PDA

View Full Version : கருவறைச் சுகம்



jawid_raiz
15-05-2010, 01:47 AM
http://farm2.static.flickr.com/1339/1454752643_00f9b8e147.jpg

அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது


உன் உதிரத்தில் நானிருந்தேன்
உணர்ந்தது பூ வாசம் - இன்று
உலகத்தில் நானிருக்க
உணர்வதெல்லாம் பிண வாசம்


நிசப்தத்தின் மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்கிறது
என் இதயத்துடிப்பு


மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்

மொழிகளால் தான்
இங்கு சிலபேர்
எலிகளாய்...
ஒழிய வேண்டி இருக்கிறது


என் உலகம்
மூடி தான் இருந்தாலும்
மூச்சுக்காற்றுக்காய்
தவாமிருக்கவில்லை
நான் அன்று

அந்தமின்றி விரிந்தாலும்
என் உலகம்- சிலவேளை
மூச்சுவிடக் காற்றின்றி
மூர்ச்சையாகி போகின்றேன் இன்று


அன்னையே!
உன் கருவறைக்குள்
மீண்டும் என்னை
மீட்டெடுப்பாயா?
இந்த உலகம்
என்னை பயமுறுத்துகிறது



.

சுடர்விழி
16-05-2010, 12:43 PM
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...பாராட்டுக்கள்

“மொழிகளெல்லாம் அங்கிருக்கவில்லை
என் அசைவு மொழிகளுக்கு
பக்குவமாய் நீ
பதில் சொன்னாய்”


---அற்புதமான வரிகள்.

jawid_raiz
16-05-2010, 03:04 PM
உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி சுடர்விழி

சிவா.ஜி
16-05-2010, 03:30 PM
தொல்லைகளில்லா பிள்ளைப் பருவத்துக்கே போய்விட மாட்டோமா என அனைவரும் விரும்புவார்கள். இங்கோ, இக்கவிதையின் நாயகன் அதையும் தாண்டி...கருவறைக்குள்ளேயே குடியிருக்க விருப்பம் காட்டுகிறான்.

அருமையான வரிகள் ஜாவித். வாழ்த்துக்கள்.

jawid_raiz
16-05-2010, 03:33 PM
தொல்லைகளில்லா பிள்ளைப் பருவத்துக்கே போய்விட மாட்டோமா என அனைவரும் விரும்புவார்கள். இங்கோ, இக்கவிதையின் நாயகன் அதையும் தாண்டி...கருவறைக்குள்ளேயே குடியிருக்க விருப்பம் காட்டுகிறான்.

அருமையான வரிகள் ஜாவித். வாழ்த்துக்கள்.

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சிவா.ஜி

govindh
16-05-2010, 10:14 PM
"நிசப்தத்தின் மத்தியிலே
என்னை தாலாட்டியது
உன் நாடித்துடிப்பு- இன்று
சப்தங்களால்...
நிசப்தமாக பார்க்கிறது
என் இதயத்துடிப்பு" -

கவி வரிகள் அருமை.
பாராட்டுக்கள் ஜாவித்.

jawid_raiz
17-05-2010, 01:30 AM
நன்றி govindh!

அக்னி
18-05-2010, 09:25 AM
அற்புதமான வார்த்தைக்கோர்வைகள், வரியமைப்புக்கள்...

கருவறைக் காலத்தைக் கற்பனையில் மட்டுமே கண்டுணர்ந்தாலும்,
அங்கு செல்ல ஏங்காத மனிதன் இருக்க முடியாது எனலாம்...

கருவறை வெளித் தள்ளிவிடவில்லை...
உனக்கெனக் காத்திருக்கும்
கல்லறையைக் கருவறையாக்க
உயிர் தந்து விட்டிருக்கின்றது...

வாழ இயலாமற்
கருவறை நோக்கிப் பின்நகராதே...
வாழ்வை இசைவாக்கி
கல்லறை நோக்கி முன்நகர்...

கல்லறை கருவறையாய் வரவேற்கும்...

ஜாவிட் அவர்களுக்கு என் நிறைவான பாராட்டு...

jawid_raiz
18-05-2010, 09:30 AM
அற்புதமான வார்த்தைக்கோர்வைகள், வரியமைப்புக்கள்...

கருவறைக் காலத்தைக் கற்பனையில் மட்டுமே கண்டுணர்ந்தாலும்,
அங்கு செல்ல ஏங்காத மனிதன் இருக்க முடியாது எனலாம்...

கருவறை வெளித் தள்ளிவிடவில்லை...
உனக்கெனக் காத்திருக்கும்
கல்லறையைக் கருவறையாக்க
உயிர் தந்து விட்டிருக்கின்றது...

வாழ இயலாமற்
கருவறை நோக்கிப் பின்நகராதே...
வாழ்வை இசைவாக்கி
கல்லறை நோக்கி முன்நகர்...

கல்லறை கருவறையாய் வரவேற்கும்...

ஜாவிட் அவர்களுக்கு என் நிறைவான பாராட்டு...

உங்கள் கருத்துபூர்வமான பின்னூட்டத்திற்கு நன்றி அக்னி !

பாரதி
13-06-2010, 09:30 AM
உலகத்தைப் பார்க்கும் பார்வையையும்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும்
அன்னை ஊட்டி இருப்பாளே...
அது மறந்து அல்லது பயந்து மீண்டும் அடை தேடுதல் சரியா..?

அமரன்
13-06-2010, 12:41 PM
உலகத்தைப் பார்க்கும் பார்வையையும்
எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தைரியத்தையும்
அன்னை ஊட்டி இருப்பாளே...
அது மறந்து அல்லது பயந்து மீண்டும் அடை தேடுதல் சரியா..?

அதே...அதே...

அன்னை சொல்வாள்..

நீ
இரு கண் கொண்டு உலகம் காண்கிறாய்
உலகம்
பல கண் கொண்டு உன்னைக் கண்கிறது..

ஜாவித்..

பிறக்கும் போதே நச்சுக்கொடி சுற்றிப் பிறப்பவர்கள் நாம்..

உலகம் அழகானது.. பூக்களால் ஆனது.. அதனால்தான் அது பூலகம் எனப்படுகிறது.

பூப்பதும் உதிர்வதும் பூக்களின் இயல்பு..

பூப்பது எல்லாம் பூமி சேரத்தான் வேணும்.

இன்று நம்மைப் பயமுறுத்துபவை நாளை பூமிக்குள்..

வாழுங்கள்..

ஷீ-நிசி
13-06-2010, 02:13 PM
கடைசி வரிகள் மிக அழகு!

புகைப்படம் ஏனோ கவிதையோடு ஒட்ட மறுக்கிறது..

சரியான புகைப்படத்தை இட்டால் அதுவே கவிதையை இன்னும் மெருகூட்டி காட்டும்!

வாழ்த்துக்கள் நண்பரே!

jawid_raiz
14-06-2010, 05:06 AM
பாரதி... அமரன் இருவரது கருத்துகளுக்கும் நன்றி!