PDA

View Full Version : நான் இனிமேல் ரிப்போர்ட்டர் இல்லை...



ரங்கராஜன்
02-05-2010, 01:45 PM
நான் இனிமேல் ரிப்போர்ட்டர் இல்லை...


வணக்கம் உறவுகளே...

அனைவரும் நன்றாக தான் இருப்பீர்கள், நானும் தான். அதுவும் இந்த இரண்டு நாளாய், ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன். காரணம் இரண்டு நாளாய் சென்னையில் மழை. அதுவும் முதல் நாள் பெய்த கன மழையில் இதுவரை அடித்த வெயில் அனைத்தையும் சாப்பிட்டு விட்டது. தட்பவெட்பம் கொஞ்சம் நன்றாக இருக்கிறது. எனக்கு இந்த மாதிரி மழை காலம் ரொம்ப பிடிக்கும். ரொம்ப பிடிக்கும் என்றால் மழையில் போய் மணிரத்தினம் பட நாயகி மாதிரி ஆட பிடிக்காது. பார்க்க பிடிக்கும், அதுவும் எனது வீட்டில் எனது அறையில் பிரத்தியேக அழுக்கு ஜன்னல் வழியாக மழை பெய்யும் காட்சியை பார்க்க ஆயிரம் கண் வேண்டும்........... காரணம் காற்றுடன் மழை பெய்யும் போது, ஒவ்வொரு கண்ணிலும் தூசி விழும், துடைக்கும் நேரத்தில் மற்ற
கண்ணில் பார்க்கலாமே. ஹா ஹா ஹா சும்மா சொன்னேன். அந்த காட்சி உண்மையில் அழகாக இருக்கும்.

மழை பெய்யும் பொழுது உருவாகின்ற அந்த சாரலுடன் அடிக்கின்ற காற்று முகத்தில் படும் போது கிடைகின்ற தெளிவு, ராத்திரி சரக்கு அடித்து விட்டு காலையில் மோர் குடித்த பின்னர் கிடைக்குமே ஒரு தெளிவு அதைவிட பல மடங்கு இருக்கும். மழை காலத்தில் கண்டிப்பாக ஜுரம், கொசு, தும்மல், சரக்கு அடிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும், பழைய காதலியின் ஞாபகம், மாடியில் வடாம் காயவச்சோமே, நாளைக்கு தயிர் புளிக்காதே.............. அனைவருக்கும் எதாவது ஒன்று வரும். ஆனால் எனக்கு எழுத வரும், என்னை போல பல பேருக்கு இந்த சூழ்நிலையில் எழுத வரும் என்று நினைக்கிறேன். மனம் வேறு, பாலாஜியின் மனைவி இறந்துவிட்டாளே, என்று வருத்தமாக இருக்கிறது. அவனை இன்று மாலை, சந்தித்தேன்....
இரண்டு நாள் கழித்து. சோகத்தை அவனிடம் காட்டாமல்

"என்ன மச்சி, எங்கடா போற" என்றேன்.

"இட்லி வாங்க போறேன்டா"

"சரி வீட்டுக்கு வாடா"

"இல்லடா நான் வரக்கூடாது டா"

"ஏன் வீட்டுக்கு தூரமா" என்றேன். சிரித்தான்.

"பின்ன என்னடா, வா வீட்டுக்கு, என்று கையை பிடித்தேன்". கையை உதறியவன்.

"போச்சு போச்சு நீ போய் வீட்டுல குளிக்கணும், இப்ப"

"டேய் எனக்கு மூடு இருந்தா தான் குளிப்பேன், இந்த மாதிரி விஷயத்திற்கு எல்லாம் என்னால் குளிக்க முடியாது. சாக்கடையில் விழுந்த கூட மூடு இல்லன்னா, முகத்தை மட்டும் கழிவிட்டு போய் டிவி பாப்பேன்டா"

சிரித்தான். அவன் தோள் மீது கையை போட்டேன், திமிறினான் தூர ஒடினான்.

"சரி கிட்ட வாடா, எப்படி இருந்தாலும் நான் போய் குளிக்க போறேன், அப்புறம் என்ன வாகிட்ட" என்றேன். வந்தான்.

"வா வீட்டுக்கு போலாம்"

"இல்லடா நான் வரக்கூடாது"

"சரி நாளைக்கு வா"

"இல்லடா இன்னும் ஒரு வருஷத்திற்கு யார் வீட்டுக்கும் போக கூடாது"

"அப்புறம் அசிங்கமா, எதாவது சொல்லிடுவேன், ஒழுங்கு மரியாதையா, வா வீட்டுக்கு"

"இல்லடா வீட்டுல அம்மா திட்டுவாங்க, மத்தவங்க வீட்டுக்கு போனா தீட்டு அவங்களை தாக்குமா"

"அப்ப எனக்கு ஒரு ஹேல்ப் பண்ணு, எனக்கு ஆவாதவன் ஒருத்தன் ஆபிஸ்ல இருக்கான், அவன் வீட்டுக்கு போய்டு வந்துடேன், அவனை உன் தீட்டு தாக்கட்டும்"

அமைதியாக சிரித்தான்.

"சரி வா, எங்காவது வெளியில போய்டு வரலாம்"

"ம்ம் சரி ஆனா, 6 மணிக்குள் வீட்டு வந்துடனும்"

"இல்லன்னா"

"தீட்டு டா"

"அய்யோ அப்பா விடுறா சாமி, 6 மணிக்குள் வந்துடலாம்" என்று கடிகாரத்தை பார்த்தேன். மணி 6.45 காட்டியது. அவனை பார்த்தேன். அவன் சிரித்தான். கையில் எதோ பொட்டலம் வைத்து இருந்தான்.

