PDA

View Full Version : நீங்கள் குறட்டை விடுபவரா...?!சிவகுமார்
20-05-2010, 04:29 PM
யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

முத்துச்சரம்

ஷண்முகம்
07-07-2010, 04:29 PM
நன்றி சிவக்குமார்.எனக்கு உபயோகமான ஒன்று.

ஆதவா
07-07-2010, 05:07 PM
நன்றி சிவக்குமார்.எனக்கு உபயோகமான ஒன்று.

ஹை!!! எனக்கு தெரிஞ்சு போச்சே!!:icon_rollout:

ரங்கராஜன்
08-07-2010, 07:43 AM
உபயோகமான தகவல், அதுவும் எனக்கு மிகவும் உபயோகமான தகவல் தான். எங்கள் அலுவலகத்தில் இரவு பணியின் போது அதிகாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை தூங்குவது வழக்கம்..........:lachen001::lachen001::lachen001:............ தூங்கவில்லை என்றால் செய்திகளை தப்பு தப்பாக போட்டு விடுவோம் என்ற பயம் எங்களுக்கு உண்டு............ அதனால் அப்படி கண்டிப்பாக தூங்கி விடுவோம்.............. முதல் முறையாக என்னுடன் தூங்க வந்த என்னுடைய சக ஊழியார்.......... காலையில் நாலு மணிக்கு முன்பே எழுந்து விட்டார்....... நான் நாலு மணிக்கு எழுந்து, சீக்கிரம் எழுந்ததின் காரணத்தை கேட்டேன். அதற்கு அவர் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு சொன்னார்.

"யோவ் எங்கய்யா நீ என்ன தூங்க விட்ட,,,,,, உன் பக்கத்துல படுக்கிறதும், காட்டு கரடியை கட்டிபிடிச்சி படுக்கிறது ஒண்ணுய்யா" என்றார் கோபமாக...

"யோவ் உனக்கு எனக்கும் பிரச்சனை இதல எதுக்கு தேவையில்லாம எம்.டியை இழுக்குற" என்றேன்...... தன்னுடைய கோபத்தை மறந்து சிரித்தார்.

இருந்தாலும் நான் கொஞ்சம் அதிகமாகவே குறட்டைவிடுவேன்....... இந்த தகவல்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்

நன்றி சிவக்குமார்

ஓவியன்
08-07-2010, 08:32 AM
ஓ நுணல் கர்ணி இராகத்தைப் பற்றி பேசுறீங்களா..??, சரி, சரி..!!:)

சிவா.ஜி
08-07-2010, 09:22 AM
குறட்டையால்(அடுத்தவங்ககுறட்டையால்) நான் பட்ட அவஸ்தைன்னு ஒரு புத்தகமே எழுதலாம்.

பெரும்பாலும் இருவர் தங்கும் அறைகளாகத்தான் எங்களுக்கு வேலை செய்யுமிடத்தில் கிடைக்கும்(இடப்பற்றாக்குறை) அந்த சமயத்தில் அறைத் தோழராய் வருபவர்கள் யாராவது சங்கீத வித்வானாய் இருந்துவிட்டால்.....என் நிலைமை அவ்ளோதான். சத்தமிருந்தால் சுத்தமாய் தூக்கம் வராது.
அதனால் சத்தத்தை தற்காலிகமாக நிறுத்த நான் கடைபிடிக்கும் சில வழிமுறைகள்

1. குறட்டை எழுப்புபவரை...உலுக்கிவிட்டு படுத்துக்கொள்வேன். தூக்கம் கலைந்தவர், அடுத்தக் கச்சேரியை ஆரம்பிக்க கொஞ்ச நேரமாகும். அதற்குள் உறங்கிவிடுவேன்.

