PDA

View Full Version : கனவு மெய்ப்படும்...

simariba
15-05-2010, 04:58 AM
இன்னும் நேரமிருக்கிறது
கண்களும் காற்றும் சந்திக்க...
இது இரவு
இன்னும் மிச்சமிருக்கிறது
கனவுகளோடு நம் உறக்கமும்...
இன்னும் பின்னியிருக்கிறது
நம் லட்சியங்களும்
அதற்கான முயற்சிகளும்...
இது விடியலுக்கு அருகே
சிறு தொலைவில் உள்ள
வைகறை...
பட்டியல் இருக்கிறது
விடியும்முன் எழுந்து
ஒவ்வொன்றாய் முடிக்க...
இன்னும் இரும்பாய் இருக்கிறது
அவ்வப்போது காயம் பட்டாலும்
உடையாத நம் தன்னம்பிக்கை...
இது விடியல்...
இன்னும் நீண்டிருக்கிறது
வெற்றிகான நம் பயணப்பாதை...
மன்றத்தில் தவழும்
தென்றலாய்....
இன்னும்
கிடைத்துக் கொண்டிருக்கிறது
முன்னேற ஊக்கமும்
உற்சாகமும்...
கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்...

சுடர்விழி
15-05-2010, 06:45 AM
ரொம்ப நல்ல கவிதை. பாராட்டுக்கள்...

அமரன்
15-05-2010, 07:13 AM
நல்ல சிந்தனை ஊட்டும் கவிதை. பாராட்டுகிறேன் அபிரா.

மன்றத்தில் தவழும் தென்றலாய்.. நல்ல உவமானம்.

இந்த வரி உங்கள் ஆக்கங்களுக்கான விமர்சனங்களை அடுத்த தட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று எமக்குக் கட்டளை இடுகிறது.

கூதல் காலத்தில் தென்றல் காற்றும் ஊசி குத்தும். அதே போல உங்கள் படைப்புகளுக்கான பின்னூட்டங்களும் அமையட்டும்.

கனவு மெய்ப்படட்டும்..

அபிரா..
பெரியதான இந்தக் கவிதை குறுங்கவிப் பகுதியிலா.. புதுக்கவிதைகள் பகுதிக்கு மாற்றிவிட்டேன். வருங்காலத்தில் பதியும் போது கொஞ்சம் கவனிங்களேன்.

simariba
17-05-2010, 12:33 AM
நன்றி சுடர்விழி!

எவ்வளவு பெரிய பாராட்டு! நன்றி அமரன்! இது விளையாடியது போதும் உருப்படியாய் ஏதேனும் எழுது என சொல்வது போல் உள்ளது. முயற்சிக்கிறேன்....

பாரதி
13-06-2010, 09:39 AM
எனக்கு மிகவும் பிடித்த குறள்களில் "தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக்கூலி தரும்" என்பதும் உண்டு. உங்கள் கவிதையும் அதை வலியுறுத்துவதால் மகிழ்கிறேன். வாழ்த்தும் நன்றியும்.

govindh
13-06-2010, 10:54 AM
"கண்முன்னே விரிகிறது
நம் கனவு மெய்ப்படும் காட்சி...
முயற்சி ஒன்றே வழி
காட்சி நனவாகும்
கனவு மெய்ப்படும்..."

உற்சாகமூட்டும் ஊக்கமிகு வரிகள்....
கவி மிக நன்று....பாராட்டுக்கள்....

simariba
03-04-2011, 01:21 PM
நன்றி govindh!

Nivas.T
03-04-2011, 01:24 PM
அழகானக் கவிதை

பாராட்டுகள் சிமரிபா

simariba
03-04-2011, 01:28 PM
நன்றி த. நிவாஸ்!!:)

இளசு
16-04-2011, 11:13 PM
ஈழச்சகோதரர்களின் உதிராத நம்பிக்கை இழையை எனக்கு நினைவுபடுத்தியது கவிதை..

அமரனின் பார்வை, பாரதியின் புரிதலும் பொருந்திப் போகிறது..

இது கவிதையின் வெற்றி!

பாராட்டுகிறேன்!