PDA

View Full Version : மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம்- சிங்கள தளபதி

சிவகுமார்
20-05-2010, 05:38 AM
லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.

மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.

பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:

இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.

வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.

கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.

அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.

போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.

இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,

இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.

சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.

இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.

சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.

கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.

அன்புரசிகன்
20-05-2010, 05:48 AM
போனாப்போகுது... தமிழன் தானே...
அண்மையில் மகிந்தவின் ஒரு நகைச்சுவை காணொளி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.
அதில் ஒருவர் கேள்வி கேட்ப்பார். தமிழருக்கு நீங்கள் எவ்வாறான தீர்வு கொடுக்கவுள்ளீர்கள் என்று...
அதுக்கு மகிந்த போல பாவனை செய்பவர் அலைபேசியை எடுத்து தன்னோட தம்பிக்கு அழைப்பார்... கேட்பார்... மல்லி. இன்னும் அங்க தெமிழ கட்டிய இன்னவாத?? என்பார்...

தட்டிக்கேட்க்க எவன் உள்ளான்??? நீங்கள் இவ்வாறு கவலைப்பட.................... அடி உதை கொடுக்க அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க ஒரு தலைவன் இல்லாவிட்டால் எதுவும் நடக்கும்...

xavier_raja
20-05-2010, 06:56 AM
இந்த தகவல் அப்படியே "Thatstamil.com தளத்தில் வந்தது.. நம் மன்ற விதிப்படி.. நன்றி தட்ஸ் தமிழ் இணையத்தளம் என்று கடைசியில் போடவேண்டும் நண்பா..

muthuvel
20-05-2010, 08:11 AM

அட இப்படி யா தமிழன் நிலைமை

அன்புரசிகன்
20-05-2010, 10:16 AM
அட இப்படி யா தமிழன் நிலைமை
இதற்கு ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்த நிலைக்கு காரணம் வேறு யாருமல்ல... தமிழன் தான் இத்தனைக்கும் காரணம். அன்று தொட்டு இன்று வரை...

நானறிந்த உதாரணங்கள்...

இராமாயணம் உண்மை என்றால்...

இராவணனுக்கு விபூசனன்
பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன்...

இன்று தலைவர் பிரபாகரனுக்கு கருணா...

muthuvel
20-05-2010, 10:19 AM
இதற்கு ஆச்சரியப்பட ஏதுமில்லை. இந்த நிலைக்கு காரணம் வேறு யாருமல்ல... தமிழன் தான் இத்தனைக்கும் காரணம். அன்று தொட்டு இன்று வரை...

நானறிந்த உதாரணங்கள்...

இராமாயணம் உண்மை என்றால்...

இராவணனுக்கு விபூசனன்
பண்டாரவன்னியனுக்கு காக்கை வன்னியன்...

இன்று தலைவர் பிரபாகரனுக்கு கருணா...

நீங்கள் டான் தமிழ் தொலைகாட்சியில் கருணாவின் உரையாடலை பாருங்கள் , அவர் கூறுகிறார் , தீவிரவாதம் என்பது ஒரு நோய் , விடுதலை புலிகள் அதை விரும்பவில்லை என்றும் , அவர் இயகத்தில் இருந்த பொது கூட தலைவரிடம் சமாதானத்திற்கு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார் ..

சிவகுமார்
20-05-2010, 10:24 AM
இந்த தகவல் அப்படியே "Thatstamil.com தளத்தில் வந்தது.. நம் மன்ற விதிப்படி.. நன்றி தட்ஸ் தமிழ் இணையத்தளம் என்று கடைசியில் போடவேண்டும் நண்பா..

உங்களின் கருத்தை வரவேற்கிறேன்! ஆனால் இதுபோன்ற பொதுவான செய்திகளுக்கெல்லாம் இவ்வாறு கட்டுப்பாடுகள் தேவையில்லை என்பது என் கருத்து!

