PDA

View Full Version : சீனா தும்மி சா துமி சாச்சா தும்மி சாச்சாச்சா!!!

தாமரை
06-05-2010, 09:30 AM
எங்கயோ கேட்ட மாதிரி இருக்குன்னு பார்த்தீங்களா? இது வேட்டைக்காரன் படத்தில கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு குழலு பாடலின் நடுவில வருகிற ஒரு பிட்டு..

இதிலென்ன சுவையான சம்பவம்னு கேட்கறீங்களா? பொறுமையா கேளுங்க...

ஸ்வேதா விஜயோட தீவிர விசிறி.. (அய்யகோன்னு மதி தலையில கை வைக்கிறார் பாருங்க) வேட்டைக்காரன் படம் பார்த்த பின்னால எல்லாப் பாடலையும் வரி விடாம கூட கூடப் பாடுவா..

அப்படி ஒரு நாளு, நாங்க கார்ல போய்கிட்டு இருந்தப்ப, காரில் எம்.பி 3 பிளேயரில் இந்தப் பாட்டு ஓடிகிட்டு இருந்திச்சி..

அப்ப இந்த வரி வர, அவள் மட்டும் திக்காம திணறாம கூடவே பாட.. நாங்களும் பாடிப் பார்த்தா வரவே இல்லை...

அப்ப இது எப்படி உனக்கு தெரியும்னு அவங்க அம்மா கேட்டாங்க. ஸ்வேதா இதை ஸ்கூல் பஸ்ல அவ ஃபிரெண்ட் நிவேதா கூட பாடுவான்னும் சொன்னாள்.

அனிருத்துக்குப் பொறுக்குமா? உடனே இதுக்கென்ன அர்த்தம். இது சும்மா அப்படின்னான்,

உடனே பிரிச்சு மேயற என்னோட இரத்தம் கொதிக்க ஆரம்பிச்சிட்டது அப்படின்னு சொன்னா அது ரொம்ப ஓவர்...

ஸ்வேதா வை இரண்டு மூணு முறை பாடச் சொல்லிக் கேட்டேன்,,

அப்புறம் விளக்கம் சொன்னேன்..

சீனா தும்மிச்சா (அதாவது சீனா தும்மினால்)

சாச்சா (அதாங்க மாமா, மாமான்னா யாரு? அங்கிள் சாம் அதாவது அமெரிக்கா)

தும்மி சாச்சாச்சா

அதாவது சீனா தும்மினா அதோட கூட மாமா அமெரிக்காவும் சேர்ந்து தும்மும் அந்த அளவுக்கு சீனா ஆதிக்கம் அதிகமாயிடுச்சி அப்படின்னு அனிருத்துக்குச் சொன்னேன்...

அப்புறம் யோசிக்க ஆரம்பிச்சேன்... இந்தப் பாடல்ல என்ன மாதிரி வித்தியாசம் இருக்குன்னு...

முதலில் ஆண் சொல்றான்

"கரிகாலன் காலைப் போல கருத்திருக்கு குழலு"

கரிகாலன் கால் கருகி கரிக்கட்டையா இல்ல இருக்கும் உவமை சரியில்லையே அப்படின்னு பார்த்தா

அடுத்த வரியில் பொண்ணு சொல்றா

குழலில்ல குழலில்ல தாஜ்மகால் நிழலு..

அப்படிச் சொல்லக் கூடாது.. பெண்ணைப் புகழ்வது இப்படிப் புகழனும். தாஜ்மகால் வெண்பளிங்கு.. அதன் மாதிரி அவள் முகம் வெண்மையாய் இருக்க அதன் பின்னால் இருக்கும் கூந்தல் தாஜ்மகாலின் நிழலைப் போல கறுப்பாய் இருக்குன்னு சொல்லணும் அப்படீங்கறா பொண்ணு..

அதாவது ஆண் பெண்ணைப் புகழத் தெரியாம புகழ எப்படிப் புகழணும் என்று அடுத்தடுத்த வரிகளில் பெண் சொல்லிக் கொடுப்பதைப் போல அமைந்த பாடல்..

எப்பவுமே இப்படி ஆழமா தீவிரமா யொசிச்சு பேசறப்ப நடக்கிற அதுவேதான் நடந்தது...

எங்க பாடலாராய்ட்சி ஒரு பார்வையில் பட்டுன்னு ஆஃபாயிடுச்சி

:shutup::shutup:

:icon_ush::icon_ush::icon_ush::icon_ush:

பா.ராஜேஷ்
06-05-2010, 09:42 AM
அப்படியே பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ க்கும் விளக்கம் கொடுங்களேன். ஊதாப்பூ னா கரி கொழுக்கட்டை னு யாரோ கிண்டல் செய்த ஞாபகம்.

தாமரை
06-05-2010, 09:50 AM
இப்படி சிம்பிளான பாட்டுக் கெல்லாம் நாம அறிவைச் செலவு பண்ணறதில்லை.. அதுக்குன்னு பல சி(ஹா)ஸ்ய கோ(கே)டிகள் இங்க நிறைய பேர் இருக்காங்க...

பா.ராஜேஷ்
06-05-2010, 10:00 AM
யாருப்பா அது.. சீக்கிரம் வாங்கோ.. திரி தொடர வேணாமா??

Mano.G.
06-05-2010, 10:00 AM
ஐயோ , என்ன அர்த்முள்ள பாடல்,
இந்த பாட்ட இப்படி பிரிச்சி அறாஞ்சு
பார்த்து அதுக்கு அர்த்தம் கண்டு பிடிச்சிங்களே ,

அதுக்கு உங்கள பாராட்டனும்.

சிவா.ஜி
06-05-2010, 10:01 AM
அடேங்கப்பா....'இதுக்கு' இம்புட்டு பெரிய விளக்கமா...???

அப்ப இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க தாமரை...?

ஓ மகஸீயா...ஓகஸீயா...ஒஹக மஹகாயே...

