PDA

View Full Version : அன்பு மகனுக்கு அம்மாவின் பிறந்தநாள் வாழ்த்து.கீதம்
11-05-2010, 11:27 PM
பூச்சிகளிடத்தில் பிரியமானவனே!
உனக்குப் பூச்சிகளிடம் பிரியமா?
பூச்சிகளுக்கு உன்னிடம் பிரியமா?
இந்த ஆராய்ச்சி எனக்கு!
உனக்கோ...
பூச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சி விருப்பம்!
இவ்வெண்ணம் ஆழமாய் வேர்விட
அப்பூச்சிகளிடம் நீ
கடிவாங்கியதும் காரணமோ?

நடை பயிலும் வயதில்
நெருப்பெறும்புப் புற்றுகள் யாவும்
உனக்கு சஞ்சீவி மலைகள்!
பெயர்க்க முயற்சித்து
பெருமளவில் கடிபடுவாய்!

எத்தனைப் பேர் குழுமியிருந்தாலும்
கொசுப்படையின் வாக்கெடுப்பில் முந்தி நின்று
உன் இரத்தத்தை அவற்றுக்குப்
பந்தி வைப்பாய்!

நாலு வயதில் கோல்கொண்டு
குளவிக்கூடு கலைத்து,
கோபக்குளவிகளின்
ஏராளக்கொட்டுகளைத்
தலையில் வாங்கினாய்!
எப்படியடா கண்ணா,
அந்நச்சு வலியைத் தாங்கினாய்?

அறியாவயதில்
ஓர் அறுவை சிகிச்சை!
அழுகையில்லை;
ஆர்ப்பாட்டமில்லை!
அய்யோவென்று அலறவில்லை;
அம்மாவென்று முனகவில்லை!

வலியோ, உடல்வேதனையோ
வெளிவராமற்செய்து
வண்டுதுளைத்தும் வாய்திறவாக்
கர்ணனை நினைவுறுத்துகிறாய்!

பிடிவாதக் குழந்தைகளை
எங்கேணும் காணநேரிட்டால்
பெருமிதம் கொள்கிறேன், தம்பீ,
உன் பொறுமையை எண்ணி!

அளவுகடந்த அன்பினாலே
அவ்வப்போது என்னருகில் நின்று
கன்னம் உரசிப் பெற்றுச்செல்லும்
அளவிலா முத்தங்களை
அநியாய வட்டியுடன்
அதிவிரைவில் திருப்பித்தருவாய்!

நேற்றுதான் உன்னைத் தொட்டிலில் இட்டுத்
தாலாட்டுப் பாடியதுபோலொரு நினைவு!
நீயோ......
என் தோள்வரை வளர்ந்துநின்று
கால்பந்து விளையாடினேன் அம்மா,
காலில் அடிபட்டுவிட்டது என்கிறாய்!

துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் நிறைந்திருக்க,
பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!

(இன்று தன் பத்தாவது பிறந்தநாளைக் கொண்டாடும் எங்கள் வீட்டுக் குட்டிப்பையன் சூர்யாவுக்காக எழுதியது.)

govindh
11-05-2010, 11:46 PM
சூர்யாவிற்கு தன் தாயிடமிருந்து சுவையான கவி வாழ்த்து....! ஆசீர்வதிக்கப்பட்டவன்.

எங்கள் சார்பிலும்...செல்ல சூர்யாவிற்கு அன்பு வாழ்த்துப் பூங்கொத்துக்கள்..!

விஞ்ஞானியாகி உலகை வெல்க..!
வாழ்க வளமுடன்..!

கீதம்
12-05-2010, 12:09 AM
அன்பான உங்கள் வாழ்த்துக்கும் ஆசிகளுக்கும் என் சார்பிலும் சூர்யாவின் சார்பிலும் நன்றிகள், கோவிந்த்.

Akila.R.D
12-05-2010, 03:50 AM
சூர்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

சிவா.ஜி
12-05-2010, 07:05 AM
இதைவிட அருமையான பிறந்தநாள் பரிசு வேறென்ன இருக்கப்போகிறது. அன்பான அம்மாவின் வாழ்த்துக்கவிதைப் பெற்று, பிறந்தநாளைக் கொண்டாடும் சூர்யா நெடுங்காலம் நலமுடன் வாழ வாழ்த்துக்கள் கீதம் அவர்களே.

கவிதைப் பயணப்பட்ட விதம் மிக அருமை. பல இடங்களில் என் மகனையும் எனக்கு நினைவூட்டின. அன்பான தாயுள்ளத்தின் அழகானக் கவி வெளிப்பாடு மிக பிரமாதம். பாராட்டுக்கள் கீதம் அவர்களே.

அக்னி
12-05-2010, 07:16 AM
கவிதையில் ‘தம்பி’ என்ற வார்த்தை வருகையில்,
‘தம்பி’ என என் அம்மா அழைக்கும் குரல், என் காதில் ஒலித்து விழ,
கண்களில் சலன அலை மெதுவாக...

