PDA

View Full Version : 6 முதல் 14 வயது வரைக் கட்டாயக்கல்வி சரியா...?nambi
30-04-2010, 05:35 AM
முதல் குரல் என்ற ஜி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கல்வியாளர் டாக்டர் வசந்தி தேவி அவர்களுடன் பத்திரிகையாளர் சுதாங்கன் கட்டாயக்கல்வி குறித்து நேர்காணல் நிகழ்ச்சியில் உரையாடியவைகள்.... சுதாங்கன் வினவியக் கேள்விகளுக்கு கல்வியாளர் டாக்டர் வசந்திதேவி அளித்த பதில்கள்..

6 முதல் 14 வரையுள்ளவர்களுக்கான கட்டாயக்கல்வி
வரவேற்கிறீர்களா?


இது முழுவதுமாக நம் நாட்டில் நிலவும் எழுத்தறிவற்றத்தன்மையை நீக்கிவிடுமா? என்பது சந்தேகமே!
கல்வி வளர்ச்சியின் அடிப்படையின் இருக்கின்ற 182 நாடுகளில் இந்தியாவின் இடம் 173 வது இடம். அவ்வளவு பின்தங்கியுள்ளதை நினைவிற் கொள்ளவேண்டும்.


தமிழ் (மீடியம்) பயிற்றுமொழியில் பயின்றவர்களுக்கு
வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற கருத்து நிலவுவது பற்றி?

1970 விற்கு முன் இந்த மாதிரி எண்ணுபவர்களே இல்லை எனலாம். தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்களே பல பெரியத்துறைகளில் வல்ம் வந்து கொண்டிருக்கிறார்கள். கலை, அறிவியல், விஞ்ஞானம், ஆட்சியியல், மருத்துவம் போன்றவைகளில் பங்கு பெறுகின்றவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ் வழி பயின்றவர்கள்தான் வருகின்றனர். சாதிப்பவர்கள் அனைவரும் தமிழ் பயிற்று மொழியில் பயின்றவர்கள் தான். இந்த கருத்து இப்பொழுது நிலவுவது தவறானது. வேறு எந்த நாட்டிலும் இது போன்று இல்லை. அரசு பள்ளிகளின் தரமற்ற கல்வித்தன்மையே இது போன்ற கருத்துக்கள் உருவாவதற்கு காரணமாக உள்ளது.

போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமையும், ஆசிரியர் பற்றாக்குறையும், அரசு பள்ளிகளின் கேவலமான புறக்கணிப்பை மக்கள் மேற்கொண்டதற்கு காரணமாகும்.

இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கே 10 இலட்சம் ஆசிரியர்களை கூடுதலாக நியமித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

மேலும் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை மிக குறைவாக ஒதுக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மூன்றரை சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இது மாதிரி நிதி ஒதுக்கீட்டை இந்தியா மாதிரி முதலாளித்துவத்துத்தை பின்பற்றும் நாடுகள், (சோசலிசத்தை பின்பற்றும் நாடுகளை கண்க்கில் சேர்க்கவில்லை, அவர்கள் கல்விக்கான நிதியை மிக அதிகமாகவே ஒதுக்குகிறார்கள்) ஜப்பான், அமெரிக்கா..... போன்ற நாடுகள் மிக அதிகமாகவே நிதிகளை ஒதுக்குகிறது. அவற்றோடு ஒப்பிடும் பொழுது இந்தியா மிகவும் குறைவான நிதியையே கல்விக்காக ஒதுக்குகிறது. இதனால் இந்தியா மிகப்பெரிய முதலாளித்துவ தாக்குதலுக்குள்ளான நாடு என்பது தெளிவாகுகிறது.

ஆகையால் தான் முழுவதும் அரசுப்பள்ளிகளாக மாற்ற முடியவில்லை. ஏனைய நாடுகளில் கல்வி அரசின் கொள்கையாகவே, அரசு நிர்வகிக்கும் நிறுவனமாகவே செயல்படுகிறது.

இதனால் தான் ‘’பிபிபி’’ பப்ளிக் பிரைவேட் பார்ட்னர்ஷிப் என்ற முறையில் கல்வியை தனியார் நிறுவனங்களோடு பங்கு போட்டு நிர்வகிக்க முனைந்துள்ளதை காணாலாம். அதாவது இந்த கல்வித்தேவையை அரசினால் மட்டும் பூர்த்தி செய்யமுடியாது தாங்களும் முன்வரவேண்டும் என்று வற்புறுத்துகின்றன.