2. அவ்வப்போது எழுந்து உலுக்க சோம்பலாய் இருந்தால்...சின்னச் சின்னக் கற்களைப் பொறுக்கி பக்கத்தில் வைத்துக்கொண்டு குறிபார்த்து அவரைத் தாக்கினால்...சத்தம் நிற்கும்.

3. இதற்கெல்லாம் அசையவில்லையென்றால்...சத்தமாக...அலறுவேன். மனிதர் பதறியடித்துக்கொண்டு எழுவார்...பாம்போ...தேளோ ஏதோ ஒண்ணு உங்க கட்டில்ல போற மாதிரி இருந்ததுன்னு...சொல்லிடுவேன்....அப்புறமென்ன....அவர் விழித்துக்கொண்டிருப்பார்...நான்.....

இதற்கெல்லாம் மசியாத ஒரு நண்பரை....அலாக்காய் தூக்கிக்கொண்டுபோய் அறைக்கு வெளியே விட்டுக் கதவைப் பூட்டிய சம்பவமும் நடந்திருக்கிறது.

(அவ்வளவு டார்ச்சர் செய்துவிட்டார். அடுத்தநாள் அவர் புகார் செய்து, அவரை வேறு ஆளில்லா அறைக்கு மாற்றிய கதையும் நடந்தது)

பா.ராஜேஷ்
08-07-2010, 06:23 PM
நீங்க இவ்ளோ வயல்ன்ட்டா இருப்பீங்கன்னு நினச்சு கூட பாக்கள சிவா அண்ணா !!

jayashankar
08-07-2010, 11:17 PM
ஹி ஹி சாது மிரண்டால் பூமி கொள்ளாது ராஜேஷ்....

அப்படித்தானே சிவா...

சிவா.ஜி
09-07-2010, 12:01 PM
ஹி...ஹி....தூக்கம் வராமல்....இரவு மூன்றுமணிவரை புரண்டு, புரண்டுப் படுத்த எரிச்சலில் அப்படி செய்தேன். ஆனால் அதற்கு நல்ல பலன் அந்த நண்பருக்குக் கிடைத்தது. தனியறை கிடைத்ததே....

மச்சான்
09-07-2010, 12:08 PM
எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே சிவகுமார். பகிர்ந்து கொண்டதுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்ணா....!

.

சிவா.ஜி
09-07-2010, 12:18 PM
ஆஹா....மச்சான்....அவிங்களா நீங்களும்....!!!

பால்ராஜ்
09-07-2010, 02:29 PM
குறட்டை விடுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்ளவே விழித்திருக்க வேண்டியிருக்கும்.. உறக்கம் இல்லாமல் குறட்டை இல்லை..

முட்டையா? கோழியா? என்ற கேள்விக்கு பதில் ...?

jayashankar
09-07-2010, 03:17 PM
குறட்டை விடுகிறோமா என்பதைத் தெரிந்து கொள்ளவே விழித்திருக்க வேண்டியிருக்கும்.. உறக்கம் இல்லாமல் குறட்டை இல்லை..

முட்டையா? கோழியா? என்ற கேள்விக்கு பதில் ...?

குறட்டையில் முட்டையா? கோழியா? என்ற கதையே இல்லீங்க.....

விழித்திருந்தால் குறட்டை வராது.... உறங்கி குறட்டை விட்டால் நாம் குறட்டை விடுகின்றோமா என்று நமக்கே தெரியாது ( அது அறைகுறை தூக்கமாக இருந்தாலும், குறட்டை சத்தத்தை நம்மால் உணரமுடியாது).

எனவே, அடுத்தவர் கூறினால் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

சிவா.ஜி
09-07-2010, 03:34 PM
அது சரிதான்....ஒத்துக்கிட்டுதான் ஆகனும்....!!!

இல்லன்னா...ரெக்கார்ட் பண்ணிப் போட்டுக்காட்டனும்....ஆனா..அது குறட்டை சத்தம் இல்ல....டிராக்டர் ஓடுற சத்தம்ன்னு சொல்லிட்டா என்ன பண்றது....???

