PDA

View Full Version : பட்டணந்தான் போகலாமா….?



aparajithc.achan
19-05-2010, 07:56 AM
பொழப்பைத் தேடி பட்டணம்
வந்தான் பரமசிவம்….
பட்டணந்தான் அவனை
பளபளன்னு மாத்துச்சு…
அவன் பேச்சுல
ஆங்கிலம் விளையாடுச்சு…
டிரெஸ்செல்லாம்
டிசைன் டிசைனாச்சுது…
பீட்சா பர்கரெல்லாம்
பசியை விரட்டுச்சு…
வெள்ளந்தியான அவன்
மனசு மட்டும் குப்பையாச்சு…

பாரதி
13-06-2010, 09:19 AM
கூட்டினால் சுத்தமாகும் என்பார்கள்.
இங்கு கூடிய இடத்தால் குப்பையானது!

எழுதுங்கள் நண்பரே. வாழ்த்துகிறேன்.

govindh
13-06-2010, 12:01 PM
"வெள்ளந்தியான அவன்
மனசு மட்டும் குப்பையாச்சு…"

இன்னும் நிறைய எழுதுங்கள்...
வாழ்த்துக்கள்...

அமரன்
13-06-2010, 12:56 PM
கிராமம் என்றால் சூதுவாது கிடையாது..
பட்டணம் என்றால் சூதுவாது இல்லாத இடமே கிடையாது..
எப்பத்தான் மாறும் இந்தப் பார்வை..

கிராமத்தில் தூசுத் துணிக்கை இல்லை..
நகரத்தில் அவைக்கு அளவே இல்லை..

நம்ம பூமி கூட தூசுக்களால் ஆனதுதாம்பா..
அதுதான் நமக்குப் பாதுகாப்பும் கூட..

அடுத்தவன் சுகாதாரம் கெடாதவரை குப்பை கெடுதில்லை..

பா.ராஜேஷ்
13-06-2010, 02:03 PM
நல்ல முயற்சி அன்பரே... தொடர்ந்து எழுதுங்கள்...