PDA

View Full Version : நியூட்டனின் கண்டுபிடிப்பை பொய்யாக்க முயற்சி!!!



தாமரை
12-05-2010, 09:42 AM
இன்றைய தினத் தந்திச் செய்தி..

மறைந்த பிரபல் விஞ்ஞானி நியூட்டனின் ஆப்பிள் மரம் விண்வெளிக்குச் செல்கிறது..

லண்டன் மே 12 -

பொருட்களுக்கான புவி ஈர்ப்பு விசைத் தத்துவத்தைக் கண்டுபிடித்தவர், இங்கிலாந்து விஞ்ஞானி சர்.ஐசக் நியூட்டன். அவர் ஒரு ஆப்பிள் மரத்தடியில் படுத்து இருந்தபொழுது, மரத்தொல் இருந்து ஒரு ஆப்பிள் கீழே விழுந்ததை வைத்து இந்தத் தத்துவத்தைக் கண்டுபிடித்தார். மேளே எறியப்படும் எல்லாப் பொருளும் புவி ஈர்ப்பு விசை காரணமாக கீழே வந்தெ தீரும் என்றார். அவருக்கு இந்தத் தத்துவத்தைப் போதித்த ஆப்பிள் மரத்தை இலண்டனில் உள்ள ஆவணக் காப்பகத்தில் வைத்து பராமரித்து வருகிறார்கள்

இந்நிலையில், இந்த ஆப்பிள் மரத்தில் இருந்து 4 அங்குல நீளத்திற்கு ஒரு பகுதியை வெட்டி எடுத்து விண்வெளிக்கு கொண்டு செல்கிறார்கள். வரும் 14 ஆம் தேதி நாசா நிறுவனம் விண்வெளிக்கு அனுப்பும் அட்லாண்டிஸ் விண்கலத்தில், இந்த மரத்துண்டையும், நியூட்டனின் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு 6 விண்வெளி வீரர்கள் செல்கிறார்கள்.

விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் அங்கு இந்த மரத்துண்டு கீழே விழாமல் அந்தரத்தில் மிதக்கும்.

இதனல் விண்வெளியில் நியூட்டனின் ஈர்ப்பு விசை செல்லாது என்பதை அவருடைய ஆப்பிள் மரத்தையே வைத்து நிரூபிக்கப் போகிறோம் என்கிறார் அதை எடுத்துச் செல்லும் விண்வெளிவீரர்.

விண்வெளிப்பயணம் முடிந்த பிறகு, அந்த ஆப்பிள் மரத்துண்டும், நியூட்டன் புகைப்படமும் இலண்டன் ஆவணக்காப்பகத்தில் திரும்ப ஒப்படைக்கப்படும். நியூட்டன் உயிரோடு இருந்தால் கூட விண்வெளியில் தன் விதி பொய்யாகும் அதிசயத்தைக் காணவிரும்புவர் என்று விண்வெளி வீரர்கள் வேடிக்கையாகக் கூறுகிறார்கள்..

---------------------------------------------------------------------------------------------------------------------------



நம்ம கமெண்ட் :

அதுக்கு முன்னால நியூட்டனோட அனைத்து விதிகளையும் படிச்சிட்டுப் போங்கப்பா.. முதல்ல அவரோட முதலாவது இயக்க விதி

"வெளிவிசையொன்று செயல்பட்டு மாற்றும் வரை எந்த ஒரு பொருளும் தனது ஓய்வு நிலையையோ அல்லது நேர்க்கோட்டில் அமைந்த சீரான இயக்க நிலையையோ மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து அதே நிலையில் இருக்கும்."

அப்பால

நியூட்டனின் ஈர்ப்பு விசை விதி :

நியூட்டனின் ஈர்ப்பியல் விதிப்படி, ஈர்ப்பு விசையானது, நிறைகளின் பெருக்கற்பலனுக்கு நேர்த்தகவிலும், அவற்றிற்கிடையேயுள்ள தொலைவின் இருமடிக்கு எதிர்த்தகவிலும் இருக்கும். அதாவது, m1 ,m2 என்பன இரு பொருள்களின் நிறை எனவும் r என்பது அவற்றிற்கு இடைப்பட்ட தொலைவு எனவும் கொண்டால், இவ்விரு பொருள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை,

F = G x ( (m1 x m2) / (r^2) )

G என்பது ஈர்ப்பியல் மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10-11 N m2 kg-2. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும்.

