PDA

View Full Version : கிறுக்கல்



simariba
13-05-2010, 03:13 AM
சிந்தனை முத்துக்கள்
சிங்காரமாய் சிதறின..
சிறகு முளைத்து
வானில் பறந்தன..
கணினியில் அச்சிட
கைகள் பரபரத்தன..
காகிதமாவது தென்படுகிறதா
கண்கள் தேடின..
பேருந்து பயணத்தின்
மத்தியில் நான்..
கணினியும் இல்லை
காகிதமும் இல்லை
வீட்டிற்குள்
வந்திறங்கியவுடன்
அந்த கவிதை மறந்து
வந்து விழுந்தது...
கவிதையில்லை கிறுக்கல்..

சிவா.ஜி
13-05-2010, 07:18 AM
சும்மா இருக்கும்போது இப்படி நிறையத் தோணும்...எழுத உக்காந்தா...அந்த வார்த்தை....அதான்...வராது. கவிதை வராதைதையே கவிதையாக்குன உங்க வரிகளுக்குப் பாராட்டுக்கள் அபி.

அமரன்
13-05-2010, 07:58 AM
நண்பர் நண்பன் இந்த உணர்வில் தத்தளித்திருப்பார். அழகான கவிதையாகவும் அதை வடித்திருப்பார். பலருக்கும் இது நிகழாமல் இல்லை.

மனநிலை சிக்கலை வெளிப்படுத்தி உள்ளீர்கள். பாராட்டுகள்.

simariba
13-05-2010, 09:49 AM
நன்றி சிவா! நன்றி அமரன்!

பா.சங்கீதா
17-05-2010, 03:06 PM
பாராட்டுக்கள் அபி அக்கா...........
ரொம்ப நல்லா இருக்கு......................:)

அறிஞர்
17-05-2010, 03:17 PM
கவிஞர்கள் பலரின் நிலை...
நல்ல கவிதை வரும்பொழுது பதிக்க ஒன்றும் இருக்காது...
சிலநேரம் செல்போனில் ரிக்கார்டு பண்ணலாம் (பேருந்தில் கொஞ்சம் கடினம் தான்)
கிறுக்கல் அருமை...

simariba
18-05-2010, 12:03 AM
நன்றி சங்கீதா! நன்றி அறிஞர்!