எந்த செய்தித்தளத்தைத் திறந்தாலும் ஒரே வகையான செய்திகள்தான் காணப்படுகிறது! நீங்கள் சொல்லும் விதிமுறைகள் கவிதைகள், கட்டுரைகள், மருத்துவ தகவல்கள் போன்றவற்றிற்கு பொருத்தமானதுதான். ஆனால் நகைச்சுவை, செய்திகள் போன்றவற்றிற்குப் பொருந்தாது!

இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்து நேரத்தை வீணாக்குவதற்கு பதில், இங்கு சில பதிவுகளை பதிய வலியுறுத்துகிறேன்!!!

அன்புரசிகன்
20-05-2010, 10:26 AM
நீங்கள் டான் தமிழ் தொலைகாட்சியில் கருணாவின் உரையாடலை பாருங்கள் , அவர் கூறுகிறார் , தீவிரவாதம் என்பது ஒரு நோய் , விடுதலை புலிகள் அதை விரும்பவில்லை என்றும் , அவர் இயகத்தில் இருந்த பொது கூட தலைவரிடம் சமாதானத்திற்கு வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார் ..

அவர் இனி எல்லாம் கூறுவார்... சூரியன் அவரால் தான் கிழக்கே உதிக்கிறது என்பார். நம்புங்கள்... தலைவரால் தான் சுனாமி வந்தது என்பார். நம்பிடுங்கள்...

சமாதானத்தை நோக்கி பயணிக்கும் கருணாவின் சகாக்கள் ஏன் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டும்???

ஆதி
20-05-2010, 10:28 AM
முத்துவேல், கருணா எதுவும் சொல்லுவார்..

கருணாவின் மனைவி ஒரு இதழுக்கு கொடுத்திருந்த பேட்டியில் அவரை தமிழர் துரோகி என்று சொல்லி இருந்தார்..

கருணாவின் வினை அவர் வசமே உள்ளது.. ஒன் பிக் நெய்ல் புட்டிங் ன், டொக்.. நெம்பி எல்லா எடுக்க முடியாது.. (வசூல் ராஜா)

அன்புரசிகன்
20-05-2010, 10:30 AM
ஒருவிடையம் தெரியவேண்டும். பிரபாகரன் என்ற ஒருவர் இருக்கும் வரை தான் கருணா என்ற ஒருவர் சிங்கள அரசுக்கு தேவை... இப்போதே பிள்ளையான் என்ற ஒருவரை காணக்கிடைக்கவில்லை. வெகுவிரைவில் கருணாவுக்காக நல்ல ஒரு இராணுவ மரியாதை கிட்டும்.

சிவகுமார்
20-05-2010, 10:43 AM

அவ்வாறு ஒரு நாள் வெகுவிரைவில் வர வேண்டுகிறேன்!

அமரன்
20-05-2010, 04:47 PM
சிவகுமார்..

இதை நீங்கள் வேறெங்கெனும் எடுத்து நம்முடன் பகிர்ந்திருந்தால் மூலத்தைக் குறிப்பிட்டிடுங்களேன்.

சிவகுமார்
20-05-2010, 04:52 PM
சிவகுமார்..

இதை நீங்கள் வேறெங்கெனும் எடுத்து நம்முடன் பகிர்ந்திருந்தால் மூலத்தைக் குறிப்பிட்டிடுங்களேன்.

நான் இங்கு என் விளக்கத்தைக் கூறிவிட்டேன்! உடன்பாடில்லையெனில் தெரிவிக்கவும்!!!

[ Originally Posted by xavier_raja View Post
இந்த தகவல் அப்படியே "Thatstamil.com தளத்தில் வந்தது.. நம் மன்ற விதிப்படி.. நன்றி தட்ஸ் தமிழ் இணையத்தளம் என்று கடைசியில் போடவேண்டும் நண்பா..
உங்களின் கருத்தை வரவேற்கிறேன்! ஆனால் இதுபோன்ற பொதுவான செய்திகளுக்கெல்லாம் இவ்வாறு கட்டுப்பாடுகள் தேவையில்லை என்பது என் கருத்து!