1. முதல்ல விண்வெளிக்கலத்தை 0 ஸ்பீடுக்கு ஓட்டணும்..

2. அப்புறமா கட்டை கீழ விழலைன்னு நிரூபிக்கணும்..

கட்டையென்ன அவங்க கலமே தொபுக்கடீர்னு விழுந்திரும். இப்போ விண்வெளி நிலையத்தில் உள்ள ஈர்ப்பில்லா தன்மை மாயமான ஒன்றாகும். ஏன்னா, ஈர்ப்பை எதிர்த்து தளம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பயணித்துக் கொண்டே இருப்பதாலதான் தளம் அங்க நிலையா இருக்கு. மிர் ஸ்பேஸ் ஸ்டேசன், ஸ்கைலாப் விழுந்ததெல்லாம் மறந்து போயிருச்சி இவங்களுக்கு,

சிவா.ஜி
12-05-2010, 09:52 AM
அது சரி வளி மண்டலத்தைத் தாண்டினா....அங்கு புவியீர்ப்புவிசை இருக்காதுன்னு சொல்றாங்களே...அப்ப மிதக்கும்தானே தாமரை. அப்ப ஸ்கைலாப் எப்படி விழுந்திச்சி...?

ஸ்ரீதர்
12-05-2010, 11:23 AM
நியூட்டனின் விதியின் பெயரே “புவியீர்ப்பு விதி” தானே!!!!

அதன் பெயரிலேயே “புவி” அதாவது பூமி என்பதற்குதான் இவ்விதி பொருந்தும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!!

அதை விடுத்து விண்வெளியில் எடுத்துச்சென்று அங்கு வேலை செய்யவில்லை என்றால் என்னவென்று கூறுவது??

பூமியில் அவரது கண்டுபிடிப்பை பொய்யென்று நிரூபிக்க முடியுமா இவர்களால்???

தாமரை
12-05-2010, 11:47 AM
அது சரி வளி மண்டலத்தைத் தாண்டினா....அங்கு புவியீர்ப்புவிசை இருக்காதுன்னு சொல்றாங்களே...அப்ப மிதக்கும்தானே தாமரை. அப்ப ஸ்கைலாப் எப்படி விழுந்திச்சி...?

நிலாவின் ஈர்ப்பு விசையால்தான் கடல் நீர் உயர்ந்து தாழ்ந்து கடல் ஓதங்கள் உண்டாகுதுன்னு படிச்சீங்கதானே..

1/6 பங்கு ஈர்ப்பு விசை கொண்ட, 384,4903 கி.மீ தூரத்தில் உள்ள நிலாவுக்கே இவ்வளவு சக்தின்னா, சும்மா 300 மைல் உயரத்தில இருக்கிற விண்வெளிதளத்தின் மேல புவி ஈர்ப்பு விசையின் ஆதிக்கம் எவ்வளவு இருக்கும்..?

அதாவது, பூமியின் மேல விழாம ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ஒரு தளத்தை நிறுத்தணும் என்றால் அதை அந்த உயரத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட வேகத்தில் பூமி சுற்றும் அதே திசையில் பூமியைச் சுற்றி வரச் செய்யணும். இதைப் பற்றி நான் சொல்லி இருப்பது

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=454758&postcount=179

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=454889&postcount=185

நியூட்டன் விதிப்படி வேலை செஞ்சுகிட்டு.. அந்த விதிகளே தெரியாம இருக்கிற இந்த சிலரைப் பார்த்தாதான் சிரிப்பு சிரிப்பா வருது,

தாமரை
12-05-2010, 11:51 AM
நியூட்டனின் விதியின் பெயரே “புவியீர்ப்பு விதி” தானே!!!!

அதன் பெயரிலேயே “புவி” அதாவது பூமி என்பதற்குதான் இவ்விதி பொருந்தும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளதே!!

அதை விடுத்து விண்வெளியில் எடுத்துச்சென்று அங்கு வேலை செய்யவில்லை என்றால் என்னவென்று கூறுவது??

பூமியில் அவரது கண்டுபிடிப்பை பொய்யென்று நிரூபிக்க முடியுமா இவர்களால்???

