PDA

View Full Version : மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை (இறுதி பாகம்)



மதுரை மைந்தன்
08-05-2010, 10:39 PM
மர்ரே நதி ஆஸ்திரேலியாவில் ந்யூ சவுத் வேல்ஸ் விக்டோரியா மாகாணங்கிளிடையே ஓடும் பெரிய நதி. இந்த நதியில் படகு வழி போக்குவரத்து நடைபெறுகிறது. மெல்போர்னிலிருந்து நான்கு மணி நேரப் பயணத்தில் மர்ரே நதியை அடையலாம். நதியில் விசைப் படகில் சென்று இயற்கை காட்சிகளை பார்ப்பது சுற்றுலாப் பயணிகளை இங்கு ஈர்க்கின்றது. ஒரு விடுமுறை நாளில் மெல்பொர்னிலிருந்து செல்லும் சுற்றுலா பேருந்தில் நானும் சென்றேன். மர்ரே நதியை காணச் செல்லும் முன் போகும் வழியில் பென்டிகோ நகரில் இருந்த பழைய தங்க சுரங்கங்களைப் பார்த்து விட்டு நண்பகல் மர்ரே நதியை பேருந்து சென்றடைந்தது. பேருந்தில் வந்த பயணிகளின் கைடு அனைவரையும் நண்பகல் உணவு உண்டு வருமாறு கூறினார். நான் கையில் கொண்டுவந்திருந்த சாண்ட்விச்களை முழுங்கி விட்டு நதிக்கரையை சுற்றி வரப் புற்ப்பட்டேன். நதிக்கரையிலிருந்த படகு வீடுகளை பார்வையிட்ட வண்னம் வந்து கொண்டிருந்த எனக்கு ஒரு படகு வீட்டில் கவனம் சென்றது.

அந்த வீட்டிலிருந்து வேகமாக ஒரு சிறுவன் ஓடி வர அவன் பின்னால் ஒரு வெள்ளைக்காரப் பெண் ஓடி வந்து அவனைப் பிடித்துக் கட்டடிக் கொண்டு " ஜான் நீயும் என்னை விட்டு போயிடாதே. நீ இல்லாம நான் உயிரோடு வாழ முடியாது" என்று அழுது கொண்டே சொல்லி அவனை வீட்டுக்கு அழைத்துச் செல்ல்லானாள். நான் ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்றேன். காரணம் அந்த வெள்ளைப்பெண் கூறியது சுத்த தமிழில்.

நான் பார்த்துக் கொண்டிருந்தது அவளுக்கு தெரிந்திருக்க வேண்டும். அந்த பெண் என்னைத் திரும்பி பார்த்தாள். " எஸ், யூ வாண்ட் சம்திங்" என்றாள் ஆங்கிலத்தில். " சற்று முன் நீங்கள் தமிழில் பேசினீர்கள்?" என்று நான் தமிழில் கூறினேன். நான் கூறியதைக் கேட்டு அவள் முகத்தில் புன்னகை தோன்றியது. " ஓ நீங்கள் தமிழரா" என்றவள். உங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. வாங்க வீட்டுக்கு" என்று என்னை அழைத்தாள். நான் சுற்றுலாப் பயணியாக வந்ததை மறந்து அந்தப் பெண்ணைப் பற்றி அறியும் ஆவலில் அவளைத் தொடர்ந்து சென்றேன்.

வீட்டு முன்னறையில் சோபாவில் என்னை அமரச் செய்த பின் பையனுக்கு விளையாட்டுப் பொருட்களைத் தந்து அவனை விளையாட விட்ட பின் என்னிடம் வந்து " என் பெயர் பிலோமினா. நான் ஆங்கிலோ இந்தியப் பெண். சட்டைக்காரி என்று எங்களை சொல்வார்கள். தமிழ் நாட்டில் உங்களுடைய சொந்த ஊர் எது?" என்றாள்.

நான் மதுரை என் பிறந்த ஊர் என்றவுடன் " மை காட், நான் பிறந்து வளர்ந்ததும் மதுரை தான். என் அப்பா சதர்ன் ரயில்வேஸ்ல எஞ்சின் டிரைவராக வேலை பார்த்தார். அவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர், என் அம்மா தமிழ் நாட்டை சேர்ந்தவர்."

" ஓ அப்போ நீங்க ரயில்வேக் காலனியில் குடியிருந்தீர்களா?. நான் பள்ளியில் படிக்கும் போது ரயில்வே காலனிக் கருகில் அரசரடியில் வசித்து வந்தோம். எங்கள் அரசரடி கிரிக்கெட் டீம் ரயில்வே காலனி டீமோடு அரசரடி கிரவுண்டில் மாட்ச் விளையாடியிருக்கோம்" என்றேன் மலரும் நினைவுகளில் மூழ்கியவனாய். ப்ராக் ஜாக்கெட் அணிந்து ரயில்வே காலனியின் சோஷல் க்ள்ப்பில் சட்டக்காரிகள் பால் டான்ஸ் ஆடியதைப் பார்த்து நானும் நண்பர்களும் ஜொள்ளு விட்டது நினைவுக்கு வந்து சிரித்தேன்.

நான் எதற்கு சிரிக்கறேன் என்று தெரியாமல் அவளும் சிரித்தாள். " இங்கே யாரும் இந்தியாவிலிருந்து வருவது குறைவு. தமிழ் நாட்டிலிருந்து அதுவும் நான் பிறந்த ஊரான மதுரையிலிருந்து வந்திருக்கும் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி" என்றாள்.

" மதுரையில் பிறந்து வளர்ந்த நீங்கள் இங்கு எப்படி வந்தீர்கள்?" என்று கேட்டேன்.

நான் கேட்டவுடன் முகம் சோகமாயி கண்ணில் நீர் வர " அது ஒரு பெரிய காதல் கதை" என்றாள் அவள்.

தொடரும்..

கீதம்
09-05-2010, 07:34 AM
சிறுகதை என்று நினைத்துப் படித்தேன். தொடர்கதை என்று முடிவில்தான் தெரிந்தது.

இது ஒரு தொடர்கதைக் காலம் என்று நினைக்கிறேன்.

அழகிய காதல் அதுவும் தமிழ் பேசும் ஆங்கிலக்காதல்! ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள்! பின் தொடர்ந்து வந்து கருத்துச் சொல்கிறேன்.

அன்புரசிகன்
09-05-2010, 08:54 AM
சற்றே வித்தியாசமான ஆரம்பம். காதல் வலிகளை கதையின் தொடர்ச்சி உணர்த்தும் போல் உள்ளதே... பார்க்கலாம்... தொடருங்கள்.

சிவா.ஜி
09-05-2010, 09:18 AM
ஒரு நதியோரக் காதல்கதையைப் பார்வையாளனாக இருந்து உங்கள் பார்வையில் தரும் கதை அருமையாகத் தொடங்கியிருக்கிறது. ஆவலைத்தூண்டும் முதல் அத்தியாய முடிவு.

வாழ்த்துக்கள் நண்பரே.

செல்வா
09-05-2010, 03:49 PM
எந்த முன்னறிமும் இல்லாமல் அதிரடியாகக் கதையைத் துவங்கி சரேலென்று நிகழ்வுகளுக்குள் சென்றுவிடுவது ஒருவகைக் கதைசொல்லல்.

இந்தக் கதையில் அது எனக்குப் பிடித்திருக்கிறது.

தொடருங்கள் அண்ணா அது என்ன காதல் கதை என்பதை அறிய மிக ஆர்வமாக இருக்கிறது.

மதி
10-05-2010, 03:26 AM
ஆரம்பித்துவிட்டீர்கள்.. சீக்கிரம் தொடருங்கள் மைந்தரே..!

மதுரை மைந்தன்
10-05-2010, 12:06 PM
சிறுகதை என்று நினைத்துப் படித்தேன். தொடர்கதை என்று முடிவில்தான் தெரிந்தது.

இது ஒரு தொடர்கதைக் காலம் என்று நினைக்கிறேன்.

அழகிய காதல் அதுவும் தமிழ் பேசும் ஆங்கிலக்காதல்! ஆரம்பம் நன்றாக உள்ளது. தொடருங்கள்! பின் தொடர்ந்து வந்து கருத்துச் சொல்கிறேன்.


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
10-05-2010, 12:08 PM
சற்றே வித்தியாசமான ஆரம்பம். காதல் வலிகளை கதையின் தொடர்ச்சி உணர்த்தும் போல் உள்ளதே... பார்க்கலாம்... தொடருங்கள்.


உங்கள் ஆசியுடன் தொடர்கிறேன் நன்றி

மதுரை மைந்தன்
10-05-2010, 12:10 PM
ஒரு நதியோரக் காதல்கதையைப் பார்வையாளனாக இருந்து உங்கள் பார்வையில் தரும் கதை அருமையாகத் தொடங்கியிருக்கிறது. ஆவலைத்தூண்டும் முதல் அத்தியாய முடிவு.

வாழ்த்துக்கள் நண்பரே.


உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
10-05-2010, 12:13 PM
எந்த முன்னறிமும் இல்லாமல் அதிரடியாகக் கதையைத் துவங்கி சரேலென்று நிகழ்வுகளுக்குள் சென்றுவிடுவது ஒருவகைக் கதைசொல்லல்.

இந்தக் கதையில் அது எனக்குப் பிடித்திருக்கிறது.

தொடருங்கள் அண்ணா அது என்ன காதல் கதை என்பதை அறிய மிக ஆர்வமாக இருக்கிறது.



இந்த கதை உங்களுக்கு பிடிதிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி செல்வா

மதுரை மைந்தன்
10-05-2010, 12:14 PM
ஆரம்பித்துவிட்டீர்கள்.. சீக்கிரம் தொடருங்கள் மைந்தரே..!

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
10-05-2010, 12:17 PM
பாகம் 2

கண்ணீரைத் துடைத்தபடி பிலொமினா தொடர்ந்தாள்.

