PDA

View Full Version : ...........................



ஆதி
09-05-2010, 08:05 AM
மௌனித்திருக்கின்றன
டிசம்பர் மலர்களும்
என் மனமும்..

ஆதி
09-05-2010, 06:27 PM
இந்த கவிதையை காரண*மாய் வைத்து, ஜென் மற்றும் ஹைகூவை இங்கு விளக்கலாம் என்று ஆசைப்படுகிறேன்..

பொதுவாக ஜப்பானிய ஹைகூ கவிதைகளின் உள்ளடக்கம் பத்துப்பிரிவுகள் கொண்டது..

ஜென்மனநிலை, புத்தாண்டு, ஆடை மாற்றம், வேலையாள் மாற்றம், பொம்மைத் திருவிழா, பட்டம் விடுதல், ஏழ்மை, பழைய நினைவுகள், தன்னிறக்கம், இயற்கை ஈடுபாடு.

இங்கு நான் எழுதி இருக்கும் ஹைகூவானது ஜென்மனநிலைக் கொண்டது..

பௌத்தம் போதிக்கும் ஜென்னின் முக்கியமான மூன்று பண்புகள் மௌனம், தனிமை, ஏற்புத்தன்ன்மை.

என் கவிதையும் மௌனம் பற்றித்தான் பேசுகிறது, மௌனம் என்பது ஞானிகளின், மேதைகளின் அடியாளம் மட்டுமல்ல, அமைதியின் இருப்பிடமும் கூட.

இக்கவிதையோடு பொருந்தும் ஹைகூ விதிகள்..

1) மூன்றடி
2) காலத்தின் குறிப்பு
3) கற்பனை இல்லை
4) ஜென்மனநிலை

செல்வா
10-05-2010, 01:30 PM
நல்ல ஆரம்பம்...

தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.

ஆதி
10-05-2010, 01:41 PM
நல்ல ஆரம்பம்...

தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.

எதை நல்ல ஆரம்பம் னு சொல்ற னு தெரியல ?

ஹைகூ பற்றி னா, ரசித்த ஹைகூக்கள் திரியில்தான் தொடரப்போறேன்.. இங்க இல்ல..

இங்கே ஹைகூ கவிதைகளை தொடர்ச்சியா பதிப்பேன்

******---------------

மௌனித்திருக்கின்றன மனமும், டிசம்பர் மலர்களும் இது தான் கவிதை..

டிசம்பரில் காற்று குறைச்சலாக இருக்கும், செடியின் சலசலப்பு குறைவாக இருக்கும்..

இந்த மாதிரி மனசும் அமைதியாய் இருக்கும் எந்த சலனமும் இல்லாமல், எந்த இறைச்சலும் இல்லாமல், எந்த கவலையும் இல்லாமல், எந்த அலுப்பும் இல்லாமல், எந்த சோகமும் இல்லாமல்..

நிரம்பிய குடம் நீர் தழும்பாது தானே, மனசும் அமைதி நிரம்பி இருக்கிறது..

காற்று இல்லாததால் பூக்கள் அதுவாய் இருக்கிறன, அசையாமல்.. மனசும் அமைதியாய் இருக்க நானும் நானாய் இருக்கிறேன்..

சிவா.ஜி
10-05-2010, 03:42 PM
அருமையானக் கவிதைக்கு அழகான விளக்கம். ஹைக்கூக்களைப் பற்றி அலசலான பதிவின் ஆரம்பமே மிக அருமையாயிருக்கிறது ஆதன். கற்றுக்கொள்ள எத்தனையோ உண்டு இங்கு. பாராட்டுக்கள் ஆதன்.

ஆதி
10-05-2010, 04:05 PM
அருமையானக் கவிதைக்கு அழகான விளக்கம். ஹைக்கூக்களைப் பற்றி அலசலான பதிவின் ஆரம்பமே மிக அருமையாயிருக்கிறது ஆதன். கற்றுக்கொள்ள எத்தனையோ உண்டு இங்கு. பாராட்டுக்கள் ஆதன்.

அண்ணா, ஜென் கவிதைகளில் எனக்கு பிடித்ததை, நான் புரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்ள, ரசித்த ஜென் கவிதைகள் எனும் ஒரு திரி துவங்கி இருக்கிறேன், நேரம் கிடைக்கும் போது பாருங்கண்ணா..

பின்னூட்டத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிங்கண்ணா..

அறிஞர்
10-05-2010, 04:07 PM
கவிதையும், விளக்கமும் அருமை...
அமைதி இருக்குமிடம் நிறைவான இடம்.

அமரன்
13-05-2010, 08:35 AM
நல்ல கவிதை.. நல்ல சிந்தனை.. நல்ல விளக்கவுரை..

இந்தக் கவிதை இடமும் காட்டி வினை செய்கி்றதே ஆதன்..

பாராட்டுகிறேன்.