PDA

View Full Version : குதிரை குறித்து...!

குணமதி
07-05-2010, 05:16 PM
குதிரைப் பெயர்கள்

குதிரை குதிப்பது அல்லது தாண்டுவது

பாடலம் விரிந்த கழுத்தும் மார்பும் உடையது

கோணம் அல்லது கோடகம் முக்கோணக் கழுத்துடையது

இவுளி எதிர்த்துப் போர் புரிவது

வன்னி வெண்ணிறமானது

பரி வேகமாக ஓடுவது

கந்துகம் கடைந்த தூண் போன்ற கால்களை உடையது

கனவட்டம் கனமும் உருட்சியுமுடையது

கோரம் கொடுமையானது

புரவி மதில் தாண்டுவது

இன்னும்,

கிள்ளை
பாய்மா
உன்னி
கற்கி
அரி
அயம்
மா
கொக்கு
கொய்யுளை
சடிலம்
கோடை
குந்தம்
அத்திரி

-ஆகிய பெயர்களும் உண்டு.

(நன்றி: ஞா.தே. பாவாணர், சூடாமணி நிகண்டு)

nambi
08-05-2010, 01:10 AM
குதிரைக்கு 23 பெயர்கள் உண்டு என்பதை அறியும் பொழுது ஆச்சரியமடையவைக்கிறது.

இதில்....

கிள்ளை என்பது கிளியையும் குறிக்கிறது.
கொய்யுளை என்பது குதிரையின் முடியையும் குறிக்கிறது.
அத்திரி கோவேறு கழுதையும் குறிக்கும்.
சடிலம் சடையையும் குறிக்கும்.
குந்தம் எறியீட்டியையும் குறிக்கும்.
அயம் ஆட்டையும் குறிக்கும்.
மா விலங்கு வடிவமாக பிறக்கும் மனிதனை குறிக்கும். (கதைகளில் பயன்படுத்தியிருப்பார்கள்)
கற்கி கோயில் என்பதையும் குறிக்கும்.
உன்னி தியானி என்பதையும் குறிக்கும்

....ஆதாரம் பால்ஸ் தமிழகராதி

பக்ர்வுக்கு நன்றி!

குணமதி
08-05-2010, 03:25 AM
நன்றி நம்பி.

சிவா.ஜி
08-05-2010, 05:47 AM
குதிரைக்கு இத்தனை பெயர்களா? குதிரை, புரவி, பரி இவை மட்டுமே பெரும்பாலும் அறியப்பட்டவை.

பகிர்வுக்கு நன்றி குணமதி.

மேலதிக விவரங்களுக்கு நன்றி நம்பி.

பாரதி
08-05-2010, 08:51 AM
தகவல் தந்த குணமதிக்கும், கூடுதல் தகவல் தந்த நம்பிக்கும் மிக்க நன்றி.
இத்தனைப்பெயர்களை எப்படி நினைவில் கொள்வது..??

குணமதி
08-05-2010, 10:25 AM
நன்றி சிவா.

குணமதி
08-05-2010, 10:26 AM
நன்றி பாரதி.

பா.ராஜேஷ்
09-05-2010, 05:25 PM
அருமையான பகிர்வு. நன்றி குணமதி மற்றும் நம்பி..
அடுத்த விலங்கு எது!?

அமரன்
09-05-2010, 09:33 PM
தகவல் தந்த குணமதிக்கும், கூடுதல் தகவல் தந்த நம்பிக்கும் மிக்க நன்றி.
இத்தனைப்பெயர்களை எப்படி நினைவில் கொள்வது..??

இதே கேள்வியை நான் பல இடங்களில் சந்திப்பதுண்டு..

தமிழாக்கம் எனும் பேரில் தமிழ் தூரமாக்கப்படுகிறது.. நினைவு ஆற்றலுக்கு சவால் விடுக்கப்பட்டு களைப்பு ஏற்படுத்தப்படுகிறது.. இப்படி இன்னும் சில வினாக்கள்.. ஆனால் வினவியவர்களிடம் நான் கண்ட ஒற்றுமை எல்லாரும் சற்றே வயசானவர்களே:)

அவர்களுக்கு நான் சொல்லும் பதில்.. உங்கள் இளம் பிள்ளைகளுக்கு இவை சாத்தியம். பிள்ளைகள் கஷ்டமின்றிக் கற்கின்றார்கள். நீங்கள் பிள்ளைகளிடம் கற்றுக்கொள்ளுங்கள்.

குணமதிக்கும் நம்பிக்கும் நன்றி..

மன்றத்து மற்றய இலக்கிய ஆர்வலர்களிடமிருந்து கருத்துகளை எதிர்பார்க்கிறேன். சுவையான சுண்டல் கிடைக்கும் என்று உள்ளுணர்வு சொல்லுகிறது.

கலையரசி
11-05-2010, 02:36 PM
குதிரை, புரவி பரி, ஆகியவை தவிர மற்றப் பெயர்கள் அனைத்தையுமே இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி குணமதி அவர்களே!