" நான் மதுரையில் செண்ட் ஜோசப் கான்வெண்டில் பள்ளி இறுதி வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது ரயில்வே காலனியின் சோஷல் க்ள்ப்பில் அறிமுகமானான் பீட்டர். கழுத்தில் கர்சீப்பை சுற்றிக் கட்டி, சுருட்டை முடியுடன் உயரமாக அழகாக இருந்தான். காலனி பெண்கள் அவன் மீது கிறங்கினர். ஆனால் அவனோ என்னை அழைத்து என்னுடன் டான்ஸ் ஆடினான். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பினோம். அவன் அதிகம் படித்திருக்கவில்லை. இங்கிலாந்திருந்து வந்து அவனுடைய சித்தப்பா வீட்டில் தங்கொ இருந்தான். மெக்கானிக்காக வேலை பார்த்தான். நான் பள்ளிக்கு செல்லும்போது கார் ரிப்பேர் ஷாப்பில் கையில் ஸ்பானருடனும் முகத்தில் க்ரீசுடன் அவனைப் பார்க்க வேடிக்கையாருக்கும். மாலை நேரங்களில் சைக்கிளில் ஹாண்டில் பாரில் என்னை அமர்த்தி தனியாக இருக்கும் குட்ஸ் யார்டுக்கு கூட்டி போவான். அங்கே நாங்கள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். இங்கொலாந்த்தில் அவனது பெற்றோர் இறந்து விட்ட பின் வேறு ஆதரவு இல்லாமல் மதுரையிலிருந்த சித்தப்பா வீட்டில் தஞ்சம் புகுந்ததாக அவன் சொன்னபோது என் மனம் அவனுக்காக இளகியது. என்னை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டதாகவும் என்னை மணம் புரிந்து நல் வாழ்க்கை வாழ விரும்புவதாக அவன் கூறினான்.

பீட்டர் மீது அளவிலா காதல் கொண்ட நான் அவனுக்கு ஒரு காதல் கவிதை எழுதினேன்.

பார்ட்டி விளக்குகளின் வெளிச்சத்தில்
பால் நடனத்தினரை விலக்கிக் கொண்டு
ஹலோ என்றாய் என்னருகில் வந்து
எனக்கு அப்போது தெரியாது
நீ ரோமியோ நான் ஜூலியட்

ஓ ரோமியோ அழைத்துச் செல்
தனிமையான இடத்திற்கு
அங்கு நீ இளவரசன் நான் இளவரசி
நமது வாழ்க்கை அழிவிலா காதல் கதை

ஓ ரோமியோ என்னை காப்பாற்று
இது கடினமான காதல்
ஆனால் இது நிஜமானது
காதல் சரித்திரம் படைப்போம்

இந்த கவிதையை காகிததில் எழுதி பீட்டரிடம் பக்கத்து வீட்டுப் பையன் மூலமாக* கொடுத்தனுப்பினேன். ஆனல் என்னோட போறாத வேளை அந்த காகிதம் என் தந்தை கையில் சிக்கி விட்டது. என்ன தான் இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழ் நாட்டில் வாழ்ந்து தமிழ் பெண்மணியான என் அம்மாவை மணம் புரிந்திருந்ததால் அவருக்கு இன் த காதலில் உடன்பாடில்லை. என்னை அழைத்து அமைதியாக அறிவுரை கூறினார். பீட்டரைப் பற்றி விசாரித்ததாகவும் அவன் ஒரு படிக்காத தற்குறி என்றும் நான் நன்றாக படிப்பதால் என்னை மேற்படிப்பு படிக்க வைக்க போவதாகவும் கூறினார். அதற்கு இந்த காதல் ஒரு தடையாக இருக்கும் என்றும் ஆங்கிலோ இந்திய சமூகத்தில் நமக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்றும் அஞ்சினார்.

இந்த சமயத்தில் ஓர் நாள் நோய் வாய்ப்பட்டிருந்த என் அம்மா காலமானர். அம்மா இறந்தபின் தந்தைக்கு மதுரையில் வாழ்வது கடினமாயிற்று. ஆஸ்திரேலியாவிலிருந்த தனது சகோதரி நான்சியிடம் செல்ல முடிவு செய்தார். அங்கே மெல்போர்னில் என்னுடைய* மெடிக்கல் படிப்பிற்கு ஏற்பாடு செய்யப்போவதாகவும் கூறினார். பீட்டரை சந்தித்து என்னால் இந்த விவரங்களை கூற முடியாமல் என் தந்தை என்னுடன் எப்போதும் கூட இருந்தார். பீட்டரை பிரிந்து செல்ல என் மனம் தத்தளித்தது. ரயில்வே வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டை காலி பண்ணிக் கொண்டு சென்னை சென்று ஆஸ்திரேலியாவிற்கு செல்ல கப்பல் ஏறினோம்.

கப்பலில் அப்பர் டெக்கில் காற்று வாங்க சென்ற நான் அங்கு பீட்டரைக் கண்டு ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தேன். என்னை கப்பலின் கீழ் தளத்திலிருந்த தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்ற பீட்டர் " நீ உலகத்தின் எந்த பகுதிக்குச் சென்றாலும் நானும் உன்னுடன் வருவேன். நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை. ஆஸ்திரேலியாவில் நாம் இணைவோம்" என்றான். எந்தந்தையின் கண்ணில் படாமல் சாமர்த்தியமாக என்னை மீண்டும் சந்தித்தான்.

பல நாட்கள் பயணத்தின் இறுதியில் எங்கள் கப்பல் ஆஸ்திரேலியாவை நெருங்கிக் கொண்டிருக்கும் போது ஒரு பலத்த புயல் காற்றில் சிக்கிக் கொண்டது. கரையை ஒட்டி இருந்த பாறைகளில் மோதி கப்பல் உடைந்தது.

தொடரும்..

சிவா.ஜி
10-05-2010, 12:38 PM
காதல் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைத்து, திகில் சம்பவங்கள் வைத்து எழுதியிருக்கும் விதம் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. கப்பல் உடைப்பின் விளைவு என்ன என எதிர்பார்க்கவைக்கும் அத்தியாய முடிவு.

தொடருங்கள் நண்பரே.

govindh
11-05-2010, 12:13 AM
மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை .....
கவிதையோடு....காவியமாக தொடரும் விதம்
அருமையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...

Akila.R.D
11-05-2010, 05:37 AM
மன்றத்தில் மீண்டும் ஒரு காதல் கதை...

படிக்க ஆர்வமாக உள்ளோம்...

தொடருங்கள்...

செல்வா
11-05-2010, 08:56 AM
கவிதையும் காதலுமாய் கதை தொடர்வது அருமை...

வர்ணனைகள் சற்றும் இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே கதை செல்கிறது.

இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா அண்ணா?

தொடர்ந்து எழுதுங்கள்.

மதுரை மைந்தன்
11-05-2010, 09:28 AM
காதல் கதைகளிலும் சஸ்பென்ஸ் வைத்து, திகில் சம்பவங்கள் வைத்து எழுதியிருக்கும் விதம் ஆவலைத் தூண்டும் விதமாக உள்ளது. கப்பல் உடைப்பின் விளைவு என்ன என எதிர்பார்க்கவைக்கும் அத்தியாய முடிவு.

தொடருங்கள் நண்பரே.


உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
11-05-2010, 09:29 AM
மர்ரே நதிக்கரையில் ஒரு காதல் கதை .....
கவிதையோடு....காவியமாக தொடரும் விதம்
அருமையாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்...

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
11-05-2010, 09:33 AM
மன்றத்தில் மீண்டும் ஒரு காதல் கதை...

படிக்க ஆர்வமாக உள்ளோம்...

தொடருங்கள்...

உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
11-05-2010, 09:38 AM
கவிதையும் காதலுமாய் கதை தொடர்வது அருமை...

வர்ணனைகள் சற்றும் இல்லாமல் வெறும் சம்பவங்களாகவே கதை செல்கிறது.

இதற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா அண்ணா?

தொடர்ந்து எழுதுங்கள்.

கதையை கதாநாயகியே என்னிடம் சொல்லுவதாக அமைத்திருக்கிறேன். ஆகவே சம்பவங்களின் தொகுப்பாக வைத்திருக்கிறேன். உங்கள் பின்னுட்டத்திற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
11-05-2010, 09:41 AM
பாகம் 3

கப்பல் உடைந்ததால் கடலில் வீழ்ந்து பாறைகளில் அடிபட்டு நினைவிழந்தேன். நினைவு திரும்பியபோது ஒரு கடற்கரையில் படுத்திருந்தேன். பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருந்தான் பீட்டர். என்னுடைய கால் எலும்பு முறிந்து காலை நகற்ற முடியவில்லை. கைகைளிலும் பலத்த அடி. தலையில் அடிபட்ட இடத்திலிருந்து ரத்தம் வடிந்து உறைந்து போயிருப்தது. தலையில் தன் கர்சீப்பால் கட்டி இருந்தான் பீட்டர்.

" இப்போ எப்படி இருக்கு? என்று கேட்ட பீட்டரிடம் " அப்பா, அப்பா" என்று எனது தந்தையைப் பற்றி விசாரித்தேன். " சாரி எனக்கு தெரியாது. கடலில் வீழ்ந்த உன்னை ஒரு மரக்கட்டையுடன் இணைத்து நீந்தி கரை வந்தேன். நாம் ஒதுங்கியிருப்பது ஒரு ஒதுக்குபுறமான பீச். கப்பலிலிருந்த மற்றவர்கள் அலைகளால் அலக்கழிக்கப்பட்டு பீச்சின் மறு புறத்தில் ஒதுங்கி இருப்பார்களென நினைக்கிறேன்" என்றான் பீட்டர்.

" எனக்கு உடம்பெல்லம் வலிக்கிறது. காலை நகர்த்த முடியவில்லை. உடனே ஒரு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்வாயா?" என்று கேட்டேன் அவனிடம்.

" நாம் இருக்கும் பீச்சை மூன்று புறங்களிலும் செங்குத்தான பாறைகள் சூழ்ந்துள்ளன. பாறையில் ஏறி சம தளத்திற்கு சென்று பார்ப்போம். பக்கத்தில் ஏதாவது சிறு ஊராவது தென்படவேண்டும்" என்றான் பீட்டர்.

