PDA

View Full Version : ரசித்த ஜென் கவிதைகள் (ஹைகூக்கள்)



ஆதி
10-05-2010, 12:50 PM
இவ்வுலகில் தோன்றிய பல ஆன்மீக தத்துவங்களில் ஜென்னும் ஒன்று..

தாவ் என்னும் மதத்தில் இருந்தே ஜென் தோன்றியதாக கூறுவார்கள்..

தாவ் மனிதனும் இயற்கையும் இணக்கமாக வாழ்வது என்பதே இதன் கருத்து. தாவ் மதத்தை ஆரம்பித்தவர் சாங்லிங் என்பவர்.

ஜென், தாவ் மதத்தில் இருந்து தோன்றியதென்று கூறினாலும்..

தியானம் - தியான் - ஜென் என்னும் ஓஷோ, ஜென் இந்திய ஆன்மீக தத்துவங்களில் இருந்தே பிறந்ததாக கூறுகிறார்..

எனக்கு ஓஷோவின் கருத்தில் உடன்பாடு இல்லை, தியானம் என்பது எல்லா ஆன்மீகவாதிகளுக்கும் பொதுவானது..

இந்திய ஆன்மீக மேதைகளால் கற்பிக்கப்பட்ட குண்டலினி என்பதே முழுதாக இந்தியாவில் தோன்றிய ஒன்றல்ல..

7 குண்டலினிகளில் 2 மட்டுமே நாம் அறிந்தது, மற்ற 5-ல் 2 கிறிஸ்துவர்களிடம் இருந்தும், 3 சூஃபிகளிடம் இருந்தும் பெற்றவை..

அதாவது இந்த தியானம் என்பது இந்தியாவில் மட்டும் தோன்றிய ஒன்றல்ல, அது உலகளாவி பரந்த ஒன்று..

அப்படி இருக்க ஜென் - தியான் என்பதெல்லாம் சொல்வதற்கு அழகாக இருக்குமே அன்றி, ஏற்க கூடியதல்ல..

நம் ஆன்மீகத்திற்கு இருக்க கூடிய பெரும் சிறப்பென்ன வென்றால், தியானத்துக்கென்று நம்மிடம் உபநிஷங்கள் இருக்கின்றன, இவைப் போன்ற நூல்கள் மற்ற மதங்களில் இல்லை..

அஸ தோமா சத் கமய
தம ஸோமா ஜோதிர் கமய
மிருத் யோமா அமிர்தம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்

இந்த உபநிஷ மந்திரமானது எல்லா ஆன்மீக கொள்ளைகளுடனும் ஒற்றுப் போகிறது..

அஸ தோமா சத் கமய

பொய்மையில் இருந்து என்னை மெய்மைக்கு அழைத்து செல்வாயாக

தம ஸோமா ஜோதிர் கமய

இருளில் இருந்து என்னை வெளிச்சத்துக்கு அழைத்து செல்வாயாக

மிருத் யோமா அமிர்தம் கமய

மரணத்தில் இருந்து மரணமற்ற நிலைக்கு என்னை அழைத்து செல்வாயாக


இதைத்தான் அனைவரும் தேடுகிறோம்.. இந்த நிலையை அடைய துறவிகள், காடு சென்று தவமிருந்தார்கள் என்கிறோம்..

இதைத்தான் ஜென்னும் தன் மூன்று பண்புகளாக கூறுகிறது. மௌனம், தனிமை, ஏற்புத்தன்னை.

மௌனம் - தவம்

தனிமை - காடு புகல்

ஏற்புத்தன்மை - விழிப்புநிலை

இப்படித்தான் ஓப்பீடு செய்துக் கொள்கிறேன் நான்..

ஏற்புத்தன்மை

இதனை பெரும் ஆன்மீகவாதிகள் எல்லோரும் நமக்கு போதித்திருக்கின்றனர்..

அஸ தோமா சத் கமய இந்த வரிக்கும் ஏற்புத்தன்மைக்கும் ஓற்றுமைகள் உண்டு..

இந்த வாழ்வில் நிகழும் ஒவ்வொன்றும் எனக்கானது, என்னுடையது, நான் சந்திக்க வேண்டியது என்னும் விழிப்பு நிலையை தருவது..

