PDA

View Full Version : நீ அளித்த தனிமையில்..



ஆதி
06-05-2010, 03:10 PM
இன்றைய மழையில் நதியின் பாதையென மாறியிருக்கும்

இருள்நிற சாலையில்

மட்டமாய் ஓடும் நீர்ச்சமவெளியை

உடைத்துக் கொண்டு நடக்கிறேன் நான்

மனமோ,

வெம்மணற் பரப்பில்

இறந்து கருகிய ஒரு பறவையின் உடலென

விறைத்துக் கிடக்கிறது நீ அளித்த தனிமையில்..

சிவா.ஜி
06-05-2010, 03:33 PM
காதலின்மைக்கு வலிமையான உவமை...அழகான சொல்லாடல்....

இணை பறவை பறந்து விட
இந்தப்பறவை இறந்துவிட
கருகிய உடல் காதல் நிராகரிப்புக்கு
கண்ணெதிர் சாட்சியாய்
வெண் மணலில் வீழ்ந்திருக்கிறது.....

மறைந்து நிற்கும் வலி...வரிகளில் தெரிகிறது ஆதன்.

அருமை. வாழ்த்துக்கள்.

ஆதவா
06-05-2010, 04:54 PM
சரிவிடுங்க,
தனிமையையாவது கொடுத்தாளே!

செல்வா
06-05-2010, 08:34 PM
பாய்ந்து வரும் வெள்ளத்தை அந்தப் பாலைக்குத் திருப்புங்கோ...

செத்த சவத்த அடிச்சிட்டுப் போட்டும்....

அமரன்
06-05-2010, 09:54 PM
பாய்ந்து வரும் வெள்ளத்தை அந்தப் பாலைக்குத் திருப்புங்கோ...

செத்த சவத்த அடிச்சிட்டுப் போட்டும்....

செத்தாத்தான்யா சவம்..

பிறகெப்படி செத்த சவம்..

செல்வா
06-05-2010, 10:17 PM
செத்தாத்தான்யா சவம்..

பிறகெப்படி செத்த சவம்..

இதுக்குதான் கவிதைய ஒழுங்கா வாசிக்கணும்னு சொல்றது.

இறந்து கிடக்கும் ஒரு பறவைனு சொல்லியிருந்தா... அது சவம்



இறந்து கருகிய ஒரு பறவையின் உடலென


ஆனால் இறந்து கருகிய பறவைனு சொல்றதால... சவம் கருகிப்போச்சு..

உயிரோட இருக்கிறது செத்தா சவம்.....
சவம் செத்தா அது செத்த...

செத்துப் பொனது இத்துப் போனா கெடைக்கிறது செத்த.

தாமரையண்ணா வந்து குட்டைய குழப்பாதவரை தப்பிச்சேன்...

கீதம்
06-05-2010, 10:20 PM
வெற்றுப்பாலையில்
தகிக்கும் வெண்மணற்பரப்பில்
பாதம் புதைந்து நடக்கிறேன் நான்!
ஆனால் மனமோ,
அமேசான் நதி தீரத்து
அனகோண்டா போல்
ஊறித் திளைக்கிறது,
நீ அளித்த நினைவுகளில்!

என்று எழுதுங்காலம் வர வாழ்த்துகிறேன்.

பா.சங்கீதா
07-05-2010, 06:23 AM
அருமை............ வாழ்த்துக்கள்.