PDA

View Full Version : இனி ஒரு பிறவி



இன்பக்கவி
09-05-2010, 08:03 AM
உன்னை உருக்கி
என்னை செதுக்கிய
சிற்பியே
என் உயிர் கண்ணை
திறந்தவளே..
உன்னை கொண்டாட ஒரு நாள்
போதுமா???
உன்னை வரிகளுக்குள்
அடக்க முடியாது
வானத்தோடு ஒப்பிட
முடியாது...
உன் பாசத்தை சொல்ல
வார்த்தைகள் ஏது??
என் அன்னையே
என் கருவில் மகளாய் வா
இனி ஒரு பிறவி
எனக்கு இருந்தால் :)

சிவா.ஜி
09-05-2010, 09:01 AM
அன்னையர் தினத்துக்கேற்ற அழகான கவிதை. ஆமாம்...அன்னைக்கு ஒப்பு ஏதுமில்லை இந்த உலகத்தில்.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.

nambi
09-05-2010, 10:19 AM
அன்னைக்கு அன்னையாக அன்னையிடமே விருப்பம் தெரிவித்து வரைந்த கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி!

அமரன்
09-05-2010, 09:23 PM
எந்தச் சொல்லும்
தள்ளாடத்தான் செய்யும்
அம்மாவைப் பாடுகையில்..

இந்த மாதிரிக் கவிதைகளை
குறிப்பாக
அன்னைக்கு அன்னையாகும் ஆசையை காணுகையில்
ஒரு நொடியேனும் அன்னையாய்
வாழ்ந்து பார்க்க விழைந்து
தோற்று மகிழ்கிறேன்..

இப்படி
நானும் கவிதையும்
தோற்ற சந்தர்ப்பங்கள் பல..!

இந்த நேரத்தில் மலரின் பிள்ளைக்கவி சுமக்கும் அன்னைக்கரு நினைவாடுதலை தவிர்க்க இயலவில்லை.

govindh
09-05-2010, 11:38 PM
தாயை சேயாய் சுமக்கும் வரம் வேண்டி...ஒரு தவம்....!

'இனி ஒரு பிறவி'-
இன்பக் கவி அவர்களின் கவி அருமை.
பாராட்டுக்கள்.

கீதம்
10-05-2010, 02:07 AM
தாயைக் கொண்டாட ஒருநாள் போதுமா?
அவர் அன்பை அடக்கிவிட பத்துவரிகள் போதுமா?

ஆழ்மன ஏக்கம் புரியவைக்கும் வரிகள்!
உங்கள் அம்மாவிடம் காட்டுங்கள்! அவர் நிச்சயம் நெகிழ்வார்.

பாராட்டுகள் இன்பக்கவி.

இன்பக்கவி
11-05-2010, 12:16 PM
சிவா, அமரன், கோவிந்த், கீதம், நம்பி,
அனைவருக்கும் நன்றிகள்:icon_b:

பா.ராஜேஷ்
11-05-2010, 12:45 PM
வெகு நாட்களுக்கு பிறகு உங்கள் கவிதை... மகிழ்ச்சி.. கவிதை மிக நன்று ! பாராட்டுக்கள்

செல்வா
11-05-2010, 02:58 PM
மகன் கடன் என்ன தந்தை கடன் என்ன என்று சொன்ன வள்ளுவரால் கூட அன்னையின் கடன் அடைக்கும் வழிசொல்ல இயலவில்லை...

என் மகளாய் நீ வந்து பிற உனக்குச் சேவை செய்து நான் அடைப்பேன் பட்ட கடனை என்று சொல்லும் மகளாய் கவி.

வாழ்த்துக்கள் இன்பக்கவி.