90% சதவீத குழந்தைகள் அரசு பள்ளிகளை நம்பித்தான் இருக்கின்றன. 10 சதவீதம் உள்ளவர்களே தனியார் பள்ளிகளை நாடமுடியும். நாட்டில் உள்ள 70 சதவீத மக்களில் இன்னும் 20 ரூபாய் வருமானத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களால் எப்படி தனியார் நிறுவனத்தின் கட்டணத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும்.
தனியார் கல்வி நிறுவனங்கள் 25 சதவீத
ஒதுக்கிட்டை எதிர்க்கின்றதே?


இது கண்டிக்கத்தக்கது. தனியார் நிறுவனப் பள்ளியாக இருந்தாலும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளாக இருந்தாலும் சரி அரசின் சட்டதிட்டங்களுக்கு கட்டுபட்டுத்தான் ஆகவேண்டும். ஏனென்றால் அவர்களுக்கு அரசின் சலுகைகள் கல்விநிறவனங்களுக்காகவே கிடைக்கின்றன. புத்தகம் அச்சிடுவது, உபகரணங்கள், வரிச்சலுகைகள், பள்ளிக்கான நில ஒதுக்கீடு போன்ற அனைத்தும் அரசின் சலுகையில் தான் கிடைக்கிறது. இது எதற்காக கல்விக்காக மட்டுமே? இதை எதிர்ப்பது நியாயமாகாது. சலுகைகளை அனுபவிக்கும் போது திட்டங்களை எதிர்க்க கூடாது.


இத்திட்டம் எப்படி செயல்படுத்தப்படவேண்டும்
என்று கூறுகிறீர்கள்?


பொதுவாக பள்ளிகள் எனப்படும்பொழுது...

1 அரசு பள்ளிகள்
2. அரசு உதவி பெறும் பள்ளிகள் (நிதியுதவி பெறும் பள்ளிகள்)
3. விசேஷப்பள்ளிகள் அதவாது கேந்திரா வித்யாலாயா, நவோதாயாப் ப்ள்ளிகள்
4. நிதியுதவிப்பெறாதப் பள்ளிகள்

ஆனால் இதில் கேந்திரா வித்யாலாயப் பள்ளிகளில் ஒரு வருடத்திற்கு ஒரு குழந்தைக்கு 11000 ரூபாய் செலவிடப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு ஒருவருடத்திற்கு 1100 ரூபாய் செலவிடப்படுகிறது. இந்த வித்தியாசமே மிக ஏற்றத்தாழ்வுகளுடன் உள்ளது. இதில் கல்வியின் தரம் இங்கேயே நிர்ணயிக்கப்பட்டு விடுகிறது. இந்த மாற்றங்கள் களையப்படவேண்டும். ஒரே சீராக ஆக்கப்படவேண்டும்.
நவோதயப்பள்ளிகள் இங்கு (தமிழகம்)
இயங்குவதில்லையே? ஏன்?


அதற்குள் சென்றால் அதை பற்றி விவாதிக்க ஒரு நாள் ஆகும்.ஆறு முதல் 14 வயது வரை..... என்பதே
முரண்பாடாக உள்ளதே?ஆமாம் கல்வி என்பது 14 வயதுக்கு கீழே உள்ளவர்கள் என்றே அளிக்கப்படவேண்டும். இந்திய அரசியல் சட்டம் பிரிவு 45 இல் உள்ளபடியே உடபடுத்த வேண்டும். இன்னும் சொல்லப்போனால் குழந்தை என்பதே 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் தான் அதன் படிதான் சட்டமியற்றியிருக்க வேண்டும். இந்தியா ஐக்கிய நாட்டு குழந்தைகள் பாதுகாப்பு சபையில் வரையப்பட்ட (யூ என் சி ஆர் சி) ஒப்பந்தத்தில் இந்தியா கையோப்பமிட்டுள்ளதின் படி 18 வயது வரைக்கல்வியை இலவசமாக கொடுக்க வேண்டும். அதுவே சிறந்தது.

இப்போதைக்கு இதுவே (6 முதல் 14 வயது வரை) முரண்பாடு தான்.

இதனால் முன்பருவக்கல்வி எனும் மழலையர் கல்வி தடைப்பட்டு போகும். அதுமட்டுமில்லாமல் அந்த கல்வி இல்லாமல் ஒரு குழந்தையை பள்ளிக்கு புதிதாக போய் அமர்த்துவது என்பது கல்வியை திணிப்பது போன்ற உணர்வை குழந்தைகள் பெற்றுவிடும். முன்பருவக்கல்வி என்பது கட்டாயம்.
முன்பருவக்கல்வியினால் சிறுவயதிலேயே
குழந்தைகள் கல்வியைச் சுமக்கும் அவல நிலை ஏற்படுமே?


