PDA

View Full Version : கனவல்ல நிஜம்



rithikadarshini
04-05-2010, 12:56 AM
உன் விரல் நுனி பட்டு

இப்பக்கம் தெரிந்து

இவ்வெழுத்துக்களைப் படிப்பது

எவ்வளவு நிஜமோ


அவ்வளவு நிஜம்

நான் நேற்றிர வென்

பள்ளி சென்றது.

மஞ்சள் சுவரினுள்

தலைகாட்டிய கட்டிடம்,

நீல வாயிற்கதவு . . .

எதுவும் மாறவில்லை


உள்ளே

குட்டை பாவாடையில்

நீறு பூசிய

தோழி கூட பார்த்தேன்.


ஆனந்தம் நெஞ்சடைத்து

கண்ணீராய் வந்த நேரம்

திடுமென வந்தது

விழிப்பு.

என் இமைகளில்

கண்ணீரின் மிச்சம்


கண்டிப்பாய்

இது கனவல்ல

என்னால்

நிரூபிக்க முடியும்

இன்று

எனக்கு முன்

அங்கே சென்று

உன்னால்

காத்திருக்க முடியுமென்றால் !

கீதம்
06-05-2010, 12:35 PM
பள்ளிநாட்கள் என்றுமே ஆனந்தம் தருபவைதான். பள்ளித்தோழமையும் வாழ்வில் மறக்க இயலா ஒன்று.

அழகிய கவிதை. பாராட்டுகள். தொடருங்கள் உங்கள் கவிச்சரங்களை.

சிவா.ஜி
06-05-2010, 12:48 PM
பள்ளித்தோழிக்கோ....தோழனுக்கோ உரைப்பதாய் வந்தக் கவி வரிகள் பொய்யல்ல நிஜம். பள்ளிக்காலமும், பள்ளித்தோழமையும் என்றுமே பசுமையான நினைவு....

அழகான கவிதை. வாழ்த்துக்கள் ரித்திகா தர்ஷினி. தொடருங்கள்.

யவனிகா
06-05-2010, 12:52 PM
கவிதை நல்லாருக்குங்க.வாழ்த்துகள்.

செல்வா
06-05-2010, 07:44 PM
அழகான நாட்களின் நினைவுகளும் அழகானவையே...

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.

rithikadarshini
09-05-2010, 11:37 AM
கீதம் , சிவாஜி , யவனிகா , செல்வா! உங்கள் கருத்துகளுக்கும் , ஊக்கத்திற்கும் நன்றி!