ஒரு இன்பத்தில் இருந்து நம்மால் எப்படி விலகி நிற்க இயலாதோ அவ்வாறே ஒரு துன்பத்தில் இருந்தும் நம்மால் விலகிவிட இயலாது, வாழ்க்கை உனக்கு பரிமாறும் ஒவ்வொன்றையும் ருசி, அது உனக்கானது, எதை நாம் சுவைக்க மறுக்கிறோமோ, அதனை நாம் இழக்கிறோம், அதனால் நாம் இழப்பது வாழ்வையும் தான்..

இதுதான் ஏற்புத்தன்மையின் அடிப்படைத் தத்துவம் என்றாலும், ஏற்புத்தன்மை என்னும் பண்பில் பல உட்பொருள்கள் உண்டு..

அதாவது "நீ நீயாய் இருத்தல்" என்பதும் "நான் நானாய் இருத்தல்" என்பதும் "நாம் நாமாய் இருத்தல்" என்பதும் இந்த ஏற்புத்தன்மையின் உட்பொருளாகும் ( நன்றி தாமரையண்ணா)

புத்தம் என்பது புத்தனாய் வாழ்த்தல் என்பார்கள்..

ஆனால் நான் நானாய் வாழும் பொழுது புத்தனாய் வாழ இயலாதுதானே..

புத்தனை எனக்குள் உயிர்ப்பித்து, புத்தனை எனக்குள் வாழ்வித்தாலும் நானாய் வாழ இயலாதுதானே..

புத்தன் என்பவன் ஒரு வாசல், ஒரு வாசலின் வழியாக நான் உள்ளும் நுழையலாம், வெளியும் போகலாம், உள் நுழைத்தல் என்பது என்னுள் ஆழ்ந்து போதலாகவும், வெளியே செல்வது என்பதை நானல்லாதவைகளில் இருந்து வெளியேறுவதாகவும் கருதுகிறேன்..

என்னுள் ஆழ்ந்து போகும் போதோ, நானல்லாதவைகளில் இருந்து நான் வெளியேறும் போதோ நான் கலப்படமற்ற நானாக இருக்கிறேன்..

நான் நானாகவும், நீ நீயாகவும் இருத்தல் என்பது யாவரும் சமம் என்பதையும் காட்டுக்கிறது..

யாவரும் சமம் எனும் போது, இறைவனும் நாமும் கூட சமம் தானே ?

எங்கும் இறைவன் நிறைந்திருக்கின்றான் என்றால், எங்கும் நானும் நிறைந்திருக்கிறேன் தானே ?

இந்த சிந்தனையோடு இரு கவிதைகளை பார்ப்போம்..

பழைய வீடு
ஊர்ந்து செல்கிறது நத்தை
புத்தனின் முகம்..

----------

பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்

தொடரும்..

செல்வா
10-05-2010, 01:25 PM
கவிதை என்ற பெயரில் ஏதோ கிறுக்குவதோடு எனது கவிதைசார்ந்த வாழ்வு நின்று விடுகிறது.

இது கவிதை எழுதும் பலராலும் முடிகிற ஒன்று.

அதையும் தாண்டி கவிதையைக் கற்பது என்பது.... மிகச் சிறந்த ஒன்று.

இவற்றை எளிமைப்படுத்தி தமிழில் பதிவதால் இவற்றைக் கற்கும் ஆர்வத்தை எனக்குள்ளும் விதைக்கிறாய்.

கற்றுக்கொடு
கற்றுக் கொள்கிறேன்.

ஆதி
10-05-2010, 03:59 PM
ஊக்கத்திற்கு நன்றி டா..

ஜென் கவிதைகளை முன்பெல்லாம் படிப்பதோடு சரி, சில புரியும், சில புரியாது, நானும் புரியாததை பொருட்படுத்தாமல் அடுத்த கவிதைக்கு நகர்ந்துவிடுவேன், புரிந்தவைகளையும் பெரிதாக யோசிக்க மாட்டேன்..

