PDA

View Full Version : திறக்கப்படாத பூட்டுகள்



jawid_raiz
04-05-2010, 03:21 AM
http://www.t2f.biz/events/wp-content/abro.jpg
ஒருவனுக்கு பெண் பார்க்க
ஒன்பது பேர் சேர்ந்து வந்து
வெச்ச எல்லாத்தையும்
மிச்சம் வெக்காம திண்டுபுட்டு
இல்லாத குறை தேடி
திண்ட தட்டுல போட்டுபுட்டு
வெரசா கெளம்பினாங்க
அடுத்த நேர உணவுக்காக...

பிள்ளை குட்டை எண்டு
வெள்ளை சட்டைக் காரன் சொல்ல...
உயரத்தை சமப்படுத்த
அவங்க அம்மா "தங்கம்" கேட்க
வெற்றிலை போடாமலே
கெழவி வாய் நமநமக்க
ரத்தமா ஒரு வார்த்த
சத்தமா கேட்டுருச்சி
"படிக்கிற காலத்துல
பயலுவளோட பழகினதுண்டா?"

சீமான் வீட்டு பொண்டாட்டி போல
சிங்காரித்திருந்த அக்கா
சித்தியின் காதோரம்
ரகசியமாய் வேவு பார்த்தாள்
"சொத்து எவ்வளவு தேறும்?"

கிளம்புறதுக்கு எல்லாரும்
கிணறு வரை வந்தபின்னே
ஜவுளிக்கடை காரன்
ஜாடையிலே சொல்லிப்போட்டான்
"சோடிப் பொருத்தம் திருப்தியில்ல"

வாடகைக்கு வாங்கி வந்த
வளையலோடு கனவுகளையும்
சேர்த்து
கழட்டி வெச்சு
கண்ணோரம் எட்டிப்பார்த்த
கண்ணீரை துடைக்கையில...
எங்கம்மா தலைமையில
ஒரு கூட்டம் கூடிருச்சு...

"இருக்கிற சொத்தெல்லாம்
இவளுக்கே கொடுத்துபுட்டா
அடுத்த பொட்டைகள
எவன் தலைல கட்டுறது?"
எங்கம்மா தொடங்கி விட

எங்கோ இருந்த அப்பா
தப்பாம ஆஜராகி

"ஒரு மண்ணும் கிடையாது
கொடுக்குறத வாங்கிகிட்டு
இழுத்துட்டு போறதுன்னா
சிறுக்கிக்கு கல்யாணம்

இத்தனை காலமாச்சு
நான் தானே சோறு போட்டேன்?
இங்கேயே இருந்துக்கட்டும்"

சோறு மட்டும் தான்
வாழ்க்கை என்று
நோகாம சொல்லிப்போட்டார்

"இதுக்குத்தான் சொல்றது....
நான் எண்டா
லவ் பண்ணித்தான் மணம் முடிப்பன்"
வயசுக்கே வராத என் தங்கச்சிபோல
நானும் நெனைச்சிருந்தா....

கட்டயனோ நெட்டயனோ
எவனாச்சும் வந்திருப்பான்
"வருசக்கணக்கா பூட்டியிருக்கும்
என் பெண்மையையும் திறந்து விட..."

செல்வா
06-05-2010, 08:02 PM
மணமாகக் காத்திருக்கும் பெண்மையின் ஏக்கத்தை...
பேச்சுவழக்கில் பதிவு செய்த கவிதை... அழகு.

பேச்சு வழக்கென்றாலும் எழுத்துப் பிழைகளைதல் நன்று.

பாரதி
07-05-2010, 12:47 AM
செல்வாவின் கூற்றை வழி மொழிகிறேன்.
நாட்டு நடப்பை, கதை போல கவிதையில் சொல்லும் உங்கள் பாணி மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகிறேன் நண்பரே.

jawid_raiz
07-05-2010, 12:59 AM
மணமாகக் காத்திருக்கும் பெண்மையின் ஏக்கத்தை...
பேச்சுவழக்கில் பதிவு செய்த கவிதை... அழகு.

பேச்சு வழக்கென்றாலும் எழுத்துப் பிழைகளைதல் நன்று.

நன்றி செல்வா! எழுத்துப்பிழைகள் இருக்குதென்று மனம் நோகாமல் கூறி இருக்குறீர்கள். சுட்டிக்காட்டினால் பிழைகளை நீக்கவும் என்னை திருத்திக்கொள்ளவும் உதவியாகள் இருக்கும்

jawid_raiz
07-05-2010, 12:59 AM
செல்வாவின் கூற்றை வழி மொழிகிறேன்.
நாட்டு நடப்பை, கதை போல கவிதையில் சொல்லும் உங்கள் பாணி மிகவும் நன்றாக இருக்கிறது.
வாழ்த்துகிறேன் நண்பரே.

நன்றி பாரதி! .

செல்வா
11-05-2010, 03:06 PM
http://www.t2f.biz/events/wp-content/abro.jpg
வெரசா கெளம்பினாங்க

பயலுவளோட பழகினதுண்டா?"

கிளம்பிறதுக்கு எல்லாரும்

கழட்டி வெச்சு

கண்ணீரை துடைக்கையில...



இவ்வளவு தாங்க என் கண்ணுல பட்டது...

சந்திப்பிழைகள் நான் கண்டுக்கல... எனக்கும்.. தெரியாது

சிவா.ஜி
11-05-2010, 03:16 PM
உயரக்குறைச்சலை ஈடுகட்ட கூடுதல் தங்கம், பொருத்தம் சரியில்லையென்றால்...சொத்தில் பாகம்....எல்லாம் சரியாயிருந்தாலும்..."பயலுவளோட பழகின பொண்ணு' என்ற தூற்றல்...

பாவம், சோறு மட்டுமே வாழ்க்கையில்லைன்னு நினைக்கிற பெண்மையின் பூட்டு....எப்படித்தான் திறக்கும்...

நாட்டுநடப்பை இயல்பான வழக்கில் கொடுத்தக் க(வி)தை அருமை.
வாழ்த்துக்கள் ஜாவித்.

jawid_raiz
15-05-2010, 07:29 AM
எழுத்துப்பிழைகள் திருத்தப்பட்டுள்ளது. நன்றி செல்வா

jawid_raiz
16-05-2010, 02:10 AM
நன்றி சிவா. ஜி