PDA

View Full Version : தோல்வி மாறியது வெற்றியாக.....((2 ))



பா.சங்கீதா
30-04-2010, 03:10 PM
தோல்வி மாறியது வெற்றியாக....(1)

அந்த அரசு மகளிர் பள்ளி சுதந்திரதின விழாவுக்காக தயாராகி கொண்டிருந்தது,
அதற்காக பேச்சு போட்டி, கட்டுரை போட்டி,ஓவிய போட்டி, போன்ற போட்டிகள் நடை பெற போவதாக அனைத்து வகுப்புகளுக்கும் அறிவிக்கபட்டது.
இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை தமிழாசிரியையிடம் பதியுமாறு தகவல் வெளிவிடபட்டது,இதை கேட்டதும் அனைவரும் போல தமிழ்ஒளியும் தனது பெயரை பதிய சென்றாள். அனால் அங்கு அவளுக்கு கிடைத்ததோ ஏமாற்றம் மட்டுமே, ஆசையுடன் சென்ற அவள்,வெறுப்புடனே வெளியே வந்தாள். ஏனெனில் தமிழாசிரியை அவளிடம் கேள்வி மீது கேள்வி கேட்டார். ஆனால் பதில் சொல்லதான் நேரம் இல்லை அதாவது நேரம் கொடுக்கவில்லை
அதற்கு காரணம் தமிழாசிரியையின் சொந்த உறவினர் மகள்
அவளுக்கு வாய்ப்பு கொடுத்தாக வேண்டும்.
வாய்ப்பும் கொடுக்கப்பட்டது.
ஆனால் அன்று மதியம் தமிழ் ஒளியோ பள்ளி வரவில்லை,
அவளுக்கு பள்ளி செல்லவே பிடிக்கவில்லை,அதற்கு அடுத்த நாளே பள்ளிக்கு சென்றால் அப்பொழுது அவளின் தோழிகள் சொன்ன செய்தி அவளுக்கு இன்னும் பெரிய இடியாய் விழுந்தது.ஏனென்றால் அன்று பேசிய தமிழாசிரியையின் உறவினர் ஒரு திக்குவாய் அவளால் ஒழுங்காக பேச கூட முடியவில்லை காரணம் அவளின் குறையல்ல அவளிடம் இருந்த மேடை பயம்.......... ஆனால் தமிழ் ஒளி அப்படியல்ல நல்ல பேச்சாளி மேடை பயமே கிடையாது.அவள் முன்பு படித்த பள்ளியில் அவள் தான் எப்போதுமே முதலிடம்.
அவளுக்கு இந்த செய்தி மனதை வாட்டியது.அவள் இனிமேல் மேடை ஏறி பேசபோவதில்லை என்று எண்ணம் கொண்டாள்..........

மீண்டும் தொடரும்..........

ஜனகன்
30-04-2010, 05:15 PM
அருமை...............ஒரு பாடசாலையை மையமாக வைத்து ஆரம்பித்து இருக்கின்றீர்கள்.கதை நன்றாக நகரும் என்று நினைக்கின்றேன்.
இது உங்கள் கன்னி முயற்சியா, அசத்தலாக, அருமையாக உள்ளது.
தொடருங்கள் சங்கீதா, வாழ்த்துகின்றேன்.

govindh
30-04-2010, 06:50 PM
தோல்வி மாறியது வெற்றியாக......

ஆரம்பமே அருமையாக உள்ளது....
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

பா.ராஜேஷ்
30-04-2010, 09:11 PM
நன்றாக ஆரம்பித்து உள்ளீர்கள். முதல் கதை முயற்சியே தொடர் கதையா...!!!?? இன்னும் கூட எழுதி இருக்கலாமே!?? அடுத்த பாகத்தை இன்னும் சிரத்தை எடுத்து எழுதினால் இன்னும் மெருகுறும் என்பது என் எண்ணம்...

பா.சங்கீதா
01-05-2010, 08:17 AM
நன்றி ஜனகன் அண்ணா.........

பா.சங்கீதா
01-05-2010, 08:18 AM
நன்றி கோவிந்த் அண்ணா........

