PDA

View Full Version : ஆலோசனை

கலையரசி
29-04-2010, 02:11 PM
உறவுகளே...

குறைந்தளவு வாக்குகளே பதிவாகியுள்ளது. உங்கள் பொன்னான வாக்குகளை அளித்து மன்ற உறவுகளை உற்சாகப்படுத்துங்கள்.

நன்றி.

தமிழ் மன்றத்தில் அவ்வப்போது மனம் கவர்ந்தவர் போட்டி, கவிதைப் போட்டி, நகைச்சுவை போட்டி என நடந்தாலும் வாக்குச் செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பலருக்கு இது போல் போட்டி நடைபெறுவதே தெரியாமல் இருக்க, இன்னும் சிலருக்கோ முடிவுத் தேதி ஞாபகம் இருப்பதில்லை.

தமிழ் மன்றத்தின் தலைப்பில், போட்டி துவங்கியது முதல் 'நகைச்சுவை போட்டிக்கு உங்கள் வாக்கைச் செலுத்தி விட்டீர்களா?' என்பது போன்று நினைவூட்டும் விதமாக எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தால் பயன் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். அந்த எழுத்துக்களை கிளிக் செய்தாலே வாக்களிக்கும் பகுதிக்குப் போகும் விதமாக அமைத்தால் இன்னும் பயனளிக்கும். இது என் ஆலோசனை. நடைமுறைப்படுத்த முயன்றால் செய்யுங்கள்.

அக்னி
29-04-2010, 02:20 PM
சில காலத்திற்கு முன்னர்,
இது போன்ற திரிகள், மன்றத்திற்குள் நுழைகையிலேயே கட்டாயப் பார்வைக்காக வைக்கப்படும் வசதி பரிசோதனை முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

பின்னர் சில குறைகள் ஏற்பட்டதனால், அந்த வசதி நீக்கப்பட்டிருந்தது.
அந்த வசதியை மீள ஏற்படுத்த முடியுமானால், மிகவும் நன்றாயிருக்கும்.

அமரன்
29-04-2010, 08:41 PM
பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி கலையரசி அவர்களே!

முடியும் என்றால் நிச்சயமாகச் செய்வோம்.

செய்யும் வரை கொஞ்சமாவது வாக்களிப்புக் கவனம் ஈர்க்க எங்கும் தெரியும் அறிவிப்பு ஒன்றைக் கொடுத்திருக்கிறேன்.

மன்றப் பிரிவுகளுக்குப் போகும்போது இந்த அறிவிப்பு தென்படும். எடுத்துக்காட்டாக முல்லை மன்றத்திற்குப் போகும் போதோ முல்லை மன்றத்தில் அறிமுகம் செய்யும் பகுதிக்குப் போகும் போதோ தென்படும்.

தமிழ் மன்றத்தில் அவ்வப்போது மனம் கவர்ந்தவர் போட்டி, கவிதைப் போட்டி, நகைச்சுவை போட்டி என நடந்தாலும் வாக்குச் செலுத்துவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பலருக்கு இது போல் போட்டி நடைபெறுவதே தெரியாமல் இருக்க, இன்னும் சிலருக்கோ முடிவுத் தேதி ஞாபகம் இருப்பதில்லை.

தமிழ் மன்றத்தின் தலைப்பில், போட்டி துவங்கியது முதல் 'நகைச்சுவை போட்டிக்கு உங்கள் வாக்கைச் செலுத்தி விட்டீர்களா?' என்பது போன்று நினைவூட்டும் விதமாக எழுத்துக்கள் ஓடிக் கொண்டிருந்தால் பயன் கிடைக்கும் என நான் நினைக்கிறேன். அந்த எழுத்துக்களை கிளிக் செய்தாலே வாக்களிக்கும் பகுதிக்குப் போகும் விதமாக அமைத்தால் இன்னும் பயனளிக்கும். இது என் ஆலோசனை. நடைமுறைப்படுத்த முயன்றால் செய்யுங்கள்.

கலையரசி
30-04-2010, 04:25 PM
என் ஆலோசனையைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டதற்கும் மனறப் பிரிவில் நுழையும் போது உடனடியாக கவன ஈர்ப்பு அறிவிப்பு கொடுத்துள்ளமைக்கும் மிக்க நன்றி அமரன் அவர்களே!

அக்னி அவர்களுக்கும் என் நன்றி.

அறிஞர்
10-05-2010, 04:01 PM
மீண்டும் பலரது கவனத்திற்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறோம்.

sarcharan
19-05-2010, 01:52 PM
பாப்-அப் விண்டோ யுக்தி கொடுக்கலாமே அல்லது ஒரு மெசேஜ்/அலெர்ட் பாக்ஸ் கொடுக்கலாம்.. மக்கள் படிப்பார்கள்...

சாதாரண <marquee> கூட கொடுக்கலாம்.

அன்புரசிகன்
19-05-2010, 10:19 PM
முன்னர் ஒரு தடவை நான் கட்டாயப்பார்வைக்கான கட்டளை கொடுத்த போது (நகைச்சுவைப்போட்டி 2 என நினைக்கிறேன்) பலர் அதை எதிர்த்தார்கள். கட்டாயப்படுத்தி பார்வையிட வைப்பது உரிமை மீறல் என சொன்னதால் அந்த வசதி பயன்படுத்துவதில்லை...
அவரவர் மனம் வைத்தால் தான் உண்டு...

அமரன்
09-06-2010, 09:23 PM
கலையரசி மற்றும் நண்பர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்து
போட்டிகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை இலகுவாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த போட்டிகளில் நடைமுறைப்படுத்துகிறோம்.

நன்றி அனைவருக்கும்.

சிவா.ஜி
10-06-2010, 10:05 AM
நன்றி அமரன்.

ஆதி
10-06-2010, 11:08 AM
இந்த வசதியால் வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை கூடும் என்று நம்புகிறேன்..

கலையரசி
10-06-2010, 12:03 PM
கலையரசி மற்றும் நண்பர்களின் கருத்துகளை கவனத்தில் எடுத்து
போட்டிகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதை இலகுவாக்க சில வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்தடுத்த போட்டிகளில் நடைமுறைப்படுத்துகிறோம்.

நன்றி அனைவருக்கும்.

மிக்க நன்றி அமரன்.