாவில் பெங்களூரில் பிறந்தேன். எனது தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் இரண்டாம் உலகப் போரில் இந்தியாவில் பணியாற்றினார். யுத்தம் முடிந்த பின் அவர் இங்கிலாந்து திரும்பாமல் பெங்களூரில் குடியேறிவிட்டார். நான் பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாம் அங்கு தான். என்னுடைய திருமணமும் அங்கு தான் நடந்தது. என் மனைவி ஒரு இந்தியர். அங்கு தான் க்ரிஸ்டியும் பிறந்தாள். அவள் பிறந்து சில வருடங்கள் கழித்து எனது தாய் தந்தையர் இறந்துவிட நான் லண்டனில் குடியேறினேன். பெங்களூரை விட்டு வர மனமில்லை. ஆனால் எங்களுடைய பரம்பரை சொத்துக்களை பராமரிப்பத்ற்கு லன்டன் வரவேண்டியதாயிற்று. மேலும், என் தந்தை பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியதால் எனக்கு பல சலுகைகள் இங்கு கிடைத்தன. நான் இவற்றை உங்களிடம் கூறுவது க்ரிஸ்டி சாரி காவேரிக்கு எப்படி இந்தியா மீது இவ்வளவு பற்று இருக்கிறது என்பதை விளக்கத்தான்" என்றார்.

காவேரி சமையலறைக்கு தாயாருடன் சென்றாள். செல்லும் முன் " உங்களுக்காக பில்டர் காப்பி தயார் செய்து கொண்டு வருகிறேன்" என்று சங்கரிடம் கூறினாள்.

" அது சரி ஆனால் காவேரி எப்படி என்னை தேர்ந்தெடுத்தார்?" என்று சங்கர் அவரிடம் கேட்டான்..

" காவேரிக்கு சிறு வயது முதல் இந்தியா மீது ஒரு காதல் இருந்து வருகிறது. இங்குள்ள பாரதீய வித்யா பவனுக்கு சென்று கர்னாடக இசை பரத நாட்டியம் ஆகியவற்ரைக் கற்றுக் கொண்டாள். அவளுடைய நாட்டிய அரங்கேற்றத்தை மிக விமரிசையாக கொண்டாடினோம். படிப்பில் அதிக நாட்டம் உண்டு அவளுக்கு. கல்லூரி படிப்பை முடித்து ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறாள். அவளுடைய ஆராய்ச்சியின் தலைப்பு " இந்து மத வேதங்களும் விஞ்ஞானமும்". ஒரு நாள் காலை என்னிடம் வந்து நான் நேற்றிரவு ஒரு கனவு கண்டேன். அதில் என் பூர்வ ஜன்ம நிகழ்வுகள் தோன்றின. அவை அத்தனையும் உண்மை என உண்ருகிறேன். எனக்கு திருமணமாகி கனவருடன் வாழ்ந்திருக்கிறேன். அவரும் தனது மறு பிறவியை இந்தியாவில் எடுத்திருக்கிறார். அவருடைய முகம் என் கனவில் தோன்றியது என்றாள். நான் அவளுக்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று பயந்தேன். என்னுடைய நண்பர் ஒருவர் மூலமாக சைக்கியாட்ரிஸ்ட் டாக்டரிடம் அவளை பரிசோதிக்க செய்தேன். டாக்டர் காவேரியின் கேஸ் விசித்திரமானது. சிலருக்கு இம்மாதிரி முன் ஜன்ம நினைவுகள் வருவதுண்டு. அவளை இந்தியாவுக்கு அவள் வாழ்ந்த பகுதிகளுக்கு கூட்டி செல்லுங்கள் என்றார்.

