PDA

View Full Version : விழுமிய பண்பாடு

சொ.ஞானசம்பந்தன்
30-04-2010, 12:37 AM
பார்ப்பணர்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்து மக்களோடு கலந்துவிட்டார்கள். தமிழர்கள் தாங்கள் அதுவரை அறியாதிருந்த தத்துவக் கருத்துகள், மதச் சடங்குகள் முதலியவற்றை அவர்களிடமிருந்து கற்றார்கள். தமிழரசர்களும் புலவர்களும் நாளடைவில் அவர்களுக்கு ஏற்றங்கொடுத்துச் சிறப்பித்தார்கள். மன்னர்கள் ஆரிய மறைகள் சுட்டிய வழிகளில் யாகஞ்செய்யவும் தலைப்பட்டார்கள். ஒரு சோழன் ராஜசூயம் என்ற யாகத்தைச் செய்து ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனவும் பாண்டியனொருவன் பற்பல வேள்விகளை இயற்றிப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனவும் பெயர் பெற்றனர்,

ஆரியக் கலாச்சாரத்தில் முழுகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் தங்களது ஒரேயொரு சிறந்த கொள்கையை மட்டும் கைவிட்டு விடாமல் கண் போல் போற்றிக் காத்துக் கடைப்பிடித்து வந்தார்கள். அது எந்தக் கொள்கை?

தானம் வாங்கலும், பிச்சை எடுத்தலும் பார்ப்பணர்க்கு உகந்த செயல்கள். வீடு வீடாய்ப் போய் இரந்துண்டு வாழ்வதை உஞ்சவிருத்தி என்று உயர்வாய்ப் போற்றுவது அவர்களின் தர்மம். இந்த தர்மத்தைத் தமிழர்கள் புறக்கணித்து இதற்கெதிரானா அந்தத் தமது உயர்கொள்கையின் மேன்மையை இலக்கியங்களின் வாயிலாய்த் தொடர்ந்து பறைசாற்றி வந்துள்ளார்கள்.

ஈயென இரத்தல் இழிந்தன்று......

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று.......

என்பது 204 ஆம் புறநானூற்றுப் பாடலில் கழைதின் யானையார் என்னும் புலவர் வழங்கும் கருத்து.

கொடு என்று கேட்டு வாங்குவது இழிவானது. கேட்பவர்க்குக் கொடுத்தல் உயர்வானது என்பது இதன் பொருள்.

இதே கருத்தைப் பின்னாளில் திருவள்ளுவர்,

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

என வழி மொழிந்தார்.

இதன் அர்த்தம்: கேட்டுப் பெறுதல் நல்லவழி என்று ஆரிய சாத்திரஞ் சொன்னாலும் ஏற்றல் தீதுதான். கொடுப்பவர்க்கு சுவர்க்கங் கிடைக்காது என யாராவது சொன்னாலுஞ் சரி, கொடுத்தல் நல்லதே.

இரண்டாம் ஒளவையாரும் ரத்தினச் சுருக்கமாய்

ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்

என்று ஆத்திசூடியில் வலியுறுத்தினார்.

நீ எவரிடமும் எதையும் யாசித்து வாங்காதே, அது இழிசெயல். உன்னிடம் யாராவது பிச்சை கேட்டால் ஈந்து உண் என்பது இதன் விரிவான பொருள்.

ஒளவையாரின் இந்தக் கூற்றிலே ஏதோ முரண்பாடு இருப்பதாகச் சிலர் கூறுவதுண்டு. எந்த முரணும் இல்லை என்பதும் முன்னோர் காலங்காலமாய்ப் பொன்னேபோல் போற்றிவந்துள்ள கருத்துகளையே அவர் மறுவுரைத்தார் என்பதும் தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கூர்ந்து நோக்குவார்க்கு எளிதில் புலனாகும்.

சென்ற நூற்றாண்டுக் கவிஞர் இராமலிங்கமும் 'தமிழன் என்றோர் இனமுண்டு' எனத் தொடங்கும் பாடலில்,

தானம் வாங்கிடக் கூசிடுவான்

என உரைத்திருப்பதைக் காண்கிறோம்.

