PDA

View Full Version : தமிழ் எண்கள்



இராஜேஷ்
29-04-2010, 07:18 AM
நன்பர்களே!

தமிழ் எண்கள் பற்றீ தகவல் கொடுத்தால் மிகவும் பயன்படும்.

நன்றி
இராஜேஷ்

sarcharan
29-04-2010, 07:22 AM
1 - ௧
2 - ௨
3 - ௩
4 - ௪
5 - ௫
6 - ௬
7 - ௭
8 - ௮
9 - ௯
0 - 0

இதையா கேட்கின்றீர்கள்?

இராஜேஷ்
29-04-2010, 07:29 AM
1 - ௧
2 - ௨
3 - ௩
4 - ௪
5 - ௫
6 - ௬
7 - ௭
8 - ௮
9 - ௯
0 - 0

இதையா கேட்கின்றீர்கள்?
நான் தெரிந்து கொள்வதர்காக கேட்டேன். அது சரி என்றால் மிகவும் நன்றி

அன்புடன்
இராஜேஷ்

ஸ்ரீதர்
29-04-2010, 07:40 AM
நீண்ட நாளாக நான் தேடிக்கொண்டிருந்தது . பகிர்வுக்கு நன்றி.

இதை சுலபமாக நினைவில் கொள்ள ஏதாவது வழிமுறை இருந்தால் யாராவது பகிருங்களேன் . என் பிள்ளைக்கும் கற்றுத்தர வசதியாக இருக்கும் .

நன்றிகள்.

அமரன்
29-04-2010, 09:05 PM
இதையும் பாருங்க இராஜேஷ்.

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17078

இராஜேஷ்
16-05-2010, 06:55 PM
மிகவும் நன்றி நன்பரே!

வழக்கில் இருக்கும் இன்றைய தமிழ் மொழி பெயரளவிர்க்கும், அரசியல் செய்வதர்க்கு மட்டுமே என்று நினைக்கத் தோன்றுகிறது.

Mano.G.
18-05-2010, 03:51 AM
கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் எனது தமிழ்நாடு விஜயத்தின் போது,
மதுரை நாயக்கர் மகாலில் நான் கண்டு அதிசயத்த ஒரு விஷயம்
தமிழ் எழுத்துக்களும் எண்களும் எப்படி உருமாறியுள்ளது என்பது.
அங்கே ஒரு மஞ்சல் பலகையில் அதை பதித்து பொதுமக்கள் பார்வைக்கு
வைத்துள்ளனர். (அதை புகைபடம் எடுத்தேன் ஆனால் அவ்வளவு தெளிவாக இல்லை) வாய்ப்பு இருப்பின் மதுரை சென்று நாயக்கர் மகால் சென்று காணுங்கள்.

மனோ.ஜி

nellai tamilan
29-05-2010, 05:20 PM
கடந்த 2008ம் ஆண்டு இறுதியில் எனது தமிழ்நாடு விஜயத்தின் போது,
மதுரை நாயக்கர் மகாலில் நான் கண்டு அதிசயத்த ஒரு விஷயம்
தமிழ் எழுத்துக்களும் எண்களும் எப்படி உருமாறியுள்ளது என்பது.
அங்கே ஒரு மஞ்சல் பலகையில் அதை பதித்து பொதுமக்கள் பார்வைக்கு
வைத்துள்ளனர். (அதை புகைபடம் எடுத்தேன் ஆனால் அவ்வளவு தெளிவாக இல்லை) வாய்ப்பு இருப்பின் மதுரை சென்று நாயக்கர் மகால் சென்று காணுங்கள்.

மனோ.ஜி

நண்பரே... நீங்கள் கூறிய புகைப்படம் என்னிடம் இமெயிலில் இருக்கிறது. இரண்டு நாட்களுக்குள் தேடிப்பிடித்து பதிந்து விடுகிறேன்.