"கையில என்னடா" என்றேன். அவன் முகம் சட்டென்று இறுகியது.

"மூக்கு கண்ணாடி டா, அவளுடையது ரிப்பேர் ஆயிடுச்சி, அத சரி செய்ய குடுத்தேன், 4 வாரம் ஆச்சு, இப்ப தான் திரும்பி கொடுத்தான்" குரல் உள்ளே சென்றது. அவன் என் கண்ணை பார்த்தான், நான் அவனை தவிர்த்து விட்டு அந்த கண்ணாடியை பார்த்தேன். இறுக்க பிடித்துக் கொண்டு இருந்தான். இருவரும் கொஞ்ச நேரம் பேசவில்லை, அமைதியாக வெளியில் போடப்பட்ட சிமெண்ட் பலகையில் அமர்ந்து இருந்தோம். அந்த நேரம் பார்த்து என்னுடைய இன்னொரு நண்பன் வந்தான். வரும் போது நிலைமை அறியாது, பாட்டு வேற அதுவும், விஜயின் சுறா புதுப்பட பாடலை சத்தமாக
பாடிக்கொண்டு வந்தான்.

"வங்ககடல் எல்ல, நான் சிங்கம் பெத்தபிள்ள ............." என்று என்னிடம் வந்து சிரித்தான்.

"உங்கப்பாவுக்கு அது தெரியுமாடா" என்றேன் நான் சீரியஸாக. அவ்வளவு தான் குபீர் என்று பாலாஜி சத்தமாக சிரிக்க, ரோட்டின் முனையில் சென்றவர்கள் கூட திரும்பி பார்த்தார்கள். அவன்
சிரிப்பை அடக்க 5 நிமிடம் ஆனது. என்னுடைய வேலை முடிந்து விட்டது என்று அங்கு இருந்து கிளம்பினேன்.

சரி இந்த திரியின் தலைப்புக்கும் நான் இதுவரை சொன்ன விஷயத்திற்கும் சம்பந்தமே இல்லையே என்று நீங்கள் நினைக்க கூடும், ஆம் நான் எழுத நினைத்தது வேறு ஆனால் என்னை எழுத வைத்த விஷயம் வேறு........... சாரி......... சரி விஷயத்திற்கு வருகிறேன். நான் இனிமேல் ரிப்போர்ட்டர் கிடையாது............. உதவி செய்தி ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்து விட்டது. எனக்கு எனக்கே ஆச்சர்யம் இது நடக்கும் என்று சத்தியமாக நான் நினைக்கவில்லை........ காரணம் இந்த பதவிக்கு 40 வயது மிகாமல் இருக்க வேண்டும். செய்தித்துறையில் ஊரி இருக்க வேண்டும். பல ஆண்டுகால அனுபவம் வேண்டும், எந்த செய்தி வேண்டும், எது வேண்டாம் என்று பிரித்து பார்க்கும் திறன் வேண்டும்........... இதில் எதுவுமே இல்லாத எனக்கு இந்த பதவி கிடைத்தது....... மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது........... காரணம் நான் இந்த துறைக்கு வந்து 10 மாதம் கூட முழுமையடையவில்லை. ஆனால் என் சேனலுக்கு வந்த போராத காலம் எனக்கு இந்த பதவி கிடைத்து விட்டது............ இந்த பதவியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகிறது.......... அப்புறம் ஏன் இவ்வளவு லேட்டா சொல்றேன், என்று கோபப்படாதீர்கள். எனக்குள்ளே சில பயம் இருந்தது. இந்த வேலையை என்னால் செய்யமுடியுமா என்ற அவநம்பிக்கை வேறு. காரணம் செய்தி ஆசிரியர் தான் சேனல் உரிமையாளருக்கு அடுத்த போஸ்டில் இருப்பவர், அவருக்கு அடுத்த போஸ்டில் இருக்கும் பதவி தான் இந்த உதவி செய்தி ஆசிரியர் வேலை.......... அதனால் தான் இந்த தயக்கம்............... ஆனால் கடந்த சில வாரமாக என்னால் தனியாக ஒரு செய்தி தொகுப்பையே ஆன் ஏர் டெலக்காஸ்ட் செய்ய முடிந்தது. கடந்த சில தினங்களாக காலை செய்தி 7 டூ 7.30 நான் செய்தது தான். நம்பிக்கை வந்து விட்டது, அதனால் மன்றத்தில் இதை முதலில் சொல்லுகிறேன். வீட்டில் கூட தெரியாது. தல, தாமரை, ஆரென் அண்ணன்களுக்கு மட்டும் தெரியும்.

எனக்கு தமிழ், உலக அறிவு, அரசியல், பொறுமை, வாழ்க்கை தத்துவம், தந்திரம், மார்கெட்டிங், இப்படி அனைத்தையும் கத்துக் கொடுத்த மன்றத்திற்கு நன்றி. மன்றத்தின் மூலமாக இணைந்து இருக்கும அனைத்து அண்ணன்கள், தங்கைகள், அக்காக்கள், தாத்தாக்கள் (தல), பாட்டிகள், விஞ்ஞானிகள், மெய்ஞானிகள், சகலகலா வல்லவர்கள், சண்டைக்காரர்கள், அப்பிரானிகள் போன்ற அனைவருக்கும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். காரணம் உங்கள் அனைவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளேன். அவை அனைத்தும் தான், என்னுடைய முன்னேற்றத்திற்கு காரணமாக அமைகிறது. என் வளர்ச்சியில் கண்டிப்பாக மன்றத்தின் பங்கு மிக அதிகம். என்னை போல மன்றம் இன்னும் பலரை வழிநடத்தி வாழ்க்கையில் வெற்றியடைய செய்ய வேண்டும்.

நன்றி ............... வணக்கம் ................... மெகா சீரியல் முடிச்சுபோச்சு......... போய் வேலையை பாருங்க...........ஹா ஹா ஹா

பா.சங்கீதா
02-05-2010, 02:49 PM
வாழ்த்துகள் அண்ணா.......:D

சிவா.ஜி
02-05-2010, 03:02 PM
மனமார்ந்த வாழ்த்துக்கள் தக்ஸ். இன்னும் அதிக உயரத்தைத் தொடனும்.

செல்வா
02-05-2010, 03:08 PM
கேக்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு தக்ஸ்...

பாரதியண்ணாவை சந்திக்க நாம ரெண்டு பேரும் காத்திட்டுருந்த மழை இரவு ஞாபகம் வந்துது... இந்த மழையை வாசிக்கும் போது.

ஞாபகம் இருக்கா சென்ட்ரல் நிலையம்....

இனிமே அடுத்த முறை தக்ஸ பாக்கும் போது என்னடா மச்சினு தோள்ல கையப் போட முடியாது போலருக்கு...

ரொம்ப உயரமா வளந்துட்டரில்ல... :)

தொடர்ந்து உயர வாழ்த்துக்கள் தக்ஸ்.

மதி
02-05-2010, 03:24 PM
எனக்கு முன்னாடியே தெரியுமே... ஹிஹி வாழ்த்துக்கள் தகஸ்

அமரன்
02-05-2010, 03:25 PM
வாழ்த்துகிறேன் தக்ஸ்.

மன்ற சொந்தங்கள் ஒவ்வொருவரின் நிலைமாற்றங்களை சுயமாற்றம் போல் உணர வைக்கும் மன்றத்தின் தனித்தன்மைக்கு நானும் தப்பவில்லை.

ஆனந்தம் தக்ஸ்.

பா.ராஜேஷ்
02-05-2010, 03:26 PM
மகிழ்ச்சியான செய்திதான்... பாராட்டுக்கள். மேலும் பல உயரம் கடக்க வாழ்த்துக்கள்...

ஸ்வீட் எங்கே தக்ஸ்..

பாரதி
02-05-2010, 03:37 PM
மிக்க மகிழ்ச்சி!
பகிர்ந்தமைக்கு நன்றி மூர்த்தி.
மென்மேலும் வளர வாழ்த்துகிறேன்.

Mano.G.
02-05-2010, 04:31 PM
செய்தி கேட்டு நான் மிக்க மகிழ்ச்சி கொண்டேன்
எதோ எனக்கு பதவி உயர்வு கிடைத்த மாதிரி,
மன்ற குடும்பத்தில் வளரும் பிள்ளைகளை கண்டு பெருமிதம் கொள்கிரேன்.

இந்த வளர்ச்சி தம்பி தக்க்ஷணாமூர்த்திக்கு ஒரு முதல் படியே
அதுவும் உழைப்பாளர்கள் தினத்தில்
தம்பி மூர்த்தியின் பதவி உயர்வு
அறிவிப்பு மேலும் மகிச்சியூட்டுகிரது.

அடுத்த மன்ற உறவுகளின் சந்திப்புக்கு
புதிய ஒருங்கினைப்பாலரை தேட வேண்டும்
போல.

வாழ்த்துக்கள் தம்பி

மனோ.ஜி

ரங்கராஜன்
02-05-2010, 04:37 PM
அனைத்து உறவுகளுக்கு நன்றி.

புதுசா சங்கீதா தங்கச்சி வந்து இருக்கு போல, நன்றி மா. இதுதான் முதல் முறையாக உன் பெயரை நம் மன்றத்தில் பார்க்கிறேன்.

அப்புறம் செல்வா உன்னுடன் சேர்ந்து தம் அடிச்ச இரவு மறக்க முடியுமா, ஆனா பாரதி அண்ணைனை ஆசையாக பார்க்க வந்தேன், அண்ணன் தான் ஒழுங்கா பேசவில்லை, ஆனால் அவருடைய மாமியார் என்னிடம் நன்றாக பேசினார்கள்.........டாடா எல்லாம் சொன்னார்கள்............பாரதி அண்ணாவை பார்க்க முறைப்பான என்னுடைய ஆசிரியர் ஞாபகத்திற்கு வந்தார். அவருடன் பேசி வார்த்தைகள்.

"அண்ணா நீங்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை சூப்பர் அண்ணா நல்லாயிருக்கு" என்றேன்.

"நன்றி, ஆனால் நீ அதுக்கு வோட்டு தான் போடலை" என்றார்.

செம பல்புடன் வந்தேன் வீட்டிற்கு............ மறக்கமுடியாத இரவு அது.

சிவாஜி அண்ணா.

என்ன இப்பயெல்லாம் உங்களின் பழைய உத்வேகம் இல்லையே.......... என் நம் மாமியாரிடம் (மன்றத்தில்) எதாவது சண்டையா,,,,,,,,,, விடுங்க யாராவது இருந்தாலும்............. கஞ்சா கேஸ்னு செய்தி போட்டுடலாம் நம் சேனல்ல ஹா ஹா ஹா ஹா

நன்றி ராஜேஷ் உங்கள் அனைவரின் ஊக்கம் தான் என்னை இந்த அளவில் கொண்டு சென்றது.

டேய் மதி மச்சி
எனக்கு தெரியும் உனக்கு எப்படியாவது தெரிஞ்சிடும் என்று, நம் என்சைக்லோபிடியா சொல்லியிருப்பார்.

நன்றி அமரன்

என்ன ரொம்ப நாளாய் அளே காணும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் விடுங்க..................... மன்றத்திற்கு அடிக்கடி வாங்க

ரங்கராஜன்
02-05-2010, 04:41 PM
மனோ அண்ணா

நன்றி அண்ணா, நான் அந்த பதிப்பில் போட்டு இருப்பேன், அதாவது அனைவரிடம் இருந்து ஒவ்வொரு விஷயம் கற்றுக்கொண்டேன் என்று. அதில் முக்கியமானது உங்களிடம் இருந்து அதுவும் பொறுமை என்ற மிகப்பெரிய பாடம் அது. என்ன சொன்னாலும் சிரித்துக் கொண்டு முகமலர்ச்சியுடன் பதில் சொல்லும் உங்கள் பாங்கு. குடித்து விட்டு hang over என்று ஒரு பதிவு போட்டவுடன், பதறிப்போய் டேய் தம்பி குடிக்காதடா என்று அறிவுரை சொன்ன பாசம்................ என்றும் மறக்கமாட்டேன் உங்களை............... நன்றி அண்ணா.

குணமதி
02-05-2010, 04:56 PM
பாராட்டும் வாழ்த்தும்!

பாரதி
02-05-2010, 05:05 PM
அப்புறம் செல்வா உன்னுடன் சேர்ந்து தம் அடிச்ச இரவு மறக்க முடியுமா, ஆனா பாரதி அண்ணைனை ஆசையாக பார்க்க வந்தேன், அண்ணன் தான் ஒழுங்கா பேசவில்லை, ஆனால் அவருடைய மாமியார் என்னிடம் நன்றாக பேசினார்கள்.........டாடா எல்லாம் சொன்னார்கள்............பாரதி அண்ணாவை பார்க்க முறைப்பான என்னுடைய ஆசிரியர் ஞாபகத்திற்கு வந்தார். அவருடன் பேசி வார்த்தைகள்.

"அண்ணா நீங்கள் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை சூப்பர் அண்ணா நல்லாயிருக்கு" என்றேன்.

"நன்றி, ஆனால் நீ அதுக்கு வோட்டு தான் போடலை" என்றார்.

செம பல்புடன் வந்தேன் வீட்டிற்கு............ மறக்கமுடியாத இரவு அது.



அன்பு மூர்த்தி,

அன்று நடந்தவை எல்லாம் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன.

தொடர்வண்டி அடுத்தடுத்த நிலையங்களில் நின்று நின்று வந்ததில்- காத்திருந்ததாலோ அல்லது உங்களுடன் சேர்ந்திருந்ததாலோ :aetsch013: சோர்வடைந்த செல்வா, நாங்கள் வந்த பின்னர் எழும்பூர் நிலையத்தில் எந்த வாசலில் இருக்கிறீர்கள் என்று தொலைபேசியில் கேட்டார்.

கொட்டும் மழையில் பல நடைமேடைகளில் ஏறி வந்ததில் களைத்த அக்கா... கவனிக்கவும்.. என்னுடைய முதல் அக்கா அவர்தான்... வாசல் அருகே நிற்கலாம் என என்னிடம் கூற அதை செல்வாவிடம் கூறினேன்.

அவருடன் வந்த நீங்கள் என்னிடம் கேட்ட முதல் கேள்வி "நான் யாருன்னு தெரியுதா..?"

"போட்டோவில் பாதி முகத்தை மட்டும் காண்பிச்சதாலோ, முகத்தில் தாடியை வச்சுகிட்டதாலோ யாருன்னு தெரியாம போயிடுமா என்ன..?" என்றேன் நான்.

"கதைப்போட்டியில் முதல் பரிசு வாங்கின கதை நல்லாருக்குண்ணா" அப்டீன்னு சொன்னீங்க நீங்க.

"அதெல்லாம் சரி. கதைக்கு நீங்க வோட்டு போட்டீங்களா..? இல்ல விமர்சனமாவது எழுதுனீங்களா..?" கேட்டேன்.

"எழுதுறேன்" சொன்னீங்க நீங்க..!

அதுக்கப்புறமா இருந்த சில நிமிடங்களில் செல்வாகிட்ட சொல்ல வேண்டியதுலயும், தானி ஓட்டுநர்கிட்டேயும் நாம் பேசுறதுல சரியா போச்சு.

வேற நீங்க எதுவும் கேட்டதா எனக்கு நினைவில்லையே... ம்ம்... அன்னைக்கு தானியில் போறப்ப மூர்த்தியோட கைபேசி எண்ணை கொடுங்க.. கொடுங்கன்னு செல்வாகிட்ட கேட்டு எனக்கு அலுத்துப்போச்சு. இதுவரைக்கும் அவர் தரவே இல்ல.

ஆனா... என்னைப் பார்த்து நீங்க பயந்திருக்கீங்கன்னு இப்ப சொல்லிதான் தெரியுது! செல்வாகிட்ட கேளுங்களேன்.ம்ம்... சரி... இப்ப சொல்லுங்க... வர்ர பதினொன்றாம் தேதி பார்க்கலாமா..?

அக்கா... உங்களை டா.....டா.... ன்னு சொன்னாங்களா..? இல்லை டாட்டா சொன்னாங்களா..?

ஆமா... அந்த இரவுல பல்போட வந்ததால நல்ல வெளிச்சம் இருந்திருக்குமே..!:lachen001: தூங்குனீங்களா..?:icon_rollout:

உங்கள் தொலைக்காட்சி ஆரம்பவிழா குறித்த அறிவிப்பை மன்றத்திலும் வாழ்த்துப்பகுதியில் இட்டதற்கு ஒரே காரணம், அங்கே நீங்கள் பணி புரிகிறீர்கள் என்பதற்காகத்தான்.

உங்களுடைய ஆரம்ப கால கதைகளைப்படித்துவிட்டு நான் எழுதிய பின்னூட்டங்களும், தனிமடலும் என் கணிப்பு மிகச்சரி என்பதை இப்போது உணர்த்துகின்றன. உங்களுடைய முன்னேற்றம் மிக்க மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது என்பது முற்றிலும் உண்மை.

மன்மதன்
02-05-2010, 05:20 PM
ஆஹா.. மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துகள் நண்பா....

அக்னி
02-05-2010, 08:56 PM
தக்ஸ்...

பெருமையும் மகிழ்ச்சியும் எனக்கும்...

40 வயதிற் கடக்கும் எல்லை என்று குறிப்பிட்டீர்கள்.
40 வயதை நீங்கள் கடக்கையில் எந்நிலையில் உயர்ந்து நிற்பீர்கள் என எண்ணிப் பூரிக்கின்றேன்.

கடினமான, இடர்தந்த உங்கள் வாழ்க்கைப் பயணத்தில்,
தொடரும் பாதை, நிழலோடு பூச்சொரிய,
களைப்பில்லாது புத்துணர்ச்சியோடு எல்லைகள் தாண்டிச் செல்லுங்கள்...

நெஞ்சம் நிறைந்த பூரிப்போடு, வாழ்த்துகின்றேன்...

govindh
02-05-2010, 09:35 PM
தகுதி அடைந்த பிறகும்....தகுதி நிலையினை, சுய பரிசோதனை செய்து.., அதில் திருப்தி கண்ட பின் மன்றத்தில் பகிர்ந்து கொள்ளும் மனப் பக்குவ நிலைக்கு.....வாழ்த்துக்கள்...தக்ஸ்..

மென்மேலும் வளர்ந்து பல உயர்நிலைகளில்
உங்கள் வெற்றிப் பயணம் தொடரும் என்பதில் ஐயமில்லை...பாராட்டுக்கள் தக்ஸ்...

கீதம்
03-05-2010, 12:23 AM
மன்றத்தாயின் மடியில் வளர்ந்த பிள்ளைகள் சிகரத்தை எட்டும்போது அடையும் ஆனந்தத்துக்கும் பெருமிதத்துக்கும் அளவே இல்லை. உங்களுடன் சேர்ந்து நாங்களும் பூரிப்படைகிறோம்.

வாழ்த்துகள் தக்ஸ். வெற்றிகள் தொடரட்டும்.

Akila.R.D
03-05-2010, 03:52 AM
வாழ்த்துக்கள் தக்ஸ்...

தாமரை
03-05-2010, 04:33 AM
அப்ப இனி உலக் நியூஸ் அத்தனையும் உங்களுக்கு வந்திடும்னு சொல்லுங்க..

ஒண்ணு ஒண்ணில கவனமா இருங்க. எதையும் நடந்திருச்சான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டு அப்புறமா ஒளிபரப்ப வைங்க. :D :D :D :D

கூடிய சீக்கிரம் பெங்களூர்ல பிராஞ்ச் ஆரம்பிச்ச்சு அதுக்கு தலைமை எடிட்டரா வாங்க.. பார்த்துக்கலாம்.

mania
03-05-2010, 05:31 AM
வாழ்த்துகள் டாக்ஸ் அண்ணா....:rolleyes::D:D
அன்புடன்
அருமை தம்பி மணியா...:D:D

மதி
03-05-2010, 05:48 AM
வாழ்த்துகள் டாக்ஸ் அண்ணா....:rolleyes::D:D
அன்புடன்
அருமை தம்பி மணியா...:D:D

இது சூப்பரு...

தக்ஸ் அண்ணே.. தலைய பத்தி ஒரு கவர் ஸ்டோரி.. தயார்பண்ணிடுங்கண்ணே..:D:D

மதி
03-05-2010, 05:50 AM
அப்ப இனி உலக் நியூஸ் அத்தனையும் உங்களுக்கு வந்திடும்னு சொல்லுங்க..

ஒண்ணு ஒண்ணில கவனமா இருங்க. எதையும் நடந்திருச்சான்னு கன்ஃபார்ம் பண்ணிகிட்டு அப்புறமா ஒளிபரப்ப வைங்க. :D :D :D :D

கூடிய சீக்கிரம் பெங்களூர்ல பிராஞ்ச் ஆரம்பிச்ச்சு அதுக்கு தலைமை எடிட்டரா வாங்க.. பார்த்துக்கலாம்.

அவர பெங்களூர்ல பிராஞ்சுட மாட்டாங்களே..!!??
இனி தக்ஸ பாக்கறதே கஷ்டம்.. அப்பாயிண்மெண்ட் வாங்கணுமாம்...

mania
03-05-2010, 06:54 AM
அவர பெங்களூர்ல பிராஞ்சுட மாட்டாங்களே..!!??
இனி தக்ஸ பாக்கறதே கஷ்டம்.. அப்பாயிண்மெண்ட் வாங்கணுமாம்...