செல்வா
06-05-2010, 10:04 AM
அ.ஆ : ஏப்பு... இப்புடி எல்லாமா.. ஒக்காந்து யோசிப்பாய்ங்க....

இ.ஈ : இவுக தொழிலே யோசிக்கிறது தேன்... எப்பயாச்சும் யோசிக்க வாணாம்னா தான் ஒக்காருவாய்ங்க...

எப்பவுமே இப்படி ஆழமா தீவிரமா யொசிச்சு பேசறப்ப நடக்கிற அதுவேதான் நடந்தது...

எங்க பாடலாராய்ட்சி ஒரு பார்வையில் பட்டுன்னு ஆஃபாயிடுச்சி

அதுக்கும் ஒரு பாட்டு மனசுல தோணியிருக்கணுமே.....:D

தாமரை
06-05-2010, 10:09 AM
அடேங்கப்பா....'இதுக்கு' இம்புட்டு பெரிய விளக்கமா...???

அப்ப இதுக்கு என்ன விளக்கம் சொல்வீங்க தாமரை...?

ஓ மகஸீயா...ஓகஸீயா...ஒஹக மஹகாயே...

இது கூட தெரியலியா?

ஓம் மக She யா? அதாவது உன் மகள் பெண்தன்மையோட இருக்காளா? இல்லை ஜீன்ஸ் மாட்டிகிட்டு பையனைப் போலத் திரியறாளா? அப்படின்னு கேட்பதா ஆரம்பிச்சு இருக்காங்க

இரண்டாவதா நீங்க எழுதி இருக்கிறது தவறான வார்த்தைகள்.. சரியான வார்த்தைகளைக் கொடுங்க பதில் தர்ரேன்..

தாமரை
06-05-2010, 10:12 AM
.

அதுக்கும் ஒரு பாட்டு மனசுல தோணியிருக்கணுமே.....:D

அதெல்லாம் மௌனராகம்...

sarcharan
06-05-2010, 10:14 AM
அப்படியே லாலாக்கு டோல் டப்பிம்மா- ன்னா என்னான்னும் சொல்லீடுங்க

சிவா.ஜி
06-05-2010, 10:18 AM
ஓ...வார்த்தைகள் தவறா....சரி...நல்லா ஒருமுறைக் கேட்டுட்டு....சரியான வார்த்தைகளைப் பதியறேன்.

குடுத்த வார்த்தைகளுக்கே இவ்ளோ சூப்பரா விளக்கம் சொல்லியிருக்கீங்க....அப்ப மீதிக்கும் கேக்க வேணாமா.....அதுக்கே சிரமப்பட்டு மறுபடி கவனிச்சுக் கேக்கறேன்

தாமரை
06-05-2010, 10:25 AM

ஓ மஹசியா லாலலாலா லாலலாலா லால லா லலல்லா அப்படிங்கிற சங்கதியில் வரும் பாட்டு அது.. இந்த லா பாயிண்டை எல்லாம் சரியா புடிங்க..

மதி
06-05-2010, 10:32 AM
ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே....!!!!

மதி
06-05-2010, 10:34 AM
இந்த பாட்டெல்லாம் விடுங்க... தமிழ் படத்துல வர்ற ஒமஹசீயா..பாட்டுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்க..!

யவனிகா
06-05-2010, 10:35 AM
இதோட ஏன் இவ்வளவு பெரிய எழுத்து பணிய நிறுத்திட்டீங்க?
சுறா பாட்டெல்லாம் ஸ்வேதா பாட ஆரம்பிச்சாச்சில்ல...
ம்ம்ம்ம்...குடும்பமே கலைச்சேவை செய்யும் போது உங்களுக்கு மட்டும் ஏன் விருது ஏதும் குடுக்காம வெச்சிருக்காங்கன்னு தெரியில்லையே...

தாமரை
06-05-2010, 10:36 AM
அப்படியே லாலாக்கு டோல் டப்பிம்மா- ன்னா என்னான்னும் சொல்லீடுங்க

லாலா - திருநெல்வேலி லாலா ஸ்வீட் கடை
டோல் - மேளம்
டப்பிமா - டப்பிதான்

அதாவது லாலா கடைக்காரர்கள் . டப்பாவைக் மேளம் போல தட்டித்தான் விளம்பரம் செய்வாங்களாம்.

அந்த மாதிரி கண்ணே கங்கம்மா ஏழையான நான் என்னால முடிஞ்ச மாதிரி டப்பாங்குத்து பாட்டு பாடறேன் திரும்பிப்பாரு அப்படீங்கறான் காதலன்.

தாமரை
06-05-2010, 10:37 AM
இந்த பாட்டெல்லாம் விடுங்க... தமிழ் படத்துல வர்ற ஒமஹசீயா..பாட்டுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்க..!

அதுக்கு தனித்திரி போடுவோம்..

யவனிகா
06-05-2010, 10:38 AM
இந்த பாட்டெல்லாம் விடுங்க... தமிழ் படத்துல வர்ற ஒமஹசீயா..பாட்டுக்கு மட்டும் அர்த்தம் சொல்லுங்க..!

சொல்லிட்டாரு...சொல்லிட்டாரு...சொல்லிட்டாரு...

அடுத்த பாட்டு கேளுங்க மதி

தாமரை
06-05-2010, 10:38 AM
இதோட ஏன் இவ்வளவு பெரிய எழுத்து பணிய நிறுத்திட்டீங்க?
சுறா பாட்டெல்லாம் ஸ்வேதா பாட ஆரம்பிச்சாச்சில்ல...
ம்ம்ம்ம்...குடும்பமே கலைச்சேவை செய்யும் போது உங்களுக்கு மட்டும் ஏன் விருது ஏதும் குடுக்காம வெச்சிருக்காங்கன்னு தெரியில்லையே...