" செங்குத்தான பாறையா? நான் எப்படி அதில் ஏறுவேன்?" என்றேன் நான்.

" கவலைப்படாதே. என் உயிரைக் கொடுத்தாவது உன்னை நான் காப்பாற்றுவேன்" என்று சொல்லி என்னைத் தூக்கி தன் தோள்களில் சாய்த்துக் கொண்டு பாறையில் ஏறத் தொடங்கினான் பீட்டர்.

கடலில் என்னையும் இழுத்துக் கொண்டு நீந்திய களைப்பு, அவனுக்கும் அடிபட்டு இருந்த இடங்களிலின் வலி இவற்றுடன் என்னை சுமந்து கொண்டு அவன் பாறையில் ஏறிய சாகசம் என் மீது அவனுக்கிருந்த காதலின் உத்வேகம் தான்.

பாறையின் மேல்தளத்தில் என்னை கிடத்தி அவனும் சரிந்து விட்டான். நான் நினைவிழ்ந்தேன். அவன் அப்புறம் என்ன செய்தான் என்று எனக்கு தெரியாது. மறுபடி கண் முழித்த போது ஒரு ஆஸ்பத்திரி படுக்கையில் இருப்பதை உணர்ந்தேன். காலில் பிளாஸ்டர் கட்டு, கையில் தலியில் கட்டு என்று நான் அடையாளம் தெரியாமல் இருந்தேன். கட்டிலிருக்கருகில் ஒரு லேடியும் ஜெண்டில்மானும் இருப்பதை பார்த்தேன். நான் கண் முழித்ததைப் பார்த்து அவர்கள் என்னருகில் வந்தனர். அந்த லேடி குனிந்து எனது காதில் " சைல்ட், நான் உன் ஆண்ட்டி நான்சி. இவர் என் ஹஸ்பென்ட் சார்லஸ் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

" டாடி" என்று நான் ஆரம்பிக்க ஆண்ட்டி கைகுட்டையால் வாயைப் பொத்திக் கொண்டு விம்மினார். " அவர் இறந்து விட்டாமாரம்மா". கப்பலிலிருந்து கரையில் ஒதுங்கிய சடங்களில் எங்களை அடையாளம் காட்ட சொன்னார்கள் போலீசார். அவருடைய பையிலிருந்த கடிததிலிருந்தும் புகைப்படத்திலிருந்தும் நாங்கள் உன்னைக் கண்டுபிடித்தோம். நடந்தது தேவனின் செயல். எங்களுடைய நல்ல காலம் உன்னை உயிருடன் பார்க்கிறோம். நீ இங்கே இரண்டு வாரங்களாக நினைவில்லாமல் கிடந்தாய். ஆனால் நடு நடுவே "பீட்டர் பீட்டர்" என்று சொல்லுவாய். யார் பீட்டர்?". என்றார் நான்சி. பீட்டர் தான் என்னைக் காப்பாற்றி கரை சேர்த்தது என்று கூறினேன். அங்கு வந்த நர்சிடம் " இங்கே பீட்டர் என்று யாராவது அட்மிட் ஆனார்களா?" என்று கேட்டேன். நர்ஸ் விசாரித்து வருவதாக கூறி சென்றாள்.

நான்சி ஆண்ட்டி எனக்காக புது ஆடைகள், பழங்கள், ரொட்டி, ஜூஸ் போன்றவை வாங்கி வந்திருந்தார். மறு நாள் பார்வைளார்கள் நேரத்தில் திரும்பி வந்து பார்ப்பதாக கூறி என்னை முததமிட்ட பின் விடை பெற்று சென்றார்கள்.

திரும்பி வந்த நர்ஸ் தான் ஆஸ்பத்திரியின் பிணியாளர்கள் பட்டியலில் பீட்டர் என்று யாராவது அட்மிட் ஆனார்களா என்று பார்த்ததில் யாரும் அப்படி அட்மிட் ஆகவில்லை என்றும் அந்த ஆஸ்பத்திரியில் சீரியசாக அடிபட்டவர்களை மட்டுமே அட்மிட் பண்ணுவார்கள் என்றாள். பீட்டருக்கு பெரிய காயங்கள் இல்லாதிருந்தால் அவனை ஒரு டெம்பரரி முகாமில் சிகிச்சையளித்து அரசாங்க ஆதரவு பனத்தைக் கொடுத்து அனுப்பியிருப்பார்கள் என்றும் கூறினாள். ஆனால் பீட்டர் ஏன் என்னை பார்க்க வரவில்லை என்று வியந்தேன்.

படுக்கையில் படுத்திருந்த போது ஒரு கிருஸ்துமஸ் தின விழாவில் பீட்டர் பாடிய பாடல் ஒன்று என் நினைவுக்கு வந்து என்னை வாட்டியது. அந்த பாட்டு இது தான்.

Where do I begin
To tell the story of how great a love can be
The sweet love story that is older than the sea
The simple truth about the love she brings to me
Where do I start

With her first hello
She gave new meaning to this empty world of mine
Thered never be another love, another time
She came into my life and made the living fine
She fills my heart

She fills my heart with very special things
With angels songs , with wild imaginings
She fills my soul with so much love
That anywhere I go Im never lonely
With her around, who could be lonely
I reach for her hand-its always there

How long does it last
Can love be measured by the hours in a day
I have no answers now but this much I can say
I know Ill need her till the stars all burn away
And shell be there

How long does it last
Can love be measured by the hours in அ ட..y
I have no answers now but this much I can say
I know Ill need her till the stars all burn away
And shell be there

பீட்டரை மீண்டும் சந்திபேனா என்று ஏங்கினேன்.

தொடரும்.

அன்புரசிகன்
11-05-2010, 10:34 AM
ஆவல் மேலோங்குகிறது. கப்பலில் வந்தகாலம் என்றால் மிக பழையகாலத்து சம்பவம். தொடருங்கள்...

அன்புரசிகன்
11-05-2010, 10:39 AM
பதிலிட்ட இடைவெளியில் அடுத்த பாகம் வந்துவிட்டது. ஒதுங்கியது ஒரு தீவில் பின்னர் எவ்வாறு அவுஸ்திரேலியா வந்தனர் வந்து அவளது சொந்தக்காரரை சந்தித்துவிட்டாள். பீட்டர் மறைந்த மாயம் என்ன??? தொடருங்கள். ஆவல் மிகுகிறது.

அக்னி
11-05-2010, 11:19 AM
வித்தியாசமான கரு + களம்.

விவரிப்பு, ஓர் உண்மைச் சம்பவம் போலவே இருக்கின்றது.
(நிஜம்தானோ...)

காதற்திகிலாய்த் தொடர்கின்றது இந்தக் கதை.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் இடம்பெறும் திருப்பங்கள்,
அடுத்த அத்தியாயத்தைப் பெரிதும் எதிர்பார்க்க வைக்கின்றன.

பாராட்டு...

மதி
11-05-2010, 11:40 AM
பீட்டர் எங்கே...?? எங்களையும் பரிதவிக்க வைக்கிறீர்கள்.!!!
மைந்தரே.. சீக்கிரம் தொடருங்கள்.

Akila.R.D
12-05-2010, 04:13 AM
பீட்டர் திரும்ப வருவாரா?...

தலைப்பில் இன்னும் பாகம் 2 என்று உள்ளது...

மதுரை மைந்தன்
12-05-2010, 11:52 AM
பாகம் 4

என் உடல் நிலை தேறி வந்தது. ஒரு நாள் வழக்கமான நர்சுக்கு பதிலாக வேறொரு நர்ஸ் என்னை கவனித்துக் கொண்டார். அப்போது அவர் என்னிடம் திடீரென்று " நீங்கள் அட்மிட் ஆகி சிறிது நாள் கழித்து உங்களைத் தேடி பீட்டர் என்பவர் வந்தார். நீங்கள் அப்போது நினைவின்றி இருந்தீர்கள். பீட்டர் என்ன சொல்லியும் ஆஸ்பத்திரியை விட்டு செல்ல மறுத்தார். அவர் உங்கள் அருகிலேயே இருப்பேன் என்று அடம் பிடித்தார். லேடீஸ் வார்டில் ஜென்ட்ஸ் அனுமதிக்கப்படுவதில்லை இங்குஎன்று சொல்லி பார்த்தோம். உங்கள் ஆண்ட்டி நான்சிக்கு இது தெரிய வந்த போது அவரிடம் சென்று நீ இங்கிருந்து போவது உனக்கு நல்லது. உன்னைப் பற்றி எனது சகோதரர் எனக்கு கடிதம் ஒன்றில் கூறியுள்ளார். நீ படிக்காதவன். பிலோமினா நன்கு படித்து டாக்டராக வரவேன்டும் என்று கனவு கண்டார். உங்களுக்குள் உண்டான காதலை அறிந்து அது பிலோமினாவை பாதிக்கும் என்பதால் தான் அவளைக் கூட்டிக் கொண்டு ஆச்திரேலியாவுக்கு எங்களுடன் இருக்க வந்தார். ஆனால் அவரது போறாத வேளை கடலில் மூழ்கி இறந்து விட்டார். இப்பொது பிலோமினாவுக்கு நாங்கள் தான் கார்டியன். நீ அவளை மறந்து விடு. உனக்கு பணம் வேண்டும் என்றால் நாங்கள் தருகிறோம்" என்றார்.

அதைகேட்ட பீட்டர் "நாங்கள் ஒருவரை ஒருவர் விரும்புகிறோம். நான் பிலோமினாவை என் உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்" என்றான். நான்சி ஆண்ட்டி அவனிடம் " நீ என்ன சொன்னலும் கேக்க மாட்டேங்கற. நீ இங்கிலாந்திலிருந்து தப்பைத்து வந்துள்ள ஒரு குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும். ஆகவே உன்னை ஆஸ்திரேலிய போலீசிடம் ஒப்படைத்தால் உன் வாழ்வு பாழாகிவிடும். நீ இங்கிருந்து உடனே போய் விடு" என்றார்கள். போலீஸ் என்ற வார்த்தயைக் கேட்டவுடன் பீட்டரின் முகம் வெளிரிப் போய் விட்டது. அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டான்" என்று கூறி முடித்தார்,

பீட்டர் சட்டத்திலிருந்து தப்பித்துள்ள ஒரு குற்றவாளி என்று கேட்டு என் உலகமே இருண்டது. " இருக்காது. பீட்டர் குற்றவாளியாக இருக்க முடியாது. குற்ரவாளிகளை அவர்கள் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். எங்கோ தவறு நடந்திருக்கிறது. பீட்டர் அநியாயமா குற்றம் சாட்டப் பட்டிருக்கிறான்." என்று புலம்பினேன். என்னையும் அறியாமல் " பீட்டர்" என்று கத்தி மயக்கமானேன்.