அவன் வலிகளில் உங்கள் உயிர் துடிக்க,
உங்களை உணர்வதால், அவன் வலி உணரவில்லை போலும்...

தசாப்தம் தொட்ட சூர்யா சகாப்தமாக,
வாழ்த்துகின்றேன்...

muthuvel
12-05-2010, 08:15 AM
நீடுடி வாழவேண்டும் ,திரு.சூர்யா அவர்கள்,
மற்றும் கவிதை அருமை ...

ஆதி
12-05-2010, 08:27 AM
சூர்யாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

சூர்யாவின் செயல்களில் என் பால்யங்களை ஞாபகப்படுத்துகிறது..

பாசமும் பண்பும் இணைந்திருக்க
பகலவன் போலே நீ ஒளிர்ந்திருக்க
வாழ்த்துகிறேன், என் கண்ணே,
பல்லாண்டு நீ வாழி என்று!

இதை வரிகளை கொண்டு நானும் வாழ்த்துகிறேன்..

கீதம்
12-05-2010, 12:03 PM
எங்கள் வீட்டு செல்லப்பையனை வாழ்த்திய அன்புள்ளங்கள் அகிலா, சிவா.ஜி , அக்னி , முத்துவேல், ஆதன் அனைவருக்கும் என் மனங்கனிந்த நன்றி. உங்கள் வாழ்த்துகளையும், ஆசிகளையும் சூர்யாவிடம் சேர்ப்பித்துவிட்டேன்.

அன்புரசிகன்
12-05-2010, 12:19 PM
அட... கொஞ்சம் முன்பாக தெரிந்திருந்தால் வீட்டுக்கு வந்திருப்பேனே...

சூர்யாவுக்கு எனது பிந்திய வாழ்த்தினையும் தெரிவித்திடுங்கள்...

கீதம்
12-05-2010, 12:25 PM
அட... கொஞ்சம் முன்பாக தெரிந்திருந்தால் வீட்டுக்கு வந்திருப்பேனே...

சூர்யாவுக்கு எனது பிந்திய வாழ்த்தினையும் தெரிவித்திடுங்கள்...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி, அன்புரசிகன். அவர்கள் தாத்தா இங்கிருந்தபோதே கொண்டாடிவிட்டதால் இன்று பிரமாதமாய் எதுவும் செய்யவில்லை. அதுவுமில்லாமல் NAPLAN பரிட்சைக்கு மும்முரமாக தயார் செய்துகொண்டிருக்கிறார், சூர்யா.:icon_b:

கலையரசி
12-05-2010, 01:42 PM
சூர்யா குட்டிக்கு அத்தையின் பிறந்த நாள் வாழ்த்து. எல்லா வளமும் உடல் நலமும் பெற்று நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன்.

செல்வா
12-05-2010, 08:52 PM
இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா

தாயின் வாயால் தமிழால் வாழ்த்தப்பெற்ற சூர்யாவை...
தமிழ் மன்றம் வழியாக வாழத்துவதில் பெரும் மகிழ்ச்சி.

அமரன்
12-05-2010, 08:56 PM
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூரியா.

கீதம்
17-05-2010, 01:11 AM
சூர்யா குட்டிக்கு அத்தையின் பிறந்த நாள் வாழ்த்து. எல்லா வளமும் உடல் நலமும் பெற்று நீடுழி வாழ்க என வாழ்த்துகிறேன்.

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி அக்கா.

கீதம்
17-05-2010, 01:12 AM
இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூர்யா

தாயின் வாயால் தமிழால் வாழ்த்தப்பெற்ற சூர்யாவை...
தமிழ் மன்றம் வழியாக வாழத்துவதில் பெரும் மகிழ்ச்சி.

மிக்க நன்றி செல்வா.

கீதம்
17-05-2010, 01:13 AM
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் சூரியா.

வாழ்த்துக்கு நன்றி அமரன்.

simariba
17-05-2010, 01:49 AM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா! அம்மா வின் ஆசியோடு எங்கள் எல்லோரின் வாழ்த்தும் உனக்கு! நலம் பெறுக! வளம் பெறுக! ஆராய்ச்சியாளர் ஆகி வெற்றி பெறுக!

பா.சங்கீதா
17-05-2010, 06:48 AM
சூர்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
எங்களுக்கு சாக்லேட் எங்க??:D :D

கீதம்
19-05-2010, 11:17 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூர்யா! அம்மா வின் ஆசியோடு எங்கள் எல்லோரின் வாழ்த்தும் உனக்கு! நலம் பெறுக! வளம் பெறுக! ஆராய்ச்சியாளர் ஆகி வெற்றி பெறுக!

அன்பான வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி அபி.