அய்யே அவ்வளவு தூரம் போவானேன்.. புவி ஈர்ப்பு விசையால் சூரியனே கொஞ்சம் அசையுது என்பதும் தெரிஞ்சதுதான்..

சும்மா டுபாக்கூர் விடறாங்க

அக்னி
12-05-2010, 01:03 PM
பெருசா ஏதாச்சும் பெயிலியராயிட்டுதோ...

இந்தச் செய்தியைப் படித்ததும், தாமரை அண்ணாவிடம் கேட்க நினைத்த கேள்வியை இங்கே கேட்கின்றேன்...

“அந்த ஆப்பிள் மரத்துண்டில், ஆப்பிள் பழம் (எப்படி வந்தது என்பதும் சந்தேகம்தான்) பழுத்துத் தானே பிரியும் வரைக்கும்,
இவங்க அங்கேயே சுற்றிக்கொண்டிருப்பாங்களோ...???”

ரங்கராஜன்
12-05-2010, 04:11 PM
மன்றத்தில் பல விஞ்ஞானிகளுக்கு நடுவில் நானும் இருப்பது பெருமையாக இருக்கிறது. தலைமை விஞ்ஞானி தாமரை அவர்களுக்கு நன்றிகள்............. உண்மையில் அனிரூதும், பாப்பாவும் கொடுத்து வைத்தவர்கள் தான்......

கண்ணன்
17-05-2010, 03:48 PM
இவ்வளவு தூரம் சென்று நியூட்டனை பொய்யனாக்க வேண்டுமா?
மிக சுலபமாக இப்படியும் செய்யலாம். :(
http://www.guardian.co.uk/world/2010/may/16/texas-schools-rewrites-us-history

இந்த அடிமுட்டாள்களை திருத்த ஒரு ”விதி” வேண்டும்.

அக்னி
17-05-2010, 03:53 PM
http://www.guardian.co.uk/world/2010/may/16/texas-schools-rewrites-us-history

இதில இருக்கறத தமிழாக்கம் செய்து பதிந்தால், நாமளும் தெரிஞ்சுப்போமில்ல... :frown:

கண்ணன்
17-05-2010, 05:41 PM
இதில இருக்கறத தமிழாக்கம் செய்து பதிந்தால், நாமளும் தெரிஞ்சுப்போமில்ல... :frown:

முயற்சி செய்கிறேன். முதலில் அறிமுகம். அமெரிக்காவில், நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் கிடையாது. ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு மாதிரி பாடத்திட்டம் அதிலும் பல பிரிவினைகள் உண்டு. அமெரிக்காவிலுள்ள டெக்ஸஸ் மாநில பாடத்திட்டவாதிகள் மிகவும் பிற்போக்குக் குணமுள்ளவர்கள். அவர்கள் எப்படி பாடத்திட்டம் அமைத்திருக்கிறார்கள் என்பதுதான் கட்டுரையின் சாராம்சம். இப்பொழுது கட்டுரைக்குச் செல்லலாம்.
---------------------------------------------
சிந்தியா டன்பார் (படத்திலுள்ளவர்) டெக்ஸஸ் பள்ளிகள் மேல் அதிக மதிப்பு வைத்திருக்கவில்லை. அவர் பள்ளிப் பாடத்திட்டங்கள் சட்டங்களுக்கு உட்பாடாதவை, கொடுங்கோன்மையுள்ளவைகள் என்கிறார். ஒருபடி மேல்சென்று, குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது, எதிராளிகளின் தீயில் எறிவதற்கு சமானம் என்று சொல்கிறார் இந்த பழமைவாதி. பள்ளிகளின் மீதுள்ள கோபம் காரணமாக அவருடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல், வீட்டிலேயே தனியாக சொல்லிக்கொடுத்தும், கிறித்துவப் பள்ளிகளுக்கும் அனுப்பியவர்.

ஆனால் இப்பொழுது அவர் தன்னுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்யும் நிலையில் இருக்கிறார். இவரும் இவருடைய கிறித்துவப் பழமைவாதிக் கூட்டமும், டெக்ஸஸ் கல்வி நிர்வாக சபையை தங்களுடைய கைக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த வாரத்திலிருந்து அவர்கள் புது பாடத்திட்டத்தை புகுத்தியுள்ளனர், அது டெக்ஸஸ் மாநிலம் மட்டுமன்றி அமெரிக்கா முழுவதும் குழந்தைகள் எப்படி வரலாறு கற்கிறார்கள் என்பதை பாதிக்கலாம்.