அப்படி ஒருவெளை பெங்களூரில் ப்ரான்ஞ் ஓபென் பன்ணினா ஆயிண்ட்மெண்ட்டும் வாங்கணும்.....:rolleyes::rolleyes:
கரிசனத்துடன்
மணியா....:D:D

மதி
03-05-2010, 06:57 AM
அப்படி ஒருவெளை பெங்களூரில் ப்ரான்ஞ் ஓபென் பன்ணினா ஆயிண்ட்மெண்ட்டும் வாங்கணும்.....:rolleyes::rolleyes:
கரிசனத்துடன்
மணியா....:D:D
அடடா.. என்ன ஆயிண்ட்மெண்ட்னு சொன்னா.. ஸ்டாக் வாங்கி வச்சுக்கலாம்..:icon_b:

தாமரை
03-05-2010, 07:14 AM
அடடா.. என்ன ஆயிண்ட்மெண்ட்னு சொன்னா.. ஸ்டாக் வாங்கி வச்சுக்கலாம்..:icon_b:

எதுக்கு எக்ஸ்ஃபயரி ஆனதும் ரீசைக்கிள் செய்யவா?

மதி
03-05-2010, 07:15 AM
எதுக்கு எக்ஸ்ஃபயரி ஆனதும் ரீசைக்கிள் செய்யவா?
அந்த மேட்டர் எல்லாம் இங்க இல்லீங்கோ... :D:D:D
எக்ஸ்ஃபயர் ஆகறதுக்கு முன்னாடியே தீர்ந்திடும்... ஆயிண்ட்மெண்ட்.. :icon_ush::icon_ush:

மதி
03-05-2010, 07:18 AM
இப்போ தான் ஒரு மேட்டர தக்ஸ் சொன்னான்...
ரிப்போர்ட்டரா இருந்தப்போ... ந்யூஸ் ரிப்போர்ட் பண்றப்போ..அடிக்கடி.. டி.வியில முகம் காமிக்கணுமாம்.. இப்போ உதவி செய்தி ஆசிரியரா இருக்கறதால முகம் காமிக்க மாட்டானாம்.. ஒரு வேளை.. முகத்தை இனி காமிக்கவே கூடாதுன்னே.. ப்ரமோஷன் குடுத்திருப்பாங்களோ..

ஹிஹி.. தமாசுக்கு... கோச்சிக்காத தக்ஸு...

sarcharan
03-05-2010, 08:48 AM
மனதார வாழ்த்துகின்றேன். தொடர்ந்து உயர வாழ்த்துக்கள் தக்ஸ்.

aren
03-05-2010, 09:31 AM
தக்ஸ் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் உயரவேண்டும் என்பதே என் விருப்பம்.

ஏற்கெனவே பெரிய செலிபிரட்டி நீங்கள், இன்னும் பிரபலமாகிவிட்டீரகள். எளிதாக பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

40 வயதை நெருக்கிவிட்டீர்களா, நான் இப்போதான் 34வது வயதை நெருங்குகிறேன். அப்படியா எனக்கு நீங்க இனிமே தக்ஸ் அண்ணாதான்.

வாழ்த்துக்கள் தக்ஸ் அண்ணா

mania
03-05-2010, 10:28 AM
தக்ஸ் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் மேன்மேலும் உயரவேண்டும் என்பதே என் விருப்பம்.

ஏற்கெனவே பெரிய செலிபிரட்டி நீங்கள், இன்னும் பிரபலமாகிவிட்டீரகள். எளிதாக பார்க்க முடியாது என்றே நினைக்கிறேன்.

40 வயதை நெருக்கிவிட்டீர்களா, நான் இப்போதான் 34வது வயதை நெருங்குகிறேன். அப்படியா எனக்கு நீங்க இனிமே தக்ஸ் அண்ணாதான்.

வாழ்த்துக்கள் தக்ஸ் அண்ணா

என்ன .......தக்ஸானந்தா இப்போ பாட்டியா....????!!!!:rolleyes::rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:D:D

மதி
03-05-2010, 10:45 AM
என்ன .......தக்ஸானந்தா இப்போ பாட்டியா....????!!!!:rolleyes::rolleyes:
சந்தேகத்துடன்
மணியா:D:D
ஆனந்தா-னு சொல்லிட்டு பாட்டினு சொல்றீங்க.... பாட்டி இல்லே தலை.. பார்ட்டி...:D:D:D

sarcharan
03-05-2010, 10:54 AM
வாழ்த்துகள் டாக்ஸ் அண்ணா....:rolleyes::D:D
அன்புடன்
அருமை தம்பி மணியா...:D:D

தன்னடக்க செம்மல் தலை லொள்ளு மணியா

mania
03-05-2010, 10:58 AM
ஆனந்தா-னு சொல்லிட்டு பாட்டினு சொல்றீங்க.... பாட்டி இல்லே தலை.. பார்ட்டி...:D:D:D

பாட்டி இல்லாம பார்ட்டியா......!!!!!
நாக்கில் நீர் ததும்ப
மணியா....:D:D

மதி
03-05-2010, 11:00 AM
பாட்டி இல்லாம பார்ட்டியா......!!!!!
நாக்கில் நீர் ததும்ப
மணியா....:D:D
தக்ஸ் வேணா தாத்தாவா இருக்கலாம்.. அதுக்காக தக்ஸ் ஐபிஎல்க்கு கூட்டிட்டு போன பெண்ணை பாட்டின்னு சொன்னதை வன்மையாகக் கண்டிக்கறேன்...:D:D

mania
03-05-2010, 11:08 AM
தக்ஸ் வேணா தாத்தாவா இருக்கலாம்.. அதுக்காக தக்ஸ் ஐபிஎல்க்கு கூட்டிட்டு போன பெண்ணை பாட்டின்னு சொன்னதை வன்மையாகக் கண்டிக்கறேன்...:D:D