சமீபமாய் ஜென் தத்துவங்களில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது, அதனால் ஜென் மற்றும் ஹைகூ கவிதைகளை மீண்டும் வாசிக்க நேர்ந்தது, அன்று புரியாத கவிதைகள் இன்று புரிய ஆரம்பித்திருக்கின்றன, அந்த அனுபவம் சற்று வித்யாசமானதாய் இருக்கிறது.. அதை மற்றவர்களோடு பகிர்ந்து கொண்டு, மற்றவர்களின் கருத்துக்களையும் பகிரப்படும் போது இன்னும் ஆழமான புரிதல் ஏற்படும் என்னும் சுயநலத்தோடுமே இந்த திரியை துவங்கி இருக்கிறேன்..

அறிஞர்
10-05-2010, 04:05 PM
ஜென் பற்றிய புதிய தகவல்கள்.. நன்றி ஆதன்..

கீதம்
10-05-2010, 10:31 PM
இதுவரை அறிந்திராத பல நுட்பங்களை அறியத் தருகிறீர்கள்.
தொடருங்கள் உங்கள் கற்பித்தலை!
சிறு குழந்தையென கரம் பற்றி கூடவே நடக்கிறோம்.

govindh
11-05-2010, 12:04 AM
ஜென் தத்துவங்கள் போதிக்கும் ஆசான் ஆதன்
அவர்களுக்கு மிக்க நன்றி...!

தொடருங்கள்....தொடர்கிறோம்...!

பாபா.ஜி
11-05-2010, 05:50 AM
ஜென், உபநிடதம் போன்ற அருமையான விஷயத்தை எடுத்து அலசியதிற்கு பாராட்டுக்கள் ஆதன்.

ஜென் கவிதைகள் / தத்துவங்கள் பற்றி வேடிக்கையாக சொல்வதுண்டு. புரியாததை புரியவைக்க முனைந்து மேலும் புரியாமல் ஆக்குவது என்று.

பதினைந்து வருஷங்களுக்கு முன்னரே ஜப்பானிய மற்றும் சில வட இந்திய நண்பர்களோடு இதில் ஒரு நேரடியாக ஒரு ரவுண்டு இறங்கி பார்த்து இருக்கிறேன்.

ஜென் விஷயங்களை பற்றி (ஓஷோ, சாக்கியமுனி, டாக்டர் ருத்ரன், மேலும் சிலர் என்று) பலரின் சிந்தனைகளை புரட்டி பார்த்தாலும், இறுதியில் சொல்வது ஒன்றுதான். அது

‘இந்த கணத்தில் வாழ்’ என்பதுதான்

ஜப்பானில் ஜென் டீ மெடிட்டேஷன் கேள்விப்பட்டு இருப்பீர்கள், ஒரு கப்பில் டீயை ஊற்றி, ஓவ்வொரு சொட்டையும் ரசித்து ருசித்து குடிப்பார்கள். அதே போல வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் - ஒவ்வொரு செயலையும் ரசித்து வாழுங்கள் என்பதுதான் ஜென்னின் அடிப்படை தத்துவம்.

நாளையை பற்றி கவலையோடு, பல வருஷத்துக்கு இப்பவே ‘ப்ளான் பண்ணி’ வாழும் காலகட்டத்தில் இருக்கும் என்னை போல எந்திரனுக்கு, இப்போதைக்கு ஜென்னை கவிதையாக மட்டும் ரசிக்க முடிகிறது.

உங்கள் தேடலுக்கு வாழ்த்துக்கள் !

ஆதி
11-05-2010, 12:38 PM
இதுவரை அறிந்திராத பல நுட்பங்களை அறியத் தருகிறீர்கள்.
தொடருங்கள் உங்கள் கற்பித்தலை!
சிறு குழந்தையென கரம் பற்றி கூடவே நடக்கிறோம்.

அக்கா, நுட்பங்களை அறிய தருகிறேனா என்றெல்லாம் அறியேன்..

எனக்கு புரிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.. எழுத எழுத எழுத்து பெருகேறும் எனும் நம்பிக்கையுடன்..

நானும் சின்ன குழந்தை தானுங்க அக்கா, ரொம்ப ரொம்ப சின்ன குழந்தை :)

ஊக்கத்திற்கு நன்றிங்க அக்கா..

ஆதி
11-05-2010, 12:41 PM
ஜென் தத்துவங்கள் போதிக்கும் ஆசான் ஆதன்
அவர்களுக்கு மிக்க நன்றி...!

தொடருங்கள்....தொடர்கிறோம்...!

மாணவன் தான் நானும், ஜென் பேராழியின் கரைகள் மணலில் நிற்பவன் தான் நான், அலைகளின் ஈரசுகம் கூட அறிந்தவனில்லை..

ஊக்கத்திற்கு நன்றிங்க கோவிந்..

ஆதி
11-05-2010, 12:47 PM
ஜென் விஷயங்களை பற்றி (ஓஷோ, சாக்கியமுனி, டாக்டர் ருத்ரன், மேலும் சிலர் என்று) பலரின் சிந்தனைகளை புரட்டி பார்த்தாலும், இறுதியில் சொல்வது ஒன்றுதான். அது

‘இந்த கணத்தில் வாழ்’ என்பதுதான்



ஜென்னை தத்துவமாக பார்த்தால், சத்தியமாய் புரியாது.. ஜென்னை வாழ்க்கையாக பார்த்தால் புரியும்..

ஜென்னை எப்படி அடைவது ? என்று கேட்டால்

பதில் இதுதான், ஜென்னை அடைய முடியாது, அது நம்மை சுற்றி, நம்முடன், நமக்குள் இருக்கிறது, அதை நாம் கண்டு கொள்ள வேண்டும்..

இந்த கணம் வாழ் என்பது ஜென்னுக்கு மட்டுமல்ல எல்லா ஆன்மீக வழிகளுக்கும் பொருந்தும்..

ஊக்கத்திற்கு நன்றி எந்திரன்..

ஆதி
11-05-2010, 01:11 PM
ஜென் தத்துவங்களில் மீண்டும் ஈடுபாடேற்பட்டதிற்கு பெரும் காரணமாய் அமைந்தது, ராஜ சந்திரசேகர் அவர்களின் இந்த கவிதை..

அதுவாகத்தான் இருக்கிறது
ஆமை நாம் தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

இந்த கவிதைக்கும் ஜென்னுக்கும் பெரும் தொடர்ப்பு இருக்கிறது தானே ?

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை(நவீனத்துவம்)
அவளுக்கு யாரும் இணையில்லை(ஜென்) - அவளை அவளாக காண்பது, யாரோடும் எதனோடும் ஒப்பிடாமல்..

செல்வா
11-05-2010, 01:54 PM
மேலே... சுட்டிக்காட்டிய இரு உதாரணங்களும் எளிமையாக புரிந்து கொள்ளும் படி இருக்கு...

நீ நல்ல தமிழாசிரியராப் ஆகியிருக்க வேண்டியவன்.

பாபா.ஜி
12-05-2010, 05:21 AM
ஜென்னை தத்துவமாக பார்த்தால், சத்தியமாய் புரியாது.. ஜென்னை வாழ்க்கையாக பார்த்தால் புரியும்..

ஜென்னை எப்படி அடைவது ? என்று கேட்டால்

பதில் இதுதான், ஜென்னை அடைய முடியாது, அது நம்மை சுற்றி, நம்முடன், நமக்குள் இருக்கிறது, அதை நாம் கண்டு கொள்ள வேண்டும்..

இந்த கணம் வாழ் என்பது ஜென்னுக்கு மட்டுமல்ல எல்லா ஆன்மீக வழிகளுக்கும் பொருந்தும்..

ஊக்கத்திற்கு நன்றி எந்திரன்..ஜென்னை மட்டுமல்ல, எந்த தத்துவத்தையுமே அடைய முடியாது அதனால்தான் அது தத்துவம் என்று அழைக்கப்படுகிறது :cool:

எதையுமே வலிந்து திணிக்காமல், ஒரு விஷயத்தை அதன் போக்கிலேயே விட்டு ரசிப்பதும் ஜென் தான். நீங்கள் பதிந்த,

அதுவாகத்தான் இருக்கிறது
ஆமை நாம் தான்
மெதுவாக என்று
குறியீடு செய்கிறோம்

கவிதை, அதற்கு ஒரு அற்புதமான உதாரணம்.