எந்த செய்தித்தளத்தைத் திறந்தாலும் ஒரே வகையான செய்திகள்தான் காணப்படுகிறது! நீங்கள் சொல்லும் விதிமுறைகள் கவிதைகள், கட்டுரைகள், மருத்துவ தகவல்கள் போன்றவற்றிற்கு பொருத்தமானதுதான். ஆனால் நகைச்சுவை, செய்திகள் போன்றவற்றிற்குப் பொருந்தாது!

இதுபோன்ற ஆராய்ச்சிகள் செய்து நேரத்தை வீணாக்குவதற்கு பதில், இங்கு சில பதிவுகளை பதிய வலியுறுத்துகிறேன்!!! ]

அமரன்
20-05-2010, 05:01 PM
சிவகுமார்..

மன்றத்தில் இருவகையினர் உள்ளனர். செய்திகளை தாமே எழுதிப் பதிபவர்கள். பிறதளத்திலிருந்து பிரதி செய்து பதிபவர்கள். இருவருக்கும் வித்தியாசம் காட்டத் தேவை இல்லை என்று நீங்கள் கருதினால் நான் சொல்வதுக்கு ஏதுமில்லை.

நன்றி.

சிவகுமார்
20-05-2010, 05:05 PM
சிவகுமார்..

மன்றத்தில் இருவகையினர் உள்ளனர். செய்திகளை தாமே எழுதிப் பதிபவர்கள். பிறதளத்திலிருந்து பிரதி செய்து பதிபவர்கள். இருவருக்கும் வித்தியாசம் காட்டத் தேவை இல்லை என்று நீங்கள் கருதினால் நான் சொல்வதுக்கு ஏதுமில்லை.

நன்றி.

அடுத்து இதுபோன்ற தவறுகள் நிகழாமல் என் பதிவுகளை செம்மைப்படுத்துகிறேன்! நன்றி!

xavier_raja
22-05-2010, 12:21 PM
அடுத்து இதுபோன்ற தவறுகள் நிகழாமல் என் பதிவுகளை செம்மைப்படுத்துகிறேன்! நன்றி!

எப்படியோ என்னுடைய கருத்தை ஒத்துகொண்டமைக்கு நன்றி :)

அமரன்
22-05-2010, 05:20 PM
எப்படியோ என்னுடைய கருத்தை ஒத்துகொண்டமைக்கு நன்றி :)

மன்றத்தின் மனச்சாட்சி உங்கள் கருத்தில் பேசியதில் எனக்கும் மகிழ்ச்சி அன்பரே..

வியாசன்
23-05-2010, 09:39 AM
இந்த கொலைகளில் இந்திய அரசுக்கும் ஏதாவது பங்கிருக்கின்றதா? இலங்கையை யுத்த குற்றசாட்டுக்களிலிருந்து விடுவிக்க பெரும் முயற்சி செய்கின்றார்கள். இலங்கையில் நடைபெற இருக்கும் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பெரும் உதவி செய்கின்றார்கள். இவற்றை பார்க்கும்போது தங்கள் கரங்களிலுள்ள இரத்தகறையை மறைக்க முயற்சிப்பது போல் தெரிகின்றது.

sunson
23-05-2010, 01:14 PM
எமக்கு படிக்கும் போதே எவ்வளவு வலியாக இருக்கின்றது,
அனுபவித்தவர்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும். ஒன்றும்
செய்ய இயலாமைக் குறித்து மனம் வெம்பி அழுகிறது.

இணையத்தில் உலா வருபவர்கள் பல இடங்களில்
இந்த செய்தியை படித்திருக்கக் கூடும். என்றபோதிலும்
படிக்காதவர்கள் நம் மன்றம் வாயிலாக ஒரு வேளை
அறியவும் இது வாய்ப்பாக இருக்குமல்லவா.