PDA

View Full Version : யானையைப் பற்றி...

குணமதி
06-05-2010, 10:22 AM
யானைப் பெயர்கள்

உம்பல் உயர்ந்தது.

உவா திரண்டது.

ஓங்கல் மலைபோன்றது.

கரி கரியது.

கள்வன் கரியது.

கறையடி உரல் போன்ற பாதத்தை உடையது.

குஞ்சரம் திரண்டது.

கைம்மா துதிக்கை யுடைய விலங்கு

கைம்மலை கையை உடைய மலை போன்றது.

தும்பி துளையுள்ள கையை உடையது.

நால்வாய் தொங்குகின்ற வாயை உடையது.

புகர்முகம் முகத்தில் புள்ளியுள்ளது (ஒரு வகை).

புழைக்கை (பூட்கை) துளையுள்ள கையை உடையது.

பெருமா பெரிய விலங்கு.

பொங்கடி பெரிய பாதத்தை உடையது.

யானை (ஏனை) கரியது.

வழுவை உருண்டு திரண்டது.

வாரணம் சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை வாரிப்போடுவது.

வேழம் வெள்ளை யானை போலும்.

(நன்றி : மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள்).

nambi
06-05-2010, 10:55 AM
மொத்தம் 19 வகை யானையா? மொழிஞாயிறு பாவணரின் சொல்லாராய்ச்சி கட்டுரை மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி!

பாரதி
06-05-2010, 11:53 AM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
யானையை விளிக்க இத்தணைப்பெயர்கள் உள்ளன என்பதை இன்றுதான் அறிந்தேன்.
களிறு என்பது இதில் வராதா..?

கீதம்
06-05-2010, 11:59 AM
கரி, யானை, வாரணம், வேழம் இவை தவிர மற்றப் பெயர்கள் யாவும் இதுவரை அறிந்திராதவை.

பகிர்ந்தமைக்கு நன்றி குணமதி அவர்களே.

குணமதி
06-05-2010, 12:54 PM
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
யானையை விளிக்க இத்தணைப்பெயர்கள் உள்ளன என்பதை இன்றுதான் அறிந்தேன்.
களிறு என்பது இதில் வராதா..?

களிறு - ஆண்யானை
பிடி - பெண்யானை
பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.

குணமதி
06-05-2010, 12:56 PM
பின்னூட்டமிட்ட நம்பி, கீதம் இருவருக்கும் நன்றி.

பா.ராஜேஷ்
06-05-2010, 01:11 PM
சொன்ன மாதிரியே தனி திரி தொடங்கி விட்டீர்களே. வெரி குட். யானைக்கு இவ்வளவு பெயர்கள் என இன்று அறிந்தேன். மிக்க நன்றி. மற்ற விலங்குகளை பற்றியும் பட்டியலிடுங்களேன்.

சிவா.ஜி
06-05-2010, 03:41 PM
தெரியாத பல விடயங்கள். யானைக்கு இத்தனைப் பெயர்கள் என அறியும்போது ஆச்சர்யமும், நம் மொழியின், மொழிவளத்தைக் குறித்த பெருமையும் உண்டாகிறது.

பகிர்வுக்கு நன்றி குணமதி.

குணமதி
07-05-2010, 09:31 AM
தெரியாத பல விடயங்கள். யானைக்கு இத்தனைப் பெயர்கள் என அறியும்போது ஆச்சர்யமும், நம் மொழியின், மொழிவளத்தைக் குறித்த பெருமையும் உண்டாகிறது.

பகிர்வுக்கு நன்றி குணமதி.

நன்றி சிவா.

கலையரசி
11-05-2010, 02:32 PM
அடேயப்பா! யானைக்கு இத்தனை பெயர்களா? பகிர்வுக்கு நன்றி.

குணமதி
11-05-2010, 04:02 PM
அடேயப்பா! யானைக்கு இத்தனை பெயர்களா? பகிர்வுக்கு நன்றி.

நன்றி.

குணமதி
11-05-2010, 04:04 PM
சொன்ன மாதிரியே தனி திரி தொடங்கி விட்டீர்களே. வெரி குட். யானைக்கு இவ்வளவு பெயர்கள் என இன்று அறிந்தேன். மிக்க நன்றி. மற்ற விலங்குகளை பற்றியும் பட்டியலிடுங்களேன்.

நன்றி.

இயன்ற விரைவில் எழுதுகிறேன்.

rajesh2008
05-09-2010, 04:57 AM
தும்பி என்றால் வண்டு தானே???:confused:

குணமதி
05-09-2010, 04:23 PM
'தும்பி'க்கு யானை என்ற பொருளும் உண்டு.

சுடர்விழி
07-09-2010, 07:29 AM
யானைக்கு இத்தனை பெயரா? பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..இன்னும் சொல்லுங்கள் ...காத்திருக்கிறோம்...

அன்புரசிகன்
07-09-2010, 09:06 AM
உவா கைம்மா போன்றவற்றை இன்று தான் அறிந்தேன். மற்றவை அப்பப்போது ஆண்டு 5 கற்றபோது அறிந்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றிகள்

சூரியன்
07-09-2010, 09:15 AM
இவ்வளவு பெயர்களை நான் அறிந்ததில்லை.
நல்ல பகிர்வு..

ஆதி
07-09-2010, 10:13 AM
மொழிஞாயிற்றின் யானை பற்றிய மொழியாய்வை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி குணமதி

குணமதி
07-09-2010, 04:20 PM
யானைக்கு இத்தனை பெயரா? பகிர்ந்து கொண்டதற்கு நன்றி..இன்னும் சொல்லுங்கள் ...காத்திருக்கிறோம்...

நன்றி.

குணமதி
07-09-2010, 04:21 PM
உவா கைம்மா போன்றவற்றை இன்று தான் அறிந்தேன். மற்றவை அப்பப்போது ஆண்டு 5 கற்றபோது அறிந்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றிகள்

நன்றி.

குணமதி
07-09-2010, 04:22 PM
இவ்வளவு பெயர்களை நான் அறிந்ததில்லை.
நல்ல பகிர்வு..

நன்றி.

குணமதி
07-09-2010, 04:23 PM
மொழிஞாயிற்றின் யானை பற்றிய மொழியாய்வை பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி குணமதி

நன்றி.