விருந்து கொடுத்தாதான் விருது கிடைக்குமோ என்னவோ

தாமரை
06-05-2010, 10:41 AM
சொல்லிட்டாரு...சொல்லிட்டாரு...சொல்லிட்டாரு...

அடுத்த பாட்டு கேளுங்க மதி

அது முழுப்பாட்டு. அத்தனை வரிகளுக்கும் அர்த்தம் சொல்லணும்..

இப்படி ஆரம்பிக்கும்..

ஓ மஹசீயா ஓ மஹசீயா
நாககமுக்க நாக்கா ஓ ஷக்கலாக்கா
ஓ ரெண்டக்க...

பாட்டை முதல்ல முழுசா மதி எழுதி ஒரு திரி ஆரம்பிக்கட்டும்..

தாமரை
06-05-2010, 10:45 AM
இதோட ஏன் இவ்வளவு பெரிய எழுத்து பணிய நிறுத்திட்டீங்க?
சுறா பாட்டெல்லாம் ஸ்வேதா பாட ஆரம்பிச்சாச்சில்ல...
ம்ம்ம்ம்...குடும்பமே கலைச்சேவை செய்யும் போது உங்களுக்கு மட்டும் ஏன் விருது ஏதும் குடுக்காம வெச்சிருக்காங்கன்னு தெரியில்லையே...

இன்னும் சுறா பாட்டு காதுக்கு எட்டலை. ஸ்வேதாவைப் பொருத்தவரை கண்ணுக்கு எட்டின பின்னால்தான் காதுக்கு எட்டும்..

மே 15 ஆம் தேதிக்கு பின்னால்தான் சுறா படத்தை பார்க்கணும்னு அண்ணியின் ஆணை.. அதுவரை பிரச்சனை இல்லை.. (குடும்பத்தில இருக்கிற இன்னொரு விஜய் ரசிகர், அண்ணியோட அண்ணன் மகனுக்கு அதுக்கப்புறம்தான் விடுமுறை எல்லோரும் ஒண்ணா போய்தான் பாக்கணும்னு அண்ணியோட யோசனை.. அதுதான் நமக்கும் செலவு குறைச்சல் என்று எனக்கும் யோசனை .. ஹி ஹி.. )

யவனிகா
06-05-2010, 10:50 AM

தற்காலிக விடுதலை....

என்ன இருக்குதுன்னு தெரியலைண்ணா...

எப்படி எடுத்தாலும் விஜய் படம் பாக்குதுங்க....நம்ம ஊரு குட்டிப்பசங்க....ரொம்ம்ம்ம்பபபப நல்லவங்க...

எங்க வீட்டு அரை டிக்கட்டுக எல்லாம் பாத்தாச்சி.இன்னும்...இன்னும் பார்க்கவும் தயார்.

தாமரை
06-05-2010, 10:57 AM
இதுக்கே இப்படின்னா எந்திரனுக்கு என்ன பாடுபடப் போறோம்னு தெரியலை...

(சிவாஜி படத்தை தியேட்டர்ல 5 முறை (அதுவும் பெங்களூர் ஃபாரம் மாலில்) பார்த்த குடும்பமாக்கும் எங்களோடது... ஹூம்ம்ம்)

sarcharan
06-05-2010, 11:00 AM
லாலா - திருநெல்வேலி லாலா ஸ்வீட் கடை
டோல் - மேளம்
டப்பிமா - டப்பிதான்

அதாவது லாலா கடைக்காரர்கள் . டப்பாவைக் மேளம் போல தட்டித்தான் விளம்பரம் செய்வாங்களாம்.

அந்த மாதிரி கண்ணே கங்கம்மா ஏழையான நான் என்னால முடிஞ்ச மாதிரி டப்பாங்குத்து பாட்டு பாடறேன் திரும்பிப்பாரு அப்படீங்கறான் காதலன்.

என்னே ஒரு விளக்கம்....
கம்பன், வள்ளுவன் இவர்களது திறனோடு(!!!:confused::confused:) பல கடியர்களின் கலப்போடு (இது சரி) கடியில் முனைவரான கடி வேந்தரே.. :redface:

உங்களை என்னன்னு சொல்ல...

ஸ்ஸ்ஸ்ஸ்... கண்ண கட்டுதே....!!!! .

மதி உங்களுக்கு கண்ணை கடிந்து சரிதான் போல....:icon_ush::p

மதி
06-05-2010, 11:01 AM
இதுக்கே இப்படின்னா எந்திரனுக்கு என்ன பாடுபடப் போறோம்னு தெரியலை...

(சிவாஜி படத்தை தியேட்டர்ல 5 முறை (அதுவும் பெங்களூர் ஃபாரம் மாலில்) பார்த்த குடும்பமாக்கும் எங்களோடது... ஹூம்ம்ம்)
அப்போ எந்திரனுக்கு எனக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிடுங்க..:icon_b:

sarcharan
06-05-2010, 11:06 AM
இதுக்கே இப்படின்னா எந்திரனுக்கு என்ன பாடுபடப் போறோம்னு தெரியலை...

(சிவாஜி படத்தை தியேட்டர்ல 5 முறை (அதுவும் பெங்களூர் ஃபாரம் மாலில்) பார்த்த குடும்பமாக்கும் எங்களோடது... ஹூம்ம்ம்)

இதை கேட்ட மயூரேசன் காதுல இருந்து ரத்தம் வருதாம். same blood?

sarcharan
06-05-2010, 11:14 AM
அப்போ எந்திரனுக்கு எனக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிடுங்க..:icon_b:

அப்போ காதுல இயந்திரம் மாட்டுறதுக்கு தயார் போல...

யவனிகா
06-05-2010, 12:54 PM
இதை கேட்ட மயூரேசன் காதுல இருந்து ரத்தம் வருதாம். same blood?

தாமரை அண்ணா சிவாஜி பாத்து பாத்து கண்ணில ரத்தம் வந்ததவிடவா?

