PDA

View Full Version : இயற்கைsimariba
02-05-2010, 10:08 AM
மேகங்கள் மோதிச்செல்லும்
குளிர் நடுங்க வைக்காமல்
வருடிச்செல்லும்...

சத்தமில்லா அந்த
உயர்ந்த இடம்...

எங்கு பார்த்தாலும்
பச்சை பட்டு உடுத்தி
ஒய்யாரமாக
ஓங்கி நிற்கும்
மலைகள்...

இடையிடையே
வெண்ணிற முத்துக்கள்
கோர்த்த சரம் போல்
சலசலக்கும் அருவிகள்...

மூச்சிழுக்கும் போதே
சேர்ந்துள்ளே
செல்லும் அந்த புத்துணர்வு...

அங்கேயே உறைந்து
இன்னும் சில நேரம்
நிற்க விழையும் ஏக்கம்...

காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...

வருடம் ஒரு முறையாவது
இயற்கை அன்னையின்
ஈடில்லா அழகிய
மடியில் தவழ்ந்து
செல்லமாக விளையாடினால்

மகிழ்ச்சிகடலில் மிதக்கும்
சிறு படகாய் ஆடலாம்...

கீதம்
02-05-2010, 10:49 AM
அழகின் சிகரம் நோக்கிச் செல்லவேண்டாம். தென்றல் வர சற்றே சன்னல் திறக்கிறோமா? மழையின் சாரலில் நனைந்து களிக்கிறோமா? மாலைச்சூரியன் மறையும் அழகை மாடியிலிருந்தேனும் ரசிக்கிறோமா? கரையும் காக்கையின் சங்கேத பாஷையை கவனித்துதான் பார்த்திருக்கிறோமா?


யோசிக்கவைக்கின்றன கவிதை வரிகள். பாராட்டுகள் அபி.

பாரதி
02-05-2010, 11:33 AM
கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களைக் கண்டால் கவியுள்ளம் உள்ளோருக்குத் தோன்றும் மனவிருப்பே இக்கவிதை என்று தோன்றுகிறது. இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி இயற்கையன்னையிடம் சில காலம் தஞ்சம் புக வேண்டும் என்ற நல்லெண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும். வாழ்த்தும் பாராட்டும் நண்பரே.

சிவா.ஜி
02-05-2010, 12:18 PM
கீதம் அவர்கள் சொன்னதைப்போல...நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை அவதானித்தாலே ஆயிரம் ஆச்சர்யங்கள் கிடைக்கும். மலையும், காடுகளுகளுமென்றால் கேட்கவே வேண்டாம்.

புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான காற்றும், சுற்றுச்சூழலும் நம்மை நாமே மராமத்து செய்துகொள்ள உதவும்.

அழகான கவிதைக்கு வாழ்த்துக்கள் அபி.

அமரன்
02-05-2010, 12:56 PM
எந்தக் கவியும் தப்ப இயலாத உணர்வு இது..

குறுந்தூரத் தொடருந்துகளில் பயணிக்கும் போது நகரத்தையும்
நெடுந்தூரப் பயணங்களில் மகிழ்வு கொஞ்சும் நகரமயமாகாத இயற்கையையும்
கண்ணுண்டு போவது என் பழக்கம்..

கடந்த வார மாலைகளில் இதற்கென்றே சிட்டி தாண்டிப் போனதுண்டு.

இனம்புரியாத அனுபவம்.. இதமான புத்துணர்வு.. தேவை ஒரு இயற்கைப் பார்வை...வாரத்துக்கு ஒரு முறையானாலும்.

கவிதை ஆரம்பத்தில் அழகுற தவழ்ந்து கடைசியில் சுட்டு விரல் காட்டிக் கட்டளை இடுகிறது. நான் கூட இந்த வளர்ப்பில் கவிதை வளர்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது தவறெனத் தெரிகிறது.

சின்னத் தூறலாய் தொடங்கி உள்ளத்தில் புகுந்து ,உள்வாங்கி
மெல்ல மெல்ல பலத்து அடைமழையாய் அழகு பொழியச் செய்தால்
கண்களும் நெஞ்சமும் விரிந்து கட்டளைக்கு அவசியமில்லாது போய்விடும்.

அந்த மாதிரிக் கவிதை இருந்திருந்தால் இன்னும் சிறப்புக் கூடி இருக்கும்.

simariba
02-05-2010, 02:02 PM
"அழகின் சிகரம் நோக்கிச் செல்லவேண்டாம். தென்றல் வர சற்றே சன்னல் திறக்கிறோமா? மழையின் சாரலில் நனைந்து களிக்கிறோமா? மாலைச்சூரியன் மறையும் அழகை மாடியிலிருந்தேனும் ரசிக்கிறோமா? கரையும் காக்கையின் சங்கேத பாஷையை கவனித்துதான் பார்த்திருக்கிறோமா?"
முற்றிலும் உண்மை கீதம். பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி!


"கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களைக் கண்டால் கவியுள்ளம் உள்ளோருக்குத் தோன்றும் மனவிருப்பே இக்கவிதை என்று தோன்றுகிறது. இயந்திர வாழ்க்கையில் இருந்து விலகி இயற்கையன்னையிடம் சில காலம் தஞ்சம் புக வேண்டும் என்ற நல்லெண்ணம் எல்லோருக்கும் வர வேண்டும்."நன்றி பாரதி!

"கீதம் அவர்கள் சொன்னதைப்போல...நம்மைச் சுற்றியுள்ள இயற்கையை அவதானித்தாலே ஆயிரம் ஆச்சர்யங்கள் கிடைக்கும். மலையும்,
காடுகளுகளுமென்றால் கேட்கவே வேண்டாம்.
புத்துணர்ச்சியூட்டும் சுத்தமான காற்றும், சுற்றுச்சூழலும் நம்மை நாமே மராமத்து செய்துகொள்ள உதவும்."
நன்றி சிவா!


"கவிதை ஆரம்பத்தில் அழகுற தவழ்ந்து கடைசியில் சுட்டு விரல் காட்டிக் கட்டளை இடுகிறது. நான் கூட இந்த வளர்ப்பில் கவிதை வளர்த்திருக்கிறேன். ஆனால் இப்போது அது தவறெனத் தெரிகிறது.

சின்னத் தூறலாய் தொடங்கி உள்ளத்தில் புகுந்து ,உள்வாங்கி
மெல்ல மெல்ல பலத்து அடைமழையாய் அழகு பொழியச் செய்தால்
கண்களும் நெஞ்சமும் விரிந்து கட்டளைக்கு அவசியமில்லாது போய்விடும்.

அந்த மாதிரிக் கவிதை இருந்திருந்தால் இன்னும் சிறப்புக் கூடி இருக்கும்"
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி, எழுதும் போதே உறுத்திய விஷயம் தான். என்ன தவறு என சரியாக கண்டுபிடிக்கத் தெரியவில்லை. இப்போது புரிகிறது. நன்றி அமரன் அண்ணா!

பா.சங்கீதா
03-05-2010, 06:14 AM
இயற்கை அன்னையின் குழந்தையகிய நாம் ஏனோ அவளை ரசிபதில்லை,
அருகில் இருக்கும் அவளை நாம் ஏனோ மறக்கிறோம்,
வாழ்த்துகள் அபி......

simariba
03-05-2010, 11:44 PM
நன்றி சங்கீதா!

செல்வா
06-05-2010, 09:02 PM
பாட்டெழுத பலரும் மலைதேடிச் செல்வதுண்டு...

நிலவையும் மலையையும் பாடாதவர்களே கிடையாது...

நல்ல கருத்து சொல்லும் கவிதை..

வாழ்த்துக்கள்...
தொடர்ந்து எழுதுங்கள்...

simariba
29-05-2010, 11:28 AM
நன்றி செல்வா!!

கலையரசி
29-05-2010, 01:56 PM
இயற்கையன்னையின் அழகுக்கு ஈடேது? அந்த இயற்கையை ரசிக்கவும் ஒரு மனம் வேண்டும்.
உங்கள் கவிதையைப் படித்த போது இந்தக் கடும் கோடையில் கொடைக்கானல் போய் வந்தது போல் ஒரு குளு குளு உணர்வு! பாராட்டு அபி!

govindh
30-05-2010, 10:20 PM
இயற்கையும் அழகு...
கவியும் அழகு....

வாழ்த்துக்கள்.

simariba
07-06-2010, 04:12 AM
நன்றி கலையரசி !
நன்றி கோவிந்த்!

nambi
07-06-2010, 04:18 AM
காங்கிரீட் சிறைகளில் வாழும்..... உண்மை இப்போது அப்படித்தான் வாழ்க்கை போய்கொண்டருக்கிறது....கவிதை அருமை பகிர்வுக்கு நன்றி!

simariba
03-04-2011, 01:21 PM
நன்றி nambi!

Nivas.T
03-04-2011, 01:30 PM
காங்கரீட் சிறைகளில் (வீடுகளில்)
வாழும் நவீன கைதிகள்
நாம்...


நவீனத்துவமான வரி

இயற்கையின் வர்ணிப்புகள்
வார்த்தைகளின் கோர்வை
கருத்து மிக்க முடிவு
அனைத்தும் அருமை

நல்ல கவிதை

பாராட்டுகள் சிமரிபா

simariba
03-04-2011, 01:59 PM
நன்றி த.நிவாஸ்!