அதேபோல ஒரு செயலை செய்யும்போது, அதில் முழுமையாக ஈடுப்பட்டு, விளைவில் வாழாமல் அந்த செயலின் கணத்தில் வாழ்வதும் ஜென் தான்.

நீங்களே சொன்னது போல பல ஆன்மிக தத்துவங்களும் போதிப்பது இதைத்தான். அப்பிடி வாழ்ந்த கணத்தில் அந்த செயலே எதிர்பாராத ஒரு விளைவை குடுப்பதுண்டு, சில சமயம் பரவச நிலைக்கும் கூட இட்டு செல்வதுண்டு.

ஜென்னை விளக்க முடியாது, தேடவும் முடியாது, தேடாமல் கிடைக்கும் அனுபவமே ஜென். இதுதான் என் அனுபத்தில் அறிந்த உண்மை.

உங்கள் சிந்தனைகள் என்னை பழைய அனுபவங்களுக்கு கூட்டி சென்று, பரவப்படுத்துகிறது.

மேலும் தொடருங்கள் ஆதன், இனிமேல் இடையூறு செய்யாமல் வெறுமனே ரசிக்கிறேன். (இதுவும் ஜென் தான் :D)

ஆதி
12-05-2010, 04:49 PM
//
ஜென்னை விளக்க முடியாது, தேடவும் முடியாது, தேடாமல் கிடைக்கும் அனுபவமே ஜென். இதுதான் என் அனுபத்தில் அறிந்த உண்மை//

இதைத்தான் எல்லா ஜென் குருக்கள் போதிக்க முயன்றார்கள்.. இதை உணர்ந்தவர்கள் தான் விழிப்புனர்வு அடைந்தார்கள், ஜென்னாக வாழ்ந்தார்கள்..

பாபா.ஜி
13-05-2010, 05:41 AM
இதை உணர்ந்தவர்கள் தான் விழிப்புனர்வு அடைந்தார்கள், ஜென்னாக வாழ்ந்தார்கள்..ஆனால் நான் ஏன் ஜென்னாக வாழாமல், மன்னாக வாழ்கிறேன். விழிப்புணர்வு பத்தல போல !:)

போதததிற்கு வேலையில் எம்மை எந்திரமாக வேறு மாற்றி விட்டார்கள். இப்போது ஜென்னை காராக கூட நான் பார்ப்பதில்லை.

ஆதி
13-05-2010, 07:12 AM
ஆனால் நான் ஏன் ஜென்னாக வாழாமல், மன்னாக வாழ்கிறேன். விழிப்புணர்வு பத்தல போல !:)

போதததிற்கு வேலையில் எம்மை எந்திரமாக வேறு மாற்றி விட்டார்கள். இப்போது ஜென்னை காராக கூட நான் பார்ப்பதில்லை.

தேவைகள் எனும் சுற்றுச்சுவர்களை நம்மைச் சுற்றி எழுப்பி வைத்திருக்கிறோம், அவைகளை தகர்த்து நம்மால் வெளியேறவும் முடியவில்லை, அதனுள்ளேயே வசித்து இன்பம் துய்கவும் இயலவில்லை..

ஆதி
13-05-2010, 07:49 AM
இன்னும் நான் ரசித்த, மொழி பெயர்த்த ஹைகூக்கள்..

சூஃபி கவிதைகளை மொழி பெயர்க்கும் போது இருந்த, அச்சத்தையும், தயக்கத்தையும் விட அதிகமான அச்சம் இருந்தது ஹைகூக்களை மொழி பெயர்கையில், ஜென்னை அறிமுக செய்து வைத்த, இன்னும் ஆழமாய் அறிந்த நண்பர்களிடம் காண்பித்தேன், அவர்கள் மொழி பெயர்ப்பில் குறை எதுவும் இருப்பதாக தெரியவில்லை என்று சொன்னார்கள், அந்த தைரியத்தில் இங்கே பதிக்கிறேன், குறை இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன்..