ஆதவா
06-05-2010, 04:49 PM
இந்த படம் வந்தப்ப, பாட்டு எனக்கு சரியா பாடத்தெரியலை. நான் எப்படி பாடினேன்னு பாருங்கள்.

”கரிகாலன் வாளைப் போல வளைஞ்சிருக்கு வளவி”

ஒரு குழந்தை சொல்லிச்சு, அது வாளு இல்லை மாமா, காலுன்னு.
சரி, கரிகாலன் அவ்வளவு கருப்பா?

அடுத்தவரியை பாருங்க,
சேவலோட கொண்டை போல செவந்திருக்கு உதடு, உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு,
இதுக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்க.

சிவா.ஜி
06-05-2010, 04:53 PM
யாருப்பா இது.....எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே.....மன்றம் ரொம்ப வெளிச்சமா மாறிட்ட மாதிரி இருக்கு...ஓ....ஆதவாவா.....வாங்க ஆதவரே....நலமா...?

மன்மதன்
06-05-2010, 04:59 PM
அருமையான விளக்கம்..

சிவாஜி மாதிரி சுறா படத்தையும் 5 தடவை பார்க்கும் எண்ணம் இருக்கா??!!:rolleyes::rolleyes:

மதி
07-05-2010, 04:09 AM
அருமையான விளக்கம்..

சிவாஜி மாதிரி சுறா படத்தையும் 5 தடவை பார்க்கும் எண்ணம் இருக்கா??!!:rolleyes::rolleyes:
பார்ரா...:D:D:D

உன்னை தற்கொலை செய்யவா..?! பாருங்கள் சுறா...:icon_ush::icon_ush:

sarcharan
07-05-2010, 04:39 AM
அடுத்தவரியை பாருங்க,
சேவலோட கொண்டை போல செவந்திருக்கு உதடு, உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு,
இதுக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்க.

இந்த ரேஞ்சுல போச்சுனா கோனார் தமிழுரை (விளக்கவுரை) மாதிரி செல்வன் பாட்டு உரை அப்படின்னு புக் வரும் போல..:frown:

செல்வன் அவர்களே,

உங்களுக்கு சைடு பிசினஸ் ரெடி. :aetsch013:

பிரதீப், மதி, பென்ஸு இவங்கள எல்லாம் ட்ரெயின் பண்ணி கிளைகளையும் ஓபன் பண்ணிடுங்க.

sarcharan
07-05-2010, 04:43 AM
யாருப்பா இது.....எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே.....மன்றம் ரொம்ப வெளிச்சமா மாறிட்ட மாதிரி இருக்கு...ஓ....ஆதவாவா.....வாங்க ஆதவரே....நலமா...?

உள் குத்து!!!!??? வெளி குத்து!!!??

செல்வன் ஒரு திரி தொடங்கின சிவா ஜி நீங்க ஒரு தனி :smilie_abcfra:இலக்கண திரி:smilie_abcfra: தொடங்கறீங்க போல...

-சிண்டு முடியும் சிறியோன்..

sarcharan
07-05-2010, 04:44 AM
பார்ரா...:D:D:D

உன்னை தற்கொலை செய்யவா..?! பாருங்கள் சுறா...:icon_ush::icon_ush:

அப்படியே பெங்களூர் சந்திப்பு திரியோட சுட்டியும் குடுத்துருங்க..

தாமரை
07-05-2010, 04:55 AM
இந்த படம் வந்தப்ப, பாட்டு எனக்கு சரியா பாடத்தெரியலை. நான் எப்படி பாடினேன்னு பாருங்கள்.

”கரிகாலன் வாளைப் போல வளைஞ்சிருக்கு வளவி”

ஒரு குழந்தை சொல்லிச்சு, அது வாளு இல்லை மாமா, காலுன்னு.
சரி, கரிகாலன் அவ்வளவு கருப்பா?

அடுத்தவரியை பாருங்க,
சேவலோட கொண்டை போல செவந்திருக்கு உதடு, உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு,
இதுக்கு கொஞ்சம் அர்த்தம் சொல்லுங்க.

அதான் சொன்னனே ஆதவா, பையன் தத்தி, பெண்களை எப்படிப் புகழணும் அப்படின்னு தெரியாதவன்.

பொண்ணு அவனுக்கு எப்படி யெல்லாம் புகழணும் என்று சொல்லித் தர்ரா...

அவன் சொல்றான்..

சேவல் இருக்கே சேவல், அதனோட கொண்டை சிவந்து இருக்குமே அந்த மாதிரி உன் உதடு சிவப்பா இருக்குன்னு சொல்றான்..

அவன் பாவம் என்ன செய்வான்.. கட்டிங் அடிச்சி சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு கவுந்தடிச்சி படுக்கிறவன். அவனுக்கு சிக்கன் ஞாபகம் வர்ரது சகஜம்தான் என்று..

அதை திருத்தி எப்படிச் சொல்லணும் என்று அவள் சொல்றாள்..

இந்தக் காலப் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சிவந்த உதடு அப்படிங்கறது இயற்கை இல்லை.. லிப்ஸ்டிக் என்று தெரியும். அதனால அதனோட நிறத்தைப் பத்தி பேசாதே.. அதுக்குப் பதிலா அது செய்யற எஃபக்டைப் பத்திச் சொல்லு என்று சொல்லுகிறார்.

இது உதடு இல்லை. இது என்னவோ என் மனசை வசியம் பண்ணுதே.. இதில என்ன வசியம் இருக்கோ தெரியலையே அப்படினு சொல்லணும்..

அதனால

உதடு இல்ல உதடு இல்ல மந்திரிச்ச தகடு..

அப்படின்னு பாடுறா பொண்ணு...

பாட்டை அனுபவிச்சுக் கேளுங்க ஆதவா!!!

தாமரை
07-05-2010, 05:11 AM
அருமையான விளக்கம்..

