PDA

View Full Version : கடி கண்டுபிடி. புதிர்



gvchandran
30-04-2010, 02:33 PM
கடி கண்டுபிடி. புதிர்
1. இக்கட்டான சூழ்நிலைக்கு சொல்வது---- கடி.
2. இலங்கைத் தமிழில் கிண்டலுக்கு --- கடி
3. பலமுறை என்பதை இப்படியும் சொல்லலாம் ---- கடி
4. கோடைகால சுற்றுலா தலம் --- கடி
5. மலேரியா நோய்க்கு மூல காரணம் --- கடி
6. சண்டிக்குதிடைக்கு கிடைப்பது --- கடி


விடைகள்
1. நெருக்கடி
2. பகடி
3. அடிக்கடி
4. தேக்கடி
5. கொசுக்க்கடி
6. சவுக்கடி
மேலும் இரு புதிர்கள்
1. ஒரு குற்றத்தை முழுமையாக செய்தால் தண்டனை கிடையாது. ஆனால் அரைகுறையாக செய்தால் தண்டனை உண்டு. அது என்ன குற்றம்?
2. உங்களிடம் 10 பந்துகள் தரப்படும் ,இவற்றை வரிசைக்கு 4 வீதம் 5 வரிசையில் வைக்க வேண்டும். முயற்சி செய்து பாருங்கள்
விடை
1. தற்கொலை
2 5 முனைகள் கொண்ட நட்சத்திரம் வடிவில் ஒவ்வொரு வரிசையிலும் 4 இருக்கும்.

ஜனகன்
30-04-2010, 05:24 PM
கடி கண்டுபிடி நல்ல கடித்தான்.வாய் விட்டு சிரிக்கலாம்.ஆனால் சிரிக்கேல்லை.
கண்டுபிடி என சொல்லி விட்டு, நீங்களே பதிலை சொல்லி விட்டீர்களே சந்திரன் , யோசிக்கிற நேரம் மிச்சம்.

பா.ராஜேஷ்
01-05-2010, 05:01 PM
பதில்களும் நீங்களும் தந்து விட்டால் எப்படி நண்பரே? பரவாயில்லை அடுத்த முறை பார்த்துக் கொள்ளலாம் ;)

sures
22-05-2010, 11:08 AM
கேள்வியும் பதிலும் நீங்கள் தந்துவிட்டு எங்களை கண்டுபிட்ட சொல்லுகிறீர்களே... ?
கடி கண்டுபிடி நன்றாக உள்ளது....

gankrish
23-06-2010, 12:38 PM
கடிகள் அருமை

குணமதி
01-07-2010, 02:43 AM
விடைகளைப் பொறுத்திருந்து கொடுத்திருக்கலாம்.

இப்படிப்பட்ட 'கடி'களை வரவேற்கிறோம்.

nambi
01-07-2010, 04:41 AM
ஆறு ''கடி''களும் தேள்''கடி'', இருந்தாலும் வலிவற்ற விஷக்''கடி''....பகிர்வுக்கு நன்றி!

தமிழ் மைந்தன்
13-07-2010, 06:23 PM
அருமையான கடி !
வாழ்த்துக்கள் !!

leema
13-08-2010, 05:43 AM
அருமையான கடிகள். இன்னும் இன்னும் எதிர்ப்பார்க்கிறேன் உங்கக்கிட்ட . நன்றி !!!!!!!!!!!!!!!!!!