ஒரு பொருளை ஒருவர்க்கு மரியாதையுடன் கொடுக்கவேன்டும் எனில் அதை அவரது கையில் போடாமல் அல்லது தராமல் தாம்பாளத்தில் வைத்து நீட்டுகிறோம் அன்றோ? இந்தச் செய்கையில் வாங்குவோரின் கை தாழக்கூடாது என்ற உயர்ந்த குறிக்கோள் இருக்கிறது. திருமணத்தில் நாம் நீட்டுகிற தட்டிலிருந்து பையை விருந்தினர் எடுக்கும்போது நம் கைக்கு மேலே அவரின் கை இருப்பதால் அவர் இரந்து பெற்றதாய் ஆவதில்லை, இழுக்கும் அவர்க்கு நேர்வதில்லை.

கொளல் தீது என்ற கொள்கை நம் குருதியில் கலந்து ஓடுவதால் கை ஏந்திப் பெற நாம் கூசுவது மட்டுமல்லாமல் பிறரையுங் கூச வைத்தல் கூடாது எனக் கருதுகிறோம்.

தலைசிறந்த இந்தப் பண்பாட்டைப் பன்னெடுங்காலமாய்த் தொடர்ந்து தமிழர் பேணி வருவதை எண்ணி நியாயப் பெருமிதம் அடைய நமக்கு உரிமையுந் தகுதியும் உண்டு.

கேளுங்கள், கொடுக்கப்படும் - ஏசு நாதர்.
கேட்காதீர்கள், கொடுங்கள் - தமிழ்ச் சான்றோர்.

சொ.ஞானசம்பந்தன்.

கலையரசி
03-05-2010, 02:13 PM
[QUOTE=சொ.ஞானசம்பந்தன்;468463]

"ஒரு பொருளை ஒருவர்க்கு மரியாதையுடன் கொடுக்கவேண்டும் எனில் அதை அவரது கையில் போடாமல் அல்லது தராமல் தாம்பாளத்தில் வைத்து நீட்டுகிறோம் அன்றோ? இந்தச் செய்கையில் வாங்குவோரின் கை தாழக்கூடாது என்ற உயர்ந்த குறிக்கோள் இருக்கிறது".

தாம்பாளத்தில் வைத்துக் கொடுப்பதற்கான காரணத்தை இன்று தான் தெரிந்து கொண்டேன்.
பிறரிடம் யாசிப்பதை இழிவாகக் கருதிய நம் தமிழரின் கொள்கையை நினைத்து தமிழன் என்ற முறையில் பெருமைப்படுகிறேன்.

சொ.ஞானசம்பந்தன்
04-05-2010, 01:28 AM

பின்னூட்டத்துக்கு அகமார்ந்த நன்றி.

குணமதி
04-05-2010, 03:18 AM
அரிய செய்திகள் தந்தமைக்குப் பாராட்டும் நன்றியும்.

இப்பதிவின் தொடர்பாகக் கீழ்க்காணும் செய்திகள் அறியச் சுவை பயக்கும்.

"ஈயென் கிளவி இழிந்தோன் கூற்றே"
"தாஎன் கிளவி ஒப்போன் கூற்றே"
"கொடுஎன் கிளவி உயர்ந்தோன் கூற்றே"

- என்பன தொல்காப்பிய எச்சவியல் வரிகள்.

ஈதல் என்பது இழிந்தோர்க் களித்தல், தருதல் என்பது ஒத்தோர்க் களித்தல், கொடுத்தல் என்பது உயர்ந்தோர்க் களித்தல்.

அளித்தல் அன்பினாற் கொடுத்தல்; இடுதல் கீழிட்டுக் கொடுத்தலாகிய இரப்போர்க் கீதல்; வழங்கல் என்பது எடுத்துக்கொடுத்தல்; அருளுதல் என்பது அருளிக் கொடுத்தல் என்று மொழிஞாயிறு பாவாணர் விளக்குவார்.

சொ.ஞானசம்பந்தன்
25-05-2010, 11:35 AM

பின்னூட்டத்திற்கும் செய்தி சேர்த்தமைக்கும் மிக்க நன்றி.

nambi
25-05-2010, 12:37 PM
கேளுங்கள், கொடுக்கப்படும் - ஏசு நாதர்.
கேட்காதீர்கள், கொடுங்கள் - தமிழ்ச் சான்றோர்.
நல்ல உயரிய பண்புகளை நெடுங்காலமாக தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது. பயனுள்ள கருத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

சொ.ஞானசம்பந்தன்
27-05-2010, 05:52 AM

பாராட்டுக்கு மிக்க நன்றி. நீங்கள் அளித்த கேஷுக்கும் நன்றி.

M.Jagadeesan
27-09-2010, 03:46 PM
பார்ப்பணர்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே வடக்கிலிருந்து தமிழகத்துக்கு வந்து மக்களோடு கலந்துவிட்டார்கள். தமிழர்கள் தாங்கள் அதுவரை அறியாதிருந்த தத்துவக் கருத்துகள், மதச் சடங்குகள் முதலியவற்றை அவர்களிடமிருந்து கற்றார்கள். தமிழரசர்களும் புலவர்களும் நாளடைவில் அவர்களுக்கு ஏற்றங்கொடுத்துச் சிறப்பித்தார்கள். மன்னர்கள் ஆரிய மறைகள் சுட்டிய வழிகளில் யாகஞ்செய்யவும் தலைப்பட்டார்கள். ஒரு சோழன் ராஜசூயம் என்ற யாகத்தைச் செய்து ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி எனவும் பாண்டியனொருவன் பற்பல வேள்விகளை இயற்றிப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி எனவும் பெயர் பெற்றனர்,

ஆரியக் கலாச்சாரத்தில் முழுகிவிட்ட நிலையிலும் தமிழர்கள் தங்களது ஒரேயொரு சிறந்த கொள்கையை மட்டும் கைவிட்டு விடாமல் கண் போல் போற்றிக் காத்துக் கடைப்பிடித்து வந்தார்கள். அது எந்தக் கொள்கை?

தானம் வாங்கலும், பிச்சை எடுத்தலும் பார்ப்பணர்க்கு உகந்த செயல்கள். வீடு வீடாய்ப் போய் இரந்துண்டு வாழ்வதை உஞ்சவிருத்தி என்று உயர்வாய்ப் போற்றுவது அவர்களின் தர்மம். இந்த தர்மத்தைத் தமிழர்கள் புறக்கணித்து இதற்கெதிரானா அந்தத் தமது உயர்கொள்கையின் மேன்மையை இலக்கியங்களின் வாயிலாய்த் தொடர்ந்து பறைசாற்றி வந்துள்ளார்கள்.

ஈயென இரத்தல் இழிந்தன்று......

கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று.......

என்பது 204 ஆம் புறநானூற்றுப் பாடலில் கழைதின் யானையார் என்னும் புலவர் வழங்கும் கருத்து.

கொடு என்று கேட்டு வாங்குவது இழிவானது. கேட்பவர்க்குக் கொடுத்தல் உயர்வானது என்பது இதன் பொருள்.

இதே கருத்தைப் பின்னாளில் திருவள்ளுவர்,

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று

என வழி மொழிந்தார்.

இதன் அர்த்தம்: கேட்டுப் பெறுதல் நல்லவழி என்று ஆரிய சாத்திரஞ் சொன்னாலும் ஏற்றல் தீதுதான். கொடுப்பவர்க்கு சுவர்க்கங் கிடைக்காது என யாராவது சொன்னாலுஞ் சரி, கொடுத்தல் நல்லதே.

இரண்டாம் ஒளவையாரும் ரத்தினச் சுருக்கமாய்

ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்

என்று ஆத்திசூடியில் வலியுறுத்தினார்.

நீ எவரிடமும் எதையும் யாசித்து வாங்காதே, அது இழிசெயல். உன்னிடம் யாராவது பிச்சை கேட்டால் ஈந்து உண் என்பது இதன் விரிவான பொருள்.

ஒளவையாரின் இந்தக் கூற்றிலே ஏதோ முரண்பாடு இருப்பதாகச் சிலர் கூறுவதுண்டு. எந்த முரணும் இல்லை என்பதும் முன்னோர் காலங்காலமாய்ப் பொன்னேபோல் போற்றிவந்துள்ள கருத்துகளையே அவர் மறுவுரைத்தார் என்பதும் தமிழ்ப் பண்பாட்டுப் பாரம்பரியத்தைக் கூர்ந்து நோக்குவார்க்கு எளிதில் புலனாகும்.

சென்ற நூற்றாண்டுக் கவிஞர் இராமலிங்கமும் 'தமிழன் என்றோர் இனமுண்டு' எனத் தொடங்கும் பாடலில்,

தானம் வாங்கிடக் கூசிடுவான்

என உரைத்திருப்பதைக் காண்கிறோம்.

ஒரு பொருளை ஒருவர்க்கு மரியாதையுடன் கொடுக்கவேன்டும் எனில் அதை அவரது கையில் போடாமல் அல்லது தராமல் தாம்பாளத்தில் வைத்து நீட்டுகிறோம் அன்றோ? இந்தச் செய்கையில் வாங்குவோரின் கை தாழக்கூடாது என்ற உயர்ந்த குறிக்கோள் இருக்கிறது. திருமணத்தில் நாம் நீட்டுகிற தட்டிலிருந்து பையை விருந்தினர் எடுக்கும்போது நம் கைக்கு மேலே அவரின் கை இருப்பதால் அவர் இரந்து பெற்றதாய் ஆவதில்லை, இழுக்கும் அவர்க்கு நேர்வதில்லை.

கொளல் தீது என்ற கொள்கை நம் குருதியில் கலந்து ஓடுவதால் கை ஏந்திப் பெற நாம் கூசுவது மட்டுமல்லாமல் பிறரையுங் கூச வைத்தல் கூடாது எனக் கருதுகிறோம்.

தலைசிறந்த இந்தப் பண்பாட்டைப் பன்னெடுங்காலமாய்த் தொடர்ந்து தமிழர் பேணி வருவதை எண்ணி நியாயப் பெருமிதம் அடைய நமக்கு உரிமையுந் தகுதியும் உண்டு.

கேளுங்கள், கொடுக்கப்படும் - ஏசு நாதர்.
கேட்காதீர்கள், கொடுங்கள் - தமிழ்ச் சான்றோர்.

சொ.ஞானசம்பந்தன்.