பா.சங்கீதா
01-05-2010, 08:19 AM
நன்றி ராஜேஷ் அண்ணா.......
அப்படியே ஆகட்டும்...
அடுத்த பாகம் சீக்கரமே வெளியிடபடும்........ :)

சிவா.ஜி
01-05-2010, 09:24 AM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்ற கருத்துக்கு ஏற்ப கதை அமையுமென்று நினைக்கிறேன்.

தமிழ்ஒளி நல்ல பெயர்.

கலையரசி
02-05-2010, 08:55 AM
எடுத்தவுடனே தொடர்கதை துவங்குவது என்பது உங்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டுத் தொடரும் என்று போடலாம் என்பது என் கருத்து. பாராட்டு. தொடருங்கள்.

கீதம்
02-05-2010, 11:15 AM
துணிவுடன் தொடர்கதை துவங்கிய உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன், சங்கீதா. தொடர்ந்து தொய்வின்றி சுவையுடன் எழுதிமுடிக்க என் வாழ்த்துகள்.

பாரதி
02-05-2010, 11:36 AM
முதல் முயற்சிக்கு வாழ்த்து. தொடர்க நண்பரே.

விகடன்
02-05-2010, 01:02 PM
முயற்சிக்கு பாராட்டுக்கள்.

எதிர்பார்த்த அளவிற்கு பதிவு இருக்கவில்லை. இன்னும் சற்றே பெரிய பதிவாக பதிந்திருக்கலாம்.

பா.சங்கீதா
02-05-2010, 02:25 PM
முதல் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா. தோல்விதான் வெற்றிக்கு முதல்படி என்ற கருத்துக்கு ஏற்ப கதை அமையுமென்று நினைக்கிறேன்.

தமிழ்ஒளி நல்ல பெயர்.

நன்றி சிவா அண்ணா..........

பா.சங்கீதா
02-05-2010, 02:27 PM
எடுத்தவுடனே தொடர்கதை துவங்குவது என்பது உங்களது தன்னம்பிக்கையைக் காட்டுகிறது. இன்னும் கொஞ்சம் எழுதிவிட்டுத் தொடரும் என்று போடலாம் என்பது என் கருத்து. பாராட்டு. தொடருங்கள்.

நன்றி கலையரசி அவர்களே............
அடுத்த முறை அப்படியே செய்கிறேன்........
:)

பா.சங்கீதா
02-05-2010, 02:28 PM
துணிவுடன் தொடர்கதை துவங்கிய உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டுகிறேன், சங்கீதா. தொடர்ந்து தொய்வின்றி சுவையுடன் எழுதிமுடிக்க என் வாழ்த்துகள்.

நன்றி கீதம் அக்கா.......

பா.சங்கீதா
02-05-2010, 02:30 PM
முதல் முயற்சிக்கு வாழ்த்து. தொடர்க நண்பரே.

நன்றி பாரதி அவர்களே.........

பா.சங்கீதா
02-05-2010, 02:32 PM
முயற்சிக்கு பாராட்டுக்கள்.

எதிர்பார்த்த அளவிற்கு பதிவு இருக்கவில்லை. இன்னும் சற்றே பெரிய பதிவாக பதிந்திருக்கலாம்.

நன்றி விராடன் அவர்களே........
அடுத்த முறை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும் என நம்புகிறேன். :icon_b:

பா.சங்கீதா
17-05-2010, 06:43 AM
தோல்வி மாறியது வெற்றியாக.....((2 ))

சுதந்திர தினம்.....
தமிழ்ஒளி பள்ளிக்கு போகலாமா,வேண்டாமா,
என்ற யோசனையில் அமர்ந்திருந்தாள்,
அவளின் அம்மா அவளை பள்ளிக்கு போக சொல்ல,
அம்மாவை அரவணைத்து கொண்டு
பள்ளிக்கு செல்ல முற்பட்டாள்,
அப்போது அவளின் தோழிகள் அவளின் வீட்டுக்கு வந்தனர்,
அனைவரையும் வீட்டின் உள்ளே அழைத்து அமரவைத்தாள்,
அனைவரும் அமர்ந்து தண்ணீரை அருந்தினர்,
காலை உணவை சாப்பிடுமாறு தமிழ் ஒளியின் அம்மா சொல்ல,
அவளின் தோழிகள் அன்புடன் அதை ஏற்று கொண்டனர்,