உன்னோட இப்போ இருக்கிற நிலமைல எந்த பொண்ணையும் பாட்டின்னு சொன்னா உனக்கு கோபம் வருவது நியாயமே.....:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா...:D:D

மதி
03-05-2010, 11:10 AM
உன்னோட இப்போ இருக்கிற நிலமைல எந்த பொண்ணையும் பாட்டின்னு சொன்னா உனக்கு கோபம் வருவது நியாயமே.....:rolleyes::rolleyes::D:D
அன்புடன்
மணியா...:D:D
வேண்டாம் தலை... வலிக்குது..அந்த மேட்டர் மட்டும் வேண்டாம். இமயமலைக்கு டிக்கட் புக் பண்ண சொல்லிருக்கேன்.. :icon_ush::icon_ush:
அன்பில்லா
மதி

mania
03-05-2010, 11:10 AM
ஆஹா......பா(ர்)ட்டி வந்திட்டார்யா.......எஸ்கேப்........
அன்புடன்
மணியா....:D

ரங்கராஜன்
03-05-2010, 11:11 AM
இங்க என்ன நடக்குது, ஒண்ணுமே புரியலையே........என் தலை உருளுதுனு மட்டும் நல்ல தெரியுது.

தல எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்............ நீங்க போற போக்க பார்த்தா தீர்த்துட்டு தான் பேசிவீங்க போல இருக்கே.......

மச்சி மதி நீ சென்னை பக்கவா, வாயை கிழிச்சிடுறேன்.....

மற்றபடி என்னை வாழ்த்திய அனைத்து உறவுகளுக்கும்,,,,,,,,, அண்ணகளுக்கும்,,,,,,,,,, தங்கைகளுக்கும் நன்றிகள் கோடி...........

mania
03-05-2010, 11:13 AM
அவனை நிறுத்த சொல்லு நான் நிறுத்தறேன்,,,,,,,,,
நாயகன் மணியா.....:D:D

மதி
03-05-2010, 11:18 AM
நானும் தான்....
ஆரம்பிக்கவே இல்ல... எங்கனு நிறுத்தறது... :(

mania
03-05-2010, 11:24 AM
வேண்டாம் தலை... வலிக்குது..அந்த மேட்டர் மட்டும் வேண்டாம். இமயமலைக்கு டிக்கட் புக் பண்ண சொல்லிருக்கேன்.. :icon_ush::icon_ush:
அன்பில்லாமதி

அன்பிலார் எல்லாம் தமக்குரியர்........என்ற பாலிசியா.....!!!!!!
மிகுந்த அன்புடன்
மணியா...:D:D

தாமரை
03-05-2010, 11:25 AM
நானும் தான்....
ஆரம்பிக்கவே இல்ல... எங்கனு நிறுத்தறது... :(

ஆரம்பிக்கறதுக்கு முன்னால நிறுத்தினாத்தான் சேதாரமில்லாம தப்பிக்க முடியும்

கைப்புள்ள

தாமரை
03-05-2010, 11:26 AM
அன்பிலார் எல்லாம் தமக்குரியர்........என்ற பாலிசியா.....!!!!!!
மிகுந்த அன்புடன்
மணியா...:D:D

மிகுந்த அன்புடன் (எலும்புடன்????)
மணியா...:D:D

mania
03-05-2010, 11:29 AM
மிகுந்த அன்புடன் (எலும்புடன்????)
மணியா...:D:D

:D:D:D:D

மதி
03-05-2010, 11:45 AM
ஆரம்பிக்கறதுக்கு முன்னால நிறுத்தினாத்தான் சேதாரமில்லாம தப்பிக்க முடியும்

கைப்புள்ள
விடுங்க.. விடுங்க..

"உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய மட்டும் லவ் பண்ணினேன்?"

ஹிஹி.. இது அடுத்த கதையோட தலைப்பா வைக்கலாம்னு இருக்கேன்..:icon_ush::icon_ush:

தாமரை
03-05-2010, 12:11 PM
விடுங்க.. விடுங்க..

"உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய மட்டும் லவ் பண்ணினேன்?"

ஹிஹி.. இது அடுத்த கதையோட தலைப்பா வைக்கலாம்னு இருக்கேன்..:icon_ush::icon_ush:

இது உங்களுக்கே ஓவரா இல்ல? மட்டுமா ????

அப்ப அந்த கோலார் டாட்டா, பஸ் ஸ்டாப்பு, ஃபாரம் இதெல்லாம்??

aren
03-05-2010, 12:29 PM
"உலகத்துல எத்தனையோ பேர் இருக்கும் போது நான் ஏன் ஜெஸ்ஸிய மட்டும் லவ் பண்ணினேன்?"

.:icon_ush::icon_ush:

அப்பவும் லவ் மட்டும்தானா? கல்யாணம் என்பது எப்போது?

கா.ரமேஷ்
03-05-2010, 01:09 PM
இவ்வளவு பேர் அன்பு இருக்கிறது வேறென்ன வேண்டும்... நிச்சயம் நீங்கள் இன்னும் முன்னேற்றம் அடைவீர்கள்.. வாழ்த்துக்கள்..

விகடன்
04-05-2010, 06:20 AM
வாழ்த்துக்கள் தட்சண்ணா.
படிப்பதற்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது கனம் உதவி செய்தி ஆசிரியர் அவர்களே.

மேலும் உங்களுக்கு ஒரு விடயத்திற்கு நன்றி சொல்லவேண்டும். எதற்கு தெரியுமா?

மன்றப்பக்கத்தில் தனது எழுத்துக்களை அதிகம் காண்பிக்காத தலையை இந்தத்திரியில் பல பதிவுகளை இட வைத்திருக்கிறீர்களே.... அதற்கு.