ஓவியன்
09-07-2010, 03:40 PM
இல்லன்னா...ரெக்கார்ட் பண்ணிப் போட்டுக்காட்டனும்....

என்னே ஒரு வில்லத்தனம்..!! :eek:

ஒருத்தன் குறட்டை விடுறான்னு நிரூபிக்க இத்தனை ஏற்பாடு பண்ணுறவங்க, பாவம் அவன் வேணும்னு குறட்டை விடலையே என்பதை ஏன் புரிச்சுக்கிறாங்க இல்லை... :traurig001:

jayashankar
09-07-2010, 03:45 PM
ஓ! இப்படி ஒரு கதை இருக்கோ?

தூயவன்
10-07-2010, 05:51 PM
கடசில மருத்துவ பகுதிய எல்லாரும் சேர்ந்து காமடி பகுதியா மாத்திட்டிங்களே :lachen001::lachen001::lachen001:

அனுராகவன்
02-09-2010, 07:55 PM
அப்ப அப்பா..... என்ன அருமை..
என் பிரச்சனைக்கு நல்ல தீர்வு..
பகிர்வுக்கு என் நன்றி

சேவியர்
05-09-2010, 04:46 PM
யாருக்குமே பிடிக்காத ஒலி என்றால் அது குறட்டை ஒலிதான்! குறட்டை விடும் நபருக்கே... அவர் தூங்காத போது, அடுத்தவர் விடும் குறட்டை ஒலியை கேட்க சகிக்காது. அந்த வகையில் அனைவரையும் வெறுக்க வைக்கும் குறட்டையை தவிர்க்க சில யோசனைகளை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தூக்க மாத்திரை மற்றும் அலர்ஜிக்கான மருந்துகளைத் தவிர்க்க வேண்டும்.

மல்லாந்து படுப்பதும் குறட்டைக்குக் காரணம். பக்கவாட்டில் ஒருக்களித்து அல்லது கவிழ்ந்து படுத்து உறங்கினால் குறட்டை இருக்காது.

வழக்கமாக படுப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பாக அல்லது பின்பாக படுக்கப் போகலாம்.

தலைப்பக்கம் கூடுதல் தலையணைகளை வைத்து உயர்த்துவதும் குறட்டையை குறைக்கும்.

தொடர்ந்து குறட்டை விடுகிறவர் டாக்டரை அணுகுவது அவசியம். குறட்டை மூச்சடைப்பிலும் கொண்டு போய்விடலாம். குறட்டையால் இதயத் துடிப்பு ஒழுங்கற்றுப் போகும். தலைவலி வரும். உயர் ரத்த அழுத்தமும் ஏற்படலாம்.

பல் செட்டுடன் தூங்குவோருக்கு குறட்டை வரும் என்பதால் அதை கழற்றிவிட்டு தூங்குவது நல்லது.

உடற்பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தாலும், உடல் பருமனைக் குறைத்தாலும் குறட்டை படிப்படியாக குறையும்.

முத்துச்சரம்

நன்றி சிவகுமார் . நல்ல செய்தி .எனக்கு.

prem63
21-11-2010, 12:28 PM
மிகவும் பயனுள்ள பதிவு நண்பரே

ஆன்டனி ஜானி
21-11-2010, 03:13 PM
நன்றாக இருந்தது நண்பரே இது போல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி இது எல்லாருக்கும் பயனுள்ளது,குரட்டை விடுபவர்களுக்கு ரெம்ப முக்கியம்

பாலகன்
21-11-2010, 03:31 PM
ஒருமுறை நான் தூங்குவதையே ரெக்கார்ட் பண்ணினேன். அடுத்த நாள் பார்த்தபோது ஹிஹி :D குறட்டை வரல... ஆனாலும் நல்ல விசயங்கள் சொன்ன உங்களுக்கு என் பாராட்டுக்கள்