நாங்கள் இந்தியா சென்றோம். தான் தமிழ் நாட்டில் மதுரையில் வசித்ததாக அவள் கூற அங்கு அழைத்து சென்றேன். நாங்கள் சென்னையிலிருந்து ஒரு காரில் பயணித்தோம். மதுரையில் ஆரப்பாளையம் பகுதியில் வசித்த்தாக அவள் கூற அங்கு சென்றவுடன் அங்கு முகப்பில் இருந்த வெற்றிலை பாக்கு கடைக்காரரிடம் " வேலண்ணே சவுக்கியமா? உங்க பசங்க பாண்டி, மருது இவங்கெள்ளாம் எப்படி இருக்காங்க?" என்ற்வுடன் கடைக்காரர் ஆச்சிரியப்பட்டு போனார். ஒரு வெள்ளக்காரப் பெண் தங்கள் குடும்பத்தில் எல்லோரையும் தெரிந்து வைத்திருக்காளே என்று. " அம்மா நான் தான் பாண்டி, எங்க அப்பா வேலு காலமாயிட்டார். நான் பார்க்கறதுக்கு அப்பா மாதிருயே இருக்கேன்னு பலர் சொல்லுவாங்க" என்றார் அவர். இப்படி அங்கு தென் பட்ட பலரை அவள் குசலம் விசாரித்தைப் பார்த்த நான் நிச்சயம் அவளுக்கு பூர்வ ஜன்ம நினைவுகள் வந்திருப்பதை உணர்ந்தேன். உங்களைப் பற்றி அவள் கூறியதை நான் நம்பலானேன். உங்களுடைய முகத்தை கம்ப்யூடர் க்ராபிக்ஸ் நிபுணர் ஒருவரிடம் அவள் கூற அவர் உங்கள் முகத்தை உருவாக்கி தந்தார். இதோ இது தான் அவர் உருவாக்கிய உங்கள் முகம்" என்று ஒரு படத்தை சங்கரிடம் காண்பித்தார் அவர். படத்தில் சங்கர் சிரித்துக் கொண்டிருந்தான்.


தொடரும்...

அக்னி
25-05-2010, 11:21 AM
இந்தக் கதையில் இன்னும் நிறைய அமானுஷ்யங்கள் வரும்போலிருக்கின்றதே...

கிரிஸ்டி காவேரியா, காவேரிதான் கிரிஸ்டியா...
பார்க்கலாம்...

சுவாரசியத்தோடு இருக்கை நுனியிற் காத்திருப்போர் சங்கம் சார்பாக...

மதி
25-05-2010, 11:25 AM
சூப்பர்ர்ர்ர்ர்ர்... திகில் மேல் திகில்.. ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம்... நல்லா போகுது கதை... தொடருங்கள்.. மதுரையண்ணே..

அன்புரசிகன்
25-05-2010, 12:24 PM
கேட்க்க நன்றாகவே உள்ளது. நம்மபத்தான் முடியல. எனக்கும் கனவு வருமா??? :D தெரிந்தால் உடனே சென்று என்னவளை சந்தித்துவிடுவேனே....... :D :D :D

தொடருங்கள் அண்ணா

அக்னி
25-05-2010, 03:25 PM
எனக்கும் கனவு வருமா??? :D தெரிந்தால் உடனே சென்று என்னவளை சந்தித்துவிடுவேனே....... :D :D :D

மதி & ஆதவா: (கோரஸாக) ரிப்பீட்டு... :p

சிவா.ஜி
25-05-2010, 03:30 PM
கிறிஸ்ட்டி, காவேரியா....லண்டனிலிருந்து ஆரப்பாளையம் வரைக்கும் அழைத்துக்கொண்டு போய்விட்டதா முன் ஜென்ம பந்தங்கள்....

வியப்புடன்...அடுத்த பாகத்தை எதிர்நோக்கி.......!!!

சிவா.ஜி
25-05-2010, 03:32 PM
அன்பு....எப்பக் கனவு வரும்...கனவுல எப்பக் கன்னி வருவான்னு...தூங்காம இருந்தாக்....கனவு எப்படி வரும்....?

பா.ராஜேஷ்
25-05-2010, 04:43 PM
இந்த பாகமும் அருமை. புதிர் மேல் புதிர். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கிறேன்.

மதுரை மைந்தன்
29-05-2010, 08:45 AM
பாகம் 4

காவேரியின் வீட்டிலிருந்து திரும்பிய சங்கருக்கு ஒரே குழப்பமாக இருந்தது. காவேரியின் தமிழ் அறிவு, பரத நாட்டிய்ம் கர்னாடக இசை ஆகியவற்றில் அவளின் திறமை ஆகியவை நம்பத் தகுந்தவைகளாக இருந்தாலும் அவளின் முன் பிறவி நினைவுகள் கனவில் அவன் தோன்றியது ஆகியவற்றை நம்புவதா கூடாதா என்று குழம்பினான்.

