PDA

View Full Version : ஒலிமாசு!குணமதி
09-05-2010, 05:08 PM
ஒலிமாசு!


மாசு, மாசு, ஒலிமாசு!

எங்கெங்கும்!

தெருவில், திரளான கூட்டத்தில்

அங்காடியில், அரங்கங்களில் மட்டுமல்ல...

பல்வேறு கோயில்களில்

பள்ளிவாசல்களில்

பணஞ்செலவிட்டுக் கூட்டும் நற்செய்திக் கூட்டங்களில்

-என எங்கெங்கும்!

பா.ராஜேஷ்
09-05-2010, 05:19 PM
உண்மைதான், மெல்லிசை விடுத்து இரைச்சலை கேட்க நேரிடுகிறது ...

குணமதி
10-05-2010, 02:42 AM
உண்மைதான், மெல்லிசை விடுத்து இரைச்சலை கேட்க நேரிடுகிறது ...

நன்றி.

nambi
10-05-2010, 04:42 AM
நகரங்களில ஒலி மாசாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் கிரமாங்களில் அவ்வாறு எடுத்து கொள்ளப்படுவதில்லை. ஒரு சமூகத்திற்கும் இன்னொரு சமூத்திற்கும் உள்ள இடைவெளி மிகத்தள்ளியே இருக்கும் இவர்களுக்கு தெரிவிப்பதற்காகவே ஒலியை அழைப்பான்களாக மக்கள் பயன்படுத்தினர். திருவிழா நடக்கிறது என்றால் அடுத்து தள்ளி உள்ள கிராம மக்களை ஒன்று திரட்டுவதற்காக இந்த அழைப்பான்களே பயன்பட்டது. இன்னும் பயன்பட்டு வருகின்றது.

ஒலியை மொத்தமாக வெறுத்து வாழ்க்கையில் மயான அமைதியை ஏற்று கொள்வதும் சரியல்ல. வாழ்க்கையின் சுவாரசியம் கெட்டு விடும். எதுவுமே எல்லை மீறினால் ஆபத்து தான். அமைதி உடபட. வயதிற்கேற்ப இதை ஏற்றுக்கொள்வதின் தன்மை மாறுபடும்.

திருமணம் என்றால் கிராமங்களில் இல்லங்களில் தான் அநடைபெறும். கிராம மக்கள் அனைவரும் பக்கத்தூரில் இருந்து எல்லாம் வருவார்கள். அழைப்பிதழே ஒலியழைப்பான்கள் தான். வந்து சாப்பிட்டுவிட்டு மொய் எழுதிவிட்டு செல்வார்கள். இன்னும் மொய்விருந்து நடைபெறுவதை காணலாம்.

நகரத்தில் எல்லாமே இடப்பற்றாக்குறை, அனைவரும் நெருங்கியிருப்பதால் ஒன்று சேர்க்கப்பட்ட குறையொலிகள் கூட அதிக ஒலியுடன் மாசை ஏற்படுத்துகிறது.

திரைப்படம் அறிமுகப்படுத்துபட்ட காலத்திலிருந்து, இன்றும் கிராமங்களின், திரைக்கொட்டகையில் உச்சியில் ஒலிப்பான்களை கொண்டு பாடல்கள் ஒளிபரப்புவார்கள், அப்படியென்றால் திரைப்படம் ஆரம்பிக்கப்போகின்றது என்று பொருள். இதைக் கொண்டு மக்கள் திரையரங்குக்கு புறப்பட்டு செல்வார்கள். இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

திருமணத்தில் நடைபெறும் சடங்குகள் ஆங்காங்கே உட்கார்ந்து கொண்டிருப்பவர்கள் அறிவதற்காக ஒலிப்பான்கள் மூலம் ஒலிபரப்புவார்கள். இருந்த இடத்திலிருந்து கேட்டறிந்து கொள்வார்கள். திருமணங்கள் சத்திரத்தில் நடைபெறுவதில்லை. இல்லத்திலேயே தான், அதனருகில் உள்ள காலி மைதானத்தில் தான் நடைபெறும். காவல் துறையும் அரசும் இந்த ஒலிப்பான்கள் ஒலிக்கவேண்டிய அளவுகளுக்கு இடத்திற்கேற்றாற்போல் கட்டுப்பாடு வைத்துள்ளது. அதை முன் அனுமதி பெற்றே ஒலிபரப்ப வேண்டும். நகரங்களில் ஒலிப்பது ஒரு அளவீட்டிலும், கிராமங்களில் கூடுதலாக ஒலிக்கக்கூடிய அளவீடுகளில் பயன்படுத்த கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஒலி தேவைதான் அது கட்டுப்பாட்டுடன். இதுவும் சமூகத்தின் ஒரு அங்கம் தான். இவற்றை தவிர்த்து மயான அமைதியை எவரும் விரும்புவதில்லை. ஒரு வீட்டில் குழந்தைகள் சத்தமிட்டு விளையாடுவது சிலருக்கு எரிச்சலை தரும். வயதானவர்கள் இது மாதிரி விளையாடும் சிறுவர்களை ஊக்குவிப்பார்கள். அமைதியாக குழந்தையை விளையாட சொன்னால் விளையாடாது. குழந்தைகளின் ஆட்டம் பாட்டம் அதனால் எழும்பும் சத்தம் அந்த இல்லத்தின் கலகலப்பு அதிமாகிறது.