மறுபடி நான் கண் முழித்தபோது நான்சி ஆண்ட்டி என்னருகில் அமர்ந்து என் தலையைக் கோதி விட்டுக்கொண்டு " நீ எதற்கும் கவலைப்படாதே. ஆண்டவன் உன்னை எங்களிடம் ஒப்படைதிருக்கிறான். உன்னைப் படிக்க வைத்து ஒரு பெரிய மருத்துவராக உன்னை ஆக்குகிறோம். இங்கிலாந்திலிருந்த எங்கள் பரம்பரை சொத்தை விற்று உனக்கு சேர வேண்டிய அந்த பணத்திற்கு எங்களை டிரஸ்டியாக நியமித்துள்ளார் உன் தந்தை. உன் உடல் நிலை நன்றாக ஆகி வருகிறது. இன்னும் ஓரிரண்டு நாட்களி உன்னை டிஸ்சார்ஜ் செய்து மர்ரே நதிக்கரையிலுள்ள எங்கள் பார்ம் ஹவுசுக்கு உன்னை கூட்டி செல்கிறோம். இங்கே பார் அங்கிள் சார்லஸ் உனக்காக புது டிரெஸ்ஸும் ஹாட்டும் வாங்கி வந்துள்ளார்" என்றார்.

இரன்டு தினங்கள் கழித்து என்னைக் கூட்டிக் கொண்டு அவர்களுடைய வீட்டிற்கு மர்ரே நதியில் செல்லும் ஒரு விசைப் படகில் சென்றார்கள். புது கவுன் அணிந்து தலையில் தொப்பியுடன் நான் அழகாக இருப்பதாக அவர்கள் கூறினார்கள். எனக்கோ என்னை இந்தக் கோலத்தில் பார்த்தால் பீட்டர் எத்தனை மகிழ்ச்சி அடைவான் என்று எண்ணி சோகமானேன். சிறிய கப்பல் போலிருந்த அந்த படகின் மேல் தலத்தில் நின்று கரையோர இயற்கை காட்சிகளில் லயித்தேன். திடீரென்று அடித்த காற்றில் என் தலையிலிருந்த ஹாட் பறந்து சென்று மர்ரெ நதியின் நீருக்குள் சென்றது. என்னருகில் இருந்த ஆண்ட்டியும் அன்கிளும் அதிர்ச்சிய்ற்று " ஓ மை காட்" என்றார்கள். அப்போது படகிலிருந்து ஒரு இளைஞன் தண்ணீரில் குதித்து அந்த ஹாட்டை எடுத்து வந்து என்னிடம் பணிவாக நீட்டினான். அது வேறு யாருமில்லை பீட்டர் தான். ஆனந்த மிகுதியால் நான் பீட்டர் என்று கத்த இருந்தேன். ஆனல் அருகில் ஆண்டி இருந்த்தால் அவர்களுக்கு இது பீட்டர் என்று தெரியக் கூடாது என்று என்னைக் கட்டுப் படுத்திக் கொண்டேன். நான் ஆஸ்ந்பத்திரியிலிருந்த ஒரு மாத காலத்தில் அவனுக்கு தாடி மீசை பெரிதாக வளர்ந்து ஆல் அடையாளம் மாறிப் போயிருந்த்தது நல்லதாயிற்று. அங்கிள் அவனிடம் " தாங்க்யூ யங் மான்" என்று கை குலுக்கி பர்சிலிருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். அவன் அதை ஏற்க மறுத்து என்னையே திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு படகின் கீழ் பகுதிக்கு சென்றான். அவன் அந்த படகில் ஒரு பணியாளனாக வேலை பார்ப்பதைக் கண்டேன்.

நான்சி ஆண்ட்டியின் பார்ம் ஹவுஸ் அருகிலிருந்த ஜெட்டியில் படகு நிற்க நாங்கள் இறங்கி வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அங்கிளும் ஆண்ட்டியும் முன்னால் செல்ல பின்னால் வந்த நான் திரும்பி படகைப் பார்த்தபோது படகின் மேல் தளத்தில் நின்றவாறு என்னைப் பார்த்து கையசைத்தான் பீட்டர். நானும் கையசைத்தேன். வீட்டின் அருகிலிருந்த நதியில் படகில் அவன் போய் வருவான் என்பதை உணர்ந்து ஆறுதலடைந்தேன். முன்னால் சென்று கொண்டிருந்த ஆண்ட்டி நின்றி திரும்பி என்னிடம் " நான் சொல்ல மறந்துவிட்டேன். மெல்போர்னில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் எங்கள் மகன் ஆடம்ஸ் விடுமுறையைக் கழிக்க நாளை இங்கு வருகிறான். அவன் உனக்கு நல்ல கம்பெனி. உங்கள் இருவருக்கும் திருமணம் செய்ய வேன்டும் என்று உன் தந்தை விரும்பினார். நாங்களும் அவ்வாறே விரும்புகிறோம்" என்று என் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டார்.



தொடரும்...

அன்புரசிகன்
12-05-2010, 12:31 PM
அட... வில்லனும் வந்தாச்சா... காதலன் அருகில்... தொடருங்கள்...

சிவா.ஜி
12-05-2010, 12:40 PM
மர்ரே நதியில் திடீர் திருப்பமா.....நான்சி எங்கே போனாலும் அதெப்படி மிகச் சரியாகப் பீட்டரும் அங்கேயே வந்துவிடுகிறான்.... சதா தொடர்ந்துகொண்டிருப்பான் போலிருக்கிறது. காதலுக்கு ரொம்ப சக்தி இருக்கு.

தொடருங்கள் நண்பரே.

அக்னி
12-05-2010, 12:46 PM
திடீரென்று அடித்த காற்றில் என் தலையிலிருந்த ஹாட் பறந்து சென்று மர்ரெ நதியின் நீருக்குள் சென்றது. என்னருகில் இருந்த ஆன்டியும் அன்கிளும் அதிர்ச்சிய்ற்று " ஓ மை காட்" என்றார்கள்.
இதற்கு ஏன் இத்தனை அதிர்ச்சியடைந்தார்கள்... :icon_hmm:
ஏதேனுமிருக்குமோ... :confused:

ஆண்டியும், அங்கிளும் ஆடம்ஸைத் திருமணம் செய்துவைத்துப் பிலோமினாவின் சொத்தை அமுக்கப்பார்க்கின்றார்கள் போலிருக்கே...
பீட்டர் எப்படிக் காப்பாற்றப் போகின்றான் என்று பார்க்கலாம்.

பிலோமினா வைத்தியசாலைக்கு எவ்வாறு வந்தாள்...
அப்போது பீட்டர் என்ன ஆனான்...
என்பவற்றிற் தெளிவில்லை.
மேலும், தாடி மீசை வளர்த்துவிட்டால் அடையாளம் காண முடியாது என்பதுவும்,
பழைய திரைப்பட மாறுவேடங்களை நினைவுறுத்துகின்றது.

மற்றும்படிக்குக், கதையின் விறுவிறுப்பிற் குறைவில்லை...

மதுரை மைந்தன்
13-05-2010, 08:41 PM
பாகம் 5

நான்சி ஆண்ட்டியின் பார்ம் ஹவுசில் எனக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தது. என்னுடைய படுக்கை அறை வீட்டின் முதல் மாடியில் மர்ரே நதியைப் பார்த்து இருந்தது. பகல் நேரங்களில் அறையின் ஜன்னலைத் திறந்து நதியையே பார்த்துக் கொண்டிருப்பேன். நதியில் விசைப் படகு எப்போது வரும் அதில் பீட்டர் தெரிவானா என்று பார்க்கலானேன். ஆண்டியிடமிருந்து ஒரு பைனாகுலரை வாங்கி அதன் மூலம் படகை மிக அருகில் சென்று பார்ப்பேன். ஓரிரு சமயங்களில் பீட்டர் படகின் மேல் தளத்தில் நின்று பார்ம் ஹவுசையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டு பரவசமானேன். எப்படியாவது நதியின் கரையில் சென்றமர்ந்து பீட்டரை நேரிடையாக சந்திக்க ஆவலாயிருந்தேன். ஆன்டி அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

சில தினங்கள் கழித்து மெல்போர்னிலிருந்து ஆண்ட்டியின் மகன் ஆடம்ஸ் பார்ம் ஹவுசுக்கு வந்தான். ஆண்ட்டி அவனிடம் என்னை அறிமுகப்படுத்திய போது " ஓ மை ஸ்வீட் ப்ரைட்" என்றான். எனக்கு எரிச்சலாக இருந்தது. எனது தலை முடியை இழுத்து என்னை சீண்டுவான். வீட்டின் தாழ்வாரங்களில் வேறு யாருமில்லாத சமயங்களில் ஓரிரு முறை என்னை முத்தமிட முயற்சித்தான். நான் அவனைத் தள்ளி விட்டு தப்பித்தேன்.

ஒரு நாள் பகல் உணவின் போது ஆடம்ஸ் ஆண்ட்டியிடம் " எனக்கு வீட்டில் அடைந்து கிடப்பது போரடிக்கிறது. நான் நதியில் நீர் சலனமில்லத இடத்தில் படகில் படுத்துக் கொண்டு புத்தகம் படிக்க விரும்புகிறேன்" என்றான். எனக்கு தெரியும் அவன் புத்தகம் என்றது பாட புத்தகமில்லை நாவல் கதை புத்தகம் என்று. ஆண்ட்டி அதற்கு உடனே சம்மதித்தார். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நான் ஆண்டியிடம் " எனக்கு சித்திரங்கள் வரைவது பிடிக்கும். நீங்கள் எனக்கு ஒரு வரை பலகையும் சில் பிரஷ்களும் வாங்கி கொடுத்தால் நான் நதியின் கரையில் அமர்ந்து இயற்கை காட்சிகளை வரைவேன். ஆடம்சுக்கு கம்பெனியாகவும் இருப்பேன்" என்றேன். ஆண்ட்டியும் சம்மதிது எனக்கு வரை பட சாமன்களை வாங்கி கொடுத்தார்.

நதியின் கரையில் அமர்ந்து நான் படங்களை வரையும் சாக்கில் நதியில் விசைப் படகில் பீட்டரை எதிர் பார்த்து அமர்ந்திருப்பேன். ஓரிரு முறை நான் எதிர் பார்த்த மாதிரி பீட்டர் படகிலிருந்து என்னைப் பார்த்து விட்டு நதியில் குதித்து என்னிடம் வந்தான். அவனது படகு வீட்டின் அருகிலிருந்த ஜெட்டியில் பயணிகளை இறக்கி விட்டு கிளம்ப இருந்த சில நிமிடங்கள் நாங்கள் சந்த்திது உரையாடினோம். நல்ல வேலையாக அத்தகைய தருனங்களில் ஆடம்ஸ் தனது புத்தகத்தில் மூழ்கி இருந்ததால் எங்களை கவனிக்கவில்லை.

" ஆண்ட்டிக்கு தெரியாமல் என்னுடன் வந்துவிடு. நாம் பக்கதிலுள்ள் கிங்ஸ்டன் நகரத்தில் வாழ்வோம். எனக்கு உடல் பலம் இருக்கிறது. நீ என்னருகில் இருந்தால் எனக்கு யானை பலம் வந்துவிடும். நாம் இணைந்து வாழ்வோம்" என்றான் பீட்டர் என்னிடம். எனக்கு ஆண்ட்டியின் மீது நல்ல மரியாதை இருந்தது. தாயில்லாத எனக்கு ஒரு தாயைப் போல பாசத்துடனும் பரிவுடனும் நடந்து கொள்ளும் அவரை ஏமாற்றுவது கடினமாகத் தோன்றியது. நான் பீட்டரிடம் " நாம் சற்று பொறுமையாக இருப்போம். சமயம் வரும்போது நான் ஆன்டியின் கால்களில் வீழ்ந்து அவரின் சம்மதத்தைப் பெற்று திருமணம் செய்து கொள்வோம்" என்றேன். ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றான் பீட்டர்.

ஒரு தடவை சித்திரம் வரைந்து கொண்டிருந்த போது என் பின்னால் வந்து நின்ற ஆடம்ஸ் நான் வரைந்திருந்த சித்திரத்தைப் பார்த்து " ஹேய் யார் இந்த ஹீரோ" என்றவுடன் உணர்ந்தேன் என்னையும் அறியாமல் நான் பீட்டரின் உருவத்தை வரைந்திருந்தேன் என்று. இது தான் தருணம் என்று நான் அவனிடம் எனக்கும் பீட்டருக்கும் இருந்த காதலைப் பற்றி கூறிவிட்டேன். அதைக்கேட்ட ஆடம்ஸ் பலமாக சிரித்து " அப்பாடா நான் தப்பித்தேன்" என்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆடம்ஸ் தனக்கு மெல்போர்னில் ஒரு கேர்ல் பிரண்ட் இருப்பதாகவும் தான் அவளையே விரும்புவதாகவும் கூறியது என் வயிற்றில் பாலை வார்த்தது.




தொடரும்...

செல்வா
14-05-2010, 06:02 AM
வந்த வில்லன் வில்லனாகாமல் தோழனாகிவிட்டான்.
இன்னும் ஆன்டி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது.

கதை சுவாரசியமாகப் போகுது... தொடர்ந்து எழுதுங்கள்.


" ஆண்டிக்கு தெரியாமல் என்னுடன் வந்துவிடு. நாம் பக்கதிலுள்ள் கிங்ஸ்டன் நகரத்தில் வாழ்வோம். எனக்கு உடல் பலம் இருக்கிறது. நீ என்னருகில் இருந்தால் எனக்கு யானை பலம் வந்துவிடும். நாம் இணைந்து வாழ்வோம்" என்றான் ஆடம்ஸ்

இது பீட்டர் என்றிருக்க வேண்டும் சரிதானே அண்ணா.

மதி
14-05-2010, 06:02 AM
நன்றாகப் போகின்றது கதை.. மேலும் தொடருங்கள் மதுரையாரே

மதுரை மைந்தன்
14-05-2010, 10:44 AM
வந்த வில்லன் வில்லனாகாமல் தோழனாகிவிட்டான்.
இன்னும் ஆன்டி என்ன சொல்லப் போகிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது.

கதை சுவாரசியமாகப் போகுது... தொடர்ந்து எழுதுங்கள்.



இது பீட்டர் என்றிருக்க வேண்டும் சரிதானே அண்ணா.


தவறை சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றி செல்வா

மதுரை மைந்தன்
14-05-2010, 10:46 AM
நன்றாகப் போகின்றது கதை.. மேலும் தொடருங்கள் மதுரையாரே


நன்றி நண்பரே

அன்புரசிகன்
14-05-2010, 11:04 AM
காதல் வாழ்விற்கு என்ன சோதனை வரவுள்ளது என்ற ஆவல் மேலோங்குகிறது. தொடருங்கள்.

அக்னி
14-05-2010, 11:40 AM
ஆனா, நான்சி ஆண்ட்டி சும்மா விட்டுடுவாங்களா... பார்க்கலாம்...

govindh
14-05-2010, 12:13 PM
நதிக்கரை காதல்....அடுத்து என்ன நடந்தது...
அறிய ஆவல் கூடுகிறது...
சுவாரஸ்யமான கதை அமைப்பு..
பாராட்டுக்கள்...
தொடருங்கள்.

சிவா.ஜி
14-05-2010, 12:56 PM
அப்பாடா...அப்ப வில்லன் இனிமே தோழனாகிட்டான். அழகான நதிக்கரைக் காதல்...ரம்மியமாய் நகர்கிறது. இந்த மைதியில்...எப்போது புயலடிக்கப்போகிறதோ என அச்சமாக இருக்கிறது. அருமையாய்ப் போகும் கதைக்கு என் பாராட்டுக்கள் நண்பரே.

(ஆண்டி..என்பதை மட்டும் தயவுசெய்து இன்னொரு ட் சேர்த்து ஆண்ட்டி என எழுதினால் வாசிக்கும்போது உறுத்தாது. நந்தவனத்து ஆண்டியை நினைவு படுத்துகிறது ஒவ்வொருமுறையும்.)

பா.ராஜேஷ்
14-05-2010, 02:28 PM
மிக அருமையாக செல்கிறது தொடர்கதை. ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன!?? சீக்கிரம் தொடருங்கள்.

மதுரை மைந்தன்
16-05-2010, 09:35 AM
காதல் வாழ்விற்கு என்ன சோதனை வரவுள்ளது என்ற ஆவல் மேலோங்குகிறது. தொடருங்கள்.

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
16-05-2010, 09:35 AM
ஆனா, நான்சி ஆண்ட்டி சும்மா விட்டுடுவாங்களா... பார்க்கலாம்...

நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
16-05-2010, 09:37 AM
நதிக்கரை காதல்....அடுத்து என்ன நடந்தது...
அறிய ஆவல் கூடுகிறது...
சுவாரஸ்யமான கதை அமைப்பு..
பாராட்டுக்கள்...
தொடருங்கள்.



உங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
16-05-2010, 09:39 AM
அப்பாடா...அப்ப வில்லன் இனிமே தோழனாகிட்டான். அழகான நதிக்கரைக் காதல்...ரம்மியமாய் நகர்கிறது. இந்த மைதியில்...எப்போது புயலடிக்கப்போகிறதோ என அச்சமாக இருக்கிறது. அருமையாய்ப் போகும் கதைக்கு என் பாராட்டுக்கள் நண்பரே.

(ஆண்டி..என்பதை மட்டும் தயவுசெய்து இன்னொரு ட் சேர்த்து ஆண்ட்டி என எழுதினால் வாசிக்கும்போது உறுத்தாது. நந்தவனத்து ஆண்டியை நினைவு படுத்துகிறது ஒவ்வொருமுறையும்.)


தவறை சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி நண்பரே. தவற்றை திருத்திவிட்டேன்

மதுரை மைந்தன்
16-05-2010, 09:40 AM
மிக அருமையாக செல்கிறது தொடர்கதை. ஒவ்வொரு பாகத்திலும் விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லை. அடுத்து என்ன!?? சீக்கிரம் தொடருங்கள்.


நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
16-05-2010, 09:42 AM
பாகம் 6

" என்னுடன் வா. நாம் கிங்க்ஸ்டனில் வாழ்வோம்" என்ற பீட்டரின் அழைப்பு என் மனதை சஞ்சலத்திற்குள்ளாக்கியது. பீட்டர் நல்லவன் என்று நான் நம்பினாலும் ஆண்ட்டி நான்சியும் அங்கிள் சார்லசும் அதை ஏற்றுக் கொள்வார்களா என்று அஞ்சினேன். எனக்கு உதவும் வகையில் அன்று அந்த சம்பவம் நிகழ்ந்தது.

அன்றும் வழக்கம் போல நான் நதியின் கரையில் அமர்ந்து சித்திரம் வரைந்து கொண்டிருந்தேன். நதியின் அக்கரையில் சலனமில்லாத நீர் பகுதியில் படகை மிதக்கவிட்டவாறு நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தான் ஆடம்ஸ். அன்று பயணிகளை ஏற்றி வரும் விசைப்படகு அங்கு வர தாமதமாயிற்று. நான் பீட்டரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். நண்பகல் உணவு சாப்பிடும் வேளை கடந்து விட்டது. ஆண்ட்டி நான்சி நாங்கள் சாப்பிட வராததால் நதியின் கரைக்கு வந்து " உங்கள் இருவருக்கும் பசி தாகம் மறந்துவிட்டதா? " என்று கூறி விட்டு அக்கரையிலிருந்த ஆடம்ஸை சத்தம் போட்டு சாப்பிட வர அழைத்தார். நாவலில் மூழ்கி இருந்த ஆடம்ஸ் அதிலிருந்து பார்வையை எடுக்காமல் படகை நாங்கள் இருந்த இடத்திற்கு திருப்பினான். அதே வேளையில் பயணிகளின் விசைப்படகும் அங்கு வர அவன் படகு அதில் மோதி கவிழ்ந்து ஆடம்ஸ் தண்ணீருக்கடியில் சென்று விட்டான். இதைப்பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் அலற நான்சி ஆண்ட்டி " ஆடம்ஸ், ஆடம்ஸ் யாராவது ஆடம்ஸை காப்பாற்றுங்களேன்" என்று கதறினார். அப்போது பயணிகளின் படகிலிருந்து பீட்டர் நதியில் குதித்து ஆடம்ஸ் படகின் அடியில் நீந்தி சென்று நினைவிழந்திருந்த ஆடம்ஸை தன் கைகளில் தூக்கிக் கொண்டு மேலே வந்தான்.

கரையில் ஆடம்ஸை கிடத்தி அவன் வயிற்றை அமுக்கி அவன் குடித்திருந்த நீரை வெளியேற்றி, அவன் வாயுடன் தன் வாயைப் பொருத்தி காற்றை செலுத்தி இப்படி போராடினான் பீட்டர். நாங்கள் அனைவரும் செய்வதறியாது நின்று கொண்டிருந்தோம். சிறிது நேரம் கழிந்து ஆடம்ஸ் மெல்ல தன் கண்களைத் திறந்தபோது சுற்றியிருந்த பயணிகள் கை தட்டி " தாங்க் காட்" என்றார்கள். ஆண்ட்டி ஆடம்ஸைகட்டி பிடித்து முத்தமிட்டார். ஆண்ட்டி பீட்டரின் கைகளைப் பற்றிக் கொண்டு " உனக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. என் மகனைக் காப்பாற்ற கர்த்தர் தான் உன்னை அனுப்பி இருக்கிறார்". அங்கு வந்த சார்லஸ் அங்கிள் பீட்டரிடம் நிறைய பணத்தைக் கொடுத்தார். அவன் அதை ஏற்க மறுத்து விட்டான். விசைப்படகு கிளம்பும் நேரம் வந்த்தால் பீட்டர் பயணிகளுடன் சென்றான். போகும்போது என்னை திரும்பி பார்த்துக் கொண்டெ சென்றான்.

வீட்டுக்கு நாங்கள் திரும்பியவுடன் ஆடம்ஸ் பழச்சாறுகளைக்க் குடித்துவிட்டு களைப்பு மிகுதியால் படுக்க சென்றான். உணவருந்திக் கொண்டிருந்தபோது ஆண்ட்டி ஆடம்ஸைக் காப்பாற்றியது பீட்டர் என்று தெரியாமல் அவனைப் புகழ்ந்து கொண்டிருந்தார். நான் அவரிடம் ஆடம்ஸைக் காப்பாற்றியது பீட்டர் தான் என்றும் தாடி மீசை வளர்ந்து அடையளம் மாறிப் போயிருக்கிறான் என்றும் கூறினேன். அவன் கெட்டவன் இல்லை நல்லவன் தான் என்பதற்கு பல் வேறு ஆதார்ங்களை கூறினேன். அவன் கெட்டவனாக இருந்திருந்தால் மதுரையிலேயே அவன் தன் இச்சையைப் பூர்த்தி செய்து என்னை கைவிட்டிருப்பான் என்றும், என்னை காதலிப்பதால் தான் தன் உடலை வருத்தி பணியாளனஆக கப்பலில் பின் தொடர்ந்து கப்பல் கவிழ்ந்தபோது என்னைக் காப்பாற்றி இருக்கிறான் என்றேன். தன்னுடன் வந்து கிங்க்ஸ்டனில் வாழ அழைத்தையும் கூறினேன்.

நான் கூறியவற்றைக் கேட்டு மவுனமாக இருந்த ஆண்ட்டி சற்று நேரம் கழித்து " பீட்டர் குற்றவாளி, படிப்பறிவில்லாத தற்குறி என்று
உன் தந்தை கடிதத்தில் எழுதி இருந்ததை வைத்து தான் அவனை கோபித்துக் கொண்டோம். அவனை நீ நல்லவன் அன்று நம்பினால் உன் வாழ்க்கையில் நாங்கள் குறுக்கிட விரும்பவில்லை. ஆனால் உன் தந்தையின் கனவான மருத்துவ படிப்பை நீ தொடர வேண்டும். படிப்பு முடிந்து ஒரு மருத்துவராக நீ பணியாற்ரத் தொடங்கியவிடன் உனக்கும் பீட்டருக்கும் நாங்கள் திருமணம் செய்து வைக்கிறோம். படிப்பு முடிய நான்கு வருடங்கள் ஆகும். அதுவரை நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்" என்றார். இதைகேட்ட நான் ஆனந்த மிகுதியால் ஆண்ட்டியை கட்டி பிடித்து முத்தமிட்டேன்.

மறு நாள் பீட்டரை சந்தித்து ஆண்ட்டியின் சம்மதத்தை கூறினேன். பீட்டர் மகிழ்வுற்று " நீ மெல்போர்னில் சென்று படிக்கும் போது நானும் அங்கு ஒரு வேலையைத் தேடிக் கொண்டு அங்கு வந்து உனக்கு துணையாக இருப்பேன் என்றான். மெல்போர்னில் மருத்துவக் கல்லூரியில் நான் எம்.பி.பி.எஸ் டிகிரி கோர்ஸில் சேர்ந்தேன். பீட்டர் ஒரு மெக்கானிக்காக வேலை பார்த்தான் அங்கு. நாங்கள் இருவரும் தனித்தனியாக இருந்தோம். விடுமுறை நாட்களில் சந்திப்போம். நான்கு வருடங்கள் படிப்பில் கழிந்தபின் கிங்க்ஸ்டனில் ஆஸ்பத்திரியில் மருத்துவராக பணியாற்ற துவங்கினேன்.

ஆண்ட்டியும் அங்கிளும் எங்களுக்கு அங்கேயே ஒரு சர்ச்சில் திருமணம் செய்து வைத்தார்கள். எங்களுடைய இல்லற வாழ்க்கை இனிமையாக துவங்கியது. பீட்டர் தன் உழைப்பால் இந்த படகு வீட்டை வாங்கினான். நாங்கள் இருவரும் ஆச்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றோம். இருவரும் காதல் பறைவளாக ஆச்திரேலியாவை வலம் வந்தோம். எங்களுடைய காதலின் சின்னமாக ஜானை கறுவுற்றேன்.

பசுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்த எங்களுடைய வாழ்க்கையை குலைக்க கரு நாகமாக வந்தான் ரிச்சர்ட்.



தொடரும்.....

சிவா.ஜி
16-05-2010, 10:00 AM
ஆபத்தாண்டவனாக பீட்டர் வந்து ஆடம்ஸின் உயிரை காப்பாற்றியதற்குப் பரிசாக...தன் காதலை அடைந்துவிட்டான். மகிழ்ச்சியாய்ப் போய்க்கொண்டிருக்கும் காதல் வாழ்க்கையில்....இன்னொரு வில்லனா?

ரிச்சர்ட் என்ன செய்யப்போகிறான்....ஆவலை அதிகரிக்கும் அத்தியாய முடிவு. தொடருங்கள் நண்பரே.

அன்புரசிகன்
16-05-2010, 11:54 AM
அடக்கடவுளே... வில்லத்தனம் ஒன்று விலகி ரிச்சர்ட் என்ற வில்லனே உருவாகிவிட்டானா...

ஆவல் அதிகமாகிறது. தொடருங்கள்.

Akila.R.D
17-05-2010, 03:49 AM
நம்ம காதல் ஜோடி சேர்ந்துட்டங்க..
சந்தோஷமா இருக்கு...

ஆனா அது யாரு ரிச்சர்ட்...

காத்திரிக்கிறோம்...

மதுரை மைந்தன்
17-05-2010, 10:54 PM
பாகம் 7

மகப்பேறுவிற்காக நான் கிங்ஸ்டன் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆனேன். ஆண்ட்டி நான்சி ஆஸ்பத்திரியில் எனக்கு துணயாக இருந்து என்னுடைய அன்னை போல் எனக்கு பணிவிடைகள் செய்தார். சில நாட்கள் கழித்து பிரசவ வேதனை வந்து ஒரு அழகான ஆண் குழந்தையை ஈன்றேன். ஜான் என்று அவனுக்கு பெயரிட்டு புனித நீராட்டு செய்தோம். பீட்டரும் நானும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினோம். பிரசவம் சிசேரியன் ஆபரேஷ்ன் மூலம் நடந்ததால் என்னை ஆஸ்பத்திரிலேயே பல நாட்கள் இருக்க வேண்டியிருந்தது.

ஆபரேஷன் நடந்த இடத்தில் போடப்பட்ட தையல்களைப் பிரித்து ஒரு நாள் என்னை டிஸ்சார்ஜ் செய்தார்கள். ஆண்ட்டி நான்சி என்னை எங்களுடைய படகு வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டின் முன்னறையில் பீட்டருடன் ஒருவன் அமர்ந்திருந்தான். பீட்டர் எங்களை வரவேற்று ஜானை எடுத்து கொஞ்சினான். பின் திடீரென்று ஞாபகம் வந்து " பிலோமினா இது ரிச்சர்ட். இங்கிலாந்த்தில் என்னுடைய நெருங்கிய நண்பன். ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுலா பயனத்தில் வந்தவனை தற்செயலாக சந்த்திதேன். ரிச்சர்ட் நம்முடன் சில நாட்கள் தங்கப் போகிறான். ரிச்சர்ட், இது என்மனைவி பிலோமினா" என்று அவனை அறிமுகப்படுத்தினான்.

ரிச்சர்டைப் பார்த்தவுடனேயே எனக்கு அவனைப் பிடிக்கவில்லை. அவன் கண்களில் கபடம் தெரிந்தது. என்னைப் பார்த்து விகாரமாக சிரித்து " நைஸ் டு மீட் யூ சிஸ்டர்" என்றான். அவனுடைய போலியான பணிவு எனக்கு எரிச்சலைத் தந்தது. இருந்தாலும் பீட்டரின் நண்பன் என்ற காரணத்தால் தாங்க்ஸ் என்றேன் அவனிடம். ஆண்ட்டி நான்சிக்கு பல நன்றிகளைக் கூறினேன். அதற்கு அவர் " இது என் கடமை" என்று சொல்லி விடை பெற்று சென்றார். ஜானை பார்த்துக் கொள்ள ஒரு நர்சை அமர்த்தி இருந்தான் பீட்டர்.

நான் பெரும்பாலும் எங்களுடைய படுக்கை அறையில் ஜானுடன் இருப்பேன். சில சமயங்களில் டாக்டர் என்னை நடக்க சொல்லி இருந்ததால் ஜானை நர்சிடம் விட்டு விட்டு மெதுவாக படகின் மேல் பகுதிக்கு சென்று காற்று வாங்குவேன். பீட்டர் தன் வேலையாக வெளியே சென்று விடுவான். ரிச்சர்ட் எங்கும் போகாமல் வீட்டிலேயே அவனுடைய அறையில் இருப்பான். ஆனால் பீட்டர் இல்லாத சமயம் என்னருகில் வந்து ஏதாவது பேசுவான். அவன் என்னை முழுங்குவது போல் பார்ப்பது எனக்கு அறுவருப்பாக இருந்தது. சில சமயங்களில் வேன்டுமென்றே என் மீது உரசுவான். பிறகு போலியாக சிரித்து சாரி சொல்வான். அவனுக்கு என் மீது ஒரு கண் இருந்தது.

ஒரு நாள் இரவு படுக்கு முன் நான் பீட்டரிடம் ரிச்சர்டின் நடத்தை சரியில்லை என்றேன். பீட்டர் உடனே கோபமுற்று " அவன் உன்னிடமும் வாலாட்டுகிறானா. இங்கிலாந்திலிருந்து வந்து என்னை மிரட்டிக் கொண்டிருக்கிறான்" என்றான். " மிரட்டுகிறானா? எதற்காக?" என்று நான் கேட்டதற்கு பீட்டர் பதிலளிக்கவில்லை. ஏன் மிரட்டுகிறான் என்பதற்கு மறு நாள் விடை கிடைத்தது.

தொடரும்....

அக்னி
18-05-2010, 08:07 AM
நாங்கள் இருவரும் ஆச்திரேலியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுலா சென்றோம். இருவரும் காதல் பறைவளாக ஆச்திரேலியாவை வலம் வந்தோம். எங்களுடைய காதலின் சின்னமாக ஜானை கறுவுற்றேன்.

ஆஸ்திரேலியா, காதற் பறாவைகளாக
என்ற வார்த்தைகளிற் தட்டச்சுத் தவறுகள். கவனியுங்கள்...

பிரசவித்த தாயை உரசிப்பார்க்கும் வக்கிர குணம் கொண்ட ரிச்சார்ட்டின் பின்னணி என்ன?

பிலோமினாவின்மீதான இச்சையால் சீண்டிப்பார்க்கின்றனோ என நினைத்தால்,
பீட்டரை ஏன் மிரட்டுகின்றான்...???

பா.ராஜேஷ்
18-05-2010, 04:01 PM
ஒவ்வொரு பாகமும் மிக விறு விறுப்பாக செல்கிறதே. அடுத்த பாகம் எதிர்நோக்கி காத்திருக்கிறேன்...

govindh
18-05-2010, 10:38 PM
நீ இங்கிலாந்திலிருந்து தப்பித்து வந்துள்ள ஒரு குற்றவாளி என்பது எங்களுக்கு தெரியும். ஆகவே உன்னை ஆஸ்திரேலிய போலீசிடம் ஒப்படைத்தால் உன் வாழ்வு பாழாகிவிடும். நீ இங்கிருந்து உடனே போய் விடு" என்றார்கள். போலீஸ் என்ற வார்த்தயைக் கேட்டவுடன் பீட்டரின் முகம் வெளிரிப் போய் விட்டது. அவன் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு சென்று விட்டான்" என்று கூறி முடித்தார்,
பீட்டர் சட்டத்திலிருந்து தப்பித்துள்ள ஒரு குற்றவாளி என்று கேட்டு என் உலகமே இருண்டது. "

ஓ...இதனால் தான் இங்கிலாந்திலிருந்து வந்த ரிச்சர்ட், பீட்டரை மிரட்டுகிறானா....?

மதுரை மைந்தன்
20-05-2010, 10:51 AM
இறுதி பாகம்

மறு நாள் வழக்கம் போல விடிந்த பின் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பீட்டரும் நானும் முன்னறையில் அமர்ந்து செய்தி தாளைப் படித்துக் கொண்டிருந்தோம். அப்போது வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. கதவைத்திறந்த பீட்டரிடம் " நீங்க தான் பீட்டரா? உங்களை கைது செய்து அழைத்துப் போக வந்திருக்கிறோம்" என்றனர் அங்கு வந்திருந்த ஆஸ்திரேலிய போலீஸ்காரர்கள்.

இதைக் கேட்டு திடுக்குற்ற பீட்டர் " ஏன்?" என்றான். அதற்கு அவர்கள் " இங்கிலாந்து போலீசாரிடமிருந்து உங்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆகவே விசாரணைக்கு உங்களை இங்கிலாந்து அனுப்பப் போகிறோம்" என்றனர். எனக்கு தலை சுற்றியது.

அப்போது அங்கு வந்த ரிச்சர்ட் " பீட்டர் நீ அந்த கொலையை பண்ணுவாய் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. கவலைப் படாதே. நான் உன்னை எப்படியாவது காப்பற்றுவேன். நீ திரும்பி வரும் வரை உன் மனைவியையும் குழந்தையையும் நான் பார்த்துக் கொள்வேன்" என்று சொல்லி விஷமமாக சிரித்தான்.

பீட்டர் அவனிடம் " எல்லாம் உன் வேலை தான் என்று எனக்கு தெரியும். என்னைக் காட்டிக் கொடுத்து நீ தப்ப எண்னாதே. உண்மை ஒரு நாள் வெளி வரும் போது நீ தண்டனை அனுபவிப்பாய்" என்றான். ஆஸ்திரேலிய போலீசார் பீட்டரை கையமர்த்திவிட்டு " மிஸ்டர் ரிச்சர்ட் உங்களையும் கைது செய்ய எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது" என்று சொன்னவுடன் அவன் முகம் தொங்கி விட்டது.

பீட்டர் என்னருகே வந்து " பிலோமினா என்னை நம்பு. நான் குற்றமற்றவன். ஏதோ எனக்கெதிராக சதி நடந்திருக்கிறது. நான் சீக்கிரம் வெளியே வருவேன். அதுவரை ஜானை பத்திரமாக பார்த்துக் கொள்" என்று சொல்லி போலிசாரை பின் தொடர்ந்தான்.

என்ன செய்வதென்று அறி யாமல் நான் நின்றிருந்த போது உள்ளே ஜான் அழும் சத்தம் கேட்டது. ஜானைப் பார்த்துக் கொள்ளும் நர்ஸ் அது வரை வர வில்லை. நான் ஜானைத் தூக்கிக் கொண்டு படகின் மேல் தளத்திற்கு வந்து பீட்டரை போலீசார் அழைத்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். படகின் விளிம்பில் நான் நின்றிருந்தேன். அந்த சமயத்தில் தான் அந்த விபரீதம் நடந்தது. என் கையிலிருந்து துள்ளிய ஜான் நதியில் வீழ்ந்தான். நான் ஜான் என்று அலறினேன். ஜான் விழுந்ததைப் பார்த்து விட்ட பீட்டர் போலீசாரிடமிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு நதியில் பாய்ந்தான். ஜான் விழுந்ததை பார்த்திராத போலீசார் பீட்டர் தப்பித்து போகிறான் என்று நினைத்து அவனௌ சுட்டனர். குண்டடடி பட்டாலும் பீட்டர் தண்ணிருக்கடியிலிருந்து ஜானை காப்பாற்றி பக்கத்திலிருந்த படகில் அவனை படுக்க வைத்து விட்டு தண்ணீரில் சரிந்தான். அவன் மூழ்கிய இடத்தில் தன்னீர் ரத்தக்கறையாயிற்று.

எனக்கு உலகமே இருண்டது. " உனக்கென வாழ்வேன், உன்னை நான் பிரிந்தால் உனக்கு முன் இறப்பேன் என்றாயே பீட்டர் என்னை விட்டு என்னை விட்டு ஏன் பிரிந்தாய். இதோ நானும் உன்னுடன் வருகிறேன் என்று கதறிக் கொண்டு நதியில் பாய்ந்தேன்.

மீண்டும் நான் கண் முழித்தபோது என்னருகே ஜான் விளையாடிக் கொண்டிருந்தான். நான்சி ஆண்டி சோகமே உருவாக என்னருகில் அமர்ந்திருந்தார். " நீ ஏன் அப்படி செய்தாய் பிலோமினா. நீயும் இறந்துவிட்டால் ஜான் அனாதை ஆயிருப்பானே. நடக்கக் கூடாதது நடந்து விட்டது. மனதை தேற்றிக் கொண்டு ஜானுக்காக உயிர் வாழ வேன்டும் நீ. உனக்கு எல்லா உதவிகளையும் செய்ய நாங்கள் இருக்கிறோம்" என்றார். என் பீட்டரை அநியாயமாக இழந்து விட்டு இன்று நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இங்கிலாந்தின் ஸ்காட்லண்ட் யார்ட் போலீசார் ரிச்சர்ட் தான் உண்மையில் கொலை செய்தவன் என்று கன்டு பிடித்து அவனை தூக்கிலிட்டனர். இருந்தாலும் என் பீட்டர் எனக்கு திரும்ப கிடப்பானா?" என்று சொல்லி முடித்தார் பிலோமினா.

"உங்கள் கதை என்னை நெகிழ்த்தி விட்டது. பல சோதனைகளைக் கடந்து காதலனைக் கை பிடித்து பின் ஒரு நாள் அவனை இழந்தது கேட்டு வருந்துகிறேன். மதுரை மண்ணின் செல்வியான உங்களை எனது சகோதரியாக ஏற்றுக் கொள்கிறேன். உங்களுக்கு என்ன உதவி தேவையென்றாலும் என்னிடம் கேளுங்கள். நான் நிச்சயம் செய்வேன்" என்று கூறி விடை பெற்று நான் வந்த சுற்றுலா பேருந்து நினிறிருந்த இடத்தை அடைந்தேன். அங்கு கைடும் ஓட்டுனரும் பயணிகளில் ஒருவர் குறைகிறாரே என்று என் வழி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களை சமாதனம் செய்யும் வகையில் நான் விரைவாக சென்று பேருந்தில் அமர்ந்து மெல்போர்ன் திரும்பினேன். பயணத்தின் போது இந்த கதையை மன்றத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.

முற்றும்.

மர்ரே நதியின் படகு வீடுகளின் புகைப்படங்களை இங்கு தருகிறேன்.

http://img718.imageshack.us/img718/4351/imga0724.jpg (http://img718.imageshack.us/i/imga0724.jpg/)

http://img408.imageshack.us/img408/1941/imga0725.jpg (http://img408.imageshack.us/i/imga0725.jpg/)

http://img64.imageshack.us/img64/766/imga0727.jpg (http://img64.imageshack.us/i/imga0727.jpg/)

மதி
20-05-2010, 10:55 AM
அருமையான காதல் கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதுரை மைந்தரே.. பிலோமினா பீட்டரின் கதை உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்டது...

அன்புரசிகன்
20-05-2010, 11:13 AM
இது கதையா நிஜமா???

கனத்த முடிவு. பீட்டரின் பிரிவு நிச்சயம் கொடுமை தான்.

சிவா.ஜி
20-05-2010, 12:10 PM
எதற்கெடுத்தாலும் பொசுக்கென தண்ணீரில் குதித்துவிடும் பீட்டர்...இந்தமுறை தன் மகனைக் காப்பாற்ற*க் குதித்ததே அவனது கடைசிப் பாய்ச்சலாகிவிட்டதே. பாவம் பிலோமினா...

நல்லதொருக் காதல் கதையை சுவார்சியமாய் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

Akila.R.D
21-05-2010, 06:06 AM
பீட்டர் இறந்தது மனதிற்கு பாரமாக இருக்கிறது...

தொடர்ந்து நல்ல கதைகளை தாருங்கள்...

வாழ்த்துக்கள்...

அக்னி
21-05-2010, 06:26 AM
சினிமாத்தனமற்ற, கதையோடு இயைந்துபோகின்ற, துன்பகரமான, அழுத்தமான முடிவு.

இது உண்மைச் சம்பவமா மதுரைமைந்தரே...???

இந்தத் தொடரில் என்னை இன்னுமொரு அம்சமும் கவனிக்க வைத்தது.
தொடரின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் சொல்லுவதுபோலவும்,
தொடரின் மத்தியபகுதியை பிலோமினா சொல்லுவதுபோலவும்,
கதையை அமைத்திருக்கின்றீர்கள்.
வித்தியாசமான இந்தக் கதையமைப்புக்கு எனது விசேட பாராட்டு.

இறுதியிற் பிலோமினாவை மறுமணம் செய்ய எத்தனிக்காமல்,
சகோதரியாக ஏற்றுக்கொண்ட முடிவு வியாபாரரீதியான கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திக்காட்டும் மிக மிக முக்கிய அம்சமாகும்.

அழகிய படகுவீட்டுப் படங்களைத் தந்து, கண்டு ரசிக்க வைத்தமைக்கு நன்றி...
(ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதி, நெதர்லாந்தின் படகுவீடுகளில் நண்பர்களுடன் வாழ்ந்த சந்தோஷக் காலம் நினைவிலாடுகின்றது...)

என் நிறைந்த பாராட்டு.., ஐந்து நட்சத்திர வாழ்த்துக்களுடன்...

மதுரை மைந்தன்
21-05-2010, 10:37 AM
அருமையான காதல் கதையை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி மதுரை மைந்தரே.. பிலோமினா பீட்டரின் கதை உண்மையிலேயே நெகிழ வைத்துவிட்டது...

உங்களுடைய தொடரும் ஆதரவு என்னை பெரிதும் ஊக்குவிக்கிறது. நன்றி நண்பர் மதி

மதுரை மைந்தன்
21-05-2010, 10:45 AM
இது கதையா நிஜமா???

கனத்த முடிவு. பீட்டரின் பிரிவு நிச்சயம் கொடுமை தான்.


இது கதைதான் ஆனா கதையில்லை. இது நிஜம் தான் ஆனா நிஜம் இல்லை. :lachen001:

காதல் கதைகள் சோகத்தில் முடியவேண்டும் என்று நியதி. என்னால் அதை மாற்ற முடியவில்லை .உங்கள் பின்னஊட்டதிற்கு மிக்க நன்றி

மதுரை மைந்தன்
21-05-2010, 10:47 AM
எதற்கெடுத்தாலும் பொசுக்கென தண்ணீரில் குதித்துவிடும் பீட்டர்...இந்தமுறை தன் மகனைக் காப்பாற்ற*க் குதித்ததே அவனது கடைசிப் பாய்ச்சலாகிவிட்டதே. பாவம் பிலோமினா...

நல்லதொருக் காதல் கதையை சுவார்சியமாய் அளித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி நண்பரே

மதுரை மைந்தன்
21-05-2010, 10:48 AM
பீட்டர் இறந்தது மனதிற்கு பாரமாக இருக்கிறது...

தொடர்ந்து நல்ல கதைகளை தாருங்கள்...

வாழ்த்துக்கள்...


வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி

மதுரை மைந்தன்
21-05-2010, 10:56 AM
சினிமாத்தனமற்ற, கதையோடு இயைந்துபோகின்ற, துன்பகரமான, அழுத்தமான முடிவு.

இது உண்மைச் சம்பவமா மதுரைமைந்தரே...???

இந்தத் தொடரில் என்னை இன்னுமொரு அம்சமும் கவனிக்க வைத்தது.
தொடரின் ஆரம்பத்திலும், முடிவிலும் நீங்கள் சொல்லுவதுபோலவும்,
தொடரின் மத்தியபகுதியை பிலோமினா சொல்லுவதுபோலவும்,
கதையை அமைத்திருக்கின்றீர்கள்.
வித்தியாசமான இந்தக் கதையமைப்புக்கு எனது விசேட பாராட்டு.

இறுதியிற் பிலோமினாவை மறுமணம் செய்ய எத்தனிக்காமல்,
சகோதரியாக ஏற்றுக்கொண்ட முடிவு வியாபாரரீதியான கதைகளிலிருந்து இந்தக் கதையை வேறுபடுத்திக்காட்டும் மிக மிக முக்கிய அம்சமாகும்.

அழகிய படகுவீட்டுப் படங்களைத் தந்து, கண்டு ரசிக்க வைத்தமைக்கு நன்றி...
(ஒரு வருடத்திற்கும் மேலான காலப்பகுதி, நெதர்லாந்தின் படகுவீடுகளில் நண்பர்களுடன் வாழ்ந்த சந்தோஷக் காலம் நினைவிலாடுகின்றது...)

என் நிறைந்த பாராட்டு.., ஐந்து நட்சத்திர வாழ்த்துக்களுடன்...

இந்த கதையில் வரும் இடங்களும் அதன் வருணனைகளும் நிஜமே. சம்பவங்களும் கதா பாத்திரங்களும் என் கற்பனைதான். மெல்போர்ன் நகரத்தில் மதுரையை சேர்ந்த ஆங்கிலோ இந்தியர்களை சந்தித்ததும் மர்ரே நதியைக் காண சென்றதும் நிஜம். மீதி அனைத்தும் என் கற்பனையே.

உங்கள் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி

தாமரை
21-05-2010, 11:23 AM
அழகான கதையோட்டம், நதி நீரில் படகில் பயணிப்பது போலவே!..

ஃபிலோமினா, பீட்டர், நான்சி என அருமையான சில மனிதர்களை மனதிற்குள் உட்காரவைத்து விட்டீர்கள்.

மனம் நிறைந்த பாராட்டுகள்.

செல்வா
21-05-2010, 12:10 PM
வாசித்துமுடித்து சற்று நேரத்திற்கு என்ன எழுதுவது என்று தெரியவில்லை.

கச்சிதமாகக் கட்டப்பட்ட கதை.

இடங்களைப் பற்றிய கதை மாந்தர்கள் பற்றிய வர்ணனையில்லை.

ஆனால்... மனதைக் கலக்கும் அருமையான கதை.

தொடர்ந்து நிறைய எழுதுங்கள் அண்ணா...

வாழ்த்துக்கள்.

பா.ராஜேஷ்
21-05-2010, 04:20 PM
மிக அழகான எழுத்துக்களுடன் வசீகரமான கதை. பாராட்டுக்கள் அண்ணா.

அன்புரசிகன்
22-05-2010, 12:10 AM
எனக்கும் முதலில் புரியவில்லை. நானும் google map இல் தேடி களைத்துவிட்டேன். தற்செயலாக எனது நண்பன் ஒருவனுடன் பேசிய போது தான் புரிந்தது. விக்டோரியா மாநிலத்தினை மற்ற மாநிலங்களுடன் பிரிப்பது இந்த நதி தானாம். (அவுஸில் நீண்ட மரே டாலிங் நதி என படித்திருக்கிறேன்) அவன் வேலைசெய்வது மில்டுராவில்... அநேக அமைதி விரும்பிகள் தூரப்பிரதேசங்களில் அரச உத்தியோகமாக வேலைசெய்கிறார்கள்... இலவச வாகனம் குறைந்த செலவு அப்படி இப்படி என....

govindh
22-05-2010, 10:44 AM
இயல்பான கதையோட்டம்....
மனம் கனக்கச் செய்யும் கதை முடிவு...

இந்தக் காதல் கதை....
அருமை...பாராட்டுக்கள்.