PDA

View Full Version : அப்பா மனது.....!!!



சிவா.ஜி
11-05-2010, 03:32 PM
பிறந்தநாள் துணியெடுக்க
மகளுடன் கடையில்....
விரித்துப்போடப்படும்
விலைகூடிய துணிகளைப் பார்த்து
சட்டைப்பை பணத்தையும்
அட்டை விலை மதிப்பையும்
தொட்டுப்பார்த்து தவிக்கும்,
ஏழை அப்பா மனது....
மகளின் முகப்பிரகாசம் பார்த்து
தெரிந்தவரைத் தேடும்
கடன் வாங்கத் தயாரான
பாச அப்பா மனது.....!!!

கலையரசி
11-05-2010, 04:23 PM
கடன் வாங்கியாவது மகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய எண்ணும் தந்தையின் பாசத்தைச் சொல்லும் கவிதையின் வரிகள் மனதை நெகிழ்ச்சியுறச் செய்து விட்டன. மிகவும் நன்று. பாராட்டு சிவா.ஜி அவர்களே!

சிவா.ஜி
11-05-2010, 04:30 PM
ரொம்ப நன்றி கலையரசி அவர்களே.

அமரன்
11-05-2010, 04:38 PM
அருமை.. பாஸ்.

எங்கள் வீட்டில் பிள்ளைகள் கேட்டதை எப்பாடு பாட்டாவது வாங்கிக் குடுக்கும் ஆண்கள் அதிகம்.

ஆனால் பெண்கள்.. நேரெதிர்..

இந்த விசயத்தில் எனக்கு எப்போதும் வியப்பு.

அம்மாக்களின் இந்நிலைப்பாட்டுக்குக் காரணம் கடன வாங்கினாலும், காசுக் கஷ்டம் ஏற்பட்டாலும் பிள்ளைகள் அதிகம் பாதிக்கபடுவார்களென்ற தூர நோக்காக இருக்குமோ..

சிவா.ஜி
11-05-2010, 04:41 PM
ஆமாம் அமரன் நீங்க சொல்ற அதேக் கதைதான் எங்க வீட்டிலும். காரணம் நீங்க சொன்னதாகத்தானிருக்கும்.

ரொம்ப நன்றி பாஸ்.

பா.ராஜேஷ்
11-05-2010, 05:26 PM
அப்பா மனது அருமையானது... பாராட்டுக்கள் அண்ணா

govindh
11-05-2010, 11:14 PM
மகளின் முகப்பிரகாசம் பார்த்து
தெரிந்தவரைத் தேடும்
கடன் வாங்கத் தயாரான
பாச அப்பா மனது.....!!!

நெஞ்சை அன்பால் வருடும் வரிகள்...
அழகாக சொல்லி விட்டீர்கள்...அருமை.
பாராட்டுக்கள்...

கீதம்
11-05-2010, 11:15 PM
மகளுடைய ஆசையை அவள் பிறந்தநாளில் கூட, நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் தந்தையின் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கும் பாங்கு அருமை. ஒரு அழகிய சிறுகதையை பன்னிரண்டு வரிகளுள் அடக்கி நெகிழ்த்திவிட்டீர்கள்!

மிகுந்த பாராட்டு.

சிவா.ஜி
12-05-2010, 07:07 AM
மிக்க நன்றி ராஜேஷ்.

சிவா.ஜி
12-05-2010, 07:07 AM
மிக்க நன்றி கோவிந்த்.

சிவா.ஜி
12-05-2010, 07:10 AM
அதென்னவோ...அப்பா, மகளின் பாசப்பிணைப்புக்கு ஒரு சிறப்பு இருக்கிறது. மகள் முகம் வாடுவதைக் காண இயல்வதில்லை அப்பாக்களுக்கு.
மனைவியிடம் திட்டு வாங்கியாவது மகள் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முயலும் பாசமுள்ள அப்பா மனது.

உங்கள் பாராட்டுக்கும், மேலான கருத்துக்கும் மிக்க நன்றி கீதம் அவர்களே.

செல்வா
13-05-2010, 12:39 AM
சட்டென்றுதித்த சிந்தனையையும்
நொடிப்போதில் அழகிய கவிதையா
மாத்தின உங்க கவித்திறமைக்கு ஒரு சலாம் :)

இந்த மாதிரி தொடர்ந்து எழுதணும்கிறது எங்க எல்லாரோட விருப்பம்...

ஆமா.... நம்ம கதாகாலட்சேபக் கோஷ்டி கொஞ்ச நாளாக் காணோமே.. நாட்டுல நெறய விசயங்கள் நடந்திருக்கே...

சசி தரூர், மோடி, ஐபிஎல், மருந்து மோசடினு....
கொஞ்சம் இந்தப்பக்கம் வந்துட்டுப்போறது....

சிவா.ஜி
13-05-2010, 07:15 AM
ரொம்ப நன்றி செல்வா.