மனிதன்.... எந்திரம், கணிணி, சம்பாத்யம, முன்னேற்றத்திற்கான போராட்டம் இதையே பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையின் பலவிஷயங்களை அனுபவிக்கமால் தவிர்க்கிறான். அப்படி அனுபவிக்கமல் தவிர்க்கப் பட்டபிறகு எல்லா சத்தங்களும் அவனுக்கு எரிச்சலாகவும் மாறுகிறது. குழந்தைகள் அழுவது உட்பட. இப்படித் தனிமைப்பட்டு வாழும் வாழ்க்கையே தேவையில்லை என்று ஒரு நாள் அவர்களே உணர்கின்ற சூழல் ஏற்படும்.

ஒலி தேவை அளவுடன். தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளினால் சில சமயம் மிகவும் போர் அடிக்கிறது. முன்பெல்லாம் ஒலிபெருக்கி இருக்கும் ஆங்காங்கே பாடல்கள் ஒலிபரப்பப்படும். ஏதோ ஒரு பரபரப்பு இருந்தது. இப்போது ஒன்றுமே இல்லை. தேர்தல் என்று ஒன்று நடக்கிறதா? என்றே தெரியவில்லை. கட்டுப்பாடுகள் எல்லை மீறி மனித வாழ்க்கையில் ஒரு பயத்தை உருவாக்க ஆரம்பித்து விட்டது.

எல்லாமே கட்டுப்பாடு, கட்டுப்பாடு.....அமைதி அமைதி என்று ஒதுங்கி... சிறிய வயதிலேயே கைப்பையுடன், அவசர மருந்து பையையும் சேர்த்தே தூக்க ஆரம்பித்துவிட்டனர். ஒலி முழுவதும் மாசல்ல....அவை சமுதாயத்தின் ஒரு அங்கம்.

குணமதி
10-05-2010, 08:05 AM
அளவோடிருந்தால் எதுவும் தீங்கல்லதான். அளவுகடந்தால் மாசாகவும் நஞ்சாகவும் ஆகிவிடுகிறது.

விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி நம்பி.

சிவா.ஜி
10-05-2010, 09:34 AM
காதுகளை வருடும் ஒலி சுகம்.....அறைகிற ஒலி....மாசுதான்.

பாராட்டுக்கள் குணமதி.

நம்பி அவர்களின் கருத்து மிக அருமை. ஒலியில்லாத சமுதாயமுண்டா...?

கீதம்
10-05-2010, 12:44 PM
தற்போதைய திருமணங்களிலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் நெடுநாளைக்குப் பின் காண்கின்ற உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசுவதைத் தடை செய்துவிடுகின்றன, பேரிரைச்சலுடனான இசை நிகழ்ச்சிகள்!
இசையையும் ரசிக்க முடியாமல், உறவினரின் விசாரிப்புகளுக்கும் பதில் சொல்ல இயலாமல் என்ன கேட்டாலும் பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டிவிட்டு வருவதே வழக்கமாகிவிட்டது.

நல்ல கருத்துடனான கவிதை படைத்த குணமதி அவர்களுக்கு பாராட்டுகள்.

குணமதி
10-05-2010, 04:21 PM
காதுகளை வருடும் ஒலி சுகம்.....அறைகிற ஒலி....மாசுதான்.

பாராட்டுக்கள் குணமதி.

நம்பி அவர்களின் கருத்து மிக அருமை. ஒலியில்லாத சமுதாயமுண்டா...?

நன்றி.