ஆனால் அந்த புகைப்படத்தை எப்படி சேர்ப்பது என்று தெரியவில்லை. சீனியர்கள் வழிகாட்ட வேண்டுகிறேன்

பாலகன்
29-05-2010, 06:34 PM
ஆஹா எடுத்த எடுப்பிலேயே நெல்லை தமிழன் படமெல்லாம் எப்படி போடுறதுன்னு சீனியர்களுக்கு வேலை கொடுக்குறாரே.

சரி உங்கள் புகைபடத்தை ஏதாவது இலவச photobucket.com போன்ற பதிவேற்றும் தளங்களில் ஏற்றி அதன் சுட்டியை (link) link என்ற அடைப்புக்குள் இட்டால் உங்கள் படம் அருமையாக தெரியும்.

உதாரணம்:

[xx img]http://www.tamilmantram.com/vb/customavatars/avatar2560_33.gif[/img]
xx இந்த குறியை நீக்கினால் படம் தெரியும்

இதுபோல
http://www.tamilmantram.com/vb/customavatars/avatar2560_33.gif

nellai tamilan
03-06-2010, 08:35 AM
மன்னிக்க வேண்டுகிறேன் நண்பர்களே...
நான் மேற்கூறிய படம் கிடைக்கவில்லை. வேலைப்பளு காரணமாக நிதானமாக தேட இயலவில்லை. அதிகமான இமெயில்கள் எனது கண்ணியில் இருப்பதால் தேடுவதற்கு சிரம்ம்மாக இருக்கிறது இன்னும் சில நாட்களில் தேடி எடுத்து பதிக்கிறேன்.

பாரதி
04-06-2010, 04:26 PM
மதுரை நாயக்கர் மகாலில் நான் கண்டு அதிசயத்த ஒரு விஷயம் தமிழ் எழுத்துக்களும் எண்களும் எப்படி உருமாறியுள்ளது என்பது. அங்கே ஒரு மஞ்சள் பலகையில் அதை பதித்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர். (அதை புகைபடம் எடுத்தேன் ஆனால் அவ்வளவு தெளிவாக இல்லை) வாய்ப்பு இருப்பின் மதுரை சென்று நாயக்கர் மகால் சென்று காணுங்கள்.

மனோ.ஜி

மனோ அண்ணா கூறி இருக்கும் படம் கீழ்க்கண்டவாறு இருக்கும்.

http://upload.wikimedia.org/wikipedia/en/f/fc/History_of_Tamil_script.jpg

nellai tamilan
08-06-2010, 04:35 PM
பாரதி அவர்களே...!
நான் தேடிக்கொண்டு இருந்த புகைப்படத்தை பதிந்தமைக்கு நன்றியும் அத்தோடு சிறு அன்பளிப்பும்

பாலகன்
08-06-2010, 05:02 PM
நம் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இல்லாமல் போனது மனதுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

nellai tamilan
08-06-2010, 07:45 PM
நம் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இல்லாமல் போனது மனதுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

என்ன செய்ய பிரபு..
கவலைப்பட்டால் என்ன் ஆவது
அடுத்த தலைமுறைக்காவது நல்ல தமிழை கொடுப்போம்

sures
28-09-2010, 05:49 PM
நான் இதுவரைக்கும் அறியாத விடயங்களை இந்த திரியில் பார்த்து, தெரிந்து கொண்டேன்.

அனுராகவன்
28-09-2010, 06:32 PM
ஆகா..அருமை..
என்னே எண் பெருமை...

M.Jagadeesan
03-10-2010, 03:02 AM
தமிழ் எண்களைப் பயன்படுத்தினால் குழப்பம்தான் மிஞ்சும். தற்போது
புழக்கத்தில் உள்ள அராபிய எண்களைப் பயன்படுத்துவதுதான் சரி. ஏனெனில் அது உலகம் முழுமைக்கும் பொதுவானது.

Nivas.T
03-10-2010, 07:12 AM
இதில் வட்டெழுத்துமுறை

தான் தமிழின் முதன்மை முழுவடிவம்
என்று படித்த ஞாபகம்