மறு நாள் ஆபிஸிலிருந்து மும்பையிலிருந்த அம்மாவிடம் அவன் பேசினான். காவேரி என்ற வெள்ளைக்காரப் பெண் தன்னை எதிர்கொண்டதையும் அவள் தான் அவனது முன் பிறவியில் மனைவியாக இருந்ததாக கூறியதையும் அவள் வீட்டிற்கு சென்று அவ்ளுடைய தந்தையிடமிருந்து அறிந்ததையும் அவன் விளக்கமாக கூறினான்.

" ஆச்சரியமா இருக்கே, ஒரு வேளை மோஹினி பிசாசா இருக்குமோ? நீ அவள் காலைப் பாத்தியா?" என்றாள் அம்மா.

" எப்படி காலை பாக்கறது. அவ தழைய தழைய புடவை கட்டி இருந்தாள். பிசாசெல்லாம் இருக்காது. நீ பயப்படாதே" என்றான் சங்கர்.

" என் மன திருப்திக்க்காக பக்கத்து அங்காள பரமேஸ்வரி கோயிலில் உன் பெயருக்கு ஒரு பூஜை செய்து தாயாத்தையும் விபூதியையும் கூரியர்ல அனுப்பறேன். தயத்தைக் கட்டிண்டு விபூதியை சட்டை பாக்கெட்டில் வச்சிக்கோ. உன்னை எந்த பிசாசும் அணுகாது" என்றாள் அம்மா.

" இப்போ தான் ஞாபகம் வந்தது. போன மாசம் சென்னையிலிருந்து என்னோட அண்ணா அதாவது உன்னோட மாமா " சங்கருக்கு ஏன் கல்யாணம் தட்டி போயிண்டிருக்கு. நீ அவனோட ஜாதகம், போட்டோ, விவரங்களை கொடு. எனக்கு தெரிஞ்ச மாட்ரிமோனியல் காரங்ககிட்ட கொடுக்கறேன். அவங்க நல்ல பொருத்தமான பொண்ணை கண்டு பிடிப்பாங்க" என்று சொல்லி போட்டோ, ஜாதகம் எலலாத்தையும் வாங்கி போனார்" என்று அம்மா கூறி முடித்ததும் சங்கருக்கு காவேரியிடம் எப்படி தனது படம் வந்திருக்க கூடும் என்று எண்னத் தோன்றியது. காவேரியும் அவளுடைய தந்தையும் தந்திரமாக அவனை ஏமாற்றியிருப்பதாக நினைத்தான். அவனுள் அவர்கள் மீது கோபம் பொங்கியது . உடனடியாக காவேரிக்கு அலை பேசி மூலம் தொடர்பு கொண்டு மறு நாள் மாலை டூடிங் அம்மன் கோயிலில் சந்தித்து பேச விரும்புவதாக கூறினான். கோயிலில் அம்மன் சன்னதியில் அவள் பொய் பேச மாட்டாள் என் நம்பினான். காவேரியும் மகிழ்ச்சியுடன் சம்மதித்தாள்.

மறு நாள் டூடிங் அம்மன் கோயிலில் காவேரியை சந்தித்ததும் சங்கர் அவளிடம் பட படவென்று " என்னோட படம் உங்களுக்கு எப்படி கிடைச்சது. எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்" என்றான்.

இந்த கேள்வியயை சற்றும் எதிர்பார்த்திராத காவேரி " ஏன்? திடீரென்று உங்களுக்கு இந்த சந்தேகம்? நான் ஏற்கனவே கூறிய மாதிரி எனது கனவில் ஒரு நாள் உஙக்ளைக் கண்டேன். சாதரணமாக அல்ல என்னுடைய முன் பிறவிக் கணவராக. நான் அதை முற்றிலும் நம்பினேன். எனது தந்தையும் என்னை ஆதரித்து கம்ப்யூட்டர் நிபுணரிடம் விவரங்களைக் கூற அவர் உங்களைப் படமாக வரைந்தார்" என்றாள்.