சிவாஜி மாதிரி சுறா படத்தையும் 5 தடவை பார்க்கும் எண்ணம் இருக்கா??!!:rolleyes::rolleyes:

அப்படி ஆர்வம் வீட்ல யாருக்கும் வராம இருக்க எப்படி என்ன செய்ய வேண்டும் என அந்த அனுபவத்தில் கத்துகிட்டாச்சு மன்மதரே.. அதனால இனிமே வேகாது பப்பு .. போட்டுடுவோம் கைப்பிடி அளவு உப்பு...:icon_b:

தாமரை
07-05-2010, 05:11 AM
பார்ரா...:D:D:D

உன்னை தற்கொலை செய்யவா..?! பாருங்கள் சுறா...:icon_ush::icon_ush:

எவ்வளவோ பாத்துட்டோம்
இதைப் பாக்க மாட்டமா?

மதி
07-05-2010, 05:21 AM
எவ்வளவோ பாத்துட்டோம்
இதைப் பாக்க மாட்டமா?
அதானே... :icon_ush::icon_ush:
பாத்துடுங்க...:cool:

அன்புரசிகன்
07-05-2010, 06:12 AM
இந்த பாட்டை எழுதியவன்: எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா............
மதி: பார்ரா..........
இந்த பாட்டை எழுதியவன்: ஒ மூஞ்சிய பார்க்கிறதிலும் நான் சுறா படத்த 5 தடவ பார்த்திடுவேன்.
:D :D :D

sarcharan
07-05-2010, 06:25 AM
இந்த பாட்டை எழுதியவன்: எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா............
மதி: பார்ரா..........
இந்த பாட்டை எழுதியவன்: ஒ மூஞ்சிய பார்க்கிறதிலும் நான் சுறா படத்த 5 தடவ பார்த்திடுவேன்.
:D :D :D

அப்ப மதியோட முகம் அவ்வளவு பயங்கரமா இருக்குமுன்னு சொல்ல வர்றீங்களா...:D:D:D

இப்போ உன்னை தற்கொலை செய்யவான்னு திரி பதிச்சிருக்கரே...:aetsch013::aetsch013:

அன்புரசிகன்
07-05-2010, 06:33 AM
அவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று நான் எங்கே சொன்னேன்??? :D

மதி
07-05-2010, 06:38 AM
இந்த பாட்டை எழுதியவன்: எப்படி எல்லாம் யோசிக்கிறாங்கப்பா............
மதி: பார்ரா..........
இந்த பாட்டை எழுதியவன்: ஒ மூஞ்சிய பார்க்கிறதிலும் நான் சுறா படத்த 5 தடவ பார்த்திடுவேன்.
:D :D :D

அப்ப மதியோட முகம் அவ்வளவு பயங்கரமா இருக்குமுன்னு சொல்ல வர்றீங்களா...:D:D:D

இப்போ உன்னை தற்கொலை செய்யவான்னு திரி பதிச்சிருக்கரே...:aetsch013::aetsch013:

அவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்று நான் எங்கே சொன்னேன்??? :D
அட பாக்குறவங்களுக்கு தானே கஷ்டம்... :D:D:D

ஆதவா
08-05-2010, 03:17 AM
யாருப்பா இது.....எங்கேயோ பாத்த மாதிரி இருக்கே.....மன்றம் ரொம்ப வெளிச்சமா மாறிட்ட மாதிரி இருக்கு...ஓ....ஆதவாவா.....வாங்க ஆதவரே....நலமா...?

:):) ஹிஹி. வந்தோம்ல.. வந்தோம்ல.. வந்தோம்ல.. :sprachlos020:

அதான் சொன்னனே ஆதவா, பையன் தத்தி, பெண்களை எப்படிப் புகழணும் அப்படின்னு தெரியாதவன்.

பொண்ணு அவனுக்கு எப்படி யெல்லாம் புகழணும் என்று சொல்லித் தர்ரா...

அவன் சொல்றான்..

சேவல் இருக்கே சேவல், அதனோட கொண்டை சிவந்து இருக்குமே அந்த மாதிரி உன் உதடு சிவப்பா இருக்குன்னு சொல்றான்..

அவன் பாவம் என்ன செய்வான்.. கட்டிங் அடிச்சி சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு கவுந்தடிச்சி படுக்கிறவன். அவனுக்கு சிக்கன் ஞாபகம் வர்ரது சகஜம்தான் என்று..

அதை திருத்தி எப்படிச் சொல்லணும் என்று அவள் சொல்றாள்..

இந்தக் காலப் பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி சிவந்த உதடு அப்படிங்கறது இயற்கை இல்லை.. லிப்ஸ்டிக் என்று தெரியும். அதனால அதனோட நிறத்தைப் பத்தி பேசாதே.. அதுக்குப் பதிலா அது செய்யற எஃபக்டைப் பத்திச் சொல்லு என்று சொல்லுகிறார்.

இது உதடு இல்லை. இது என்னவோ என் மனசை வசியம் பண்ணுதே.. இதில என்ன வசியம் இருக்கோ தெரியலையே அப்படினு சொல்லணும்..

அதனால

உதடு இல்ல உதடு இல்ல மந்திரிச்ச தகடு..

அப்படின்னு பாடுறா பொண்ணு...

பாட்டை அனுபவிச்சுக் கேளுங்க ஆதவா!!!

நன்றிங்க. சமீபத்தில் வி.தா.வ பாடல்களை நன்கு அனுபவித்துக் கேட்டேன்.

Akila.R.D
12-05-2010, 04:47 AM
பாட்டை எழுதியவன் கூட இந்த அளவுக்கு யோசிச்சிருக்க மாட்டான்...அப்படி பிரிச்சு மேயறீங்க ஒவ்வொரு வரியையும்...

Akila.R.D
12-05-2010, 04:48 AM
அப்போ எந்திரனுக்கு எனக்கும் சேர்த்து டிக்கட் புக் பண்ணிடுங்க..:icon_b:

என்னையும் சேர்த்துக்க சொல்லுங்க மதி...