வெயிற்கால புற்கள்
யாவும் மீந்திருக்கின்றன
போர்வீரனின் கனவில்.. - பாஷோ

ஒருத்தரும் செல்ல
துணியவில்லை இப்பாதையில்
இலையுதிர்கால மாலையில்.. - பாஷோ

மிக தனித்திருக்கிறேன்
இச்சலந்தியையும் கொன்றப்பின்
பனிகால இரவில்..-ஷிகி

அமரன்
13-05-2010, 08:27 AM
நல்ல கொடி ஆதன்..

படிக்கும் போதே ஆன்மீக நெடியும் வாழ்க்கை நெறியும் கலந்து மூச்சைத் துளைத்து ஊளைகளை அறுத்தெறிகின்றன.

ஆனாலும் ஆரோக்கியத் தேவை சில பல கேள்விகளை எழுப்பாமல் இல்லை.

`ஜென்`னல் திறக்காத என்னால் தென்றலை தீண்டவில்லை என்று அழத் தகுதி இல்லை.

ஒரு வேளை ஜென்னை விளக்க நீங்கள் கொடுத்த கவிதைகளை இன்னும் சற்றுத் தேய்த்தால் நான் துலங்குவேன் என்றே எண்ணுகிறேன்.

இப்படியான திரிகளை காணும்போதெல்லாம் ஒரு ஜோடி கண்கள் எதிரில் வந்து சிமிட்டும். அது தைரியம் தரும் என்பதும் மிகையில்லை.:)

கீதம்
16-05-2010, 01:03 AM
கவிதைகள் ஒவ்வொன்றும் மனதில் ஒரு தாக்கத்தை உண்டாக்குகின்றன. சொல்லத்தெரியவில்லை. ஆனால் எதுவோ புரியத்துவங்குகிறது. உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த பாராட்டுகள் ஆதன்.

ஆதி
24-05-2010, 08:44 AM
பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்


இந்த கவிதையில் நான் உணர்ந்து கொண்டது என்ன வென்று சொல்ல விழைகிறேன்..

அவரவர் மனநிலைக்கேற்ப கருத்துக்கள், கோணங்கள் மாறும்..

என் புரிதல் இதுதான்..

இந்த கவிதை ஹைகூ கவிதையின் பேராசான் பாஷோவால் எழுதப்பட்ட கவிதை, பாஷோவுக்கு பிறகு ஹைகூ கவிதைகளே எழுதப்படவில்லை என்றும் சொல்கிறார்கள்.. காரணம் ஹைகூவி இலக்கணத்தை யாரும் முழுதாக பின் பற்றவில்லை என்பது ஒரு வாதமானாலும், ஹைகூ கவிதைக்காக வீச்சும் இல்லை என்பது இன்னொரு வாதம்..

தமிழில் ஹைகூ குறித்து எண்ணற்ற ஆய்வுகள் நிகழ்ந்திருக்கின்றன, நிகழ்கின்றன.. ஆய்வறிக்கை சமர்ப்பித்த ஒவ்வொருவரின் கருத்து ஒவ்வொரு மாதிரி இருக்கின்றது.. ஆதாவது ஹைகூவை ஆய்வு செய்தவர்களின் ஹைகூ குறித்த புரித்தல்கள் ஒரு பட்டில்லை..

ஆனாலும் அவர்களின் ஆய்வு நூல்களில் இருந்து பல அரிய தகவல்களை பெற இயல்கிறது..

சரி இந்த பாஷோவின் கவிதையை பற்றி பார்ப்போம்..

ஹைகூ விதிப்படி ஒரு காட்சியை பாஷோ அப்படியே பதிவு செய்திருக்கிறார்.. இந்த கவிதைக்கான உண்மையான பொருள் இந்த கவிதையை அவர் வடிக்கும் போது அவரின் பக்கத்தில் இருந்திருந்தாலோ, அல்லது பாஷோவாக இருந்திருந்தாலோ மட்டுமே அறிந்திருக்க முடியும்.. மற்றப்படி சொல்லும் கருத்துக்கள் எல்லாம் நம் மனதுக்கு தோன்றும் கருத்துக்களே....

பழைய குளம் என்பதை நான் வாழ்க்கையாக எடுத்துக் கொள்கிறேன்..