அவள் கூறியதக் கேட்டு மேலும் கோபமடைந்த சங்கர் " இல்லை அது உண்மையில்லை. என்னுடைய மாமா ஒரு மாட்ரிமோனியல் கலத்தில் என்னுடைய புகைப்படத்தையும் விவரங்களையும் தந்திருக்கிறார். அதைப்பார்த்த நீயும் உன் தந்தையும் என்னை எப்படியாவது உங்க*ள் வலையில் சிக்க வைக்க நாடகமாடியிருக்கிறீர்கள். ஏன் என்னை பிடித்தீர்கள்? நான் படித்து நல்ல வேலையில் இருப்பதாலா? அல்லது உனக்கு ஏதாவது வியாதி இருப்பதால் உள்ளூரில் யாரும் கிடைக்க மாட்டார்கள் என்று இந்தியனான என்னை தேர்ந்தெடுத்தீர்களா? இந்தியன் என்ன இளிச்சவாயனா?" என்று பொரிந்து தள்ளினான்.

அவன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சி அடந்த காவேரி முகத்தை மூடிக் கொண்டு அழலானாள்.

தொடரும்.....

சிவா.ஜி
29-05-2010, 09:24 AM
காவேரியை நினைத்தால் பாவமாய் இருக்கிறது. அவளது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் சங்கர் இப்படி அவள்மீது பழி சொல்கிறானே. அவள் சொல்வது உண்மையாகவே இருந்தால்...பாவம் அவள்.

சுவாரசியமாய்க் கொண்டுபோகிறீர்கள். தொடருங்கள் நண்பரே.

பா.ராஜேஷ்
29-05-2010, 11:53 AM
நன்றாக தொடர்ந்துள்ளீர்கள். காவேரி எதற்கு அழுதாள் என அடுத்த பாகத்தில் அறிய ஆவலாயிருக்கிறோம்.
இப்படி குட்டி குட்டியா எழுதினா எப்படி!?

மதுரை மைந்தன்
31-05-2010, 12:55 PM
இறுதி பாகம்

காவேரி அழுவதைக் கண்டு சங்கடப்பட்டான் சங்கர். அவளிடம் " சாரி, உங்கள் மனம் புண் படப் பேசியிருந்தால் என்னை மன்னிக்கவும். நாம் வாழ்க்கையில் இணைவது பொய், சந்தேகங்களின் அடிப்படையில் இருக்குமேயானால் அது நம்மை பாதிக்கும். எனது சந்தேகம் தீர நீங்கள் அந்த கம்ப்யூடர் நிபுணரின் முகவரியை எனக்கு தாருங்கள். நான் அவருடன் பேசி இதற்கு தீர்வு காண்கிறேன்" என்றான்.

" அவர் அமெரிக்கவிற்கு சென்று விட்டார். அவருடைய முகவரியை தேடி உங்களுக்கு தருகிறேன்" என்றாள் காவேரி.

" அதுவரை நான் உங்களை சந்திக்க விரும்பவில்லை. எனது சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியாவிட்டால் என்னை மறந்து விடுங்கள்" என்று கூறி ஒரு டாக்ஸியில் சங்கர் தனது அபார்ட்மென்டிற்கு விரைந்தான்.

அலுவலக வேலைகளில் மூழ்கி இருந்தாலும் காவேரியின் சோகமான முகம் சங்கரை வாட்டியது. நாம் அனாவசியமாக சந்தேகிகிறோமோ என்று எண்ணலானான். இந்தியாவிலுள்ள அம்மாவிடம் தொலைபேசியில் நடந்தவற்றை கூறினான். " நான் பண்ணின பூஜை வீண் போகலை. தாயத்தை நான் அனுப்பியிருக்கேன். தாயத்தின் மகிமையால் உனக்கு ஏற்பட இருந்த விபத்து விலகியிருக்கு" என்றார் அவர்.