செல்வா
11-05-2010, 02:51 PM
இத்தனைப் பெயர்களா குதிரைக்குத் தமிழில்....

இத்தனைக்கும் குதிரை தமிழக்த்தின் சொந்த விலங்கு கிடையாது. அராபியர் அறிமுகப்படுத்தியது என்றுச் சொல்கிறார்கள்.

ஆச்சரியம் தான்.

பகிர்வுக்கு நன்றிகள் குணமதி மற்றும் நம்பி.

அக்னி
11-05-2010, 03:35 PM
நேற்று நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கையில்,
அவர் கேட்டார், தமிழ் மொழியை வேறு மொழிகளுக்கு மாற்ற ஏதேனும் மென்பொருட்கள் இருக்கின்றனவா... என்று...

அப்போது நான் சொன்னேன்,
தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தங்கள், ஒவ்வொன்றுக்கும் பல தமிழ்வார்த்தைகள்
ஆதலினாற் இப்படியான ஒரு மென்பொருள் உருவாக்கம் என்பது,
மிகக்கடினமானதொரு சவாலாகவே இருக்கும்... என்று...

குதிரை சுமக்கும் இப்பெயர்கள் எனது கூற்றைச் சற்றேனும் உண்மையாக்குகின்றதே...

பகிர்வுக்கும், அலசலுக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

குணமதி
11-05-2010, 03:54 PM
அருமையான பகிர்வு. நன்றி குணமதி மற்றும் நம்பி..
அடுத்த விலங்கு எது!?

இயன்ற விரைவில் எழுதுகிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
11-05-2010, 03:54 PM
கருத்துரைக்கு நன்றி அமரன்.

குணமதி
11-05-2010, 03:55 PM
குதிரை, புரவி பரி, ஆகியவை தவிர மற்றப் பெயர்கள் அனைத்தையுமே இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி குணமதி அவர்களே!

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
11-05-2010, 03:56 PM
இத்தனைப் பெயர்களா குதிரைக்குத் தமிழில்....

இத்தனைக்கும் குதிரை தமிழக்த்தின் சொந்த விலங்கு கிடையாது. அராபியர் அறிமுகப்படுத்தியது என்றுச் சொல்கிறார்கள்.

ஆச்சரியம் தான்.

பகிர்வுக்கு நன்றிகள் குணமதி மற்றும் நம்பி.

கருத்துரைக்கு நன்றி செல்வா.

குணமதி
11-05-2010, 04:00 PM
நேற்று நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருக்கையில்,
அவர் கேட்டார், தமிழ் மொழியை வேறு மொழிகளுக்கு மாற்ற ஏதேனும் மென்பொருட்கள் இருக்கின்றனவா... என்று...

அப்போது நான் சொன்னேன்,
தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றுக்கும் பல அர்த்தங்கள், ஒவ்வொன்றுக்கும் பல தமிழ்வார்த்தைகள்
ஆதலினாற் இப்படியான ஒரு மென்பொருள் உருவாக்கம் என்பது,
மிகக்கடினமானதொரு சவாலாகவே இருக்கும்... என்று...

குதிரை சுமக்கும் இப்பெயர்கள் எனது கூற்றைச் சற்றேனும் உண்மையாக்குகின்றதே...

பகிர்வுக்கும், அலசலுக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

உண்மைதான் அக்னி.

ஒருபொருட்பன்மொழிச் சொற்கள் நுண்ணிய பொருள் வேறுபாட்டுடன்
தமிழில் மிகுதியாக உள்ளன. தமிழ் ஓர் இயற்கை மொழி என்பதே காரணம் என்று மொழியியலர் கூறுகின்றனர்.

கருத்துரைக்கு நன்றி.

govindh
11-05-2010, 11:07 PM
நின்று கொண்டே உறங்கி ஓய்வெடுக்கும் விலங்கு - குதிரை......அறிந்த தகவல்.

குதிரைக்கு இத்தனைப் பெயர்களா...?
அறிவு தகவல்...பகிர்வுக்கு நன்றி..!

குணமதி
20-06-2010, 05:03 PM
நன்றி கோவி.

nambi
20-06-2010, 06:17 PM
உண்மைதான் அக்னி.

ஒருபொருட்பன்மொழிச் சொற்கள் நுண்ணிய பொருள் வேறுபாட்டுடன்
தமிழில் மிகுதியாக உள்ளன. தமிழ் ஓர் இயற்கை மொழி என்பதே காரணம் என்று மொழியியலர் கூறுகின்றனர்.

கருத்துரைக்கு நன்றி.

உண்மைதான்....ஆனால் ஆங்கில மொழியை மாற்றுவதற்கு மென்பொருள் பயன்படுத்தியுள்ளனர் விக்கி களஞ்சியத்தில்....சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த செயல்பாட்டைத்துவங்கியதாக கேள்விபட்டேன்.