குணமதி
10-05-2010, 04:22 PM
தற்போதைய திருமணங்களிலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் நெடுநாளைக்குப் பின் காண்கின்ற உறவினர்களிடமும், நண்பர்களிடமும் பேசுவதைத் தடை செய்துவிடுகின்றன, பேரிரைச்சலுடனான இசை நிகழ்ச்சிகள்!
இசையையும் ரசிக்க முடியாமல், உறவினரின் விசாரிப்புகளுக்கும் பதில் சொல்ல இயலாமல் என்ன கேட்டாலும் பூம்பூம் மாடு போல் தலையை ஆட்டிவிட்டு வருவதே வழக்கமாகிவிட்டது.

நல்ல கருத்துடனான கவிதை படைத்த குணமதி அவர்களுக்கு பாராட்டுகள்.

மிக்க நன்றி.

பூமகள்
11-05-2010, 01:44 AM
இருதினம் முன்பு எனக்கு வெறுப்பேற்படுத்திய ஒலிமாசு உங்கள் சிந்தையிலும் உதித்தது கண்டு வியக்கிறேன்.. இன்னும் கவிதையைச் செதுக்கியிருக்கலாம், பாராட்டுக்கள்.

கூட்டங்களிடையான ஒலிமாசு நாமறிந்தததே.. அது தவிர்க்க இயலாததாகி வருகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் பேசும் சத்தம்.. இரைச்சலாகவே ஒலிக்கிறது.. இரிட்டேட்டிங் பர்சனாலிட்டிஸ்.. :(

குணமதி
11-05-2010, 03:13 AM
இருதினம் முன்பு எனக்கு வெறுப்பேற்படுத்திய ஒலிமாசு உங்கள் சிந்தையிலும் உதித்தது கண்டு வியக்கிறேன்.. இன்னும் கவிதையைச் செதுக்கியிருக்கலாம், பாராட்டுக்கள்.

கூட்டங்களிடையான ஒலிமாசு நாமறிந்தததே.. அது தவிர்க்க இயலாததாகி வருகிறது. ஆனால், மனிதர்களில் சிலர் பேசும் சத்தம்.. இரைச்சலாகவே ஒலிக்கிறது.. இரிட்டேட்டிங் பர்சனாலிட்டிஸ்.. :(

இன்னும் ஈடுபாட்டோடு எழுதியிருக்கலாம். உண்மைதான்.

மிக்க நன்றி.

செல்வா
11-05-2010, 08:48 AM
நம்பியின் கருத்து ஏற்றுக்கொள்ள இயலாதது.

இன்றைய நாகரீக உலகில் தகவல் தொடர்பு ஒலிபரப்பித் தான் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தில் இல்லை.

இங்கே சவுதியில் சாலைமுழுக்க கார்கள் அடைத்திருந்தாலும் உங்களால் ஹாரன் ஒலியைக் கேட்க இயலாது. மிக மிக அவசியம் தவிர இவர்கள் ஒலி எழுப்புவதில்லை.

இரைச்சல் நமது காதுகளை மந்தமாக்குகின்றன. காதுகள் மந்தமாவதால் நமது அவதானிப்பு குறைகிறது.

எந்த வைபவமானாலும் இந்த ஒலிமாசு குறைக்கப் படவேண்டும்.

தேர்தல் கமிசனின் சட்டங்கள் சரிதான்.

ஒலிமாசு அதிகமானால் தன் மனிதனுக்குத் தொல்லையே தவிர ஒலி மாசு குறைவதால் எந்தக் குறையும் இல்லை.

ஒலிபெருக்கிகள் வருவதற்கு முன்னால் மனிதர்கள் என்ன கைப்பையில் மாத்திரைகளைக் கட்டிக்கொண்டு அலைந்தார்களா?

நல்ல கருத்தைக் கொணர்ந்த கவிதை.

தொடர்ந்து படையுங்கள்.....

குணமதி
11-05-2010, 04:23 PM
நன்றி செல்வா.

நானும் கொஞ்ச காலம் சவூதியில் தமாம், ஹெயில் போன்ற இடங்களில் இருந்திருக்கிறேன். முதலிலிருந்தே இங்கு இரைச்சல் பழகியிருந்தாலும், சவூதி சென்று திரும்பி வந்தவுடன் சென்னையில் பேருந்தில் ஏறியவுடன், பேருந்தின் இரைச்சல் கேட்டபோதுதான் சவூதியில் ஊர்திகளில் பேணப்படும் ஒலிக் கட்டுப்பாட்டின் பெருமையை உணரமுடிந்தது.