வேலையில் மூழ்கியிருந்த சங்கரை அலைபேசியின் மணி கவனத்தை திருப்பியது. அலைபேசியில் அவனுக்காக காவேரியிடமிருந்து ஒரு தகவல் வந்திருந்தது. " கம்ப்யூடர் நிபுணரின் முகவரி கிடைக்கவில்லை. உங்களுடைய சந்தேகத்தை என்னால் போக்க வழியில்லை. இந்த ஜென்மத்தில் உங்களை சந்திபேனா என்று ஏங்கியிருந்தேன். உங்களை சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இந்த ஜென்மத்தில் இணைவது இயலாது. அடுத்த ஜென்மத்திலாவது இந்தியாவில் பிறந்து உங்களை காதலித்து வாழ்வேன். எனது வாழ்க்கையை தேம்ஸ் நதியில் குதித்து முடித்துக் கொள்கிறேன். மீண்டும் சந்திப்போம்" என்றிருந்தது. அதைப்படித்த சங்கருக்கு கை கால்கள் உதறத் தொடங்கின. அவசரமாக ஒரு டாக்ஸியை அழைத்து ஹாம்ப்டன் அருகிலிருந்த தேம்ஸ் நதிக் கரைக்கு சென்றான். ஹாம்ப்டனிலிருந்து கிங்ஸ்டன் வரை நீண்டிருந்த நதிக்கரை சாலையில் சென்றபோது ஒரு இடத்தில் கும்பலாக பலர் நின்றிருந்ததையும் ஆம்புலன்ஸ், போலீஸ் ஆகியோர் இருப்பதையும் கண்டு பதைபதைத்து அருகில் சென்று பார்த்தான். அங்கே ஸ்டர்ச்சரில் காவேரியின் உடலை வைத்திருந்தார்கள். அருகில் சோகமாக காவேரியின் பெற்றோர் நின்றிருந்தனர். சங்கரைக் கன்டதும் காவேரியின் தந்தை வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

மருத்துவர் ஒருவர் காவேரியின் தந்தை அணுகி " யுவர் டாட்டர் இஸ் சேப் (உங்கள் மகள் பிழைத்து விட்டார்). பட் ஷீ ஹாஸ் இஞ்சுரீஸ் இன் ஹான்ட்ஸ் அன்ட் லெக்ஸ் (அவளுக்கு கை கால்களில் அடி பட்டிருக்கிறது). வீ வில் டேக் ஹெர் டு ஆஸ்பிடல் அன்ட் கிவ் ட்ரீட்மெண்ட் (அவளை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளிப்போம்)" என்றார். இதைக்கேட்ட சங்கருக்கு போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. காவேரியை ஆம்புலன்சில் எடுத்துக் கொண்டு கிளம்ப அங்கிருந்த வேடிக்கை பார்க்க வந்த மக்கள் கலைந்து செல்லானார்கள்.

சங்கருக்கு அருகில் வந்த இரன்டு தமிழர்கள் தங்களுக்குள் பேசிக் கொன்டார்கள். ஒருவர் சொன்னார் " இந்த பெண்ணை தீபம் தொலைக் காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்திருக்கிறேன். இவருக்கு முன் பிறவி நினைவுகள் இருப்பதாகவும் முன் பிறவியில் தமிழ் நாட்டில் மதுரையில் வாழ்ந்த்தாகவும் அப்பொது தனது கணவராக இருந்தவர் இப்போதும் இந்தியாவில் இருப்பதாகவும் அவருடைய படம் தன்னிடம் இருப்பத்ஹக கூறி அதையும் காண்பித்தார்" என்றார். அவர் கூறியவை சங்கரின் காதில் விழ அவன் அவரை அணுகி " சார், நான் தமிழ் நாட்டை சேர்ந்தவன். நீங்கள் இப்பொது கூறிய புகைப்படம் என்னுடைது தானா என அறிய ஆவலாயுள்ளேன். அந்த வீடியோவை நான் பார்க்க முடியுமா?" என்று கேட்டான்.

" நான் எப்போ பார்த்தேன் என்று நினைவில்லை. ஆனால் எனக்கு தீபம் தொலைக் காட்சி நிலயத்தில் நண்பர் ஒருவரை தெரியும். அவரிடம் கேட்டால் அவர் உதவக்கூடும்" என்றார் அந்த தமிழர்.

" உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் நாம் இந்த டாக்ஸியில் உடனே சென்று அவரை சந்திபோமா?" என்று கேட்டான் சங்கர்.