"தானம் வாங்கலும் பிச்சைஎடுத்தலும் பார்ப்பனருக்கு உகந்த செயல்கள்' என்று எழுதியுள்ளீர்கள்.ஆனால் இன்றைய நிலை என்ன?தமிழன் எவனும் தானம் வாங்குவதில்லையா?அல்லது பிச்சை எடுப்பதில்லையா? பெயர் வேண்டுமானால் மாறியிருக்கலாம்.அரசு அலுவலகங்களில் "லஞ்சம்" என்கிற "தானம்" கொடுத்தால்தானே வேலை நடக்கிறது.இன்றைய உலகில் இந்த "தானம்" வாங்கிட யாரும் கூசுவதும் இல்லை; இது தவறு என்று பேசுவதும் இல்லை.
இரத்தலும்,ஈதலும் அவரவர் நிலையைப் பொருத்தது.இரப்பதால் ஒருவனை இழிந்தவன் என்றும், கொடுப்பதால் ஒருவனை உயர்ந்தவன் என்றும் கூறமுடியாது.திருக்குறளில் "இரவு"மற்றும் "இரவச்சம்" ஆகிய அதிகாரங்களில் விளக்கம் பெறலாம்.குருடர்களும்,முடவர்களும் உழைத்து உண்ணமுடியுமா?பசிப்பிணி அனைவருக்கும் பொதுவானது.இவர்கள் பிச்சை எடுப்பதில் தவறில்லை.
"இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்டது இல்"
என்பது வள்ளுவர் கருத்து.இரப்பவனுக்கு இலக்கணம் வகுத்த வள்ளுவர், கொடுப்பவனுக்கும் இலக்கணம் வகுத்துள்ளார்.
"வறியார்க்குஒன்று ஈவதே ஈகை" என்றார்.
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேசுகிற அனைவரும் தமிழர்களே.இதில் "பார்ப்பனர்கள்","தமிழர்கள்' என்ற பாகுபாடு பார்க்கக்கூடாது.உங்கள் கருத்துக்கு சான்றாக எந்த சங்க இலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டிநீர்களோ அந்த சங்க இலக்கியங்களைப் பதிப்பித்தது உ.வே.சா. என்ற பிராமணர்தான்.
அவர் தமிழர் இல்லையா?தமிழ் மொழிக்காகவும், இந்த நாட்டின் விடுதலைக்காகவும் பாடுபட்ட பாரதியார் ஒரு பிராமணர்தான். அவர் தமிழர் இல்லையா?
நீங்கள் கூறும் "விழுமிய பண்பாடு" தற்போது
தமிழரிடம் இல்லை.அது "அழுகிய பண்பாடாக" மாறிவிட்டது என்பதே உண்மை.

nambi
28-09-2010, 01:03 AM
தமிழ் செம்மொழிக்காக போராடிய பரிதிமாற் கலைஞரும் பார்ப்பனர் தான்....இதில் மாற்று கருத்து இல்லை....தோழர் ஞானசம்பந்தன், தோழர் ஜெகதீசன் கூறிய பொருளின்படி சமூகப்பிரிவினை பாராட்டாத எவரும் தமிழர் தான். பார்ப்பனர் ''பார்வதியின் மகன்''... இலக்கியங்களிலும் இந்த பெயர்தான் உள்ளது...

ஊர்பெயரும் உள்ளது....பார்ப்பனச்சேரி (அக்ரகாரம்)..பிராமணர் என்ற சொல் வர்ணத்தின் தொடர்ச்சி, அதை மட்டுமே சுட்டிக்காட்டுவது.....

விதிவிலக்குகளை யாரும் பொருட்படுத்துவதில்லை...இன்னும் பிரிவினையின் தாக்கத்தில் இருப்பதை மட்டுமே பொருட்படுத்த வேண்டும்...

நல்லோர் ஒருவர் உளரேல்.....மனிதனாகப்பிறந்தால் நல்லவனாகத்தான் இருக்கவேண்டும்....அதோ தூர வருகிறவர் தான் நல்லவர் என்ற நிலை தான் இப்போது. இதனால் சமூகம் மேம்பாடு அடைந்து விடாது. நல்லவர்களை ஒளிபெருக்கி இல்லாமல் பார்ப்பது தான் வளர்ச்சி!

இன்னும் பலபேர் அந்தணர் என்ற சொல்லையே கூட தனியுடமை ஆக்கி கொண்டனர். ''அந்தணர்''..... ''அறிவு மிக்கோர்'' தமிழர் அனைவரும் அறிவு மிக்கோர் தான். மன்றத்தினர் அனைவரும் அந்தணர்களே! அறிவு மிக்கோரே!

திருக்குறளில் ''அந்தணர்'' என்ற சொல்லை பயன்படுத்தினார் என்ற காரணத்தை வைத்து கொண்டு.......திருவள்ளுவர் ஒரு...........ஆகத்தான் இருக்கவேண்டும் என்று இன்றைய காலகட்டத்திலும் அந்த சமூகத்திற்கான சொத்தாக மாற்ற, அவரை தமிழரிடமிருந்து பிரித்து காட்ட ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. நடைபெற்றது. எங்கே? மாபெரும் நகரமாம் சென்னை ஆழ்வார்பேட்டை, மியுசிக் அகடமி அருகில் உள்ள நாரத கான சபாவில்..... நடைபெற்ற ஆண்டு 2001 இலிருந்து 2006 வரையுள்ள இடைபட்ட காலத்தில் (செய்தி) பங்கு பெற்றவர்கள் அனைவரும் தமிழர்கள் என்று கூறிக்கொண்ட பார்ப்பனர்கள்.........தான். இந்த வாசகம் குறித்து தான் அலசப்பட்டது. திருவாளர் சோவும் அடக்கம்.