இப்போது பின்பற்றி வரும் மழலைக்கல்விகள் எல்லாம் அப்படித்தான். அந்த கல்வியைச் சொல்லவில்லை. நான் குறிப்பிடும் முன்பருவக்கல்வி என்பது சமூகத்தைப்பற்றிய அறிமுகங்கள், வாழ்க்கையின் பல்வேறு விஷயங்களையும் விளையாட்டுக்களின் சொல்லிக்கொடுப்பது, பிறரிடம் எப்படி பழுகுவது போன்ற ஒழுக்க முறைகளை, விளையாட்டின் மூலம் சொல்லிக்கொடுப்பது.

பிஞ்சு கைகளில் பென்சிலை திணித்து எழுத சொல்லி துன்புறுத்துவது, வீட்டுப்பாடம், வீட்டுப்பாடம் என்று தொல்லைக் கொடுப்பது, சிறுவயதிலேயே புத்தகம் சுமக்க வைப்பது இம்மாதிரி முன்பருவக் கல்வி தேவையில்லை.


25 சதவிதம ஒதுக்கீடு சரியான ஒன்றா?

இதுவே முரண்பாடானது. அதுமட்டுமில்லாமல் இது முழுமையாக ஆவதற்கு 8 வருடங்கள் ஆகும். அதாவது இப்பொழுது முதல் வகுப்பில் ஆரம்பித்து ஓவ்வொரு வருடமும் அடுத்தடுத்த வகுப்பிற்கு சேர்க்கையின் மூலம் ஒதுக்கி வரும்பொழுது, வருடங்கள் தாண்டி எட்டாவது வருடத்தில் தான் இந்த கட்டணச்சலுகை அனைத்து வகுப்புகளுக்கும் பொருந்துவதாக அமையும்.


இந்தியாவில் உயர்கல்வி கற்போர் நிலை
மற்றும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில்
ஒதுக்கீடு கொண்டு வருவது அல்லது அம்மாதிரி வெளிநாட்டு பல்கலைக்கழ்கங்களை இங்கேயே கொண்டுவருவது பற்றி?


இது தேவையற்றது. இங்கேயே அதற்கான கட்டண சலுகைகளை, ஏன்? முழுமையான விலக்களித்து , அனைத்தையும் நமது பல்கலைக்கழகங்களிலேயே கொண்டுவருவது தான் சிறந்தது.

உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை என்பது இந்தியாவில் 11 முதல் 12 சதவீதம் வரைக்கும் தான் உள்ளது. ஆனால் ஏனைய நாடுகளில் 40 முதல் 50 சதவீதம் வரை பயில்கின்றவர் எண்ணிக்கை உள்ளது. இந்தியாவை பொறுத்தமட்டில் வாழும் நாடு வாடுகின்ற நாடு என்ற நிலையில் தான் இன்றும் உள்ளது.6 முதல் 14 வயது வரை கட்டாயக்கல்வி
என்ற எட்டு வருடம் கல்விக்கான வாய்ப்பு அளிக்கக்கூடிய
சட்டத்தில் உள்ள நிறைவுகளாக கருதுபவை எவை?

1. வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை (நோ டீட்டெய்ன்) என்ற நிலை இல்லை.
2. வயதுக்கேற்ற வகுப்பில் சேர்க்கவேண்டும்.
3. கல்வி கற்பதில் குறைபாடுகள் காணப்பட்டால் அதற்குரிய சிறப்பு வகுப்புகள் கட்டாயம் கொடுத்து தேர்ச்சியடைய வைக்கவேண்டும். (தேர்ச்சியில்லை என்று அறிவிக்கலாகாது)
4. குழந்தைகளுக்கு தண்டனை கிடையாது. (நோ பனிஷ்மென்ட்) அதை எந்த வகையிலும் பின்பற்றக் கூடாது.

இவையெல்லாம் சிறப்புற மேற்பார்வையிடவேண்டும். அது நம்முடைய கல்வித்திட்டத்தில் இருக்கும் மிகப்பெரிய குறைபாடு.


........ஆதாரம் ஜி தொலைக்காட்சி....06.04.2010

aren
30-04-2010, 06:36 AM
எனக்குத் தெரிந்தவரை கல்வியை கட்டாயமாக்கியது வரவேற்கத்தக்க ஒன்றாகும், இதனால் கீழ் மட்டத்தில் இருக்கும் ஒரு சிலருக்கும் கல்வி கிடைத்தால் அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் ஒரு பெரிய நன்மையாகும். நான் இதை வரவேற்கிறேன்.