தாமரை
12-05-2010, 05:22 AM
எந்திரனுக்கு டிக்கெட் வாங்குறது என் திறன் அப்படின்னு முடிவே கட்டிட்டீங்களா?

மதி
12-05-2010, 05:28 AM
என்னையும் சேர்த்துக்க சொல்லுங்க மதி...
ரொம்ப கஷ்டம் மேடம்..!!
கமிஷன் வெட்டுங்க.. தாமரைக்கிட்ட டிக்கட்டுக்கு சிபாரிசு செய்யறேன்ன்ன்.. ஹிஹி:icon_b:

மதி
12-05-2010, 05:29 AM
எந்திரனுக்கு டிக்கெட் வாங்குறது என் திறன் அப்படின்னு முடிவே கட்டிட்டீங்களா?
பின்ன... :icon_b::icon_b:
:D:D:D
இரண்டாம் தடவை உங்க கூட பாக்கலாம்னா.. :eek:

Akila.R.D
12-05-2010, 05:34 AM
எந்திரனுக்கு டிக்கெட் வாங்குறது என் திறன் அப்படின்னு முடிவே கட்டிட்டீங்களா?

உங்க திறமையை இதை வெச்சா சோதிக்கப்போறோம்...அப்படி எல்லாம் இல்லை...

மதி கிட்ட கேட்டு எதாவது பெரிய வேலையா வாங்கிக்கங்க...

தாமரை
12-05-2010, 05:37 AM
மதிக்கு தான் வேலை குடுக்கணும்.. மதி கிட்ட வேலை கேட்டா ஒரு வேலையும் நடக்காது...

நான் சொன்னது அறிவு என்னும் மதியை... (இதுக்கு வேற அர்த்தம் எடுத்துகிட்டா அதுக்கு நான் பொறுப்பு அல்ல)

மதி
12-05-2010, 05:41 AM
மதிக்கு தான் வேலை குடுக்கணும்.. மதி கிட்ட வேலை கேட்டா ஒரு வேலையும் நடக்காது...

நான் சொன்னது அறிவு என்னும் மதியை... (இதுக்கு வேற அர்த்தம் எடுத்துகிட்டா அதுக்கு நான் பொறுப்பு அல்ல)
இப்போ தான் தக்ஸ்கிட்ட இத பத்தி பேசிட்டிருந்தேன்... :D:D:D

தாமரை
12-05-2010, 05:43 AM
ஆமாம் மதி.. ஆசைதான் எஜமானன்.. அறிவு தொழிலாளி...

Akila.R.D
12-05-2010, 05:46 AM
ரொம்ப கஷ்டம் மேடம்..!!
கமிஷன் வெட்டுங்க.. தாமரைக்கிட்ட டிக்கட்டுக்கு சிபாரிசு செய்யறேன்ன்ன்.. ஹிஹி:icon_b:

நீங்களே ஓசி...உங்களுக்கு கமிஷன் தரதுக்கு நானே போய் படத்தப் பார்த்துக்களாமே...

மதி
12-05-2010, 05:59 AM
ஆமாம் மதி.. ஆசைதான் எஜமானன்.. அறிவு தொழிலாளி...
:icon_b::icon_b:

நீங்களே ஓசி...உங்களுக்கு கமிஷன் தரதுக்கு நானே போய் படத்தப் பார்த்துக்களாமே...
ஓசியா... :eek::eek::eek: :icon_ush::icon_ush::icon_ush:

அப்பாடி.. எப்படியோ ஒருத்தர கழட்டி விட்டாச்சு... இதுக்கு தாமரைக்கிட்ட கமிஷன் வாங்கிட வேண்டியது தான்..!

mania
12-05-2010, 06:19 AM
இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்தா......:rolleyes::rolleyes: ஏன் இந்த மாதிரி பாடல்களின் எண்ணிக்கை கூடாது.....????:D:D ஆனாலும் விளக்கம் அருமை....:D:D
அன்புடன்
மணியா:D

அக்னி
12-05-2010, 07:05 AM
பாட்டை எழுதியவங்களே அர்த்தம் தெரியாம முழிச்சிட்டிருக்கலாம்.
இந்தத் திரியப் பார்த்தாங்கன்னா,
வாயில வாந்தி வந்தாக்கூட எழுதிப் பாட்டாக்கிடுவாங்க...

எல்லாப் பாடலாசிரியர்களும் சேர்ந்து,
கோடம்பாக்கத்தில, செல்வருக்குக் கோயில் கட்டினாலும் கட்டுவாங்க...

கோயிலுக்கு வர்றவங்களுக்கும் ஒரு கமிஷன் பிக்ஸ் பண்ணுங்க கமிஷன் மதி...

தாமரை
12-05-2010, 07:07 AM
இப்படியெல்லாம் விளக்கம் கொடுத்தா......:rolleyes::rolleyes: ஏன் இந்த மாதிரி பாடல்களின் எண்ணிக்கை கூடாது.....????:D:D ஆனாலும் விளக்கம் அருமை....:D:D
அன்புடன்
மணியா:D

அதாங்க ஐயா தமிழ்.. எல்லாத்துக்கும் அர்த்தம் இருக்கு!!!!

சில பாடல்களில் புரியற வார்த்தைகளே கேட்க நாராசாமா இருக்கே.. அதை விட இது எவ்வளவோ பெட்டர் இல்லையா?

தாமரை
12-05-2010, 07:08 AM
பாட்டை எழுதியவங்களே அர்த்தம் தெரியாம முழிச்சிட்டிருக்கலாம்.
இந்தத் திரியப் பார்த்தாங்கன்னா,
வாயில வாந்தி வந்தாக்கூட எழுதிப் பாட்டாக்கிடுவாங்க...

எல்லாப் பாடலாசிரியர்களும் சேர்ந்து,
கோடம்பாக்கத்தில, செல்வருக்குக் கோயில் கட்டினாலும் கட்டுவாங்க...

கோயிலுக்கு வர்றவங்களுக்கும் ஒரு கமிஷன் பிக்ஸ் பண்ணுங்க கமிஷன் மதி...

அவங்க கட்டுறாங்களோ இல்லையோ நம்ம சிஷயனுங்க நல்லா கட்டுறாங்க கல்லா!

மதி
12-05-2010, 07:11 AM
பாட்டை எழுதியவங்களே அர்த்தம் தெரியாம முழிச்சிட்டிருக்கலாம்.
இந்தத் திரியப் பார்த்தாங்கன்னா,
வாயில வாந்தி வந்தாக்கூட எழுதிப் பாட்டாக்கிடுவாங்க...

எல்லாப் பாடலாசிரியர்களும் சேர்ந்து,
கோடம்பாக்கத்தில, செல்வருக்குக் கோயில் கட்டினாலும் கட்டுவாங்க...

கோயிலுக்கு வர்றவங்களுக்கும் ஒரு கமிஷன் பிக்ஸ் பண்ணுங்க கமிஷன் மதி...
அப்புறம் விசாரணை கமிஷன் ஏதும் வந்துடாதில்லா.. ஹிஹி

அக்னி
12-05-2010, 07:19 AM
அப்புறம் விசாரணை கமிஷன் ஏதும் வந்துடாதில்லா.. ஹிஹி
விசாரணைக் கமிஷனுக்கு ஒரு கமிஷன வெட்டிட்டாப் போச்சு... :rolleyes:

ஆதி
12-05-2010, 08:19 AM
//என்ன பார்வை உந்தன் பார்வை
இடை மெலிந்தாள் இந்தப் பாவை//

நாம சங்க இலக்கியங்களில் படிச்சிருக்கோம், பசலை படர தலைவி இளைத்து போக அவளுடைய கைவளையல்கள் கழண்டு விழும் னு..

இளைத்து போவதால் கைகள் மட்டுமா மெலியும், இடையும் மெலியும் தானே என்று கண்ணதாசன் எழுதி இருக்கார்..

சாதார்னமா சங்க இலக்கியங்களில் பிரிவுத்துயரால் பசலை படர்வதாய் நாம் படிச்சிருப்போம், ஆனா இங்க கண்ணதாசன் தலைவன் பார்த்த உடனேயே அவள் இடைமெலிந்தாள் என்று சொல்றான்..

இதே மாதிரி ஒரு சிட்டிவேஷன் கம்பராமாயணத்தில் உண்டு, அதாவது மிதுலைக்கு ராமன் வந்திருக்கிறதை சீதைக்கு தோழி சொல்லுவாள் அதை கேட்ட உடன் சீதையின் மேகளை கழண்டதா கம்பன் சொல்லுவான், ஆனால் மேகலை கழண்டதுக்கு கம்பன் சொல்லும் காரணம் வேற..

ஆனால் இங்கே கண்ணதாசன் இடை மெலிவதற்கு சொல்லும் காரணம் வேற, இடை மெலிந்தால், அவள் அணிந்திருக்கும் அணிகலன்களும் கழண்டன என்பதுதானே பொருள்..

ஆனா இதே பாடல் வரிக்கு வேற மாதிரி விளக்கம் ஒருத்தர் சொனனார்..

என்ன பார்வை உந்தன் பார்வை..
இடை மெலிந்தால் இந்த பாவை..

பார்வைங்கற வார்த்தைக்கு இடையில் இருக்கு "ர்" இதுவும் இடையினம் தான் இது மெலிந்த பார்வை, பாவை ஆகிடுமாம்..

அப்படினு சொல்லி..

கண்ணதாசனின் இலக்கியவளம எவ்வளவு விசாலமானது என்பதை இந்த பாடல் வரி எடுத்துக்காட்டுகிறது.. எந்த ஒரு கவிஞனாலும் இப்படி எழுத இயலாது என்று பாராட்டினாராம்..

அதே மேடையில் இருந்த கண்ணதாசன் சொன்னாராம், இப்படி எல்லாம் யோசிச்சா பாட்டு எழுதவே முடியாது, அப்படி எல்லாம் நான் யோசிச்சு பாட்டு எழுதவும் இல்லை னு..

ஆனா தாமரை அண்ணாவோட இந்த விளக்கங்கள இந்த கால கவிஞர்கள் படிச்சா நாங்க இப்படி யோசிச்சுத்தான் எழுதினோம், ஒரு சிலர்காவது நாங்க எழுதினதின் அர்த்தம் புரிஞ்சுதே அது போதும் னு பெருமையா பேட்டி குடுத்திடுவாங்க..

தாமரை
12-05-2010, 08:50 AM
பாட்டு எழுதறது வேற, ரசிக்கிறது வேற ஆதன். சில விளக்க புத்தகங்கள் மூல புத்தகங்களை விட அதிக புகழ் பெற்றது..

எடுத்தது கண்டனன் இற்றது கேட்டனன்
கண்டேன் சீதையை
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

இப்படி பல வரிகள் ஒரு பக்கத்திக்கு மேல விமர்சிக்கப்பட்டு இருக்கு இல்லையா?

ஒரு முறை நாமளே இதைச் செஞ்சு இருக்கோம்.. (கவிதையை பிரித்து மேய்வது எப்படி?)

தமிழின் கட்டமைப்பு அப்படி. வார்த்தைக் கோர்வைகளில் விரித்துப் பார்க்க விரித்துப் பார்க்க பல புதிய அர்த்தமெல்லாம் கிடைக்கும்.

அதை ரசித்து அனுபவிக்க மனம் இருக்கணும்

மதி
12-05-2010, 09:12 AM

இருக்கே இருக்கே...:icon_ush::icon_ush:

ஆதி
12-05-2010, 09:21 AM
பாட்டு எழுதறது வேற, ரசிக்கிறது வேற ஆதன்.