மதி
04-05-2010, 06:37 AM
இது உங்களுக்கே ஓவரா இல்ல? மட்டுமா ????

அப்ப அந்த கோலார் டாட்டா, பஸ் ஸ்டாப்பு, ஃபாரம் இதெல்லாம்??

இதெல்லாம் என்ன கட்டுக் கதை... :confused::confused::confused: அப்படின்னு கேக்கப் போறதில்ல.. பாலைவனமா இருக்கற வாழ்க்கையில அப்பப்போ கானல் நீர் மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் சகஜம் தானே.. ஹிஹி..
ஆனாலும் நான் கரெக்ட் பண்ற விஷயத்துக்கெல்லாம் கரெக்டான ஆளில்லை..:eek::eek:


அப்பவும் லவ் மட்டும்தானா? கல்யாணம் என்பது எப்போது?

காதல நான் கல்யாணம்ங்கற குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க விரும்பல.. எப்படியெல்லாம் சப்பைக் கட்டு கட்ட வேண்டியிருக்கு....

அக்னி
04-05-2010, 06:43 AM
காதல நான் கல்யாணம்ங்கற குறுகிய வட்டத்துக்குள்ள அடைக்க விரும்பல..
:eek:
பார்ர்ரா...

மதி
04-05-2010, 06:51 AM
:eek:
பார்ர்ரா...
:D:D:D:D:D:D

எல்லாம் தக்ஸ்கிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான்... அதாகப்பட்டது இது தக்ஸ் தொடங்கின திரிங்கறதால... ஹேஹே...

யவனிகா
04-05-2010, 06:52 AM
வாழ்த்துகள் தக்ஸ் அவர்களே.

ரங்கராஜன்
04-05-2010, 09:13 AM
நன்றி யவானிகா அவர்களே.............

டேய் மச்சி உன் திரிக்கு பதில் எழுத சொன்னா,,,, படத்துல வர வசனத்தை ஒவ்வொண்ணா பதிலா போடுற.........

மதி
04-05-2010, 09:26 AM
டேய் மச்சி உன் திரிக்கு பதில் எழுத சொன்னா,,,, படத்துல வர வசனத்தை ஒவ்வொண்ணா பதிலா போடுற.........
உன் திரி என்ன..? என் திரி என்ன...

எல்லாம் நம்ம திரி தான்...:D:D

ரங்கராஜன்
04-05-2010, 10:09 AM
உன் திரி என்ன..? என் திரி என்ன...

எல்லாம் நம்ம திரி தான்...:D:D

சாரி சாரி அது உன் திரி என்ற வார்த்தை இல்லை, உன்னை திரிக்கு பதில் எழுத சொன்னா என்ற வார்த்தையை அவசரத்தில் அப்படி அடித்து விட்டேன் சாரி டா.

xavier_raja
05-05-2010, 07:05 AM
வாழ்த்துகள் நண்பா... மேன்மேலும் பற்பல உயர்வுகளை பெற்று சீரும் சிறப்புமாக வாழ்வீர்களாக...

பூமகள்
07-05-2010, 07:38 AM
தக்ஸ்..

மனம் நிஜத்தில் பூரிக்கிறது..

பாராட்டுகள் தக்ஸ்.. மேலும் வளர இந்தச் சகோதரியின் அன்புகள்...

(இப்போது உன்னை அந்த அலைவரிசையில் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுகிறது.. ஆனால் பார்க்க இயலாத சூழல்.. தக்ஸ் அந்த அலைவரிசையில் உன்னைப் பார்க்க வேறு ஏதும் வழி உண்டா?)

ரங்கராஜன்
07-05-2010, 07:59 PM
தக்ஸ்..

மனம் நிஜத்தில் பூரிக்கிறது..

பாராட்டுகள் தக்ஸ்.. மேலும் வளர இந்தச் சகோதரியின் அன்புகள்...

(இப்போது உன்னை அந்த அலைவரிசையில் பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுகிறது.. ஆனால் பார்க்க இயலாத சூழல்.. தக்ஸ் அந்த அலைவரிசையில் உன்னைப் பார்க்க வேறு ஏதும் வழி உண்டா?)

நன்றி பூமகள்

இதுநாள் வரை ரிப்போர்ட்டராக இருக்கும் போது பலமுறை வந்து இருக்கிறேன், அப்பது எல்லாம் இதை கேட்காமல் இப்போது பதவி உயர்வு கிடைத்தவுடன் கேட்கிறீங்களே நியாயமா.........

இனிமேல் பார்க்க முடியாது என்று நினைக்கிறேன், காரணம் இனிமேல் எல்லாம் BEHIND THE SCENE வேலை தான்........ வேண்டுமானால் காலை தினமும் காலை நியூஸை பாருங்கள்......... அதில் நான் போடும் நியூஸ் தான் வரும்

அமரன்
07-05-2010, 11:10 PM
நன்றி அமரன்

என்ன ரொம்ப நாளாய் அளே காணும், எந்த பிரச்சனையாக இருந்தாலும் சமாளித்து விடலாம் விடுங்க..................... மன்றத்திற்கு அடிக்கடி வாங்க

எங்கயும் போகல தக்ஸ். இங்கதான் இருக்கேன்.... எல்லாத்தையும் பாத்துக்கொண்டு.

நீங்க இப்படிச் சொன்னாப் பிறகு ஒருநாளைக்கு ஒரு பதிவேனும் போடனும்னு தோணுது.

ஆதவா
08-05-2010, 03:21 AM
வாழ்த்துக்கள், இன்னும் மேன்மேலும் உயருங்கள்.