இந்த வாழ்க்கை பழையதுதானே பலர் வாழ்ந்தது, பலர் வாழ்ந்து கொண்டிருப்பது, பலர் வாழவிருப்பது..


குளத்தில் தவளை குதித்தது தண்ணீர் சத்தம் என்பதன் மூலம், குளம் முன்பு அமைதியாக இருந்திருக்க வேண்டும்.

அமைதியான ஒரு வாழ்வில் திடீரென்று ஒரு பெரும் துயரோ, சோதனையோ, மகிழ்ச்சியோ உண்டாகும் போது வாழ்வும் இந்த குளம் மாதிரித்தான் அமைதி இழக்கிறது, ஆர்ப்பறிக்கிறது..

பிறகு அந்த குளம் அமைதியாகி இருக்க வேண்டும்..

குளத்தோடு தவளையும் ஒன்றாகி இருக்க வேண்டும்.. அப்புறம் தவளை குளத்துக்குண்டானதாய் மாறிவிடுகிறது..

நம் வாழ்வில் நிகழும் நேர்ச்சிகளும் அப்படித்தான் நம்முடையதாய் ஆகிவிடுகிறது, அந்த நேர்ச்சியை, அந்த நிகழ்வை நாம் விரும்புகிறோமோ இல்லையோ, அது நமக்குண்டானது, நம்முடையது என்றாகிவிடுகிறது.. மீண்டும் அந்த தவளை குளத்தில் இருந்து வெளியேறவும் செய்யலாம், அப்போதும் அந்த குளம் கொஞ்சம் அமைதி இழக்கலாம், மீண்டும் தவளை குதிக்கலாம், குளம் சபத்திக்கலாம்.. குளத்திலும், வாழ்விலும் இது தொடரும் நிகழ்வுதான்..

பாரதி
09-06-2010, 03:28 PM
மிக தனித்திருக்கிறேன்
இச்சலந்தியையும் கொன்றப்பின்
பனிகால இரவில்..-ஷிகி


சலந்தி - பொருள் எனக்கு விளங்கவில்லை ஆதன். அதே போல "கொன்ற பின் பனிக்கால இரவில்" என்றால் ஒரு பொருளும், "கொன்ற பின்பனிக்கால இரவில்" என்றால் வேறுபட்ட பொருளும் வரக்கூடும். என் புரிதல் சரியா..?


பழைய குளம்
குதித்தது தவளை
தண்ணீர் சத்தம்

நீண்ட வருடங்களுக்கு முன்பு ஹைக்கூவை மறைந்த சுஜாதா அவர்களின் எழுத்தில் வாசித்தது நினைவுக்கு கொண்டு வந்தது இக்கவிதை. விளக்கம் படிப்பவர் மனதைப் பொறுத்து அமையும் என விளக்கியது மிகவும் நன்று. நன்றி.
தொடர்ந்து எழுதுங்கள்.

ஆதி
27-07-2010, 01:21 PM
சலந்தி - பொருள் எனக்கு விளங்கவில்லை ஆதன். அதே போல "கொன்ற பின் பனிக்கால இரவில்" என்றால் ஒரு பொருளும், "கொன்ற பின்பனிக்கால இரவில்" என்றால் வேறுபட்ட பொருளும் வரக்கூடும். என் புரிதல் சரியா..?


மிக தனித்திருக்கிறேன்
இச்சலந்தியையும் கொன்றப்பின்
பனிகால இரவில்..-ஷிகி

அண்ணா, ஜென்னின் பண்புகளான தனிமையைப் பற்றியக் கவிதை இது..

இந்த கவிதை தனிமைத் துயரைப் பற்றியது, ஜென் மௌனம், தனிமை, ஏற்புத்தன்மை எனும் பண்புகளைப் பற்றி பேசினாலும், பெரும்பாலான ஜென்கள் தனிமையை துயர் மிகுந்த கணங்களாகவே பாடி இருக்கிறார்கள்..

ஜென்னின் தனிமை, ஏற்புத்தன்மை எனும் இருப்பண்புகளையும் ஏற்க இயலாத இவர் ஜென்னாக இருக்க இயலாது என்று என்னத் தோன்றுகிறது..

உங்கள் புரிதல் சரிதான் அண்ணா..