கீதம்
19-05-2010, 11:19 PM
சூர்யாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
எங்களுக்கு சாக்லேட் எங்க??:D :D

வாழ்த்துக்கு நன்றி சங்கீதா.

முகவரி கொடுத்தாத்தானே சாக்லெட் அனுப்பிவைக்கமுடியும்?

ரங்கராஜன்
20-05-2010, 04:16 AM
யக்கோவ் நல்ல கவிதை, நல்ல கவிதை என்பதை விட வித்தியாசமான கண்ணெட்டம்............ குழந்தைகளுக்கு பூச்சிகளை கண்டால் ஒரு ஈர்ப்பு இருப்பது உண்மை தான்............. வித்தியாசமான கவிதையுடன் உங்கள் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி இருக்கீங்க........... வாழ்த்துக்கள்........... இதே கவிதையை இன்னும் 8 வருடம் கழி்த்து அவனிடம் கொடுங்கள்.................. அர்த்தம் புரிந்து மிகவும் சந்தோஷப்படுவான்

கீதம்
20-05-2010, 10:02 AM
நன்றி தக்ஸ். நீங்கள் சொன்னதுபோல் எட்டுவருடம் கழித்து, என் மகனிடம் இதைக்காட்டி அந்த உணர்வையும் மன்றத்தில் பதிவிடுவேன். வாசித்து ரசியுங்கள்.

அனுராகவன்
20-09-2010, 07:06 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:p

கீதம்
20-09-2010, 09:40 PM
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.:p

இது பிந்திய வாழ்த்தா? முந்திய வாழ்த்தா? எதுவாக இருப்பினும் என் மகனிடம் உங்கள் வாழ்த்தை சேர்த்துவிட்டேன். மிகவும் நன்றி, அனு.

aren
21-09-2010, 10:17 PM
பிறந்தநாள் முடிந்து சில வாரங்கள் (மாதங்கள்) ஆனாலும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

(அடுத்த பிறந்த நாளுக்கு முதலில் வாழ்த்தியது நான் தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்)

கீதம்
21-09-2010, 10:56 PM
பிறந்தநாள் முடிந்து சில வாரங்கள் (மாதங்கள்) ஆனாலும் என்னுடைய இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.

(அடுத்த பிறந்த நாளுக்கு முதலில் வாழ்த்தியது நான் தான் என்று பெருமையாக சொல்லிக்கொள்ளலாம்)

மிகவும் நன்றி ஆரென் அவர்களே!

காலந்தாழ்த்தி வாழ்த்தினாலும் வாழ்த்து வாழ்த்துதானே!

Ravee
22-09-2010, 01:02 AM
http://www.theoldhambros.co.uk/uploaded_images/candles-happy-birthday-798573.jpg

குழந்தையின் குறும்புகளை ரசிக்கும் தாய் கிடைத்ததில் உங்கள் மகன் உண்மையில் மிகவும் அதிஷ்டசாலிதான் கீதம் . வாழ்த்துக்கள் . :)

கீதம்
22-09-2010, 03:03 AM
உங்கள் கேக் என் மகனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது, ரவி. நன்றி சொல்லச் சொன்னான். வாழ்த்துக்கு நன்றி.

ஆன்டனி ஜானி
04-12-2010, 02:31 PM
குட்டி பையன்
சூரியாவுக்கு இனிய பிறந்த நாள் ,நல்வாழ்த்துக்கள் ......

பாலகன்
04-12-2010, 02:49 PM
டேய் சூர்யா கண்ணா!

நான் தான்டா மகாபிரபு (பெரிய சூர்யா) புது அங்கிள்.

உனக்கு என்னோட அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

கீதாக்கா கவிதை மிக மிக அருமை.


http://t2.gstatic.com/images?q=tbn:Fan2_WiADIaGUM:http://www.spacepimping.com/graphics/myspace-happy-birthday-graphics/HappyBirthday57.gif&t=1


அன்புடன்
மகாபிரபு

கீதம்
05-12-2010, 12:32 AM
குட்டி பையன்
சூரியாவுக்கு இனிய பிறந்த நாள் ,நல்வாழ்த்துக்கள் ......

மிகவும் நன்றி ஆன்டனி ஜானி அவர்களே.

கீதம்
05-12-2010, 12:33 AM
டேய் சூர்யா கண்ணா!

நான் தான்டா மகாபிரபு (பெரிய சூர்யா) புது அங்கிள்.

உனக்கு என்னோட அன்பார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்

கீதாக்கா கவிதை மிக மிக அருமை.


http://t2.gstatic.com/images?q=tbn:Fan2_WiADIaGUM:http://www.spacepimping.com/graphics/myspace-happy-birthday-graphics/HappyBirthday57.gif&t=1

அன்புடன்
மகாபிரபு

சூர்யாவிடம் காட்டினேன், மிகவும் மகிழ்ந்தான். மிகவும் நன்றி மகாபிரபு.