அனைவரும் பள்ளிக்கு ஒன்றாக சென்றனர்,

பள்ளியோ அழகாக அலங்கரிக்க பட்டு இருந்தது
கொடியின் வர்ணத்தில் தோரணங்கள் எங்கும் தொங்க,
கொடியில் மலர்கள் தூவப்பட்டு ஏற்றுவதற்கு தயாராக இருந்தது.
மாணவிகள் அனைவரும் வரிசையாக அமருமாறு ஆசிரியர்களால் கேட்டுக்கொள்ள பட்டனர்,
அவர்களும் அதை ஏற்றுகொண்டு வகுப்பு வாரியாக, வரிசையாக அமர்ந்தனர்.

கொடியை ஏற்ற கட்சி தலைவரை அழைத்திருந்தனர்.

அவர் வர சிறுது நேரமாகவே,அதை தவிர்க்க ஆசிரியர்கள் சிறுது நேரம் பேசினார்.

பேசிகொண்டிருக்கும் போதே தலைவர் வர அனைவரும் எழுந்து நின்றனர்,

தலை வந்ததும் விழா தொடங்கியது......

முதலில் கடவுள் வாழ்த்துடன் தொடங்கி தலைவர் கொடியை ஏற்றினார்...

அனைவரும் கொடிக்கு வணக்கம் செலுத்த தலைவர் சுதந்திர தினத்தை பற்றி சிறிது நேரம் பேசி விட்டு கிளம்பினார்.

பிறகு ஒவ்வொரு ஆசிரியரும் மறுபடி பேச ஆரம்பித்தனர்,

தலைமையாசிரியரை தவிர அனைவரும் பேசி முடித்தனர்(தமிழாசிரியை உட்பட)

சிறுது நேரத்திற்கெல்லாம் பரிசளிப்பு விழா
தொடங்கியது.

தமிழ்ஒளியின் முகம் மாறியது.
ஏனெனில் பேச்சு போட்டி முதல் பரிசு 'நித்யா' என அறிவிக்க பட்டது அது வேறு யாரும் இல்லை.

தமிழசிரியையின் சொந்தம் அதே திக்கு வாய் தான்.

தமிழ் ஒளிக்கு கோபம் கோபமாக வந்தது.
தன பரிசு வாங்கவில்லையே என்று அல்ல.

எத்தனையோ நல்ல பேச்சாளர்கள் இருந்தும்
இவளுக்கு தரார்களே என்று தான்.

மற்ற பரிசு எல்லாம் வழங்கபட்டது.
பேச்சில் பரிசு வாங்கியவர்கள் பேசும்படி அறிவிக்க பட்டனர்.

நித்யாவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது
தமிழசிரியைக்கு அதுக்கு மேலே,

நித்யா திக்கி திக்கி பேசினாள்,
தலைமையசிரியற்கு முகம் மாறியது.

இதை பார்த்த தமிழசிரியைக்கு வேர்த்தே கொட்டிவிட்டது.

ஒருவாறு நித்யா பேசி முடித்தாள்..

பிறகு கலை நிகழ்ச்சி தொடங்கியது...
ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம் என்ன பொழுது மகிழ்ச்சியாக சென்றது...

அதில் தமிழ் ஒளி சிறிது கவலையை மறந்திருந்தாள்,

அதிலும் முக்கியமாக நடந்த சிரிப்பு நாடகம் தான்,
அனைவரையும் கவர்ந்தது,

அவளவு நகைச்சுவை அதில் வழிந்தது,
அதில் தமிழசிரியையும் கவலை மறந்திருந்தார்கள். கவலை என்பதை விட பயம் என்று சொல்லலாம்...

பிறகு தலைமையாசிரியர் பேசுவதற்கு மேடை ஏறினார்..

தமிழ் ஒளி ஆர்வமாய் அமர்ந்திருந்தாள்,
தமிழாசிரியை பயத்துடனே அமர்ந்திருந்தார்...

மீண்டும் தொடரும்.........

govindh
17-05-2010, 09:50 AM
தமிழ் ஒளி ஆர்வமாய் அமர்ந்திருந்தாள்......
நாங்களும் தான்...!

மீண்டும் தொடருங்கள்...

செல்வா
17-05-2010, 12:58 PM
கவிதை போல் தொடரும் கதை....