அவரும் சம்மதிக்க அவர்கள் தீபம் தொலைக் காட்சி நிலையத்திற்கு விரைந்தார்கள். தீபம் நண்பர் அவரிடமிருந்த காசெட்களில் தேடி காவேரியின் நேர் முக உரையாடலை மானிட்டரில் போட்டு காண்பித்தார். அதில் காவேரி காட்டிய புகைப்படத்தில் சங்கர் சிரித்துக் கொண்டிருந்தான். திடீரென்று சங்கருக்கு பொறி தட்டியது. " இந்த நேர் முக உரையாடல் எப்போது ஒளி பரப்பப்பட்டது?" என்று கேட்டான் அவரிடம். அவர் தனது டைரியை புரட்டி "இந்த உரையாடல் போன வருடம் இதே நாளில் ஒளி பரப்பானது" என்றார். சங்கருக்கு உண்மை புரிந்தது. அவனுடைய மாமா மாட்ரிமோனியலில் அவனுடைய புகைப்படத்தை போன மாதம் தான் பதிந்திருந்தார். ஆனால் ஒரு வருடம் முன்பாகாவே அவனுடைய படத்தை வைத்துக் கொண்டு அவனை இந்தியாவில் மதுரையில் காவேரி தேடிக் கொண்டிருந்தாள் என்பதை நினைத்து அவள் அவன் மதிப்பில் மிக உயர்ந்த இடத்தை அடைந்தாள். தீபம் நண்பருக்கும் அந்த தமிழ் நண்பருக்கும் நன்றி கூறிவிட்டு டாக்ஸியில் காவேரி அட்மிட் ஆகியிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான் சங்கர்.

அவளை சந்தேகித்த குற்ற உணர்வுடன் அவளருகே சென்று அவல் கைகளைப் பற்றிக் கொண்டு " நான் முன் பிறவியில் என்ன புண்ணியம் செய்தோனோ உன்னை எனது மனைவியாக அடைவதற்கு" என்று அவன் கூறியதும் அவனது சந்தேகம் நீங்கி விட்டதை அறிந்து ஆனந்த கண்ணீர் விட்டாள் காவேரி.

காவேரிக்கு உடல் நிலை தேறியதும் அவளுடன் தேம்ஸ் நதிக்கரையோரம் காதல் கதைகளைப் பேசிக் கொண்டு நடந்தான் சங்கர்.

முற்றும்

மதி
31-05-2010, 01:37 PM
விறுவிறுப்புடன் ஒரு காதல் கதை.. நன்றாக இருந்தது மதுரை மைந்தரே..!

அக்னி
31-05-2010, 01:46 PM
முற்பிறப்பு நினைவுக்கு வருவதென்பது உண்மைதானா...

சரி... அதிருக்கட்டும்...

மிதமான வேகத்தில், வித்தியாசமாக அமைந்திருந்தது இந்தக்கதை...
ஏதோ சதிதான் என நினைக்கவைத்து, முடிவை வித்தியாசமாகக் கொடுத்துவிட்டீர்கள்.

பாராட்டு...

சிவா.ஜி
31-05-2010, 02:28 PM
முடிவு சுபமாய் அமைந்தது மகிழ்ச்சி. வித்தியாசமான முற்பிறவி நினைவுக் கதை.

வாழ்த்துக்கள் நண்பரே.

பா.ராஜேஷ்
31-05-2010, 04:46 PM
முடிவை வேறு மாதிரி எதிர்ப் பார்த்தேன். இருந்தாலும் பரவாயில்லை.. கதை சுபமாய் முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்து எந்த நதிக்கரை?

அன்புரசிகன்
01-06-2010, 01:11 AM
கதை என்றாலும் நினைக்கையிலே மயிர் கூச்செறிகிறது. அழகான காதல் கதை. வாழ்த்துக்கள்...
--------------------------------------------
பெங்களூரில் ஒரு தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில்...

தொழிலாளி: எனக்கு லண்டனுக்கு 1 வருடத்திற்கு ட்ரான்ஸ்ஃபர் வேணும். அதுவும் தேம்ஸ் நதிக்கு அருகில். எனக்கு டக்ஸி எல்லாம் சரிவராது. BMW தான் வேணும்.:icon_rollout:

முதலாளி: உனக்கு இங்கயே டூமச்... சீட்ட கிழிச்சிடுவேன்...:sauer028::sauer028:
சோகத்துடன் திரும்புகிறார் தொழிலாளி... :traurig001::traurig001::traurig001:
:D:lachen001:

மதி
01-06-2010, 02:43 AM
இன்னும் சோகத்துடன் தான் இருக்கிறாராம் அந்த தொழிலாளி.

govindh
05-06-2010, 11:00 AM
தேம்ஸ் நதிக்கரையில்
தேன்சுவைக் காதல் கதை...
நல்லா இருக்கு....
பாராட்டுக்கள்.