பாரதியார் தாழ்த்தப்பட்ட ஒருவருக்கு .........(தாழ்த்தப்பட்டவர் என்ற சொல்லே வேதனைக்குரியது)...(ஆசிரியர் மாணாக்கர்களை பார்த்து ''அறிவீலிகள் எல்லாம் எழுந்திரு'' என்று தினம் தினம் கூறிக்கொண்டேயிருந்தால் எப்படி வலிக்குமோ? அதே போன்றதொரு வலிதான்....) அணிவித்து மகிழ்ந்தார்....ஏன்? மனிதனை பிரிக்கும் அந்த செயலை செய்து தான் ஆகவேண்டுமா? என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் கேள்வி....இதை பிறப்பால் அந்த சமூகம் சார்ந்தவர்களே எதிர்க்கின்றனர், அதை உடைத்தெறிந்து வந்திருக்கின்றனர், பலவற்றை துறந்திருக்கின்றனர்..... இன்று தமிழர்களாய் தோளோடு தோள் நின்று கேள்வி கேட்டுகொண்டிருக்கின்றனர் என்பது தான் புரட்சி....

இன்றும் வர்ணம் தொடர்கிறதே? அய்யகோ! என் சொல்வது....? இணைய காலத்திலும் அதை மறுக்காமல் அது சரி! என பரப்புரை செய்யப்படுகிறதே!....குலத்தொழில் சரி! என பரப்புரை செய்யப்படுகிறதே!..

பாரதியார் வர்ணத்தை ஆதரித்தார் என்று கூறி அவர் பாடிய பாடலையும் சுட்டிக்காட்டுகின்றனரே!....மூன்று வர்ணத்தாரும் இல்லை என்றால் நாறிப்போகும் நாடு என்று....யார் அந்த மூன்று வர்ணத்தார்?

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்....என்றோ எழுதிவைத்தார் ஒரு புலவர்.....அவர் பெண்ணா? ஆணா? என்றே தெரியவில்லை! பெண்ணாகத்தான் இருக்கும்.........தமிழர்கள் பெண்களைத்தான் தெய்வங்களாக அன்றிலிருந்து இன்று வரை மதித்து கொண்டிருக்கின்றனர்....என்பதையும் வரலாற்று சான்றுகள் கூறுகின்றன.

இப்படிபட்ட பிரிவினைகளை களைய நினைக்கும், பிரிவினைப் பார்க்காத அனைவரும் தமிழர்கள் தான். இதுவும் ஒரு கருத்து தான். எதையும் சுட்டிக்காட்டுபவை அல்ல. ஆனால் நாட்டில் இன்றும் நடப்பவைகளை சுட்டிக்காட்டும்.

சொ.ஞானசம்பந்தன்
28-09-2010, 11:01 AM
தானம் வேறு, லஞ்சம் வேறு.. இது கையூட்டு எனப்படும். பார்ப்பனர் உஞ்சிவிருத்தி என்று பிச்சை எடுத்தலைப் போற்றுவது போல எந்தத் தமிழரும் அதைப் போற்றியதில்லை. இரத்தல் இழிந்தது கொடுத்தல் உயர்ந்தது என்று தமிழ் நூல்கள் சொல்வதை நான் எடுத்துக் காட்டி இருக்கிறேன். அவற்றை மறுக்காத நீங்கள் எப்படி மாறான கருத்தைக் கூறமுடியும்?

சொ.ஞானசம்பந்தன்
28-09-2010, 11:04 AM
நல்ல விளக்கம் தந்த நம்பிக்கு நன்றி.