விவரணங்கள் இல்லாமல் வெறும் நிகழ்வுகளாய் தொடரும் கதை...

தலைமையாசிரியர் என்ன சொல்லப்போகிறார் என்பதைக் கேட்கும் ஆர்வத்தில் நாங்களும் காத்திருக்கிறோம்.

முதல் இரண்டு பாகங்களை விட இந்த பாகத்தில் உங்கள் எழுத்தில் தேர்ச்சி தெரிகிறது.

வாழ்த்துக்கள்.

பா.சங்கீதா
17-05-2010, 02:55 PM
நன்றி கோவிந்த் அண்ணா...........

பா.சங்கீதா
17-05-2010, 02:56 PM
நன்றி செல்வா அண்ணா...........
அடுத்த பாகம் விரைவில்..........

அறிஞர்
17-05-2010, 03:22 PM
ரொம்ப சஸ்பென்ஸாக செல்கிறது வாழ்த்துக்கள்..

அனுபவத்தில் வந்த கதை மாதிரி தெரிகிறது..

பா.சங்கீதா
18-05-2010, 04:33 AM
நன்றி அறிஞர் அண்ணா........:)

அப்படியெல்லாம் இல்லை........

பா.ராஜேஷ்
18-05-2010, 03:54 PM
அது என்ன, எல்லாம் ஒற்றை வரிகளிலேயே உள்ளன.. இருந்தாலும் மிக நன்று. சென்ற பாகத்தை விட இது எவ்வளவோ மேல். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அதை களைய முயற்சி செய்க.

சிவா.ஜி
18-05-2010, 04:09 PM
பள்ளியின் சுதந்திரதின நிகழ்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். திக்குவாய் நித்யாவுக்கு முதல் பரிசா....கொடுமைடா சாமி. தலைமையாசிரியையிடம் தமிழாசிரியை என்ன பாடுபடப் போகிறாரோ...

தொடருங்கள் சங்கீதா.

(ஒரு ஒரு வரியாக எழுதாமல், பத்தி பத்தியாக எழுதினால் நன்றாக இருக்கும்.)

பா.சங்கீதா
19-05-2010, 05:04 AM
அது என்ன, எல்லாம் ஒற்றை வரிகளிலேயே உள்ளன.. இருந்தாலும் மிக நன்று. சென்ற பாகத்தை விட இது எவ்வளவோ மேல். சில எழுத்துப் பிழைகள் உள்ளன. அதை களைய முயற்சி செய்க.

நன்றி அண்ணா, களைய முயற்சிக்கிறேன்... :)

பா.சங்கீதா
19-05-2010, 05:05 AM
பள்ளியின் சுதந்திரதின நிகழ்வுகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள். திக்குவாய் நித்யாவுக்கு முதல் பரிசா....கொடுமைடா சாமி. தலைமையாசிரியையிடம் தமிழாசிரியை என்ன பாடுபடப் போகிறாரோ...

தொடருங்கள் சங்கீதா.

(ஒரு ஒரு வரியாக எழுதாமல், பத்தி பத்தியாக எழுதினால் நன்றாக இருக்கும்.)

நன்றி சிவா அண்ணா..........

அடுத்த முறை நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இருக்கும் என நம்புகிறேன்

பா.சங்கீதா
28-08-2010, 02:22 PM
சிறிது பணியின் காரணமாக கதையை தொடர முடியவில்லை, அடுத்த பாகம் விரைவில்.....

சிவா.ஜி
28-08-2010, 02:30 PM
சரிம்மா....முதல்ல படிப்பு. அப்புறம்தான் மத்ததெல்லாம். படிப்புல கெட்டின்னா....அப்பப்ப கதைப் பக்கமும் வரலாம்.....

(தங்கை கண்டிப்பா படிப்புல கெட்டியாத்தான் இருக்கனும்.....:icon_b:)

சுகந்தப்ரீதன்
28-08-2010, 06:13 PM
சின்னதங்கை பா.சங்கீதாவின் முதல் முயற்சி வெற்றிபெற வாழ்த்துகிறேன்..!!:)

நம்பிக்கையூட்டும் தலைப்பு.. எழுத்தும் அப்படியே..!! நேரம் கிடைக்கையில் தொடருங்கள்..!!:mini023: