PDA

View Full Version : கண்ணீர் உற்பத்தி



jawid_raiz
08-05-2010, 01:24 PM
http://solvanam.com/wp-content/uploads/2009/12/masterpiece-225x300.jpg

என் காவலனுக்கு
கண்ணீர் தாகமென்று
நடக்கிறது
என் கண்களுக்குள்
கண்ணீர் உற்பத்தி


பூவென்று புகழ்ந்தான்.
காம்பாக காப்பான் என்று
தெம்பாக வந்துவிட்டேன்
பெற்றவரின் கண்ணில்
கண்ணீர் உற்பத்தி....


கரும்பென்று சொன்னான் என்னை
கட்டிலில் துணையாக்கி
தொட்டிலும் இருக்கிறது இன்று
கட்டிலுக்கு துணையாக



பூவென்று புகழ்ந்தவன்
பசியாறி திசை மறந்தான்
வண்டென்று தெரியாமல்
தேனிழந்த பூவாய் நான்!
பூவின் கருவறையில்
கண்ணீர் உற்பத்தி

கரும்பென்று புகழ்ந்தவன்
சுவைத்து முடித்து விட்டு
சக்கையை மிச்சம் வைத்தாய்
எறும்புகளுக்கு உணவாக




படுக்கைக்கு துணையாக
பாவி நீ எதற்கு?
ஒற்றை தலையணை போதும்
விட்டில் என் துணைக்கு

தொட்டிலில் நமது உயிர்
எட்டி எட்டி பார்க்கிறது
"இவன்தான் உன்தந்தை"
என்று சொல்லும் நாளை எண்ணி
என் கண்ணீர் உற்பத்தி
ஓயாமல் தொடர்கிறது
.

ஆதவா
08-05-2010, 01:37 PM
என்னது,,,, கண்ணீர் உற்பத்தியா?? அவ்..... அதுதான் நமக்கு நடக்கவே மாட்டேங்குதே!

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
கண்ணீர் தாகம்,
கண்ணீர் உற்பத்தி,
கட்டிலுக்குத் துணை தொட்டில்,
பூவின் கருவறையில் கண்ணீர் உற்பத்தி,

போன்றவை அருமை. முடித்தவிதத்தில் எனக்கு திருப்தி இல்லை. எனினும் நன்றாக இருக்கிறது.

அன்புடன்
ஆதவா!!!

ஜனகன்
08-05-2010, 01:55 PM
கண்ணீர் உற்பத்தி கவிதை அருமையான வரிகள்.
கவிதை புதிது , உங்களின் விமர்சனம் அழகு.மேலும் அசத்துங்க.

jawid_raiz
08-05-2010, 04:05 PM
என்னது,,,, கண்ணீர் உற்பத்தியா?? அவ்..... அதுதான் நமக்கு நடக்கவே மாட்டேங்குதே!

உங்கள் கவிதை நன்றாக இருக்கிறது.
கண்ணீர் தாகம்,
கண்ணீர் உற்பத்தி,
கட்டிலுக்குத் துணை தொட்டில்,
பூவின் கருவறையில் கண்ணீர் உற்பத்தி,

போன்றவை அருமை. முடித்தவிதத்தில் எனக்கு திருப்தி இல்லை. எனினும் நன்றாக இருக்கிறது.

அன்புடன்
ஆதவா!!!

முடித்தவிதத்தில் எனக்கும் திருப்தியில்லை தான்.... பார்ப்போம் மாற்ற முடியுமா என்று... உங்கள் கருத்துக்கு நன்றி ஜனகா!

சிவா.ஜி
08-05-2010, 04:09 PM
காவலனுக்குக் கண்ணீர்தாகம்...வாவ்....அருமை.

கவிதை நெடுகிலும் வார்த்தைப் பிரயோகங்கள் மிக அழகு.

ஆதவா சொன்னதைப் போலவே முடிவில் ஒரு 'நச்' இல்லை. இருந்தாலும் நல்லக் கவிதை.

வாழ்த்துக்கள் ஜாவீத்.

jawid_raiz
08-05-2010, 04:24 PM
கருத்துகளுக்கு நன்றி நண்பர்களே! முடிவில் சற்று மாற்றம் செய்திருக்கிறேன். உங்கள் கருத்துகளை மீண்டும் எதிர்பார்த்தவனாய்.....

சிவா.ஜி
08-05-2010, 04:42 PM
அன்னையை அறிந்தப் பிஞ்சுக்கு
தந்தையை அறிமுகப்படுத்தும்
அந்த நாளுக்காய் காத்திருக்கிறாள்
கண்களில் மட்டும் கண்ணீர் உற்பத்தி....
கட்டுக்கடங்காமல்....!!!

சிலநேரங்களில் முடிவு எழுதும்போது இப்படியாகிவிடுவதுண்டு ஜாவீத். மாற்றம் நன்றாக இருந்தாலும்....முந்தையப் பந்திகளின் தாக்கம் கொஞ்சம் குறைவுதான்.

தொடருங்கள் ஜாவீத். வாழ்த்துக்கள்.

jawid_raiz
08-05-2010, 04:43 PM
நன்றி சிவா.ஜி

nambi
08-05-2010, 04:58 PM
கவிதை...... நன்றாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

jawid_raiz
08-05-2010, 05:06 PM
கவிதை...... நன்றாக இருந்தது. பகிர்ந்தமைக்கு நன்றி!

நன்றி Nambi!

செல்வா
11-05-2010, 03:00 PM
ஆதவரே சொல்லியாச்சு...
அப்புறம் நானென்ன சொல்ல...

நல்லாருக்குங்க கவிதை வாழ்த்துக்கள்.

jawid_raiz
11-05-2010, 03:35 PM
நன்றி செல்வா!