கல்வி நிர்வாக சபை, பரந்த மனங்கொண்ட பாடத்திட்டங்களை அகற்ற சம்மதம் தெரிவிக்கும் நிலையிலுள்ளது. அமெரிக்கா, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு, குன்றிலிட்ட தீபமாக உள்ள நாடு, சுதந்திரமான வர்த்தமும், சுதந்திரமும் ஜனநாயகமும் தழைக்கும் நாடாகும் எனப் புதுப் பாடத்திட்டம் விவரிக்கிறது.

“நாங்கள் குழந்தைகளுடைய கல்விக்காகவும், நாட்டின் எதிர்காலத்திற்காகவும் போர்தொடுக்கிறோம்” என்கிறார் டன்பார். தேசப்பற்றையும், சுதந்திர வர்த்தகத்தையும் வளர்ப்பது எங்களது கடமை.
தேசப்பற்று கோட்பாட்டையும், இந்நாடு கடவுளின் கீழ் உருவாக்கப்பட்டது என்பதையும் மறுப்பவர்கள் அதிகம் இருக்கிறார்கள். நாங்கள் அதைத் திருத்த இருக்கிறோம்.

அந்தத்திருத்தங்கள், வரலாற்றைத் திருப்பி எழுதுகிறார்கள், பழமைவாதிகள் தங்களுடைய எண்ணங்களை குழந்தைகள் மேல் திணிக்கிறார்கள் போன்றக் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்துள்ளன.

பல திருத்தங்களுள் ஒன்று, தாமஸ் ஜெபர்ஸனை ஒதுக்கியது ஆகும். தாமஸ் ஜெபர்ஸன், அரசாங்கமும் தேவாலயங்களும் தனித்திருக்க வேண்டும் என விரும்பிய அமெரிக்காவை உருவாக்கியவர்களில் ஒருவர். கறுப்பர் அடிமைத்தனத்தை விரும்பியவர்களை, வரலாற்றில் முக்கியமானவர்களாகவும் இத்திருத்தங்கள் விவரிக்கின்றன.

புதுப்பாடத்திட்டம், “துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கான உரிமை” ஒரு ஜனநாயக நாட்டுக்கு அத்தியாவசமான ஒன்று என்று சொல்கிறது. ஐசக் நியூட்டனைப்பற்றிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, இராணுவ இயந்திரத்திட்டங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

.................

-----------------------------
இப்படி இன்னும் இந்தக்கட்டுரை நீள்கிறது.

அக்னி
17-05-2010, 05:57 PM
தயங்காது, தட்டிக்கழிக்காது இயன்றவரையில் தமிழாக்கம் செய்தமைக்கு நன்றி நண்பரே.
இன்னமும் நான் வாசிக்கவில்லை. வாசித்த பின்னர் அதனைப்பற்றிய கருத்தைப் பதிக்கின்றேன்.
உங்களுக்கு எனது மகிழ்வுப் பரிசாக 1000 இ-பணம் வழங்கிக் கௌரவிக்கின்றேன்.

தமிழோடும் தமிழ்மன்றத்தோடும் என்றென்றும் இணைந்திருங்கள்...

கண்ணன்
17-05-2010, 06:04 PM
உங்களுக்கு எனது மகிழ்வுப் பரிசாக 1000 இ-பணம் வழங்கிக் கௌரவிக்கின்றேன்.

தமிழோடும் தமிழ்மன்றத்தோடும் என்றென்றும் இணைந்திருங்கள்...

மிக்க நன்றி.

அக்னி
27-05-2010, 03:21 PM
தமிழாக்கம் செய்தமைக்கு மீண்டும் ஒரு முறை நன்றியையும்,
இத்தனை தாமதமாக அதனை வாசித்தமைக்கு மன்னிப்பையும்,
தெரிவித்துக்கொள்கின்றேன்...


ஐசக் நியூட்டனைப்பற்றிய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, இராணுவ இயந்திரத்திட்டங்கள் புகுத்தப்பட்டுள்ளன.

நியூட்டனின் அறிவியற் கண்டுபிடிப்புக்கள் பரிச்சயமாகிவிட்டதால்,
அது இனித் தேவையற்ற வரலாறு என நினைத்துவிட்டார்களோ என்னமோ...