PDA

View Full Version : மங்களூரில் விமானவிபத்து!!!



aren
22-05-2010, 02:48 AM
மங்களூரில் விமானவிபத்து!!!

துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் விபத்துக்குள்ளாகியது. இதில் பலர் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

இறப்பு குறைவாக இருக்கவேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கலாம்.

மதி
22-05-2010, 03:22 AM
160 பேர் இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.. மீட்பு பணிகள் தீவிரம்

கீதம்
22-05-2010, 04:15 AM
விமானத்திலிருந்த 169 பேருமே இறந்துவிட்டதாக அறிகிறேன். செய்தி கேட்டவுடன் நெஞ்சமே பதறுகிறது. எத்தனைக் கனவுகள் இடிந்துபோனதோ? எத்தனை எதிர்காலங்கள் கேள்விக்குறிகளானதோ? பயணத்தின் முடிவில் இப்படி ஒரு துக்ககரமான நிகழ்வு நிகழும் என்பதை யார்தான் எதிர்பார்த்திருக்கக்கூடும்?

கண்ணன்
22-05-2010, 04:49 AM
அடடா.
அவர்களின் குடும்பதினருக்கு ஆழ்ந்த அநுதாபங்கள்.

சிவா.ஜி
22-05-2010, 06:33 AM
எத்தனை வருடங்களுக்குப் பிறகு நாடு திரும்பியவர்கள் எத்தனைப் பேரோ....பிள்ளைகளையும், மனைவிகளையும் காண ஆவலுடன் வந்த கணவர்கள் எத்தனை பேரோ...கடவுளே....மனசெல்லாம் பதறுகிறது.

இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளும், உறவுகளை இழந்துத் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களும்.

ஓவியன்
22-05-2010, 08:03 AM
உயிர் துறந்தவர்களுக்கு என் அஞ்சலிகள்....

உலகில் அடுத்தடுத்து நிகழும் விபத்துக்கள், விமானப் பயணங்களின் பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மையை கேள்விக் குறியாக்கி நிற்கின்றன...

aren
22-05-2010, 08:15 AM
எட்டு பேர் உயிர் தப்பியிருப்பதாக தகவல். அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் எந்தவித காயமுமின்றி பிழைத்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியிருக்கிறார்.

மற்றவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. 25 சடலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

பள்ளி விடுமுறை ஆரம்பமாகியிருக்கிறது. பல குழந்தைகளும் இந்த விமானத்தில் வந்திருக்கிறார்கள். பாவம்.

aren
22-05-2010, 08:16 AM
விமானத்தில் கோளாறு இருந்ததாகத் தெரியவில்லை. தரையிறங்கிவிட்டது, ஆனால் ரன்வேயைக் கடந்து நிறுத்தாமல் போனதால் பள்ளத்தில் விழுந்துவிட்டது. விபரம் தெரியவரும்.

செல்வா
22-05-2010, 09:38 AM
எனக்கென்னவோ விமானி சமயோசிதமாக நடக்கவில்லை என்றேத் தோன்றுகிறது. வானிலை மிக மோசமாக இருந்ததாகவும் முன்னால் இருப்பது தெரியவில்லை என்றும் தினமலர் பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது. அது உண்மையானால் எந்த தைரியத்தில் விமானி விமானத்தை தரையிறக்கினார் என்பது தெரியவில்லை.

நடந்தது என்ன என்பது தெளிவாகத் தெரியாத வரை எதுவும் சொல்வதற்கில்லை.

மிக அதிர்ச்சியாக இருக்கிறது. காலையில் செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே.

இறந்தவர்கள் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

govindh
22-05-2010, 09:49 AM
அதிர்ச்சியான செய்தி...மனக் கலக்கம் அதிகரிக்கிறது...
ஆழ்ந்த அனுதாபங்கள்.

sures
22-05-2010, 11:05 AM
மிகவும் அதிர்ச்சியான மற்றும் துன்பமான தகவல்.
கிட்டத்தட்ட 10 - 15 வரை உயிர் பிழைத்திருக்கலாம்.... ஆனால் காயப்பட்டுள்ளார்கள்

xavier_raja
22-05-2010, 12:14 PM
இதில் மற்றொரு கொடுமை ஒரே குடும்பத்தை சேர்ந்த 16 பேர் இறந்துள்ளனர்.. அனைவருடைய ஆத்மா சாந்தி அடைய இறந்வனை பிரார்த்தனை செய்வோம்.. எதிர்காலத்தில் இது போன்ற ஒரு கோர விபத்து நிகழாதிருக்க வேண்டிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்..