தமிழின் கட்டமைப்பு அப்படி. வார்த்தைக் கோர்வைகளில் விரித்துப் பார்க்க விரித்துப் பார்க்க பல புதிய அர்த்தமெல்லாம் கிடைக்கும்.

அதை ரசித்து அனுபவிக்க மனம் இருக்கணும்

எனக்கு இதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை அண்ணா..

நான் ஏன் இந்த சம்பவத்த சொன்னேன் என்றால்..

பார்த்தேன் ரசித்தேன் படத்தில் வைரமுத்து ஒரு பாட்டு எழுதிருப்பார்..

பார்த்தேன் பார்த்தேன் சுடச் சுட ரசித்தேன் ரசித்தேன் - இந்த பாட்டில்

என்னை தவிர ஆண்கள் எல்லாம் பெண்களாக மாறினாலு
உன்னை தவிர வேறொரு பெண்ணை உச்சி முகர்ந்து பார்ப்பதுமில்லை..

இப்படி ஒரு வரி..

காளைப்படத்தில் சினேகன் இதை வரியை ஒரு பெண் பாடுவது போல் எழுதி இருப்பார்..

என்னை தவிர பெண்கள் எல்லாம் ஆண்களாக மாறினாலும்
உன்னை தவிர வேறொரு ஆணை..

இப்படி இதை நான் காப்பி அடிச்சா என்ற நோக்கில் பார்க்கவில்லை எடுத்துக்கவும் இல்லை..

ஆனால் சினேகன் காதலை இந்த என் பாட்டு வரியைவிட ஆழமாய் சொல்ல முடியாது என்று சொல்லி இந்த வரியை உதாரணமாய் சொன்னதைத்தான் என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை..

கண்ணதாசன் இப்படி எல்லாம் யோசிக்கா பாட்டு எழுத முடியாது என்று சொன்னதில் ஒரு நேர்மை இருந்தது, அந்த நேர்மை இப்ப இல்லையோ னு ஒரு எண்ணம் அதை மட்டுமே சுட்டு காட்ட விரும்பினேன் அண்ணா..

சிவா.ஜி
12-05-2010, 09:59 AM
ரொம்பச்சரிதான் ஆதன். அன்றைக்கிருந்த நேர்மை இன்றைக்கு இல்லை. ஹிந்தி திரையுல இசையமைப்பாளர் பப்பிலஹரி இப்படித்தான் உளறுவார்.

அப்பட்டமான ஆங்கிலப்படப் பாடலை, காப்பியடித்து மெட்டுப் போட்டுவிட்டு, எனக்கு கனவில் வந்தது....நான் ஏகாந்தமாய் இருந்தபோது மனதுக்குள் இசைத்தது அப்படி இப்படீன்னு பீலா விடுவார்.

வைரமுத்து வரிகளைக் கொஞ்சம் மாத்திப்போட்டுவிட்டு....என் வரிகளுக்கு இணையில்லைன்னு சொல்றதெல்லாம் ரொம்பவே ட்டூ மச்.

தாமரை
12-05-2010, 12:05 PM
அட போங்க..

அவள் இடையைப் பார்த்தேன்
பிரம்மன் கஞ்சனெனச் சபித்தேன்
நிமிர்ந்து பார்த்தேன்
வள்ளல் என உணர்ந்து கொண்டேன்

இது ஆனந்த விகடன்ல வந்த கவிதை. இதை ஜீன்ஸ்ல போட்டுட்டு வைரமுத்து தன்னோட வரிகள்னு சொல்லிக்கலையா? எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணு மண்ணுக்குள்ள மண்ணு.. ஒண்ணுமண்ணா இருக்காங்கன்னு சொல்ல வந்தேன்..

சிவா.ஜி
12-05-2010, 12:43 PM
அடங்கொக்கமக்கா....எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணுதானா....!!!

அக்னி
12-05-2010, 01:07 PM
இது ஆனந்த விகடன்ல வந்த கவிதை. இதை ஜீன்ஸ்ல போட்டுட்டு வைரமுத்து தன்னோட வரிகள்னு சொல்லிக்கலையா?
:eek:
இப்பிடி வேற நடந்திருக்கா...

ஆதி
12-05-2010, 01:34 PM
முன்னமே இதை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன், காழ்புணர்ச்சி காரணமா சொல்லப்படும் குறையா இருக்கும் என்று கண்டுக்காம இருந்துட்டேன்..

இப்பதான் புரியுது உண்மை னு..

தாமரை
12-05-2010, 01:57 PM
இல்லைப்பா, அந்தக் கவிதையை ஜீன்ஸ் வர்ரதுக்கு 4 வருஷம் முன்பே விகடனில் நானே படிச்சிருக்கேன்...

ஆதி
12-05-2010, 02:12 PM
இல்லைப்பா, அந்தக் கவிதையை ஜீன்ஸ் வர்ரதுக்கு 4 வருஷம் முன்பே விகடனில் நானே படிச்சிருக்கேன்...

அந்த வரிகளை பற்றி நண்பர்கள் பலர் இன்றைக்கும் சிலாகித்து பேசுவார்கள்..

நான் பள்ளி படிக்கும் போது வந்த படம், பாடல்..

அந்த வயதில் இது போன்ற வரிகளை எழுதுபவன் தான் மகாகவிஞன் எனும் நினைப்பிருக்கும், எனக்கும் அன்றைக்கும் வைரமுத்து மேல் அப்படி ஒரு மரியாதை இருந்தது.. உண்மையில் அந்த கவிதையை எழுதியவர்த்தான் மகாகவிஞனாய் நினைத்து போற்றி இருக்க வேண்டியவர்....

இத்தனைக்கும் வைரமுத்து ஒரு பாட்டெழுத ஒரு மாதம் எடுத்துக் கொள்வாராம்.. என் கல்லூரிக்கு வந்த நா.முத்துகுமாரோடு பேசிக் கொண்டிருந்த போது அறிந்த தகவல்..