கதாகாலட்சேபம் தொடங்க நேரமில்ல செல்வா. நான் உபயோகிக்கிற கணினியை இப்ப பங்குபோட்டுதான் உபயோகிக்க வேண்டியதாயிருக்கு. அதனாலக் கணினி முன்னால அதிக நேரம் இருக்க முடியறதில்லை.

இன்னும் கொஞ்சநாள் கழித்துப் பார்ப்போம். நாட்டுல பரபரப்புச் செய்திகளுக்காப் பஞ்சம்.....

பா.சங்கீதா
17-05-2010, 03:10 PM
ரொம்ப நல்ல இருக்கு அண்ணா........
நான் வேற என்ன சொல்ல......
எப்பவும் போல கலக்கிடீங்க :)

அறிஞர்
17-05-2010, 03:11 PM
ஏழை தகப்பனின் மனநிலை வரிகளில்..

அருமை சிவாஜி..

சிவா.ஜி
18-05-2010, 03:24 PM
ரொம்ப நன்றிம்மா சங்கீதா.

சிவா.ஜி
18-05-2010, 03:24 PM
மிக்க நன்றி அறிஞரே.

அக்னி
18-05-2010, 03:42 PM
தவிக்கும் தந்தை மனதைக்
கடைக்கண் பாராமலே புரிந்து,
ஆசை அடக்கி,
கட்டுப்படியாகும் ஆடைகண்டு,
பிரகாசித்தது,
பாச மகளின் முகம்...

உணராதா தந்தை மனம்...
எழும் சோகம் மறைக்கப்
பிரயத்தனம் செய்தது
பாசத் தந்தை முகம்...

ஏழைத் தந்தை மனம் ஊடுருவிப் பார்த்த, அழுத்தமான கவிதை...
தந்த சிவா.ஜிக்குப் பாராட்டு...

அமர பின்னூட்டம் நடப்பைப் பிரதிபலிக்கின்றது. நிஜம்தான்...

சிவா.ஜி
18-05-2010, 03:59 PM
ஆஹா....இப்படியொரு வித்தியாசப் பார்வை பார்க்க அக்னியால்தான் முடியும். அப்பாவின் முக வாட்டம் பார்த்து...தன் முக மலர்ச்சியால் அவரது வாட்டத்தைப் போக்க நினைக்கும் மகள். இதுவும் நன்றாகவே இருக்கிறது.

உண்மைதான் அக்னி...அமரப் பின்னூட்டம் நடைமுறையைப் பிரதிபலிக்கிறது.
பின்னூட்டக் கவிக்கும், மாறுபட்டக் கோணத்திற்கும் நன்றி அக்னியாரே.

muthuvel
19-05-2010, 03:09 AM
அருமை நெஞ்சை தொட்ட கவிதை

samuthraselvam
19-05-2010, 06:32 AM
வாங்கித் தர அப்பா இருக்கும் போது மகளுக்கென்ன கவலை? மகளும் தராமாக பதவி உயர்வு பெற்று அன்னைஎன ஆகும் போதுதான் அதன் பெருமையை உணர்வாள்...

வாழ்த்துகள் சிவா அண்ணா.... நான் கூட இன்னுமும் அப்படிதான்...

அப்பா கடைக்கு வரவே பயந்து கொண்டு அம்மாவை கூட அனுப்பி வைப்பார்..

ஆனால் நமக்கு அப்பா என்ன? அம்மா என்ன?

நினைத்ததை நடத்தியே முடிப்பவள் நான்.... நான்... நான்... (பாட்டு பாடினேன்)

சிவா.ஜி
19-05-2010, 06:50 AM
அய்யோ பாவம் உங்க அப்பா....இப்படியொரு நினைத்ததை முடிக்கும் மகளைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறவரை நினைச்சு சொன்னது அது....ஹி...ஹி..
எல்லா இடத்திலும் இப்படித்தான் போலருக்கு. எங்க வீட்டு மகாராணியும் இப்படித்தான். ஆனா அம்மா மட்டும் கூட வரக்கூடாது....!!! பட்ஜெட் பத்மநாபி அவங்க. அப்பான்னா ஈஸியா தலையில மொளகா அரைக்கலாம்( ம்....நீங்க நெனைக்கறது புரியுது)

நன்றி லீலும்மா.

(அதுசரி என்னதிது....இப்பல்லாம் அடிக்கடி மன்றத்துலருந்து காணாமப் போயிடறீங்க.....இது நல்லால்ல...ஆமா...)

அக்னி
19-05-2010, 07:32 AM
அப்பான்னா ஈஸியா தலையில மொளகா அரைக்கலாம்( ம்....நீங்க நெனைக்கறது புரியுது)

:D :grin:
நோ காமெண்ட்ஸ்... :icon_ush:
:medium-smiley-002:

சுடர்விழி
19-05-2010, 08:28 AM
அருமையான கவிதை ....ஏழை அப்பாவின் மனநிலையை இத்தனை சுருக்கமான வரிகளுக்குள் அழகாக சொல்லி இருக்கீங்க.....பாராட்டுக்கள்

சிவா.ஜி
19-05-2010, 09:26 AM
ரொம்ப நன்றிங்க சுடர்விழி.