PDA

View Full Version : RSS Feeds



கண்ணன்
17-05-2010, 09:46 PM
RSS feeds வசதி தமிழ் மன்றத்தில் உள்ளதா?
இல்லையென்றால், திட்டம் உள்ளதா?

நன்றி.

அறிஞர்
18-05-2010, 03:46 PM
இதுவரை அது பற்றி யோசிக்கவில்லை...

பலர் விரும்புவார்களென்றால் செயல்படுத்தலாம்.

பல உறுப்பினர்களுக்கு இது பற்றி தெரியாது. முடிந்தால் விளக்கமும், பயன்பாடும் கொடுங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும்

கண்ணன்
18-05-2010, 04:33 PM
சரி. RSS என்பது Really Simple Syndication, அதாவது ஒரு “தொகுப்பான்”. அப்படி என்றால்? நீங்கள் தினமும் ஒரு சில (உ.தா. 10) இணையப்பக்கங்களுக்குத் தவறாமல் செல்கிறவர் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தப்பத்து 10 பக்கங்களில், தினமும் சராசரியாக 4 பக்கங்கள்தான் புதிய விஷயங்களைக் (updated info) கொண்டுள்ளது, ஆனாலும் நீங்கள் அந்தப்பத்து பக்கங்களுக்கும் தினமும் சென்றால்தான், 4 புதிய பக்கங்களை கண்டுபிடிக்க முடியும். இங்குதான் RSS வருகிறது. அந்தப்பத்து பக்கங்களும் RSS வசதி உள்ளது என்றால், அவைகள் RSS மூலம் என்ன புதிதாக உள்ளது என ”ஒலி” பரப்பிக்கொண்டே இருக்கும். இந்த ஒலிபரப்புகளை யார் கண்காணிப்பார்கள்? இதற்குதான், ஒரு RSS படிப்பான் வேண்டும். கூகிள் படிப்பானை (Google Reader) நான் உபயோகிக்கிறேன். கூகிள் படிப்பானிடம், இந்த 10 பக்கங்களையும் வேவு பார்த்துக்கொண்டேயிருங்கள் என சொல்லிவிடுங்கள். அப்புறம், கூகிள் படிப்பானிடம் தினம் ஒரு தடவை சென்றால் போதும், அது எந்த 4 பக்கங்கள் புதிய விஷங்களைக் கொண்டுள்ளது, மற்றும், அந்தப் புதிய விஷயங்களின் சாராம்சம் இதுதான் என ஓரிரு வரிகளிள் சொல்லிவிடும். நீங்கள் அந்த 4 பக்கங்களுக்கும் கூகிள் படிப்பானிடமிருந்தே தட்டிப் படித்துக்கொள்ளலாம். சாராம்சம் பிடிக்கவில்லையென்றாம், அந்தப்பக்கங்களுக்கே செல்ல வேண்டாம். ஆக மொத்தத்தில், நேரம் மிச்சம்.
சரி அதை எப்படி, தமிழ்மன்றம் உபயோகிக்கலாம்?
எப்பொழுது, ஒரு புதிய post/thread ஆரம்பிக்கப்பட்டால், அதை RSS மூலம் தெரியப்படுத்தலாம். அல்லது, இன்னும் சற்று கீழே சென்று, எல்லா postகளையும் RSS மூலம் தெரியப்படுத்தலாம்.

அதுசரி, உனக்கென்ன நீ சொல்லிவிட்டுப்போய்விடுவாய், நாங்கள்தானே வேலை செய்து அதை செயலாக்க வேண்டும் என நிர்வாகிகளும், பண்பட்டவர்களும் முனகுவது கேட்கிறது. ஐயா, இது ஒரு வேண்டுகோள்தான். தமிழ்மன்றமே ஒரு பாலைவனச்சோலைதான் (கடமைப்பட்டிருக்கிறேன்), அதற்கு A/C அவசியமில்லை
இருந்தால் ஒரு சொகுசுதான். :)

அமரன்
09-06-2010, 09:19 PM
அன்பரே!

இந்த வசதி மன்றத்தில் ஏற்கனவே உண்டு.

இந்த வசதி மூலம் விருந்தினர் வாசிக்கக் கூடிய மன்றப் பிரிவுகளை மட்டும் காணலாம். எடுத்துகாட்டு... நிர்வாக அறிவுப்புகள்.

இதற்கான சுட்டி
http://www.tamilmantram.com/vb/external.php (http://www.tamilmantram.com/vb/external.php)