PDA

View Full Version : உயர்ந்த இலக்கை நோக்கி முன்னேறும் வழியில்!



இறைநேசன்
18-05-2010, 08:30 AM
எனக்கு சுமார் 12-13 வயது இருக்கும்போது சிறு "கவண்" தயாரித்து குருவிகளை வேட்டையாடுவது என்பது மிகவும் பிடித்த விஷயம். . அந்நாட்களில் "காசிகரட்டி" என்று எங்களால் பெயரிடப்பட்ட பறவை ஓன்று உண்டு. அது அழகழகான பல்வேறு வண்ணங்களுடன் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கும். அக்குருவியை வேட்டையாடுவதர்க்காகவே மூன்று நான்குபேர்கள் சேர்ந்து குழுவாக புறப்பட்டு செல்வோம்.

அவ்வாறு புறப்பட்டு போகும் நாங்கள், வழியில் எதாவது ஒரு மரத்தில் ஒரு ஓணானை கண்டுவிட்டால் போதும், உடனே நாங்கள் எதற்க்காக போகிறோம் என்பதை மறந்து அந்த ஓணானை வேட்டையாடுவதில் தீவிரமாகிவிடுவோம். அந்த ஓணானை வேட்டையாடுவதால் எந்த பயனும் இல்லை! ஆகினும் அதற்காக அனேக நேரத்தை செலவுசெய்து அந்த ஓணானை கொன்று தூர தூக்கி போட்டுவிட்டுதான் பிறகு அந்த இடத்தைவிட்டு கடந்து செல்வோம் இதனால் பல நேரங்களில் அத்தோடு
வீடு திரும்பியதும் உண்டு. அதை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்புதான் வருகிறது.

இவ்வுலக வாழ்வில் உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் நாம் தேவையற்ற சிறுசிறு காரியங்களில் தலையிட்டு அதில் தேவையில்லாமல் நேரத்தை வீணடிப்பதை தவிர்த்து அந்நேரங்களில் ஆண்டவருக்காக அல்லது மற்றவர்களுக்காக எதையாவது செய்ய பிரயாசப்படவேண்டும். தேவனின் திட்டத்தை நிறைவேற்ற நாம் பயணிக்கும் பயணத்தில் இடையிடையே வரும் அனேக சிறு பிரச்சனைகளை தவிர்க்க அதை அடுத்தவர்களுக்கு மனதார விட்டுகொடுத்துவிடுவது நல்லது.

மோசே எனப்படும் தலைவன் அனேக ஜனங்களை கானான் தேசத்துக்கு கொண்டு போகும் ஒரு உன்னதமான பயணத்தில் இருந்தால். வழியில் பலர் அவனுக்கு எதிராக முறுமுறுத்து பிரச்னைக்கு வந்த போதெல்லாம் அவர்கள் முகம் குப்புற விழுந்து அவர்களை சமாதனப்படுத்தினான். ஏனெனில் அவனது நோக்கம் எப்படியாவது இறைவன் காண்பிக்கும் அந்த அருமையான தேசத்தில் இந்த ஜனங்களை கொண்டு சேர்த்துவிடவேண்டும் என்று உயர்ந்ததாக இருந்தது அதற்காக எதையும் விட்டுகொடுக்க தயாராக இருந்தான். அவ்வாறு செய்யாமல் அவர்களுடன் சண்டைபோட்டுக்கொண்டு இருந்திருப்பானாகில் அவனும் தொடர்ந்து போகமுடியாது பிறரையும் அவ்விடத்தில் கொண்டுபோய் சேர்க்கமுடியாத நிலை ஏற்ப்பட்டிருக்கும்

எனவே உயர்ந்த இலக்கை அடைய முன்னேறிக்கொண்டு இருக்கும் ஒவ்வொருவரும் நமது வாழ்வின் வழியில் இடைபடும் சிறு சிறு பண விஷயங்கள் மற்றும் சிறு சிறு தேவையன்ற வழக்குகளில் தலையிட்டு நேரத்தை வீணடிக்காமல் அதை மனதார மற்றவர்களுக்கு விட்டு கொடுத்துவிட்டு, நமது இலக்கை நோக்கி வேகமாக முன்னேறுவது நல்லது.